Monday, December 19, 2005

தம்பு.....

யானைக்கொரு காலமுன்னா பூனைக்கும் ஒரு காலம் வருமாமே!

ஆமாம். வந்துருச்சுங்க. வந்தே....... வந்துருச்சு.

இப்பப் பாருங்க 'நான்' இந்தவார நட்சத்திரமாம்:-)))

வலைஞர்கள் மேலே ஃபோகஸ் லைட் போடறது இப்படித்தான். இல்லே?

ஃபோகஸ் லைட்டுன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருதுங்க.

ஒரு ஏழெட்டு வருசத்துக்கு முன்னாலே நடந்தது. அப்ப இங்கே எங்க ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போட்டுருந்துச்சு.

மிருகங்களை சர்க்கஸ்லெ வச்சு காட்சி நடத்தறது எனக்குப் பிடிக்காத விஷயம். அதுலேயும்வீட்டு மிருகம் நாய், பூனை, குதிரை, ஆடுன்னாக்கூடப் பரவாயில்லை. அதுங்களும் மனுஷனை அண்டித்தானே பொழைக்குதுங்கன்னு வுட்டுரலாம். இந்த சிங்கம், புலி, யானைங்கதான்பரிதாபக்கேஸுங்க.
அதுலேகூடப்பாருங்க, யானை அத்தாம் பெரிய உடம்பை வச்சுக்கிட்டு, ச்சின்ன ஸ்டூல்லேகஷ்டப்பட்டு உக்கார்றதைப் பார்த்தா எனக்கு அழுகையே வந்துரும்.


இப்ப எங்க ஊர்லே சர்க்கஸ்லே காட்டுமிருகங்கள் இருக்கறதைத் தடை செஞ்சுட்டாங்க. இந்த சர்க்கஸ்கூடரஷ்யாவுலேருந்து வந்ததுதான். இல்லாட்டா இங்கே ஏது இதெல்லாம்? மிருகமும் இல்லேன்னதும் சரிபோய்ப் பார்க்கலாமுன்னு மூணு டிக்கெட் முன்பதிவு செஞ்சுவச்சோம்.


சர்க்கஸ் பார்க்கப் போனோம். அங்கே நம்ம மூணு டிக்கெட்டை ரெண்டை ஒரு வரிசையிலும் ஒரு டிக்கெட்டைஇன்னொரு வரிசையிலும் போட்டுவச்சிருக்காங்க. வெளியே போறதே குடும்பமாச் சேர்ந்து இருந்து அனுபவிக்கத்தானே?அதிலும் ஒருவாரம் முன்னாடியே முன்பதிவுவேற செஞ்சிருக்கு.


கொஞ்சம் வாக்குவாதம்(சண்டைன்னு சொன்னா நல்லா இருக்காதுல்லெ?) செஞ்சபிறகு ஒரே வரிசையிலே இடம்கிடைச்சது. உள்ளே போனா, ரெண்டு ஒருபக்கம். ஒண்ணு அடுத்தபக்கம். நடுவிலே ஆளுங்க போகவர்ற பாதை.டெண்ட்டோ நிரம்பி வழியுது. கேன்சல் செஞ்சுட்டு இன்னோரு நாள் வரலாமுன்னா மகள் ஏமாந்துருவா. சரி,தொலையட்டுமுன்னு அப்பாவையும் மகளையும் ஒருபக்கம் உக்காரவச்சுட்டு, நான் அடுத்தபக்கம் அம்போன்னுஉக்காந்துருக்கேன். நிகழ்ச்சிங்க பார்த்துக்கிட்டு இருக்கறப்ப, நாம ரசிக்கிற ஏதும் வந்தாலும் அதைப்பத்திப் பேசிப் பகிர்ந்துக்க முடியாதுல்லெ? ஐல் சீட்டுன்னாலும் எட்டிப் பேசறப்ப ஆளுங்க போறதும் வாரதுமா இருக்காங்க.


