Sunday, April 06, 2008

என் வழி தனி(மை) வழி:-)

உஷ்........... சத்தம் போடாதீங்க.
தனியா உக்காந்து ஆழ்ந்த சிந்தனையில் அப்பப்ப மூழ்கிருவேன். அம்மாதான் கவனிச்சுப் பார்த்து உள்ளே கூட்டிக்கிட்டு வருவாங்க. அது என்ன தனிமைன்றது மனுசங்களுக்கு மட்டுமேன்னு எழுதியா வச்சுருக்கு?


பக்கத்து வீட்டு பூனி, நம்ம வீட்டுக்கு வந்துபோகும் முள்ளி, செடியில் ஒத்தைப்பூவாய்ப் பூத்திருக்கும் மலர், கொடியில் காயும் ஒற்றைத் துணி,
படுக்கையில் தனியா உக்கார்ந்துருக்கும் பொம்மை, காட்டிலே தனியாத் திரியும் மான், இன்னும் சொல்லப்போனா.... அப்பா ஊரில் இல்லாத நேரத்தில் தனியா கணினியில் என்னவோ டொக்டொக்குன்னு அடிச்சுக்கிட்டு, போரடி தாங்காம எழுந்து தோட்டத்தையும் வீட்டையும் சுத்திவரும் அம்மா, தோட்டத்தில் நிற்கும் ஒத்தை மரம் எல்லாமே தனிமையில்தானே இருக்கு.
(யாரடி எந்தன் வாசலில் வந்தது?)
Takahe (NZ)
(கண்ணே கலைமானே)

அதான் தனிச்சு இருக்கும் சிலதைப் படமெடுத்துப் போட்டுருக்காங்க அம்மா.

நானும் நிறையப் படத்துலே இருப்பேன். ஏன்னா நாந்தான் அம்மாவுக்கு (ரோல்)மாடல்:-)

பூனைகள் தனிமை விரும்பிகளாம். தெரியுமா !!!
முதல் படம் பிட் போட்டிக்கு.
மற்றவை வழக்கம்போல் உங்களுக்கேதான்:-)))



(சிங்கத்தைச் சாய்ச்சுப்புடாதீங்கலெ)

நான் ஒளிஞ்சுக்கறேன். யார்கிட்டேயும் காமிச்சுக்கொடுத்துறாதீங்க)

41 comments:

said...

படங்கள் அருமை அம்மா!

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

படமும் கமெண்டும் நல்ல இருக்கு...!
கடைசிய அந்த ஆனை படம் சூப்பர்ர்ர்ர்! எந்த ஊரில் எடுத்தது?

said...

உண்மையாவே அது தான் ரொம்ப தனிமை.
படங்களும் கமெண்ட்ஸ் ம் அருமை.

said...

வாங்க ஜோதிபாரதி.

வருகைக்கு நன்றி.

இன்றையக் கவிதை என்னவோ?

said...

வாங்க பாலா.

இன்னிக்கு என்ன பாரதி(கள்)வருகை தினமா?

அந்தப் பாடம் இலங்கை நுவரெலியாவில் எடுத்தது.

லக்கிக்கு தனியா ஒரு லுக் விட்டீங்களா இல்லையா?

said...

வாங்க பிரேம்ஜி.

எல்லாம் 'தனித்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?'

(ஸ்வாமி)மியாவ்:-)

பாட்டுதான்:-)

said...

ஆன ரிவர்ஸ் எடுக்குதா!? (ஹி,ஹி.ஹி.)

படங்கள் நல்லா இருக்கு!!

said...

யக்கோவ் உங்க கோவாலு வெள்ளையா இல்ல இருந்தான்....
ஆமா அந்த யானை சூச்சா போகுதா?;)

said...

துள்சி!!
தனிமையின் இனிமைகள் எல்லாம் சூப்பர்!! அதிலும் அந்த யானை யாரோடு l o n d o n விளையாட்டு விளையாடுகிறது? அல்லது solidarie விளையாடுகிறதா?

said...

வாங்க வீரசுந்தர்.

