Thursday, June 15, 2006

நியூஸிலாந்து பகுதி 44

இருவதாம் நூற்றாண்டு ஆரம்பிச்சது. இதுலே மொதல் இருபது வருசத்துலே வளர்ச்சியோட வேகம் ரொம்ப அதிகம். உள்ளூர் தபால் சேவை ஓஹோன்னு நடந்துச்சு. ஸ்டாம்ப்பு வந்துருச்சு. ஒரு பென்னி தலையை ஒட்டிட்டா நாட்டுக்குள்ளே எங்கே வேணுமாலும் தபால் அனுப்பிறலாம். 1902 லே மட்டும் ஜனங்க அனுப்புன தபால்கள் 13 மில்லியன்!( தபால்தலை ஆரம்பிச்சு இப்ப 150 வருசமா ஆனதுக்குக்காக புது ஸ்டாம்புகள் போட்டுருக்கு அரசாங்கம்)


ரெயில்பாதை போடறவேலை தீவிரமாச்சு. 1908லே வடக்குத் தீவோட 'மெயின் ட்ரங் ரெயில்வேஸ்' பாதை முடிஞ்சது. சரியா 40 வருஷமாயிருக்கு வேலை முடிய. (இந்தக் கணக்குலே பார்த்தா, இந்தியாமுழுசும் ரெயில்பாதை போட்டுருக்காங்களே, எவ்வளவு நாளாகி இருக்கும்?) ரெயில் ஓட ஆரம்பிச்சதும் ஜனங்கள் சுலபமா இங்கேயும் அங்கேயுமா வெவ்வேற எதிர்ப்பார்ப்புகளோடு போய்வந்தாங்க.


ஆனா வருமானத்துக்கு பஞ்சமில்லாம இருக்கணுமுன்னா பண்ணை வசுக்கிட்டாத்தான் நல்லதுன்னு பலரும் நினைச்சாங்க. குளிரூட்டற(ரெஃப்ரிஜெரேஷன்) வசதிகள் வந்ததாலே இறைச்சியும், வெண்ணெயுமா உலகத்தோட அடுத்த பக்கத்துலே விற்பனை சக்கைப்போடு போட்டுச்சு. 15000 பால்பண்ணைங்க இருந்துச்சாம்,1911லே.


அப்ப, இந்தப் பண்ணைங்களிலே வேலை செஞ்சவங்க கடினமா உழைச்சிருக்காங்க. குடும்பத்துக்கு 40 ஏக்கர். ச்சும்மா அப்படியே போட்டு வைக்க முடியுமா? மனுஷனுக்கு மட்டுமில்லே இந்த உழைப்பு. குதிரைகளும் சரிக்குச் சரியா உழைச்சதாம். காலையிலே அஞ்சரைக்கு எந்திருச்சு, மொதல்லே இந்தக் குதிரைகளுக்குத் தீனி வைக்கணும். திரும்ப ராத்திரி 10 மணிக்கு இதுங்களைக் கொட்டடியிலே அடைக்கிறப்ப தீவனம் வைக்கணும்.இதுக்கு நடுவிலே அப்பப்ப இதுங்க தானே புல் மேஞ்சுக்கும், வேலைகளுக்கு இடையிலே. பண்ணையிலே நிலத்தை உழுவறதுலே இருந்து, அறுப்பைக் கொண்டுவந்து தள்ளுரவரைக்கும் செமவேலை இந்தக் குதிரைகளுக்கு.ஒவ்வொரு பண்ணையிலேயும் குதிரைகள் கூட்டம். குதிரைங்க எவ்வளோ தண்ணீ குடிக்குமாம்?ஒருதடவைக்கு 20 வாளித் தண்ணீர் வேணுமாம் ஒரு டீமுக்கு. அநேகமா ஒரு டீமுன்னா ரெண்டு, இல்லேன்னா நாலு குதிரைங்க இருக்கலாம். அப்ப 20 வாளிக் கணக்குச் சரிதான் போல.


ஆட்டுமந்தைகளை எங்கேயும் பிரிஞ்சுபோக விடாம ஒரே இடத்துலே மேயவைக்கற வேலை யாருக்கு? நாய்களுக்கு. மந்தையைப் பார்த்துக்க மேய்ப்பன் இருந்தாலும், வேலை என்னவோ நாய்ங்களுக்குத்தான். ஷீப் டாக்(sheep dog)ன்னு சொல்ற இதுங்க வேலை செய்யற நேர்த்தியே தனிதாங்க. ஆடுங்க மேலே கவனமுன்னாக் கவனம், அப்படி ஒரு கவனம்.நம்மளைமாதிரி டவுனு ஆளுங்களுக்கு, இதைப் பார்க்கற கொடுப்பினை இல்லையின்னு, வருசம் ஒருக்கா, பெரிய ஊர்களிலே மூணு நாள் திருவிழா நடத்தறாங்க. அக்கம்பக்கக் கிராமங்களிலே இருந்து வந்து நடத்திக் கொடுக்கறாங்க.காளை, பசு, பன்னி, ஆடு, நாய்ன்னு கோலாகலமா இருக்கும்.