'உர்'ன்னு கோபமா இருக்கேன். அப்ப சர்க்கஸ் ஆரம்பிச்சுடுச்சு. திடீர்னு பார்த்தா ஒரு 'க்ளவுன்' வந்து என் மடிமேலே உக்காந்துருச்சு.ஃபோகஸ் லைட் என்மேலெ அடிக்குது. ஜனங்களுக்கு ஒரே சிரிப்பு. நானோ ஏற்கெனவே கடுப்பிலே இருக்கேன்.மடிமேலெ உக்காந்து கொஞ்சிக்கிட்டு இருக்கற கோமாளியை ஒரு தள்ளு தள்ளி விட்டேனா, அது அப்படியே கீழே வுழுந்து எந்திரிச்சு ரொம்ப பவ்யமா கையைக் கட்டிக்கிட்டு,'மே ஐ..'ன்னு திரும்ப மடிமேலே உக்காரப் பர்மிஷன் கேக்குது.இப்ப எனக்கே சிரிப்பு வந்துருச்சு.'நோ'ன்னு சொல்லிக் கண்ணை உருட்டின பிறகு தலையை ஆட்டிக்கிட்டே அழுவறமாதிரிக்கண்ணைக் கசக்கிக்கிட்டு வேற வரிசையிலேபோய் ஒரு ஆள்மேலே உக்காந்தது. அதுவரை லைட் எம்மேலேயெ இருந்துச்சா,எனக்குக் கொஞ்சம் சங்கடமா இருந்துச்சுங்க.


மகள் சொன்னா,'ஓ... இட் வாஸ் ஃபன்'!

இருக்குமுல்லெ?

அது போகட்டும். ஒரு வாரம் என்னோட இம்சைகளைத் தாங்கிக்கற மனோ திடம் உங்களுக்குக் கிடைக்கணுமுன்னுஉங்க எல்லோருக்காகவும் வேண்டிக்கறேன்.


நட்சத்திரவாரம் நல்லபடியா முடிஞ்சா........


முடிஞ்சா?


உங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு யானை.


வச்சுக் காப்பாத்தணும் என்ன?:-)))))

53 comments:

said...

வந்துட்டோமுல்ல, வந்துட்டோமுல்ல முதல்ல நட்சத்திரமா வாழ்த்துக்கள்.

said...

வாங்க மோகன்தாஸ்,

தமிழ்மணத்துலே திரட்டறதுக்கு முந்தி நீங்க பார்த்திட்டீங்களா?

காசி எழுதியிருந்தாரு இப்பெல்லாம் ரெண்டுமணி நேரம் ஆகுது
'திரட்ட'ன்னு.

நான் ஒருவேளை இன்னும் சீக்கிரமாப் பதிஞ்சிருக்கணுமோ?

வாழ்த்துக்கு நன்றிங்க.

said...

நான் தேன்கூட்டிற்கு போயிருந்தேன். உங்கள் பெயர் பார்த்ததும் உள்ளே வந்தேன். மற்றபடிக்கு ம்ம்ம்ம், கொஞ்ச நாள் இப்பிடித்தான் இருக்கும்னு காசி சொல்லியிருந்தார். பார்ப்போம். நீங்க புகுந்து விளையாடுங்க.

said...

உய்ய்ய்ய்ய்..., (பிகில் சத்தம் கேக்குதா) டபடப...கைய தட்டுரோமுங்க..இதெல்லாம் உங்களுக்கு கொடுக்கிற வரவேற்பு.
உற்சாக திருவிளக்கே ( பட்டம் நல்லா இருக்கா) வாங்க, வந்து ஆட்டத்த ஆரம்பிங்க

said...

யக்கோவ்,

பின்னுங்க நீங்க...வாழ்த்துக்கள்

said...

உற்சாகமான வரவேற்பு உங்களுக்கு.

said...

ஃபோகஸ் லைட் அடிக்காமலே எப்போதும் ஃபோகஸில் மின்னும் துளசி அக்கா/டீச்சர்/ சேச்சிக்கு வாழ்த்துக்கள். இந்த வாரத்தை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

said...

Akka,
Nachathiraththukku vazthukkal.

Btw.
Now your template is really great. You are using most of the space efficiently and not leaving unnecessary empty space in left and right as margin. (Even though the header holds more space, it’s not a big deal). It’s a drastic improvement. The bloggers those who writing big post like you need this kind of template.
Ungalukkum ungal designer ukkum Vazththukkalum Nanrikalum.

said...

ஆஹா,.. இந்தவார நட்சத்திரமா,.. ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். தூள் கிளப்புங்க. லைப்ரரியில இருக்கேன். கணி பழுதாகிவிட்டது. ரொம்ப நேரம் இருக்க முடியாது. பின்னூட்டம்/பதில் போட முடியாது போலிருக்கு

said...

