Saturday, June 14, 2008

ஆழிசூழ் அறை ( தொடர் பகுதி 2)

போனபகுதி படிக்காதவங்க இங்கே போய்ப் படிச்சுட்டு வந்தீங்கன்னா நல்லது. அதைப் படிச்சுட்டேனேன்னு சொல்றவங்க அந்தப் பகுதியின் முதல் பத்துவரிகளை நினைவு(???) வச்சுருக்கீங்களா இல்லையா?:-)


இங்கே நம்ம பக்கம் ரெட் பஸ் கம்பெனின்னு ஒன்னு இருக்கு. இவுங்க வண்டிகள் எல்லாம் சிகப்புதான். இருந்ததே இது ஒரு பஸ் கம்பெனிதாங்க அப்பெல்லாம். இவுங்களே இந்த சுற்றூலாப் பயணிகளுக்கான படகுகளையும் விட்டுக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு என்ன பெயர் வச்சுருப்பாங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்....


ரொம்பசரி. .Red Boat Cruises. கார், பஸ் இதுக்கெல்லாம் தனிப்பெயர் இருக்காதுல்லே? ஆனால் கப்பல், படகுகளுக்கு மட்டும் பெயர் வைக்கும் பழக்கம் எப்படி வந்துருக்கும்? யோசிச்சுச் சொல்றவங்களுக்கு பத்து மார்க் கூடுதலாக் கிடைக்கும்.



Pride of Milford
The Lady of the Sounds
Lady Bowen
Spirit of Milford


இப்படியெல்லாம் பெயர்களோடு இங்கே சுத்துதுங்க:-))))



வெவ்வேறு வசதிகள். சாப்பாடு போட்டு, இல்லேன்னா சாப்பாடு போடாம! இந்தப் பகுதிகளில் இருக்கும் மற்ற இடங்களுக்குப் போகணுமுன்னாலும் மூன்று வித அனுபவங்களுக்குச் சேர்த்து டிக்கெட் வாங்குனா தள்ளுபடின்னு பலசலுகைகள் வச்சுருக்காங்க. நாங்க மில்ஃபோர்ட் சவுண்டு, டெ அனா(வ்) க்ளோ வொர்ம்ஸ் கேவ் & டவுட்ஃபுல் சவுண்டுன்னு மூணு இடங்களுக்கு சீட்டு வாங்கிக்கிட்டோம்.



நாம் போகும் படகு எங்கே எப்படி இருக்குன்னு பார்க்கலாமுன்னு அந்தப் பக்கம் நடந்தால்....... 'ஹோ..............'ன்னு ஒரு சப்தம் இடைவிடாமக் கேக்குது. நமக்குத்தான் சத்தம் வந்தாப் போதுமே ஏன், எதுக்குன்னு பார்க்கணுமா இல்லையா? மரப்பலகை அடிச்சுவச்சப் பாதையிலே(board walk) போனால் ஒரு மூணுமீட்டர் உசரத்துலே இருந்து வெள்ளை மாவாப் பொங்கிக்கிட்டு மலையையே பிச்சுப்பிடும்போலப் பாயுது நீர்வீழ்ச்சி. போவன் ஃபால்ஸ். (Bowen falls)இவ்வளோ கிட்டத்தில் ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்க்கிறது மொதத்தடவை எனக்கு. அரிசிமாவுக் கிடங்குலே ராட்சஸ அளவு காத்தாடி வச்சுச் சுத்தவிட்டமாதிரி இருக்கு. ( உதாரணம் எப்படி வந்துருக்குன்னு பாருங்க...... ம் தெரிஞ்ச விசயத்தைத்தானே சொல்ல முடியும்? எது? அதான் அரிசிமாவு!:-) ...)



நல்லா உத்துப் பார்த்தா..... அது ரொம்ப உசரத்துலே இருந்து வருது. 162 மீட்டர். ஆனா அகலம் 27 மீட்டராம்! அம்மாடியோவ். இதுக்குத் தண்ணீர் வரும் சீஸன்னு தனியா ஒன்னுமே இல்லை. வருசம்பூரா கொட்டோகொட்டுன்னு கொட்டிக்கிட்டு இருக்கு. இது பொம்பிளை அருவி! இதோட முழுப்பெயர் லேடி போவன் நீர்வீழ்ச்சி. அந்தக் காலத்துலே(1868) நியூஸி கவர்னரா இருந்த போவன் பிரபுவின் மனைவியைக் கௌரவிக்கும் விதமா இந்தப் பெயர் வச்சாங்களாம். அந்தம்மா ரொம்ப நல்லவங்களா இருந்திருப்பாங்க போல!


நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் எந்த மாதிரி கொட்டுதுன்னு பார்த்து அதையும் வகைப்படுத்தி வச்சுருக்காங்க பாருங்க...அந்த வகையில் இது குதிரைவால்.
நேரடியா வளையாமக் கொள்ளாம தபதபன்னு விழுகுது:-)

படகு கிளம்பும் நேரமாச்சு. நாங்களும் போய் ஏறிக்கிட்டோம். ஒரு பதினைஞ்சு நிமிசப் பயணத்தில் கடலுக்குள்ளே இருக்கும் ஒரு கட்டிடத்தில் இறக்கிவிட்டாங்க.




இப்ப நாம் நின்னுக்கிட்டு இருக்கும் அண்டர் வாட்டர் அப்ஸர்வேட்டரி அனுமதிக்கு, நாம் விருப்பப்பட்டால், கூடுதல் கட்டணம் கட்டினால், நம்மை அங்கே இறக்கிட்டு ஒரு முக்கால்மணி நேரம் கழிச்சு நம்மைக்கூப்புட்டுப் படகுலே ஏத்திக்குவாங்க.



இந்த அப்ஸர்வேட்டரி இருக்குமிடம் ஹாரிசன் கோவ் பகுதி. எத்தனையோ மில்லியன் வருசங்களுக்கு முன்னே Ice age காலத்தில் இங்கே glacier உருவாகி இருந்த இடங்கள் எல்லாம் காலப்போக்கில் பனி உருகி வெறும் பள்ளமா நின்ன இடத்துலே வந்து சேர்ந்தது கடல் தண்ணீர். சுத்திவர மலைத் தொடர்களா இருந்து கடல் சேரும் இடம் சின்னதா இருக்கும் வழியில்
கடல்மட்டம் உயரும் சமயம் கொஞ்சம்கொஞ்சமா வந்து நிரம்பி இருக்கு. அப்படியே கடல்வாழ் உயிரினங்களும் துண்டுபோட்டு இடம் புடிச்சுருக்கு.


இந்தப் பகுதிகளில் எப்பவும் பலத்த மழை கூடுதலாப் பெய்யறதால் நல்ல தண்ணீர் கடல்தண்ணீருக்கு மேலே அப்படியே வந்து தங்கிப்போகுது. கடல் தண்ணீர் & நல்ல தண்ணீருக்கு வெவ்வெற அடர்த்தி இருக்குல்லையா? கனம் குறைஞ்ச நல்ல தண்ணீர் அப்படியே மேலாகத் தெளிவா நிக்குதாம். கிட்டத்தட்ட 400 மீட்டர் ஆழமுன்னு சொன்னாலும் கடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆழம் குறைவா இருப்பதே சில உயிரினங்களுக்கு வசதியாப் போச்சு.



இந்தப் பகுதியில் வருசத்துக்குப் பெய்யும் மழை அளவு என்னவா இருக்கும்?
அங்கங்கே, தொலைக்காட்சியில் காலநிலை இன்ன இடத்தில் இத்தனை மில்லி மீட்டர் மழை பெய்த்ததுன்னு சொல்றாங்க பாருங்க. அந்தக் கணக்குலே பார்த்தால் இங்கே ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் மில்லி மீட்டர் மழையாம்.



