Monday, April 28, 2008

இது(வும்) நடைபாதைக் கடைகள்தான்......

நம்ம வகுப்புலே ஸ்டடி டூர் போறோம். தாயில்லாமல் நானில்லை...... அதனாலே முதலில் தாய்லாந்து.


தெருவோரக் கடைகளை எப்படி படு நீட்டாச் சுத்தமா வச்சிருக்காங்க பாருங்களேன். வாங்க....ஒரு கை பார்க்கலாம்

ஒங்கொப்புராணைச் சத்தியமா நான் காவல்காரன்.....


பதிவர் ட்ரெய்னீ தேறிட்டாருன்றதைச் சொல்றதுக்காக இந்த வாரம் புகைப்பட ஸ்பெஷல்ஸ் மட்டும் போட்டுக்கவா?





மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்.........

பச்சை மாங்காத் துண்டுகளில் கொஞ்சமா உப்பும் மொளகாப்பொடியும் தூவித் தின்னா...... ஹைய்யோ ஹைய்யோ.....

முக்கனியில் ஒண்ணு குறையுதேன்னு பார்த்தா..... அட! பலாச்சுளை!!!

எனக்கு இள 'நீர்' போதும். உங்களுக்கு? தண்ணீயா இல்லை இளநீயா?


கொக்கே பறபற கோழி பறபற வாத்தே பறபறவா?

எங்க கதியைப் பார்த்துமா இந்தக் கேள்வி?


ஹூம் ..........இனி எங்கே பறக்கறது? (-:
அசைவப் பிரியர்களே, இது உங்களுக்காக


தாகம் தணிக்க ........ கலர்ஸ் & கலர்ஸ்


எனக்கு இதெல்லாம் ஆகாது. என் சாய்ஸ் சூப்பர் மார்கெட்தான். நோ ப்ராப்ளம்:-) நுழைஞ்சுரலாம்.

தலைவாழை இலை போட்டு நூடுல்ஸ் பரிமாறவா?



லேன் ட்ராஃபிக்ன்னா லேன்லேயே போவாங்க. இல்லே?


வடுவூர் குமார், பாலத்தை எல்லாம் நல்லாக் கவனிங்க. அப்புறம் கேள்வி கேக்கும்போது முழிக்கக்கூடாது...ஆமாம்.

42 comments:

said...

பேங்காக், சுவர்ணபூமி விமானநிலையம். மற்றொரு பயணம் சென்று வந்தீர்களா ? இந்த முறையும் ராசிக்கற்கள் வாங்கியாச்சா ?

சிலோம் ரோடு மாரியம்மன் கோவில் புகழ்வாய்ந்தது சென்று வந்தீர்களா ?

said...

வாங்க கோவியாரே.

இதெல்லாம் ரெண்டு வாரம் முன்பு கோபால் எடுத்த படங்கள்.

நான் சமீபத்தில்தான்(??) 1985 லே போய்வந்தேன். இனிமேல்தான் அடுத்த பயணம்:-)

விமானநிலையம் இப்ப இன்னும் ஜோரா இருக்காம்.

said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இப்பத்தான் தெரியுது பக்கத்து ஊரு மகிமை.
ட்ரைனீ நல்லாவே படம் எடுத்திருக்கிறார்.
ஆமாம், அங்க சைவம் அசைவம் கண்டு பிடிப்பது கஷ்டமாமே நிஜமா??/

said...

வாங்க வல்லி.

என்னப்பா கஷ்டம்?

அந்தக் கோழியைப் பார்த்தா...... கத்தரிக்காய் கறியாவா இருக்கு? :-)))))

இங்கே ஒரு சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லாவித 'நான் வெஜ்' பேரில் (உதா: பட்டர் சிக்கன்)சாப்பாடு கிடைக்கும். அசப்பில் பார்க்க அந்தந்த இறைச்சி போலவே தெரியும். ஆனா எல்லாம் டோஃபு தான்:-))))

said...

பாலத்துக்கு மட்டும் 3 படங்களா? நல்லா கவனிச்சிட்டேன்.. கேள்வியை கானுமே?? :-)
7 Up ஐ கீழே தள்ளிட்டாங்களே!!

said...

