Tuesday, September 06, 2005

வீட்டை வித்துட்டு......

வாயை ஆவெனப் பிளந்துக்கிட்டு மீன் கூட்டத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு.
ஐய்யோ...என்ன அழகு. அதிலும் ஒவ்வொரு 'ஸ்கூல் ஆஃப் ஃபிஷ்'-ம் கடந்து போறப்ப நிஜமாவே பள்ளிக்கூடப் பசங்களைப்
போலவே ஒரு ஒழுங்கோட போகுதுங்க. அதிலும் கூட ஒரு அழகு இருக்கத்தான் செய்யுது. என்ன நிறம்னு சொல்றீங்க?
ஆஹா,ஆஹா... வர்ணிக்க வார்த்தை இருக்கா என்ன?



தண்ணிக்கடியிலே பவளச் செடிங்களும், மத்த நீர்த்தாவரங்களுமா ஒரு காடு போலவே இருக்கு. தண்ணியோட சேர்ந்து
ஒய்யாரமா அசையுறதும், அங்கங்கே பவழப்புதர்களும்,அதுக்குள்ளே புகுந்து புறப்படற ஒத்தை மீன்களும். எதுலேயும்
கூடச்சேராம தாதாமாதிரி பெரிய உருவத்துடன் நின்னுக்கிட்டு(!) கண்ணைமட்டும் உருட்டிப் பார்த்துக்கிட்டு அசையாம
இருக்கறவனை(அட, இந்த இவன் மீன் தாங்க! எனக்கு எல்லாமே மனுஷ, தாவர வர்க்கத்தைத் தவிர்த்து அவன் இவந்தான்)
பார்த்துக் சிரிப்பு வந்துருச்சு. இதைச் சட்டையே செய்யாம சரேல்னு ஒரு கூட்டம் கருப்பு நிறத்துலே கடந்து போகுது.

எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. பாக்கப்பாக்க அருமையா இருக்கு, திறந்த வாய் கொஞ்சம் கொஞ்சமா மூடுது.
'இன்னும் கொஞ்சம் வாயை நல்லா திறக்கறீங்களா?' அதுவரைக்கும் ஸீலிங் லே பதிச்சிருந்த ஃப்ளாட் ஸ்க்ரீன்
டி.வி.யிலே நட்டுருந்த கண்ணை சடார்னு திருப்பினேன். டெண்டல் சேர்லே படுத்திருந்த என் கிட்டே, வாயைத் திறக்கச் சொன்னது
நம்ம புது டெண்டிஸ்ட்! இந்தியப் பொண்ணு. இங்கேதான் வெளிநாட்டு மருத்துவர், பல்மருத்துவர் எல்லாரையும்
வேலைக்கு சேர்த்துக்கறதுக்கு ரொம்ப நோணாவட்டம் பார்க்கறாங்களே. பின்னே எப்படி இந்திய பெண்?

வியாதியைப் பொறுத்தவரை நம்மூர்லெ இல்லாததா?ஆனா அந்த அனுபவம் போதாதாம்! அவுங்களுக்கு பாயிண்ட் சிஸ்டத்துலே
இங்கே வந்து வசிக்கறதுக்கு பி.ஆர்( நிரந்தரக் குடியுரிமை) கொடுப்பாங்களாம். ஆனா அவுங்க படிச்ச படிப்புக்கு மட்டும்
வேல்யூ கிடையாதாம். நல்ல கதை. அவுங்க இங்கே பரிட்சை எழுதிப் பாஸ் பண்ணினா வேலைக்குச் சேர்த்துக்குவாங்க.
அதுவும் மூணு பரிட்சை எழுதணும். ரொம்பக் கடக்கா வேற இருப்பாங்க. பரிட்சையிலே மூணாவதுமுறையும் ஃபெயிலாயிட்டா
அவுங்க இங்கே டாக்டர் தொழிலே பார்க்க முடியாது! ஊர்லே ஆளுஅம்போடே அந்தஸ்த்தா இருந்த வாழ்க்கை போச்சு(-:

இதுலே பாருங்க. ச்சின்னவயசானவங்கன்னா இங்கேயே மெடிக்கல் ஸ்கூல்லே மறுபடிச் சேர்ந்து படிச்சுட்டு மேலே வந்துருவாங்க.
ஓரளவு வயசானவங்கன்னா திருப்பி எல்லாத்தையும் படிச்சு, பரிட்சை எழுதிப் பாஸ் செய்யறது கொஞ்சம் கஷ்டம்தானே?
மூணாவது முறையும் தோத்துட்டா? இந்த பயத்துலேயே வேற லைன்லே வேலை தேடிக்கிறவங்களும் இருக்காங்க.
சிலர் பிள்ளைங்க படிச்சு முடிக்கிறவரை வேற வேலை தேடிக்கிட்டே...... இருந்துடறாங்க. அவுங்க அரசாங்கம் கொடுக்கற
நிதியாலே வாழறதாலே அந்தப் பிள்ளைங்களுக்கும் லிவிங் அலவன்ஸ்ன்னு ஒரு கணிசமான தொகை வாராவாரம் கிடைச்சுருது.
இது கல்லூரிப் படிப்புக்கு மட்டும்தான். தாய் தகப்பன் வேலை செஞ்சா இது கிடைக்காமப் போயிரும். அதுங்க படிச்சபிறகு
பெரியவுங்க, அவுங்களோட பரீட்சைக்குப் படிக்கறது சிலசமயம் ஆரம்பிக்கும். டாக்குட்டர்ங்களுக்குதான் இந்தக் கஷ்டம்.
நர்சுங்களுக்கு வேலை கொஞ்சம் சுலபமாக் கிடைக்குது. இங்கேதான் பத்தாக்குறையா இருக்கே. அதனாலே அவுங்க
ஒரு ஆறுமாச கோர்ஸ் செஞ்சாப் போதும். நிறைய சேச்சிமார்க்கு இப்ப வேலை கிடைச்சிருக்கு. நல்லதுதான்.

எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் கேரளாவிலே பல்வைத்தியரா வேலையிலே இருந்தவர், இங்கே வந்து பழையபடி
பல்வைத்தியம் 4 வருசம் ( பொதுவா அஞ்சுவருசம் படிக்கணும். இவரோட அனுபவம், திறமை எல்லாத்தையும் பரிசோதிச்சிட்டு
நாலு வருசம் போதுமுன்னு சொல்லிட்டாங்க)படிச்சு அந்த 'பேட்சு'லேயே அதிக மதிப்பெண், மெடல் எல்லாம் வாங்கி பாஸ்
செஞ்சு, இங்கே அரசாங்க மருத்துவமனையிலே ஒரு வருசம் வேலையும் செஞ்சார். அது இவருக்கு நல்ல அனுபவத்தைக்
கொடுத்துச்சுன்னும் சொல்லிக்கிட்டு இருந்தார். எல்லா வார இறுதியும் இவருக்கு ட்யூட்டி போட்டுருவாங்க. வர்றதெல்லாம்
ஸ்போர்ட்ஸ் இஞ்ஜுரி. அதான் ரக்பி விளையாடி பல்லெல்லாம் தெறிச்சுப்போய் வர்றது! பின்னே அனுபவத்துக்குக்
கேக்கணுமா? இப்ப எங்கே இருக்காருன்னு கேக்கறீங்களா? அநேகர் செய்யறமாதிரி ஆஸ்தராலியாவுக்குச் சாடிட்டார்.
இப்ப அங்கெ சொந்தம் பிராக்டீஸ், பணம் கொழிக்குதுன்னு கேள்வி.

