Sunday, April 30, 2006

கதை கேக்க வாங்க

கடவுள் மனுஷங்களைப் படைச்சார்(!?) என்னென்னமோ தியரி இருக்குதேன்னு யாரும்சொல்லிக்கிட்டு குறுக்கே வராதீங்க. இது கதை. கட்டுக்கதை. கதை மட்டுமே.


எல்லாருக்கும் சாப்பாடு என்னன்னும் மெனு கொடுத்தார். நமக்கு இட்டிலி, தோசைவடக்கே இருக்கறவங்களுக்குச் சப்பாத்தி, வெளிநாட்டு ஆளுங்களுக்கு 'Pan Cake' இப்படி. அதுக்கெல்லாம் தொட்டுக்கறதுக்கும் என்னென்ன சரியா இருக்குமுன்னும் சொன்னார்.


அப்பதான் பொறந்த ச்சின்னக்குழந்தைங்க, எங்களுக்கு என்ன மெனு?ன்னு கேட்டுச்சுங்க.அந்த நிமிஷம்தான் பொறந்திருந்தாலும் அதுங்களாலே சாமிகிட்டே மட்டும் பேச முடியும். ஆமா.


'உங்களுக்கு சாப்பாடு பால்'னு சொன்னார். அதுலே ஒண்ணு ரொம்ப வாயாடி. அது கேட்டுச்சாம்,'பாலுக்குத் தொட்டுக்கறதுக்கு என்ன?'ன்னு. அதெல்லாம் இல்லை. வெறும் பால் மட்டும்தான்னுபதில் வந்துச்சு.பசங்களுக்கு ஒரே கோபம். 'தொட்டுக்க என்ன? தொட்டுக்க என்ன?'ன்னு கூச்சல் போட்டுச்சுங்களாம். கத்துனதெல்லாம் நம்ம தென்னிந்தியக் குழந்தைகளாம்.இதுங்க கத்துன கத்தல்லே கடவுளுக்கு எரிச்சல் வந்துருச்சு. 'பாலுக்குத் தொட்டுக்க உங்கம்மா தாலி'ன்னாராம்.


குழந்தைங்க தாய்பால் குடிக்கறப்பப் பார்த்தீங்கன்னா, தன்னோட பிஞ்சுக் கையாலே தாலிச்செயினையோ,தாலிக்கயிறையோ பிடிச்சுக்கிட்டே பால் குடிக்கும். சரிதானுங்களே?


இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு இருந்த மனுஷங்க, நாமும் கத்திக் கூச்சல் போட்டா எதுவாவதுஇன்னும் கிடைக்குமேன்னு நினைச்சாங்க. அவுங்களும் கூச்சலை ஆரம்பிச்சாங்க.

இது என்னடா கிரகச்சாரமுன்னு பார்த்தார் சாமி.ச்சும்மா இருங்கன்னு சொன்னார். மனுஷனாச்சே,ச்சும்மா இருக்க முடியுமா? அடங்க மாட்டேங்கறாங்க.


'எல்லாருக்கும் ஞாபக சக்தியை எடுத்தறலாம். அப்பதான் யோசனை செய்ய முடியாதுன்னு அவுங்களுக்குஎன்ன வேணுமுன்னு' ன்னு ஒரு ஐடியா வந்துச்சு. அப்படியே ஆச்சு. ஜனங்களோ இந்த நிமிஷம் செய்யறதைஅடுத்த நிமிஷம் மறந்து போதுங்க. எங்கே பார்த்தாலும் குழப்பம். வீட்டை விட்டு வெளியே வர்றவன் எதுக்குஎங்கே போகணுமுன்னு மறந்து போறான். சமையலை கவனிக்கறவனுக்குத்தான் கஷ்டம் கூடிப்போச்சு. எல்லாம் அடிப்பிடிச்சு தீஞ்சுக்கிட்டு இருக்கு. ஊர் பூரா தீஞ்சநாத்தம். இப்படி ஏகப்பட்டது.


சாமிக்கே அய்யோன்னு போச்சு. சாமியே ஆனாலும் அதைக் கொஞ்சம் மாத்திக்கலாமே தவிர கொடுத்ததை எடுக்க முடியாதே. எல்லார் தலையிலே இருந்தும் ஞாபக மறதியை எடுத்து ஒரு இடத்துலே சேர்த்துவச்சுஅதை ஒரேடியா இல்லாமச் சின்னச்சின்ன ஞாபகமறதியா ஆக்குனார். போன வருசம் தீபாவளிக்குஎடுத்த புடவை ஞாபகம் இருக்கும், ஆனா முந்தாநாளு வச்ச குழம்பு மறந்துரும். இப்படிச் சின்னச்சின்னது.


கடைசியிலே ஜனங்க எல்லாரும் திரும்பிப் போனபிறகு பார்த்தா ஒரு பெரிய கட்டி ஞாபகமறதியை அங்கே கிடக்கு. அடடா.... இதை என்னா செய்யலாமுன்னு பார்த்தப்ப அவர் முன்னாலே, சுத்துற உலகத்தோட இந்தியப்பகுதி மெதுவா சுத்திக்கிட்டே வருது. அவசரத்துலே அந்தக் கட்டியைத் தூக்கி இந்தியாவுலேவீசிப்போட்டுட்டு 'அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா எல்லாரும் மறதி வசப்படணும்'னு சொல்லிட்டுத் தூங்கப்போயிட்டார்.


பி.கு: இதுக்கு எதாவது டிஸ்க்ளெய்மர் போடணுமா? இல்லே ச்சும்மா இருந்துறலாமா?

Saturday, April 29, 2006

அக்ஷ்ய திருதியை.

நாளைக்கு அக்ஷ்ய திருதியையாம். ரெண்டு மூணு வாரமா பேப்பருங்க எல்லாம் தண்டோராப் போட்டுக்கிட்டேஇருக்குங்க. நானும் இ பேப்பர் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்.


நகைக்கடைங்க பண்ணற விளம்பர அட்டகாசங்கள் வரவர அநியாயமா இருக்கேங்க. நேத்து தினமலர் கடைசிப்பக்கத்துலே கேரளா ஜுவெல்லர்ஸ் விளம்பரம் யாராவது பார்த்தீங்களா?


தங்கம் விக்கற விலையிலே அந்தப் பொண்ணு, அதாங்க மாடலிங் செஞ்ச பொண்ணு போட்டுருக்கற நகைங்களைப் பார்த்து மனஆறுதல் பெறுங்க. அந்தவரைக்கும் உங்க வீட்டுப் பெண்குலங்கள் இதையெல்லாம் வேணுமுன்னுகேட்டுருக்க மாட்டாங்கன்ற நம்பிக்கைதான். நானே கேக்கலைன்னா பாருங்களேன்:-))) கழுத்து நெக்லஸ், தொலையட்டும். அதென்னங்க அப்படி ஒரு கூட்டம் வளையல் ? கையைத் தூக்கி எப்படி பதிவுங்க தட்டச்சு செய்யறது?


ஒட்டியாணம் வேற இருக்குங்க. இப்ப இருக்கற சைஸுக்கு ரெண்டு வாங்கி ஜாயிண்ட் பண்ணாத்தான் பத்துமுன்னுஇருக்கு. ம்ம்ம் இந்தக் கவலை எங்க இவருக்குல்லே வரணும்? அப்புறம் காதைக் கவனிங்க. கர்ணாபரணங்கள். திஸ் ஈஸ் ஃபைவ் மச்!


புரியாத சிலதும் இருக்கு பாருங்க. அது வந்துங்க.........


நாளைக்கு நல்ல நாளாம், தங்கம் வாங்க.- மெத்தச் சரி. ஆனா, கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்பணம் 50%செலுத்தி முன்பதிவு செஞ்சுக்கணுமாம். அதுவும் சரி.


ஆனா, பணம் கொடுத்த விநாடியே அதை வாங்கிட்ட மாதிரிதானே அர்த்தம்? அப்ப திருதியை திதி? நகை என்ன தோசையா? அப்பப்பச் சுட்டுத்தர? மொதல்லேயே செஞ்சு வச்சதுங்கதானே? அப்படி இருக்க நாளைக்கு மீதி 50% கட்டுனவுடனே லட்சுமி கூடவே வீட்டுக்கு வந்துருமா?


சரி. நாமோ நாளைக்கு வாங்கறோமுன்னு வையுங்க. அப்ப உலகத்தின் அடுத்தபக்கம் இருக்கறவங்க எப்பவாங்கணும்? நாளான்னைக்கா? அங்கேயும் நம்ம ஆளுங்கதானேங்க இருக்கோம். சாமி பூமிக்கு மேலே இருந்து அருள் செய்யறப்ப அது ஒரு நாளைக்கு இந்தியாவுக்கும், அடுத்தநாள்தான் அமெரிக்காவுக்கும் போகுமா?


சரி, நகை வாங்குனா அதுவும் ஒரு சேமிப்புன்னு நினைச்சுக்கலாம். ஆனா மத்தகடைங்க ஏங்க இதுலே நடுவிலேவந்து கூவுதுங்க?


இன்னிக்குப் பேப்பர்லே மொதப் பக்கத்துலேயே 'விவேக்ஸின் அக்ஷ்யதிருதியை விற்பனை' ஃபேன், ஏசி, ஃப்ரிட்ஜ்,டிஜிட்டல் கெமெரா, ஹேண்டிக்காம் இப்படி. அப்ப இந்த வருசம் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்குனா அடுத்தவருசத்துக்குள்ளேவீடு பூராவும் ப்ரிட்ஜ்ஜா? அதையெல்லாம் எங்கே வைக்க?

என்னாங்கடா ஒண்ணும் புரியலைன்னு பார்த்தா இதோ இன்னொரு விஷயம்.
'இலவசம். ஒவ்வொரு பர்சேஸ்ஸூடன் தங்கக் காசு'. ஆங்.....

இவுங்க தேசலாக் குடுக்கற தங்கக்காசு அடுத்தவருசம் குட்டி போட்டுப் பெருகிடும்.

கடைகடைக்கு கிராமுக்கு ரூபாய் 25, 40, 50ன்னு விலை குறைச்சுவேற குடுப்பாங்களாம். தங்கம் உலகமார்க்கெட் விலையாச்சே? எப்படி விலையைக் குறைப்பாங்களாம்? இன்னும் கூடுதலாச் செம்பு கலந்தா?


அலாரம் வச்சு மூணு மணிக்கே எழுந்து குளிச்சு மொழுகி சாமி கும்புட்டுட்டு கடைக்குப் போகற வேலையைப் பாருங்க. நாளைக்குக் காலையிலே ஆறுமணிக்கே கடை திறந்துருவாங்களாம். உங்க நல்ல காலம் நாளைக்கு ஞாயித்துக்கிழமை.

Friday, April 28, 2006

மஃப்பின்


இன்னிக்கு ஒரு பேஜாரான செய்தி கேக்கும்படி ஆயிடுச்சுங்க. நம்ம பக்கத்து வீட்டுலேஒரு அழகான நாய்க்குட்டி இருக்குன்னு சொல்லி இருந்தேன்லே. அது பேருதான் மஃப்பின்.


இன்னும் ஒரு வயசுகூட ஆகலைங்க. பத்தரை மாசம்தான் ஆகியிருக்கு. நேத்து வீட்டுக்குவெளியே போய்த் தெருவைக் கடந்து ஓடும்போது, வண்டியிலே அடிபட்டு.......


இன்னிக்கு அந்த வீட்டு அம்மாதான் ஷவல் கேட்டு வந்தாங்க. அப்பத்தான் சொல்றாங்க இப்படி ஆயிருச்சுன்னு.


கேட்டதுலே இருந்து மனசே சரியில்லைங்க. ரொம்ப அழகா இருக்கும். அவுங்க வீட்டுலேவெளியே விட்டதும் நைஸா நம்ம வீட்டுக்கு வந்து நம்ம ஜிகேயோட பூனைச் சாப்பாட்டைஒரு பிடி பிடிச்சுட்டுப் போயிரும்.


ஒரு மாசம் அவுங்க ஊருலே இல்லீங்க. மஃப்பின்னை அவுங்க தோழி வீட்டுலே விட்டுட்டுப்
போனாங்களாம். அதுவோ ஒரு பண்ணை வீடு. நல்லா ஓடியாடித் திரிஞ்சிருக்கு.


முந்தாநாள் ராத்திரி இவுங்க ஊர்லே இருந்து வந்துட்டுக் காலையிலே போய் இவரைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. எனக்கும் பக்கத்து வீட்டுலெ குலைக்கற சத்தம் கேட்டது.


சரி. மஃப்பின் வந்துட்டான்னு சந்தோஷமா இருந்துச்சு. எதுத்த வீட்டுலே ஒருத்தர் இருக்கார். டெரியர்.கொஞ்சம் வயசானவர். எப்பவும் ஃப்ரீயாத்தான் விட்டிருப்பாங்க. அவர் நம்ம வீட்டுக்கு எதிர்ப்பக்கம் தெருவோரமா வாக் போறப்பப் பார்த்தா என்னவோ தெரியலை, கிராமத்துலே ஒரு பெரியவர் கையைப் பின்னாலே வச்சுக்கிட்டு நடந்துபோற மாதிரியே இருக்கும். அதான் அவருக்குப் பெரியவர்னு பேரு வச்சிருந்தேன். பெரியவரும் மஃப்பினும் கொஞ்சம் ஃப்ரண்ட்ஸ். அதான் இவனும் பண்ணை வீட்டுலேஇருந்து வந்தவுடனே அவரைக் கண்டுக்கிட்டு வரலாமுன்னு போயிருக்கான். அதுக்குள்ளே யமன்கார்லே வந்து........ட்டான்.


என் சந்தோஷத்தை உங்ககிட்டே பகிர்ந்துக்கறமாதிரி இந்த துக்கத்தையும் உங்ககிட்டே சொல்லி மனசைஆத்திக்கறேன். பக்கத்து வீட்டுப் பசங்களும் மூஞ்சே சரியில்லாம கிடக்குங்க.


ச்சு ....பாவங்க மஃப்பின். கண்ணுக்குள்ளேயே இருக்கான்.

Thursday, April 27, 2006

சாந்தம்மா





பயண விவரம் பகுதி 21


" அட... என்னங்க இப்படி திடீர்னு கரண்டு போயிருச்சு. கொஞ்சம் ஃபோன் போட்டுக் கேளுங்க"

" சாந்தாம்மா இன்னேரம் போன் போட்டுருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துலே கரண்டு வந்துரும் பாரேன்"

" ஏங்க இந்தப் பையன், வீட்டுப்பாடம் செய்யாமத் திரியறான். கேட்டாச் சொல்லித்தான்னு உயிரை எடுக்கறான்.நான் நாலு எழுத்துப் படிச்சிருந்தாத்தானே இவனுக்குச் சொல்லித்தர முடியும்? இவனாவது படிச்சு மேலே வருவான்னுபார்த்தா......"


" எதுக்கு இப்படிப் புலம்பறே? பையனை நம்ம சாந்தாம்மாட்டே கொண்டுபோய் விடறேன்"


" என்னடி பார்வதி, இப்ப என்னா ஆச்சுன்னு இப்படிக் கண்ணீர்விட்டுக்கிட்டுக் கலங்கிப்போயிருக்கே.வா, நம்ம சாந்தாம்மாவீட்டுக்குப் போய் மேல்கொண்டு என்னா செய்யறதுன்னு கேட்டுக்கலாம்."


இப்படி அந்தப் பகுதியிலே எதுக்கெடுத்தாலும் சாந்தாம்மா, சாந்தாம்மாதான்.

இவுங்களை நான் சந்திச்சதைச் சொல்லலேன்னா எனக்குத் தலை வெடிச்சுரும். நம்ம மது, அதாங்க காற்றுவெளி மதுதான் சொன்னாங்க, 'நீங்க சாந்தாம்மாவைக் கட்டாயம் சந்திக்கணும்'னு. இதோ அதோன்னுசரியான நேரம் வாய்க்கலை. ஒரு பத்து நிமிஷமாவது போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு வெள்ளிக்கிழமை சாயங்காலம் போனோம்.

தோட்டத்துலே, வீட்டை ஒட்டி ஒரு கூரையை இறக்கியிருக்கற காத்தோட்டமான இடத்துலே பத்துப்பன்னெண்டு புள்ளைங்க உக்காந்து படிச்சுக்கிட்டும், வீட்டுப்பாடம் எழுதிக்கிட்டும் இருக்காங்க. 'கேட்' திறக்கற சத்தம் கேட்டதும் திரும்புன பசங்க, மதுவைப் பார்த்ததும் ஓடிவந்துக் கையைப் புடிச்சுக்கிச்சுங்க. அவுங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்த டீச்சரும் எழுந்து வந்தாங்க.


ஆமா மதுவுக்கும் இந்தப் புள்ளைங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆங்.....
சொல்றேன். ஓசைப்படாம சமூகசேவைசெய்யறதுலே மது கில்லாடி. வாரம் மூணு நாள் மது இங்கே வந்து பாடம் சொல்லித்தராங்க. மத்த ரெண்டு நாளுக்குரெண்டு பேர் வராங்களாம். இன்னிக்கு இங்கே இருக்கற டீச்சர் வெள்ளிக்கிழமைக்கு வர்றவுங்க.


அதுக்குள்ளே வாசல்லே படுத்திருந்த ஜீனாவைக் கடந்து வெளியே வந்தாங்க நம்ம சாந்தாம்மா. பார்த்தவுடனே'சட்'னு பிடிச்சுப்போகும் புன்னகை.

பசங்களுக்கு சந்தோஷம். சின்னது ஒண்ணு, பாட்டெல்லாம் பாடி அமர்க்களப்படுத்திருச்சு. எல்லாரையும் கொஞ்சம் 'க்ளிக்'கிட்டு, பேசிட்டு நாங்க வீட்டுக்குள்ளே போனோம்.ஜீனாவுக்கு பக்கத்துலே புள்ளையார் உக்கார்ந்திருந்தார். அவருக்கென்ன? மகராஜனா இருக்கட்டும்.


பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களுக்கு ரொம்ப உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க இவுங்க. ஒண்ணு ரெண்டா இருந்தாவிவரம் கேக்கலாம்தான். ஆனா 65 குழுக்கள். அம்மாடியோ........


வாரம் ஒருநாள் வெள்ளியன்னிக்குத் தன்னோட மகன் வீட்டுக்குப்போய் பேரப்பிள்ளைகளோட கொஞ்சநேரம்இருந்துட்டு வர்றது வழக்கமாம். மகனோட போய் இருக்கலாம்தான். ஆனா இங்கே இவுங்க உதவியை எதிர்பார்த்துநிக்கறவங்க எங்கே போவாங்க? தனியா இருந்தா எல்லோருக்கும் அவுங்கவுங்க சுதந்திரம் இல்லையா?


இன்னிக்கு வெள்ளியாச்சே. நீங்களும் போகணுமில்லையா? நாங்களும் கிளம்பறொமுன்னு சொன்னோம். 'இன்னிக்குப் போகலை. பேரக்குழந்தை வேற எங்கோ வெளியே போயிருக்காங்க'ன்னுட்டாங்க. அப்புறம்? பேசாம அங்கியேரொம்ப நேரம் டேராப் போட்டுட்டோம். பாருங்க எனக்கு எப்படி அமைஞ்சதுன்னு!


ரெண்டுமூணு ஃபோட்டோ ஆல்பம் கொண்டுவந்து கொடுத்தாங்க. ரொம்பப் பழசு. தொட்டாவே கிழிஞ்சுரும். பத்திரமாத் திறந்தேன். அட......பெரிய பெரிய ரங்கோலிக் கோலங்கள். கோலம் மட்டுமில்லை, ப்ரிட்டிஷ் அரச கிரீடம், காந்தி,தேசியக் கொடி, இன்னும் சில நிகழ்வுகள்னு காட்சி கண்ணுமுன்னாலெ விரியுது. காட்சி மட்டுமா என் கண்ணும்தான்!


இது நேரு, இதோ முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, இன்னும் அப்ப இருந்த பெரிய தலைங்க.இப்படி அடுக்கடுக்கா படங்கள். நம்ம எலிஸபெத் ராணியம்மாகூட இருக்காங்க. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள். சாந்தாம்மாஅப்ப இளவயது சாந்தா. அழகா இருக்காங்க. ரங்கோலிக் குவீன்!


இதெல்லாம் எப்பேர்ப்பட்ட ஆவணங்கள். பத்திரப்படுத்தணுமேன்னு ஆதங்கமா இருந்துச்சு. பேசாம எல்லாத்தையும் ஸ்கேன் செஞ்சு சிடியிலே போட்டுவச்சுருங்கன்னு சொன்னேந்தான். மறக்காம செஞ்சாங்கன்னா புண்ணியமாப் போகும்.பழுதாப் போனா மறுபடிக் கிடைக்குமா? மதுகிட்டேயும் சொல்லி வச்சிருக்கேன்.


அந்தக் காலத்துலேயே சாந்தம்மா, காதல் கல்யாணம். காதல் கணவனுக்காக மீன் சமைக்கவும் தயங்காத மனசு. பக்கா வெஜிடேரியன் நம்ம சாந்தம்மா. ஒரு கட்டத்துலே குடும்பத்துலே வன்முறைகள் அளவுக்கு மீறுனப்ப, தைரியமாமுடிவெடுத்து விவாகரத்து செஞ்சுக்கிட்டாங்க. அவுங்க படிப்பும், அரசாங்க உத்தியோகமும் இப்படி ஒரு நல்லமுடிவெடுக்க உதவியா இருந்துருக்கு. ஒரே மகன். 'ஏரியல் வியூ' புகைப்படங்களும், வீடியோக்களும் எடுக்கறதுலேநிபுணர். அமெரிக்காவுக்குப் போய் இதுக்காக ஸ்பெஷலாப் படிச்சிட்டு வந்துருக்கார். இந்தியாவிலேயே இப்படிப்பட்டவேலைகளுக்கு இவர்தான் நம்பர் 1. வாசல்லே இருக்கற புள்ளையாரும் இப்படி ஒரு ஷூட்டிங் ஸ்பாட்லே கால்லெ இடறுன கல்தானாம். அப்புறம் என்னன்னு பார்த்தாப் பிள்ளையார்!


கோயிலுக்கெல்லாம் போறதில்லையாம். சாமி மனசுலெ இருக்கார். அவரை அங்கே கும்பிட்டாப்போதும்னு சொல்லிட்டாங்க.சாஸ்த்திர சம்பிரதாயங்கள் எல்லாம் கடைப்பிடிக்கறதில்லை. ஆனா உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு இதோன்னுஆறுதல் கொடுக்க எப்பவும் தயார். இதைவிடவா ... கோயில் குளமெல்லாம்? தயை இருக்கற இடத்துலே சாமி கட்டாயம் இருப்பாரில்லையா?


ரிட்டயர்டு வாழ்க்கையை ரொம்பப் பயனுள்ளதா அமைச்சுக்கிட்டு இருக்காங்க. எக்ஸ்நோரா இண்ட்டர்நேஷனல் செனட்டர், சி,ஐ.டி. நகர் இன்னொவேடர்ஸ் க்ளப் பிரெஸிடெண்ட் ன்னு இன்னும் புள்ளி பயங்கர பிஸிதான்.நாங்க இருந்தப்பவே ஃபோனுங்க வந்துக்கிட்டே இருக்கு. என்ன ஏதுன்னு விசாரிச்சு செய்யவேண்டியதைக் குறிப்பெடுத்துக்கிட்டேதான் எங்ககிட்டெ பேசுனாங்க.


உள் அறையிலே விதவிதமான ஹெலிக்காப்டர் மாடல்கள் சுவத்துலே அலங்காரமா இருக்கு. சினிமாக் காட்சிகளுக்கு இதையெல்லாம் சிலப்பக் கொண்டு போறாங்களாம். முந்தி அஜீத் அடிக்கடி வர்றது வழக்கமாம். இப்ப நம்ம 'மேடி' எப்பவாவது வந்து இதையெல்லாம் எடுத்துவச்சுப் பார்த்துட்டுப் போறதுண்டாம்.


பேச்சு பலவிஷயத்தைச் சுத்திப் போய்க்கிட்டு இருந்தப்ப, மரணத்தைப் பத்தியும் பேசுனோம். ரொம்ப நாள் எல்லாம்இருக்கவேணாம். கைகால் நல்லா இருக்கப்பவே பிறருக்குக் கஷ்டம் கொடுக்காமப் போயிரணுமுன்றது என் விருப்பம்னு நான் சொன்னதும், சாந்தாம்மாவும் அதெதான் அவுங்க ஆசையுமுன்னு சொன்னாங்க. என்னைப்போலவே நினைக்கிறவங்களைப் பார்த்ததும் எனக்கு அவுங்க மேலெ இன்னும் அன்பும் மதிப்பும் கூடிப்போச்சுங்க.


பேசிக்கிட்டு இருக்கறப்பவே, ஸ்வீட், ஜூஸ்ன்னு கொண்டுவந்து வச்சாங்க. இதுக்குள்ளே ஜீனாவுக்குத் தெரிஞ்சுபோச்சு,அவுங்க க்ரூப் ஆளு வந்துருக்கேன்னு. மெதுவா உள்ளெ வந்து என் பக்கத்துலே காலடியிலே படுத்துக்கிச்சு. கண்ணுதான்தெரியாதே தவிர மூக்கும் காதும் ரொம்ப ஷார்ப். ஸ்வீட்டுன்னா உயிராம். கொஞ்சம் ஸ்வீட் எடுத்துக் கீழே வச்சவுடனெ
'டக்'னு எழுந்து வந்து தின்னாச்சு!


இதுக்குள்ளே புள்ளைங்களும் ட்யூஷன் முடிச்சுட்டாங்க. உள்ளெ வந்து சொல்லிட்டுப் போனாங்க. கல்விக்கண்ணைத்திறந்துவைக்கறது எவ்வளோ மகத்தான சேவை. நம்ம மதுவும், இன்னும் சில தோழிகளும் இதுக்குத் தோள் கொடுத்துஉதவி செய்யறதை நினைச்சா எனக்குச் சந்தோஷமா இருக்கு.


அடுத்தமுறை இந்தியா வரும்போது இன்னும் கொஞ்சநேரம் கூடுதலா இவுங்களோடு பேசணுமுன்னு அப்பவே தீர்மானிச்சுக்கிட்டேன். கிளம்பறப்ப சுவத்துலே மாட்டியிருந்த மகனோட குடும்பப்படம் கவனத்தை இழுத்துச்சு.ரெண்டு குழந்தைகள்,மகன் & மருமகள். இவுங்க மருமகளும் ரொம்ப பிஸியானவங்கதான், யாருன்னு சொல்லலையே. நம்ம செளகார் ஜானகியம்மாவோட பேத்தி வைஷ்ணவிதான்.

Tuesday, April 25, 2006

நன்றி தேன்கூடே!

நன்றி தேன்கூடே!

தேன்கூட்டுக்குள்ளே போனால், ' இன்றைய வலைப்பதிவு' எங்கியோ பார்த்தமுகமா இருக்கேன்னு
கவனிச்சா.... அட. அது நாந்'தேன்'.

மக்கள்ஸ் யாராவது கவனிக்காம வுட்டுட்டா? அதுக்குத்தான் இந்தப் பதிவு.

ஆமாம். வாசகர் பரிந்துரைன்னு போட்டுருக்கே, நம்மை யாரு பரிந்து உரைச்சிருப்பாங்க? ஹூம்...



ச்சும்மா ஒரு விளம்பரம்தான்:-))))

பள்ளிக்கொடம் போகையிலே

பயண விவரம் பகுதி 20முன் குறிப்பு:

இதுக்கு முன்னாலே வந்த தலைப்பு இல்லாத இடத்துலே இருக்கும் படங்களுக்கு இது பதிவு:-))))


நீங்க ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? நம்ம எல்லாருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கு. எங்கியாவது போய் நாலைஞ்சு
நாள் சேர்ந்தாப்புலெ தங்கறோமுன்னு வச்சுக்குங்க, இன்னின்ன வேலை, இந்தந்த நேரத்துக்குன்னு ரொட்டீனா செய்யப்
பழகிடறோம். அதுவும் ஒரு மாசம்போல இருக்கோமுன்னு வச்சுக்குங்க, அவ்வளோதான். வாழ்க்கைபூராவும் அங்கெயே
இருந்தமாதிரி ஆயிருதுல்லே?

எங்க இவர் இருந்தப்ப ஒரு பேட்டர்ன். இப்ப வேற ஒண்ணு. காலையிலே எழுந்தமா, குளிச்சு முடிச்சுக் கோவிலுக்குப்
போனமா, அங்கே இருந்து ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எதாவது ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போனமா, சாப்புட்டுட்டு வெளியே வந்தவுடனே
பக்கத்துலெ இருக்கற பெட்டிக்கடையிலே பேப்பர் வாங்குனமா( அதெப்படிங்க, எல்லா சாப்பாட்டுக்கடைக்குப் பக்கத்துலெயும்
ஒரு பெட்டிக்கடை கட்டாயம் இருக்கு?) வீட்டுக்கு வந்து அதை மேய்ஞ்சோமா, மிச்சம் இருக்கற நேரத்துக்கு டிவி
ரிமோட்டை வச்சுக்கிட்டு தாவித்தாவிக்கிட்டே இருந்தமான்னு..........

நான் டிவி பாக்கற ஆளு இல்லேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்லே அது இங்கேதான். சிங்காரச் சென்னையிலே
இந்தமுறை நல்லாவே பார்த்தேன். கொசு புடுங்குதுன்னு சிலசமயம் தூக்கம் கலைஞ்சு எழுந்து வந்து டிவி போட்டாலும்
விஜய், விக்ரமுன்னு யாராவது ஆடிக்கிட்டேதான் இருக்காங்க. அக்கம்பக்கத்துக்குத் தொந்திரவுன்னு 'ம்யூட்'செஞ்சுடறோமா
எல்லாம் படா தமாஷ். 24 மணிநேரத் தொலைக்காட்சி தேவைதானா?

ஒரு சானல்லே விடாம படங்கள் ஓடுது. யஜமான் படத்தையே வேறவேற நாளிலே அஞ்சஞ்சு நிமிஷம் பார்க்கும்படி
ஆச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, அதுவும் ஒரே ஸீன்! ஐஸ்வர்யா பொய்ப்புகார் கொடுக்கறதும், மீனா ஓரமா ஒளிஞ்சு அதைக் கேக்கறதும்,
சாட்டையாலெ நாயகன் அடி வாங்கறதும்...... சத்தியராஜ் படங்களும் இதே மாதிரிதான்..... ரெண்டு மனைவி (அம்பிகா & கோவை சரளா)
வர்ற படம் பெங்களூருலேகூட விடாம துரத்துச்சுன்னாப் பாருங்க:-)

காலையிலே தமிழில் சுப்ரபாதம் சொல்லிக்கிட்டுத் திருப்பதி கோயில் காமிக்கறது பிடிச்சிருந்துச்சு. எந்த சேனலுன்னு தெரியலை,
தினம் ஒரு கோயில் காமிச்சாங்க.( நேர்லே போறது போதாதுன்னு இப்படி டிவி தரிசனம் வேற எனக்கு!) பொதிகையிலே
கர்நாடக சங்கீதம் சிலநாள், அப்புறம் மலையாள சேனல்ன்னு கொஞ்சம்கொஞ்சம் பார்த்தேன். தெலுங்குலேயும்
இதேதான், அவுங்க 'பாட்டு சீன்'களிலே கலர்ஸ் ரொம்ப 'காடி'யா இருந்துச்சு. ஆனா ப்ரிண்ட் பளிச்சுன்னு இருக்குங்க.

தங்கவேட்டையும் நாலு மொழிகளில்...... தமிழில் மட்டும் பங்கெடுக்கறவங்க கொஞ்சம் வழிச்சல்..... நகைநட்டெல்லாம்
விளக்கி விளக்கிச் சொல்றாங்க. தங்கம் விக்கற விலையிலே வாங்குனாலும்......

அக்கம்பக்கத்துலே சில ப்ளாட்காரங்களும் முந்தியே பழக்கம்ன்றதாலே அவுங்களும் பேச்சுக் கச்சேரிக்கு வந்துருவாங்க.
வீட்டைச் சுத்தம் செய்ய அவுங்களோட உதவியாளர்களை அனுப்பிவச்சுப் புண்ணியம் தேடிக்கிட்டாங்க.

மக்களுக்கு என்னென்ன நம்பிக்கை எப்படிஎப்படி இருக்குதுன்னுக் கவனிச்சுப் பாக்கறதுகூட ஒரு சுவையான விஷயம்.
ஒரு நாள் காலையிலே கதவைத்திறந்தப்ப., எதிர்வீட்டுக் கதவுலே என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. பச்சை மிளகாய்
தோரணம்( நல்லா நீட்டமா இருக்கற மிளகாய்) அப்புறம் ஒரு கொத்து காய்ஞ்சமிளகாய், கூடவே ஒரு எலுமிச்சம்பழம்!
சமைக்கிறப்ப ஒரு மிளகாய் தேவைப்பட்டாச் சட்டுன்னு எடுத்துக்கலாம். நல்ல ஐடியாதான். அப்புறம் பக்கத்து வீட்டம்மா
சொன்னாங்க, அதை வச்சா திருஷ்டி போயிருமாம்! ஓஓஓஓ...............

வியாழக்கிழமை பள்ளிக்கூடம் போய்ப் பார்க்கலாமுன்னு முடிவாச்சு. அருணாகிட்டே பேசுனப்ப, ஊருலே இருந்து
தங்கை வந்துருக்காங்க, அவுங்களையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க. மதுவும் ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டாங்க.
இந்தப்பள்ளிக்கூடம் ஒரு சேவையா நடந்துக்கிட்டு இருக்கு. நம்ம வலைஞர்கள் பார்த்து அவுங்க பதிவுகளிலே எழுதுனா
மக்களோட கவனம் கிடைக்குமேன்னு எனக்குத் தோணுச்சு. பொண்ணுங்க ஜமா சேர்ந்து கிளம்புனா, புடவை நகைன்னு
லூட்டி தான்னு நினைக்கிறவங்க இதைக் கண்டிப்பாக் கவனிங்க. நாங்க அப்படியெல்லாம் இல்லீங்க. புதன் ராத்திரி நம்ம
அருணா போன்லெ கூப்புட்டு, அவுங்க வரமுடியாத நிலை, வீட்டுலே விசிட்டர்ஸ்ன்னு சொன்னாங்க. நாலு ரெண்டாச்சு.


நாங்களே நாலுபேர்ன்றதாலெ கார்லே இடம் இருக்காதேன்னு மலர்விழி மட்டும் தனியா வந்தாங்க. மதுவீட்டுக்குப்
போய் அவுங்களையும் கூட்டிக்கிட்டு மூட்டைக்காரன் சாவடி, தொரப்பாக்கம் பள்ளிக்கூடத்துக்குப் போனோம்.
பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியர் வேணுமுன்னு விளம்பரம் செஞ்சிருந்தாங்களாம். வந்த விண்ணப்பங்கள்
பார்த்துட்டுத் திருமதி மஞ்சுளாவை நேர்காணலுக்குக் கூப்புட்டு இருக்காங்க. மலர்விழி, அவுங்க கணவர் டாக்டர்
அசோக் இருவருமே நாப்பதைத் தாண்டவே இன்னும் நாலைஞ்சு வருசம் இருக்கு. சின்ன வயசுக்காரங்களைப்
பார்த்ததும் மஞ்சுளாவுக்கு சந்தேகம். இவுங்க என்னா ஸ்கூல் நடத்தி..... நாம என்னா வேலை செஞ்சு....ன்னு
நினைச்சிருக்காங்க. ஆனாப் பாருங்க இவுங்க திட்டங்கள், பள்ளிக்கூடத்தைப் பத்துனவிவரங்கள் எல்லாம் கேட்டபிறகு
'இதுதான் சரியான இடம்'ன்ற 'ஹோப்' வந்துருச்சு. வராம இருக்குமா?ஹோப் பவுண்டேஷன் நடத்துற பள்ளிக்கூடமாச்சே.

நிதிநிலைமையைப் புரிஞ்சுக்கிட்டதும் கேக்க நினைச்சிருந்த சம்பளத்தையும் கேக்காம, குறைச்சலான சம்பளத்துக்கே
வேலையை ஒப்புக்கிட்டாங்க. ஆனா பார்ட் டைமா வாரம் மூணரை நாள்தான் வேலைக்கு வரமுடியும்னு சொல்லிட்டாங்க.

மஞ்சுளாவோட கணவர் ஒரு தனியார் கம்பெனியிலே உயர்பதவியிலே இருக்கார். அவுங்களோட சொந்தக்காரங்க பலரும்
நல்ல நிலமையிலே இருக்கறதாலே அவுங்ககிட்டே எல்லாம் பள்ளியோட நிலையை எடுத்துச் சொல்லி மாசாமாசம்
ஒரு நல்ல தொகை வசூலிச்சுக் கொடுக்கறதுமில்லாம, தன்னோட சம்பளப்பணத்துலே ஒரு பகுதியையும் பள்ளிக்கூடத்துக்கே
செலவு செய்யற புதுவிதத் தலைமை ஆசிரியை இவுங்க. ஆனா சொன்ன பேச்சைக் காப்பாத்தலைங்க. பார்ட் டைமுன்னு
சொல்லிக்கிட்டு இப்ப வாரமுச்சூடும் அங்கெயே இருக்காங்க!

இதுக்குள்ளெ ஸ்கூல் வந்துருச்சு. நாங்க உள்ளெ நுழையறோம், நாலுச் சின்னப் பிஞ்சுங்க மாலை ஏந்திக்கிட்டு
ஓடிவருதுங்க. நாங்க ரெண்டு பேர்தானே? அருணாதான் மிஸ் செஞ்சுட்டாங்க..நான் உடனே மலருக்கும், மஞ்சுளாவுக்கும்
மாலையைப் போடுங்கன்னு சொல்லி அவுங்களுக்கும் பதில் மரியாதையைப் பண்ணிட்டேன்:-)

பக்காவா புரோக்ராம் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. யூகேஜிப் பொண்ணு கீர்த்திகா வரவேற்பு உரை,
எல்கேஜி பசங்க ரெண்டு பேர் ரைம்ஸ், அப்புறம் பெரிய மாணவ மாணவிகள் ஸ்பீச்.

ஒண்ணாப்புப் படிக்கிற இம்மானுவேல் -தன்னுடைய பள்ளிக்கூடம்
மூணாப்பு சரத் குமார் - ஏன் என் பள்ளியை விரும்பிகின்றேன்?
மூணாப்பு மைக்கேல் - நான் என்னவாக விரும்புகின்றேன்
நாலாப்பு இந்துமதி - என்ன செய்ய விரும்புகிறேன்?
அஞ்சாப்பு நித்தியா - என் உயர்வான நோக்கம்
நாலாப்பு & அஞ்சாப்பு மாணவிகள் - நடன விருந்து (7 பொண்ணுங்களும், ஒரே ஒரு பையனும்)
ஒண்ணாப்பு ஜாஸ்மின் - நன்றி உரை

சொல்ல மறந்துட்டேனே, எல்லா ஸ்பீச்சும் ஆங்கிலத்துலேதான். இது ஒரு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்.

மொத்தம் எட்டு டீச்சருங்க. எல்கேஜியிலே இருந்து அஞ்சாப்பு வரை இப்ப இருக்கு. 'ஏழைபாழைங்களுக்கும்
இங்கிலீஷ் மீடியம்' ன்றது இதுவரை நினைச்சுப் பாக்கமுடியாத கனவா இருந்தது. இப்ப நனவாகி இருக்கு.

180 புள்ளைங்க மொத்தம். இடவசதி போதாது. ஆனா ஓலைக்கூரையெல்லாம் இல்லை. பக்கா கல் கட்டிடம்.
ஒரு மாடிவீட்டை வாடகைக்கு எடுத்துருக்காங்க. ச்சின்னச் சின்ன அறைகள். வகுப்பறைகளைப் பார்வையிட்டப்ப,
'ஸார்டீன் இன் எ கேன்' ஞாபகம் வந்ததைத் தடுக்க முடியலை. விளையாட்டு மைதானமெல்லாம் இல்லை.
இன்னும் ஏகப்பட்ட 'இல்லைகள்' இருந்தாலும் பிள்ளைகள் மகிழ்ச்சியாவே இருந்தாங்க. ச்சின்னச்சின்னதா
வாழ்த்து அட்டைகள் செஞ்சு நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டுக் கொடுத்து எங்க கைகளை மட்டுமில்லை, மனசையும்
நிறைச்சுட்டாங்க.

திரும்பி வரும்போது அந்த ஏரியாவை ஒரு வலம் வந்தோம். அடுக்கு மாடிக் கட்டிடங்கள். ஆனா அழுக்கா இருக்கு.
பத்து வருசம்தான் ஆச்சாம். கொஞ்சம் மெயிண்டனன்ஸ் செஞ்சா நல்லதுதான். புள்ளைங்க படிச்சுவந்து செய்யறதுக்கு
காத்துக்கிட்டு இருக்கோ என்னவோ?


பி.கு:தமிழ்மணத்துலே 'அளி'க்கமுடியாததால் மறுபடியும் போட்டுருக்கேன். பார்க்கலாம் என்னாகுதுன்னு.

ப்ளொக்கருக்கு என்னமோ சரியில்லை. தலைப்பை முழுங்கிச்சுன்னு பார்த்தா
இப்பப்பதிவையும் பாதிக்குமேலே முழுங்கிருச்சு.
அகோரப் பசியோ?






பயண விவரம் பகுதி 20


நீங்க ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? நம்ம எல்லாருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கு. எங்கியாவது போய் நாலைஞ்சுநாள் சேர்ந்தாப்புலெ தங்கறோமுன்னு வச்சுக்குங்க, இன்னின்ன வேலை, இந்தந்த நேரத்துக்குன்னு ரொட்டீனா செய்யப்பழகிடறோம். அதுவும் ஒரு மாசம்போல இருக்கோமுன்னு வச்சுக்குங்க, அவ்%u0BB

Monday, April 24, 2006

பள்ளிக்கொடம் போகையிலே






பயண விவரம் பகுதி 20


நீங்க ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? நம்ம எல்லாருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கு. எங்கியாவது போய் நாலைஞ்சுநாள் சேர்ந்தாப்புலெ தங்கறோமுன்னு வச்சுக்குங்க, இன்னின்ன வேலை, இந்தந்த நேரத்துக்குன்னு ரொட்டீனா செய்யப்பழகிடறோம். அதுவும் ஒரு மாசம்போல இருக்கோமுன்னு வச்சுக்குங்க, அவ்வளோதான். வாழ்க்கைபூராவும் அங்கெயேஇருந்தமாதிரி ஆயிருதுல்லே?


எங்க இவர் இருந்தப்ப ஒரு பேட்டர்ன். இப்ப வேற ஒண்ணு. காலையிலே எழுந்தமா, குளிச்சு முடிச்சுக் கோவிலுக்குப் போனமா, அங்கே இருந்து ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எதாவது ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போனமா, சாப்புட்டுட்டு வெளியே வந்தவுடனே பக்கத்துலெ இருக்கற பெட்டிக்கடையிலே பேப்பர் வாங்குனமா( அதெப்படிங்க, எல்லா சாப்பாட்டுக்கடைக்குப் பக்கத்துலெயும்ஒரு பெட்டிக்கடை கட்டாயம் இருக்கு?) வீட்டுக்கு வந்து அதை மேய்ஞ்சோமா, மிச்சம் இருக்கற நேரத்துக்கு டி.வி ரிமோட்டை வச்சுக்கிட்டு தாவித்தாவிக்கிட்டே இருந்தமான்னு...........


நான் டிவி பாக்கற ஆளு இல்லேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்லே அது இங்கேதான். சிங்காரச் சென்னையிலே இந்தமுறை நல்லாவே பார்த்தேன். கொசு புடுங்குதுன்னு சிலசமயம் தூக்கம் கலைஞ்சு எழுந்து வந்து டிவி போட்டாலும்விஜய், விக்ரமுன்னு யாராவது ஆடிக்கிட்டேதான் இருக்காங்க. அக்கம்பக்கத்துக்குத் தொந்திரவுன்னு 'ம்யூட்'செஞ்சுடறோமாஎல்லாம் படா தமாஷ். 24 மணிநேரத் தொலைக்காட்சி தேவைதானா?


ஒரு சானல்லே விடாம படங்கள் ஓடுது. யஜமான் படத்தையே வேறவேற நாளிலே அஞ்சஞ்சு நிமிஷம் பார்க்கும்படிஆச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, அதுவும் ஒரே ஸீன்! ஐஸ்வர்யா பொய்ப்புகார் கொடுக்கறதும், மீனா ஓரமா ஒளிஞ்சு அதைக் கேக்கறதும்,சாட்டையாலெ நாயகன் அடி வாங்கறதும்...... சத்தியராஜ் படங்களும் இதே மாதிரிதான்..... ரெண்டு மனைவி (அம்பிகா & கோவை சரளா)வர்ற படம் பெங்களூருலேகூட விடாம துரத்துச்சுன்னாப் பாருங்க:-)


காலையிலே தமிழில் சுப்ரபாதம் சொல்லிக்கிட்டுத் திருப்பதி கோயில் காமிக்கறது பிடிச்சிருந்துச்சு. எந்த சேனலுன்னு தெரியலை,தினம் ஒரு கோயில் காமிச்சாங்க.( நேர்லே போறது போதாதுன்னு இப்படி டிவி தரிசனம் வேற எனக்கு!) பொதிகையிலே கர்நாடக சங்கீதம் சிலநாள், அப்புறம் மலையாள சேனல்ன்னு கொஞ்சம்கொஞ்சம் பார்த்தேன். தெலுங்குலேயும்இதேதான், அவுங்க 'பாட்டு சீன்'களிலே கலர்ஸ் ரொம்ப 'காடி'யா இருந்துச்சு. ஆனா ப்ரிண்ட் பளிச்சுன்னு இருக்குங்க.


தங்கவேட்டையும் நாலு மொழிகளில்...... தமிழில் மட்டும் பங்கெடுக்கறவங்க கொஞ்சம் வழிச்சல்..... நகைநட்டெல்லாம் விளக்கி விளக்கிச் சொல்றாங்க. தங்கம் விக்கற விலையிலே வாங்குனாலும்......


அக்கம்பக்கத்துலே சில ப்ளாட்காரங்களும் முந்தியே பழக்கம்ன்றதாலே அவுங்களும் பேச்சுக் கச்சேரிக்கு வந்துருவாங்க.வீட்டைச் சுத்தம் செய்ய அவுங்களோட உதவியாளர்களை அனுப்பிவச்சுப் புண்ணியம் தேடிக்கிட்டாங்க.
மக்களுக்கு என்னென்ன நம்பிக்கை எப்படிஎப்படி இருக்குதுன்னுக் கவனிச்சுப் பாக்கறதுகூட ஒரு சுவையான விஷயம்.ஒரு நாள் காலையிலே கதவைத்திறந்தப்ப., எதிர்வீட்டுக் கதவுலே என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. பச்சை மிளகாய்தோரணம்( நல்லா நீட்டமா இருக்கற மிளகாய்) அப்புறம் ஒரு கொத்து காய்ஞ்சமிளகாய், கூடவே ஒரு எலுமிச்சம்பழம்!சமைக்கிறப்ப ஒரு மிளகாய் தேவைப்பட்டாச் சட்டுன்னு எடுத்துக்கலாம். நல்ல ஐடியாதான். அப்புறம் பக்கத்து வீட்டம்மாசொன்னாங்க, அதை வச்சா திருஷ்டி போயிருமாம்! ஓஓஓஓ...............


வியாழக்கிழமை பள்ளிக்கூடம் போய்ப் பார்க்கலாமுன்னு முடிவாச்சு. அருணாகிட்டே பேசுனப்ப, ஊருலே இருந்து தங்கை வந்துருக்காங்க, அவுங்களையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க. மதுவும் ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டாங்க.இந்தப்பள்ளிக்கூடம் ஒரு சேவையா நடந்துக்கிட்டு இருக்கு. நம்ம வலைஞர்கள் பார்த்து அவுங்க பதிவுகளிலே எழுதுனாமக்களோட கவனம் கிடைக்குமேன்னு எனக்குத் தோணுச்சு. பொண்ணுங்க ஜமா சேர்ந்து கிளம்புனா, புடவை நகைன்னுலூட்டி தான்னு நினைக்கிறவங்க இதைக் கண்டிப்பாக் கவனிங்க. நாங்க அப்படியெல்லாம் இல்லீங்க. புதன் ராத்திரி நம்மஅருணா போன்லெ கூப்புட்டு, அவுங்க வரமுடியாத நிலை, வீட்டுலே விசிட்டர்ஸ்ன்னு சொன்னாங்க. நாலு ரெண்டாச்சு.


நாங்களே நாலுபேர்ன்றதாலெ கார்லே இடம் இருக்காதேன்னு மலர்விழி மட்டும் தனியா வந்தாங்க. மதுவீட்டுக்குப்போய் அவுங்களையும் கூட்டிக்கிட்டு மூட்டைக்காரன் சாவடி, தொரப்பாக்கம் பள்ளிக்கூடத்துக்குப் போனோம்.பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியர் வேணுமுன்னு விளம்பரம் செஞ்சிருந்தாங்களாம். வந்த விண்ணப்பங்கள்பார்த்துட்டுத் திருமதி மஞ்சுளாவை நேர்காணலுக்குக் கூப்புட்டு இருக்காங்க. மலர்விழி, அவுங்க கணவர் டாக்டர்அசோக் இருவருமே நாப்பதைத் தாண்டவே இன்னும் நாலைஞ்சு வருசம் இருக்கு. சின்ன வயசுக்காரங்களைப்பார்த்ததும் மஞ்சுளாவுக்கு சந்தேகம். இவுங்க என்னா ஸ்கூல் நடத்தி..... நாம என்னா வேலை செஞ்சு....ன்னுநினைச்சிருக்காங்க. ஆனாப் பாருங்க இவுங்க திட்டங்கள், பள்ளிக்கூடத்தைப் பத்துனவிவரங்கள் எல்லாம் கேட்டபிறகு'இதுதான் சரியான இடம்'ன்ற 'ஹோப்' வந்துருச்சு. வராம இருக்குமா?ஹோப் பவுண்டேஷன் நடத்துற பள்ளிக்கூடமாச்சே.


நிதிநிலைமையைப் புரிஞ்சுக்கிட்டதும் கேக்க நினைச்சிருந்த சம்பளத்தையும் கேக்காம, குறைச்சலான சம்பளத்துக்கேவேலையை ஒப்புக்கிட்டாங்க. ஆனா பார்ட் டைமா வாரம் மூணரை நாள்தான் வேலைக்கு வரமுடியும்னு சொல்லிட்டாங்க.


மஞ்சுளாவோட கணவர் ஒரு தனியார் கம்பெனியிலே உயர்பதவியிலே இருக்கார். அவுங்களோட சொந்தக்காரங்க பலரும்நல்ல நிலமையிலே இருக்கறதாலே அவுங்ககிட்டே எல்லாம் பள்ளியோட நிலையை எடுத்துச் சொல்லி மாசாமாசம் ஒரு நல்ல தொகை வசூலிச்சுக் கொடுக்கறதுமில்லாம, தன்னோட சம்பளப்பணத்துலே ஒரு பகுதியையும் பள்ளிக்கூடத்துக்கேசெலவு செய்யற புதுவிதத் தலைமை ஆசிரியை இவுங்க. ஆனா சொன்ன பேச்சைக் காப்பாத்தலைங்க. பார்ட் டைமுன்னுசொல்லிக்கிட்டு இப்ப வாரமுச்சூடும் அங்கெயே இருக்காங்க!


இதுக்குள்ளெ ஸ்கூல் வந்துருச்சு. நாங்க உள்ளெ நுழையறோம், நாலுச் சின்னப் பிஞ்சுங்க மாலை ஏந்திக்கிட்டுஓடிவருதுங்க. நாங்க ரெண்டு பேர்தானே? அருணாதான் மிஸ் செஞ்சுட்டாங்க..நான் உடனே மலருக்கும், மஞ்சுளாவுக்கும்மாலையைப் போடுங்கன்னு சொல்லி அவுங்களுக்கும் பதில் மரியாதையைப் பண்ணிட்டேன்:-)


பக்காவா புரோக்ராம் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. யூகேஜிப் பொண்ணு கீர்த்திகா வரவேற்பு உரை,எல்கேஜி பசங்க ரெண்டு பேர் ரைம்ஸ், அப்புறம் பெரிய மாணவ மாணவிகள் ஸ்பீச்.

ஒண்ணாப்புப் படிக்கிற இம்மானுவேல் -தன்னுடைய பள்ளிக்கூடம்
மூணாப்பு சரத் குமார் - ஏன் என் பள்ளியை விரும்பிகின்றேன்?
மூணாப்பு மைக்கேல் - நான் என்னவாக விரும்புகின்றேன்
நாலாப்பு இந்துமதி - என்ன செய்ய விரும்புகிறேன்?
அஞ்சாப்பு நித்தியா - என் உயர்வான நோக்கம்
நாலாப்பு & அஞ்சாப்பு மாணவிகள் - நடன விருந்து (7 பொண்ணுங்களும், ஒரே ஒரு பையனும்)
ஒண்ணாப்பு ஜாஸ்மின் - நன்றி உரை


சொல்ல மறந்துட்டேனே, எல்லா ஸ்பீச்சும் ஆங்கிலத்துலேதான். இது ஒரு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்.


மொத்தம் எட்டு டீச்சருங்க. எல்கேஜியிலே இருந்து அஞ்சாப்பு வரை இப்ப இருக்கு. 'ஏழைபாழைங்களுக்கும்இங்கிலீஷ் மீடியம்' ன்றது இதுவரை நினைச்சுப் பாக்கமுடியாத கனவா இருந்தது. இப்ப நனவாகி இருக்கு.


180 புள்ளைங்க மொத்தம். இடவசதி போதாது. ஆனா ஓலைக்கூரையெல்லாம் இல்லை. பக்கா கல் கட்டிடம்.ஒரு மாடிவீட்டை வாடகைக்கு எடுத்துருக்காங்க. ச்சின்னச் சின்ன அறைகள். வகுப்பறைகளைப் பார்வையிட்டப்ப,'ஸார்டீன் இன் எ கேன்' ஞாபகம் வந்ததைத் தடுக்க முடியலை. விளையாட்டு மைதானமெல்லாம் இல்லை.இன்னும் ஏகப்பட்ட 'இல்லைகள்' இருந்தாலும் பிள்ளைகள் மகிழ்ச்சியாவே இருந்தாங்க. ச்சின்னச்சின்னதாவாழ்த்து அட்டைகள் செஞ்சு நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டுக் கொடுத்து எங்க கைகளை மட்டுமில்லை, மனசையும்நிறைச்சுட்டாங்க.


திரும்பி வரும்போது அந்த ஏரியாவை ஒரு வலம் வந்தோம். அடுக்கு மாடிக் கட்டிடங்கள். ஆனா அழுக்கா இருக்கு.பத்து வருசம்தான் ஆச்சாம். கொஞ்சம் மெயிண்டனன்ஸ் செஞ்சா நல்லதுதான். புள்ளைங்க படிச்சுவந்து செய்யறதுக்குக் காத்துக்கிட்டு இருக்கோ என்னவோ?

தமிழ்மணத்துலே 'அளி'க்கமுடியாததால் மறுபடியும் போட்டுருக்கேன். பார்க்கலாம் என்னாகுதுன்னு.

Sunday, April 23, 2006

ஆடிய ஆட்டமென்ன?

போனவாரம் இது நடந்துச்சு. அப்ப இருந்து எழுதலாமா, வேணாமான்னு ஒரு யோசனை.


ஆரம்பகாலக் கட்டமுன்னு சொல்லப்போனா ஒரு ரெண்டு வருசத்துக்கதை. நம்ம வலைஞர்கள்நிறைய(!)பேர் அவுங்க இருக்கற இடங்களிலே,'இந்தியன் எம்பஸி'க்கு எதாவது வேலையாப் போயிட்டு அங்கே நடக்குறதை யெல்லாம்,சிரிக்க சிந்திக்கன்னு எழுதுனதைப் படிச்சிருக்கேன். அப்ப, நான் நினைச்சுக்கறது என்னன்னா, நல்லவேளை, இங்கே நியூஸியிலே இன்னும் அந்த அளவுக்கு வரலை. பரவாயில்லாம ஒரு ஒழுங்குமுறையிலேதான் நடந்துக்கிட்டு வருது'ன்னு. அதுக்கும் வச்சாருப்பா ஆப்பு!



நாங்க இங்கே வர்றதுக்கு முன்னாலெ ஃபிஜித் தீவுகளில் இருந்துருக்கோம். அங்கேதான், என் வாழ்க்கையிலே மொதமொதலா ஒரு இந்திய ஹைகமிஷனரைப் பார்த்தேன். பெரிய இடமாச்சேன்னு ஒரு பயம் இருந்துச்சுதான்.ஆனா நல்ல நட்பு உணர்வு கொண்ட குடும்பம். பந்தா இல்லாத வாழ்க்கை. நமக்கும் 'சட்'னு குளிர் விட்டுப் போச்சு.ஒருவேளை, அது ரொம்பச் சின்ன நாடு. NRI கணக்குலே பார்த்தா ரொம்பக் குறைவான ஆட்கள். அதனாலேகூடஅப்படி ஒரு ஒட்டுதல் வந்திருக்கலாம்.


இங்கே நியூஸிக்கு வந்த புதுசு. இந்தியர்கள் இருக்காங்க. ஆனா அதுலே கிட்டத்தட்ட 90 சதவீதம் குஜராத்தியர்கள்.எல்லாம் இடிஅமீன் காலத்துலே உகாண்டாலே இருந்து பிரிட்டன் போய், அங்கிருந்து இங்கே குடியேறியவங்க. அந்தக் காலக்கட்டத்துலே இங்கே குடியேறும் சட்டதிட்டங்கள் எல்லாம் கொஞ்சம் வேற மாதிரி இருந்துச்சு. இங்கிலாந்துஆட்கள் மட்டுமே வரமுடிஞ்ச காலம். அப்புறம் அக்கம்பக்கத்துத் தீவுகளான சமோவா, ஃபிஜித்தீவுன்னு கொஞ்சம் மக்கள் வந்து இங்கே சில மாசங்கள் வேலை செஞ்சுட்டுத் திரும்பப்போறது வழக்கமா இருந்துச்சு. மாணவர்களும் மேற்படிப்பை முன்னிட்டு சில வருசங்கள் தங்கிப் படிச்சுட்டுத் திரும்ப அவுங்க நாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க.மாணவர்களா வந்தாங்கன்னா, கூடவே மனைவி,பிள்ளைகளைக் கொண்டுவரலாமுன்னும் ஒரு வசதி இருந்துச்சு.


இங்கே வேலை கிடைச்சா, அதன்காரணமா குடியேற்ற உரிமை வாங்கிக்கிட்டுக் குடும்பத்தோட வந்தவங்களும் உண்டு.இந்தியாவோட இருந்த வியாபாரமும் அவ்வளவா இல்லாத காலம்தான் அது. அப்ப இங்கே இருந்த நம்ம இந்திய ஹைகமிஷனுக்கு அவ்வளவா வேலைப்பளு இல்லைதான். டூரிஸ்ட்டுங்களுக்கு விஸா கொடுக்கறதும், நல்லெண்ணத் தூதுவர்ற அதிகாரிகளையும், அமைச்சர்களையும் வரவேற்கறதும் முக்கிய வேலையா இருந்திருக்கு.


இங்கே லேபர் பார்ட்டியும் நேஷனல் பார்ட்டியும் மாறிமாறி ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்தப்பக் கொஞ்சம் கொஞ்சமா இந்தக்குடியேத்த சட்டமெல்லாம் மாறி, பாயிண்ட் சிஸ்டமுன்னு ஒண்ணு கொண்டு வந்தாங்க. படிப்பு, வயசு, அனுபவம் இப்படி ஒவ்வொண்ணும் கொஞ்சம் மார்க் போட்டு குறைஞ்சது ..... மார்க்/பாயிண்ட்ஸ் இருந்தா இங்கே வந்து குடியேறிக்கலாம்.
அந்த சமயத்துலே பல நாடுகளில் இருந்தும் மக்கள் வரத்தொடங்குனாங்க. இந்தியாவிலிருந்தும் வந்தாங்க. இங்கே இந்தியர்ங்க வந்தவுடனே அவுங்க தொடர்புள்ள சாப்பாட்டுச் சாமான்கள், நகை நட்டு, பண்டபாத்திரம்னு வியாபாரமும்பெருகத் தொடங்குச்சுங்க. இப்ப நம்ம ஹைகமிஷனுக்கு வேலை கூடிக்கிட்டே வந்துச்சு. புதுசுபுதுசா ஆளுங்களும்இந்தியாவுக்கு சுற்றுலா போறது, வியாபார நிமித்தமாப் போறதுன்னு ஆச்சுங்களா, அப்ப அவுங்களுக்கு விஸா கொடுக்கறதும்கூடிக்கிட்டே வந்துச்சுங்க.


அப்புறம் இந்திய சினிமாக்களுக்குப் பாட்டுக் காட்சிங்க எடுக்கறதுன்னு வந்து போனாங்க பாருங்க,அப்ப இங்கத்து ஜனங்களுக்கும் இந்தியாவைப் பத்தி ஒரு ஆர்வம் உண்டாச்சுங்க. மான்சூன் வெட்டிங், ப்ரைட்& ப்ரிஜுடிஸ் ன்னுஇண்டியனைஸ்டு வெள்ளைக்காரப் படங்கள் இங்கே தியேட்டரில் சக்கைப்போடு போட்டுச்சுங்க. 'பாலிவுட்'ன்றவார்த்தையை வெள்ளக்காரங்க கத்துக்கிட்டாங்கன்னா பாருங்களேன்.



மூணு நாலு வருசத்துக்கு ஒருதடவைன்னு புதுப்புது ஹைகமிஷனருங்களும் வந்து போய்க்கிட்டு நல்லா 'ஜேஜே'ன்னுதாங்கஇருந்துச்சு. இப்ப ஒரு மூணு வருசத்துக்கு முன்னாலே இருந்த ஹைகமிஷனரும் நம்ம ஊருக்கு வந்துட்டு, நம்மமக்களையெல்லாம் கண்டுக்கிட்டுத்தாங்க போனார். எல்லாம் இப்படி நல்லபடியாப் போனதுக்குக் கண்ணு வுழுந்துருச்சுங்க.


புது ஹைகமிஷனர் வந்தார். விஸா கொடுக்கறதுலே தாமதம், அங்கே கமிஷன்லே வேலை செய்யறவங்க ரொம்பகெடுபிடி காட்டறது, ஃபோன் செஞ்சு விவரம் கேக்கறவங்களை மிரட்டுறது, இன்னும் என்னென்ன விதத்துலே மக்களைக்கேவலப்படுத்த முடியுமோ அத்தனையையும் கர்ம சிரத்தையாச் செஞ்சாங்க.


ஒரு பள்ளிக்கூடத்துலே 30 பசங்க இந்தியாவுக்கு சுற்றுலா & சமூகசேவை விஷயமா போறதுக்கு விஸா கேட்டுருந்தாங்க.இதோ அதோன்னு இழுத்தடிச்சுட்டாங்க. அதுவும் விண்ணப்பம் கொடுத்து ஒரு வாரம்,இல்லே கூடிப்போனா ரெண்டு வாரத்துலேவழக்கமாக் கொடுத்துக்கிட்டு இருந்த அனுமதிங்களையெல்லாம் எவ்வளோநாள் இழுத்தடிச்சாங்கன்னா, ஆறு மாசம்! இப்ப விஸா வந்திருக்கு ஒரு பதிமூணு பேருக்கு மட்டும்.அதுக்குள்ளே அந்தப் பசங்க பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு யூனிவர்சிட்டி போயிருச்சுங்க.


ஒரு பெரிய வியாபாரத்துலே இருந்தவருக்கு விஸா தரலை. அவரை ஒரு தீவிரவாதின்னு இவுங்களே முடிவுசெஞ்சுட்டாங்களாம். இவ்வளோ ஏன், எங்க வீட்டுக்காரரோட முதலாளிக்கு விஸா அனுமதிக்கு பாஸ்போர்ட்டை அனுப்பிட்டுக் காத்திருந்தாங்க பாருங்க, அப்படி ஒரு காத்திருப்பு. பயணத்துக்கான நாளோ வந்துருச்சு. மறுநாள் கிளம்பணும். மொதநாள் வரை ஒண்ணும் நடக்கலை. ஃபோன் போட்டுக் கேட்டதுக்கு அப்படி ஒரு அவமரியாதையான பதில். கூட நம்ம இவரும் போறார். ஆனா நாங்க யார் செஞ்ச புண்ணியமோ, மூணு வருசத்துக்கு முன்னாலே அனுமதி எடுத்தப்ப 5 வருசத்துக்குச் சேர்த்து எடுத்துருந்தோம். முதலாளியோட பாஸ்போர்ட்டெல்லாம் மறுநாள் காலையிலே 10க்கு வந்து, 1 மணிக்குக் கிளம்பிப் போனார். இப்படி வியாபார நிமித்தமாப் போறவங்களுக்கு எதிராஅவுங்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆத்திரமுன்னு தெரியலை. இதனாலே ரெண்டு நாட்டுக்கும் எவ்வளோ நஷ்டமுன்னுசொல்றீங்க? அனுமதிக்கு ஸ்டாம்பு அடிக்கறதும் அவுங்க இஷ்டப்பட்டாதான். என்ன ஆச்சுன்னு நடுவிலே கேட்டோமுன்னா தொலைஞ்சோம். காதை நிறைச்சிருவாங்க.


எல்லாரும் அவுங்க பட்ட அவமானம்/கஷ்டங்கள் எல்லாம் வெளியே அவ்வளவாச் சொல்லாம இருந்த நிலையிலே இந்தப் பள்ளிக்கூடப்பசங்களைப் பத்தின விஷயம் லோகல் பேப்பருலே வெளி ஆயிருச்சு. அதுக்கப்புறம் மத்தவங்கஎல்லாம் அவுங்க அனுபவங்களைச் சொல்லப்போய் இது ரொம்ப நாள் நடக்குதுன்னு புரிஞ்சது.

அதுக்கப்புறம்தான் இந்தவிஷயத்தைப் பத்தி இந்திய அரசாங்கத்துக்குச் செய்தி போயிருக்கு. அவுங்களும் வழக்கம்போல ஆறப்போடாம,அபூர்வமா உடனே இந்த விஷயத்தைக் கையிலெடுத்து இப்ப இருக்கறவரை 'டிஸ்மிஸ்' செஞ்சுட்டாங்க. 'உடனே திரும்பஇந்தியாவுக்கு வா'ன்னும் சொல்லியாச்சு.


இப்ப இந்த வேலை நீக்கப்பட்ட ஹைகமிஷனர், 'நான் திரும்பிப்போக மாட்டேன். அங்கே போனா என் உயிருக்கு ஆபத்து.இங்கேயே அடைக்கலம் கொடுங்க'ன்னு கேட்டுக்கிட்டு வூட்டுக்குள்ளேயே ஒளிஞ்சிருக்கார். டிவிக்காரங்க விஷயம்விசாரிக்கப்போனாக்கூட வெளியே வரமாட்டேன்னு ஜன்னல்திரையை எல்லாம் மூடறார். அதையும் டிவியிலேதான் பார்த்தோமுங்க.


இது ரெண்டு அரசாங்கம் சம்பந்தப்பட்டதுன்றதாலே வீடுபுகுந்து அவரைத் தூக்கமுடியாது. என்ன இருந்தாலும் இங்கத்துப்போலீஸும் ரொம்ப 'ஸாஃப்ட்'தான். ஒரு அதி முக்கியமான பிரிவைத்தவிர மத்த போலீஸ்காரங்ககிட்டே துப்பாக்கி,கம்பு இப்படி ஒண்ணும் கிடையாதுங்க. அதிலும் நம்ம இந்திய சினிமாப் போலீஸைப் பார்த்துட்டு இவுங்களைப் பார்த்தா இவுங்கெல்லாம், 'ஹூம் ஒண்ணும் வேலைக்காகாது'ன்னு தோணிப்போகும்.


அம்மா, (எங்களுக்கும் அம்மா இருக்காங்கல்லே!) டிவிலே வந்து சொல்லிட்டாங்க, சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதைச் செய்வோம். இவருக்காக தனிப்பட்ட முறையிலே ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாரும் ஒண்ணுதான்'ன்னுசொல்லிட்டாங்க.


ஆனா ஒண்ணுங்க. இதைப் பத்தித்தெரிஞ்சபிறகு, மத்த நாடுகளிலே இருக்கற ஹைகமிஷன் கொஞ்சமாவது சுதாரிச்சிக்கும். இல்லீங்களா?

இப்பத்தைக்கு இவ்ளோதான். இதைப்பத்தி இன்னும் விவரம் வந்துச்சுன்னா அப்பச் சொல்றேன்.


பி.கு: நம்ம வாசகநண்பர் ஒருவர் இதைக் குறிச்சுத் தெரிஞ்சுக்கணுமுன்னு கேட்டார். அவரோட தனிமயில் ஐடிகிடைக்கலை. அவர் இதைப் படிப்பார் என்று நம்புவோமாக.

Friday, April 21, 2006

ஒரு டிக்கெட்

"என்னங்க, காஃபி மக்கை வச்சுட்டு வர்றதுக்குள்ளெ இப்படிக் கம்ப்யூட்டரைப் பிடிச்சுக்கிட்டீங்க. எந்திரிங்க.நான் எழுதிக்கிட்டு இருக்கறதை முடிச்சுட்டுச் சமையலைக் கவனிக்கணும்."

"அதான் நீ பகல்பூராவும் கம்ப்யூட்டர்லே இருக்கேல்ல. எனக்குத்தான் கொஞ்சம் விடேன்."

"போங்க, நீங்க உங்க லேப்டாப்லே பாருங்க. எனக்கு மனசுலே நினைச்சிருக்கறதை இப்ப எழுதலேன்னா மறந்துருவேன்"

"தமிழ்நாட்டுலெ என்ன நியூஸ்?"

"எல்லாம் எலக்ஷன் நியூஸ்தான். வேற என்ன?"

"நீதான் தினம் இ பேப்பர் பார்க்கறியே. அது எங்கேன்னு சொல்லு. நானும் கொஞ்சம் ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துக்கறேன்."

"நியூஸ்பேப்பர்னு புக்மார்க் பண்ணியிருக்கேன் அங்கே பாருங்க. அங்கெபோய் லாக் இன் செஞ்சுக்குங்க."

"அட.. இது என்னம்மா இவ்வளோ கூட்டம்? விஜயகாந்துக்கா?"

"சினிமாக்காரங்களுக்குக் கூட்டம் சேராதா என்ன? சீக்கிரம் பார்த்துட்டு எனக்குத்தாங்க."

"ஆமா, நமக்கு மாசம் எவ்வளொ அரிசி செலவாகுது? "

"அஞ்சு கிலோதான் வாங்குறோம். அதுவும் பாக்கி ஆயிருதுல்லே."

"பத்துகிலோ போதுமுன்னா இலவசமாமே. அப்ப நாம இந்தியாவுக்குத் திரும்பிப் போயிட்டோமுன்னா அரிசிக் கவலை இல்லை."

"தோடா....."

"இது ஜெயலலிதா பிரசாரம் பண்ணுற படமா? ஏன் வேனுக்குள்ளேயே இருக்காங்க? பக்கத்துலே இருக்கறதுதான்அந்தத் தங்கச்சியா? என்னா கூட்டம் என்னா கூட்டம்! ஆமாம். இதுதான் கறுப்புப் புலிங்களா? ஏ.கே.47 கையிலேஇருக்கு. இவுங்கெல்லாம் யாரு? ஒரே கலர்லே யூனிஃபார்ம் மாதிரி போட்டுக்கிட்டு வேனைச் சுத்தி நிக்கறாங்க?செக்யூரிட்டியா இல்லை ப்ளையின் க்ளோத் போலீஸா? கேண்டிடேட் மட்டும் வெளியே நின்னு ஓட்டுக்கேக்கறாரு."


"கறுப்புப்புலின்னு ஒண்ணும் இல்லீங்க.கறுப்புப்பூனைங்கதான் இருக்கு."

"ஆமாமாம். பின்னாலே போலீஸ் வேனா? சர்ச் லைட் எல்லாம் இருக்கு...... ஆமா இது......"

"ஏங்க ஒரு டிக்கெட் எடுத்துக் குடுக்குறீங்களா?"

"இரு. அடுத்த பக்கமெல்லாம் எப்படிப் பாக்கறது? ஓ இங்கேயே க்ளிக் செஞ்சுறலாமா? கோயில் தேர் வருது. இங்கேயும்கூட்டம் இருக்கு."


"ஏங்க. சாமிக்குக் கூட்டம் வராதா? ஜேஜேன்னு இருக்கு பாருங்க. சீக்கிரம் ஆவட்டுங்க"

"இண்டியா ஜெயிச்சுருச்சா? நல்ல கேமா இருந்திருக்கும்."

"ஆமாமா, இந்தியா ஜெயிச்சாத்தான் நல்ல கேம். இல்லே? ஏந்தான் இப்படிக் க்ரிக்கெட் பைத்தியம் புடிச்சுக் கிடக்கீங்களோ?"

"ஸ்ரீலங்காவுலெ பழையபடிக் கலவரமா? ம்ம்ம்ம்ம்ம்"

"சீக்கிரம் ஆகட்டுங்க."

"என்னமோ கேண்டில் கொளுத்தி வச்சுருக்கு? பள்ளிக்கூடம் அனுமதி ஆயிருச்சா? என்ன ஆச்சாம்?"

"ஒரு டிக்கெட்"

நகைக்கடையில் கன்னம் வச்சுத் திருடிட்டாங்களாமே? ஏழுகிலோ வெள்ளி....."

"ஒரு டிக்கெட்"

"இந்தப்பிள்ளைக்கு என்ன? இதய நோயா? அடப்பாவமே. டாஸ்மாக்குன்னா என்ன?"

"ஒரு டிக்கெட்"

"ஓஓஓஓஓஓஓஒ குடிக் கடையா? தண்ணி ஊத்திக் கொடுத்துடறாங்களாமா? ஹாஹாஹா......."


"ஆமாம். ஏற்கெனவெ போதையிலே கிடக்கறவங்களுக்கு எதாவது தெரியுமான்னு தண்ணி ஊத்திடறாங்க போல.அப்ப எப்படிக் கண்ணுபிடிச்சாங்களாம்?"


"கிக் வராதுல்லே?"

"ஏன் வராது? காலாலே ஓங்கி ஒரு கிக் விட்டா வந்துட்டுப் போகுது. "

"இதுதான் நீ சொல்லிக்கிட்டு இருந்த வைஷ்ணவியா? இந்த ஆளா காரணம்? ஏமாத்திட்டானாமா?"

"ஒரு டிக்கெட்"

"தெலுங்குப்படத்துலே நயன்தாரா சாதிக்கிறார். ஆ.......ங். பரவாயில்லையே!"

"அதான் தமிழ்ப்படத்துலே எல்லாரும் வந்து சாதிச்சுட்டாங்கல்லே, இனி தெலுங்குப் பக்கம் போகவேண்டியதுதானே."

"பாக்கிஸ்த்தான்லெ இந்திப்ப்டம் போடறாங்களாம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மூணாறுலே அமிதாப் ஷூட்டிங்."

"ஒரு டிக்கெட்"

"இனிமே ஜட்ஜை யுவர் ஆனர்னு சொன்னாப் போதுமாமே."

"ஏங்க, தமிழ்லே கனம் கோர்ட்டார் அவர்களேன்னு சொல்லக்கூடாதா? இதெல்லாம் நின்னு நிதானமாப் படிச்சுக்கிட்டுஇருக்கீங்க பாருங்க. சீக்கிரம் முடிங்க."

"நீதான் தினம் பார்க்கறே. எனக்கு இன்னிக்கு ஒரு நாள் விடேன், கேரளாவிலேயும் எலக்ஷன் வருதா?"

"மொபைல் ஃபோன் பெங்களூர்...... எப்படியெல்லாம் திருடறாங்க.... கில்லாடிங்க"

" ஐய்யோ......"

"தனியார் துறையில் இட ஒதுக்கீடு....."

"ஏங்க நீங்கதான் தினம் சமாச்சார் படிச்சுக்கிடறீங்கல்லே. இப்ப என்னாத்துக்கு வேணுமுன்னே என் இடத்தைபிடிச்சுக்கிடறீங்க?"

"அட. ஒருநாள் தமிழ்ப்பேப்பர் பார்க்க விடேம்மா. இங்கேபார். தங்கம் விலை சீறுதாம்...."

"தெரியுங்க. நான் அதெல்லாம் எப்பவோ பார்த்தாச்சு. அதான் நகை ஓண்ணும் கேக்காம இருக்கேன்"

"இது என்னம்மா பொம்பளைங்கெல்லாம் ஆடறாங்க?"


"அதுக்குப் பேர் குத்தாட்டம். ஆமா நாங்க ஆடுனா என்ன ? ஆம்புளைங்களே ஆடணுமா எப்பவும்?"

"சரி. ஆடும்மா நீயும் ஆடு."


"நீங்க இப்ப இடம் விடலேன்னா பேயாட்டம் ஆடுவேன்,ஆமா"


"அதான் தினம் ஆடறேல்லெ. டிஜிட்டல் பேனர்.... தேர்தல் விதிமுறைகளை மீறினால்...."


"இனி மீறினால் என்ன மீறினால்? அதான் பப்ளீக்கா லஞ்சம் கொடுக்கறேங்கறாங்களே. அரிசி, கலர் டிவி,கேபிள்னு. லட்டுக்குளே மூக்குத்தி, கொடம், காசு ரொக்கமா கொடுத்துட்டுச் சாமிப்படம் காமிச்சுச் சத்தியம்வாங்கறது எல்லாம் மாறிப்போச்சு. இப்படி மேடை போட்டு அதைத்தரேன், இதைத்தரேன்னு சொல்றதுகூடிப்போச்சு.ம்ம்ம்ம் இடத்தைக் காலி பண்ணுங்க."


"இது கார்த்திக்கா? எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?"


"டிக்கெட்"

"சரத் அம்மாகூட சேர்ந்தாச்சா? ஏனாம்?"

"டிக்கெட்"

"தேனியிலே வைகோ பிரசாரம். கூட்டம் ரொம்ப இல்லையே?"

"டிக்கெட்"

"அது என்னா டிக்கெட் டிக்கெட்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கே."

"இதபாருங்க. நானும் இங்கே பேப்பர் பார்த்துத்தான் நியூஸ் தெரிஞ்சுக்கிறேன். இதுலே, அது ஏன் இது எப்படின்னுகேட்டா எனக்கு என்ன தெரியும். ஒரு டிக்கெட் வாங்கிக்குடுத்தீங்கன்னா ஊர்ப்பக்கம் போய் என்னா ஏதுன்னு பாத்துட்டுவந்து விலாவரியாச் சொல்வேன்லே."


"ஒரு நாள், ஒரே ஒருநாள் நாட்டு நடப்பைப் பார்த்தாலெ இப்படி கிறுகிறுன்னு வருதே, தினம் இதைப் பாக்கற ஜனங்களுக்கு எப்படி இருக்கும்? யம்மா... ஆளைவிடு. இந்தா உன் கம்ப்யூட்டர்."

"அட போங்க. உங்ககிட்டே மல்லுக்கட்டி எழுத நினைச்சது மறந்தே போச்சு."


பி.கு: செய்திகளுக்கு ஆதாரம் 20/4/06 தினமலர் இ பேப்பர்.

Wednesday, April 19, 2006

கல்லத் காம் மத் கர்

கல்லத் காம் மத் கர்

ஒரு கெட்டவன், நல்லவனா ஆயிட்டப்புறம் கெட்டவனா மறுபடி மாற முடியாதாம். இப்படி ஒரு நீதியைச் சொல்ற சினிமா இது.

'மல்ட்டிபிள் ஆக்டர்'னு ஒரு புது கேட்டகிரி வந்துருக்குப்பா. ஹூம்...... வாழ்வு?

ரொம்ப நாளைக்கப்புறம் விவேக். சரி, கொஞ்சம் சிரிக்கலாமுன்னு நினைச்சால்.......விவேக் ஏமாத்திடறார்.

ஆனா, குப்பைத்தொட்டி பக்கத்துலே நின்னுக்கிட்டு இருக்கற பொண்ணு பரவாயில்லை. விவேக் 'ச்சார்செளவ் பீஸ் காம்' செய்யறப்ப அது எங்கே இருந்தாலும் (சரி வீடு, ரோடு, ரெஸ்டாரண்ட்டு இப்படி)'நீ செய்யறது கொஞ்சம்கூட சரியில்லை, வேணாம். கல்லத் காம் மத் கர்'னு சொல்றப்பவும் சரி,இதுக்கு என்ன அர்த்தம்னு விவேக் தலயைப் பிச்சுக்கறப்பவும் சரி, ஏதோ நல்லதாஒரு காமெடி ஸீன் வருதுன்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

ஆனா ஒரு சந்தேகம் க்ளியர் ஆச்சு. 'டிஷ்யூம்' படத்துலே அம்மாவா வர்றது மாளவிகான்னு போட்டுருந்துச்சுலே.நான்கூட பிரியங்கான்னு சொல்லி இருந்தேனே(-: ( ரொம்ப முக்கியம்!)
அவுங்க இந்தப் படத்திலும் அண்ணியா வர்றாங்க. டைட்டிலே அவுங்க பேரு 'அண்ணி மாளவிகா' ..... ?

வெள்ளித்திரையில் கண்டு 'கழிக்க'ப்போறீங்களா? இதோ படத்தின் பெயர்,'கள்வனின் காதலி'

ஹூம்ம்... இந்தப் பேருலெ கல்கி ஒரு கதை எழுதியிருந்தாருல்லெ?
எல்லாம் நேரம்.

சூர்யாவோட நடிப்பு( மட்டும்) கொஞ்சம் ஓக்கே. ஆனா திரையில் முகம் கொஞ்சம் கஷ்டப்படுத்துதுப்பா(-:
அது ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?


இந்த ஒரு படத்துக்காக ஒரு பதிவுன்றது கொஞ்சம் ஓவராத் தோணுச்சு. அதாலே நான் சமீபத்துலே(!)பார்த்த சில படங்களையும் சேர்த்தேச் சொல்லிடறேன்.

'டிஷ்யூம்' னு ஒரு படம்.

நல்லா இருக்கு. சினிமாவுலே வர்ற 'டூப்' ஆளுங்களைப் பத்துன கதை. அட, கதையை விடுங்க. இந்த டூப்புங்களுக்குப் படப்பிடிப்புலே எவ்வளோ ரிஸ்க். அடிபட்டுப் படுத்த படுக்கையா ஆனவங்க பேர் வெளிச்சத்துக்கு வருதா? இல்லே அப்படி ஆனப்புறம் நிரந்தர வருமானம் எதாவது கிடைக்க இன்ஷூரன்ஸ் இருக்கா?

கஷ்டம் அவுங்களுக்கு, புகழ் மட்டும் நாயகனுக்கு! நிழல் வேறு, நிஜம் வேறுன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டாத் தேவலை.

சித்திரம் பேசுதடி:

பரவாயில்லை. நாயகியின் அப்பான்னாலும் மனுஷந்தானே? வேற கோணத்துலே பார்க்கணும்.கானாப் பாட்டு ஒண்ணு வருது. என்னவோ எல்லோரும் புகழ்ந்துக்கிட்டு இருக்காங்க. இதைவிட நல்ல பாட்டுங்க கேட்ட ஞாபகம் வருது.

போட்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட்டு. இல்லீங்களா?


கோடம்பாக்கம்:

எனக்குப் பிடிச்சிருந்துச்சு. சினிமா சம்பந்தப்பட்ட படம். மொதப் படம் பண்ணுற டைரக்ட்டர் படற அவஸ்த்தை.( கொஞ்சம் அழுத்தம் வேணுமுன்னுதான் ட்,த் எல்லாம் எக்ஸ்ட்ராவாப் போட்டுருக்கேன்!)

மணிவண்ணன் நடிப்பு நல்லா இருந்துச்சு. ' நீவேறப்பா, அவ பொசுக் பொசுக்'னு கட்டிப் பிடிச்சுடறா'ன்னு சொல்லிக்கிட்டே கொஞ்சம் ஜொள்ளொடு பேசறப்ப சிரிப்பு வந்துச்சு. கடைசி சீன்லே மணிவண்ணனோட மனைவியைக் காமிக்கறப்ப(?) மனசுக்குக் கஷ்டமாப்போச்சு.


கலையரசிதான் கொஞ்சம் ஓவரா ப்ளேடு போட்டாங்க.


கலாபக்காதலன்:

அந்தப்பொண்ணு,அதாங்க அக்ஷயா வர்றப்ப எரிச்சல் வந்துச்சு. அதான் நடிப்போட வெற்றி இல்லீங்களா?

நாயகன், முரட்டு மூஞ்சியிலே நல்லவன்! அந்த 'ஊஞ்சல்' மாடர்னா இருக்குல்லே?

நாயகி நல்லா, அது என்ன சொல்வீங்க,குடும்பப்பாங்கு,ரைட்? அப்படி இருக்காங்க.

படத்தோட நீதி- மச்சினிச்சியை வீட்டுலே சேக்கக்கூடாது. அடக் கடவுளே!


மதராஸி:

'துப்பாக்கி சத்தம்'


தம்பி:

மாதவன்.


தவமாய் தவமிருந்து:

எல்லாரும் எழுதி ஓய்ஞ்சுட்டாங்க.

கல்லூரி மாணவனா சேரன்!


இதயத்திருடன்:

ஊஹூம்....... பாதி பார்த்து வச்சுருக்கேன்.


சுதேசி:

விஜயகாந்த்...............(ஜெயிச்சபிறகு பாக்கட்டுமா?)



........ ஊருக்குப் போனதுலே நிறையப் படங்கள் பார்க்க விட்டுப்போச்சு. இப்பத்தான் ஒண்ணொண்ணாப் பார்த்துக்கிட்டுஇருக்கேன்.


சினிமா விமரிசனங்கள் கொஞ்சநாளைக்கு வராது. ஆனா நீங்க கொஞ்சமும் எதிர்பாராத நேரத்துலே, எதிர்பாராத படங்களைப் பத்திக் கட்டாயமா எழுதத்தான் போறேன்.


மீண்டும் சந்திக்கும்வரை ........bye

Tuesday, April 18, 2006

வைஷ்ணவி

இப்பத்தான் டிவி நடிகை வைஷ்ணவி தற்கொலைன்னு ஒரு நியூஸ் தினமலரில் பார்த்தேன்.

யாருக்காவது மேல்விவரம் தெரியுமா? இவுங்க எந்த வைஷ்ணவி?

யாராயிருக்குமுன்னு தெரியறவரை மண்டைக் குடைச்சல்தான்.

ஆனா, பாவமா இருக்கு.

ஏங்க இப்படி?

Monday, April 17, 2006

சார், போஸ்ட்.

பயண விவரம் பகுதி 19

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு அரைக் கப்
வெங்காயம் அரைக் கப்( நறுக்கியது)
பச்சை மிளகாய் 3 பொடியா அரிஞ்சது
.தேங்காய் கால் கப் ( பல்லுப் பல்லாய் நறுக்குனது)
உப்பு உங்கள் ருசிக்கேத்தபடி.

எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்து இட்டிலிமாவு பதத்துக்குக் கெட்டியா கரைச்சு வச்சுகுங்க.அப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சுச் சொல்றேன் என்ன செய்யலாமுன்னு.


'ஆதத் ஸே மஜ்பூர்' னு சொல்றது எவ்வளோ உண்மை. மனுஷன் பழக்கத்தின் அடிமைதான். ஒவ்வொருத்தருக்குஒவ்வொரு பழக்கம். எனக்கு, சனிக்கிழமையன்னிக்குக் கட்டாயம் கோவிலுக்குப் போகணும். ரொம்பப் பக்கத்துலே மூணு நிமிஷ நடையிலே இருக்கு கோவில். ஆனா அங்கே போகப் பிடிக்கலை. மத்த நாட்கள்லே பரவாயில்லை. சனி மட்டும் அங்கே போகவேகூடாது.


யோசிச்சுப் பார்த்தப்ப இங்கே, சவுத் உஸ்மான் ரோடுலே சிவாவிஷ்ணு கோயில் இருக்கே, அங்கே போகலாமுன்னு நினைச்சு அங்கே போனேன்.மஹாவிஷ்ணு சன்னதியில் எண்ணி நாலுபேர். அதுலே ரெண்டு பேர் பட்டர்கள். மற்ற ரெண்டுபேர் சேவார்த்திகள்.கொஞ்சம் வயதான தம்பதிகள். ஏதோ அபிஷேகம் செய்யன்னு எல்லாச் சாமான்களோட வந்து சன்னிதிக்கு முன்னாலே உக்கார்ந்திருக்காங்க. நான் கொண்டுபோன துளசியை வாங்கி அங்கே ஒரு மேசையிலே இருக்கற பூக்களோடு வச்சுட்டு,'இப்ப அபிஷேகம் முடிஞ்சு அலங்காரம் பண்ணும்போது போடறேன்'னு இதமாச் சொல்றார் பட்டர். இது!!!!


'ஆமாமாம், இவளுக்குக் கூட்டமெ இருக்கக்கூடாதுன்னு அலட்டிக்கறா'னு யாரும் சொல்லிறாதீங்க. இந்தியா மாதிரிஒரு நாட்டுலே கூட்டத்தைப் பாக்கலைன்னாத்தான் பயம் . அங்கே வந்துட்டுக் கூட்டம் கூடாதுன்னு சொல்வேனா?கூட்டம் இருந்தாலுமே, மக்கள் மனசுலெ, மனுஷனை மனுஷனா மதிக்கணுமுன்ற நினைப்பு இருக்கணுமுல்லே?அதிலேயும் கோயில்களிலே, சாமி சிலையைத் தொட்டு அலங்காரம் பண்ணி பூஜை செய்யரவங்க இன்னும் எவ்வளோதன்மையா நடந்துக்கணும்? மனுஷனே 'கஷ்டம் தாங்காம எதோ மனக்குறையோடுதான்' கோவிலுக்குப் போறான்.நொந்து இருக்கறவனுக்குச் சாமியைப் பார்த்தா ஒரு மனோதிடம் வரும், நம்ம குறை தீர்ந்துருமுன்னு.


'அட, நீ ஒண்ணும் மனுஷனைத் தலையிலே தூக்கிக் கொண்டாட வேணாம்ப்பா, அலட்சியம் காமிக்காம இருக்கலாமுல்லே?மூஞ்சைச் சுள்ளுன்னு வச்சுக்கிட்டு ஏனோதானோன்னு சாமிக்கு நெய்த்தீபம் காமிக்கறது நல்லாவா இருக்கு?காசைப் பார்த்த உடனே கரிசனம் காமிக்கறே? அப்ப உனக்கு இன்முகம் காட்டவும் வரும்?'ம்ம்ம்ம்ம்ம்?



அபிஷேகம் முடிஞ்சு, திரை போட்டு அலங்காரம் முடிச்சு, இதோ ஜிலுஜிலுன்னு ஜொலிக்கறார் பெரும் ஆள். அதான்பெருமாள். தீபாராதனை காமிச்சு, அப்புறம் பக்கத்துப் போர்ஷனிலே இருக்கற மனைவிக்கும் தீபாராதனை ஆச்சு. மனசுக்கும்நிம்மதியா இருந்துச்சு. ஆனா தொண்டைதான் ஒரே வலி. புகை, மாசுன்னு உள்ளெபோய் கொஞ்சம் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கு.பேசாம ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கணுமுன்னு தீர்மானிச்சு அப்படியே ஆச்சு. ரெஸ்ட்டுன்னா என்ன படுத்த படுக்கையா?கொஞ்சம் கடைகண்ணி, நண்பர்களோடு பேச்சுன்னு போச்சு. ஆங்... சொல்ல மறந்துட்டேனே. ஃபோன் லைன் வேணுமுன்னுகேட்டிருந்தது வந்துருச்சு. ஆனா தமிழ்மணம் பார்க்கமுடியாம 'லேப்டாப்' ஊருக்குப் போயாச்சு(-:கல் இருந்தா நாயைக் காணொம், நாய் இருந்தாக் கல்லைக் காணொம்.ஆமாம், இந்தப் பழமொழி எப்படி வந்துச்சு?எதுக்குங்க நாயை அப்படி அடிக்கணும்? பொல்லாத ஆளுங்க போல.


நாங்க( நான், மது, அருணா) லேடீஸ் எல்லாம் சேந்து ஒருநாள் லேடீஸ் டே அவுட் போகணுமுன்னு ப்ளான்வச்சிருந்தோம். என்னைக்குன்னு முடிவாகலை. அதுக்குள்ளே, திங்கக்கிழமை மத்தியானம் அவுங்க வீட்டுலே சாப்புடவரணுமுன்னு மது கூப்புட்டிருந்தாங்க. பக்கத்துலேதான் இருக்காங்க. போய்ச் சேர்ந்தேன். அதே பில்டிங்லே மதுவோட ஊர்க்காரங்க ஒரு தோழியும், விஜயவாடாவைச் சேர்ந்த இன்னொரு தோழியும் இருக்காங்க. இந்தமூணுபேரும் ஜமா சேர்ந்தாங்கன்னா அவ்வளோதான். இப்போ நான் வேற! நல்லா அரட்டை அடிச்சோம். அவுங்கெல்லாம் வாய்பாட்டுக்கு வாயும், கைபாட்டுக்குக் கையுமா இருக்காங்க. உடுப்புகளிலே எம்ப்ராய்டரி நல்லாப் போடுறாங்கப்பா.


பருப்புருண்டைக் குழம்பு, பீன்ஸ் பொரியல், அது இதுன்னு ஜமாய்ச்சுட்டாங்க. நானும் ஜஸ்டிஃபை பண்ண வேண்டியதாப்போச்சு. கொஞ்சநேரம் தமிழ்மணம் அங்கே பார்த்தேன். மதுவோட மூணு புத்தகம் இதுவரை வெளிவந்திருக்கு. கவிதைத் தொகுப்புகள். கொஞ்சம்கூட அலட்டலே இல்லாம இதமாப் பேசறாங்க. அடுத்து அவுங்க எழுதப்போறவிஷயத்தைப் பத்திக் கொஞ்சம் சீரியஸ்ஸா விவாதிச்சோம். சமஸ்கிருதம் ரொம்ப நல்லாத் தெரிஞ்சவுங்க. நான்ரெண்டே வருசம் படிச்சேந்தான். அதுலே வர்ற 'அம், அஹ'வைத்தவிர எல்லாம் மறந்துட்டேன்(-:


சரி, 'வந்த வேலை'தான் ஆச்சே, கிளம்பலாமுன்னா எங்கே விட்டாங்க? காஃபி போட்டுக் கொடுத்தாங்க. எனக்குவாழ்க்கையே வெறுத்துப்போச்சு:-) அவுங்களுக்குக் காஃபி, டீ பழக்கமெல்லாம் இல்லையாம். ஆனா நானு? ஒருகாலத்துலே காஃபியிலேயே குடியிருந்தவளாச்சே! சரிப்பா. குடிக்கிற ( அட, இந்த காஃபி & டீ) பழக்கம் இல்லைன்னாஅதைப் போடவாவது கத்துக்கிட்டு இருக்கக்கூடாதா? நறநறநற....... பார்க்கலாம், அடுத்தமுறை நான் அங்கே போறதுக்குள்ளேஅருமையாக் கத்துக்குவாங்கன்னு நினைக்கிறேன். மது, கத்துக்குவீங்கதானே? கவிதை எழுதற கை காஃபி போடக்கூடாதா?


அடுத்த ஐட்டமா தட்டுலே வருது தபால்!


ஆங்.... இதுதான் சரியான இடம்,செய்முறையைச் சொல்ல:-))


வடைசட்டியிலே எண்ணெயைக் காயவச்சு, அது நல்லா சூடானப்புறம், கரைச்சு வச்சுருக்கற மாவைக் கரண்டியாலெ மோந்து, ஊத்தணும். கொஞ்சநேரம் வேகட்டும். திருப்பிவிட்டு ரெண்டு பக்கமும் வெந்ததும் ஜல்லிக்கரண்டியாலே எடுத்துரணும்.இதுக்குப்பேர் 'தபால் வடை'யாம். மொதல்லே இதுக்கும் வடைக்குமே சம்பந்தம் இல்லை. இதுலே தபாலுக்கும் இதுக்கும்என்ன சம்பந்தம்? எந்த ஊருலெ இது ஃபேமஸ்ன்னு சொல்லிரட்டா? 'ராஜ பாளையமாம்'! போச்சுரா....


'சார் போஸ்ட்'ன்னு சொல்லிக்கிட்டு பரிமாறணுமா? இல்லே மொத மொதல்லே சமையல் செஞ்ச புதுமணப்பொண்,தன்னுடைய சமையலை அப்பா அம்மா ரசிக்கட்டுமுன்னு போஸ்ட்டுலே அனுப்புனதாலேயா? எப்படி இந்தப் பேரு....? வீட்டுக்கு வந்து சேர்ந்தப்புறமும், தபாலை மனசுலே போட்டு உருட்டிக்கிட்டு இருந்தேன்.இன்னும் இங்கே இருக்கப்போற கொஞ்ச நாளுக்கு இந்த டிவியிலே என்னதான் அப்படி இருக்குன்னு பாத்துரணும்.


நான் முந்தி எழுதியிருந்தேன் பாருங்க இந்த 'ஹோப் பவுண்டேஷனை'பத்தி, அவுங்களுக்கு ஒரு செக் வச்சிருந்தேன்,இந்தமுறை நேரில் கொடுக்கலாமுன்னு . நம்ம நளினி & சந்தோஷ், தாம்பரத்துலே இருக்கற ஹோமை நடத்துறவங்க. ஆனா இதோட ஆஃபீஸ் இங்கே பெசண்ட் நகருலே இருக்கு. மலர்விழின்றவங்க Director-Women and Children Program.இவுங்களோட எனக்கு ஒரு மூணு வருஷமா இமெயில் தொடர்பு இருக்குங்க. அவுங்களுக்கு ஒரு போன் போட்டுஎப்ப வந்தா சவுகரியப்படுமுன்னு கேட்டதுக்கு, நாங்களே வந்துடறோம்னாங்க, கூட நளினியும் வாராங்களாம். நளினிக்குநம்ம வீடும் தெரியும். வந்தாங்க ரெண்டு பேரும். முகத்துலே அப்படி ஒரு சந்தோஷம். பள்ளிக்கூடத்துக்கு அனுமதிகிடைச்சிருச்சாம். எந்த பள்ளிக்கூடம்?


குடிசைமாற்று வாரியம் மீனவர்களுக்கும், மற்றும் வீடில்லாத மக்களுக்கும் ஒரு பத்துவருசத்து முன்னாடி ஈஸீஆர் ரோடுலே வீடுங்க கட்டிக் கொடுத்தது நினைவிருக்குங்களா? அங்கே குடிபோனவங்க பலரும், வேலைக்கு வர்றதுக்குக்கஷ்டமாப்போச்சுன்னு அந்த வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு பழையபடி தெருவோரத்துலே வந்து தங்கிட்டாங்கன்னுமுந்தி எப்பவோ படிச்ச ஞாபகம். இப்பத்தான் ச்சென்னையோட எல்லை எதுன்னே தெரியாம மகாபலிபுரம் வரைச்சென்னையாமே! ஜனம் பெருகப்பெருக எல்லா இடத்துலேயும் ஹவுஸ் ஃபுல்தானே?


இப்படிப் பெரியவங்க எல்லாம் வேலைக்காகக் கிளம்பி வந்துடறாங்களா, அவுங்க புள்ளைங்க எல்லாம் அங்கே வீட்டாண்டயேச் சும்மா சுத்திக்கிட்டு இருக்குதுங்க. வேண்டாத பழக்கமெல்லாம் கத்துக்கிட்டு வீணாப் போயிக்கிட்டுஇருக்கற பசங்களுக்காக ஆரம்பிச்ச பள்ளிக்கூடம்தான் இது. ஒரு வீட்டை வாடகைக்குப் புடிச்சுப் பள்ளிக்கூடம்ஆரம்பிச்சாச்சே தவிர, இது நடத்தறதுக்கு முறையான அனுமதி வாங்க, இவுங்க படாதபாடு பட்டுருக்காங்க.இது இருக்கற இடம், காஞ்சீபுரம் மாவட்டமாம். அங்கேதான் ரெஜிஸ்த்தர் செய்யணுமுன்னு சட்டமாம். அங்கே போனா,'கையிலே ஏதும் கொடுக்கலை'ன்றதுக்காக அலையவிட்டுருக்காங்க. இவுங்களும் அலைஞ்சாலும் அலையலாமே தவிர,கொடுக்கறதுக்குக் கையிலே ஒண்ணும் இல்லை( விரலைத்தவிர!)ன்னு இருந்துருக்காங்க. ஒண்ணுத்துக்கும் பேராதுன்னுதெரிஞ்சபிறகு, 'தொலை'ன்னு அனுமதி கிடைச்சிருச்சு. இதைத்தான் சந்தோஷமாச் சொன்னாங்க.


இந்தப் பள்ளிக்கூடத்துக்கு நீங்க கட்டாயம் வந்து பார்க்கணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க. நானும், நம்ம அருணா, மதுவோடசேர்ந்து போகலாமுன்னு நினைச்சுக்கிட்டு, என்னைக்கு வரோங்கறதைப் போன்போட்டுச் சொல்றேன்னு சொன்னேன்.பகல் உணவுக்கு நளினியும், மலர்விழியும், நானும் போய் சாப்புட்டுக்கிட்டேக் கேட்டது, அந்தப் பள்ளியோட தலைமை ஆசிரியைஅங்கே வேலைக்கு வந்த கதையை.

Friday, April 14, 2006

இன்னைக்குப் புத்தாண்டு

வலைஞர்களே,

புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிஞ்சதா? புதுப் படம் ரிலீஸ்க்குப் போய் வந்தாச்சா? இன்னும் என்னென்ன விதமாக்கொண்டாடுனீங்க?

உங்களுக்குத்தான் தெரியுமே, ஊருக்கு முன்னாலே எல்லாப் பண்டிகையும் கொண்டாடுற ஆள் நானுன்னு. இருக்கற தேசம் அப்படிங்க!


இன்னைக்குப் புத்தாண்டு நமக்கு மட்டுமில்ல, நம்ம கேரள அன்பர்களுக்கும்தான்றது உங்களுக்குத் தெரியும்தானே?

பஞ்சாப் மானில சகோதரகளுக்கும் நேத்துதான் புது வருஷம் வந்துச்சுங்க. அதுக்குப் பேர் வைஷாகி. இன்னிக்குத்தான்அவுங்களும் அதைக் கொண்டாடுனாங்க. இப்பத்தான் அங்கே போயிட்டு வந்தேன்....

வழக்கத்தைவிட இந்த வருஷம் ரொம்ப நல்லா அமைஞ்சு போச்சு. காரணம்?
சாப்பாடுன்னு அங்கே யாருங்க குரல் விடுறது?

ரெண்டு ப்ரொஃபஷனல் பாடகர்ங்க. ஆக்லாந்துலே இருந்து வந்திருந்தாங்க. என்னா பாட்டுங்கறீங்க? அருமைங்க.பக்க வாத்தியம் ஆர்மோனியம் & தப்லாதாங்க. பாடிக்கிட்டே அருமையா வாசிச்சாங்க. புது அனுபவமா இருந்துச்சு.(அங்கங்கே இந்துமதம், தமிழ்ப்புத்தாண்டு இன்னைக்குக் கொண்டாடுறமே, அது உண்மையான தமிழ்ப்புத்தாண்டு இல்லைன்றவிவாதங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதைப் பத்தி ஒரு பதிவு விலாவறியாப் போடணும். ஆனா, இந்த சீக்கியர்களின் மதம் இருக்கு பாருங்க, அதுலெ இருக்கறதைப் படிச்சா ஏதோ வெளிச்சம் வர்றமாதிரி இருக்குங்க. சரி அதெல்லாம்அப்புறம்.)


இந்த சந்தோஷத்தை உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னுதான் இந்தப் பதிவு.

ஆங்... இன்னும் ஒண்ணு சொல்லவிட்டுப்போச்சுங்க. சிஃபின்னு ஒரு தளம் இருக்குல்லே. அவுங்களோட தமிழ்ப் பதிப்புலே புத்தாண்டு மலர் வெளியிட்டுஇருக்காங்க. அதுலெ நம்ம கட்டுரை ரெண்டு வந்துருக்குங்க. இங்கேயும், இங்கேயும்.

முடிஞ்சாப் பாருங்க.

இன்னொருக்கா எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கறேன்.நல்லா இருங்க.

Thursday, April 13, 2006

வடே வடே ....

பயண விவரம் பகுதி 18

வடே வடே ....


'சூடா இருக்கா?' முன்வரிசையிலே இருக்கறவர் கேக்கறார்.


என்ன வடைன்னு பார்த்தா வெறும் மெதுவடை. எனக்கு மசால்வடை தின்னணுமுன்னு ரொம்ப நாளா ஆசை. என்னதான்வீட்டுலே செஞ்சாலும் ஹோட்டல் வடையிலே இருக்கற 'க்ரஞ்சினஸ்' வர்றதில்லைங்க. இந்தப் பயணம் முழுசும்,வடையைப் பார்த்தாலோ, இல்லே மெனுக்கார்டுலே இருந்தாலோ விடாமக் கேக்கறதுதான். 'மெதுவடை'ன்னு வர்றபதில் அவ்வளவா சுவாரஸ்யப்படாது. டி. நகர்லே சாகித்யன்னு ஒரு ஹோட்டல்லே ஆதித்யன்னு ஒரு ரெஸ்டாரண்ட்இருக்கு. அங்கே ஒருக்கா காலை உணவு( பஃபே) சாப்புடப்போனப்ப மசால்வடைன்னு எழுதி ஒரு பாத்திரத்துக்கிட்டே இருந்துசுங்களா, ஆசையாப் போய் திறந்து பார்த்தா, அடச்சீ ! அங்கே இருந்த பேரர்கிட்டேகேட்டதுக்கு அசட்டுச் சிரிப்போடு அந்த அட்டையத் திருப்பி வச்சார், மெதுவடைன்னு எழுதியிருக்கு.


எங்க இவரும் சொல்றார், டீக்கடையிலேதான் கிடைக்கும். பயமில்லன்னா வாங்கிரலாமுன்னு. ஆசைதான் எல்லா துக்கத்துக்கும்காரணம். நமக்குக் கொடுப்பனை இருந்தா எப்பவாவது கிடைக்குமுன்னு இருந்துட்டேன்.


வடைக்கு அப்புறம் சாண்ட்விச், போண்டா, காஃபி & டீன்னு எதாவது ஒண்ணை வித்துக்கிட்டே இருக்காங்க.ஒரு டீ மட்டும் வாங்கிக் குடிச்சோம். உக்காந்த இடத்துலே இருந்தே உடம்பை இப்படி அப்படி அசைக்காம வாங்கித் தின்னுக்கிட்டே எப்படியும் 8.15க்குப் போய்ச் சேர்ந்துரலாம். நம்ம பயணம் ரயில்லே நடக்குதுன்னு உங்களுக்குத் தனியாச் சொல்லணுமாங்காட்டியும்? பகலாச்சுங்களே, அப்படியே வெளியே வேடிக்கைக் கொஞ்சம் பார்க்கலாம். பல இடங்கள் செம்மண் பூமியா வரட்சியாத்தான் இருக்கு.


பாருங்க, ஒரு நாள் பாழாப் போச்சு. காருக்காக காத்து நின்னப்ப, மச்சினர்கிட்டே வேலை செய்யற பையன் ஸ்கூட்டர்லேவர்றான். 'அம்பாஸிடரு'க்கு வரமுடியலையாம். எங்களை டாக்ஸி பிடிச்சு ஏத்திவிட வந்தானாம்! ஏன்? எங்களுக்குஒரு டாக்ஸி எடுத்துப் போகத்தெரியாதாமா? நல்ல கூத்து. 300 ரூபாய் கொடுத்து மச்சினர் வீடுபோய்ச் சேர்ந்தோம். நேரவிரயம். இப்பவே மணி 11.30 ஆயிருச்சு.


பேப்பரைப் புரட்டுனப்ப, நேத்து நடந்த டென்னிஸ் டோர்னமெண்ட் பார்க்க மாதவன் வந்திருந்ததா படத்தோடு செய்தி.ஆமாம், நானும் பார்த்தேன் ஏர்ப்போர்ட்லேன்னு சொன்னதும் அவுங்க கண்ணுலே ஒரு பளிச். போக முன்னூறு, வர முன்னூறு, காலைச்சாப்பாடு இருநூத்து அம்பதுன்னு எட்டுநூத்துஅம்பது ரூபாய் செலவு செஞ்சு மாதவனைப் பார்த்துருக்கு.


அதுக்குள்ளே பிருந்தாவனுக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு வந்தாச்சு மச்சினர் பையன். இந்த 'செல்' விஷயத்தைச் சொல்லி கொஞ்சம் 'டாப் அப்' பண்ணிக்கலாமுன்னு இவர் போய் 300 ரூபாய்க்கு ஒரு கார்டு வாங்கியாந்தார்.அதைச் சுரண்டி அந்த நம்பரைப் போட்டா ஒண்ணும் ஆகலை. கடை ரொம்பப் பக்கத்துலேதான் இருக்குன்னு அங்கே போய்க் கேட்டா, 'அட, இது கர்நாடகாவுக்கு மாத்திரம் உள்ள ரீ சார்ஜ் கார்டு. உங்களுது மெட்ராஸ்லே ஆரம்பிச்ச அக்கவுண்ட்டா, அதுக்கு வேற ஒரு கார்டு இருக்கு'ன்னு பதில் வருது. சரி அதையாவது கொடுங்கன்னா, 'நீங்க இந்தக் கார்டைச் சுரண்டியாச்சு. இனிமே இதைத் திருப்பி எடுக்க முடியாதே'ன்னார். போனாப்போகட்டும், அந்தவேற கார்டு ஒண்ணு தாங்கன்னா அது தீர்ந்து போச்சாம். போட்டும் பீடை விட்டது. இந்த 'செல்' இருந்தும் தொல்லை,இல்லாமலும் தொல்லை.


ரெண்டரைக்கு ரயில் டாண்னு கிளம்பிருச்சு. ஆனா நம்ம நேரம் பாருங்க, மெதுவா ஒவ்வொரு ஸ்டேஷனா நின்னு நின்னுபோகுது. ஒரு வேளை இது பிருந்தாவன் பாஸஞ்சரோ? மனசு வந்து ஸ்பீடு எடுத்தப்ப நல்லா இருட்டிப்போச்சு. செண்ட்ரல்வந்து சேர்ந்தப்ப 8.55.


இறங்கி ஒரே ஓட்டமா ப்ரீபெய்டு டாக்ஸிக்குப் போய் டாக்ஸி புடிச்சு ஏறி உக்காந்தாச்சு. அப்ப ட்ரைவர் பையன்கிட்டேஒரு பெரியவர் வந்து சொல்றார், 'இவுங்கள டி.நகருலே கொண்டு விட்டுட்டு வா'னு. பையன் முகம் பேயறைஞ்சாப்புலேஆச்சு. டி.நகர் தெரியாதாம்! 'ஏம்ப்பா, எப்படி டாக்ஸி ஓட்ட பர்மிட் கிடைச்சுச்சு. லைசன்ஸாவது இருக்கா?'ன்னு கேட்டேன்.பையன் ஊருக்குப் புச்சாம்ப்பா. அப்புறம் அந்தப் பையனை இறங்கச் சொல்லிட்டுப் பெரியவரே வண்டியை எடுத்துட்டார்.


'செண்ட்ரல் ஜெயில்' பாலத்துமேலே போனப்ப தரிசனம் ஆச்சு. நடந்து போறவங்க எல்லாம் நம்மளை முந்திக்கிட்டுப்போறாங்க. மொதல்லே நம்ம பில்டிங் கீழே கடை அடைக்கறதுக்குள்ளே ஃபோனை ரீ சார்ஜ் செஞ்சுக்கணும். மவுண்ட்ரோடுலே போறோம். அஞ்சு இல்லே அதிகம் போச்சுனா ஒரு பத்து கிலோ மீட்டர் ஸ்பீடுலே போறோம். நமக்குன்னு அமையுது பாருங்க.


'இவ்வளவு வேகம்தான் இந்த வண்டி போகுங்களா?'கேட்டது எங்க இவர்.

'இல்லீங்க. நல்ல ஸ்பீடு எடுக்குங்க' பெரியவர்.

'எடுக்குமா? அப்ப எங்கெ?' ன்னு கேட்டப்புறம்தான் பெரியவருக்கு உரைக்குது, என்னமோ ஞாபகத்துலே மெதுவாப்போறோமுன்னு. அப்பன்னு பார்த்து ட்ராஃபிக்கும் அவ்வளவா இல்லே. வேகம் புடிச்சு போய்ச் சேர்ந்து, ரீசார்ஜ் செஞ்சுஅண்ணனைக் கூப்புட்டு வந்துட்டோமுன்னு சொல்லி, சாகித்யன் போய் சாப்புட்டு தூங்கச் சொல்ல பதினொண்ணரை.

ஒரு நாள் வேஸ்ட்டாப் போச்சேன்னு இவர்தான் புலம்பிக்கிட்டே இருந்தார்.


அடுத்தநாள் காலையிலே இருந்து 60 மணிநேரம் தூங்காம இருக்கணும். ஆனா என்னை அங்கே விட்டுட்டு இவர்மட்டும் திரும்பிப்போறதை நினைச்சுக்கிட்டு மனுஷன் டென்ஷனாகி ராத்திரி நல்லாவே தூங்கலையாம்.


ஆனா, நானு இவர் இல்லாதப்ப செஞ்சு முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கறதாலேயும், தனிக்காட்டு ராணியாஷாப்பிங் அனுபவத்தில் திளைக்கப்போறதையும் நினைச்சுக்கிட்டே அருமையான தூங்கியிருக்கேன்:-)


மறுநாள், அண்ணன் வீட்டு விருந்து, முதல்நாளே செஞ்சிருக்க வேண்டிய வேலைகள், ச்சின்ன மச்சினர் வீட்டுக்குப்போய்'டாடா' சொல்றதுன்னு ஓட்டம். ஏர்ப்போர்ட் போக சாயந்திரம் ஏழரைக்குக் கால்டாக்ஸிக்கு சொல்லியிருக்கு. இன்னும் பொட்டிங்களை அடுக்கலை. இதுவரை வாங்குனதை இவரே எடுத்துக்கிட்டுப் போறேன்னு சொன்னாதாலே தைய்யக்கடைக்குப் போய் துணிகளை வாங்கிக்கணும். இந்த அழகுலே மவுண்ட் ரோடுலெ இருந்து தி. நகர் வர்றதுக்குடாக்ஸிக்காரர் தேர்ந்தெடுத்த வழி சவுத் போக் ரோடு. மணி 6 இஞ்ச் இஞ்சா நகருது காரு.


அடிச்சுப்புடிச்சு எல்லாம் செஞ்சு, இவரை ஏர்ப்போர்ட்டுக்கு அனுப்பிட்டுக் கவலையா உக்கார்ந்துருக்கேன். ஏன்?'பேக்கேஜ் ஓவர் வெயிட்ன்'னு எவ்வளோ தீட்டப்போறாங்களோ....?


பி.கு: அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து(க்)கள். இந்த வருசம் உலகம் பூரா லீவுதான், வெவ்வேறு காரணத்துக்கு.


படம்: சுந்தரி சில்க்ஸ் வாசலில் இருக்குற யானை.

Wednesday, April 12, 2006

பூவுக்கென்ன பதில்?

வலைஞர்களில் பலர் ஆர்வமாப் பதில் சொன்னாங்கதான், ஆனாலும் சரியான விடை யாருமே தரலை(-:


அந்த மஞ்சப்பூ டாண்டலியன் இல்லை, தலைவெட்டிப்பூவும் இல்லை. தலைவெட்டிப்பூ இங்கெயும் இருக்கு. வெள்ளைக்கலரு சுத்தியும் மஞ்சள் கலரு நடுவிலேயும் இருக்கும்.


'ஏதோ ஒரு பூ'ன்னே அதுக்குப் பேர் வச்சுரலாம்:-)


இப்ப முக்கியமான பூவான பர்ப்பிள் பூ. நம்மூர் சந்தையிலே தற்செயலாப் பார்த்தப்ப எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த பூ.(உடனே வாங்கிட்டமுல்லெ.)


இதோட தாவரப்பேர் Crocus sativus

இன்னும் விளக்கம் வேணுமுன்னா Saffron Crocous

அட, நம்ம குங்குமப்பூ.


ஒரு கிலோ குங்குமப்பூ எடுக்க சுமார் ஒன்னரைலட்சம் பூ சேகரிக்கணும். அதுலேயும் பாருங்க அது எடுத்தவுடனே ஈரமா இருக்குமுல்லையா? அதனாலே அதைக் காயவச்சு வியாபாரத்துக்கு அனுப்பணுமாம். அப்படிக் காய வச்சா வெறும் 200 கிராம்தான் தேறுமாம்.


கணக்குப் போட்டுப் பாருங்க, ஒரு கிலோ குங்குமப்பூ விக்க ஏழரை லட்சம் பூ சேகரிச்சுக்கணும்.இப்பத்தான் நம்ம வீட்டுலே ஒரு பூ வந்திருக்கு. ஏழரை லட்சம் வந்தவுடனே வியாபாரத்தை ஆரம்பிச்சுருவேன். இனிமே நீங்க எல்லாம் நம்ம கடையிலேதான் குங்குமப்பூ வாங்கணும். இப்பவே சொல்லிட்டேன், ஆமா.

Monday, April 10, 2006

டெக்கா, ஞாயமா?



பயண விவரம் பகுதி 17

மத்த இடங்களிலேயாவது நம்ம வயசுக்குப் பக்கம்வர்றமாதிரி சிலபேராவது இருந்தாங்க. இங்கே எல்லாம் பொடிசுங்கப்பா:-) கொஞ்சம் போனா நம்மளை அங்கிள், ஆன்(ண்)ட்டி கூப்புட்டுருவாங்க போல. இனிமே என் பேரே'துளசியக்கா'ன்னு மாத்திவச்சாத்தான் பொழைக்கமுடியும்:-)

என்ன பேசுனோமுன்றதை எழுதலான்னு பார்த்தா, எல்லாத்தையும் இளவஞ்சி எழுதிட்டார். மிச்சம் மீதி விட்டுப்போனது எதாச்சும் இருக்கான்னு கண்ணுலே விளக்கெண்ணெய் ( அட, ஒரு பேச்சுக்கு இப்படிச் சொல்றதுதான்)விட்டுப் பார்த்தேன். அய்யடா....

ஹைய்யா, பேச்சுக்கு நடுவுலே காஃபி வரவழைச்சுக் குடிச்சுட்டு, வந்த தூக்கத்தை விரட்டுனதைச் சொல்லலை.ப்ளாஸ்க்குலே வந்த காஃபி 'யக்'கா இருந்துச்சு(-:

சரி மணிவேற ஓடிக்கிட்டு இருக்கே. கீழே போய் ரெஸ்ட்டாரண்ட்டு மூடறதுக்குள்ளே எதாச்சும் சாப்புட்டுக்கலாமுன்னுபோனோம். கிளம்பறப்ப நம்ம எம்ஜிஆர் ஒரு அன்பளிப்பை எடுத்து நீட்டுறார். பிரிச்சுப் பார்த்தா, எப்படி அவரைச் சுட்டுட்டாங்கன்னு போட்டுருக்கு.. ஆனா எனக்குப் புரிஞ்சுபோச்சு, இந்த எம்ஜிஆர் வேஷம் கட்டிக்கினு வந்தது எதுக்குன்னு. அன்பளிப்புக்கு மேட்ச்சிங்கா இருக்காரு:-) 'சுட்டாச்சு சுட்டாச்சு' எழுதுனவர் சுதாங்கன். 1967 லே எம்ஜிஆர்கொலை முயற்சி வழக்கு நடந்தப்ப நீதிமன்ற விசாரணகளை உள்ளடக்கியது. ( இதைப் பத்தியே ஒரு தனிப்பதிவுபோடணும். பார்க்கலாம் எப்பன்னு)


இந்த உண்மை புரியாத இளவஞ்சியும், ராகவனும் அவருக்குக் கண்வலின்னு நம்பிட்டாங்க:-) இல்லாட்டா,மறுநாள் ரஷ்யா 'நாட்டுவைத்தியம்' செஞ்சு குணமாயிருச்சுன்னு எழுதுவாராமா?


நமக்கோ 'திம்'னு அடை குந்திக்கிட்டு இருக்கு வயித்துலே. அதாலே எங்களைப் பாக்க வச்சு, அவுங்க மூணுபேருக்கும் பூரி ஒரு ப்ளேட்.


கிளம்பறப்ப மணி 11 ஆயிருச்சு. நேரம் போறதே தெரியாம அரட்டை அடிச்சுருக்கோம். மறுநாள், சொந்தங்களோடு கொஞ்சம் ஊர்சுத்தல். பக்தியோடு ஆரம்பிக்கணுமுன்னு 'ஹரே கிருஷ்ணா' கோயிலுக்குப் போனோம். பள்ளிக்கூடப்பசங்க வந்திருந்தாங்க. அவுங்கெல்லாம் 108 தடவை 'மந்திரம்' சொல்லிக்கிட்டு வர்ற பாதையிலெ வந்தாங்க. நாமோகுறுக்கு வழி( மந்திரம் சொல்லாம வர்ற சோம்பேறிங்களுக்குன்னே வேற வழி வச்சுருக்காங்க. ) மூணு அடுக்காப் போய்சாமியைக் கும்பிட்டுக்கிட்டு, அங்கெ மேலே இருந்து பெங்களூரைப் பாக்கறப்ப நல்லாவே இருந்துச்சு. பக்கத்துலேஊருக்கே, வெளுத்துக் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க சலவைத்தொழிலாளிங்க. காத்துலே படபடன்னு அடிச்சுக்கிட்டுப் பச்சக் கலரு ஜிங்குச்சா, சிகப்புக் கலரு ஜிங்குச்சான்னு கலர்கலரா ஆடுதுங்க துணிங்க.


நம்ம ஆளுங்க பாருங்க, ஆதிகாலத்துலெ இருந்தே குன்று, மலைன்னு எது கிடைச்சாலும் அங்கெ ஒரு கோயிலைக்கட்டிருவாங்க. ஜனங்களும் 'சாமி கும்புட'ன்னு மேலே ஏறிப் போய் அங்கிருந்து 'வ்யூ' பாப்பாங்க. உடற்பயிற்சிக்குஉதவியாவும் ஆச்சு. இல்லே, 'வாங்க மலை ஏறிப்போய் வேடிக்கை பாக்கலாம். உடம்புக்கு நல்லது'ன்னு சொல்லியிருந்தா,சொன்ன பேச்சைக் கேட்டுருப்பாங்களா? 'வேற வேலை இல்லெ போ'ன்னு விரட்டியிருக்குமுல்லெ ஜனங்க.



'அங்கேயே கொஞ்ச தூரத்துலே ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கு. ரொம்பப் பெரிய சிலை'ன்னு கேள்விப்பட்டு அங்கேயும் போனோம். படியேறி மேலே போனா ஒரு பெரிய ஹால், தியான மண்டபமா இருக்கு. அதுக்குள்ளே நுழைஞ்சு வலதுகைப் பக்கம் இருக்கற திறந்த முற்றத்துலே அனுமன் இருக்கார். அதுக்கப்புறம் வீடு வந்து, சாப்பாடு, ப்ரெளசிங் செண்ட்டர்ன்னு மதியம் ஓடிப்போச்சு. சாயங்காலம் கேம்ப் ஏரியாவுக்குப் போய் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு,ஆந்திரா ஸ்டைல் சாப்பாடுன்னு 'நந்தினி'க்குப் போனோம். எனக்கு, நம்ம ராகவன் சொன்ன 'பெர்ஷியா'வுக்குப் போகணுமுன்னுஇருந்துச்சு. ஆனா சொந்தங்களோட ச்சாய்ஸ் நந்தினி. சாப்பாடு எப்படின்னு என்னைக் கேக்காதீங்க. அசைவம் அவுங்களுக்குமட்டும். ருமாலி ரோட்டியும், பருப்பும்தான் நாங்க ரெண்டு பேரும். எல்லாம் பயம்தான். ரெண்டுநாளுலே எங்க இவர் கிளம்பறார். அதுவரை ஏதும் 'அபகடம்'வராம இருக்கணுமே.


மறுபடியும் பொழுது விடியுமுன்னே எழுந்து ஏர்ப்போர்ட்டுக்கு ஓடியாச்சு. செக்கின் செய்யறப்ப, நாங்க கேக்காமயே20 நிமிஷம் தாமதமுன்னு சொன்னாரு ஏர்டெக்கன்கார். நான் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாம, 'இந்த நிமிஷம்'னு சேர்த்துக்கலையான்னு கேட்டேன். 'எட்டுமணிக்குக் கிளம்பி ஒம்போதுக்குள்ளே அண்ணன் வீட்டுக்குப் போய் காலைஉணவு' ன்னு ஏற்பாடு.


இப்ப அதுலெ மாற்றம் வந்துருச்சு. ரொம்ப லேட்டாயிரும். பேசாம இங்கேயே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்புட்டுறலாமுன்னு மாடியிலே இருக்கற ரெஸ்டாரண்டுக்குப் போய் சாப்பிட ஆரம்பிச்சோம். 'சென்னைக்குப் போனதும் செய்யவேண்டிய வேலைங்க எக்கச்சக்கமா இருக்கு. நாளைக்கு கிளம்பறேனே. அதுக்குள்ளே என்னென்ன செய்யலாமுன்னு ஒருலிஸ்ட் போட்டுக்கறேன்'னு பட்டியல் எழுதிக்கிட்டு உக்காந்துருக்கார் எங்க இவர். நானோ எதிர்லே இருக்கற டிவிப்பொட்டியிலே கண்ணை நட்டுக்கிட்டுச் சாப்புடறேன். அதுலே ஃப்ளைட் இன்ஃபோ வந்துக்கிட்டு இருக்கு. ஏன் இவ்வளோநேரமான பின்னும் 'டிலேய்டு'ன்னே இருக்கு?


தலையை உசத்திப் பார்த்த இவர், 'உன் பக்கத்து டேபிளில் பாரு, யாருன்னு' சொன்னார். பரக்காவெட்டியாட்டம்திரும்பக்கூடாதுன்னு மெதுவாத் தலையைத் திருப்புனா, அட! நம்ம மாதவன்.


பேசலாமான்னு யோசிக்கறதுக்குள்ளே, பொட்டி சொல்லுது 'ச்சென்னை ஃப்ளைட் கேன்ஸல்டு' அடப்பாவிகளா, இதை அனெளன்ஸ்கூடச் செய்யலே? ஓடு கீழே, என்னாச்சுன்னு பாக்கணுமுன்னுஒரே பாய்ச்சல். போற அவசரத்துலே மாதவனுக்கு ஒரு தலை அசைப்பு.


கீழே கவுண்ட்டருக்குப் பக்கத்துலே கும்பல். மொத்தம் 6 பேர். நாங்க ரெண்டு பேர். சென்னைக்கு ஒருஆஃபீஸ் மீட்டிங் போறவர் ஒருத்தர், உடம்பு சரியில்லாத உறவைப் பார்க்க ஓடுற ஒரு அம்மா, ரெண்டு இளைஞர்கள்,தோளில் லேப்டாப் பையோடு. எங்களைச் செக்இன் செஞ்சு பெட்டிகளை வாங்குனவர் காலடியிலே நாங்க வச்சுட்டுப் போன பெட்டிங்க அப்படியே இருக்கு.

"ஏன் என்னாச்சு? "

"எதுக்கு ஒரு அறிவிப்புக்கூட செய்யலை? "

"நாங்க ஆறேபேர்ன்றதாலே கேன்ஸலாக்கியாச்சா?"

"இப்ப முக்கியமான மீட்டிங் போயே ஆகணும். எப்படிப் போறது?"

"அடுத்த ஃப்ளைட்டுலே போடுவீங்களா?"

"வேற எதுலேயாவது போக ஏற்பாடு செய்வீங்களா?"

ஆறுபேர்தானே? ஆறே கேள்விங்க.

கவுண்ட்டர் பேர்வழி, ' ஒன் மினிட் 'னு எழுந்து என்னவோ விசாரிக்கப் போறவர்போல போனவர், போனது போனதுதான்.

இதுதான் எனக்கு எரிச்சலா இருந்துச்சு. எங்க ஆறுபேரையும் அம்போன்னு விட்டுட்டு போயிட்டார் அந்த ஆள்.

என்ன மாதிரி கஸ்ட்டமர் சர்வீஸ் பாருங்க? எங்களுக்கு எதாவது பதில் வேணுமா இல்லையா?

சரி, இதே நான் ஏர்டெக்கன் ஆளாயிருந்தா என்ன செஞ்சுருப்பேன்? மொதல்லே பயணிகள்கிட்டேமன்னிப்புக் கேட்டுக்குவேன். 'கடைசி நிமிஷத்துலேதான் எஞ்சின்லே ஒரு ப்ராப்ளம் இருக்குன்னுதெரிஞ்சதுங்க. உங்க உயிர்களுக்கு ஆபத்துவராமப் பாதுகாக்கறதுக்காகத்தான் இந்த ஃப்ளைட்டைக்கேன்ஸல் செய்ய வேண்டியதாப் போச்சு. இஞ்சிநீயர்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சென்னைக்குப் போற
வேற ஏர்லைன்ஸ் ஃப்ளைட்லே இடம் இருக்கான்னு கேட்டுப் பார்க்கறோம். தொந்திரவுக்கு மன்னிக்கணும்'னு
சொல்லி, பயணிகளுக்கு, 'அவுங்க பாதுகாப்புக்காக மட்டுமே விமானத்தை ரத்து செய்ய வேண்டியதாப் போச்சு'ன்னு ஒரு உணர்வை உண்டாக்கி இருப்பேன்.

மக்களும், 'ஏதோ அந்தவரை தப்புனோம்' ன்ற எண்ணத்துடன் அடுத்து ஆகவேண்டியதைப் பத்தி யோசிக்க முடியும்.அதையெல்லாம் விட்டுட்டு, ஆட்கள் கேள்வி கேட்டவுடனே, ஓடிப்போய் ஒளிஞ்சுக்கறது என்ன நியாயம்? என்னதான்சீப் டிக்கெட்டுன்னாலும், டிக்கெட்டு மட்டும்தானே ச்சீப்? ஜனங்களுமா?


ஸ்டாஃப்ங்களுக்கு நல்லவிதமான ட்ரெயினிங் கொடுத்து கஸ்ட்டமர்ஸை தக்க வச்சுக்கணுமா இல்லையா?

அதுக்கப்புறம், அங்கே அடுத்த பகுதியிலே இருந்த ஏர்டெக்கன் ஆஃபீஸை நோக்கிப் போனோம். அப்ப அங்கே இருந்துவந்த ஒரு ஏர்டெக்கன் அம்மா, 'உங்க டிக்கெட்டுக்கு ரீபண்ட் வாங்கிக்க வெளியே வலதுபக்கம் ஒரு கவுண்ட்டர்இருக்கு. அங்கே போய் வாங்கிக்குங்க'ன்னு சொல்லிட்டுப் போறாங்க. ஏங்க, என்னங்க நடக்குது இங்கே? இவுங்களைசாயங்காலம் 5 மணி ஃப்ளைட்டுக்கு நம்ப முடியுங்களா?


'பெட்டிங்களை யார்வேணுமுன்னாலும் எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்' ன்றமாதிரி, அங்கே கிடக்கு. கூட இன்னொருபெட்டியைக் கொண்டு போனாக்கூட கேக்க நாதி இல்லை.

வெளியே வந்து காசுக்கு நிக்கறோம். அங்கேயும் ரெண்டு பொண்களும், ஒரு ஆளும் இருக்காங்களே தவிர வேலைஒண்ணும் நடக்கலை. ஆறே ஆறு பேருக்குக் காசைத்திருப்ப எவ்வளவு நேரமாகும்? நீங்களே சொல்லுங்க. 15 நிமிஷம்ஆச்சு. இன்னும் மொத ஆளுக்கே காசைக் கண்ணுலே காட்டலை. சட்டுப்புட்டுன்னு கொடுத்தாத்தானே திரும்ப சிட்டிக்குவந்து பஸ்ஸோ, ரயிலோ ஏற்பாடு செய்யலாம்?


இன்னும் 15 நிமிஷம் ஆச்சு. ஊஹூம்.... அப்படியே நிக்கறோம் ஆறுபேரும். எனக்குக் கோபம் கூடிக்கிட்டேப் போகுது. சகிக்கமுடியாம கவுண்ட்டர் உள்ளெ இருக்கற ஆளுங்களைப் பார்த்துக் கத்துனத்துக்கப்புறம், கையைநீட்டி, டக்குன்னு நம்ம டிக்கெட்டை வாங்கிக்கிட்டு ரெண்டே நிமிஷத்துலே காசு வருது.


இப்ப அடுத்து செய்யவேண்டியது என்ன? மொதல்லே அண்ணனுக்குப் போன் போட்டு , சமையலை ஆரம்பிச்சாச்சான்னுகேட்டு, அதை நிறுத்தச் சொன்னேன். விஷயத்தைக் கேட்டுக்கிட்ட அண்ணி சொல்றாங்க,'இங்கெல்லாம் இப்படித்தாங்க.ராத்திரிக்கு வந்து சேர்ந்துருவீங்கல்லே?'


இந்த கலாட்டாவுலேதான் கவனிக்கறோம், போன்லே வெறும் ஆறுரூபாத்தான் இருக்காம். முத்தாநாள் ஐந்நூறு
இருந்தது எப்படி? மச்சினருக்குப் போன் செஞ்சு ப்ளைட் இல்லே. ட்ரெயினில் கிடைக்குமான்னு பாருங்கன்னு சொல்லிக்கிட்டுஇருக்கறப்பவே அந்த ஆறும் போயிருச்சுங்க.


இங்கே நியூஸியிலே இருந்து கொண்டுபோன 'ரோமிங் வசதி' இருக்கறது ஒண்ணு கையிலே இருக்கு. ஆனா அதுக்குஒவ்வொரு 'காலும்' இங்கே வந்துல்லே டைவர்ட் ஆகும். போச்சுரா. அதுலே மச்சினரைத் திரும்பக் கூப்பிட்டப்ப,அங்கேயே இருங்க வண்டி அனுப்பறேன்னு சொன்னார். சொந்த வண்டி இல்லைதான். ஆனா தெரிஞ்ச பையனோட ப்ரைவேட் டாக்ஸி. அதுலேதானெ நேத்துக் கோயில் குளமுன்னு சுத்துனோம். சரின்னு உக்கார்ந்துக்கிட்டு இருக்கோம்.


அந்த இடம்தான், பயணம் போறவங்களை இறக்கி விடுறதுக்குனு இருக்கு. விதவிதமான வண்டிங்க வந்து விதம்விதமான ஆளுங்களை உதிர்த்திட்டுப் போகுதுங்க. எங்க 'அம்பாஸிடரை'க் காணோம்!

Sunday, April 09, 2006

இந்த பூ ???



பூப்பூவா பூத்திருக்கு,
பூமியிலெ ஆயிரம்பூ,
பூவிலே இந்த பூ
என்ன பூ?


மொத்தமா மூணு படம் போடறேன்.
என்ன பூவுன்னு சொல்லுங்கப்பூ.


பர்ப்பிள் கலர் பூ ரெண்டு படமும் ஒரே வகைதான்


Thursday, April 06, 2006

பெங்களூரு, நானு பருத்திதேனெ


பயண விவரம் பகுதி 16


இதோ, பெங்களுருக்குப் போக காலை ஏழரை மணிக்கு விமானம். காலையிலே சீக்கிரமா எழுந்து அடிச்சுப்பிடிச்சுக்கிளம்பி ஏர்போட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அங்கெ வாசல்லேயே ஒரு 'டீக்கடை' இப்படி சொல்லக்கூடாதோ, ஒரு டீ ஷாப் இருக்கு. 4 ரூபாயாம், ஒரு வாய் டீ. அதையும் வாங்கி ஊத்திக்கிட்டு உள்ளெ போய் செக் இன் செஞ்சு 20 நிமிஷமே லேட்டாப் புறப்பட்டு எட்டரைக்கு ,ஏன்றி, சென்னாகிதிரா? ன்னு கேட்டுக்கிட்டே பெங்களூருலே இறங்கியாச்சு. பேக்கேஜ் எடுக்க ரொம்ப நேரம் நிக்க வேண்டியதாப் போச்சு. பயங்கரக்கூட்டம். நிறைய வெள்ளைக்காரர்கள்.


டாக்ஸியிலே சிட்டிக்குப் போறப்ப, ஒரு லைட்டுக் கம்பம் விடாம போஸ்ட்டர் அடிச்சு தட்டியில் ஒட்டிக் கட்டி வச்சுருக்காங்க.'ஆர்ட் ஆஃப் லிவிங்' ரவிசங்கர் வர்றாராம். அதுக்கு பழைய ஏர்போர்ட்லே மூணுநாள் விழாவாம்.அதான் கூட்டமாம்.டாக்ஸி ட்ரைவரா நமக்குக் கிடைச்சவர் ஒரு சேட்டன். அது போதாதா? சம்சாரிச்சுக்கிட்டே ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.


இந்த ஹொட்டல், நான் மூணுவருசம் முந்தி வந்து தங்குனப்ப நல்லாவும், புதுசாவும் இருந்துச்சுங்க. விலையும் ரீஸனபிள்தான். அதைப் பத்தி எங்க இவர்கிட்டே சொல்லித்தான் இப்ப இங்கே வந்தோம். எண்ணி மூணே வருசத்துலேஇப்படிக் குப்பையாக் கிடக்குமுன்னு நான் எதிர்பார்க்கலை. கார்பெட் எல்லாம் கிழிஞ்சு, நிறமெல்லாம் போய்அசிங்கமா இருக்கு. முக்கியமா இந்தக் கிழிசல் ஆபத்துதான். யாராவது கால்தடுக்கி விழுந்தா? போதாக்குறைக்குப்பொன்னப்பா( எவ்வளோ நாள்தான் பொன்னம்மான்னே சொல்றது?) மாதிரி வேக்குவம் க்ளீனரை அங்கெ காரிடோர்லேயே, நீள வயரோடு போட்டு வச்சிருக்காங்க. யாரையாவது கட்டாயமா விழ வைக்கணுமுன்னே முன்னேற்பாடா இருக்குறாங்க போல. நாங்க தங்குன ரெண்டு நாளும் அங்கெயேதான் கிடந்துச்சுங்க. இன்னும் கிடக்கும், நீங்க வேணாப் பாருங்க.



இதுக்குப் பேர் ரொம்ப பெத்தபேரு, 'ஹோட்டல் சாம்ராட்'. இதுக்கு நேர் எதிரே நடராஜ் தியேட்டர். அடையாளம் சொல்ல சுலபம்.மச்சினர் வீட்டுக்குப் பக்கமுன்னுதான் முந்தியும் இங்கே வந்தது. சாப்பாடு அங்கே, தூக்கம் இங்கே.


என்னோட தமிழ் இலக்கிய சேவை(!) ஆரம்பிச்ச இடம் மரத்தடி. அப்ப என்னமோ இதோட முக்கியஸ்தர்கள் எல்லாம் பெங்களூருன்னு ஒரு தோணல். அப்படியில்லே, எல்லா ஊர்லேயும் ஆளுங்க இருக்காங்கன்றது வேற விஷயம். அப்பநான் சேர்ந்த காலத்துலெ, இந்த மரத்தடியின் பெங்களூரு கிளை ரொம்ப சலசலத்துக்கிட்டே கலகலன்னு இருந்துச்சா,எனக்கும் ஒரு அபிமானமாப் போச்சு. இப்ப நம்ம வலைஞர்கள் வேற அங்கிருக்காங்களா, எல்லாரையும் சந்திக்கற ஆர்வம் கூடிப்போச்சு.


ஹரிமொழின்னு சொந்த தளம் வச்சு எழுதிக்கிட்டு இருக்கற ஹரிகிருஷ்ணன் அவர்கள் இப்ப நங்கநல்லூர்லே இருந்து பெங்களூரு போயிட்டார். இவரைப் பத்திச் சொல்லணுமுன்னா என்னாலெ ஆகாது. நேத்து முளைச்ச காளான், எக்கச்சக்கமாக் காய்ச்சுக் குலுங்கி நிக்கற மாமரத்தை (இனிப்பு மாம்பழத்தோடு கூடிய)பத்தி என்ன சொல்ல முடியும்? ( நல்லா இருக்காஉவமை?) சமீபத்துலே இவர் எழுதுன அனுமனின் வார்ப்பும் வனப்பும் என்ற புத்தகத்தைப் பாராட்டி, இவருக்குக் கவுரதை கிடைச்சது. பாராட்டுவிழா வெல்லாம் படத்துலெ பார்த்தேன்.


நம்ம இளவஞ்சி, ராகவன்( ஜிரா) சுதர்சன் எல்லோரும் சந்திக்க வரேன்னு சொல்லியிருந்தாங்களா, அவுங்களையும் ஹரியண்ணா( இப்படித்தான் அவரை எல்லோரும் கூப்புடறாங்க. ஆனா நான் மட்டும் ஹரித்தம்பின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். என்ன சொல்லுங்க, அவரைவிடக் கொஞ்சம், (கொஞ்சமே கொஞ்சமுன்னாலும்) மூத்தவ இல்லையா?)க்ரூப்போடயே சேர்த்துப் பார்த்தா நல்லா இருக்குமுன்னு நினைச்சேன். ஆனா நம்ம வலைஞர்களுக்கு மரத்தடிஅவ்வளவா பரிச்சயமில்லையாம். அதுவுமில்லாம அன்னைக்கு வேலை நாளாச்சுங்களா, சாயந்திரமாத்தான் கொஞ்சம்நேரம் இருக்குமுன்னு சொன்னாங்க. அதுவுஞ்சரிதான். ஒரு ஏழு, ஏழரைமணின்னு முடிவாச்சு. ஹொட்டலுக்கே வந்துடறோமுன்னு சொன்னாங்க.


இங்க இருக்கப்போறதோ ரெண்டே நாளு. அதுலெ ஒரு நாளைச் சொந்தங்களுக்கு ஒதுக்கணும். ஒரு நாளு நமக்கு.அதானே ஞாயம்?


ஹரியண்ணாவைப் பார்த்துரலாமுன்னு அவருக்குப் ஃபோன் போட்டு எந்நேரம் வசதிப்படுமுன்னு கேட்டா,அவர் சொல்லிட்டார், உங்க நேரமெ என் நேரமுன்னு! ஒரு அஞ்சு மணிவாக்குலே வரேன்னு சொல்லிட்டுப் போனோம்.
வீட்டுக்குள்ளே நுழைஞ்சு மாடிப்படியேறிப் போனா, அவரோட திருமதி, 'மேடம் வந்துட்டாங்க'ன்னு மேல்மாடியைப் பார்த்து உரக்கச் சொன்னாங்க. என்னடான்னு பார்த்தா, ரெண்டாவது மாடியிலே ஒரு அறையிலே இருக்கார். உள்ளே அட்டகாசமான புத்தக அலமாரி, கணினின்னு ஒரு செட்டப்பு. சுவத்துலே அடடாடா... என்னன்னு சொல்றது? அருமையானபுள்ளையார். மரச்சிற்பம். சின்ன விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கு.


ரொம்ப ஒல்லியா இருக்கார். கண்ணு தீர்க்கமா பார்க்குது. இன்னிக்குத்தாம் மொதமொதலாப் பாக்கறோம்ன்ற எண்ணமே வரலை.ச்சும்மா குசலம் விசாரிச்சுத் தொடங்குன பேச்சு, அப்படியே ஆழமான இலக்கியப் பேச்சாப் போகுது. என்னைப் பயமுறுத்துறாப்பலெ அடிக்கடி கம்பராமாயணத்துலே, இன்னும் புறநானூறுன்னு செய்யுளைச் சொல்றார். ஆஹா, இவர் சாமானியப்பட்ட ஆளில்லைரா, ரொம்ப கவனமா இவர் பேச்சைக் கேக்கணுமுன்னு தோணிப் போகுது. பேச்சு சுவாரஸியத்துலே நேரம் போகறதே தெரியலை. இளவஞ்சிக்கு போன் போட்டு ஏழரையை எட்டாக்கிறலாமுன்னு சொல்லியாச்சு. பாவம் அவுங்கவேற வந்து காத்துக்கிட்டு இருந்தாங்கன்னா?


பாரதியாரின் கவிதைகள் எப்படி தேசிய உடமையா ஆனதுன்னும், இன்னும் பாரதியார் வாழ்க்கையைப் பத்தியும்கூடப் பேச்சுப் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருந்துச்சு. எங்க இவர்வேற இப்பத்தாம் மொதல் மொதலா ஒரு இலக்கியவாதியைச் சந்திக்கறார். அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் மெஷின்கள்தான். இப்படி ஒரு உலகம் இருக்கான்னு 'ஆ'ன்னு பேச்சுமூச்சுல்லாமக் கேட்டுக்கிட்டு இருக்கார். இன்னிக்கு நேரம் பத்தாமப் போச்சு. அடுத்தமுறை வரும்போது, ஒருநாள் முழுக்க இவரோட பேச்சைக் கேக்கணுமுன்னு தோணிருச்சுங்க..


மரத்தடியிலே சக்திப்பிரபா, அய்யப்பன், ஷைலஜாவுக்கெல்லாம் கூடச் சொல்லியிருந்தேன். ஷைலஜா இப்ப நாட்டுலேயே இல்லை. சக்தியும் படிப்புலே கொஞ்சம் பிஸி. ஆனா முடிஞ்சா சந்திக்கலாமுன்னு சொல்லி இருந்தாங்க. அய்யப்பன் மட்டும் மனைவியோடு ( புது மணமக்கள்தான்) வந்தார்.


திருமதி பத்மா ஹரிகிருஷ்ணன், கீழே அவசர அவசரமா எங்களுக்கெல்லாம் 'அடை' செஞ்சுச் சுடச்சுட மேலே எடுத்துக்கிட்டு வந்தாங்க. ஒரு குரல் கொடுத்துருந்தா, நாங்களே ஓடிப்போய் கீழே சாப்புட்டுருப்போம். பாவம், ரெண்டாம் மாடிக்கும் , கீழேமுதல் மாடிக்குமா ஓடி ஓடி வந்துக்கிட்டு இருந்தாங்க. இவுங்க வீட்டு இட்டிலியைப்பத்தி பல இடத்துலே கேள்விப்பட்டிருந்தேனா,'என்னங்க அடை? இட்டிலி இல்லையா?'ன்னு கேட்டேன். வாய்க் கொழுப்பு..ம்ம்ம்.


பாவம் பத்மா. ஒரு நொடி திகைச்சுப் போயிட்டாங்க. 'இப்ப செஞ்சுரட்டா?'ன்னு வேற கேக்கறாங்க. இவ்வளவு அப்பாவியா இருந்தா எப்படிங்க? எனெக்கென்னவோ டி.கே.சியோட குற்றாலம் வீடு நினைவு வந்துச்சு. நான் போனேனான்னு கேட்டுறாதீங்க.எல்லாம் வாசிப்பு ஞானம்தான்! இந்த ஆச்சரியக்குறி போடறப்ப எல்லாம் ஹரியண்ணா ஞாபகம் வந்துரும். அவர்தான்கொஞ்சமா எப்பவாவது ஒருக்கப் போடணுமுன்னு சொல்லியிருந்தார். இல்லேன்னா நான் !!! அள்ளித் தெளிக்கிற ஆளு.இருக்கட்டுமே, காசா பணமான்னு போடறதுதான்.


அடையோடு முடியுமா? ச்சுடச்சுட நல்ல அருமையான காஃபி வேற! பத்மா வேலைக்கும் போறாங்க. அப்புறம் வீட்டு வேலை,இதெல்லாம் போதாதுன்னு இப்படி இலக்கியம் பேச வரும் நண்பர்களுக்கு ஓடிஓடி உபசாரம்னு இருக்காங்க. அவுங்க பொறுமையைப் பாராட்டி திரும்புற வழியெல்லாம் இவர்கிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்.


சொல்ல மறந்துட்டேனே, இதோடு விட்டாங்களா? கிளம்பறப்ப தாம்பூலம், ப்ளவுஸ் துணி, முழுத்தேங்காய்னு வச்சுக்கொடுத்தாங்க. உடனே, எங்க இவர்கிட்டே, 'இந்தக் கலருலே புடவை என்கிட்டே இல்லேன்றதை ஞாபகம் வச்சுக்குங்க'ன்னு அங்கேயே சொல்லிட்டுத்தான் வந்தேன். சாட்சி வேணாமா? எப்படியோ ஒரு ஹிண்ட் கொடுத்தாச்சு.


நாங்க திரும்ப வந்து ஹோட்டல் லாபியிலே உக்காந்திருந்தோம். சுதர்சன் செல்லுலே கூப்பிட்டு, வந்துக்கிட்டே இருக்கேன்,ஆனாட்ராஃபிக் ஜாம் ஆயிருச்சுன்னு சொன்னார். அப்ப ரெண்டு இளைஞர்கள் வந்து சேர்ந்தாங்க. அவுங்கதான் நம்ம இளவஞ்சியும், ராகவனும்.


அன்னிக்கு காதலர் தினம்வேற. ராகவனோ டிப்டாப்பா டையும் கையுமா இருக்கார். இளவஞ்சி நம்மைப்போல சாதாரணமாத்தான் இருந்தாருன்னு சொல்ல முடியலை. கண்ணுலே அந்த இலக்கிய ஒளி வீசுது. ஒரு அஞ்சாறு நிமிஷம் அங்கேயே இருந்து அறிமுகப்பேச்சை ஆரம்பிச்சோம்.எம்ஜிஆர் மாதிரி கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு வராருங்க நம்ம சுதர்சன். ஆஹா ஜமா சேர்ந்தாச்சு. இனி இங்கே என்ன, மேலே போய்ப்பேசிக்கிட்டு இருக்கலாமுன்னு கிளம்பினோம்.


பின் குறிப்பு: இது துளசிதளத்தின் முன்னூறாவது பதிவுன்னு ப்ளொக்கர் சொல்லுதுங்க. அது சொன்னாச் சரியாத்தானிருக்கும்.இல்லீங்களா?


Wednesday, April 05, 2006

அட!!

மக்கள்ஸ்,


இன்னிக்கு ரொம்ப சந்தோஷமான நாள். இங்கே நியூஸியின் சரித்திரத்துலேயே,முதல்முறையா ஒரு இந்தியர் கவர்னர் ஜெனரலா ஆகியிருக்கார்.


இவர் பெயர் ஆனந்த் சத்யானந்த். வயது 61


இவரது பெற்றோர்கள் ஃபிஜியிலிருந்து இங்கே வந்து குடியேறிய இந்தியர்கள்.

இங்கேயே படித்து, வழக்குரைஞராக( இது சரியா, இல்லே வழக்கறிஞரா?) இருந்து ,இப்போடிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜாக இருக்கற இவர் ஆகஸ்டு மாதம் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பார்.


இதுவரை வெள்ளைக்காரர்களும், மவோரி இனத்தவர்களும்தான் இந்தப் பதவி வகிச்சுருக்காங்க.

காலம் மாறி வருது.

இவருக்கு நம் நல்வாழ்த்துகள்.


இந்த மகிழ்ச்சியை உங்களோடு சேர்ந்து பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.

Tuesday, April 04, 2006

சென்னை வலைஞர்கள்



பயண விவரம் பகுதி 15


இங்கே இதுவரைக்கும் வந்ததே இல்லை. மெட்ராஸ் (அப்பெல்லாம் இப்படித்தான் சொல்றது)லேதான் இருந்தோம்.ஆனா 'ட்ரைவ் இன்' அப்படின்னா கார்லெதானே வரணும். நம்மகிட்டேதான் 'அப்படின்னு ஒண்ணும்' கிடையாதே.அதனாலே இது நமக்கில்லைன்னு 'கெளரவமா' இருந்துட்டோம்.வர்றவழியிலேயே நம்ம டோண்டுவுக்குப் போன் போட்டு வழியெல்லாம் பக்காவாக் கேட்டுக்கிட்டே வந்தோம். என்னை மத்தவங்க கண்டுபிடிக்கறதுக்குஉதவியா இருக்குமுன்னு யானைப் படம் போட்ட உடுப்போட போனேன்.


'இதோ , நம்ம அருணா இங்கெ இருக்காங்களே'ன்னு தோட்டத்து முகப்புலேயே இறங்கிட்டோம். இப்பக் கார் வந்துருச்சான்னுகேக்காதீங்க. அதான் ஆட்டோ இருக்கே. அருணாவும், 'இங்கே இருந்தா நம்ம ஆளுங்க வர்றதைக் கவனிக்கறதுசுலபமு'ன்னு சொன்னாங்க. அதுலெ என்னன்னா, ஒன்னரை வருஷமா பதிவுகளிலே மட்டும்தானே இவுங்களைப் பார்த்துருக்கோம். மொதலாவது, யார்யார் வரப்போறாங்கன்னே சரியாத் தெரியலை.


அஞ்சு மணிக்குன்னுதான் சொல்லியிருந்தாங்க. நம்ம ரஜினி ராம்கியும், கிருபாஷங்கரும் ஏற்பாடு செஞ்சு, எல்லாருக்கும்(!)மயில் அனுப்பி வச்சிருந்தாங்க. கொஞ்ச நேரத்துலே ஒருத்தர் வந்து எங்களொடு சேர்ந்துக்கிட்டார். அவர் நம்ம எஸ்.கேன்னுதெரிஞ்சுக்கிட்டோம். நாங்க பேசிக்கிட்டு அங்கேயே நின்னப்ப ஒரு ஸ்கூட்டர்/பைக்( ஏதோ ஒரு ரெண்டு சக்கர வாகனம்) வந்துநின்னது. அதோ நம்ம கிருபா( அதான் அவரோட நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தோமே)கூடவர்றவர் ஹை, ஐகாரஸ் பிரகாஷ்.அவரோட பதிவுலே பார்த்த மாதிரியே இருந்தார். ஆனா ரொம்ப ஒல்லியா இருந்தார். நாணயம் விகடனிலேகூட கொஞ்சம் பூசுன மாதிரி இருந்தாரே.


அப்பத்தான் நம்ம டோண்டு, செல்லுலே கூப்புட்டு, எங்கே இருக்கீங்க? உள்ளே காத்துக்கிட்டு இருக்கோம், வாங்க'ன்னுசொன்னார். நாங்க இங்கே வாசலிலேயே நிக்கறோம், இவர் எப்படி உள்ளெ போயிருக்கார்?
உள்ளெ நுழைஞ்சு இவுங்களைத் தேடறப்ப, வலதுபக்கம் இருந்த தலைப்பாகைக் கட்டுனவரை, அருணா காமிச்சு,'யார்னுதெரியுதா?ன்னாங்க. பி.பி.ஸ்ரீனிவாஸ்! நான் இப்பத்தானே 10 நாள் முந்தி இசைக்கல்லூரியிலே பார்த்தேன். இடதுபக்கம் இருக்குற பகுதியிலே நம்ம டோண்டுவும், இன்னொரு இளைஞரும் இருந்தாங்க. அவர்தான் சங்கர்( சுவடுகள்)அப்புறம் வெளிர்நீலப் புடவையில்( இதை ருக்மணி கலர்னு சொல்வோம்) கம்பீரமா நடந்து வந்தவுங்கதான் நம்ம மதுமிதா( கவிஞர்)


இங்கே எல்லாரும் சேர்ந்து உக்கார இடம் சரியில்லையே, வெளியே போய் தோட்டத்துலே உக்காரலாமேன்னு வெளியே போனோம். அங்கே மூணு மேஜைகளைச் சேர்த்துபோட்டு மகாநாட்டுக்கான செட்டப்பைச் செஞ்சாச்சு.நம்ம நாராயணன்( உருப்படாதது) வந்துட்டார். அவரைப் பார்த்து நான் ரஜினிராம்கி ன்னு தப்பா(!) நினைச்சுட்டேன்.வந்தாருப்பா நம்ம டிபிஆர் ஜோஸஃப், நெடுநெடுன்னு உயரமா. ராம்கியும்( ஸ்டேஷன் பெஞ்சு) மரவண்டு கணேஷும்வந்து உக்கார்ந்தாங்க.


