Tuesday, April 29, 2008

முக்குக்கு முக்குக் கோயில்தானா?

நம்மூர்லே முக்குக்கு முக்குப் புள்ளையார் கோவில் இருக்குறதைப்போல இங்கேயும் இருக்குபோல!

அட!....சீக்கீரம் ஓடியாங்க பூசை ஆரம்பிக்கப்போகுது.


கைகால் கழுவிக்குங்க. அண்டாவுக்கு வந்த வாழ்வைப் பாருங்க. அட்டகாசமா இருக்குல்லே?
நாங்க வரிசையா நிக்கிறோம். தெரியாதவங்க திருச்சூர் பூரமுன்னு நினைச்சுக்கப் போறாங்க:-))))
அதோ கடை இருக்கு. ஓடிப்போய் பூசைச் சாமான்கள் வாங்கிக்குங்க பார்க்கலாம்.
ஊதுவத்தி கொளுத்துறவங்க இப்படி வாங்கப்பா.

இளநிக்கெல்லாம் ஸ்ட்ரா போட்டாச்சா? பூசை முடிஞ்சதும் படையலுக்கு வச்ச யானைகளை நியூஸிக்கு யாராவது பேக் பண்ணுனாச் சரி:-)

மேளத்தை மெல்லத்தட்டுப்பா....

விழுந்து கும்புட்டுக்குங்க.

சபாஷ்!!!!நாட்டியம் ஆரம்பிக்கட்டும்.

மசமசன்னு நிக்காம சீக்கிரம் ஆடறவங்க ஆடுங்க. மணி ரெண்டாகப் போகுது.

நாளைக்கு வேற இடம் பார்க்கலாம்.

27 comments:

said...

டீச்சர் நல்லாயிருக்கு.

தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் பழங்காலத்துலயிருந்தே நிறைய தொடர்பு இருக்கு. அங்கேயும் சிவன் கோயில், முருகன் கோயில்லாம் இருக்கு. நம்ம வழிபாடு மாதிர்தான். பாஷைதான் வேற.

said...

ரிமோட்கண்ட்ரோல் முலம் நல்லா போட்டோ எடுத்துருக்கீங்க துளசி.. :)
ரோட்டுக்கடை யும் சரி முக்கு கோயிலும் சரி நம்மூருமாதிரின்னு சொன்னாலே மகிழ்ச்சிவருது பாருங்க.. சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா மாதிரி நம்மூரை எதிலெல்லாம் தேடறோம் பாருங்க...

said...

படங்களைவிட அதற்கான கமெண்ட்டுகள்தான் சூப்பர்! அடிக்கடி இதுமாதிரி விஷுவல் டேஸ்ட் வெளியிடுங்கள். அந்த ரோட்டோர புள்ளையார் உங்கள ரொம்ம்ம்ம்ப நாள் வாழவைக்கட்டும்!

said...

டீச்சர்,

உங்களுக்கு போன வாரம் ஒரு கனவு வந்திருக்குமே..

முருக பக்தனான ஒருத்தனை வளர்ப்பு மகனா அல்லாட்டி வளர்ப்பு தம்பியா தத்து எடுத்துட்டீன்னா அடுத்து வான்வெளிக்குப் பறக்குற அளவுக்கு உனக்கு யோகம் வரும்னு ஒரு வெள்ளையுடை தேவதை வந்து சொல்லிருக்குமே..

மறந்துட்டீங்களே டீச்சர்..

அங்க சொல்லிட்டு அப்படியே ஒரு ரவுண்ட் அடிச்சு என்கிட்டேயும் வந்து சொல்லுச்சு அந்த ஏஞ்சல்..

எப்ப டீச்சர் வெச்சுக்கலாம் பங்ஷனை..?

said...

எங்கெங்குகாணினும் யானையம்மா!!
ஆனையம்மாவுக்கு ஏத்த பதிவு. படங்களெல்லாம்..நாமுமங்கேயிருக்கிற மாதிரி ஒரு பீலிங்!!
யானை பார்சல் நியூசிக்குவந்தா கீதாம்மாவோடும் பாதி ஷேர் பண்ணிக்குங்க...பாவம்..இல்லைன்னா
கர்ர்ர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்கப் போறாங்க! ஹீ..ஹி..

said...

வாவ்...அழகா இருக்கு டீச்சர்..!
நான் டான்ஸ் ஆட்டுறவங்கள மட்டும் சொல்லல..உங்க போட்டோஸையும் சேர்த்துச்சொன்னேன் :)

எப்போ இலங்கை வரப்போறீங்க?
இங்கேயும் நிறைய யானைகளும்,இது போலக் கோயில்களும்,அழகான டான்ஸர்களும் இருக்காங்க.. :)

said...

