Thursday, September 15, 2005

எண்டே பொன் ஓணம்.


இந்நு ஓண திவசமல்லே? எண்டே ப்ரியப்பட்ட கூட்டுகாரே, நிங்கள் எல்லாவர்க்கும் எண்டே ஆஸம்சகள் பரயான்ஒரு அவசரம் நல்கியதினு நன்னி.


பயந்துட்டீங்களா? கேரளக் கொண்டாட்டத்துக்கு மலையாளத்துலே வாழ்த்து சொன்னேன். இது தப்பா?
முன்பொருக்கில் மஹாபலி.... திருப்பித்திருப்பி மலையாளமே வந்துருது. க்ஷமிக்கணும் கேட்டோ.
அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்கவழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)
மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டுஇருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலேமன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டமஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.
அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோடகணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!
என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்' சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னாஎனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார். ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ' ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.
அந்தக் கால வழக்கப்படி (தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்) தண்ணி ஊத்த கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார். ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச்சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்தவளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது.திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)
அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!
வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடிஇந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜாமகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார்.( வீடுங்களிலேஎப்பவாவது, சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம கைவேலையா இருக்கறப்ப யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)
அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னேகேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது. நம்ம தமிழ்மணத்துலேவர்ற இந்தவார நட்சத்திரத்தையும் இதையும் போட்டுக் குழப்பிராதீங்க) ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர்தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரைபாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு.
அதுக்கு அடுத்த வருசத்துலே இருந்து சம்பவம் நடந்த சிங்கமாசம் ( நம்ம தமிழ்மாசம் ஆவணி), திருவோண நட்சத்திர நாளிலே மகாபலி பூலோகம் வந்து தன்னுடைய ஜனங்களைப் பார்த்துட்டுப் போறாருன்னு ஒரு ஐதீகம். அவரை வரவேற்கறதுக்காக ஒவ்வொருத்தரும்அவுங்கவுங்க வீட்டு வாசலிலே கோலம் போட்டு, அதை பூக்களாலேயே அலங்கரிக்குறாங்க. அதுதான் பூக்களம்னு சொல்றது.எல்லோரும் நல்ல புது ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிஞ்சு, அருமையான விருந்து சாப்பாடு தயாரிச்சு வச்சுஅவுங்களோட இஷ்ட ராஜாவான மகாபலிச் சக்ரவர்த்திக்கு அர்ப்பணிக்கிறாங்க. திருவோணத்தன்னிக்கு இது நடந்ததாலேஇந்தப் பண்டிகைக்குப் பேரே 'ஓணம்'னு ஆகிருச்சு.