நான், 'எல்லோரும் அவுங்கவுங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க. அப்புறம் வந்தவங்களுக்கு ஒரு வரவேற்பு உரைகொடுக்கணும். அதுக்கப்புறம், இன்னும் தமிழ்மணம் மூலமும், நம்ம எழுதுற பதிவுகள் மூலமும் என்னெவெல்லாம் சாதிக்கலாம்(!)னு மத்தவங்க கருத்துக்களைக் கேக்கணும்'னு திட்டம் போட்டு வச்சுருந்தேன். வரவேற்புரைக்குத் தொண்டையைக்கூட சத்தமில்லாம கனைச்சு ரெடி பண்ணிட்டேன். ஆனா பாருங்க, அப்படி எதுவும் நடக்கலை.அவுங்கவுங்க பக்கத்துலே இருந்தவங்ககிட்டே மும்முரமாப் பேசிக்கிட்டு ரொம்ப கேஷுவலா இருந்தாங்க. ஓ....இங்கெ இப்படித்தானாக்கும்னு நானும் ஜோதியிலே கலந்துகிட்டேன். நான் இருந்த இடத்துலே எஸ்.கே, அருணா,மதுமிதா. எதிர்லே கிருபா, பிரகாஷ், சங்கர்.


கோபால் இருந்த பக்கம் ராம்கி, நாராயணன், டிபிஆர்ஜோ, டோண்டு, கணேஷ். அங்கேயும் ரெண்டு க்ரூப்பாயிருச்சு.அப்புறம் நாராயணன் எங்கபக்கம் வந்து கொஞ்சநேரம் உக்கார்ந்தார்.


முக்கியமான கேள்வி ஒண்ணை நம்ம பிரகாஷ்கிட்டே மறக்காமக் கேட்டேன், 'அது என்னங்க ஐகாரஸ்?'ன்னு.


அவரும் சொன்னார் பதிவு எழுத ஆரம்பிச்சப்ப ஐகாரஸ் பத்திப் படிச்சுக்கிட்டு இருந்தாராம். அதனாலெ அதைஅப்படியே பேரோடு சேர்த்துக்கிட்டாராம். ( இது சரியா பிரகாஷ்? இல்லே, நீங்க ஒண்ணு சொல்லி, நான் வேற 'ரீல்' விட்டுட்டேனா?)


மொத்தம் முன்னூத்திப் பதிமூணா இருந்தோம்.இதுலே பாருங்க, நாங்க வந்து உக்கார்ந்தவுடனே எங்க மேஜையிலே ஒரு முன்னூறு வந்து உக்காந்துருச்சுங்க.கிருபாதண்ணி ஊத்திவச்சு விரட்டப் பார்த்தாரு, ஊஹூம், ஒண்ணும் ஆகலை. நல்லா இருட்டத் தொடங்குனதும் ஒருவழியாஇடத்தைக்காலி செஞ்சாங்க அந்த 'ஈ'ங்க.


அப்படி இப்படின்னு நேரம் போயிருச்சு. டோண்டுவும் உடல்நிலை சரியில்லாதபோதும் வந்து கலந்துக்கிட்டார்.வீட்டம்மா மிரட்டுனவுடனே( செல்லமா) கிளம்பிட்டார். முன்னுரை ஏதும் இல்லாததாலே முடிவுரையும் இல்லை.


ஒவ்வொருத்தராக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. கணேஷ், எஸ்.கே, சங்கர், கிருபா, பிரகாஷ்,ராம்கி, மது,நாங்க எல்லாம் கடைசியா இடத்தைக் காலி செஞ்சோம்.
கணேஷ், பெங்களூருலே இருக்க வேண்டியவர், இங்கே என்ன செய்யறாருன்னு கேட்டா, இப்பச் சென்னையிலேயே வேலையாம். ரொம்ப மெதுவா அதிராமப் பேசறார். ஜெயச்சந்திரன் பாட்டுப் பிடிக்குமான்னு கேட்டார். பின்னே,பிடிக்காம? ஒரு சிடி கொடுத்தார்.


சுரேஷ் கண்ணன் வரேன்னு சொல்லியிருந்தார். ஆனா வரமுடியலையாம். ரஜினிராம்கியும் ஊருக்குப் போகவேண்டியதாஆயிருச்சாம். தாணு, வரலாமுன்னு இருந்தாலும், அன்னைக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாப்போச்சாம்.

நாங்க இருக்குற தெருவோட அடுத்த பகுதியிலேதான் மது இருக்காங்களாம். அதனாலெ நாங்க மூணுபேரும் ஒண்ணாவேபுறப்பட்டோம். மதுவை அவுங்க வீட்டுலே விட்டுட்டுப் போறதா ஏற்பாடு. அப்படியே அவுங்க வீட்டைப் பார்த்ததாவும்ஆச்சு. ஏண்டா இவளுக்கு வீட்டைக் காமிச்சோமுன்னு நொந்து போற அளவுக்கு அவுங்களை படுத்துனது வேற விஷயம்!


நம்ம டோண்டு அவரோட பதிவுலே படங்கள் சில போட்டுருக்கார். அதனாலே நான் வேற சிலதைப் போடறேன்.ப்ளொக்கர் தயவு வேணும். வந்தா உங்க அதிர்ஷ்டம்.


சென்னை வலைப்பதிவாளர்கள் மாநாடு இனிதே நிறைவுற்றது. நாளைக்கு பெங்களூரு கோயிங்க்.


Monday, April 03, 2006

நூபுர கங்கை

பயண விவரம் பகுதி 14


இன்னிக்கு மாலை இங்கிருந்து கிளம்பறோம், மறுபடி சென்னைக்கே. சனிக்கிழமையாவும் இருக்கு.நம்ம 'சுந்தர ராஜனை' பார்க்கோணும். அப்படியே மேலே பழமுதிர்ச்சோலைக்குப் போய் முருகனையும் கண்டுக்கலாம். தைப்பூசமாச்சே! நல்ல நாளாத்தான் அமைஞ்சுருக்கு.


என்ன ஒண்ணு, நம்ம ஷங்கர் வண்டி கிடையாது. அவரை ஒரு வாரத்துக்கு திருச்சிக்குப் போறதுக்கு க்ளெயண்ட் கேட்டுருக்காங்களாம். நல்ல நம்பகமான மனுஷர். வர்ற வேலையை நமக்காக விடச் சொல்ல முடியுங்களா?அதிலும், இவுங்களுக்கு மாசச் சம்பளம் இல்லையாமே. என்னிக்கு வேலை செய்யறாங்களொ அன்னிக்கு மட்டும்தான் சம்பளம். தினப்படி பேட்டா பயணிகள் கொடுத்துருவாங்க. வேற அஸைன்மெண்ட் கிடைச்சதும் மேலே வந்து நம்மளைப் பார்த்துச் சொல்லிட்டு போனார்.


கல்யாணத்துக்குப் போனோம் பாருங்க, அப்பவும் ஒருதடவை போனவுடனே, வழியெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டுச் சொந்தக்காரங்க வீட்டுக்கு ட்ரிப் எல்லாம் கவனமாச் செஞ்சார். நல்ல துணிமணிகள் கார்லேயே வச்சுக்கிட்டு இருந்து விசேஷத்துலே கலந்துக்கிட்டப்ப படு நீட்டா இருந்தார். எங்களுக்கு அவரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சரி. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.


எட்டரைக்கெல்லாம் நம்மளைக் கொண்டு போக வந்தவர் காதர் பாட்சா. அழகர் கோயிலுக்குப் புறப்பட்டாச்சு. இவரும் பரவாயில்லை. குடும்பக்கதைகளைச் சொல்லிக்கிட்டே வந்தார். கொஞ்ச தூரத்துலே ஒரு பெரிய சிலை தென்பட்டது.அங்கே நிறுத்தச் சொன்னோம். அது ஒரு சக்தி கோயிலாம். 16 கைகளோட அம்மன் ஆகாயத்துக்கும் பூமிக்குமா நிக்குது. நமக்கும் இப்படி பதினாறு...ச்சீச்சீ அத்தனை வேணாம், ஒரு ஆறு கை இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்? ப்ளவுஸ் தச்சுக்கக் கஷ்டமாப் போயிருமே (-:


கோயில் நல்லா நீட்டா இருந்துச்சு. ஒரு சிவனையும் கோபுரத்துக்குப் பக்கத்துலே கட்டிக்கிட்டு இருக்காங்க.அதுக்கப்புறம் நம்ம ஸ்டாப், அழகர் கோயில்தான்.

கருப்பணசாமிக்குன்னு ஒரு ச்சின்னக் கோயில் வாசலிலேயே இருக்கு. அதுக்குப் பக்கத்துலே யானைக் கொட்டடி. பேரு கல்யாணி. பத்து ரூபாய் வாங்கிக்கிட்டு ஆசீர்வாதம் செஞ்சது. மரத்தடியிலே சிலபேர் பொங்க வச்சுக்கிட்டுஇருந்தாங்க. வேண்டுதலாம். நுழைவாசலுக்கு வந்தோம்
வாசலிலேயே நிறைய குரங்கன்மார் ஓடித்திரிஞ்சாங்க. அவுங்களுக்குப் போடக் கடலை வகையறாக்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க. நிறைய வாங்கிக்கிட்டுப் போனோம். அவன்களுக்கும் தெரியும் இந்த மாதிரி பொட்டலம் கையிலே இருந்தா,அவுங்களுக்குன்னு. ஓடி வந்தாங்க. பிரிச்சுப் போட்டாச்சு. குட்டிக்குட்டிக் குரங்குங்களைப் பாக்கவே ஆசையா இருந்துச்சு.எனக்கு ஒரு குரங்கு வளர்க்கணுமுன்னு ரொம்ப ஆசை. ஆனா நிறைவேறலையே. இப்படித்தான் என் பொண்ணுக்கும்.


ஒருதடவை மகாபலிபுரத்துலே குரங்காட்டியோட குரங்கு நாங்க கை நீட்டுனவுடனே சரசரன்னு காலைப் பிடிச்சு ஏறிவந்து மகள் கையிலே உக்காந்துக்கிச்சு. நாங்க தடவித் தர்றோம்.கூட வந்த அண்ணன் குடும்பம், கீழே விட்டுருன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் ஒரே பயம். சில குரங்குங்க கடிச்சுரும்தான். ஆனா அது ரொம்பக் குட்டியா இருந்துச்சு.


கோயிலுக்கு உள்ளே போயாச்சு. அழகனையும் பார்த்தாச்சு. வண்டியை எடுத்துக்கிட்டு அங்கிருந்து மேலே போகணும்.மீனாட்சி கோயில் மாதிரியெ இங்கேயும் பிச்சை எடுக்கும் பெண்கள் எங்களை ஓடஓட விரட்டுனாங்க.
பழமுதிர்ச்சோலைக்கு போய்ச் சேர்ந்தா, 'தைப்பூசம்'ங்கறதாலே விசேஷ பூஜை & எக்கச்சக்கக் கூட்டம். ஸ்வாமிஅலங்காரம் நடந்துக்கிட்டு இருக்கு.


அதுவரைக்கும் ச்சும்மா நிக்காம இன்னும் மேலே போய் 'நூபுர கங்கை'யைப் பார்த்துட்டு வரலாமுன்னு போனோம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்கும். கார்ப் பாதை இருக்கு.


மேலெ போகப் படிக்கட்டுங்க நல்லா விஸ்தாரமாவே இருக்குங்க. ஒரு கை இல்லாத குரங்கர் இருந்தார். பாவமா இருந்தது. பொரி ஒரு பாக்கெட் வாங்கி அதை பிரிச்சுக்கிட்டு இருந்தேன். அது மெதுவா வந்து அடுத்த கையாலெ மொத்தபாக்கெட்டையும் பறிச்சுக்கிட்டுப் போயிட்டார்.


மேலே போனா, ஆளுக்கு ஒரு ரூபாய் வசூலிச்சுக்கிட்டு உள்ளெ விட்டாங்க. தரையெல்லாம் ஒரே ஈரம். குளிச்சுட்டு வர்றவங்க 'நதநத'ன்னு செஞ்சு வச்சுருந்தாங்க. கிழே போக ஒரு இருவது படிக்கட்டு இருக்குங்க. ஆண்களுக்கும்பெண்களுக்கும் வெவ்வேற படிகள் அந்த முற்றத்துக்கு ரெண்டு பக்கமும் எதிரெதிரா. அந்த முற்றத்துலே, மேலெ இருந்துஒரு பக்கம் மூணு குழாயிலிருந்து தண்ணீர் வந்துக்கிட்டு இருக்கு. ஒரு தொட்டி கட்டி அதுலெ கீழ்ப்புறமாமூணு குழாய் வச்சிருக்காங்க.அருவியா வந்தாத்தானே பாக்கறதுக்கு நல்லா இருக்கும்? இது,சாதாரணத்தண்ணியை தொட்டிமூலம் ஊத்தற வேலையோ என்னவோ? யாரு கண்டா?


ஆனாலும் ஜனங்க நம்பிக்கையோடு குளிக்குதுங்க. ஒரு விதத்துலே நம்புனாதான் கடவுள். இல்லையா? மெதுவா இறங்கி வந்தோம். அங்கே மரத்துலே நூத்துக்கணக்கா தூக்கணாங் குருவிக்கூடுங்க காத்துலெ அழகா ஆடுதுங்க. பாக்கவே ரம்யமா இருந்துச்சுங்க.


திரும்ப பழமுதிர்ச்சோலை வந்தோம். 16 வருசத்துக்கு முன்னே இங்கே வந்துருக்கோம். அப்ப ஒரு மேடையிலேவேல் மட்டும் செங்குத்தாக் குத்தி வச்சிருக்கும். முருகன், சூரபத்மனை அழிச்சுட்டு, கோபம் தணிஞ்சு ( தணிகை மலை)அங்கிருந்து இங்கே வந்து கையிலே இருந்த வேலைப் பூமியிலே குத்தி வச்சுட்டு மறைஞ்சுட்டார்னு ஐதீகம்.இப்ப என்னன்னா அங்கெ கோயிலே கட்டிட்டாங்க. உள்ளே முருகன் சிலையை பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க.


கொஞ்ச நேரம் காத்திருந்தோம். திரை விலகியது. அலங்காரமா நிக்கறார் முருகன்.


வழக்கம்போல் கோயில் வாசலில் மலைப்பாதை முழுசும் ரெண்டு பக்கமும் தர்மம் யாசிக்கிறவங்க. பாவமாத்தான் இருக்கு.ஆனா எல்லாருக்கும் போட முடியலையே. அதுலே ஒருத்தர் நான் கார்க்கதவை மூடப்போனப்ப, 'அம்மா, நீ ஒரு கோயில் கட்டணுமுன்னு இருக்கே. அது நடக்கும். தர்மம் செய் தாயி'ன்னு சொன்னார்.


அதுக்குள்ளே வண்டி கிளம்பிருச்சு. ஒரு நிமிசத்துக்குப் பிறகுதான் மண்டையிலே நுழைஞ்சது அவர் சொன்னது.


நினைச்சதுக்கு முன்னாலேயே கீழே இறங்கிட்டோம். கீழே அன்னதானமுன்னு ஒரு சின்னப்பந்தல் போட்டு சாப்பாடுப்பொட்டலம் வினியோகிச்சுக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் கூட்டம்தான். அப்ப மரத்தோரமா உட்காந்துருந்த ஒருதள்ளாத பாட்டி, அங்கேயே கவனமாப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களாலே போய் நின்னு வாங்க முடியாத உடல்நிலை.நாம எதுக்கு இருக்கோம்? இவரும் சொன்னார், ' பாவமா இருக்கு. நீ போய் ஒண்ணு வாங்கியாந்து தாயேன்'னு.


நானும் போய் வரிசை(?)இல்லாதக் கூட்டத்துலே நின்னு ஒண்ணு வாங்கிவந்து அந்தப் பாட்டிக்குக் கொடுத்தேன்.அப்ப பாட்டி புன்முறுவலோடு மெதுவா அதும்பக்கத்துலே வச்சிருந்த கூடையத் திறந்து காமிக்குது, அதுலேஏற்கெனவே 3 இருக்கு. நம்மை போலவே இன்னும் 3 பேர் இருந்துருக்காங்க. பாட்டி சொன்னது, 'இதுவே போதும் ஆத்தா'ன்னு.ஹூம்... மொதல்லேயே பாட்டிகிட்டே கேட்டுருக்கலாம், 'சாப்பாடு பொட்டலம் வேணுமான்னு?'


இப்ப என் கையிலே இருக்கற பொட்டலத்தை என்ன செய்யறது? பேசாம பிரிச்சுச் சாப்புட்டுறவா? ஒரு பத்தடி நடந்தப்பஒரு அம்மா, வேகமா நுழைவு வாயிலிலே வராங்க.அவுங்களுக்கு வேணுமான்னு கேட்டேன், உடனே வாங்கிக்கிட்டாங்க.அந்த அரிசியிலே அந்தம்மா பேருதான் எழுதியிருக்கும் போல.


நேரம் இருக்கெ, தருமியைப் பார்த்துட்டுப் போயிரலாமுன்னுஅவர் வீட்டுக்கு ஃபோன் போட்டோம். ஒரிஜனல் ப்ளான் படி சாயந்திரம் ஏர்ப்போர்ட் போறதுக்கு முன்னாலெ அவரைச்சந்திக்கணும். அவருக்கும் திடீர்னு சாயந்திரம் கொஞ்சம் வேற வேலை வந்துருச்சுன்னு தெரிஞ்சது. நல்லதாப்போச்சுன்னு நேரா அவர் வீட்டுக்குப் போயிட்டோம். அவர் சொன்ன ஏரியாவுக்குப் போனமெ தவிர வீடு இருக்கற இடம் தெரியலை. அதான் இருக்கவே இருக்கே செல்லு.


அவரே ஸ்கூட்டருலே வந்து விஐபி வண்டிக்கு முன்னாலெ போற பைலட் வண்டி மாதிரி வழி காமிச்சார்.வீட்டு வாசலில் இறங்குனதும் 'போபோவும், டாம்மியும்' வரவேற்புக் கொடுத்தாங்க. போபோ ,ப்ரவுன் கலர்.டாம்மி கருப்பும் வெள்ளையும். போபோ தருமியோடது, டாம்மி பக்கத்து வீட்டுக்காரர். வயசு என்ன ஒரு ஆறுவாரம் இருந்தா ஜாஸ்தி. பக்கத்து வீட்டுக்காரர் 'ஓடிறப்போறாரு'ன்னு கட்டிப் போட்டுருந்தாங்க. போபோ வீட்டுஆளாச்சே. தைரியமா உலாத்திக்கிட்டு இருந்தார். அப்ப ஒரு பெரிய நாய் ஒண்ணு திறந்திருந்த கேட் வழியா 'விருக்'னுவெளியே ஓடிப்போச்சு.


வீட்டுக்குள்ளே போனோம், வீட்டம்மாவைப் பார்த்தோம் பேசோ பேசுன்னு பேசுனோம். அப்பத்தான் தெரிஞ்சது அந்த 'ஓடுன நாய்'வீட்டம்மாவோட செல்லமாம். ஆனா கொஞ்ச நேரத்துலே தானே வந்துருமாம்ன்னு சொல்லிக்கிட்டு, அப்பப்ப வந்துருச்சான்னுகேட்டைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நானும், துணைக்கு கேட்டைப் பாத்துக்கிட்டே அவுங்களோட பேசுனேன். ரொம்ப நேரங்கழிச்சுப் போனவர்' திரும்ப வந்துட்டார்.


இதுலே பாருங்க இவுங்க வீட்டு வரவேற்பறைக்கு முன்னாலே இருக்கற ' ஃபோயர்'லே எல்லாம் போபோவுக்கு அனுமதி இல்லையாம். ஆனா நாய்க்காரி வந்த தைரியத்துலே ( இவளே உள்ளே போறப்ப எனக்கென்ன உரிமை இல்லையா?)அது அங்கெ வந்து நிம்மதியாப் படுத்துக்கிட்டுக் 'குட்டி'த் தூக்கம் போடுது!


இங்கே வந்தவுடனே நம்ம காதர் பாட்சாவை சாப்பாட்டுக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு ரெண்டு மணி வாக்குலேதிரும்ப வந்துட்டார். நாங்களும் கிளம்பி, மதிய சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ஆனந்தா மெட்டல்ஸ் போனோம்.'யாத்திரை வந்தா பாத்திரக்கடையைப் பார்க்காமப் போனா புண்ணியம் கிடைக்காதாம்'( புது மொழி!)ச்சும்மா ஒருபார்வை பார்த்துட்டு, குக்கர்லே வைக்க ஒரு இன்செட்டும், சிணுக்கோல் ஒண்ணும், சில குங்குமச்சிமிழ்களும் வாங்கியாந்தோம். இங்கே யாராவது வந்தா போனா வச்சுக் கொடுக்க வாணாம்?


சாயந்திரம் ஏழு மணி ஃப்ளைட். ஏர்ப்போர்டுக்குப் போய் சேர்ந்தாச்சு. ஏர்டெக்கன் புக்கிங் ஆஃபீஸ் அங்கே இருக்கு.'பெங்களூரு போக ரயில் நல்லது'ன்னு நான் சொல்லச் சொல்ல என் பேச்சைக் கேக்காம, இவர் அங்கேயே , ரெண்டுநாள் கழிச்சு ச்சென்னையிலிருந்து பெங்களூரு போய் வர டிக்கெட்டு எடுத்துட்டார். சொன்ன பேச்சைக் கேக்காததுக்குஅப்புறமா வருத்தப்பட வேண்டியதாப் போச்சு.


ஸ்டாப் ஸ்டாப். கற்பனையை வளர்காதீங்க. நான் ஒண்ணும் அடிக்கலை, திட்டலை. எல்லாம் தானாய் வந்துச்சு.

மதுரையை நம்ம தருமி வசமே திருப்பிக் கொடுத்துட்டு, ச்சென்னைக்கு இரவு ஒம்போது மணிக்கு வந்து சேர்ந்தோம்.


நாளைக்கு ஞாயித்துக்கிழமை. ஸ்பெஷல் டே!

பின்குறிப்பு: தருமி, இனி நீங்க எடுத்துக்கலாம்:-)

நம்ம ப்ளொக்கர் படம் போடச் சொதப்புதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேனேன்னு நம்ம தோழி உதவிக்கு வந்து ஒருஇடத்துக்குக் கையைக் காமிச்சு விட்டாங்க. அங்கே ஒரு 16 படம் போட்டுருக்கேன். இலவச சேவைதான். ஒரு மாசம்இவ்வளோன்னு கணக்காம். 'ஆத்துலே போட்டாலும் அளந்து போடறங்க' (பழமொழி). இனி நீங்க பார்த்தபிறகு அங்கே பழசை எடுத்திட்டுப் புதுசு போட்டுக்கலாம். இப்போதைக்கு அழகர்கோயில் இங்கே.