Friday, June 30, 2006

பிடித்த சண்டைக் காட்சிகள்

சினிமாலே பாட்டுங்களுக்கு எப்படி மண்டையை உடைச்சுக்கிட்டு( டான்ஸ் ஆடறப்பஏன் மண்டையை உடைச்சுக்கணும்னு கேக்காதீங்க. யோசிக்கறதைச் சும்மா அப்படிச் சொல்ற வழக்கம்!)மூவ், ஸ்டெப்ஸ் எல்லாம் சரியா தீர்மானிச்சுச் செய்ய நடனக்கலைஞர்கள் எவ்வளோ கஷ்டம் எடுத்துக்கறாங்க. இதுக்குக் கொஞ்சமும் குறைவில்லாம, இன்னும் சொல்லப்போனா இதுக்கும் மேலேயே யோசிக்கணும் சண்டைக்காட்சிகளை 'கம்போஸ்' செய்யறதுக்கு.


நடனத்துலே உயிருக்கு ஆபத்துன்னு ஒண்ணும் இல்லீங்களே. ஆனா சில சண்டைக்காட்சிகளில் கரணம் தப்புனா மரணம்தான். சமீபத்துலே ஒகேனக்கல்லேகூட ஒரு சண்டைக் காட்சிலே ஒருஉயிர் இழப்பு ஏற்பட்டுப் போச்சு. மலையாள நடிகர் ஜெயன் இப்படித்தான் ஒரு காட்சியிலே நடிச்சப்ப எக்குத்தப்பாப்போய் இறந்துட்டார்.

பெரிய நடிகர்கள்ன்னா சுண்டுவிரல்லே சின்ன அடிப்பட்டாலும் 'மயிரிழையில் உயிர் தப்பினார்'னுசெய்திகள் வந்துரும். ஆனா, இந்தச் சண்டைக்காட்சிகளிலே நடிக்கிற துணை நடிகர்களுக்கு எவ்வளோ ஆபத்துன்றதும், அடிகிடி பட்டுட்டா எப்படி அதுக்கு முக்கியத்துவம் இல்லாமப் போயிருதுன்றதும், சில சமயம் அவுங்க மீண்டும் தொழிலுக்கே வரமுடியாத நிலை உண்டாகி வாழ்க்கையிலெ எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்றதும் வெளியெ தெரியாமயேப் போயிருது.


நம்ம ஆஸாத் முந்தி மரத்தடியிலே இந்த சண்டைக்காட்சிகள் அமைக்கிற ஸ்டண்ட் வீரர்களைப்பத்தி எழுதி இருந்தார். அதுக்கப்புறம்தாம் இந்தக் காட்சிகளைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்க்கஆரம்பிச்சேன். ஆனாலும் பறந்து பறந்து அடிக்கிற சண்டைகள் எல்லாம் விருப்பமே கிடையாது.கொஞ்சம் கூட ரியலிஸ்டிக்கா இல்லாம ச்சும்மாக் கையைத் தூக்குனவுடனே நாலுபேர் நாலுபக்கம் பறக்கறது எல்லாம் 'நம்ம கையிலே ரிமோட்' இருக்கற வசதியைப் பாராட்டும்படி ஆச்சு.

நம்ம தோழி ஒருத்தர் இருக்காங்க. அவுங்களுக்கும் அவுங்க வீட்டுக்காரருக்கும் சண்டைக் காட்சிகள்ன்னா வெல்லம். ரிமோட்? நோ.....

எனக்குப் பிடிச்சது எது?

கொஞ்சம் நகைச்சுவையோட இருக்கற காட்சிகள். இதுவரை நான் ரசிச்சுப் பார்த்தது,அதாவது மனசுலெ நிக்கும்படியான காட்சிகள்ன்னா 'காக்கிச் சட்டை'யிலே கமல், ஒரு போஸ்டர் ஒட்டற பையனோட ச்சின்ன ஏணியை வச்சுக்கிட்டுப் போடற சண்டை. தேவர் மகன்லே வந்த 'சாந்துப்பொட்டு' பாட்டோடுவர்ற சிலம்பம், 'வெற்றிவிழா'வில் வர்றதுன்னு சிலதைச் சொல்லலாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட். இல்லீங்களா?

உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சிகள் எதுன்னு சொல்லுங்களேன்.

80 comments:

said...

நல்லா சொன்னீங்க. இவங்களுக்கு சரியான காப்பு திட்டம் (Insurance) இல்லை, ஒவ்வொரு படத்துக்கும் பட தயாரிப்பாளர் முறையா இவர்களுக்கு காப்பு எடுக்கனும் ( சண்டை நடிகர்கள் தனியா எடுத்தா அது வேறு ) எந்த காப்பு நிறுவனம் இவர்களின் தொழில் ஆபத்து கருதி சரியான காப்பு தருதுன்னு தெரியலை.

//'காக்கிச் சட்டை'யிலே கமல், ஒரு போஸ்டர் ஒட்டற பையனோட ச்சின்ன ஏணியை வச்சுக்கிட்டுப் போடற சண்டை//
எனக்கும் பிடித்த சண்டை, ஆனா இது ஜாக்கி சான் படத்தில் இருந்து நகல் (திருடப்பட்ட) எடுக்கப்பட்ட சண்டை.
இப்பவெல்லாம் சண்டைய விட இசை தான் அதுக்கு Built up கொடுக்குது கையை ஓங்கினாலே டிஸ்யூம் என்கிற சத்தம் காதை பொழக்குது.

said...

//உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சிகள்//

வீட்ல நடக்கறதும் பள்ளிக்கூடத்தில மைதானத்துலே மாணவர்கள் பிடுங்குப்படுவதும்!

ஓ..நீங்க சினிமால கேட்டீங்களோ? :O)))

said...

வாங்க குறும்பரே.

இவுங்களுக்குக் காப்புத் திட்டம் எடுக்கணுமுன்னு இவுங்க சங்கம்( இருக்கும்தானே?) முயற்சி செய்யணும்.

கமல் சண்டை நகலா இருந்தாலும் நல்லாத்தான் இருந்தது.

ஜாக்கிச்சான் சண்டைகளில் ஒரு சுவாரசியம் இருக்கும். இது எங்க வீட்டில் எல்லாருக்குமே பிடிக்கும்.

said...