//நான் சமீபத்தில்தான்(??) 1985 லே போய்வந்தேன். இனிமேல்தான் அடுத்த பயணம்:-)//
நான் இதுவரை நேருக்கு நேர் நின்று சந்திக்காத பதிவர் ஒருவர் நினைவுக்கு வருகிறார். அவர் பலரை பாதிச்சுட்டார் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

தாய்லாந்தை ஒரு முறை சுத்தி வந்த மாதிரி இருக்கு. கலக்குங்க.

said...

வாங்க குமார்.

கேள்வி?
அது முழு வருசப் பரிட்சையில் கேட்கப்படும்.:-)
எல்லாப் பாலமும் உங்களுக்கே:-)

said...

வாங்க டோண்டு.

நீங்கள் குறிப்பிடும் அந்தப் பதிவரை நிலைக்கண்ணாடியில் கூடவா இதுவரை சந்திக்கலை?:-))))

சமீபமுன்னு சொன்னவுடன் 'அவர்' நினைவு வந்துருது:-))))

said...

வாங்க பிரேம்ஜி.

ஒரு சுத்துப் போதாதுன்னு இந்த வாரம் முழுக்க அங்கேதான் இருக்கப்போறோம்:-)

said...

சில்லறை செலவில்லாம ஒரு வெளிநாட்டுப் பயணம் போயிட்டு வந்தாப்பல இருக்கு. படங்கள் நல்லாருக்கு.

said...

// ொக்கே பறபற கோழி பறபற வாத்தே பறபறவா?
எங்க கதியைப் பார்த்துமா இந்தக் கேள்வி?
ஹூம் ..........இனி எங்கே பறக்கறது? (-:
அசைவப் பிரியர்களே, இது உங்களுக்காக///


நான் நினைச்சேன். எதைத் தின்னுட்டு இவரு இப்படி ஆட்டம் போடுறார்னு. இப்பதானே விசயம்
தெரியுது.

http://www.youtube.com/watch?v=CgLYZHN78Kk

என்னதான் திங்கட்டுமே.. இப்படியா ஆட்டம் போடுறது..
பாவம் குழந்தே ..

மீனாட்சி பாட்டி.
தஞ்சை.

said...

அது டுரியான் பழமா, பலாப் பழமா?

குவிச்சு வச்சிருக்குற பூச்சி பொறியல்களோட பேரையும் செய் முறையையும் தெளிவா சொல்லுங்க.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

said...

படங்கள் ரொம்ப நல்லாருக்கு டீச்சர்..;)

Anonymous said...

டீச்சர், ஸ்டூடண்ட் தேறீடுவார் போல இருக்கு, அது சரி டீச்சரை ஏமாத்திட்டு ஸ்டூடண்ட தனியா எப்படி போகவிட்டாங்க. ம்ஹூம் ஸ்கூல் இன்னும் ஸ்டிரிக்ட் ஆ இருக்கணும்.

said...

1985 எல்லாம் சமீபத்தில வராது . அது நேத்து முந்தாநாத்துக் கணக்கிலதான் வரும். சமீபத்தில் என்று சொல்லனும்னா அது 1940 க்கு முதல்ல இருக்கணும்.

said...

நல்லா இருக்குன்னு ரெண்டு வார்த்தைல முடிக்க முடியல! ஆனா அதே ரெண்டு வார்த்தையை சொல்லிக்குறேன்!

said...

வணக்கம் டீச்சர். நலமா?

படங்கள் நல்லாயிருந்துச்சு. நானும் கோடை டூருக்கு ஸ்ரீலங்கா போயிட்டு வந்தேன். அதை பற்றி அப்புறம் எழுதறேன்.

//இங்கே ஒரு சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லாவித 'நான் வெஜ்' பேரில் (உதா: பட்டர் சிக்கன்)சாப்பாடு கிடைக்கும். அசப்பில் பார்க்க அந்தந்த இறைச்சி போலவே தெரியும். ஆனா எல்லாம் டோஃபு தான்:-))))//

டீச்சர், இதே மாதிரி சென்னையில கூட கிடைக்குதே. டேஸ்ட்தான் சரியில்லை.

நன்றி.

said...

உள்ளேன் ரீச்சர்.

said...