அன்புள்ள உஷா, சதீஷ், முத்து, மூர்த்தி, டி ராஜ், மணியன், சோழநாடன், ஜெயந்தி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

உற்சாகமான வரவேற்பைப் பார்த்ததும் வயித்துலே 'புளி' கரைக்குது:-)

இந்த வாரத்தை ஒழுங்காச் செய்யணுமேன்னு.

said...

உய்ய்ய்ய்ய்..., டபடப...
உய்ய்ய்ய்ய்..., டபடப...
உய்ய்ய்ய்ய்..., டபடப...

said...

வாழ்த்துகள் டீச்சர். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க எனது வாழ்த்துகள்.

said...

வாங்க வாங்க முகமூடி, கிறிஸ் & ராகவன்,

சந்தோஷமா இருக்கு. உடனே போயிராம ஒரு வாரம் நம்ம வீட்டுலே தங்கி விருந்து(!) சாப்புட்டுட்டுத்தான் போகணும், ஆமா.

said...

துளசி, நீங்க முதலில் ஷமிக்கணும்!

இந்த வார நட்சத்திர ஃபோகஸ் லைட் கொஞ்சம் பல்பு ஃப்யூஸாகி மாத்தவேண்டியதாப்போச்சு. அதனால கொஞ்சம் லேட். இந்த சவுண்ட் சர்வீஸ் காரங்களை கொஞ்சம் மன்னிச்சு வுட்டுடுங்க:-)

said...

அப்படியே உங்க ப்ளாகர் செட்டிங்கை மாத்தணுமே அதை செய்யாமல் விட்டிருக்கீங்க, அதனாலதான் பெரிய முன்னோட்டம் தமிழ்மணம் வாசகர் பக்கத்தில் தெரியலை.:-(

said...

வாங்க வாங்க துளசி. வழக்கம் போல கலக்க வாழ்த்துகள்.

நிர்மலா.

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

said...

அட்றா சக்கை,

நீங்களா? கலக்குங்க.

said...

வாழ்த்துக்கள் துளசி அக்கா !!!

தமிழ்மணத்தில் இப்போது தான் நட்சத்திரமாக இருந்தாலும் எங்கள் மனதில் நீங்கள் எப்போதும் நட்சத்திரம் தான்.

வழக்கம் போல கலக்குங்க...

said...

வாங்க! வாங்க!!கலக்குங்க!!!!

said...

இந்த நட்சத்திரம், ஃபோகஸ் லைட்டு கதையெல்லாம் உங்களுக்கு எதுக்கு. சும்மா தொடர்ச்சியா ஒருவாரம் பதிவெழுதித் தள்ளனும்னுதான் உங்களுக்கு இந்தவாரம்... வாழ்த்துக்கள்.

உற்சாக பெருவிளக்கே ( பட்டம் நல்லா இருக்கா) வாங்க, வந்து ஆட்டத்த ஆரம்பிங்க...

(நன்றி உஷா. பெரு-பெரியவங்கள குறிக்கிறதுக்கு, நீங்க ஏதாவது புரிஞ்சுண்டு சண்டைக்கோ/விவாதத்துக்கோ வந்துடாதீங்க:)

said...

யானை வளக்க எனக்கும் ஐவேஜு இல்லை.. பூனைன்னா சரி :-)

said...

பெரியக்கவா இந்தவார நட்சத்திரம்! தூள் கெளப்புங்க ,வாழ்த்துக்கள்

said...

வணக்கம் அக்கா. வாழ்த்துகள். நேத்தே உங்க நியூஸிலாந்து தொடருக்கு மதி போட்டிருந்த பின்னோட்டம் பாத்தவுடனே, ஆஹா அக்கா தான் அடுத்த நட்சத்திரம் போல இருக்கேன்னு நெனைச்சேன். காலையிலே 4:30 மணிக்கே அதை உறுதிபடுத்திக்கலாம்னு எந்திருச்சுப் பார்த்தா நீங்க தான் இந்த வார நட்சத்திரம். சூப்பர். ஒரு வாரம் இருந்து தொல்லை குடுத்துட்டு தான் போகப்போறேன்.

நீங்க சொல்ற யானையும் பூனையும் உங்க வலைப்பக்கத்தில இருக்காங்களே அவங்க தானே? :-)

said...