ஷ்ரேயா,

'வீட்டுச் சண்டை'களை விவரமாத் தனிமடலில் அனுப்புங்க. ரொம்ப சுவாரஸியமா இருக்கும்போல இருக்கே:-)))

said...

//உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சிகள் எதுன்னு சொல்லுங்களேன்.//
துளசியக்கா,
நம்ப பதிவாளர்களிடையே நடக்கும்... மதச் சண்டை ... சாதிச் சண்டையாக நடக்கும் வாய்ச் சண்டை... வாள் சண்டையை வீட குறைந்ததல்ல என்று 'கருத்து' சொல்கிறேன்

said...

//கொஞ்சம் நகைச்சுவையோட இருக்கற காட்சிகள். இதுவரை நான் ரசிச்சுப் பார்த்தது,அதாவது மனசுலெ நிக்கும்படியான காட்சிகள்ன்னா 'காக்கிச் சட்டை'யிலே கமல், ஒரு போஸ்டர் ஒட்டற பையனோட ச்சின்ன ஏணியை வச்சுக்கிட்டுப் போடற சண்டை. தேவர் மகன்லே வந்த 'சாந்துப்பொட்டு' பாட்டோடுவர்ற சிலம்பம், 'வெற்றிவிழா'வில் வர்றதுன்னு சிலதைச் சொல்லலாம்.//

அக்கா நம்மள மாதிரி கமல் ரசிகரோ? மகிழ்ச்சி..'தூங்காதே தம்பி தூங்காதே' -யில டேபிள் சேர் வச்சு ஒரு சண்டை இருக்கு .அதுவும் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

said...

கோவி.கண்ணன்,

நீங்க சொல்ற சண்டைகள் எல்லாம் 'குடும்பச் சண்டைகள்' ஆச்சே:-)))

said...

ஜோ,

வாங்க. குழந்தை நல்லா இருக்கார்.

//....நம்மள மாதிரி கமல் ரசிகரோ? //

சந்தேகம் என்ன?

தூ.த.தூ. நான் பார்க்கலையே(-:

said...

//நீங்க சொல்ற சண்டைகள் எல்லாம் 'குடும்பச் சண்டைகள்' ஆச்சே:-)))//
துளசி அக்கா,
குடும்பத்த விட்டுக்கொடுக்காமா மானத்தை காப்பதிட்டிங்க அக்கா மானத்தை காப்பாதிட்டிங்க. நம்ப கைப்புள்ள கேள்விப்பட்டுட்டு கண்ணீர் விட்டு அழுதத நினெச்சா ... கண்ணு கலங்குது..
(வவா சங்கத்துல சேர்ந்த தோட பாதிப்பு .... என்ன செய்யனும் .... கண்டுக்காம உட்டுடனும்)

said...

கோவி.கண்ணன்,

பின்னே, குடும்பத்துலே பெரியவுங்க இருக்கறது எதுக்காம்?:-)))))))

said...

நா சமாதானப் பிரியனுங்க;சண்டைக்காட்சி வந்தா
கண்ணை மூடிக்குவேனுங்க.
இருந்தாலும் சினிமாவுல வர்ர
கைக்கும் வாய்க்கும் சாப்பாட்டு பிளேட்டுக்கும் நடக்ற சண்டைக்காட்சிகள் ரொம்ப பிடிக்குமுங்க.
மாயாபஜார்லெ வர்ர "கல்யாண சமயல் சாதம்..."காட்சி டாப்புங்க
இப்ப ஏங்க உங்க ஆடும் யானையும்
பொன்ஸின் ஓடும் யானையும்
நினைவுக்கு வருது?

said...

அம்மா,

//காட்சிகள்ன்னா 'காக்கிச் சட்டை'யிலே கமல், ஒரு போஸ்டர் ஒட்டற பையனோட ச்சின்ன ஏணியை வச்சுக்கிட்டுப் போடற சண்டை.//

அதே படத்துல ஜாகிஜான் மாதிரி ஒரு பெஞ்ச் வச்சு வச்சுகிட்டு சண்டை போடுவார் அது நல்லா இருக்கும்,
ஒரு ஹிந்தி படத்துல ரஜினி துப்பாக்கியால தன் சிகிரெட்ட பத்த வைச்சுட்டு சண்டை போடுவார் அந்த சண்டையும்(நம்ம 'அதிசய பிறவி'ல கூட காட்டுவாங்க) , ராஜ்கிரன் என் ராசாவின் மனசிலே படத்துல பத்த வைக்காத பீடியை வாயல வச்சுகிட்டு சண்டை போடும் போது வில்லன்கள் அடிக்கும் கொள்ளிகட்டை மூலம் அதை பத்த வைப்பார், எல்லாம் ரொம்ப ரிஸ்க்கான காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். (அப்பா எந்த காலத்துல பாத்தது?)

said...

டீச்சர். பொதுவா சண்டைக்காட்சீன்னாலே எனக்குக் கொட்டாவி வரும். அதுக்கு மேலையும் மீறி ரசிச்சதுன்னா..ஜாக்கிசான் காட்சிகள்தான். அதுல இருக்குற நகைச்சுவை அப்பப்பா!

இப்போக் கூட லார்டு ஆஃப் தி ரிங்ஸ், நார்னியா சண்டைக்காட்சிகள் பிடிக்கும். magical reality type fights அதெல்லாம்.

தமிழுக்கு வந்தா......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...திருடா திருடால ஒன்றிரண்டு காட்சிகள். தேவர் மகன்ல வர்ர சண்டை. கீழ்வானம் சிவக்கும் படத்துல சிவாஜியும் சரிதாவும் போட்டுக்குற சொற்சண்டை. கொலகாரனைக் காப்பாத்துறாரு மாமனாருன்னு சரிதா சண்டை போடுவாங்க. இல்ல...தான் தப்பு செய்யலைன்னு மருமக சரிதாகிட்ட சிவாஜி சண்டை போடுவாரு. போட்டிச் சண்டை.

ஆனா பொதுவா சின்னப்புள்ளைல கதாநாயகிகள் சண்டை போட்டா பிடிக்கும். அதுவரைக்கும் வில்லனப் பாத்தாலே வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்னு கத்துற கதாநாயகி, கடைசிச் சண்டைல நகைச்சுவை நடிகர்கள் கூடச் சேந்துக்கிட்டு வீரமா(!) சண்டை போடுற காட்சிகளப் பாத்து சந்தோஷமாச் சிரிச்சிருக்கேன். அதே மாதிரி இந்த நாய், குதிர, யானக் காட்சிகளுந்தான்.

said...