(உண்மையான ) சமீபத்தில் 1985 வது வருசம் மூணுபேர் கண்ட கனவுதான் இந்த ஆழிசூழ் அறை.இது நானே யோசிச்சு(??)த் தமிழ்ப்படுத்தினேன்.(அப்ஸர்வேட்டரியைத் தமிழில் எப்படிச் சொல்லணும்?
தெரிஞ்சவுங்க உதவுங்கப்பா) அலிஸ்டர் சைல்ட், டாக்டர் ஜாய்ஸ் ரிச்சர்ட்சன், ஆர்தர் டிண்டால் என்ற மூவர்தான் கனவின் உரிமையாளர்கள். விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பயன்படும் என்ற அளவில்தான் நினைச்சாங்க. இதோ அதோன்னு முழுமையான திட்டத்துக்கு எழுத்துஉருவம்/வடிவமைப்பு வரைபடம்ன்னு கொடுக்கவே 10 வருசங்களாயிருச்சு.


இவ்வளவு செய்யப்போறோம் இதை இந்த இயலில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், மற்ற பொதுமக்களுக்கும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வந்தபின், பாதுகாப்பு, அங்கே போய்வரச் சுலபமான போக்குவரத்து மற்றும் பல விசயங்களில் கவனம் செலுத்தி சுற்றுப்புற சூழல்களுக்குப் பங்கம் வராம அமைக்கணுமுன்னு பல்வேறு அரசாங்க இலாக்காக்கள் சேர்ந்து ஒத்துழைச்சு, திட்டத்துக்குப் பச்சைகொடி காமிச்சாங்க.




ஜனவரி 1995 இல் ஹாரிசன் கோவை நோக்கி இருக்கும் மலையில் மூணு concrete bollard அமைச்சாங்க. மக்கள் கூடும் பெரிய ஹால் போன்ற இடத்தை அங்கேயே மரம் கொண்டு கட்டுனாங்க. தண்ணீருக்கடியில் இருக்கப்போகும் கண்ணாடி அறையை இன்வெர்கார்கில் என்ற நகரில் உள்ள E Type Engineering company உருவாக்குச்சு. இந்த நகர் தெற்குத்தீவின் தென்கோடியில் இருக்கு. இதோட கனம் என்னன்னா 450 டன். இதைக் கடலோரமா இழுத்துக்கிட்டுப்போய் சேர்க்கவே 80 மணி நேரம் ஆச்சாம்.



அப்புறம் நாலு மிதவைகள் மேலே முழுக்கட்டிடத்தையும் ஏத்தி இணைச்சாங்க. கடல் மட்டம் உயரும்போதும் தாழும்போதும் இந்தக் கட்டிடம் பூராவும் ஏறி இறங்கும் வண்ணம் இரும்புக்கை (மாயாவி?)களை மலை முகத்தில் இருக்கும் காங்க்ரீட் தூண்களுடன் சேர்த்துட்டாங்க.


கட்டிடத்தில் நின்னா.... நாம் தண்ணீரில் மிதக்கிறோம் என்பதை முழுசா மறந்துருவோம். அதுக்குள்ளே இருந்து எதோ வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கிப்போறது மாதிரி சுழல் படிக்கட்டுக்களில் நாலு மாடி தூரம் இறங்கிப்போகணும். போனா?



ஒரு வட்டமான அறையில் போய்ச் சேர்வோம். நம்மைச் சுற்றி இருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் பார்த்தால்....... கடல்வாழ் உயிரினங்கள் அதுபாட்டுக்கு போறதும் வாரதுமா இருக்கும். நாம் நிற்கும் தரையில் இருந்துக் கடலின் அடித்தரை வெறும் 100 மீட்டர்தான். இந்தக் கட்டிடத்தையும் பாதுகாப்புக் கருதி ரொம்ப ஆழமில்லாத பகுதியில்தான் அமைச்சுருக்காங்க.
பதினாறுக்கும் மேற்பட்ட வகை உயிரினங்கள் அங்கே இயல்பா வாழ்க்கை நடத்துது. ஆனாலும் சிறப்பானதாச் சொல்லணுமுன்னா பவழத்தைச் சொல்லலாம். இது கருப்பு நிறப் பவழக்கூட்டம்.(இனிமேல் யாரும் பெண்கள் உதட்டுக்குப் பவழத்தை ஒப்பிடமாட்டீங்க தானே? )





எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் தெரியும். நமக்கும் அவுங்களுக்கும் இடையில் ஒரு மீட்டர்தான் இடைவெளி. இவ்வளவு அருகாமையில் அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாம அவுங்க வீட்டுக்குள்ளேயே போய் நின்னு வேடிக்கை பார்க்கிறோம் என்றதுதான் விசேஷம். அதுகளும் நாம் நிக்கறது தெரியாம 'தண்ணிக்குள்ளே என்னை பாரு'ன்னு ஆடிக்கிட்டு இருக்குதுங்க.




