Thursday, August 04, 2005

ஜெராக்ஸ்

ஹாரீஸ் ஜெயராஜ் ஏ.ஆர்.ஆரைக் காப்பி அடிச்சுட்டார்.

ஏ.ஆர்.ஆர், பல ஃபாரின் ம்யூஸிக் ட்ரூப்லே இருந்து சுட்டுட்டார்.

தேவா என்னன்னா, எல்லாருக்கும் ஒருபடி மேலே போய் மத்தவங்களுதையும் சுட்டு, அது போதாதுன்னு
அவருடைய ம்யூசிக்கையே அடிச்சுட்டார்.


இன்னும் ரமேஷ் விநாயகம், சிற்பி, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா,
இவுங்க அப்பா இளைய ராஜா, எஸ்.ஏ. ராஜ்குமார், எம்.எஸ்.வி, வித்யாசாகர், ஆர்.டி.பர்மன்ன்னு லிஸ்ட்
நீண்டுக்கிட்டே போகுதுன்னு http://www.mail-bag.com/copycat.shtml இந்த இடம் சொல்லுது.

இப்ப நம்ம ஆனந்த், அண்டங்காக்கா வந்த விதத்தை தன் பதிவுலே சொல்லியிருக்கார்.

இதெல்லாம் இன்னைக்கு நேத்து ஏற்பட்ட விஷயமில்லெ அப்பூ. காலங்காலமாய் நடந்து வருது!


போன பதிவுலே போட்ட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வந்தே அம்பது வருசமாச்சு. அதுலேயே
நம்ம தட்சிணாமூர்த்தி ஒரு பாட்டைச் சுட்டுட்டாருன்னு மேற்படி தளம் சொல்லுது!

மதுரைவீரன் படம் பார்த்துக்கிட்டு இருந்தேன். இதுவும் வந்தது அதே காலக் கட்டத்துலேதான்.என்ன, ஒரு
சில மாசம் பிந்தி.

எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி, பாலைய்யான்னு நல்ல 'வெயிட்'டான பார்ட்டிங்க நடிச்சது. மொதப் பாதிதான்
பானுமதியம்மாவுக்கு. அடுத்த பாதி பத்மினிக்கு. என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ. மதுரமும் இருக்காங்க.

திரைக்கதை,வசனம் நம்ம (கவிஞர் ) கண்ணதாசன்! சிலபாடல்களும் எழுதியிருக்கார். சிலது மருதகாசி!

பாட்டுங்கல்லாம் நல்லாவே இருந்துச்சு. இசை ஜி.ராமநாதன்.

'வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க'ன்னு கூட்டமா ஆடுறாங்க ஈ.வி.சரோஜா அண்ட் பார்ட்டி.
இந்தப் பார்ட்டிலே ஒரு தெரிஞ்ச முகம் இருக்கு. அது சுகுமாரி. இப்ப மலையாளப் படங்களிலே அம்மாவேசம்
கட்டறாங்களே அவுங்க. பழைய படம் பாக்கச்சொல்ல தெரிஞ்ச மூஞ்சிங்களைக் கண்டுபிடிக்கறது ஒரு சைடு
விளையாட்டு.

படத்தோட ஆரம்பத்துலே இளவரசன் பிறந்ததைக் கொண்டாட அரச சபையிலே ஒரு நடனம். குசலகுமாரி யாருக்காவது
ஞாபகம் இருக்காங்களா? அவுங்கதான் 'செந்தமிழா எழுந்து வாராயோ, உன் சிங்காரத்தாய் மொழியைப் பாராயோ'ன்னு
அருமையான பாட்டுக்கு ஆடறாங்க. அம்பதுவருசமாத் தமிழனைத் தட்டி எழுப்பிக்கிட்டே இருக்காங்க, ஆனா தமிழன்
எழுந்திருக்கற வழியைக் காணம்! ஹூம்.....

லலிதா& ராகினியோட நடனம் ஒண்ணும் இருக்கு.( ராகினியைப் பாக்கறப்ப நம்ம ஷோபனா நினைவு வருது. ஒரே சாயல்.
இருக்கட்டும், தம்பி பொண்ணூதானே!)

கதைப்படி வீரனுக்கு ( எம்.ஜி.ஆர்) மாறுகை, மாறுகால் வெட்டி மரணதண்டனை! தண்டனையும் நிறைவேறிடுது.
அப்பத்தான் எம்.ஜி.ஆர் நடிக்கவந்த ஆரம்பக்காலம் போல. தலைக்குப் பின்னாலெ 'ஒளிவட்டம்' கிடையாது.
இதே கதையை இவர் உச்சத்துலே இருந்தப்ப எடுத்திருந்தாங்கன்னா? முடிவையே மாத்தவேண்டியிருக்கும்.

கறுப்பு வெள்ளைப் படம்தான். ஆனா ஒண்ணு சொல்லணும். 'வாத்தியாருக்கு' முகத்துலே நல்ல களை. அம்சமான
முகம்தான்!

கத்திச் சண்டை ஏற்பாடு ஆர்,என். நம்பியார் & பார்ட்டின்னு டைட்டில் போடறாங்க. கத்திச் சண்டைக்கு ஒரு கவர்ச்சி
வந்ததுகூட எம்.ஜி.ஆரோட படங்களாலேதானே?

'அவர்க்கும் எனக்கும் உறவுகாட்டி அருள் புரிந்தது கதையா?'ன்னு ஒரே ஒரு பாட்டுத்தான் பானுமதிக்கு.

'நாட்டியப் பேரொளி'க்கு மூணு பாட்டுங்க. எல்லாமே ஆட்டம் சம்பந்தப்பட்டதுங்க.

'ஆடல் காணீரோ'

'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே'

'ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?' இந்தப் பாட்டைக் கள்ளர் கூட்டத்துக்கு முன்னாலெயே பாடி ஆடறாங்க.
இப்படித் தங்களை 'அக்யூஸ்'பண்ணற பாட்டையும் ரசிச்சுக்கிட்டே இருக்காங்க அந்தக் கூட்டத்துலே!!! திருடங்களுக்குப்
புத்தி கொஞ்சம் கம்மி போல இருக்கு:-)

சொல்லவந்த விசயத்தைச் சொல்லலே பார்த்தீங்களா. 1939லே திருநீலகண்டர்னு ஒரு படம் எம்.கே.தியாகராஜ
பாகவதர் நடிச்சது வந்திருக்கு. அதுக்கு இசை அமைச்சவர் நம்ம பாபநாசம் சிவன்.

1955லே ஒரு படம் வருது. பேரு மதுரை வீரன். இசை ஜி.ராமநாதன். ஒரு பதினாறு வருச வித்தியாசத்துலே
உள்ளூருலேயே 'சுட்டபழம்' கொடுத்திருக்காங்க.

சரி. எங்கே பாடுங்க பாக்கலாம்.

தீனக் கருணாகரனே நடராஜா நீலகண்டனே....

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க....

அடுத்த பாட்டுக்கு வாங்க.

உண்மையோடு உழைக்கோணும் தானேதன்னன்னே.....

ஏரு பூட்டிப் போவாயோ அண்ணே சின்னண்ணே....

மனுசனுக்கு மறதியைக் கொடுத்த கடவுளுக்குத்தான் இவுங்க மொதல்லே நன்றி சொல்லிக்கணும்.




20 comments:

said...

இன்னும் போஸ்டீ வரலை. மூணுமணிக்கு அப்புறம் வரமாட்டாங்க. அதுக்குள்ளே புதுப் படம் வரலைன்னா, தலைவர் வாரமே தொடரும்!

உங்க புகைப்படப் பதிவு 'அமர்க்களமா' இருக்கு!

வாழ்த்துக்கள்!!!

துளசி.

said...

//அம்பதுவருசமாத் தமிழனைத் தட்டி எழுப்பிக்கிட்டே இருக்காங்க, ஆனா தமிழன் எழுந்திருக்கற வழியைக் காணம்! ஹூம்.....//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை என்பதையும் நான் ஒவ்வொரு நாளும் காலையில் 6.30 மணிக்கே(!?) எழுந்து விடுகிறேன் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ;O)

said...

ஷ்ரேயா,

மெய்யாலுமா?

said...

இதென்ன இப்பிடிக் கேட்கிறீங்க!! :O(

ஒரு சின்னத் திருத்தம்: ஒவ்வொரு நாளும் என்பது திங்கள் -> வெள்ளி என்று இருந்திருக்கணும். சனி, ஞாயிறு எல்லாம் 8க்குப் பிறகுதான்! ;O)

said...

//8க்குப் பிறகுதான்//
ஒம்போதா?

said...

இந்தப் படத்தில வாத்தியாரோட பெற்றோர்களா NSK-மதுரம்சோடி வருவாங்க தான??எப்பவோ தூர்தர்ஷன்ல திரைமலர்ல பார்த்த ஞாபகம்.

//ஆடல் காணீரோ//
இந்தப் பாட்டை எம்.எல்.வசந்தகுமாரியம்மா பாடினாங்கன்னு நினைக்கிறேன்.அப்புறம் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு மிக முக்கியமான பாட்டை மறந்துட்டீங்களா??

ஆமாம்,வாத்தியாரோட சேர்ந்து ஏன் நாட்டியப்பேரொளி அம்மா நிறையப் படங்கள்ள நடிக்கல?
ஒரு வேளை நடிகர் திலகத்துக்கிட்ட இருந்து உத்தரவு வந்திட்ச்சா.?
அந்தக் காலத்து ஆட்கள் யாராவது விளக்கலாமே.

said...

////8க்குப் பிறகுதான்//
ஒம்போதா? //

no comments!! :O)


//அந்தக் காலத்து ஆட்கள் யாராவது விளக்கலாமே.//

யாரக் கேட்கிறீங்க சுதர்சன் கோபால்?

இப்படிக்கு
அப்பாவி ;O)

said...

அது என்ன முக்கியமான பாடல் சுதர்சன்?

நான் எதையாவது 'மிஸ்' பண்ணிட்டேனா?

said...

"தூங்காதே தம்பி தூங்காதே...
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"
இத்த மறக்கலாமா நீங்க????

"ஆமாம்,வாத்தியாரோட சேர்ந்து ஏன் நாட்டியப்பேரொளி அம்மா நிறையப் படங்கள்ள நடிக்கல?"
அப்புறமா என்ற கேள்விக்கு என்ன பதில்???

said...

சுதர்சன்,

//"தூங்காதே தம்பி தூங்காதே...
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"
இத்த மறக்கலாமா நீங்க????//

இது 'நாடோடி மன்னன்' படம்!

துளசி.

said...

நாடோடி மன்னன்ல கமால் ஹுசைன் தானே நடிச்சார்?

பி.கு: கமால் ஹுசைன் = கமல் ஹாசன் :O)

said...

//இது 'நாடோடி மன்னன்' படம்//
இந்த ஒரு தபா என்ன மன்னிச்சு உட்டுடுங்கோ.:-)
அக்கா,
என் கேள்விக்கு என்ன பதில்???

//நாடோடி மன்னன்ல கமால் ஹுசைன் தானே நடிச்சார்?//
இல்லீங்கோ.நீங்க சொல்ர படத்தோட பேரே தூங்காதே தம்பி தூங்காதே.இதில தான் கமால் டபிளு ஆக்கிட் கட்டி இருப்பாரு.

said...

சின்னப்புள்ளை ஷ்ரேயா,

நாடோடி மன்னன் ரெண்டுதபா வந்துருக்கு. மொதப் படம்
எம்.ஜி,ஆர் & பானுமதி

ரெண்டாவது சரத் குமார்.

said...

சுதர்சன்,

சரி.போகட்டும் மன்னிச்சுரலாம். இதுக்குத்தான் தூங்காம படம் பாக்கணும்ங்கறது!

ஏம்பா, தலைவருக்குத்தான் சரோஜாதேவி, மஞ்சுளான்னு ரொம்ப இளைய நாயகிங்க வந்துட்டாங்களே. இப்ப என்னாத்துக்கு பத்மினி கூட ஆக்ட் குடுக்கலைன்னு கூவிக்கிட்டு கீறே:-)))

said...

// சரி. எங்கே பாடுங்க பாக்கலாம்.
தீனக் கருணாகரனே நடராஜா நீலகண்டனே....

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க....//

அட! அந்த காலத்துல பாட்டெல்லாம் ராகத்த(மெட்டு?!) மாற்றி பாடரதில்லை... கவிதை(Lyrics) மாறும். இசைக்கருவிகள் கம்மி. அதனால அப்பட்டமா தெரிஞ்சுடுச்சு!!

ஆனா இப்பொ .........எல்லாமே மாறிப்போச்.. எக்கச்சக்க Variants..... கொஞ்சம் கஷ்டபட்டா ஒரிஜினலை கண்டுபிடிக்கலாம்! எனக்கு காப்பியில பிடிச்சது.....Anu Malikதான். எவளோ கஷ்டபட்டு...பேட்டியில .... துத்துத்தூ துத்துத்தாரா...(அடி ராக்கம்மா கையைத்தட்டு..[தளபதி]) - கையை ஆட்டி மெட்டுப்போட்டு காமிச்சாரு...அட அட!!!! அப்டியே....தானா வந்துதாம்! எந்த பாட்டையும் காப்பி பண்ணலயாம்....ஹூம்...

ஆமா பழைய பாட்டெல்லாம் discuss பண்ணா வயசாயிடுச்சுன்னு அர்த்தமா?

said...

தாசரதி,

//ஆமா பழைய பாட்டெல்லாம் discuss பண்ணா வயசாயிடுச்சுன்னு அர்த்தமா?//

கையைக் கொடுங்க குலுக்க!!!!

( உங்களுக்கு இன்னும் 'வயசாகலை'தானே?)

துளசி.

said...

நாகேஷ் நடிச்ச, நகைச்சுவைப் படம் (கறுப்பு - வெள்ளை என்றால் மிக நல்லது) ஒன்றிரண்டு சொல்லுங்களேன்.. வார இறுதியில் பார்க்க!

said...

விசிதா,

நன்றி. நான் சொல்ல நினைச்சதைச் சொன்னதுக்கு.

அது சீப்பு, சோப்பு, கண்ணாடி

துளசி.

said...

அய்யய்யோ விசிதா,

நீங்கதான் ரைட். அது சோப்பு சீப்பு கண்ணாடிதான்.

said...

'மழை' ஷ்ரேயா

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை என்பதையும்

அன்புள்ள ஷ்ரேயா,

உங்கள் வயது 49தானே ? :-))