Wednesday, September 29, 2004

1, 2, 3 என்று வரிசைப் படுத்திப்.....


ஒரு நாளு ச்சும்மா அப்படியே வலை மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப 'கிரியேட் யுவர் ஓன் ப்ளாக்' ன்னுமேலே ஓடிக்கிட்டு இருந்தது. அதைப் பார்த்தேனே தவிர, வேற ஒண்ணூம் மனசுலே தோணலை.

இதுக்கு ரொம்ப நாள் கழிச்சு, வேற ஒரு சமயத்துலே இதே ஓட்டத்தைப் பாத்தேன்.

ரொம்ப பழைய சினிமா ஒண்ணு, பேரு 'ரத்னகுமார்' அதுலே கதாநாயகன் ரொம்ப ஏழை. சாப்பாடு இல்லாமஒரு பாழுஞ்சத்திரத்திலே தூங்கிகிட்டு இருப்பார். அப்ப 'திடீர்'னு ஒரு பயங்கரமான சத்தம் வரும். பூமிஎல்லாம்நடுங்கும். பாத்தா ஒரு எலும்புக்கூடு, பெரிய பாறாங்கல்லைத் தலைக்குமேலத் தூக்கிகிட்டு நிக்கும்!

'போடட்டுமா போடட்டுமா'ன்னு கேக்கும். நம்ம நாயகன் பயந்து ஓடுவாரு. எங்கே? எல்லாம் அந்தக் கட்டிடத்துக்குள்ளேய தான்!
எலும்புக்கூடும் விடாம அவரு போற இடத்துலே எல்லாம் 'டாண்'னு ஆஜராகும். நாயகன் சலிச்சுப் போய் 'போட்டுதான் தொலையேன்'அப்படிம்பாரு. அது கல்லை 'டமார்'னு கீழே போடும். இன்னொரு பூகம்பம், புகை.......


அடுத்த நொடியிலே ..! அட!

அதே பாழடைஞ்ச இடம் ஒரு அரண்மனையாக மாறி இருக்கும். நாயகனும் 'ராஜா'உடுப்பு போட்டுகிட்டு இருப்பார்.எலும்புக்கூடு சாப விமோசனம் கிடைத்து ஒரு தேவனா இருக்கும். ஒரு மோதிரத்தை நம்ம கதாநாயகனுக்குக் கொடுக்கும்! இப்படிப் போகும் கதை!

இப்ப இதை எதுக்குச் சொல்லறேன்னா, நானும், அடிக்கடி இந்த 'வலப்பதிவு ஆரம்பிங்க'ன்னு ஓடறதைப் பார்த்துட்டு, என்னதான் சொல்லுதுன்னு உள்ள போனா, 'திருவிளையாடல் படத்துலே அவ்வையே, எமை 1 ,2 ,3 என்று வரிசைப் படுத்திப் பாடுக'ன்னு வரமாதிரி வருது!

க்ளிக்,க்ளிக்,க்ளிக். வந்துருச்சு. எல்லாம் உங்க போதாத காலம்! 'என்ன பேரு வைக்கலாம், எப்படி வைக்கலாம்'னு முடிவு செய்யததாலே மனசுலே வந்த பேரையும் போட்டாச்சு.

முதல் பதிவு போட்டுப் பாக்கிறேன். ஐய்யோடா? எழுத்து என்னவோ போல வருதெ!

நம்ம 'காசி' இருக்கற தைரியத்துலே, அவருக்கு மடலுக்கு மேலே மடலா அனுப்பி, அவருக்குப் பைத்தியம் பிடிக்கற லெவலுக்குக் கொண்டுபோனேன்.

நம்ம காசிக்கு,'பொறுமையின் பூஷணம்' என்ற பட்டத்தை நியூஸிலாந்து வட்டம் சார்பாக அளிக்கின்றோம்!

அப்புறம் அவரோட 'தமிழிலில் வலை பதிக்க வாரீங்களா?' வை (இப்பத்தான் நிதானமா)படிச்சு, குழப்பம் எல்லாம் நாம வச்சிருக்கற ஒண்ணா நம்பர் கலப்பையாலெதான். ரெண்டு நம்பர் கலப்பை இருக்கணும்னு தெரிஞ்சிக்கிட்டு,அதை இறக்கினப்புறம் எல்லாம் சரியாச்சு! இன்னும் சிலது சரியா இல்லெ, ஆனா அதையெல்லாம் மெதுமெதுவா சரி செஞ்சுரலாம். உதவறதுக்கு நீங்கெல்லாம் இருக்கறீங்கதானே?

இதை இப்ப எழுதறது எதுக்குன்னா, என்னைபோல சில பேரு எங்கேயாவது இருக்கலாம். 'கணினி கைநாட்டான' எனக்கே புரியறமாதிரி, நம்ம காசி எழுதியிருக்கிறாரு. அவுங்க இந்த சேவையைப் பயன்படுத்திக்கிட்டு, வலைப் பதிவு செய்யுங்க. 'வந்து இந்த ஜோதியிலே கலந்துருங்க'னு அன்போடு அழைக்கிறேன்!