(அப்பாடி...தலைப்பு வந்துருச்சு)


தொடரும்........

24 comments:

said...

அருமையான ஐடியாவாக இருக்கே!!

said...

வாங்க குமார்.

இந்தப் பதிவை எழுதும்போதே உங்களைத்தான் நினைச்சேன். கட்டுமானப்பணியைப் பத்தி விளக்கமாச் சொல்லச் சரியாத் தெரியலையே! குமாருக்கு மட்டும்தான் புரியுமோன்னு....

மொத ஆளா நீங்களே வந்துருக்கீங்க!!!!

said...

துளசி மேடம்! சிறப்பான பயணக் கட்டுரை இது.ரொம்ப சுவாரஸ் யமாவும் இருக்கு.

said...

//அந்தம்மா ரொம்ப நல்லவங்களா இருந்திருப்பாங்க போல!

"அந்தக் காலத்துலே(1868)" // லேன்னு சொன்னப்பறம் வேற எப்படிங்க இருக்கமுடியும் !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com

said...

வாங்க பிரேம்ஜி.

'தொடரும்' ஆதரவுக்கு நன்றி.

பதிவு பயனுள்ளதா இருக்கான்னு தெரியலை!

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

இந்தம்மா கவர்னர் மனைவின்னு படாய் பண்ணிக்காம நல்லது செஞ்சுருப்பாங்கதான். இவுங்க கணவர் ஆஸ்தராலியாவிலும் கவர்னர் பதவி வகிச்சார். அங்கேயும்
ஒரு ஆறுக்கும், இன்னுமொரு பகுதிக்கும் இவுங்க பெயரை வச்சுருக்காங்க.

ஆமாம்..... 1868 மட்டும்தான் பெண்கள் நல்லவங்களா இருந்தாங்களா?

ஆனாலும் உங்களுக்கு(ம்) 'நுண்ணரசியல்' வந்துருச்சே!!!

said...

//இது கருப்பு நிறப் பவழக்கூட்டம்.(இனிமேல் யாரும் பெண்கள் உதட்டுக்குப் பவழத்தை ஒப்பிடமாட்டீங்க தானே? ) //

இன்னிக்கு இவ்வளவு சிகரெட் பிடிக்கும் பெண்கள், கண்ட சாயத்தையும் உதட்டில் பூசிக் கொள்ளும் பெண்கள் இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை!!

said...

அதென்னப்பா, அரிசி மாவு ஃபால்ஸ்:)

சே, இட்லிமாவா இருந்தா தோசை சுட்டு சாப்பிட்டிருக்கலாம்.

கட்டுமானம் ஒண்ணும் மண்டைல ஏறலை. எதுக்குப்பா. நாமெல்லாம் கட்டின பிறகு அனுபவிக்கிற ஜாதி.:)
ஆனா டிசைன் நல்லா இருக்கு.

said...

தண்ணிக்குள்ளே அவைகளைப் பாத்தேன்
அவை காவியம் ஆயிரம் கூறிக்கொண்டிருந்தன!!அருமை! துள்சி!!
சுகமான படகுப் பயணம்.
பாதி நியூசியை சுற்றிக் காட்டிவிட்டீர்கள்!!
மீதியை...? நேரிலே பாத்துக் கொள்வேன்!!
//அரிசிமாவுக்கிடங்கில்.....//!!!!
ரூம் போட்டு யோசிப்பீர்களோ?

said...

கரும்பவளத்தை...பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுவிட்டுப் போகிறார்கள்!!!கவிஞர்களின் கற்பனைக்கா பஞ்சம்?

said...

ஆழிசூழ் அறை= சுற்றிலும் கடல் சூழ்ந்த
அறை...ஓகே
ஆப்சர்வேட்டரிக்கு என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் 'ஆராய்ந்தறியும் அறை' என்ற அர்த்தம் கொஞ்சம் கிட்டக்க வருதா..? இல்ல எட்டக்க போகுதா...? துள்சி?

said...