இன்னிக்கு எனக்கு வைத்தியம் செஞ்சவுங்க, மும்பையிலே படிச்சு அங்கேயே வேலை செஞ்சவுங்க. இங்கே இருக்கற
நம்ம நண்பரைக் கல்யாணம் முடிச்சவுங்க. ச்சின்ன வயசுதானே. சரி, படிச்சுரலாமுன்னு படிக்க ஆரம்பிச்சு முடிச்சுட்டு
இப்ப இங்கே ஒரு தனியார் க்ளினிக்லே பல்வைத்தியம் பாக்கறாங்க. நம்ம ஆளுங்களை நாமே சப்போர்ட் செய்யாட்டா
எப்படி? இன்னும் சொல்லப்போனா இவுங்க ஒருத்தர்தான் இந்தத் துறையிலே இந்த ஊருக்கு வந்துருக்கற நம்மூருப்
பொண்ணு. அவுங்க ஊர்லே 'காஸ்மெடிக் டெண்டிஸ்ட்ரி ஸ்பெஷலைஸ்' செஞ்சவுங்க.( பாக்கலாம், என்னை அழகா
மாத்தறாங்களான்னு)

'அப்ப உங்க பழைய டெண்டிஸ்ட் என்ன ஆனாரு'ன்னு கேக்கறீங்களா?

இருக்கார். நல்லாவே இருக்கார். முந்தி ஒரு சாதாரண இடத்துலே இருந்த ப்ராக்டீஸை இந்த இளைஞர் வாங்கிட்டார்.
மனைவியும் பல் மருத்துவம்தான். அப்ப ரெண்டு பேரும் படிச்சு முடிச்சு ஒரு ரெண்டு வருசம்தான் ஆகியிருந்தது.
பழைய பேஷிண்ட்டான நாங்கெல்லாம் ஆட்டோமேட்டிக்கா இவுங்க கையிலே வந்துட்டோம்.

ஒரே வருசத்துலே, 'பக்கத்துலே வேற புது இடத்துக்கு மாத்தறோம். இனிமேப்பட்டு வைத்தியம் அங்கெதான்'னு சொன்னாங்க.
ஒரு நா அங்கே போறேன், தப்பான விலாசமோன்னு முதல்லே பயந்துட்டேன். புத்தம் புது பில்டிங். ஃபைவ்ஸ்டார் ஹோட்டேல்
மாதிரி அட்டகாசமான ரிஸப்ஷன். இளவயது வரவேற்பாளி( பழைய பாட்டி என்ன ஆச்சுன்னு தெரியலை?)
எல்லாம் நவநாகரீகமான டெண்டல் சேர்ஸ். மாடர்ன் மெஷீன்ஸ், கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமெரா எல்லாம் வச்சு
நம்ம பல்லை அப்படியே 3D லே காமிக்கற பெரிய ஸ்க்ரீன், நாம சும்மா நின்னாலே நம்மைச் சுத்திச்சுத்தி வந்து
நம்முடைய 32 பல்லையும் எக்ஸ்ரே எடுக்கற மெஷீன்ன்னு ஒரே அமர்க்களமா இருக்கு. இங்கே நியூஸியிலேயே
இவுங்களுதுதான் ஹைடெக் # 1ன்னு டி.வி.யிலே ஒரு நாள் நியூஸ் வந்துச்சாமே! இந்தமாதிரி நம்ம சம்பந்தப்பட்ட
முக்கியமானதெல்லாம், நான் டிவி. நியூஸை தவறவிடுவேன் பாருங்க, அன்னைக்குத்தான் வரும். புதுசா ரெண்டு
டெண்டிஸ்ட், ரெண்டு ஹைஜீனிஸ்ட்ன்னு வேற இருக்காங்க.

இங்கெல்லாம் எப்பவும் கொஞ்சம் குசலம் விசாரிக்கறப் பழக்கத்தை அனுசரிச்சு, மனைவி எங்கேன்னு கேட்டா
இன்னைக்கு வேலைக்கு வரலை. இப்பெல்லாம் எப்பவாவதுதான் வேலைக்கு வராங்க. ரெண்டு பிள்ளைங்களைப்
பார்த்துக்கவே நேரம் சரியாப் போயிருது. இப்ப மூணாவது வயித்துலெ! 27 வாரம் ஆச்சுன்றார்.