நிஜமான சமீபத்துல (2007)நானும் போய் வந்தேன்.. அழகான ஊர்..கோவி சொல்வது போல் விமான நிலையம் அருமை..உங்கள் படங்கள் நன்றாக இருக்கின்றன.

said...

ஆஹா துளசி டீச்சர்,

உங்க போட்டோக்களைப் பார்த்து தாய்லாந்துக்கே போய் வந்த மாதிரி இருக்கு.

இளநீரைக் கூட தோலெல்லாம் சீவியா விக்குறாங்க?
தூரியன் பழங்கள் எங்கே காணோம்?

நன்றி டீச்சர்.

said...

//இங்கே ஒரு சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லாவித 'நான் வெஜ்' பேரில் (உதா: பட்டர் சிக்கன்)சாப்பாடு கிடைக்கும். அசப்பில் பார்க்க அந்தந்த இறைச்சி போலவே தெரியும். ஆனா எல்லாம் டோஃபு தான்//

ஓடியிருக்கேனே. பார்த்துப் பயந்து ஓடியிருக்கேனே :)))

said...

அடடா..

கடைவீதிக்குள்ள ஒரு ரவுண்டு வந்த அனுபவம் கிடைச்சது.

நன்றி !

said...

துளசி அம்மா,

விமானநிலையத்தின் அமைப்பு வியக்கவைக்கிறது, ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நீளமாக இருக்கும், நன்றாக இருக்கிறது. அதைப் பார்பதற்கு ஐயாவை நச்சரித்து சென்று வாருங்கள், தப்பித்தவறி பேங்காக் ஆட்டோவில் ஏறிவிடாதீர்கள், அப்பறம் ராசிக்கல் கடையில் தான் நிறுத்துவான். குறிப்பாக வாட் அருண் பார்க்கத் தவறாதீர்கள். என்னிடம் படம் இருக்கிறது. எப்போதாவது பதிவிடுகிறேன்.

said...

வாங்க கைப்புள்ளெ.
முதலில் எங்கள் வாழ்த்தைப்பிடியுங்க. இப்படி ஓடுமீன் ஓட உறுமின்னுக்குக் காத்திருந்து 'பிட்'டுலே ஜெயிச்சுட்டீங்களே அதுக்கு.

இந்த டிஜிடல் கெமரா வந்தபிறகு படமே படம்தான்.:-)))
சுற்றுலாவை விட்டுற முடியுதா? :-)))))

said...

வாங்க மீனாட்சிப் பாட்டி.


அந்தக் குழந்தை பாவம்தாங்க. இதுலே குதிச்சவர் மேலேயும் குத்தம் சொல்ல முடியலை. ஷூ காலின் அடி பலமா பட்டுருக்குமோ(-:

said...

வாங்க தறுதலை.

அது பலாப்பழம்தானாம்.

இன்னும் அந்தப் பொரியலை நான் செஞ்சு பார்க்கலை. செய்யும்போது படத்தோட ரெஸிபி போட்டுறலாம்:-))))

said...

வாங்க கோபி.
நன்றி.

கோபாலின் கைவண்ணமே வண்ணம்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

நாந்தான் படமெடுத்துட்டுக்கிட்டு வாங்கன்னு கோபாலை அனுப்புனேன்னா நம்பணும். ஆமா:-))))

ஒருமுறை ஆக்ரா பேலஸ் வாசலில் நானும் மகளுமா உக்கார்ந்துக்கிட்டு, இவரை உள்ளேபோய் வீடியோ எடுத்துவரச் சொன்னோம். 52 டிகிரியில் ஒரு எட்டு எடுத்துவைக்க முடியாமப் போச்சு. அவர் வரும்வரை அங்கிருந்த காவல்காரரிடம் கதை கேட்டுக்கிட்டு இருந்தேன்:-)

said...

வாங்க சயந்தன்.

நலமா? ரொம்ப நாளா காணேலை!

அப்பக் 'கொஞ்ச நாள் முன்பு'ன்னு 1980 யைச் சொல்லிக்கவா?:-)

said...

வாங்க சிவமுருகன்.


நல்லா(தான்) இருக்கு போங்க:-)))

said...

வாங்க ஆடுமாடு.

