Thursday, February 10, 2005

கொசுறு.....!!!!

கிட்டத்தட்டரெண்டு வருஷமாச்சு, தமிழ்ப் பத்திரிக்கைகளை அச்சில் பார்த்து! இப்பத்தான் எல்லாமே
இணையம் வழின்னு ஆகிடுச்சே! (அதுக்கும் வைச்சாச்சு ஆப்பு! இந்தமாசம் 15 முதல் ஆ.வி.க்கு
காசு வேணுமாம்!)மங்கையர் மட்டும் அப்பப்ப இங்கேயே ஓஸிலே கிடைச்சிருது!



எங்க இவரு, சில நாட்களுக்கு முன்னால், சிங்கப்பூர் வழியா இங்கே வந்தப்ப, நம்ம சிரங்கூன் ரோடிலே
ஒரு புத்தகக் கடையிலே ஏதாவது வாரப்பத்திரிக்கை வாங்கலாம்ன்னு பார்த்தாராம். அந்தக் கடைக்காரர் இவர்
கிட்டே பேச்சுக் கொடுத்திருக்கார். இவரோட கண்ணு புத்தகக் குவியலிலே மேயறதைப் பார்த்தவுடனே அவருக்குத்
தெரிஞ்சிபோச்சு, புள்ளி எந்த வகைன்னு! ( அவரும் எத்தனை பேரைப் பார்த்திருப்பார், இந்த வியாபாரத்திலே!)

'உங்களுக்குப் போன வாரம் புத்தகம் வேணுமின்னா, இதெல்லாம் தரேன். ச்சும்மா ஒரு அஞ்சு வெள்ளி கொடுங்க'ன்னு
சொன்னாராம். ரெண்டுவருசமாப் புத்தகத்தை அச்சுலே பார்க்காத ஆளுக்கு போன வாரத்துக்கும் போன வருசத்துக்கும்
என்ன பெருசா வித்தியாசம் வந்துடப்போவுது?

எனக்கும் படிக்கறதுக்காவுமேன்னு இவர் சரின்னு சொல்லிட்டாராம். மொத்தம் 13 புத்தகம்(கள்).ஆனா அதுலே எல்லாமெ
போனவாரமில்லை. இந்த வார வெளியீடும் இருக்கு!

குமுதம், ஆ.வி, குங்குமம் எல்லாம் மும்மூணு! இந்தியா டுடே தமிழ்( மீனா, கமல், விகரம்,சிம்ரன் படம்போட்ட அட்டை!)
ரெண்டு ஜூனியர் விகடன், அப்புறம் 'ஐ லவ் யூ'விகடன் ஒண்ணு. இலவச இணைப்பா ரெண்டு இளமை விகடன்,
ரெண்டுமினி குமுதம்! ( ஆமா, தமிழ்ப் புத்தகங்களுக்குத் தமிழிலேதான் பேர் வைக்கணும், இந்த மினி, ஜூனியர், ஐ லவ் யூ
இப்படி ஆங்கிலச் சொற்கள் வரக்கூடாதுன்னு இதுவரைக்கும் எந்த அரசியல் வாதியும் சொல்லலையா?)

இன்னும் அதையெல்லாம் படிக்கலே. ச்சும்மா ஒரு பார்வை பார்த்ததுலே சில விஷயம் கண்ணுலே பட்டது.

அச்சுப் பதிவோட தரம் முந்தி இருந்ததைவிட உயர்ந்திருக்கு! எல்லா புத்தகமும் ரொம்பவே 'கலர்ஃபுல்'லா இருக்கு!

உள்ளே விஷயம்ன்னு பார்த்தா.... ஊஹூம். சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லை! முக்காவாசி சினிமாக்காரங்களைப் பத்தி!
கால்வாசி அரசியல்வாதிங்க! அதிலும் இந்தியா டுடே சுத்தம்! முழுக்க முழுக்க சினிமாச் செய்திகள். 15 ஆண்டு நிறைவு
சிறப்பிதழாம்!