ஏங்க, அந்தக் காலத்துலெயே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரான்னு எல்லைகளும், பிரிவினையும் இருந்திருக்குமா?இருக்காதுல்லே. அப்ப இந்தப் பண்டிகை லோகம் முழுசும், குறைஞ்சபட்சம் பாரதம் முழுசுக்கும் இருந்திருக்கணும்தானே?அதெப்படியோ, கேரளத்துக்கு மட்டுமுன்னு ஆகிப்போச்சு. சரியாச் சொன்னா இது சிங்கமாசம்அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை இருக்குற பத்துநாள் பண்டிகை. சில இடத்துலே கடைசி நாலஞ்சுநாளும்கொண்டாடுறாங்க.
இப்ப கேரள மாநிலத்தைச் சேர்ந்தவுங்க உலகத்திலே பலபாகங்களில் இருக்கறதாலே, அங்கங்கே அவுங்க வசிக்கிற இடத்துலேயே கொண்டாடிடறாங்க. வீட்டுலே கொண்டாடுறது மட்டுமில்லாம, அந்தப் பகுதியிலே இருக்கற மத்தகேரள நண்பர்களோடும் அவுங்க குடும்பங்களோடும் சேர்ந்து கொண்டாடுறதும் வழக்கமாயிடுச்சு. திருவோண நட்சத்திரம்வர்றது சனி ஞாயிறுன்னா அன்னைக்கே கொண்டாடிரலாம். மத்த கிழமைன்னா வேலைநாளாயிடுதுல்லையா? கேரளான்னாஅரசாங்கமே விமுறை தந்துருது. ஆனா மத்த நாட்டுலே இருக்கறவங்களுக்கு? அதனாலே வசதியை வச்சு, அந்தசமயத்துலே வர்ற வார இறுதியிலே எல்லாம் சேர்ந்து கொண்டாடிக்கிறதுதான். என்ன, மகாபலிக்கு இதுக்குன்னு ஒருதடவை வந்துட்டுப் போக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணும். அதுலே ஒண்ணும் பிரச்சனை யில்லையாம்!
இங்கே எங்க ஊரு கேரளா அசோஸியேஷன்லே நாலுநாளைக்கு முன்னாலெ சனிக்கிழமையன்னிக்கு 'ஓணம்'கொண்டாடினோம். எங்க அசோஸியேஷன் ஆரம்பிச்சபிறகு வர்ற முதலாவது 'ஓணம்'ன்றபடியாலே ஏற்பாடுகள்எல்லாம் பிரமாதமா செஞ்சிருந்தாங்க. 21 வகையோடு கூடிய ஓணம் விருந்து( ஓண சத்யா). அதுலே ரெண்டுவகைப்பாயசம். வாழையிலை( இந்த ஊரின் சரித்திரத்திலே முதல்முறையாக) போட்டு விருந்து சாப்பாடு பறிமாறினாங்க.நண்பர் ஒருத்தர் சமையல் பொறுப்பேத்துக்கிட்டார். நாங்கள் எல்லாம் சில்லரை வேலை செஞ்சுகொடுத்தோம்.
நாங்க மூணு பெண்கள் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தோம். கோபால் தோல் சீவவேண்டிய காய்களையெல்லாம்சீவிக்கொடுத்தார். சுருக்கமாச் சொன்னா 'ஷேவிங் கோபால். கட்டிங்கு நாங்க!
பிள்ளைங்களும், இளவயதுக்காரங்களுமா டான்ஸ், பாட்டு, புலிவேஷம், வள்ளங்களி, கேரளாவைப் பத்தி ஒரு ஃப்லிம்ஷோன்னு அமர்க்களப்படுத்திட்டாங்க. 'பூக்கள மல்சரம்' னு போட்டி வச்சு சிறந்த பூ அலங்காரக் கோலத்தை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குனதுன்னு ஒரே கொண்டாட்டம்தான் போங்க.
ஆமா, இந்தக் கொண்டாட்டத்துலே நான் எங்கே வரேன்னு கேக்கறீங்களா? பெரிய மனுஷின்ற வகையிலேநாந்தானே ஓணத்தைப் பத்தி ஒரு ஸ்பெஷல் ஸ்பீச் ( மக்களின் வேண்டுகோளை முன்னிட்டு!) கொடுத்தேன்.எல்லைகளைப் பிரிச்சுப் பாக்காத ஒரு இந்தியன்/ள் நான்.
ஆனா இந்த வருஷ விழாவோட 'ஹை லைட்' என்னன்னா வாழையிலைதான். இந்தியாவுலே இருந்து இதுக்காகவரவழைச்சோம்!
லோகம் முழுவனும் நன்னாயிவரட்டேன்னு ஈஸ்வரனோடு ப்ரார்த்திச்சுக்கொள்ளுன்னு. ஒரிக்கில்கூடி நிங்கள் எல்லாவர்க்கும் ஈ பொன் ஓணத்திண்டே மங்களா ஸம்சகள். விஷ் யூ ஆல் அ வெரி ஹேப்பி ஓணம்.
இன்னிக்குத்தான் திருவோண நட்சத்திரம்.அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்!!!! நல்லா இருங்க.!


24 comments:

said...