வயக்காட்டுலே இருக்கற எலித் தொந்திரவுக்காக பூனைகளையும் எக்கச்சக்கமா வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. குடும்பத்துலே எல்லாருக்கும் ஒவ்வொருவேலை காத்துக்கிடக்கும். கோழிங்க, பூனை, நாய் இதுங்களுக்குச் சாப்பாடு போட்டுப் பாத்துக்கறதுச்சின்னப் புள்ளைங்களோட வேலை. கொஞ்சம் வளர்ந்த பசங்களும், பொம்பளைங்களும் காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் பார்த்துக்கறது. அந்தந்த சமயத்துக்குத் தகுந்தாப்புலே கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்தறது, ஜாம் உண்டாக்கறது,அடுக்களை வேலை இப்படி. ஆம்புளைங்க வயக்காட்டைப் பாக்கறது, விவசாயம், ஆட்டு மந்தையிலே இருக்கற ரோமம் கூடுதலா இருக்கற ஆடுங்களைப் பிடிச்சு ரோமத்தைக் கையாலேயெ கத்தரிச்சு, பெரிய பெரிய பேலுங்களா உருட்டிவச்சு, ரெயில்லே ஏத்தி அனுப்பறதுன்னு இருந்தாங்க. ( இப்ப எல்லாத்துக்கும் மெஷீன் வந்துருச்சு. ஆட்டுரோமம் மழிச்சு எடுக்கறதை ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷனாக்கிட்டாங்க. நம்ம வெளிகண்ட நாதர் படம் காமிக்கறார் பாருங்க) ரெண்டுங்கெட்டான் வயசுன்னா, அடுப்பெரிக்க விறகு பொறுக்கறது, கோழிங்க வெவ்வெற புதருலே போட்டு வைச்சிருக்கற முட்டைகளைச் சேகரிக்கிறது, பன்னிங்களுக்கு தீனி போடறதுன்னு எப்பவும் எதாச்சும் வேலை. இடுப்பு ஒடியற மாதிரி. ஆனா எல்லாம் வாரம் ஆறு நாளைக்குத்தான். ஒரு நாள் கட்டாய ஓய்வு.

பசங்க கைச்செலவுக்குக் காசு சேர்க்கவும் ஒரு வழி இருந்துச்சு. காட்டு முயலுங்களைப் பிடிச்சு தோலை உரிச்சு,அந்தத் தோலை வித்துருங்களாம். இறைச்சியை? சமைச்சுக்கறதுதான். ரேபிட் ஸ்ட்யூ. பறவைகளைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காதாம்,விவசாயம் செஞ்சு விளைஞ்சுருக்கறதைத் தின்னுருதுங்களே. ஆலோலம் பாடி ஓட்டற முறையெல்லாம் தெரியாது போல. இந்தத் தொல்லையை ஒழிக்க வழி வச்சிருந்தாங்க அந்தந்த ஊர்லே உள்ளூர் ஆட்சி நடத்தறவங்க. ஒரு டஜன் பறவை முட்டைகளையோ, இல்லே ஒரு டஜன் பறவைத் தலைகளையோக் கொண்டுவந்து கொடுத்தா இவ்வளோ ( அப்ப ரெண்டு செண்ட்) காசுன்னு கொடுத்தாங்களாம். இப்படியே அரிதானபல பறவைகளுக்கு மோட்சம் கொடுத்துட்டாங்க.


வடக்குத்தீவுலே மவோரிகள்கிட்டே இருந்து போரிட்டுப் பிடிச்ச நிலத்தை வாங்கி பண்ணை அமைக்கறதுக்கு ஏகப்பட்ட போட்டி. இங்கே தெக்குத்தீவை விட அங்கே குளுரும் கொஞ்சம் குறைவுதான். பாகீஹா( வெள்ளைக்காரர்)குடும்பங்கள் அங்கே போய் குடியேற ஆரம்பிச்சாங்க. 1901 லே கணக்கெடுத்தப்ப இங்கே தெக்கே இருந்த மக்களைவிட வடக்கே ஜனம் கூடிப்போச்சு. இப்பவும் இருக்கற நாலு மில்லியன்லே மூணு மில்லியன் வடக்கேதான் இருக்கு.


நம்ம நாடுதான் ஒரே அழுக்கு. ஃபாரீன்லே சுத்தமுன்னா அப்படிச் சுத்தமுன்னு சொல்றவங்க ஒரு 106 வருசத்துக்கு முன்னாலே (??!!) இங்கெ வந்து பார்த்துருக்கணும்.