துளசிம்மா துளசிதளம் நல்லாருக்கு.
யானையோடும்,பூனையோடும்.
இப்ப நல்லா படிக்க முடியிது.

ஒருவாரம் அடிக்கடி வந்து வாசிக்கணும்.கொஞ்சம் டைம் மேனேஜ்மெண்ட்டும் சொல்லிக்குடுங்க.

எழுத்துக்காரி
எழுத்துக்காரி
எழுத்துக்காரி
பராக் பராக் பராக்-னு

சத்தம் வந்தப்பவே நெனச்சேன்.
கலக்கலம்மா கலக்குங்க.
ஜொலிங்க.


"தம்பு....." =???

said...

அட்டகாச வரவேற்புகள் அக்காவிற்கு.....

சிறப்பான நடசத்திரவாரமாக அமைய வாழ்த்துகள்..

said...

கலக்குங்க துளசியக்கா!

உங்க வலை இப்போ வெளக்கிவைச்ச வெங்கல அண்டாமாதிரி சும்மா பளிச்சுன்னு இருக்கு! சுட்டுடலாம்னு இருக்கேன்! :)

said...

யக்கா! _/\_
அப்டியே நம்ம வாழ்த்தையுஞ் சேத்து எடுத்துக்கறது!

said...

இந்த வாரம்
துளசியக்கா வாரம்
தினந்தோறும் புத்தம் புதிய செய்திகள், கருத்துள்ளக் கட்டுரைகள், கண்கவர் வண்ணப் படங்கள், கலக்கலான நகைச்சுவை துணுக்குகள்.
வாசித்து மகிழத் தவறாதீர்கள்

"துளசியக்கா வாரம்"

வெற்றி வாரமாக வாழ்த்துக்கள்

said...

டீச்சர், எப்பவோ இந்த ஃபோகஸ் உங்க மேல விழுந்திருக்கணும். பரவாயில்லை..லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்கன்னு தெரியும். மேலே யாரோ சொன்னத சுட்டுருக்கேன்:ஃபோகஸ் லைட் அடிக்காமலே எப்போதும் ஃபோகஸில் மின்னும் துளசி டீச்சருக்கு வாழ்த்துக்கள்.

said...

ஆகா... வார நட்சத்திரமா? வாழ்த்துக்கள் துளசி.

said...

நட்சத்திரமே வருக!., நட்சத்திரத்துக்கே லைட்டா?., கலக்குங்க. முதல் பதிவிலேயே ப்ளூ-கிராஸ்ச போட்டுட்டுங்களோன்னு பார்த்தேன். ஆடு, கோழி எல்லாம் அடிச்சு மேயற எனக்கென்னமோ இங்க வந்தா கொஞ்சம் குற்ற உணர்ச்சியாத்தான் இருக்கு.

said...

சூரியனுக்கே டார்ச்சா?
திருப்பதிக்கே லட்டா?
திருநெல்வேலிக்கே அல்வாவா?
நட்சத்திரத்துக்கே நட்சத்திரவாரமா?

இன்னும் வேறு ஏதாவது பில்டப் இருந்தாலும் சொல்லுங்கப்பா..அக்காவோட வாரம் நல்லா இருக்கட்டும். :-))))))

வாழ்த்திட்டோமுல்ல
ரொம்பநாள் வீட்டுப்பக்கம் வராமா இருந்தாலும் சரியான சமயத்துல வந்து வாழ்த்திட்டோமுல்ல ...

said...

துளசி,
வாழ்த்துக்கள். எப்பவும் மாதிரியே லேட் ஸ்டூடண்ட் நாந்தான் போலிருக்கு! தம்பிங்க, மருமக்களெல்லாம் ஏற்கனவே ஆஜர் ஆயிட்டாங்களே!! உங்க வாழ்த்தைப் பார்த்துதான் `தினமலர்’ பார்த்தேன். நன்றி.
ப்ளாக் இப்போதான் தெளிவா அழகா, ஆடும் ஆனையும், அழகுப் பூனையுமாக ஜொலிக்குது! க்றிஸ்த்மஸ் வாரம்தான், இருந்தாலும் மாப்பிள்ளை பெஞ்சில் உட்காரவாவது வந்திடறேன்!

said...

துளசிக்கா, ஆஹா. நீங்களா இந்த வாரம்? இன்ப அதிர்ச்சியா இருக்கு.

எல்லா வாரம் போல இந்த வாரமும் கலக்குங்க!