ரொம்ப அழகாக எடுத்திருக்கிங்க டீச்சர் ;))

எல்லாம் உங்க ஸ்பெசல்(யானை) ஆளுங்களை பார்த்தவுடனே அழகு தானா வருது போல!!! ;))

said...

இவ்வளவு யானைப் படம் எடுத்தவர் ஒரு யானை கூட வாங்கி வரலியா;)
என்ன என்ன விதமாக் கடைகளும் கோவில்களூம் காட்சிகள் பிரமாதம்!

மினிமினுனு அந்தப் பெண்கள் அலங்காரமும் கலர்ஃபுல்.

கண்ணைக் கொத்தற மாதிரி போட்டோ+சமத்தா கமெண்ட்ஸ். கலக்குறே சந்துரு!!!

said...

வாங்க ஆடுமாடு.

நாடுகள் தோறும் பாஷைகள் வேற.

இங்கே நம்ம பெயர்கள்கூட இருக்கு.

said...

வாங்க கயல்விழி.
நீங்க சொன்ன பாட்டு கூட இந்த நகரில் எடுத்ததுதான்:-)))

ரிமோட் தேறியாச்சு:-)

said...

வாங்க கல்யாண்.

'சற்று நேரத்துக்கு வாத்திய இசை' மாதிரிதான் இந்தப் படப்பதிவுகள்:-)))))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

நம்மூர்லே தேவதைகள் கருப்பு நிற உடைதான்.

நாட்டுக்கான நிறம் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு:-)))

கனவு ஆரம்பிக்கும் சமயம் நம்ம கோகி வந்து எழுப்பிட்டான்.

பங்ஷனை எப்ப வேணா வச்சுக்கலாம். கிளம்பி வாங்க முதலில்:-)


ஆஹா....வளர்ப்புத் தம்பி.....

said...

வாங்க நானானி.

கீதாவுக்கும் உயிலில் மாத்தி எழுதியாச்சு:-)))

யானை ரொம்ப அழகு.இல்லே?

said...

வாங்க ரிஷான்.

இப்பத்தான் Intrepid Journey என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இலங்கைக்கு வந்தேன்.

கொழும்புவில் இறங்கி, நெகம்போ மீன் பிடித்துறையைப் பார்த்துட்டு, அனுராதபுரம் வந்து போதி மரத்தில் இப்போ உயிரோடு இருக்கும் ஒரே கிளையைத் தரிசிச்சுட்டு, தம்புல்லாவில் யானைகளைக் கூட்டம் கூட்டமாப் பார்த்துட்டு, கண்டிக்கு வந்து அங்கிருந்து ரயில் ஏறி பண்டாரவெலெ போய் டீ எஸ்டேட், தேயிலை பறிப்பவர் வாழும் வீடுகளுக்குப் போய் ஒரு கட்டன் சாயா அடிச்சுட்டு, மிரிஸ்ஸாவில் சுநாமி வந்த இடத்தையெல்லாம் பார்த்துட்டு, போர்த்துக்கீஸ் டவுன் Galle சுற்றிக் கோட்டைகளைப் பார்த்துட்டு கொழும்பு வந்து ப்ளேன் ஏறியாச்சு.

said...

வாங்க கோபி.

படங்கள் உபயம் கோபால்:-)))
அழாகு உபயம் யானை:-)

said...

வாங்க வல்லி.

//கண்ணைக் கொத்தறமாதிரி ஃபோட்டோ//

வெயிட்டீஸ்......... இன்னும் அட்டகாசமானதெல்லாம் வந்துகொண்டே இருக்கு.

said...

யானை வரும் பின்னே, புகைப்படம் வரும் முன்னே.

உங்க அவரு சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டேன். ஐயாம் தி எஸ்கேப்பூ....

said...

//வெயிட்டீஸ்......... இன்னும் அட்டகாசமானதெல்லாம் வந்துகொண்டே இருக்கு//

வெயிட்டிங்.... வெயிட்டிங்.....

சந்தோஷமான மனநிலை குடுக்க கூடிய சூழல்

said...

தலைப்பு சூப்பரா அல்லது படங்கள் சூப்பரா அல்லது துணுக்குகள் சூப்பரா? அப்படீன்னு பட்டிமன்றம் வைக்கலாம் போல இருக்கு!

said...

இலங்கை பற்றிய பதிவுக்கு ஆவலா காத்திருக்கேன்.

said...

