Thursday, November 10, 2005

நியூஸிலாந்து பகுதி 24

கதைக்குள்ளே போறதுக்கு முந்தி இது. ஒண்ணும் இல்லைங்க. நம்ம பின்னூட்டப்பெட்டியைக்காணோம்.ரெண்டுநாளா
ஊட்டமில்லாம மெலிஞ்சுக்கிட்டே போறேன். தொழில்நுட்பவித்தகர்கிட்டே மனுப்போட்டாச்சு.
அதுவரைக்கும் பதிவோட தலைப்புலே க்ளிக்காம அதுக்குக் கொஞ்சம்மேலே 'துளசிதளம்' க்க்ளிக்குனா பெட்டி
தோன்றும் விந்தை காண திரண்டு வாரீர் மக்களே!



மவோரிக்கதைகள் # 9


மறுபடியும் பெண்கள்.


உத்தியோகம் புருஷ லட்சணம். வீட்டுக்கு வேண்டியதைச் சம்பாரிச்சுக் கொண்டுவரவேண்டியவன் ஆண்.


வீட்டைக் கவனிச்சு நடத்தவேண்டியவள் பெண்.



இது இங்கேயும் இருக்குங்க. ஒரு நல்ல கணவனுக்குரிய அடையாளமா இவுங்க நம்பறது என்னன்னா, தன்னுடைய
குடும்பத்துக்கும், அவன் இருக்குற கிராமம் முழுசுக்கும் சாப்பாடு போடணும்!


முழுகிராமம்னு சொன்னதும் பயமா இருக்குல்லே? ஊர் முழுக்க எப்படி சோறு போடமுடியும்? அதுவும் தினம் தினம்?

இவுங்க எப்பவுமே ஒரு குழுவாச் சேர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருந்ததாலே அந்தக் குழுவிலே இருக்கற ஆண்கள் எல்லாமே
எதாவது பயிரிட்டும், விலங்கு பறவைகளை வேட்டையாடியும் சாப்பாடு போட்டிருப்பாங்க போல.


பெண்ணின் இதயத்தைக் கொள்ளையடிக்கவும் உணவையே உபயோகித்த ஒரு மனிதனோட கதையைக் கேளுங்க.


'கஹுங்குனு' ன்ற ஒரு ஆள் இருந்தார். அடுத்த கிராமத்துலே இருந்த ஒரு அழகான பெண்ணை எப்படியாவது
அடையணுமுன்னு ஆசை இருந்தது அவருக்கு. அந்தப் பொண்ணோட பேரு ரோங்கோமாய்வாஹினி.


அந்த ஊருலே குளிர் காலம் வந்தா சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. அப்ப ரொம்ப அரிதாக் கிடைக்கிற ஃபெர்ன்ரூட்
தான் அவுங்களுக்கு சாப்பாடு. அதனாலே நம்ம கஹுங்குனு தன்னுடைய ஆளுங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு
இந்த ஃபெர்ன்ரூட்( ஒருவேளை இது பெரணிச் செடியோட வேரோ?) தேடிக்கிட்டுப் போறார். நிறைய இந்த வேரைச்
சேகரிச்சு, ஒரு பெரியக் கட்டாக் கட்டி எடுத்துக்கிட்டு, அந்தப் பொண் ரோங்கோமாய்வாஹினியோட கிராமத்துக்குப்
போறார். அங்கே இருந்த ஜனங்களுக்கு இதைப் பரிசாக் கொடுத்தார். எல்லோரும் இவர் ரொம்ப நல்லவர், புத்திசாலின்னு
பாராட்டுனாங்க. அப்புறம் அவர் கடலுக்குப் போய் தண்ணீருக்கடியிலே மூழ்கிப் போய் கூடை கூடையா அபலோன்
பாவா சிப்பிகளைக் கொண்டுவந்து தர்றார். இந்தச் சிப்பிக்குள்ளே ஒருவிதமான கடலுணவு இருக்கும். அதுக்கப்புறமும்
கடலுக்குள்ளே போய் தன்னுடைய உடம்பு முழுசும் பாவா சிப்பிங்களை ஒட்டிக்கிட்டு வெளியிலே வர்றார்.