இன்னொரு முக்கியமான விஷயம்.

இந்த வலைப்பதிவுகளிலே நான் இடம் பிடிச்சு உக்கார்ந்து இருக்கறதுக்குப் பின்னாலே பலபேருடைய உழைப்பு அடங்கியிருக்கு!அவுங்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவிக்காம இருந்தா நான் ஒரு 'நன்றி கொன்ற பாவி'யாக இருப்பேன்.

முதலிலே என்னையும் ஒரு படைப்பாளியா ஏத்துகிட்ட நம்ம 'மரத்தடி'க்கு, ( எனக்கு ஏதாவது எழுத வருமான்னே எனக்குத்தெரியாது)அதன் மட்டுறுத்தினர்களுக்கு, அப்புறம் மதி, காசி, ரவியா,சுபமூகா, ஷக்தி, உஷா,குமார்,கேவிஆர்,பரி,பத்ரி,அருள்குமரன்,யூனா,ஜெயந்தி சங்கர்,சங்கமம் விஜயகுமார், இன்னும் தனி மடல்களிலே அன்போடு வாழ்த்துக்கள் தெரிவிச்சவங்க, ஐய்யய்யோ பட்டியல்ரொம்ப நீளமாப் போகும்போல இருக்கே, ஐந்நூறு பேருக்குமேல ( இப்ப மரத்தடிலே எவ்வளவு உறுப்பினர் ? )அனைவருக்கும் என் நன்றியை ( நன்றிக்கு வேற் வார்த்தைத் தமிழிலலே இருக்கான்னு சொல்லுங்க ப்ளீஸ்) தெரிவித்துக் கொண்டு இந்த சிற்றுரையை(!) முடிக்கிறேன்.

ஏம்ப்பா, யாராவது ஒரு சோடாவை உடைச்சுத் தாங்க!


9 comments:

said...

வலைப்பூ ஆரம்பிப்பதில் உள்ள சிரமங்களை நகைச்சுவையுடன் எழுதும் திறமை பாராட்டத்தக்கது. கதெ சூப்பர்.
நல்லவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிய நற்பண்பு எல்லோரிடத்தும் இருப்பதில்லை.

சிற்றுரை பிரமாதம் - சோடா கெடச்சுதா ??

said...

hihihihih..

said...

வாங்க சீனா.

வெயிட்டீஸ்..... இன்னும் ஜோடா வரலை!

said...

வாங்க தெனாவெட்டு!

ஹைய்யோ.....கடலுக்குள்ளே முழுகிப் போயிட்டீங்களே.

கிடைக்கப்போறது முத்தா இல்லை வெறும் சிப்பியான்னு தெரியலை.

எதா இருந்தாலும் அப்பப்ப வெளியில் மூச்சுவாங்க வந்து போகும்போது கிடைச்சது என்னன்னு ஒரு வரி சொல்லிருங்க:-))))

வருகைக்கு நன்றி.

said...

29.09.2004 - பதிவு போட்டீங்க

30 மாசம் கழிச்சி

11.03.2007 - நான் படிக்க ஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம்பிச்சேன் - இன்னும் முடிக்கலே -31.12.2008 நெருங்கிடுச்சி

19 மாசம் கழிச்சி

10.10.2008 - பின்னூட்டத்துக்கு மறுமொழி போடுறீங்க

பலே பலே

said...

பிராயச்சித்தப் பின்னூட்டம் இன்றே போட்டாச்சு சீனா:-)

said...

5வது பதிவிலேயே இம்புட்டு காஷுவலா எழுத ஆரம்பிச்சிருக்கீங்களே..அப்போ எத்தனை பதிவர்கள் இருந்தார்கள்? இதற்கு முன்னேயே மரத்தடியில் எழுதுனீங்களோ?

said...

வாங்க தருமி.

ஆறுமாச காலம் மரத்தடி வாசம். அதுலே ஒரு மூணுமாசம் ஊமைக்கோட்டானா வேடிக்கை. அடுத்து மெல்லச் சிறகடிச்சுப் பார்த்தேன்.

தமிழ்மணத்தில் சேர்ந்த சமயம் ஒரு முன்னூறு பதிவர்கள்கூட இருந்துருக்கமாட்டார்கள்ன்னு நினைவு.

தமிழ்மணப் புள்ளிவிவரம் எங்காவது கிடைக்குமான்னு பார்க்கணும்.

இருந்தால் '24 செப் 2004'ல் நடந்தது என்னன்னு துப்பைத் துலக்கிடலாம்:-))))

said...

மரத்தடி அனுபவம் பற்றி தனியா எழுதுங்கள். இல்லை இணைப்பு கொடுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறேன்.

மரத்தடி இப்போ இல்லைன்னு நினைக்கிறேன். ஒரே ஒரு முறை போய் பார்த்தேன். சமீபகாலமாக activity ஒன்றுமில்லை போலிருக்கு.

படித்தேன் என்பதற்காக உள்ளேன் போட்டுவிட்டுப் போகிறேன், சரியா?