Sunday, January 09, 2005

போலீஸ் அடி!

நம்ம ஊர்லே 'இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா'ன்னு சொல்வாங்க! போலீஸ் எதுக்காவது ஸ்டேஷனுக்குக்
கூட்டிக்கிட்டுப் போனா, ஆளுக்கு, பார்க்க ஒரு சேதாரமும் இல்லாம ச்சும்மா தட்டி அனுப்பிருவாங்களாமே!




இன்னும் இங்கே கிறிஸ்மஸ் லீவு முடியலை! பல இடங்களிலே ஜனவரி 10க்குத்தான் வேலை மறுபடி
ஆரம்பிக்குது.ஒரு நாலு நாளைக்கு முன்னாலே இங்கே அபூர்வமா நல்ல வெய்யில்! மத்தியானமாப்
போய்க் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக்கிட்டு வந்துகிட்டு இருந்தோம். மரியாதையா வீட்டுக்கு வந்திருக்கலாம்.
ஆனா நம்ம நேரம்? சும்மா இருக்குமா? அப்படியே பீச்சுக்குப் போயிட்டு வரலாம்ன்னு வண்டியை கடற்கரைப்
பக்கம் திருப்பியாச்சு.

கடல் பண்ண அட்டகாசம் மனசுலே அப்படியே பதிஞ்சு போனாலும், கடலுக்குன்னு ஒரு வசீகரம் இருக்கறதை மறுக்க
முடியாதில்லையா? அதுவும் நான் ஒரு கடல் பைத்தியம்! ( 'போட்'லே போனாலும் வேடிக்கை ஒண்ணுமே
பார்க்காம முழுநேரமும் டாய்லெட்லே போய் வாந்தி எடுக்கற ஆளு நானுன்றது வேற விஷயம்!)

நம்மூர் மாதிரி சாயந்திரம் காத்து வாங்கன்னு இங்கே யாரும் போறதில்லையே. நல்லா வெய்யில் காயத்தான் கூட்டம்
வருது இங்கெல்லாம்! சரி. போனோம். போனப்ப அங்கெ ஒரு கப்பல் வேற நின்னுகிட்டு இருக்கு. எனக்குக்
கப்பல் பைத்தியம் வேற இருக்கே! ( இதுமாதிரி பல விஷயங்களிலே ஞான் ப்ராந்தாணு!)

பார்க்கிங் இடம் எல்லாம் ஃபுல்! கிடைச்ச இடத்துலே பார்க் செஞ்சாச்சு. எதிரே ஒரு மரம்! ஒரு முழுக் கப்பலையே
மறைக்குது! இன்னைக்கு நமக்கு அதிருஷ்டம் இல்லேன்னு இருந்திருக்கலாம்தான்! கொஞ்சநேரம் வண்டியிலெயே
உக்கார்ந்து இவர் ஊருக்குப் போய் வந்த கதைகளைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்.நம்ம ஜாதக விசேஷம் ச்சும்மா
இருக்க விடாது! இந்த இடம் சரியில்லே! கப்பல் தெரியுற மாதிரி வேற எங்கேயாவது இடம் இருக்கான்னு பார்த்துட்டு
வரேன்னுட்டு நான் போனேன். நாக்குலே 'சனியன்' நல்லா 'ஸீட்' போட்டு உக்கார்ந்துகிட்டு இருந்ததைக் கவனிக்கலே!
ஹைய்யா! ஒரு இடம் இருக்கு! இவர்கிட்டே அதைச் சொல்லிட்டு, நான் அந்த இடத்துக்கு நடந்து போய்கிட்டு இருக்கேன்.

கோபால் வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்துக்கிட்டு இருக்கார். நேரா வந்து ச்சும்மா நச்சுன்னு ஒரு இடி! ஐய்யோன்னு
கத்திக்கிட்டே நான் கீழே விழுந்தேன்! எழுந்திரிக்கலாம்ன்னு நினைச்சாலும் உடம்பை அசைக்க முடியலை! வலின்னா
அப்படி ஒரு வலி!

இவரு வண்டியை நிறுத்திட்டுக் கத்திக்கிட்டே ஓடி வரார். அதுக்குள்ளெ அக்கம்பக்கத்துலே கூட்டம் சேர்ந்துடுச்சு!
அவுங்களிலே ஒரு நர்ஸ் இருந்தாங்களா அல்லது முதலுதவி தெரிஞ்சவுங்களான்னு தெரியலை, ஆனா அவுங்க
என்ன செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. உடனே இவர் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டார்.
நடுங்கற குரலோடு விபத்தைச் சொன்னார். சொல்லி அஞ்சு நிமிஷத்துக்குள்ளே சைரனோட வந்து நின்னது
போலீஸ் கார்!

மீதி அடுத்த பதிவில்....( பிழைச்சுக்கிட்டேன்)



5 comments:

said...

Hope, you're feeling better now!!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

அடடா துளசி என்ன ஆச்சு?
பிழைச்சிட்டேங்ற வார்த்தையே ஆறுதலா இருக்கு.

இப்போ எப்படி இருக்கீங்க?தேவலையா?

பூரண நலமடைய வேண்டி

அன்பு
மீனா.

said...

நன்கு குணமடைய வாழ்த்துக்கள், துளசி.

said...

ஆச்பத்திரியில் நெட் கனெக்ஷன் இருக்கிறது போலத் தெரிகிறதே?! முழுவதுமாக சுகமடைய இறைவனை வேண்டுகிறேன்.