வைத்தியம் முடிஞ்சப்பறம் பார்த்தா பில் எக்கச்சக்கமா வருது. எல்லாம் நம்ம பல்லை 3Dலே பாத்ததுக்குக் காசு போலெ.
எனக்குத்தான் இப்படிப் பணம் பறிக்கிறமாதிரி இருக்கே தவிர, கோபால் ஒரு நாளும் கம்ப்ளெயிண்ட் சொல்றதில்லை.
'நல்ல சர்வீஸ் ஆச்சே. அப்படித்தான் இருக்கும். நல்ல வேலைக்காரன். வேலை ரொம்ப சுத்தம்' இப்படின்னு புகழ்த்தி
வேற பேசுவார். எனக்கோ ஒரே கடுப்பு. வேற பல்வைத்தியர் தேடணுமுன்னு புலம்பிக்கிட்டே இருப்பேன்.

ஒருநாளு சொல்லவும் செஞ்சேன்,'நீங்க ரொம்ப சார்ஜ் செய்யறீங்க'ன்னு. அதுக்கு பதில் வருது,'இப்ப பல்வலி
இல்லாம சாப்பிட முடியுமே'ன்னு! எனக்கோ ஒரே எரிச்சல். 'எல்லாக்காசையும் நீங்களே பிடுங்கிக்கிடறீங்களே,
அப்புறம் சாப்புடறதுக்குக் காசு எங்கே?'ன்னு கேட்டேன்.

ஒருநாள் எங்க இவர் போனப்ப, இதைச் சொல்லிட்டு, 'நான் எவ்வளவு நல்லா வைத்தியம் பாக்கறேன். ரொம்பக் காசு
வாங்கறேன்ன்னு உங்க மனைவி சொல்லிட்டுப் போனாங்க. அவுங்களைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு'ன்னு
சொன்னாராம் அந்த டெண்டிஸ்ட். போனமாசம், என் மக அங்கே போனப்பக் கூடச் சொல்லியனுப்பிச்சேன், 'நாம
புது வீட்டுக்குக் குடிபோயிட்டோமுன்னு சொல்லிடாதே. அப்புறம் வர்ற பில்லுக்கு இந்த வீட்டை வித்துதான் காசு கட்டணும்'னு.

நாங்க சென்னையிலெ இருந்தப்பெல்லாம் பல் வைத்தியர் கிட்டேப் போனதே இல்லை. பூனா வந்தப்பிறகுதான் இந்த
'ஞானப்பல்' விஷயமா ஒருத்தரைப் பார்க்கும்படியாச்சு! அதுக்கப்புறம் ஃபிஜியிலே இருந்தப்பவும் நம்ம ஊர் போலத்தான்.
பல் வலின்னு எதாவது வந்தாத்தான் போறது. இங்கே நியூஸிக்கு வந்தபிறகு ஊரோடு ஒத்து வாழறோம். வருசாவருசம்
செக்கப்பு, ஓட்டைவிழுத்தா அடைக்கறது, க்ளீனிங்ன்னு போகுது.

