Saturday, February 24, 2007

நொந்த பதிவு

சாமியைப் பார்த்தவங்க கையைத் தூக்குங்க.

அட! இத்தனை பேரா:-)

விக்ரம் நடிச்ச சாமி இல்லீங்க இது.

மெய்யாலும் சாமியைத்தான் சொல்றேன்!



நானும் பார்த்ததில்லைதான். ஆனா பழக்கத்தின் காரணமா, ராமர், கிருஷ்ணர்ன்னு
சொன்னதும் மனசுலே வர்ற உருவத்துக்கு நம்ம என்.டிஆர் முகம் இருக்கும்.


முகக்களை, ஒரு குமிழ்ச்சிரிப்பு, லட்சணம் இதெல்லாம் அமையலேன்னா சாமி வேசம்
கட்டுனா எடுப்பா இருக்காதுன்னு எம் மனசு சொல்லுது.



நம்ம சினிமாக்காரங்களில் சாமி வேசம் கட்டுனவங்களிலே பொருத்தமா இருந்தவுங்க,
இருக்கறவுங்க யாருன்னு உங்களுக்குத் தோணுனதைச் சொல்லுங்க.



நானே இங்கே நொந்து போய் கிடக்கேன்.

ஏன்?

நேத்து ஆழ்வார் பார்த்தேன் (-:




சரி. ஆரம்பிச்சு வைக்கலாம்.

என்.டி.ஆர்- ராமன், கிருஷ்ணன், மகா விஷ்ணு

37 comments:

said...

நீங்களுமா? நானும் அந்தக் கொடுமையை போன வாரயிறுதியில் பார்த்துத் தொலைச்சேன். கடைசியில் முற்றும் போடாமல் தொடரும் அப்படின்னு போட்டாங்களே, அதை நினைச்சாலே வயத்தைக் கலக்குது.. :((

said...

முருகன்னா சிவகுமார்!

said...

பராசக்தினா கே.ஆர்.விஜயா

said...

பார்வதின்னா சாவித்திரி!

said...

சிவபெருமான்னா சிவாஜி!

said...

ஹி ஹி..துளசி..கன்னாட் சர்கில்ல நீங்க சொன்னது நியாபகம் வந்துடுச்சு...இப்பல்லாம் அங்க போனா சாமிய பார்த்ததும் நீங்க சொன்னது தான் முன்னால வருது...சாமி கும்பிட முடியலை... உங்களுக்கு நியாப்கம் இருக்கா..உங்களுக்கு இல்லாம இருக்குமா...:-)))

said...

மாரியம்மன் = ரம்யா கிருஷ்ணன்
சிவபெருமான் = சிவாஜி (கைலாயத்தில் சிவனே இதை ஒத்துக்கொண்டாராம்)
கண்ணன் = அஜீத்
முருகன் = சிவகுமார்
லக்ஷ்மி & ராதை = அசின்
பார்வதி = சிம்ரன்
மன்மதன் = சூர்யா
திருமால் = என்டிஆர் அல்லது தியாகராஜ பாகவதர்
வினாயகர் = பிரபு
அனுமான் = டி.ராஜேந்தர்
நாரதர் = சோ
இந்திரன் = கமல்
ராகவேந்திரர் = ரஜினி
சாய்பாபா = சத்யராஜ்
அவ்வையார் = வேறு யார்?கேபிஎஸ் தான்

said...

கிருஷ்ணன் அப்படின்னா டிவி கிருஷ்ணன் நிதிஷ் பரத்வாஜ்,ஹனுமான்னா தாராசிங்..

said...

முருகனுக்கு- நான் சொல்லலாம் என்று பார்த்தால்,இராமநாதன் சொல்லிட்டார்.
சிவனுக்கு- சிவாஜி

said...

இறைவனுடைய திருவுருவப் படங்களென்றால் -
என்னுடைய சாய்ஸ்:

1. ரவி வர்மாவின் படங்கள்
2. கோவில்பட்டிக்காரர் கொண்டையராஜ் (முன்பு சிவகாசிக் காலெண்டர்களுக்காக நிறையப் படங்களை வரைந்து கொடுத்தவர்)
3. ஓவியர் மணியன் செல்வனின்
படங்கள்

said...

மன்மதன் - சிம்பு
ஹனுமன் - ராஜேந்தர்( வேஷம் போடும் செலவு கூட இல்லை)

said...

கொத்தனாரே
நீங்க பார்த்த உடனே ஒரு எச்சரிக்கை தந்திருந்தா, துளசி தப்பிச்சிருப்பாங்க. இப்படி இருக்கலாமா?

துளசி:( இனிமே சாமியை பார்த்தா பயப்படுவீங்க நீங்க.
அவ்வையாருக்கு கேபிஎஸ் சரி, சிவனுக்கு ஜெமினி பொருத்தம் அதிகம் இல்லையோ?

said...

// நேத்து ஆழ்வார் பார்த்தேன் (-: //

ஆழ்ந்த அனுதாபங்கள்.

வைசா

said...

துளசி சிவ-சிவாஜி.
ராமன்-ராமராவ்
முருகன் - சிவகுமார்.
அம்மன் கே.ஆர்.விஜயா.
இதற்கு அப்புறம் என் புத்திக்கு யாரும் எட்டலை.
செல்வன் சூப்பராப் பட்டியல் போட்டுவிட்டார்.
வாத்தியார் சாரும் அப்படியே.
நான் வழிமொழிகிறேன்.

said...

துளசியம்மா, செல்வனோட பட்டியல நான் வழி மொழிகிறேன்..

ரொம்ப பிடிச்சது முருகனா சிவகுமார் தான்

said...

//
மு.கார்த்திகேயன் said...
துளசியம்மா, செல்வனோட பட்டியல நான் வழி மொழிகிறேன்..
ரொம்ப பிடிச்சது முருகனா சிவகுமார் தான்
//
மு.கா.,
அவை உங்கள் பெயர் என்பதால்தானே ? :-)))

said...

அக்காவ்,
அட இப்பத்தான் இந்த கொடுமைய அனுபவிச்சீங்களா? என்னவோ தெரியல, எங்க ஊருல இது முன்னாடியே கிடைச்சுடறது. split personality-ங்கிற இன்னொரு காதுல பூவா நினைக்கிறப்போ, வஞ்சம் தீர்க்கிறதுதான் கதைன்னு விரல் சூப்பி பிள்ளைகூட சொல்ற கதை. அந்நியன் மாதிரி ஒரு முடிவு.
அடுத்து விஜய் இந்த மாதிரி நடிச்ச படத்ததான் கோலிவுட்லருந்து எதிர்பார்க்கணும்!!!

நல்லதொரு கருத்து வேட்டை!! என் வோட்டு என்னவோ நிறைய பேரு சொன்னத வழிமொழிதல்தான்.

கொஞ்சம் தாவி பாலிவுட்-ல யாருன்னு யோசிச்சா செம காமெடியா இருக்கும் :)>

said...

நான் இன்னும் பொய் பார்த்த அதிர்ச்சியில இருந்தே இன்னும் மீளலைங்க.
இன்னும் கொஞச நாளைக்கு படம் பார்க்கரதில்லன்னு முடிவு பண்ணியிருக்கன்னால தப்பிச்சேன்

said...

கொத்ஸ்,

பத்மா சொன்னதுதான். ஒரு எச்சரிக்கை மணி அடிச்சுருக்கலாமுல்லே?

இல்லே 'தான் பெற்ற துன்பம் இவ்வையகம்.......'என்ற பெருந்தன்மையா? :-

said...

ராம்ஸ்,
வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

:-)))))))))))

இந்த 'சிரிப்பான்கள்' எல்லாம் கொத்ஸ்வுக்கு வச்சுருந்தேன். போட விட்டுப்போச்சு.:-)

said...

மங்கை,

சாமியை மட்டும் கும்பிடுங்கப்பா:-)

said...

செல்வன் வாங்க.

பட்டியலைப் பெருசாப் போட்டுட்டீங்க.
நன்றிங்க.
ஆமாம்...இதுலே 'மீனா'வைச் சேர்க்கலையே (-:

said...

முத்துலெட்சுமி,

யாருங்க அந்த பரத்வாஜ்? நான் பார்த்ததில்லை(-

said...

வாங்க குமார்.

//முருகனுக்கு- நான் //

அட! எந்தப்படம்? சொல்லவே இல்லை:-)))))

ச்சும்மா............. கொஞ்சம் கலாய்க்கலாமுன்னு:-)

said...

வாங்க வாத்தியார் ஐயா.

நீங்க சொன்னா அப்பீல் ஏது?
அதேதான் எங்க மனசிலும்.

சமீபகாலமா Vishnusaporனு ஒருத்தர் அருமையா வரையறார்.

அவரோட நர்த்தன கணபதிப் படத்தில் மூஞ்சூறு ஓரமா நின்னு கையில்
ஜால்ரா வச்சு அடிக்குது:-))))

said...

அபி அப்பா,

வாங்க.

மேக்கப் செலவுகூட வேணாமா?

.......பாவங்க. விட்டுருங்க:-))))

said...

பத்மா,

வசனம் பேசாத சிவன்னா ஜெமினி.
வசனம் தூள் கிளப்பணுமுன்னா.............. வேற யாரு சிவாஜியை விட்டா?

said...

வைசா,

அனுதாபத்துக்கு நன்றி:-)

வல்லி,

நானும் உங்க பட்டியல்தான்:-)))

said...

வாங்க கார்த்திகேயன் & பாலராஜன்கீதா.

சிவகுமார் முருகன் சரிதான். ஆனா இப்ப யார் அந்த வேஷத்துக்குப் பொருந்துவார்ன்னு
சொல்லக்கூடாதா?

said...

டிவில மகாபாரதம் வந்ததே அதில் கிருஷ்ணனா நடிச்சவர் நிதிஷ் பரத்வாஜ்.

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

நாங்க ஒரிஜனல் வாங்கறதாலெ படம் வர கொஞ்சம் லேட்டா ஆகுது.
அதுபோட்டும்,

//கொஞ்சம் தாவி பாலிவுட்-ல யாருன்னு யோசிச்சா செம காமெடியா இருக்கும் :)>//

மீசை இல்லாத ஹீரோக்களைப் பார்த்து ஜெரிக்கவே ரொம்ப நாளாச்சு. இப்ப அவுங்களைக் கடவுள் வேசம்வேற கட்டிப்
பார்க்கணுமா?(-:

said...

வாங்க சின்ன அம்மிணி.

நம்மூட்டுலேதானுங்க வீடியோ க்ளப். நாந்தான் சென்ஸார் போர்டு தலை, அங்கம்ன்னு
ஒன் வுமன் ஷோ. அதான் பார்க்கவேண்டியதாப் போகுது(-:

போக்கிரி கூடப் பார்த்தேனுங்க (-:

நடிகர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு 'செட்' கதை இருக்குங்க. அதே ஃபார்முலாவை
இப்படி அப்படின்னு அதே பாத்திரத்துக்குள்ளே வச்சுக்குவாங்க.

ஒரு நாலைஞ்சு கதைதாங்க இப்ப உலகில் இருக்கு(-:

said...

அக்காவ்,

இனிமே விஜய் பார்க்ககூடாதுன்னு முடிவெடுத்தாலும் அக்கம் பக்கம் உள்ள குஞ்சி குளுவானுங்க சேர்ந்து என்னை விஜய் அங்கிள் படம் பார்க்க வைச்சாச்சு. இதெல்லாம் பார்க்கிறப்ப தடியெடுத்தவங்களெல்லாம் தமிழ்நாட்டு சினிமா எடுக்கலாமுன்னு ஆகும் போல!!!!

எல்லா தெய்வத்தையும் சொன்னாப்புல, கொஞ்சம் நம்மூரு அய்யனாரு, காத்தவராயன், காட்டேரி, பெரியாச்சி வேஷத்துக்கும் சொன்னா நல்லாருக்கும்!!!

said...

துளசியக்கா,

சென்னையில் வேலை செய்த காலங்களில் எனது சீனியர் ஆபீஸ் வந்ததும் ஹெல்மெட்டை டேபிளில் வைத்துவிட்டு அடுத்டு அவரது பர்ஸைத் திறந்து அதில் இருக்கும் சிவ பார்வதி படத்தைக் கும்பிட்டு விட்டுத்தான் அடுத்த வேலை செய்வார்.

ஒருநாள் எட்டிப்பார்த்தபோது அவர் கும்பிட்டது திருவிளையாடல் சிவாஜி-சாவித்திரி படம் எனத் துப்புதுலக்கி
அதை வைத்தே அவரைக் கலாய்வோம்.

அவர் கும்பிடுவது சிவாஜி-சாவித்திரி என்று கலாய்த்தாலும் போட்டோவை மாற்றவில்லை அவருக்கு அது சிவ-பார்வதிதான்!

ஆழ்வார் அதல பாதாளத்துக்குப் போனவர்! அஜீத்துக்கு சிட்டிசன்/ஆழ்வார்ன்னு மல்ட்டிப்பிள் கேஸ்டிங்னு தல'யில ஏத்தி இப்படி இறக்கி விட்டுர்றாங்க!

said...

வாங்க ஹரிஹரன்,

நல்ல வேடிக்கையானவர் போங்க உங்க சீனியர்.:-)))))

35வதா ஆனதுனாலெ பதில் தர சுணக்கமான்னு கேட்டுராதீங்க:-))))

said...

மன்னிக்கவும், நான் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை. தங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்

நன்றி

அன்புத்தோழி

said...

ராமநாதன் சொன்னதெ வழி மொழிகிறேன்

ராமன் - என்டியார்
முருகன் - சிவகுமார்
பராசக்தி - கே ஆர் விஜயா
பார்வதி - சாவித்திரி
சிவன் - சிவாஜி

செல்வன் சொன்னதுலே

அவ்வையார் - கே பி எஸ்
ராகவேந்திரர் - ரஜினி

அவ்ளோ தான்