அதைப் பார்த்த அந்த கிராம மக்கள் எல்லோரும் ஆரவாரம் செஞ்சு புகழ்ந்து பேசுனாங்க,எவ்வளவு புத்திசாலின்னு!


அந்தப் பொண்ணு ரோங்கோமாய்வாஹினி ஏற்கெனவே கல்யாணம் ஆனவள். இது தெரிய வருது நம்ம ஹீரோவுக்கு.
ஆனாலும் எப்படியாவது அவளை அடையணுமுன்னு நினைக்கறார். அன்னைக்கு இரவு நிறைய பாவா இறைச்சியைச்
சாப்புடுறார். பிறகு மெதுவா ஒளிஞ்சு ஒளிஞ்சு ரோங்கோமாய்வாஹினி யும் அவ்ளொட கணவனும் படுத்துத் தூங்கற
அறைக்குப் போறார். அவுங்க ரெண்டுபேரும் நல்ல தூக்கத்துலே இருக்காங்க. கஹுங்குனு அங்கே குளிருக்காக வச்சிருந்த
போர்வையை எடுத்து அவுங்களை மூடிட்டு, அந்தப் போர்வையை கொஞ்சமா விலக்கி அதுக்குள்ளே அபானவாயுவை
வெளியேத்திட்டார். இவருக்குச் சிரிப்பா வருது. சத்தமில்லாம சிரிச்சுக்கிட்டே ஒரு பக்கம் அமைதியா ஒளிஞ்சிருக்கார்.


கெட்ட நாத்தம் அவுங்களை எழுப்பிடுது. ரெண்டுபேரும் மாத்தி மாத்தி இதுக்கு யார் காரணமுன்னு வாக்குவாதம்
செய்யறாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுச் சண்டை ஓய்ஞ்சு திரும்பத் தூங்கறாங்க. அப்ப மெதுவாக் கிட்டே வந்து
மறுபடி வாயுவை வெளியேத்திட்டு ஒளிஞ்சுக்கறார். மறுபடிக் கெட்ட நாத்தம், மறுபடிச் சண்டை. இந்தமாதிரி
சிலமுறை நடந்து, பெரிய சத்தமான சண்டையா ஆயிடுது. சத்தம் கேட்டு, அங்கே அந்த தூங்கும் விடுதியிலே இருந்த கிராமத்து
ஜனங்க பூரா எழுந்துவந்துடறாங்க. இந்த வாய்ச்சண்டையே பெரிசாயி கடைசியிலே அந்தக் கணவனும் மனைவியும் பிரிஞ்சு
டறாங்க.



கொஞ்சநாள் கழிச்சு அந்தப் பொண்ணு ரோங்கோமாய்வாஹினியை நம்ம கஹுங்குனு( Gas Master)கல்யாணம்
செஞ்சுகிட்டு சந்தோஷமா இருந்தார். இந்தக் கதை முழுசும் இங்கே மவோரிகளின் சரித்திரத்திலேயே இடம் பிடிச்சிருச்சு.

**********************************************************************





இந்தச் சாப்பாடுன்றதுலே கூட ஆண்களுக்கு வேற பொண்களுக்கு வேற ன்னு இருக்குதாமே?

டுஹொ ட்ரைப் இனமக்களை எடுத்துக்கிட்டோம்ன்னா, பெண்கள் சிலவகைகளைச் சாப்பிடணும். ஆண்கள் சிலதைச் சாப்பிடணுமுன்னு
இருக்கு. கெரெரு என்னும் ஒரு வகைப் புறாவின் மாமிசத்தை( கவனிங்க, எலும்பே இல்லாத மாமிசத்தை மட்டும்)பெண்கள் சாப்பிடவேண்டும்.
அப்ப ஆண்கள்? அதான் அந்த எலும்பு இருக்கே! அதைச் சாப்பிடலாம். அல்லது அந்தப் பறவையை வேகவைத்து எடுக்கும் 'சூப்'
ஆண்கள் சாப்பிடலாமாம்.( இனிமே சூப்பாவது ....ச்சுப். சூப்க்கு தடாதான்!)