எனக்கும் சினிமாவில் வரும் சண்டைக்காட்சிகள் பிடிக்கும். எம்ஜியாரின் விதவிதமான ஆயுதங்களுடன் படத்திற்கு படம் புது யுக்திகளில் சண்டைக்காட்சி அமைப்பு பிடிக்கும். இப்போதைய காட்சிகள் சற்றே கோரமாக இருக்கின்றன. சிறுவர்களை எந்த அளவு பாதிக்கும் எனத் தெரிய வில்லை.

said...

துளசி முன்னாலேயெ பார்க்க மாட்டேன் சண்டைக் காட்சிகளை.இப்போது கொஞ்சமாவது ரசிப்பது ஜாக்கிசானோட உரூண்டு ,தாவிக் குதித்துப் போடும் காமெடி சண்டைதான். இப்பொ கன் சண்டை இல்லை. கத்தி அருவாள் ,சாமி வேணாம்பா, ஆளை விடு.

said...

ஒரு சண்டைக் காட்சிலே ஒருஉயிர் இழப்பு ஏற்பட்டுப் போச்சு. மலையாள நடிகர் ஜெயன் இப்படித்தான் ஒரு காட்சியிலே நடிச்சப்ப எக்குத்தப்பாப்போய் இறந்துட்டார்.//

அப்போ நான் கோடம்பாக்கம் பிராஞ்சுல மேனேஜரா இருந்தேன். 1980-81. எங்க பிராஞ்சுல பழைய மலையாள இயக்குனர் ஏ.கே.சாமி (நடிகை சரண்யாவோட அப்பா)கஸ்டமர். அவர் படத்துல கதாநாயகி, வில்லி சண்டையெல்லாம் இருக்கும்.

அப்போ ஜெயனுடைய மரணம் எப்படி நடந்தது என்று விவரித்தார். அப்போதுதான் தெரிந்தது ஜெயன் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து செஞ்சிருந்தார்னு..

இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால டிஷ்யும்னு ஒரு படம் வந்துதே. அதுல காட்டியிருக்கற எந்த காட்சியுமே எக்சாஜரேஷன் இல்லே.. அந்த அளவுக்கு ஸ்டண்ட் நடிகர்களை ரிஸ்க் எடுக்க வைக்கிறார்கள்..

said...

//உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சிகள் எதுன்னு சொல்லுங்களேன். //

நமக்கு ஜன்னல் வழியா தெரியற பக்கத்து வீட்டு சண்டைக் காட்சிகள்தான். ஹிஹி.

said...

நீங்க எல்லாம் கேட்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். நான் அடி வாங்கும் போது அந்த ஜன்னலை சாத்திடுவோமில்ல. :)

said...

சிஜி,

உங்க 'சண்டை'யில் ரிஸ்க் கம்மிதான். அதையே கண்ட்டின்யூ செஞ்சுருங்க:-))))

said...

சிவமுருகன்,

சினிமாவை நீங்க விட்டாலும், அது உங்களை எப்படியாவது பிடிச்சிருதுபோல இருக்கே.

கடைசியா நீங்க பார்த்த சினிமா எதுவோ?

said...

ராகவன்,

வாங்க. தோள் வலி எப்படி இருக்கு? குறைஞ்சிருக்கா?

//வில்லனப் பாத்தாலே வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்னு கத்துற கதாநாயகி, //

எம் பொண்ணு இதைக் கேட்டா..... ஏன் டயர்னு கத்தக்கூடாதான்னு சொல்வா:-))))

கடைசி சீன்லே கதாநாயகி, சண்டைபோடறவங்களுக்கு இடைஞ்சலா
வரணுமுன்றது சட்டமாச்சே:-)))
நாய்பூனைன்னா எனக்கும்தான் பிடிக்கும். ஓட்டிஸ் & மைலோ பார்த்தீங்களா?

said...

மணியன்,

எப்படியெல்லாம் கொடுமைக் காட்சி வைக்கலாமுன்னு
ஓயாம சிந்திக்கறதுதான். இல்லையா?

said...

வல்லி,

எவ்வளோ ரிஸ்க் எடுத்துச் செய்யறாங்கன்னு தெரியும்போது ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்யறது
கொஞ்சம் 'கில்டி'யாத்தான் இருக்கு.

said...

ஆமாங்க டிபிஆர்ஜோ.

சின்ன வயசுதான் ஜெயனுக்கு. ஹெலிக்காப்டர் சண்டைன்னு நினைக்கிறேன். பாவம்.

said...

கொத்ஸ்,

என்ன ஆச்சரியம்? உங்க பக்கத்து வீட்டுக்காரங்களும் இதையேதான் சொன்னாங்க:-))

said...

கொத்ஸ்,

இது நல்ல ஐடியா. நோட்டட்:-)))

said...

துளசியக்கா, திரு.ஜோசப்,

விபத்து:
ஜெயன் இறந்தது ஹெலிகாப்டரில் தொங்கியபோதுதான்.

தமிழகத்திலும் சண்டைக்காட்சி இழப்புகள் பல உண்டு. ரவி என்னும் ஒரு சண்டைக்கலைஞர் இறந்தார். தீ விபத்தில் தீ கொளுத்தும் டைமிங் தவறியதால் குதிரைகள், மனிதர்களுக்கு காயமேற்பட்டது (படம்: காளி). எனது நண்பன் கையை உடைத்துக்கொண்டான்.

காப்பீடு:
ஆயுள் காப்பீடு முன்பு இல்லாமலிருந்தது. தொழிலே ரிஸ்க்காக இருப்பதால் அப்படி. இப்போது விவரம் அறியேன், விசாரிக்கவேண்டும்.

பிடித்த சண்டைக் காட்சிகள்:
எம்.ஜி.ஆரென்றால் பட்டியல் பெரிதாகிவிடும் :)
கமல் என்றால் - தேவர் மகன்.
ரஜினி என்றால் - பாஷா.
அமிதாப் என்றால் - தீவார்.

அன்புடன்
ஆசாத்

said...

துளசி
தமிழ் படம் மட்டும்தான் கணக்கா? திரிசூல்/ தீவார் சண்டையெல்லாம் உண்டா? தனியா ஆங்கில பட சண்டை பத்தி ஒரு பதிவு போட்டா, கிளிண்ட் ரசிகர்களெல்லாம் கூட சேர்ந்த்துக்குவாங்க.

said...

//என்ன ஆச்சரியம்? உங்க பக்கத்து வீட்டுக்காரங்களும் இதையேதான் சொன்னாங்க:-)) //

மாட்டிக்கிட்டீங்களா? அதுக்குத்தானே சுறுசுறுப்பா டிஸ்கி போட்டது. உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படி யோசிப்பாங்கன்னு தெரியாதா? :D

said...

வாங்க ஆஸாத் தம்பி.

வருகைக்கும், கொடுத்த விவரங்களுக்கும் நன்றி.

இவுங்களுக்கான ஒரு காப்பீடு விவரம் தெரிஞ்சால் கட்டாயம் சொல்லுங்க.

said...

பத்மா.

இப்போதைக்குத் தமிழ் சினிமாதான். கூடவே ஹிந்தியையும் சேர்த்துக்கலாம்.
ஆனா.... இங்கிலீஷ் கனக்குலே வராது. நன் பார்த்தால்தானே அதைப் பத்தி எதாவது
சொல்ல முடியும்.

முந்தி ( இந்தியாவுலெ இருக்கறப்ப)பாய்ஞ்சு பாய்ஞ்சு பார்த்த காலம். இப்ப எல்லாமே
இங்கே கிடைக்குது. ஆனா..... பார்க்கற ஆர்வம் போயிருச்சு.

said...

கொத்ஸ்,

சரியான ஆளப்பா நீர்:-))))

said...

துளசிக்கா

இதுக்கு முன்னாடி தங்கிலீஷ்ல ஒரு பின்னூட்டம் அனுப்பினேன். அதைக் 'காலி' பண்ணிடுங்க.

ஆளாளுக்கு கமல் கமல்னு சொல்லிட்டு யாருமே "சத்யா" படத்தைப் பத்திக் குறிப்பிடாதது ஆச்சரியம்.

1988-இல் வந்த சத்யா படத்துல வந்த மாதிரி நிஜத்துக்குக் கிட்டத்தட்ட அருகில் அமைந்த சண்டைக்காட்சிகளை நான் வேறு எந்தப் படத்துலயும் பாக்கலை. கமலின் அபாரமான நடிப்பும் சண்டைக் கலைஞர்களின் பங்களிப்பும் அந்தப் படத்துல அருமையான சண்டைக் காட்சிகளைத் தத்ரூபமாக் கொண்டு வந்திருந்தது.

கமலோட பெரும்பாலான படங்கள்ல வர்ற "அழகு"ங்கற சண்டைக் கலைஞர் "சத்யா"ல பிரதானமா வந்திருப்பார். சொல்லப் போனா கமலோட கெட்-அப்பே அழகு மாதிரியே இருக்கும்! :)

தமிழ்ல சத்யா படச் சண்டைக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அது தவிர இன்னொரு காரணத்திற்காகவும் சத்யா எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். ஏன்னு கேட்டு என்னை வெட்கப் பட வைக்காதீங்க. ஹிஹி.

தமிழ்ல தவிர மத்த படங்கள்னா அன்றும் இன்றும் என்றும் எனக்குப் பிடித்தமான சண்டைப்படங்கள் தானைத் தலைவர் ஆசியச் சிங்கம் ஜாக்கி சான் அவர்களோடதுதான். எங்க வீட்ல ஒரு பெரிய பட்டாளமே அவருக்கு ரசிகர்கள்! :)

said...

வாங்க சுந்தர்.

'சத்யா' சண்டை ஞாபகமே வரலையேப்பா(-:

இத்தனைக்கும் எங்கிட்டே படம் இருக்கு. எடுத்துப்போட்டுப் பாத்துரணும்.

'ஜாக்கிச்சான்' நமக்கும்தான் பிடிக்கும். நகைச்சுவையோடு போடற சண்டையாச்சே.

//தவிர இன்னொரு காரணத்திற்காகவும் சத்யா எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.
ஏன்னு கேட்டு என்னை வெட்கப் பட வைக்காதீங்க. ஹிஹி//

ஆஹா.... வலையில் தானே விழுந்தாச்சா? ஸோ & ஸோ வோட பார்த்த முதல் படமோ?

இப்பத் தெரிஞ்சுக்கலைன்னா எங்க மண்டை வெடிச்சுரும். அந்தப் பாவம் உங்களுக்கு வேணுமா?:-)))

said...

மேடம், (உங்கள எப்படி கூப்பிடுறதுன்னு பலத்த சந்தேகம்)

விக்ரம் தர்மாவும் கமலும் 'வெற்றிவிழா' படத்துல லிஃப்டுல சண்டபோடுறது நல்லாயிருக்கும். புதிய முயற்சி.

எங்க ஊருக தாய்மேல் ஆணை பட சண்டைக்காட்சி படமாக்குனதப் பாத்திருக்கேன். அர்ஜூனின் டூப் பறந்து பறந்து பல்டி அடிக்க, அர்ஜூன் அந்த இடத்துலேயே காணோம்..

ஒரு காட்சியில டூப் தலை மோதி விபத்தாகிறமாதிரி வந்துடுச்சு. மயிரிழையிலதப்பிச்சுட்டாரு.

கூடவே எஸ் எஸ் சந்திரனும் தவக்களையும் காமெடி பண்ணிட்டிருந்தாங்க..

said...

சிறில்,

இந்த 'மேடம், மோடம் ' எல்லாம் வேணாம். சிம்பிளா 'அக்கா'ன்னு கூப்புடுங்க. அதுதான்
எனக்குப் பிடிக்கும்.

வெற்றிவிழாலே கமலோடு சண்டை போடறதுதான் தர்மாவா? எனக்கு இது புது நியூஸ். நன்றி.

உண்மையான ஹீரோக்கள் டூப்புகள்தான். அதேபோல உண்மையான ஹீரோயின்கள் 'டப்பிங் குரல்'கொடுக்கறவங்கதான்.

சினிமாவைப் பத்தி ஒண்ணுமே தெரியாம இருந்தப்ப இருந்த 'வசீகரம் இப்பக் குறைஞ்சு போச்சு'ன்றதுதான் உண்மை.

ஆனாலும் சினிமாவை விட்டா வேற பொழுது போக்கு(???) இருக்கா என்ன?

said...

//சிவமுருகன்,

சினிமாவை நீங்க விட்டாலும், அது உங்களை எப்படியாவது பிடிச்சிருதுபோல இருக்கே.//

சில காட்சிகள் மறக்க முடியாது

//கடைசியா நீங்க பார்த்த சினிமா எதுவோ? //
சந்திரமுகி.(2005)

அதுக்கு முன்னால 1999-2000ல பார்த்த நினைக்காத நாளில்லை (பார்த்திபன் தெய்வயானி.).

said...

சிவமுருகன்,

நான் தியேட்டரில் கடைசியாப் பார்த்தது 'மகளிர் மட்டும்'

இது 1994லே.

நீங்க இப்ப சமீபத்துலேதான் பார்த்துருக்கீங்க. பரவாயில்லையே:-)))

said...

//'சத்யா' சண்டை ஞாபகமே வரலையேப்பா(-://

யக்காவ்... அந்தப் படமே சண்டைப் படம்! அதுக்காக 'டிபிகல்' சண்டைப் படம்னு சொல்ல மாட்டேன். ஏன்னா கமல் படம். மணிரத்னத்தோட வகுப்புத் தோழன் கிட்டிங்கற கிருஷ்ணமூர்த்தி இதுல 'இனிமையா' சிரிச்சிக்கிட்டே வில்லத்தனம் பண்ணிருப்பார். அந்த 'இனிமையான' சிரிப்புக்கும் குரலுக்கும் காரணம் - வேற யாரு. நம்ம தலை பாலுதான்!

//இத்தனைக்கும் எங்கிட்டே படம் இருக்கு. எடுத்துப்போட்டுப் பாத்துரணும்.//

உடனே பாருங்க. இவ்வளவு நாள் பாக்காம விட்டதுக்கு வருத்தப் படுவீங்க.

//தவிர இன்னொரு காரணத்திற்காகவும் சத்யா எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.
ஏன்னு கேட்டு என்னை வெட்கப் பட வைக்காதீங்க. ஹிஹி//

//ஆஹா.... வலையில் தானே விழுந்தாச்சா? ஸோ & ஸோ வோட பார்த்த முதல் படமோ?

இப்பத் தெரிஞ்சுக்கலைன்னா எங்க மண்டை வெடிச்சுரும். அந்தப் பாவம் உங்களுக்கு வேணுமா?:-)))//

அட... படம் வந்தப்போ எனக்கு 18 வயசு. அப்பல்லாம் ஒழுங்கா படிச்சிக்கிட்டு இருந்தேன்! :) படத்துல என்னுடைய என்னுடைய என்னுடைய தானைத் தலைவி அமலா இருக்காங்க. அதான்..ஹிஹி..

இதையெல்லாம் எங்க வீட்ல படிக்க மாட்டாங்கங்கற தைரியம்தான். போட்டுக் கொடுத்துராதீங்க!

said...

//தவிர இன்னொரு காரணத்திற்காகவும் சத்யா எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.
ஏன்னு கேட்டு என்னை வெட்கப் பட வைக்காதீங்க. ஹிஹி//

//ஆஹா.... வலையில் தானே விழுந்தாச்சா? ஸோ & ஸோ வோட பார்த்த முதல் படமோ?

இப்பத் தெரிஞ்சுக்கலைன்னா எங்க மண்டை வெடிச்சுரும். அந்தப் பாவம் உங்களுக்கு வேணுமா?:-)))//


என்ன துளசி.. இவ்வளவு அப்பிராணியா இருக்கீங்க..
நம்ம சுந்தருக்கு.. அமலான்னா.. ரொம்ப உசுரு.. இப்பதான் எனக்கே நியாபகம் வருது...

வேற யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க..

சீமாச்சு..

பி.கு: எனக்கு சண்டையெல்லாம் பிடிக்காது.. சமாதானக் கொடிகள் தான் பிடிக்கும்.

said...

இவ்வளவு பேர் பின்னூட்டம் எழுதி ரஜினிகாந்தை யாரும் குறிப்பிடவில்லையே? ரஜினியின் பிற்காலப் படங்களில் நகைச்சுவை கலந்த சண்டைக் காட்சிகள் எனக்குப் பிடிக்கும். ஆக்கிரோஷமாக அடித்துக் கொள்ளும் காட்சிகள் போரடிக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

அக்கா! எனக்கு சண்டைக்கு அப்புறம் நாயகன் என்ன செய்தான் என்பது தான் நினைவில் நிற்கும். அவ்விதத்தில் சின்ன கவுண்டர் படத்தில் தீயவர்களைப் பந்தாடி விட்டு கடைசியில் அவனை மன்னித்து விட்டு விடுவதாக அமையும் காட்சி மனதில் நிற்கிறது.

said...

சுந்தர்,

நீங்க சொல்ற கிட்டோட க்ளாஸ்மேட் ஒருத்தர் நம்ம நண்பரும்கூட.


எனக்கு அந்தப் படத்துலே ஞாபகம் இருக்கற சீன்: கமல் ,அமலா& குரூப் ஹோட்டல்லே
சாப்புடப்போவாங்களே, அங்கே அனுமார் வேஷத்துலே இருக்கறதா வருமே அதுதான்.

அடடா, அமலான்னா உயிரா? அதெல்லாம் வீட்டுலே இப்பப் போட்டுக் கொடுக்கமாட்டேன் மெயிலில்.
நேரில் பார்க்கும்போது சொன்னாப்போச்சு.:-))))

said...

வாங்க சீமாச்சு.
நலமா? ஒருதடவை உங்களுக்கு பின்னூட்டம் போட முயற்சி செய்தப்ப
உங்க பின்னூட்டப்பெட்டி வேலை செய்யலை.

பதிவு.... எதப் பத்தின்னா... குழந்தைகிட்டெ இருந்து கற்றுக்கொண்டதுன்னு எழுதியிருந்தீங்களே அப்ப.
தகப்பன்சாமி?

சுந்தருக்கு அமலான்னா உசிரா? போட்டும். அப்ப அவருக்கு 18 வயசுதானாம்.
போனாப் போட்டுமுன்னு விட்டுறலாம்:-)))
அமலாவும் அநாதை நாய்களுக்கு சேவை செய்யறாங்களாமே. அதுனாலெ எனக்கும் சந்தோஷமே.

said...

சிவகுமார்,

நீங்களா? இங்கே?

ரஜினிகாந்த் சண்டையை யாரும் குறிப்பிடலைன்னா நல்லதுதான்.அதை உங்களுக்காக ஒதுக்கிட்டாங்க.
இல்லேன்னா நீங்க இங்கெ வந்திருப்பீங்களா?:-))))

said...

கைபுள்ளெ,

போடற சண்டை முடிஞ்சப்புறம், கசங்காதச் சட்டையிலெ தூசு தட்டிக்கிட்டுக் கதாநாயகன்
எழுந்து போகறதைத்தானே சொல்றீங்க?

எதிரிகள் எல்லாரையும் மன்னிக்கிற சண்டைன்னா அது ஃபினாலி. சுபம்.

said...

உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சிகள் எதுன்னு சொல்லுங்களேன்//
டீச்சர், இந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டுடறேன்.

said...

நீங்களுமா அக்கா,

எல்லோரும் சேர்ந்து என்னைக் கட்டம் கட்டி சாமியார் ஆக்கி விடுவீர்கள் போலிருக்கே :-)

அன்புடன்,

மா சிவகுமார்

said...

ஷ்ரேயா, உங்க சண்டைக்காட்சி அனுபவங்களை சொல்லுங்க, வேற என்ன காட்சிகளில் ஏதாவது ஒற்றுமை இருக்கா என்று பார்க்கத்தான் :-)

said...

வாங்க தருமி.

கேட்டதே ஒரே ஒரு கேள்வி. அதையும் சாய்ஸ் லே விட்டீங்கன்னா எப்படி?

அப்ப மார்க் கோழி முட்டையா? :-))))

said...

வாங்க தருமி.

கேட்டதே ஒரே ஒரு கேள்வி. அதையும் சாய்ஸ் லே விட்டீங்கன்னா எப்படி?

அப்ப மார்க் கோழி முட்டையா? :-))))

said...

சிவகுமார்,

நீங்க சின்னவயசா இருந்துக்கிட்டுப் போடற பதிவுங்க அப்படி இருக்கு.
அதான் 'சாமியார் ரேஞ்சுக்கு' உங்களைக் கொண்டு போகுதுன்னு நினைக்கறேன்.
ஆனா, மனசு முதிர்ச்சி அடைய வயசாகணுமுன்னு விதி இல்லையே.

நாங்கெல்லாம் பாருங்க, பிள்ளையில்லாத வீட்டுலே கிழவன்/கிழவி துள்ளி விளையாடற'
பழமொழியை நிரூபிச்சுக்கிட்டு இருக்கோம்:-)))))

இன்னும் சொன்னா, உங்க அளவுக்குச் சிந்திக்கமுடியலையேன்னு கொஞ்சம்(??)
புகைச்சல்தான் உங்களை இப்படிக் கலாய்க்கிறது.

said...

அக்கா,

பிடிச்ச சண்டை, பாஸ்ட் பார்வர்ட் பண்ணாம, சண்டைக் காட்சி இருக்கிற படத்துக்கு வரமாட்டேன்னு அடம்பிடிக்காம பார்த்த ஒரே சண்டை இந்த "பாட்டி சொல்லைத் தட்டாதே" க்ளைமாக்ஸ் தான்..

பாக்யராஜின் ருத்ரா க்ளைமாக்ஸ் சண்டையும் எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு அலுக்காதது..

கொஞ்சம் நகைச்சுவை, அப்புறம் நாயகிகள் சண்டை போடுறது இதெல்லாம் இருந்தா பார்ப்பேன்.. அதுக்காக ஒரேயடியா விஜயசாந்தி லெவல் சண்டையெல்லாம் சானல் மாற்ற வேண்டியது தான் :)

said...

என்னம்மா பொன்ஸ், ஆளையே காணொம்? பிஸியா?

இங்கெயும் சண்டைக்காட்சிகள் பலதும் ஃபாஸ்ட் பார்வேர்டுதான்.

கொஞ்சம் கில்டிதான். அதுக்காக, கொஞ்சமும் ரியலிஸ்டிக்கா இல்லைன்னா என்ன செய்யறது?
எதாவது சில சண்டைகள்தான் நகைச்சுவையோடு கம்போஸ் செஞ்சிருந்தா மட்டும் பார்க்கிறொம்.

said...

பனிப் போர் இதி அடக்கம் தானே டீச்சர்? (டீச்சர் என அழைத்தால் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் தானே)

said...

துள்சிக்காஆஆஆஆஆஆஆஆஆ

//கமல் ,அமலா& குரூப் ஹோட்டல்லே
சாப்புடப்போவாங்களே, அங்கே அனுமார் வேஷத்துலே இருக்கறதா வருமே அதுதான்.
//

ஆமா. தூள் சீன் அது. அனுமார்தான் 'பர்த்டே பாய்'. 'சீதா. டீ சாப்பிடு"ம்பார் ராமன் கமல். சீதா அமலாவைப் பத்தில்லாம் நான் மனசுக்குள்ள வர்ணிச்சுக்கறேன். :)
ராமரோட வில் சீதாவோட கூந்தல்ல சிக்கி இழுக்க சீதா "ஆ.."ன்னு கத்துவார்.

//சுந்தருக்கு அமலான்னா உசிரா? போட்டும்.
அமலாவும் அநாதை நாய்களுக்கு சேவை செய்யறாங்களாமே.//

"ஒக்காந்து யோசிக்கற" கும்பல் ஜாஸ்தி இருக்கற "தமிழ் வலைப்பதிவு சூழல்"ல நீங்க இப்படில்லாம் 'ஒரு பேச்சுக்கு' எழுதினா என் நிலைமை என்ன ஆவறது? :) :)

எனக்கு ஒரு சம்சயம். உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சி சினிமால கிடையவே கிடையாதுங்கறேன். என்னன்றீங்க? :) :)

said...