##படங்கள் உபயம் கோபால்:-)))
அழாகு உபயம் யானை##

ரீச்சர்! எனக்கு தமிழ்ல ஸ்பெல் மிஸ்டேக்ன்னா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோவம் வருது! என்ன் ரீச்சர்????

திஸ்கி: ஹய்யா ஹய்யா ஹய்யா... இன்னிக்கு நான் நிம்மதியா தூங்குவேன்!!

இப்படிக்கு

அபிஅப்பா

said...

//முக்குக்கு முக்குக் கோயில்தானா?

நம்மூர்லே முக்குக்கு முக்குப் புள்ளையார் கோவில் இருக்குறதைப்போல இங்கேயும் இருக்குபோல!
//

சரிதான்,

புத்தர் சிலைகள் விற்கும் கடைகள் இல்லாத தெரு, சாலைகளே இல்லை என்று சொல்லலாம். தடுக்கி விழுந்தாலே புத்தர் மீதுதான் விழவேண்டும் என்பது போல் எங்கும் புத்தர் சிலைகள் இருக்கிறது, பெரிய அளவில் நிற்கும் புத்தர், படுத்துறங்கும் புத்தர், எமரால்டு புத்தர் என எங்கும் புத்தர் மயம் தான், தற்போது பரவலாக பிள்ளையார் சிலைகளையும் விற்கிறார்கள். எலிபெண்ட் GOD என்று சொல்கிறார்கள். சீனர்களும் பிள்ளையாரை எலிபெண்ட் GOD என்ற பெயரில் வழிபடுகிறார்கள். புத்தருக்கும் பிள்ளையாருக்கும் ஒற்றுமை அரசமரத்தடி தான் :)

said...

வாங்க அபி அப்பா.

//
தமிழ்ல ஸ்பெல் மிஸ்டேக்ன்னா சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோவம் வருது! என்ன் ரீச்சர்????//


எனக்குத்தெரியும் உங்களுக்கு கோபம் வருமுன்னு. உங்களை இங்கே நம்ம பதிவுக்கு இழுக்கணுமுன்னுதான் வேணுமுன்னே(!) இப்படி எழுதுனேன்:-)))))


(அப்பாடா நானும் நிம்மதியாத் தூங்குவேன்:-)))))

said...

வாங்க கோவியாரே.

இப்ப ரொம்பத்தான் ஆகிப்போச்சு இந்த யானை & புள்ளையார் சிலைகள்.

அடுத்த பதிவு அரண்மனை & மரகதப் புத்தர்தான்.

said...

ஆஹா டீச்சர்னா டீச்சர்தான்.டீவி நிகழ்ச்சியொன்றையே எவ்வளவு விளக்கமா சொல்லியிருக்கீங்க...:)

//கொழும்புவில் இறங்கி, நெகம்போ மீன் பிடித்துறையைப் பார்த்துட்டு, அனுராதபுரம் வந்து போதி மரத்தில் இப்போ உயிரோடு இருக்கும் ஒரே கிளையைத் தரிசிச்சுட்டு, தம்புல்லாவில் யானைகளைக் கூட்டம் கூட்டமாப் பார்த்துட்டு, கண்டிக்கு வந்து அங்கிருந்து ரயில் ஏறி பண்டாரவெலெ போய் டீ எஸ்டேட், தேயிலை பறிப்பவர் வாழும் வீடுகளுக்குப் போய் ஒரு கட்டன் சாயா அடிச்சுட்டு, மிரிஸ்ஸாவில் சுநாமி வந்த இடத்தையெல்லாம் பார்த்துட்டு, போர்த்துக்கீஸ் டவுன் Galle சுற்றிக் கோட்டைகளைப் பார்த்துட்டு கொழும்பு வந்து ப்ளேன் ஏறியாச்சு.//

இங்க கண்டின்னு வருது பாத்தீங்களா? அதாங்க நம்ம முத்தையா முரளிதரன் ஊரு.அங்கதான் என் வீடு இருக்கு.வீட்டுக்குப் பக்கத்துலயே யானை வளர்க்கிறாங்க.அடுத்தமுறை வரும் போது கண்டிப்பா வந்துட்டுப் போங்க.. :)

said...

கட்டாயம் வரணும்தான் ரிஷான். அங்கேதானே ஆதரவில்லாத யானைகளுக்கான இல்லம் இருக்கு. அதைச் சொல்ல விட்டுப்போச்சு.

அந்தக் குட்டியானைகள் ரொம்பவே மனசை இழுக்குது.

said...

வாங்க ஜீவா.

பட்டிமன்றதுக்கு நடுவர் யாரு? நீங்களா இல்லை வழக்கம்போல் சாலமன் பாப்பையாவா?:-))))