பெண்களுக்கு சக்தி தேவை என்பதாலும், குழந்தைகளைப் பெற்றெடுக்க இன்னும் வலிமை வேண்டுமெபதாலும்
இந்தமாதிரி ஒரு ஏற்பாட்டை உண்டாக்கி வைத்திருக்காங்களாம். ப்ரோட்டீன் வேணும் என்பதற்காம்.

இதே பறவையை சமைத்துவிட்டாலோ, அல்லது அதே பறவையில் கொழுப்பை உபயோகித்து அதைப்
பதப்படுத்தினாலோ சாப்பிட்டுக் கொள்ளலாமாம். இந்த முறையில் சமைக்கும் போது மாவ்ரி( லைஃப் ஃபோர்ஸ்)
பறவையைவிட்டு வெளியேறிவிடுமாம். பெண்களுக்கு மட்டுமே இந்த மாவ்ரி தேவையாம்.

என்னாங்கடா இது? பறவையை சமைக்கணுங்கறீங்களா, இல்லையா?

**********************************************************************

11 comments:

said...

//என்னாங்கடா இது? பறவையை சமைக்கணுங்கறீங்களா, இல்லையா//

இல்லை!! Bird Flu!!

said...

இல்லையே ஷ்ரேயா,
இங்கே இன்னும்Bird Flu வரலையே:-))))

said...

டி ராஜ்,

கண்டுபிடிச்சுட்டீங்களா?
இப்படி 'மர்மதேசமா'ப் போச்சேப்பா நம்ம பதிவு:-)

said...

டி ராஜ்,

நம்ம தொழில்நுட்ப வல்லுனருக்கு இப்ப ராத்திரி நேரம்.

தூங்கி எழுந்து வந்து பார்த்து பிரமிக்கப்போறாங்க:-))
இத்தனை ஈஈஈஈஈஈஈஈஈஈமெயிலான்னு!

said...

டி ராஜ்,

எத்தனை பாய் வேணும்?

said...

காசு வாங்கினாலும் எங்களாலெ அன்பா ஷிப் செய்ய முடியுமே:-)

said...

ஷிப்பிங் பத்தி தெரியணுமுன்னா என்கிட்டே கேட்டுக்கலாம். ஆனா அன்பை பணத்துக்குப் பதிலா செலுத்தி கப்பல்லே பாய்களை ஏத்தலாமான்னு தெரியல்லையே!! :O)

said...

ஒரு கணவன் மனைவியை பிரிக்குறதுக்கு இவ்ளோ சிம்பிள் மேட்டரா.. :-))))

நல்ல வேலை தமிழ் சினிமாகாரங்களுக்கு தெரியல ;-)

said...

செந்தில்,

நீங்க வேற . ஏற்கெனவே தமிழ் சினிமா 'நாறிக்கிட்டு' இருக்கு:-)))

said...

easy way to a man's heart is through his stomach ன்னு ஒரு வழக்குமொழி இருக்கு. நீங்க சொல்ற கதை ரொம்ப சுவாரசியமால்லே இருக்கு. விவாகரத்து ஸ்பெஷல் வக்கீலெல்லாம் தலையில் துண்டு போட வேண்டியதுதான்.

பின்னூட்டப் பெட்டி வேலை செய்யலைன்னு நான் சொன்னப்போ கேலி பண்ணினீங்க இல்லே, அனுபவியுங்க, உங்க வால் மாணவர்கள் டைம்க்கு வர மாட்டாங்க!!

said...

தாணு,

தொழில்நுட்ப வித்தகர் யானையைத் தூக்கிட்டுப் பூனையைப் போட்டாங்கல்லே அப்ப என்னவோ நடந்து போச்சுப்பா(-:

அதையும் இதையும் உருட்டி ஒருமாதிரி இப்ப 'எல்லாம்'தெரியறமாதிரி செஞ்சுவச்சுருக்கேன்.

நம்ம தொ.நு.வி. என்ன சொல்லப்போறாங்களோ?

அதுசரி. இந்த டெக்னிக் இப்பத்து விவாகரத்து வழக்குலே எடுபடுமா?:-)