ரொம்ப நாளா ஆளையே காணோமேன்னு இருந்தேன். இந்தப் பட்டியல் கூட வளர்ந்துக்கிட்டே போகுது. இதுலே அடுத்ததாக வருபவர் நம்ம ரத்னேஷ் சீனியர்:-)

லங்கா .....தகனத்தை..... சாரி பயணத்தை எழுதுங்க.:-))))

சென்னையில் இப்படி கடை இருக்கா? அடடே... எங்கே?

இங்கேயும் ருசி ரொம்ப சுமார்தான். காம்ப்ளிமெண்ட்ரியா கொண்டுவந்து வச்ச வெறும் சோத்தை முழுங்கிட்டு வந்தோம்:-)

said...

வாங்க கொத்ஸ்.

'தூங்காத கண் என்ன கண்ணே' ன்னு பாடிக்கிட்டு இருக்கீங்களா?
வகுப்புலே தூங்கிடாதீங்க:-)))

said...

வாங்க பாசமலர்.

அட! (சயந்தன் கணக்கிலே சொன்னால்)நேத்துப்போய்வந்தீங்களா?

கோபால்தாங்க அடிக்கடி வேலைவிஷயமாப் போய்வந்துக்கிட்டு இருக்கார்.
அடுத்தமுறை நானும் போகணும்தான்.

said...

வாங்க ரிஷான்.

இளநீர் தோல் சீவி சிங்கையிலும் கிடைக்குதேப்பா.

இன்னும் படங்கள் வலை ஏறிக்கிட்டு இருக்கு.
மீண்டும் வரணும்.

டூரியன் காணோம்.டூர் போயிருச்சோ? :-)))

said...

வாங்க மலைநாடான்.

நாங்களும் ஒரேஒருமுறைதான் போனோம். அந்த ஓனரைத்தான் அடிக்கடிப் பார்க்கவேண்டியதாப் போச்சு. எதிர்வீடு(-:

said...

வாங்க சுரேகா.

இந்தவாரம் 'தாய்' வாரம். மீண்டும் வருக:-))

said...

கோவியாரே.

ஊருக்குப்போகும்போது உங்க ஊர்வழியா வராம பேங்க்காக் வழியா போகலாம்தான். ஆனா சிங்கை இழுக்குதேப்பா:-))

அடுத்தமுறை 'ரூட்'டை மாத்திறவா?

ஆட்டோவில் ஏறமாட்டேன்.

'கொஞ்சநாள் முன்பு' தனியா ஒரு கைடும், ரோல்ஸ்ராய்ஸ் வண்டியுமா எடுத்துத் தனியா சுத்துனோம். அப்ப எல்லாம் விலை மலிவா இருந்துச்சு.

said...

அப்ப நீங்க போகலையா.....துள்சி?
இருந்தாலும் ட்ரெயினி தேறிட்டார்.
இனிமேல் ட்ரெயினியில்லை.
ப்ரபொஷனல் போட்டோகிராபர்.
சான்றிதழ் கொடுத்துடுங்களேன்!
எனக்குப் புடிச்சது அந்த ஜூஸ் கடைதான். எவ்ளோ வரைட்டி!
'அம்மா நிலத்தில்' சுத்தி வந்த ஓர் உணர்வு!
கட்டாயம் போகோணும்.

said...

வாங்க நானானி.
எனக்குப்பிறகு துளசிதளத்தை நடத்தத்தான் இப்ப ட்ரெயினிங் நடக்குது.

படம் எடுத்துக் கதை சொல்லி, அப்புறம் எழுதப் பழக்கணும்:-))))

வெரி லாங் ப்ராஸஸ்.........

said...

அன்பு சகோதரி துளசி கோபால் உங்கள் வலைப்பதிவை ஜெத்தா விலிருந்து ஒரு நண்பர் அறிமுகம் செய்தார்.என்னுடைய kalyanakamala.wordpress க்கும் வந்து பாருங்கள். நீங்கள் மிக அழகான‌ புகைப்படங்களுடன் எழுதுவது என்னைக் கவர்ந்தது
வாழ்த்துக்கள்.
கமலா

said...

வாங்க கமலா.
உங்க வீட்டுக்கு வந்து போயிருக்கேன் முந்தியே.

பின்னூட்டம் கூடப் போட்டுருந்தேன். நீங்கதான் கண்டுக்கலை(-: