Saturday, August 19, 2006

இன்ப அதிர்ச்சி

இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் வழக்கம்போல கணினி முகத்தில் கண்விழிச்சுப்பார்த்தப்ப............ அடடா என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.


அது வந்துங்க, எங்க 'வீட்டுப் பக்கம்' திறந்தவுடன், உள்நாட்டு விஷயம் எதாவது இருக்கான்னு பார்க்கறது. முக்கியமா இன்னிக்கு எத்தனை டிகிரி சூடு, வெய்யில்(!!!!!!) வருமா இத்யாதிகள்.


டெக்னாலஜி நியூஸ்ன்னு Indian Village Uploads Itself Online னு படிச்சதும் பரபரப்பா அதைத் திறந்தேன். இந்திய விஷயங்களை அவ்வளவா கண்டுக்காத உலகத்தின் பகுதியிலே ரொம்ப அசம்பாவிதமா எதாவது நடந்தாலொழிய ( அதுக்கும் டி.வி. கவரேஜ் 2 நிமிஷம்தான்)சட்டை பண்ணாமப் போற இடத்துலே எக்ஸ்ட்ரா நியூஸ்லே வந்துருக்கேன்னு ஆச்சரியம்!


இவுங்க டிவிலே வரணுங்கறதுக்காக அதீதமா எதாவது நடக்கணுமா என்ன? No News is Good News இல்லீங்களா?


அந்த கிராமத்தைப் பத்தி எழுது ஒரு சுட்டியும் கொடுத்துருக்காங்க.

கிராமத்தைப் பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்புன கையோட உங்ககிட்டேயும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவு.
கிராமங்கள் விழிச்சுக்கிச்சுன்னாவே நல்ல முன்னேற்றம் வருதுன்றதுக்கு அறிகுறி.


அனைவருக்கும் இன்றையப் பொழுது நல்லதாக அமையட்டும்.

8 comments:

said...

ஆமாங்க நிறைய இடங்களில் இந்த விழிப்புணர்வு வரத்தொடங்கியிருக்குது.
சமீபத்தில் திரு பத்ரி கூட கூத்தம்பாக்கம் இளங்கோ அவர்களின் பணியையை பற்றி சுட்டி கொடுத்திருந்தார்.
இந்த எண்ணிக்கை உயர்ந்தால் நல்லது.
எதிர்பார்ப்போம்.

said...

விழிப்புணர்வு வளருதுங்க! அதைத் தடுக்கும் முயற்சிகளும் பல வடிவங்களில் வளருதுங்க..
சோர்வு மனப்பாண்மைனு நினைக்காதீங்க...நிதர்சனம் இதுதான்

said...

வாங்க குமார்.

நானும் பத்ரியின் பதிவைப் பார்த்தேன். மனசுக்கு சந்தோஷம் வந்துக்கிட்டு இருக்கு.

said...

என்னங்க சிஜி,

உங்க பாணியிலே ஒரு பதில் சொல்லட்டா?

'காலம் ஒரு நாள் மாறும் நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி..............'

said...

அருமையான திட்டம்.

இப்படியே இந்தியாவின் எல்லா கிராமங்களும், உலகத்தின் எல்லா கிராமங்களும் இணைக்கப்பட்ட உலகத்தை நினைத்தாலே சுகமாக இருக்கிறது. அதற்கு மக்கள் பேசும் மொழியில் இணைய இடைமுகங்களும், பரவலாக இணைப்பும் கிடைக்க வேண்டும். கிடைத்து விடும்.

நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

வாங்க சிவகுமார்.

நீங்க சொன்னபடி நடக்கும் காலம் ரொம்ப தூரத்துலே இல்லைன்றதே ரொம்ப மகிழ்ச்சியாத்தான் இருக்கு.

said...

நல்லது நல்லது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இந்த தொலைச்சுருங்கல் அந்த ஒற்றுமையை வளர்க்கட்டும். உலகம் செழிக்கட்டும்.

said...

வாங்க ராகவன்.
என்ன ஆளையே காணோம்?
சென்னையை நல்லா அனுபவிக்கிறீங்க போல இருக்கே.
நாளைக்கு ச்சென்னைக்குப் பிறந்தநாளாம்.

//தொலைச்சுருங்கல்//

அருமையான சொல். எப்படிங்க, உங்களுக்கு மட்டும் சொற்கள் ஓடிவருது?
பிடிச்சிருக்கு.