வருகைக்கு நன்றி. ரிவர்ஸ் கியரைத் தேடுதோ?:-)

said...

வாங்க கண்மணி.

எங்க்க கோவாலு இப்பவும் வெள்ளையாத்தான் இருக்கார். இது அவரோட கிருஷ்ணன். கிருஷ்ணன் கருப்புதானே?

யானை ட்ராஃபிக் பார்த்து ஒதுங்குனா இப்படி'யெல்லாம்' கவனிக்கணுமா? :-))))

said...

வாங்க நானானி.

ப்ரேக் ஃபாஸ்ட்க்கு, ஃப்ரெஷாச் சாப்புட வந்துருக்குன்னு நினைக்கிறேன்:-)))

said...

//(சிங்கத்தைச் சாய்ச்சுப்புடாதீங்கலெ)//

அந்த சிங்கத்தோட மூஞ்சிய உத்து பாத்தா
ஏதோ ஒரு வீட்டிலே பாத்தா போலே அதுவும் ந்யூசீலே
பாத்தாப்போலே இருக்கு.

எதுக்கும் கட்டிப் போட்டுடுங்க.

தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு..;))

கடைசி படம் சூப்பரோ சூப்பர் ;))

said...

வாங்க மேனகா.

நம்ம சிங்கம் கோபக்காரச் சிங்கம்.

முழியே சரியில்லையே...அப்புறம் எப்படிப் பக்கத்தில் போய்க் கட்டிப்போட?:-)))))

said...

வாங்க கோபி.

நம்ம ஃபேவரிட் ஆள்(?!!!)தான் எல்லார் மனசையும் அள்ளிக்கிட்டார்:-)

said...

யானையைப் போட்டிக்கு அனுப்பி இருக்கலாம். ஆனா ஜிகே சஅரை யாரும் மிஞ்ச முடியாது. ம்ஓனநிலையே நீ அறிவாய்னு பாடுறாரோ:0

said...

வழக்கம்போல் பூனைதான் ஹீரோ(யின்) :D

said...

டீச்சர்.. ஆனை சூப்பரு... ஒளிஞ்சி நின்னு என்ன சாப்புடுது? இல்ல அந்தப் பக்கம் இன்னோரு ஆனைக்கு உம்மா குடுக்குதோ!

said...

ஆஹா..

ரொம்ப நல்லா இருக்கும்மா!

அதுவும் அந்த கடைசிப்படம்..
சூப்பர்.!

(இதுவும் தனிமைதானே?)

said...

ஆனை அழகு :)

உங்க சின்னத்தை(?) கடைசில போட்டுடீங்களே!!

said...

படு ஸ்பீடா கார்ல வர்ரது யாரு - கொத்தனாரா?
யானை ஓடிப்போய் ஓளிஞ்சுக்கிறதைப் பார்த்தா அப்படித்தான் தெரிகிறது ரீச்சர்!

said...

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கு..;))

said...

வாங்க வல்லி.

ஜிகே சார் எங்கே இருக்காருன்னு நோட்டம் விடும் பூனியை என்னன்னு சொல்றது? அருமையா ஒரு பூனி படம் இருக்கு. இப்பத்தான் நினைவுக்கு வருது. இன்னொருநாள் போட்டுடலாம்:-)

said...

வாங்க பாபா.

இல்லையா பின்னே? :-))))

said...

வாங்க ராகவன்.

ஒத்தைப்புள்ளெ என்னன்னு உம்மா கொடுக்கும்?

said...

வாங்க சுரேகா.

மெயின் ரோடில் ஒரு தனிமைதான்:-)

said...

வாங்க தஞ்சாவூரான்.

யானைச் சின்னத்தைப் பாத்துப்
போடுங்க(ம்மா)ப்பா ஓட்டு:-))))

said...

வாங்க டெல்ஃபீன்.

எப்பவாவது சில சமயம்தான் தனிமை பயம். மற்ற நேரங்களில் இனிமைதான்:-)

நம்ம மியாவ்தான் வீட்டுக்குக் காவல். வாட்ச் கேட்:-)

said...

வாங்க வாத்தியார் ஐயா.