மனசிலாயி. குருவாயூரப்பன் நின்னே கணி கானேனம்( ஏதோ நினைவில் இருந்த சில வார்த்தைகள்)
உங்களுக்கும் வாழ்த்துக்கள். ( பின்னூட்டத்தில் ஒரு சாதனை நிகழ்த்த இருப்பதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்)

said...

பத்மா நன்றி,

அங்கே பாருங்க ராமநாதனும் தாணுவும் உங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க போல. ஏதோ மருத்துவர் சங்கம் ஆரம்பிக்கணுமாம்:-)

நேத்து ஒரு 'பூக்களம்' படம் மட்டும் போட்டிருந்தேன். தமிழ்மணத்துலே கொஞ்சநேரம் இருந்துட்டுக் காணாமபோயிருச்சு. அதுக்குள்ளே சில முக்கிய பின்னூட்டங்களும் வந்தது.
பின்னூட்டத்துலே சாதனை நிகழ்த்தணுமுன்னு 'ஆண்டவன்
விதிச்சுட்டான், இந்த துளசி செய்யறா' ன்னுவேணா வச்சுக்கலாமா?;-))))))

said...

நீஈஈஈஈஈஈஈஈஈங்க பெரீஈஈஈஈஈஈய ஆளா இருக்கீங்க.

இதுல பலமொழி பாண்டித்தியம் வேற...

ஓணம் வாழ்த்துக்கள்

said...

தருமி நன்றிங்க.

ஏதோ தெரிஞ்ச ரெண்டுமூணூ பாஷையை வச்சுக்கிட்டு அடிச்சுவுடறதுதான்:-)

( நான் ரொம்ப அடக்கமான ஆளுங்க!)

said...

துளசி
சக்கபிரதமன் உண்டா இல்லையா? அதப்பத்தி எழுதவே இல்லையே.

said...

நிங்களுக்கும் ஓணம் ஆஷம்ஸகள்.(ஆகா..பொல்லைக் குடுத்து அடி வாங்குறதுன்றது இதானோ!!) ;O)

பத்மா - சக்கைப் பிரதமன் உண்டோ இல்லையோ, பின்னூட்டப் பிரதமன் நிச்சயம்!

said...
This comment has been removed by a blog administrator.
said...

நின்ற மராமரம் சாய்த்தாய்
நீபிறந்த திருவோணம்
இன்று, நீநீராட வேண்டும்
எம்பிரான். ஓடாதே வாராய்.
(பெரியாழ்வார் - பெரிய திருமொழி)

அன்புள்ள துளசி,

உங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் என் இனிய பொன்னோண வாழ்த்துகள்.

என் இன்றைய ஓணவிருந்து 'விஷ்ராந்தி'யில்-
ஆதரவற்ற முதியோரான எம் அன்னையரோடு.

விஷ்ராந்தி பற்றி மேலும் அறிய
http://www.geocities.com/vasudevanvrv/charity/vishra.htm

said...

//இன்று, நீநீராட வேண்டும்
எம்பிரான். ஓடாதே வாராய்//


அவருக்குக் குளிக்கப் பிடிக்காதோ??

said...

:-) ஷ்ரேயா, இதுக்கு பதில் சொல்ல உட்கார்ந்தா இன்னிக்கு நான் ஆப்பீஸ் போன மாதிரிதான்.
கடடுரையா சாவகாசமா எழுதறேன்.

said...

ஷ்ரேயா நன்றி.
எதுக்கா? வாழ்த்துக்கும் இன்னும்........

என்னோட கொ.ப.செ மற்றும் உ.பி.ச.வா இருக்கறதுக்கு:-))))

நம்ம இரா.முருகன் அப்புறமா விளக்கமா எழுதறதை ஆவலோட எல்லார் சார்பிலும்( முக்கியமா ஷ்ரேயா) எதிர்பார்க்கின்றேன்.

பத்மா,
'இவிடே சக்கை கிட்டான் ப்ரயாசமாணு'

டின்னுலே வர்றது அவ்வளவு நல்லா இல்லை. ஆனாலும் பலாப்பழக் கொதி வரும்போள் அது மேடிச்சுக் கழிக்கும்.

