Friday, December 02, 2005

நண்பர்களுக்கொரு மடல்!

அன்புள்ள வலைஞர்களே,


நேத்து நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி ,'எதாவது விவரம் தெரியுமா?'ன்னு கேட்டார்.நமக்குத்தான் இப்ப நட்புவட்டம் பெருகிப்போச்சுல்லே. இந்த நட்புக்கடலிலே எதாவதொருமுத்துக்கு இந்த விஷயம் பத்தித் தெரிஞ்சிருக்குமே என்ற எண்ணத்தாலே இதை இங்கே கேக்கறேன்.


'போதும் பீடிகை விஷயத்துக்கு வா'ன்னு நீங்க கோச்சுக்கறது புரியுது. வந்துட்டேன் வந்துட்டேன்.


போனவருஷம் 'சுநாமி' வந்ததை யாராவது மறந்திருக்க முடியுமா? இதைப் பத்தி ஒரு குறும்படம்வந்திருக்காம். மொத்தம் 10 நிமிஷம் ஓடுற இந்தப் படத்துலே இந்த இயற்கை அழிவாலே துன்பம்அடைஞ்சவங்களைப் பத்தி வந்திருக்காம்.


அதோட தலைப்பு 'நீலம்'


தயாரிப்பு & இயக்கம் அறிவுமதி ( தமிழ்நாடு)


மேற்கொண்டு விவரம் தெரிஞ்சாச் சொல்வீங்கதானே?

என்றும் அன்புடன்,
துளசி.

5 comments:

said...

இதப்பத்தி கனபேர் எழுதீட்டினம் எண்டு நினைக்கிறேன்.
இப்படம் கேன் திரைப்பட விழாவிலயும் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றதாகவும் அறிந்தேன்.
அதில் நாயகன் தங்கர்பச்சானின் மகன்தான்.

said...

கவிஞர் அறிவுமதி அவர்களுக்கு தம்பிகள் ஒரு பதிவே ஆரம்பிச்சுருக்காங்க...
நீலம் பற்றி...

said...

நன்றி வசந்தன்.

நீங்க பார்த்தீங்களா? எங்கே படிச்சீங்கன்னு எதாவது சுட்டி கிட்டி இருந்தால் கொடுங்களேன்.

said...

அன்பு,

நன்றி. நண்பருக்கு ச்சுட்டி அனுப்பிட்டேன்.

இந்த வருசம் வழக்கமான பாக்ஸிங் டே பிக்னிக்கை ரத்து செஞ்சுட்டு சுநாமி விக்டிம்களுக்கு அஞ்சலி செய்யறதா நம்ம தமிழ்ச்சங்கம் முடிவு செஞ்சிருக்கு. குறும்படம் கிடைச்சால் மக்களுக்குத் திரையிடலாமுன்னுதான் ......

said...

இந்த வருசம் வழக்கமான பாக்ஸிங் டே பிக்னிக்கை ரத்து செஞ்சுட்டு சுநாமி விக்டிம்களுக்கு அஞ்சலி செய்யறதா நம்ம தமிழ்ச்சங்கம் முடிவு செஞ்சிருக்கு. குறும்படம் கிடைச்சால் மக்களுக்குத் திரையிடலாமுன்னுதான் ......

என்ன அருமையான முடிவு துளசி!

வாழ்த்துக்கள். நீலம் பதிவை படிச்சப்போ கண்கள் நிறைந்துவிட்டன. அத்தனை உணர்ச்சி பூர்வமாய் எழுதியிருக்கிறார் நண்பர். இந்த படத்தை ஏன் த.நாவில் வெளியிடவில்லை? நல்லதுக்கு இங்க எப்ப வரவேற்பு இருந்திருக்கு? இப்ப இருக்கறதுக்கு.