வாங்க குப்பு செல்லம்.

பனிப்போர்...? வலைஞர்களுக்கிடையில் நடப்பதா?
இல்லை , அசல் பனியில் நடப்பதா?

வெறும் சினிமாச் சண்டையைத்தான் சொல்லி இருக்கேன்.
நமக்கெல்லாம் அசல் சண்டைன்னா கொஞ்சம் யோசிக்கணும்.

'சண்டை ஒத்து நைனா, சமாதானங்காப் போத்தே மஞ்சிதி'ன்ற குரூப்.

டீச்சர்னு தாராளமாக் கூப்புடலாம்.( அது இன்னும் நல்ல வார்த்தையாத்தானே இருக்கு?)

said...

சுந்தர்,

//"ஒக்காந்து யோசிக்கற" கும்பல் ஜாஸ்தி இருக்கற "தமிழ் வலைப்பதிவு சூழல்"ல
நீங்க இப்படில்லாம் 'ஒரு பேச்சுக்கு' எழுதினா என் நிலைமை என்ன ஆவறது? :) :) //

திருப்பித்திருப்பி, 'நுணலும் தன் வாயால்......' நிரூபிக்கணுமா? :-))))))

//எனக்கு ஒரு சம்சயம். உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சி
சினிமால கிடையவே கிடையாதுங்கறேன். என்னன்றீங்க? :) :)//

இப்ப வர்ற சினிமாலேன்னு வச்சுக்கலாமா?

வரவர கோரமாச் சிந்திக்கறாங்களேப்பா(-:

said...

யோகன்,

அதேதான். நகைச்சுவையோடு இருக்கும் சண்டைகள் தான் விருப்பம்.

said...

உஷாக்கா.. அதெல்லாம் துளசிக்கு சும்மா எடுத்து விட்டது, நாங்க வீட்லே சண்டையே புடிக்கறதில்ல(ன்னு சொன்னா நம்பவா போறீங்க!!) ;O)))

நேத்து ஒரு கமல் படம் பாத்தேன்..அதிலே கமால் ஹுசைன் ஜெய்ஷங்கர் கூட ஒரு சண்டை போடுவார். ஒரு கட்டத்துல சண்டை புடிக்கிறாங்களா இல்லை கைய கோர்த்துட்டு டான்ஸ் ஆடறாங்களா என்கிற அளவுக்கு சந்தேம் வந்திடுச்சு! :OD

நான் தமிழ் சினிமா சண்டையில ரொம்ப ரசிச்சுப் பார்ப்பது, சண்டையின் போது அபத்தமா ஸீரோவோ(எழுத்துப் பிழை இல்லை) வில்லனோ மாடியிலருந்து குட்டிக்கரணம் போட்டு (அல்லது சில சமயம் போடாமயே) குதிச்சு கீழ்தளத்துக்கு வாறதும் அப்புறம் ரிவர்ஸ் கியர் போட்டா மாதிரி கீழ்தளத்திலேருந்து மாடிக்குப் "பறக்கறதையும்" தான். ஒரே சிரிப்புத்தான் போங்க!!

இப்ப வர்ற படங்கள்லே அந்த மாதிரி சண்டைக்காட்சிகள் இல்லைப் போலிருக்கு.. அதனாலேயோ என்னவோ படமெல்லாம் சுத்த போர்!

said...

துளசி, யாரோ எழுதப் போரடிக்குது சொன்னாப்பிலெ காதில விழுந்தது.
அது ஏன்னு இப்போ தான் புரியுது. அக்கா டீச்சருக்கு பின்னூட்டபதிலுக்கே நேரமாயிருச்சும்மா!1:-)) தூள் கிளப்பிடுச்சுப்பா இந்தப் பதிவு.சண்டைக்காட்சி என்கிறதாலேயா?
நல்லா இருக்கு.நூறும் எட்ட வாழ்த்துக்கள்.

said...

துளசியக்கா,
நான் தீவிர சிவாஜி ரசிகன் என்றாலும் ,வாத்தியாரோட சிலம்புச்சண்டை ரொம்ப பிடிக்கும் .பிற்காலத்துல வந்த கம்பை விரல்ல சுத்துறது ,காமெடி பண்ணுறது என்றெல்லாம் அவர் அபத்தம் செய்ய மாட்டார் .அவருடைய சிலம்பு வீச்சு முறையானது என்று முறையாக சிலம்பு தெரிந்த எங்க ஊர் பெருசுங்களே சொல்ல கேட்டிருக்கேன் .'சக்கரவர்த்தி திருமகள்' -ன்ற படத்துல எம்.ஜி.ஆரும் அவருடைய நிஜமான ஆசான் ஓ.யே.கே.தேவரும் மோதுவார்கள் ..உங்களுக்கு தெரியல்லிண்ணா கோபால் சார்-ட்ட கேட்டுகிங்க.

said...

சின்ன திருத்தம் .அது ஓ.யே.கே தேவர் இல்ல .சாண்டோ சின்னப்பா தேவர்-ன்னு நினைக்குறேன்.

said...

ஷ்ரேயா,

அது என்ன 'நேத்து ஒரு கமல் படம்' பார்த்தேன்?
பேர் கிடையாதாமா?(-:

said...

மானு,

நீங்க கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, 'சினிமா' பத்திய பதிவுகள்ன்னா எல்லாருமே ஆர்வமாக் கலந்துக்கறாங்க.
சினிமாதான் நம் வாழ்க்கையிலே நாலறக் கலந்து போயிருக்கு:-)

said...

ஜோ,

சும்மாச் சொல்லக்கூடாது. அந்தக் காலத்துலே சினிமாலே இருந்தவங்க சண்டைக்கான பயிற்சிகளை
முறையே எடுத்தவங்கதானாம். இப்பமாதிரி க்ராஃபிக்ஸ், இன்னும் மற்ற டெக்னிக்கல் வசதிகள் எல்லாம்
இல்லாததாலே கவனமாத்தானே படம் பண்ணி இருக்கணும். பறந்து பறந்து அடிக்கறதெல்லாம் இல்லாத
காலமாச்சே. லஸ்தர் விளக்குக் கயித்தைப் பிடிச்சுக்கிட்டு சர்ர்ன்னு அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போறதுதான்.