டவுன் லே நிறையப்பேர் குப்பைகளை தெருவுலே வீசிப் போடுவாங்க. இல்லேன்னா வீட்டுப் புழக்கடையிலே வீசிறது. இதெல்லாம் அங்கங்கே அழுகிக் கெட்டு நாறி, அதனாலே வியாதி வெக்கைன்னு பரவ ஆரம்பிச்சது. பண்ணை வச்சுருக்கறவங்க பரவாயில்லாம சுத்த பத்தமா இருந்தாங்க. எல்லாம் நகர மக்கள் பண்ணற அட்டூழியம்தான். இதுலேயும் பணக்கார வீடுகளிலே உள்ளே குழாயெல்லாம் போட்டு வச்சிருந்தாங்க. ஆனா முக்காவாசி இடங்களிலே வீட்டுக்கு வெளியே தோட்டத்துலே ஒரு மூலையிலேதான் கழிப்பறை. வெளியே ஒரு பாத் டப்( இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை!)வச்சிருப்பாங்க. அதுலேதான் குளிக்கிறது, அதுவும் வாரத்துக்கு ஒரு தடவை.


சுத்தம் இல்லாம கேடு வர ஆரம்பிச்சதும், 1900லே அரசாங்கத்தோட சுகாதாரத் துறை தலையிட்டு, தண்ணீர் சப்ளை,கழிவு போற குழாய்ங்க எல்லாம் சுத்தமா இருக்க வேண்டிய அவசியம் பத்தி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி ஒரு மாதிரி முன்னேற்றம் கொண்டு வந்துச்சு.


இருவது வருஷமா அரசாண்டுக்கிட்டு இருந்த லிபரல் கட்சிக்கு ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக் குறைய ஆரம்பிச்சது.

8 comments:

said...

உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
உலகைப் புது முறையில்
உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகளே

உழைப்பில்லாம உயிர்வில்லைங்குறது எவ்வளவு உண்மை.

said...

வாங்க M(r)G R,

சரியான பாட்டாத்தான் போட்டுருக்கீங்க.

உயர்ந்தவுடனே கூடவே ஒரு சோம்பேறித்தனம், அடுத்த தலைமுறைகளுக்கு வந்துருதே,
அதை என்ன செய்யலாம்?

said...

ஒரு குடியேற்ற நாட்டின் இவ்வளவு விரைவான வளர்ச்சி ஆச்சரியமா இல்லே?

said...

ஒரே நாள்ளே ரெண்டு பதிவுகளா?
ராட்சஸி பா!

said...

//இந்தக் கணக்குலே பார்த்தா, இந்தியாமுழுசும் ரெயில்பாதை போட்டுருக்காங்களே, எவ்வளவு நாளாகி இருக்கும்?//

அம்மா,
தமிழ்நாட்ல இன்னும் ‘இருவழி பாதை’ வேலை ஆரம்பிக்கவே இல்லை என்பது உங்களுக்கே தெரியும், தில்லி -மதுரைக்கு போகணும்னா முன்ன இருந்த 'டெலஸ்கோபிக் ரேட்' கூட நீக்கிட்டாங்க. இன்னும் பல அக்ரமங்கள் நடக்குது.

நல்லவேள நீங்க நீயுசி-ல இருக்கீங்க, நானும் இங்க இருந்து ஓடலாம்னு(பறக்கலாம்னு) நல்ல வேலை தேடி வர்ரேன் சீக்கிரமே நல்ல வேலை கிடைச்சிட்டா, ஓடிட(பறந்துட) வேண்டியது தான்.

said...

ஒரே நாள்ள மூணு பதிவுகள்
ஹுர்ரேஏஏஏ

said...

சிஜி,

எப்பவும் ஒரு குழம்பு ஒரு காய்ன்னு செய்றவங்க,
ஒரு நாள் ரெண்டு அயிட்டம் கூடுதலா செஞ்சுடறாங்கல்லே.
அப்படின்னு நினைச்சுக்குங்க.

செல் ஆல்ஸஸரீஸ்தான் வயித்தெரிச்சலா இருந்துச்சு. நம்ம மெயில் பாக்ஸ்லே
வந்த ஜங்க் தான். உடனே நாலு வரி எழுதணுமுன்னு தோணிப்போச்சு.

மூணு பதிவுக்கு மூணு பின்னூட்டமா? கணக்குச் சரியாத்தான் வருது.

அப்புறம் நாடு வளர்ச்சி வேகம்தான். இப்ப இருக்கறமாதிரி சாமான்கள் இருந்துருந்தா,
இன்னும் சீக்கிரமா முடிச்சிருப்பாங்கல்லே?

நிறைய நாள் இங்கே ரோடு ரிப்பேர் எல்லாம் ராத்திரியோட ராத்திரியா செஞ்சு முடிச்சுடறாங்க.
நாம மறுநாள் போறப்பப் பார்த்தா புது ரோடா பளபளக்கும். தோண்டி வச்சுட்டு, விட்டுட்டுப்
போறதெல்லாம் இல்லை.

said...

சிவமுருகன்,

வாங்க. வந்துருங்க.

நம்ம நாட்டுலெயும் முன்னேற்றம் வந்துக்கிட்டுத்தானுங்களே இருக்கு.என்ன....... ஊழல் கூடிப்போச்சு.