முதல் கார் கொத்ஸ்ன்னா அடுத்துப் பின்னாலேயே துரத்துவது நீங்களா? :-))))

said...

வாங்க சக்தி.

முதல்முறையா வந்துருக்கீங்க போல?
நலமா?
வருகைக்கு நன்றி. மீண்டும் வரணும்.

said...

டீச்சர்,

எப்படி இப்படி ஓய்வே இல்லாமல் உங்களால் பதிவு போட முடிகிறது..? ஆச்சரியமாக இருக்கிறது.. அதிலும் ஒரு நாளைக்கு ரெண்டு..?

ம்.. படங்களும், கமெண்ட்டும் அருமை..

கோபால் ஸார்கிட்ட சொல்லி உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடச் சொல்லிருங்க..

நான் கண்ணு வைச்சிட்டேன்ல.. அதுக்குத்தான்..

said...

வாங்க உண்மைத்தமிழன்.

தினம் பதிவுபோட்ட காலம் போயே போயிந்தி. இட்ஸ் கான்:-)

இப்பெல்லாம் பயங்கரக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கிறேன்.

வாரம் 3. சனி ஞாயிறு லீவு:-))))

பிட்டுக்காக இந்த வாரம் என் பேச்சை நானே கேக்கலையாக்கும்:-)

சுத்திப்போடணுமா? என்னை(யே) சுத்தும் ஆள்கிட்டே எப்படி கேக்கறதுன்னு யோசனையா இருக்கு!

said...

/////துளசி கோபால் said...
வாங்க வாத்தியார் ஐயா.
முதல் கார் கொத்ஸ்ன்னா அடுத்துப் பின்னாலேயே துரத்துவது நீங்களா? :-))))//////

கொத்ஸைத் துரத்துறதா?
நடக்கக்கூடிய காரியமா -
அதுவும் அவர் காரோட்டும்போது?
அவரு நீயூஜெர்ஸி சாம்பியனாக்கும்!

said...

படங்கள் நல்லாதான் இருக்கு :))

எப்படியோ தெய்வ யானை ஒன்றையும் பிடித்து போட்டு அணிவகுப்பு நடத்திவிட்டீர்கள்.

ஜிகேவுக்கு தெரியுமா ? நீங்க அவரை புகைப்படம் எடுத்தது பற்றி.

said...

வாத்தியார் ஐயா,

//அவரு நீயூஜெர்ஸி சாம்பியனாக்கும்!//

வெளுத்ததெல்லாம் பாலுன்னு இருக்கீங்கபோல:-))))

said...

வாங்க கோவியார்.

ஜிகே மட்டுமில்லை,நம்ம வீட்டுக்கு வரும் உயிர்கள் அனைத்தும் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதில் கில்லாடிகள்.:-))))

ஒருமுறை, ஹெட்ஜ்ஹாக் வருவதைப் பார்த்துட்டு, 'வெயிட்' ன்னு சொல்லிட்டு உள்ளேவந்து கெமெராவைக் கொண்டுபோகும்வரை அப்படியே நின்ன இடத்தில் நின்றிருந்தது:-)

said...

துளசி, படங்கள் அருமை - வெற்றி பெற வாழ்த்துகள்

சுத்தறவர் கிட்டே தான் சுத்திப் போட சொல்லணும் - பின்னே என்ன யானையா வந்து சுத்திப் போடும்.

said...

வாங்க சீனா.

தமிழ்ப்படங்கள் பார்க்கறதில்லையா?

இப்படி ஒரு சந்தேகம் வந்துருக்கு:-))))

said...

தனிமை எனக்கும் ரொம்பப் பிடிக்கும் துளசியக்கா. வீட்டுல அடிக்கடி சண்டை வர்றதே அதனால தான். எங்களோட எல்லாம் நேரம் செலவழிக்காம அதென்ன தனியா தனியா போய் உக்காந்துக்கிறீங்கன்னு. :-)

said...

வாங்க குமரன்.

வீட்டுக்கு வீடு வாசப்படி.

ஆனா நம்மூட்டுலே தனி(மை)வழி கேஸ் நாந்தான்:-)