படங்கள், ஃபோட்டோன்னு கவர்ச்சி(!)யா இருக்கணுமேன்னு ரொம்ப சிரத்தையா பொண்ணுங்க படங்களைத் தேடிப் போட்டிருக்காங்க!
இது ஒரு போட்டியோ? ஏன்னா, இதுலே எல்லா பத்திரிக்கையும் ஒரே மாதிரி! ( எரியுற கொள்ளிலே எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி?)

ஆனா விளம்பரங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு! அதுலேயும் நகைக் கடை விளம்பரங்கள் எல்லாமே ஒரே'பளிச்'!
எனக்கென்னமோ நம்ம 'மீனாக்ஸ்'ஞாபகம் வந்தது!

ஒரு பத்திரிக்கையா வந்த காலம் போய், அதையே பல கிளைகளாகப் பெருக்கி வச்சிருக்காங்க! ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை!

( நல்லாப் பணம் பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க!)

போதாததுக்கு, இலவச இணைப்பு என்ற பேருலே, பத்து பன்னெண்டு பக்கம் அதே சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி!
அடங்க மாட்டாங்க போல! போதுண்டா சாமி!

நல்ல கொசுறு போங்க!





5 comments:

said...

இந்தியா டுடே தமிழ்( மீனா, கமல், விகரம்,சிம்ரன் படம்போட்ட அட்டை!)அடப்பாவி... போனவாரம் 2 வெள்ளி கொடுத்து வாங்கி, வீட்டம்மாட்ட வாங்கிக்கட்டினேன். (இதுல்ல என்ன இருக்குன்னு வாங்கி வந்தீங்க...:)

அதெங்க புடிச்சாங்க அவ்ளோ சல்லிசா!? ஒரே ஒரு கடைல மட்டும் பழைய புக்ஸ் (பெரும்பாலும் நக்கீரன், ஜீவி) 5 ஒரு வெள்ளின்னு வெளில போட்டிருப்பாங்க...

said...

யக்காவ்,

கண்ணை கசக்கிக்கிட்டே ஆவி ஆன்லைன்ல வாங்கிட்டேன். சும்மா கிடைச்சப்போ நல்லாதான் இருந்திச்சு. என்னா பண்றது?

கொசுறு போன கோபத்தில்,
குசும்பன்.

said...

புனே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தா எதிர்ப்பக்கமாய் ஒரு பிளாட்பார பேப்பர் கடை இருக்கும். தமிழ் புக் இங்கே மட்டும்தான் கிடைக்கும். அதுவும் இரண்டு ரூபாய் விலை அதிகமாக. இந்தியா டுடே, குமுதம், கல்வி, ஆ.வி மட்டும் கரெக்டா கிடைச்சுடும். ஜூ.வி, ரிப்போர்ட்டர், துக்ளக்கை கண்ணுல பார்க்க முடியாது. ஆனா, தமிழ்ல வர்ற 'மஞ்சா' புக் எல்லாமும் கிடைக்கும்.

நல்லவேளை தமிழர்களை இணைய பகவான் காப்பாத்துனாரு!

said...

அன்புள்ள ராம்கி,

புனேயில் 'ராஸ்தாப்பெட்'டில் தமிழ்ப் பத்திரிக்கைகள் எல்லாமே கிடைக்குமே! நம்ம ராஸ்தாபெட்
ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்னாலே கறிகாய் கடைகள் எல்லாம் ரோடிலேயே இருக்குமே, 'பூனா
கேட்டரர்ஸ்' பக்கத்திலே, அங்கேதான்!

நாங்கெல்லாம் அங்கேதான் வாங்குவோம்.நாங்க 5 வருஷம் (1977-1982)புனே ( பூனா)வில் இருந்தோம்!

என்றும் அன்புடன்,
துளசி

said...

பாண்டி,

ஏன் சுனாமி, கும்பகோணம் தீ விபத்து இதையெல்லாம் விட்டுட்டீங்களா?