பேர் குழப்பம் வேணாம் . 50% கரெக்ட். :-))))

'ஆட வாங்க அண்ணாத்தே.....' இப்பச் சமீபத்துலே பார்த்தேன்.

said...

பேர் தெரிஞ்சா சொல்லாம வஞ்சனையா பண்ணப்போறேன்.. மறந்துருச்சுங்க! :O)

ஜெய்ஷங்கர், அவங்க மனைவியா லஷ்மி, கமல் ஒரு பிக்பாக்கெட் PPராஜாவாம் பேரு...ம்ம்.. ஆ! ஸ்றீப்பிரியா கதாநாயகியாம்.. மனோரமா கூட இருந்தாங்க. வில்ல்ல்லன் யார்ன்றீங்க.. விசயகுமார். அவ்ளோபேரத்தான் என்னால கண்டு புடிக்க முடிஞ்சுது. :O))

ஜெய்ஷங்கர் & கமல் சின்ன வயசிலே பிரிஞ்சிபோன அண்ணன் தம்பியாம்..Grrr..
இதுக்குமேலே பட பேர கண்டு பிடிக்கிறது உங்கபாடு. (இல்லன்னா இன்னிக்கு வீட்லே போயி cover பாத்திட்டு வந்து நாளைக்கு சொல்றேன்) :O)

said...

ஷ்ரேயா,

//(இல்லன்னா இன்னிக்கு வீட்லே போயி cover பாத்திட்டு வந்து நாளைக்கு சொல்றேன்) :O)//

இது.....

நாளைக்கே சொல்லுங்க. மெனெக்கெட முடியாது.

said...

படப்பேரு "சவால்". பாத்துட்டு வந்தும் சொல்ல மறந்துட்டேன்... :O)

பாத்துராதீங்க! அவ்வளவுதான் சொல்லமுடியும்! :O))

said...

என்ன ஷ்ரேயா, இப்படி 'சவால்' விடறீங்க?

பார்க்கவே மாட்டேன், கிடைக்காதவரை:-)))

said...

எனக்கு சண்டைக்காட்சி என்றால் நினைவுக்கு வருபவை,

1) சந்திரமுகி (அறிமுக சண்டைக்காட்சி)
2) அண்ணாமலை (ரஜினி-குஷ்பு combination fight)
3) கன்னத்தில் முத்தமிட்டால் (Army fight in park)
4) ஜென்டில்மேன் (Fight in ஸ்பேன்சர் பிளாசா)
5) திருடா திருடா (ரயில் சண்டைக்காட்சி)

சொல்லி கொண்டே போகலாம். பாக்யராஜ் சண்டைக்காட்சிகளில் அவரின் முகபாவம், ராஜ்கிரண் சண்டைக்காட்சிகளில் பிண்ணனி இசை (நகைச்சுவையாக இருக்கும்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

said...

எனக்கு பிடித்தவை,

1) சந்திரமுகி (Introduction fight)
2) அண்ணாமலை (Rajini-Kushboo combination fight)
3) கன்னத்தில் முத்தமிட்டால் (Army fight in park)
4) ஜென்டில்மேன் (Spencer plaza fight)
5) திருடா திருடா (Train fight)

சொல்லிக் கொண்டே போகலாம். பாக்யராஜ் சண்டைக் காட்சிகளில் அவரின் முகபாவம், ராஜ்கிரண் சண்டைக் காட்சிகளில் பிண்ணனி இசை (நகைச்சுவையாக இருக்கும்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

said...

வாங்க சரவணகுமரன்.
வணக்கம். நம்ம வீட்டுக்குப் புதுசா வந்துருக்கீங்க போல. நல்வரவு.

பெரிய சண்டை ரசிகரா இருப்பீங்க போல.
லிஸ்ட் அருமையா இருக்கு.

அடிக்கடி வந்து போங்க.

said...

இந்த பதிவை மூட மாட்டேன்னு இவ்வளவு சண்டை போடறீங்களே!

ஐயா! 75!
ஐயா! 75!

said...

சண்டைனா எனக்கு நியாபகம் வருவது
1) பாட்ஷால வர முதல் சண்டை.
2) நந்தால சூர்யாவோட முதல் சண்டை (காலேஜ்).
3) தில் கிளைமாக்ஸ் சண்டை.
4) மகாநதி ஜெயில் சண்டை.
5) கேப்டன் பிராபகரன் கிளைமாக்ஸ் சண்டை.
6) கில்லி சேசிங் காட்சி.
7) ஆயிரத்தில் ஒருவன் கப்பலில் வருகின்ற கிளைமாக்ஸ் சண்டை.
8) சேது முதல் சண்டை.
9) அந்நியன் (Matrix style) சண்டை.

இன்னும் பழைய படத்தில் வருகின்ற கத்தி சண்டை, மாயாஜால சண்டைகள் எல்லாம் பிடிக்கும்...

said...

கொத்ஸ்,

எப்படிய்யா...........?

சண்டை தானா முளைக்குது?
இன்னும் முடியலையா?

said...

வாங்க வெட்டிப்பயல்,

சண்டைக்கு மீண்டும் உயிர் வந்துருச்சு போல:-))))

நீங்க சொன்ன சண்டைகளில் ஒரு நாலைஞ்சு நினைவில் இல்லீங்க.(-:

said...

அதுக்குள்ள சண்டைய முடிச்சிட்டா எப்படினுதான் ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன் :-))

said...

ஏங்க வெட்டிப்பயல்,

ஏற்கெனவே 'முகப்புலே தெரியணுங்கறதுக்காக பின்னூட்டம் போடறாங்க'ன்னு ஒரு பதிவு பார்த்தேன். இப்பப் பழசைக்
கிளறி மேலெ வந்துச்சுன்னா அதுக்கு ஒரு புது சண்டை வந்துறப்போதுங்க. பயமா இருக்கு.

said...

//இப்பப் பழசைக்
கிளறி மேலெ வந்துச்சுன்னா அதுக்கு ஒரு புது சண்டை வந்துறப்போதுங்க. பயமா இருக்கு. //

இதுக்கு உங்களுக்குப் போட்டியா குமரன் இருக்காரு. இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? சூரியனைப் பாத்தி குலைக்குது நாயின்ற மாதிரி , ஆஆஆ, நாயின்னு சொல்லக்கூடாதாமே. சாரிங்க.....