வாழ்த்துகள்.

சுந்தர்.

said...

பெரியம்மா நாந்தான் கடைசியா வாழ்த்துச் சொல்றனோ...மன்னிச்சிடுங்க இன்னும் 2 எக்ஸாம் இருக்கு முடிஞ்சதும் வந்து எல்லாப் பதிவும் வாசிக்கிறன.

கலக்குங்கோகேகோகோ.

said...

நட்சத்திர வாழ்த்துக்கள், யானை எப்போ தருவீங்க!

said...

<>அன்புள்ள துளசி அக்கா
<>
<><>நட்சத்திர வாரத்துக்கு<> வாழ்த்துக்கள்.
<>
<>கலக்குங்க. காத்திருக்கிறேன்.
<>
<>முரளி. 
<>

said...

வாங்க காசி.

என்னது?

ப்ளொக்கர் செட்டிங்கை மாத்தணுமா?

போச்சு. இந்த வாரம் 'ஒருத்தருக்கு' தூக்கம் போச்சு.

பாவம், என் பிடுங்கல் தாங்கலைன்னு ஓடாம இருக்கணும்:-))))

said...

நாலும் தெரிஞ்ச எழுத்துக்காரி வாங்க வாங்க. யானை கட்டி போரடிக்க நம்மால முடியுதும்மா. பூனைக்குட்டி வேனா முயற்சி செய்யலாம்:))

said...

வாங்க வாங்க...

நிர்மலா, ரவிக்குமார், ராமநாதன்,சுரேஷ் பாபு, சுரேஷ்( பினாத்தல்) அன்பு,பிரகாஷ், சிங்செயக்குமார், குமரன்,
மது, முத்துக்குமரன், இளவஞ்சி,அருட்பெருங்கோ, மஞ்சூர் ராஜா,தருமி, கலை, மரம்,
கல்வெட்டு, தாணு, சுந்தர், சிநேகிதி,உதயகுமார், முரளி

ஏம்ப்பா இன்னும் யாரையாவது விட்டுட்டேனா?

(மொய் எழுத வந்தவுங்களைத் தனித்தனியா விசாரிக்கணுமுல்லே?)

நீங்கெல்லாம் வந்ததுக்கும், வாழ்த்தியதுக்கும் நன்றிங்க.

மது, 'தம்பு' ன்னா கூடாரம். பிரமாண்டமான டெண்ட், கூடாரம்! மனசிலாயோ?

said...

துளசி,

நீங்க எப்போதுமே நட்சத்திரம்தான் - வாழ்த்துக்கள்.

"நிகழ்ச்சிங்க பார்த்துக்கிட்டு இருக்கறப்ப, நாம ரசிக்கிற ஏதும் வந்தாலும் அதைப்பத்திப் பேசிப் பகிர்ந்துக்க முடியாதுல்லெ?"

ரொம்ப நியாயமான விஷயம். நம்ப பகிர்ந்துக்க முடியாது என்பதோடு, நமக்கு வேண்டியவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ள முடியாம போய் விடுகிறதே என்கிற கவலை எனக்கு நிறைய உண்டு.

ரங்கா.

said...

யக்கோவ்.. கலக்குங்க ..

இப்படிக்கு
தம்பு (தம்புன்னா இங்கே தம்பின்னு அர்த்தம்)

said...

ஆகா.. நீங்களா!!! கலாதியாயிருக்கப் போகுது! (புரியலையா.. வசந்தன் வருவார்..கேளுங்க!!) :O)

இந்த வாரம் பாத்து இங்கே நீண்ட வார இறுதி வருதே..நானும் லாத்தப்போறேனே... :O(

வந்து.. யானை தர்றதுண்டு சொன்னீங்களே.. யுனிட்ல வைச்சுப் பராமரிக்கிறது கொஞ்சம் கஷ்டம், அதனாலே கொஞ்ச நாளைக்கு ( வரிசையா நிற்க & நடனம் ஆட துளசிதள யானைகள் சொல்லிக்குடுக்கும் என்கிற நம்பிக்கையிலே) கொண்டு வந்து சேர்த்து விடுறேன். சரியா? ;O)

எங்கே அடுத்த பதிவு?

said...

நீங்க எப்போதுமே நட்சத்திரம்தான் - வாழ்த்துக்கள்.

said...