//போனபகுதி படிக்காதவங்க இங்கே போய்ப் படிச்சுட்டு வந்தீங்கன்னா நல்லது//

என்னங்க தசாவதாரம் படத்துல முதல் 15 நிமிடம் பற்றி சொல்ற மாதிரி சொல்லுறீங்க ;-)


ஹீ ஹீ ஹி அப்புறம் என்னால சொல்லாம இருக்க முடியல.. திரும்ப நீங்க ஒரு கேப்டன் னு புள்ளி விவரமா அடித்து சொல்லிட்டீங்க :-)))

said...

டீச்சர்

நன்றாக விளக்கமாக கொடுக்கிறிங்க...சூப்பர்..படங்களும் அருமை ;)

said...

டீச்சர்..

ஒரேயொரு டிக்கெட்.. ஒரு டிக்கெட் போதும்.. வித் ரிட்டர்னோட..

அனுப்பிட்டீங்கன்னா உங்களுக்கு 10 வருஷ புண்ணியம் ஒரே நாள்ல சேர்ந்திரும்..

ரெடியா இருக்கேன்.. இதையெல்லாம் பார்க்காம எப்படி சாகுறது..?

said...

வாங்க கொத்ஸ்.

நுண்ணரசியல்ன்னு சொல்லி வாய்மூடலை அதுக்குள்ளே நீங்க ஆஜர்:-)))))

ஆமாம்...உதட்டுச்சாயம் சிகெரெட் கருப்பை மறைக்கமட்டும்தானா? (-:

said...

வாங்க வல்லி.

இட்லிமாவா இருந்தாப் புளிச்சுப்போய் நாறாதா?

இது அரிசிமாவுப் பவுடர்ப்பா:-))))

கட்டுமானக் கவலை நமக்கு ஏன்? நான் அதுலே நின்னும் மூழ்காம இருந்துச்சே. அது போதாதா? :-))))

said...

வாங்க நானானி.

குளிருக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கும்போது யோசிச்சதுதான்:-))))

ஆராய்ச்சிக்கூடம் னு சொல்லிக்கலாம்.

கருப்பு திராட்சைக்குக் கோபம் வராதா?

'அதுவும் பீங்கான் தட்டிலே உருளும் திராட்சை போன உன் கண்கள்'

மேற்படி வசனம் எங்க அத்திம்பேர் எழுதுனது. அவருக்கு நாடகம் எழுதி நடிப்பது ஒரு ஷோக். அதெல்லாம் எழுதுனா ஒரே சிரிப்புதான்:-)))

said...

வாங்க கிரி.

நான் ஒரு 'சரித்திர டீச்சர்'!!! வருசமோ, எண்களோ இல்லாம சரித்திரம் இருந்ததா ஒரு சரித்திரமே இல்லையாக்கும்:-)))

பட்னு நான் கேக்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்.

முதலாம் பானி'பட்' போர் நடந்த வருசம் எது?

:-))))

said...

வாங்க கோபி.

விளக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

காலம் நேரம் வரவேணாமா? பொறுத்திருங்க.

லாட்டோ அடிக்கட்டும்:-))))

ப்ளேனையே சார்ட்டர் பண்ணிறலாம்:-)

said...

மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. நேரில் பார்க்க வேண்டும் ஆவலை தூண்டுகிறது.

நன்றி.

said...

வாங்க வெற்றிமகள்.

வருகைக்கு நன்றி.

இதன் அடுத்த பகுதி இன்னிக்குப் போட்டுருக்கேன்.

படிச்சுட்டுச் சொல்லுங்க.

said...

விபரமாக அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்

said...

வாங்க அரவிந்தன்.

உள்ளூர்க்காரியா இருந்துக்கிட்டு விவரமில்லாம இருக்கலாமா???
அதான்.

பாருங்க கிரி சொல்லி இருப்பதை.

விஜயகாந்த் வேற இந்தியாவில் நம்மூர்க்காரர். அப்படி இருக்கப் புள்ளி விவரம் இல்லாமல் சொல்லமுடியாதுதானே:-)))))