அடைப்பிரதமனும், பால்பாயாசமும் கிடைச்சது.

said...

//என்னோட கொ.ப.செ மற்றும் உ.பி.ச.வா இருக்கறதுக்கு:-))))//

உ.பி.ச???

said...

ஷ்ரேயா
போன பதிவுல நகை பத்தி எழுதிட்டு இந்த பதிவுல உங்கள உபிச ஆக போட்டதை நினைத்தால் கவலையா இருக்கு. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

said...

நன்றி ராஜ்.

நண்டுங்க எந்தக்காலத்திலும்
இருக்கும்:-)

நம்ம ஷ்ரேயாவுக்கு 'ஆன்னா ஊன்னா சந்தேகம் வந்துரும்:-)

அவுங்களுக்கு விளக்கம் சொன்னதுக்கும் நன்றி.

said...

பத்மா,

நகை விஷயமா? ஷ்ரேயாவுக்கு
'காஸ்த்யூம் ஜுவல்லரி'தான் பிடிக்குமாம்(-:

said...

//நம்ம ஷ்ரேயாவுக்கு 'ஆன்னா ஊன்னா சந்தேகம் வந்துரும்:-)//

நிறையக் கேள்வி கேட்டு அறிவைப் பெருக்கணும் என்று சொல்லிருக்காங்களே! ;O)

//நகை விஷயமா? ஷ்ரேயாவுக்கு
'காஸ்த்யூம் ஜுவல்லரி'தான் பிடிக்குமாம்(-://


தங்கத்துக்கு எதுக்கு தங்கம்? சொல்லுங்க???

said...

ஆமாம் தங்கம். சொன்னது அப்படியே சரி தங்கம்:-)))))

said...

துளசி - நீங்கள் கத்து கொடுத்த ஒணம் ஆசம்ஸகள் ஞான் போய் என்ட மலையாளக் கூட்டத்துகாரிட்டே பறஞ்ஞு.

எனிக்கி இதுக்கு மேல் மலையாளம் பறையத் தெரியில்லா. தப்பிருந்தால் ஷமிக்கணும். ஞான் வரும். :O)

p.s: one of them said it was "very proper Malayalam". thnx ThuLasi.

said...

ஷ்ரேயா,

சரிசரி. பிழைச்சுப் போங்க:-)))))

said...

ஓணம் நல்வாழ்த்துக்கள்

said...

Thanks gganesh. Wish you the same.

said...

துளசி சொன்னது -( நான் ரொம்ப அடக்கமான ஆளுங்க!)

9:29 AM -- ஆமாங்க. அப்படித்தான் பேப்பர்ல போட்டிருந்திச்சு..

said...

ஈஸ்வர்,

நீங்க வேற! பொறந்தநாள், பண்டிகைகள், எழுதறதை நிறுத்தப்போறென்னு சொல்ற பதிவுகள்( இதுக்கு மட்டும் உள்ளூக்குள்ளெ கொஞ்சம் சந்தோஷத்தோடே!) இதுக்கெல்லாம்பின்னூட்டம் நிறைய வருங்க. அதைவச்சுக் கணக்கு போடக்கூடாது அதுதான் சிறந்த பதிவுன்னு.

ஏங்க 724 பேர் கூடுற இடத்துக்கு25ன்றது எவ்வளோ கம்மி. அதை பாருங்க.

said...

என்னங்க தருமி,
இங்கே என்ன செய்யறீங்க?

தே.மு.தி.க மாநாட்டு வேலையெல்லாம் அதுக்குள்ளே முடிஞ்சிருசா?

இன்னும் நிறைய வேலைங்க உள்நாட்டு & அயல்நாட்டு கொ.ப்.செ.க்கு குமிஞ்சுகிடக்குன்னு இங்கே எங்கஊர் பேப்பர்லே போட்டுருக்கே:-)