வாங்க பத்மா, ரங்கா, எல் எல் தாஸூ, ஷ்ரேயா, தங்கமணி.

நன்றிங்க.

தாஸூ,

'ஏமி தம்புடு இட்லே சேப்பேரு?
இதி தம்பு காதா? '

ஷ்ரேயா லொள்ளு தாங்கலை. யானை தந்தது, தந்ததுதான். அதை ஆடவச்சு, ட்ரெயின் பண்ணற பொறுப்பு உங்களோடது:-)

said...

அப்பிடின்றீங்க!!! ஹ்ம்ம்ம்... சரி, பேசாம இந்தியக் கோயில் ஒன்றிலே நான் சின்னதிலே கண்ட ஆசிர்வாத யானை மாதிரி, இங்கெ முருகன் கோயிலுக்கு / விஷ்ணு கோயிலுக்கு கொமிஷனுக்கு விடவேண்டியதுதான்..

ரெண்டுக்குக்குமே கதை விடுற வசதி இருக்கு:
முருகன் கோயிலுக்குக் குடுத்தா சொல்லக்கூடிய கதை: இந்த யானைதான் வள்ளி - முருகன் சேர துணைபுரிய பிள்ளையார் எடுத்த யானை உருவின் நேரடி வழித்தோன்றல்!!

விஷ்ணுகோயில் கதை: ஆதிமூலமே என்று அலறிய யானையின் வழித்தோன்றலான ஒரே யானை.. ;O)

எப்பிடி என் ஐடியா??

said...

ஷ்ரேயா,

எப்படியோ வச்சுக் காப்பாத்தினாச் சரி.அதுக்காக 'கொமிஷனுக்கு' பிச்சைஎடுக்க வச்சிராதீங்க.

said...

துளசியக்கா,
மனமார்ந்த வாழ்த்துக்கள் .கலக்குங்க !

said...

அன்பு, என்னமோ நான் சண்டை/ விவாதத்துக்கு தயாராய் இருக்கிறா மாதிரி சொல்லுவது கொஞ்சமும் சரியில்லை ( சின்ன சீக்ரெட்- துளசியை விட நா ரொம்ப சின்ன பொண்ணுன்னு சொல்லிக்கத்தான் :-))

said...

ஜோ,

வாழ்த்துக்கு நன்றி.

ஆமா, பையன் என்ன சொல்றார்? பேர் வச்சாச்சா? படம் ஒண்ணு தனிமடலில் அனுப்புங்களேன்.
ஆசையா இருக்கு.

வீட்டுலே சுகமா இருக்காங்களா?

said...

அது போகட்டும். ஒரு வாரம் என்னோட இம்சைகளைத் தாங்கிக்கற மனோ திடம் உங்களுக்குக் கிடைக்கணுமுன்னுஉங்க எல்லோருக்காகவும் வேண்டிக்கறேன்.//

ஸ்டார் துளசி!

வாழ்த்துக்கள். 54 பேர்ல நாந்தான் கடைசி போலருக்குது. ஊர்க்கு போறதுக்கு நீங்கதான லீவ் சாங்ஷன் பண்ணது. அப்ப சின்னதா ஒரு ஹின்ட் குடுத்திருக்க கூடாதா. வேலைக்கு நடுவில படிச்சிருப்பேன்ல?

இன்னைக்கி எல்லாத்தையும் ஒன்னுவிடாம படிச்சிட்டேன்.

ஒரு இம்சையுமில்ல. எல்லாத்துலயும் உங்க சென்ஸ் ஆஃப் ஹ்யூமர கலந்து தரீங்களே. அப்புறம் அதெப்படி இம்சையாவும்.

லேட்டா வாழ்த்து சொன்னதுக்கு மன்னிச்சிருங்க. எம் பொண்ணு வியாழக்கிழமைதான் வரா. திங்கள், செவ்வாய் என்னுடைய H.O.ல ஒரு செமினார். அதுக்கு போயிருந்தேன். இப்பத்தான் வந்தேன்.

said...

டிபிஆர் ஜோ,

என்னெங்க நீங்கவேற, லேட், மன்னிப்புன்னுக்கிட்டு.

நீங்க வந்ததே சந்தோஷம். எப்ப வந்தா என்ன?

மக நாளைக்குத்தான் வராங்களா?
சந்தர்ப்பத்தை விடாம இனிமையா பொழுது போகட்டும்.