இங்கெல்லாம் குழந்தைக்குப் பல் முளைச்சதிலே இருந்து கவனிப்பு வந்துருது. அந்தந்த பேட்டைங்களிலே இருக்கற
ஆரம்பப்பள்ளிக்கூடத்திலேயே டெண்டல் க்ளினிக் இருக்கு. ஸ்கூல் புள்ளைங்களுக்கு தவறாம செக்கப்பு உண்டு.
வகுப்பு நேரத்துலேயே டெண்டல் நர்ஸ் வந்து 'புள்ளை புடிச்சுக்கிட்டு' போவாங்க. இங்கே புள்ளைங்களுக்கு ஸ்கூல்
வயசு 5. பல் முளைச்சவுடனே அந்தந்த பேட்டை டெண்டல் க்ளினிக் போய் புள்ளைங்க பேரைப் பதிவு செஞ்சுரணும்.
இது இலவச சேவைதான். ஆரம்பப்பள்ளிக்கல்வியை முடிச்சதும் குடும்ப பல் வைத்தியர் கிட்டேபோகணும்.
இதுவும் இலவசம்தான். 17/18 வயசு(ஹைஸ்கூல் படிப்பு) முடியுற வரைக்கும் நமக்குச் செலவில்லை. அதுக்கப்புறம் ஒரேதா
தீட்டிடுவாங்க!

மொதல்லே நான் மட்டும் ருசிகா கிட்டே( நம்ம புது இந்தியன் டெண்டிஸ்ட்) வைத்தியம் பார்த்துக்கறது, பிடிச்சுப் போச்சுன்னா முழுக்
குடும்பத்தையும் அங்கெ மாத்திக்கலாமுன்றது இப்பத்துத் திட்டம்.

வைத்தியம் முடிஞ்சபிறகு முக்கியமான கட்டத்துக்கு வந்தோம். அதான் பணம் அடைக்கறது. ருசிகா சொன்னாங்க
'உங்களுக்கு ஒரு நல்ல டிஸ்கவுண்ட் தரேன் ஆன்ட்டி'ன்னு! 'எவ்வளவு 100% டிஸ்கவுண்ட்டா?'ன்னு கேட்டுட்டு
அவுங்க தந்த 20% தள்ளுபடியை சந்தோஷமா ஏத்துக்கிட்டேன். இனி அங்கே போற ஒவ்வொரு விஸிட்டுக்குமே
தள்ளுபடி தரேன்னு சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது!!!!!!

ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்!!



25 comments:

said...

//எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. பாக்கப்பாக்க அருமையா இருக்கு, திறந்த வாய் கொஞ்சம் கொஞ்சமா மூடுது. 'இன்னும் கொஞ்சம் வாயை நல்லா திறக்கறீங்களா?' அதுவரைக்கும் ஸீலிங் லே பதிச்சிருந்த ஃப்ளாட் ஸ்க்ரீன்
டி.வி.யிலே நட்டுருந்த கண்ணை சடார்னு திருப்பினேன்//

இது.. துளசி!! ;O)

பல்வைத்தியர்கள்தான் வளர்ச்சியடைந்த நாடுகள்லே நல்லா உழைக்கிறாங்க! எனக்கும் இந்த வகை வைத்தியர்களுக்கும் super glue போட்ட மாதிரி பயங்கர நெருக்கம். :O(

அதுசரி உங்கட டென்டிஸ்ட் 20% அதிகமா வைச்சிட்டு பிறகு 20% டிஸ்கவுண்ட் தந்திருப்பாவோ??? ;O)

said...

ஷ்ரேயா,
//உங்கட டென்டிஸ்ட் 20% அதிகமா வைச்சிட்டு பிறகு 20% டிஸ்கவுண்ட் தந்திருப்பாவோ??? //

இருக்காது( அப்படின்னு நினைக்கிறேன்) பழைய டெண்டிஸ்டை விடவும் கொஞ்சம் மலிவுதான்!

said...

//17/18 வயசு(ஹைஸ்கூல் படிப்பு) முடியுற வரைக்கும் நமக்குச் செலவில்லை. அதுக்கப்புறம் ஒரேதா
தீட்டிடுவாங்க!//

பல்கலைக்கழகத்தைத்தானே சொல்றீங்க? வாழ்க்கையையே கடன்ல தான் ஆரம்பிக்க வேணிடியதாயிருக்கும். :O(

படிப்புச் செலவுக்கான கட்டணத்தை அரசு செலுத்தினாலும் திருப்பிக் கட்டோணுந்தானே..ஆனா வருமான வரியிலே ஒரு பகுதியா கழிப்பாங்க. இங்கே வந்த புதுசிலே எனக்கு இதெல்லாம் புதுமையா இருந்துது.

said...

இல்லை ஷ்ரேயா! அது தனி. நான் சொன்னது இந்தப் பல் வைத்தியச் செலவை.

said...

// நான் சொன்னது இந்தப் பல் வைத்தியச் செலவை. //

ஓ! சரி சரி..

said...

"பல்லெல்லாம் மாணிக்க பல்லாகுமே"
டென்ஸ்ட்டோடது. நம்மட்ட வாங்கர காசுல. நாங்களும் இங்க உள்ள ஒரு இந்திய பல்வைத்தியரிடம்தான் போசிறோம். ஆனா பாருங்க, எப்ப போனாலும், டிகெட் எடுத்து ஒரு நட மாம்பலத்துல சித்ராட்ட சரி பண்ணிட்டு வந்துடலாம் தோண்ற அள்வுக்குதான் பில் வருது. என்ன செய்ய?

said...

அடடே, உங்களுக்கும் இந்தியப் 'பல்லவர்'தானா?

ஐய்யாவா இல்லே அம்மாவா?

said...

அம்மாவேதான்.

said...

இங்கே ஒருத்தர் ஏதோ ஒரு Patel..சத்திரசிகிச்சையெல்லாம் செய்தார். கொஞ்சப்பேர் கவனமின்மையால அவர் செய்த பிழைகள் காரணமா இறந்தும் போயிட்டாங்க. சிலருக்கு வயித்துக்குள்ளேயே உபகரணங்களை வைச்சு தைச்சுமாச்சு! இப்ப அவரை துரத்தியாச்சு.

said...

ஒரு சின்ன சந்தேகம்.. வைத்தியர் ஏன் எங்க ஊர்க்காரங்களா இருக்கிறதை மனம் ஏன் விரும்புது?

said...

ஷ்ரேயா,

பட்டேலோட நோயாளிகளுக்கு வயித்துலே பல்லா? :-)

said...

ஓஹோ, சாட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? அப்புறமா வரேன் :-))))
உஷா

said...

நமக்குத்தான் கடல் கடந்து போற அதிர்ஷ்டம் இல்லை, பெண்ணையாவது அணுப்பலாம்னு நெனைச்சிருந்தேன். ஆனால் பல் மகாத்மியங்களைக் கேட்டதும் அதை மறு பரிசீலனை பண்ணணும்னு தோணுது. சம்பாதிக்கிறதை எல்லாம் `பல்’லுக்கே
கொடுக்கவெண்டியதாயிடும் போலிருக்கே! ஏன்னா, நாங்க `பல்லவர்’ பரம்பரையாச்சே! எடுப்பான பற்கள்!!!

said...

துளசி
என் மனதில் நினைப்பதை நீங்கள் எழுதுவிடுகிறீகள். பேசாம இரட்டை புலவர் மாதிரி இரண்டும் பேரும் செர்ந்தே எழுதலாம். ஆனா உங்கள மாதிரி interesting ஆ என்னால எழுத முடியாது

said...

அக்கா,
இந்த பதிவு மீன் பற்றிய, இல்ல பல் மருத்துவர் பற்றியா, இல்லை உங்க புது டெண்டிஸ்ட் பற்றியா இல்ல மாங்காய் பற்றியா?..அயோ கொழப்பமா இருக்கே.. எது பற்றியதுனு தனி பதிவு போடுங்க ..
எப்படியோ படிக்க நல்லா இருந்தது..

//எனக்குத்தான் இப்படிப் பணம் பறிக்கிறமாதிரி இருக்கே தவிர, கோபால் ஒரு நாளும் கம்ப்ளெயிண்ட் சொல்றதில்லை///
திரு கோபாலுக்கு கல்யாணத்துக்கப்புறம் இதெல்லாம் பழகி போய் இருக்கும் :)

said...

// //எனக்குத்தான் இப்படிப் பணம் பறிக்கிறமாதிரி இருக்கே தவிர, கோபால் ஒரு நாளும் கம்ப்ளெயிண்ட் சொல்றதில்லை//
திரு கோபாலுக்கு கல்யாணத்துக்கப்புறம் இதெல்லாம் பழகி போய் இருக்கும் :) //

துளசி.. இவ்வ்வ்வ்வ்ளோ நேரம் பதிலே சொல்லாம சும்மாருக்கீங்க? இது நல்லால்லே! :O)

said...

உஷா,
இப்பத்தான் உங்க முற்றுப்புள்ளி பார்த்தேன். மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.

said...

தாணு,

இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? மகளை வெளிநாடு அனுப்புங்க. அப்புறம் மகளைப் பாக்கற சாக்குலே நாமும் கடல் கடந்துறலாம்:-)

said...

பத்மா,

நீங்க சொன்னதும் என் மனசு 'ஜிவ்'ன்னு றெக்கை கட்டிப் பறந்துக்கிட்டுப் போகுது.

நீங்க எவ்வளவு ஆழமாச் சிந்திச்சு பதிவு போடறீங்க. நானு? ஏதோ சின்னப்புள்ளைத்தனமா, இந்த வயசுலே கிறுக்கிக்கிட்டு இருக்கேன்.

ஆனாலும் உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும்
ஒரு சந்தோஷம் வரத்தான் செஞ்சது.

நன்றி பத்மா.

said...

வீ.எம்,

இதுதானே வேணாங்கறது. பதிவுலே வேற விஷயம் ஒண்ணும் இல்லையா? ஏதோ சொல்ல்ல முயற்சி பண்ணியிருக்கிறது தெரிஞ்சுமா?

என்னா தம்பிப்பா நீங்க?

இந்தப் 'பணம் பறிக்கற விஷயத்துலே' நீங்க கோபாலுக்கு சப்போர்ட்டா?

வாழ்க்கையே ஒரு சுழற்சின்றது தெரியாதா?:-)))))

ஷ்ரேயாவேற இதுக்கு ஏன் இன்னமும் பதில் சொல்லலைன்னு
கேக்கறாங்க!

said...

ஷ்ரேயா,
இன்னைக்கு என்ன நாளு? புள்ளையாருக்கு ஏதும் செய்யணுமா இல்லையா?
அதனாலேதான் இந்தப் பக்கம் வர நேரமாயிருச்சு.

said...

"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஐந்து கரம் கொண்டவர் பானை வயிறு உடையவர்..."
இதுக்குப் பிறகு என்ன?

இன்றைக்கா சதுர்த்தி? அப்ப..வாற ஞாயித்துக்கிழமை என் பாட்டுக் கேட்க & இந்த முறை சரியா "மோரியா" என்று பாடப் போகணும் என்று நினைக்கிறன்.

said...

ஷ்ரேயா,
புள்ளையாருக்கு(!) ஒரு பதிவு போட்டுருக்கேன். ஏதோ என்னாலெ ஆனது.

'மோரியாரே பப்பா மோரியாரே
கணபதிபப்பா மோரியா
அக்லே வருச்சே லவுக்கரியா'

said...

பர்ஸ்டு அட்டடன்ஸ் - அப்புறம் தான் கமெண்டு - இப்போ அட்டடன்ஸ் - அப்பாலே வாறேன் பின்னூட்டத்துக்கு - வர்ட்டா ??

said...

காசு அதிகம் வாங்கினாலும் சரி பண்ணிட்டா சரி தான். ருசிகாவோட மருத்துவம் எப்படி??

இங்க (அமெரிக்காவுல) காப்பீட்டு காரங்க குடுக்கற பணம் தான் அநியாயத்துக்கு புடுங்க முடியாது (அப்படின்னு தான் நினைக்கிறேன்).