Tuesday, June 24, 2008

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு..... (தொடர் பகுதி 4)

பெண்களுக்கு மட்டுமா இருக்கு? ஆண்களுக்கும் இருக்குன்னு நிரூபிக்க ஒரு சவுண்டுக்கே இந்தப் பெயரை வச்சவுங்களை........ஒருவேளை இது சவுண்டுக் கணக்கில் வருமோ இல்லை வராதோ என்ற டவுட்டா?


மறுநாள் டவுட்ஃபுல் சவுண்டு போறோமாம். முழுநாள் பயணம். இங்கே மானாபுரியில் இருந்தே கிளம்பறாங்க. காலையில் எட்டுமணிக்கு படகாஃபீஸ் வந்துறணும். வந்துட்டோம். அங்கேயே நம்ம டிக்கெட்டைச் சரிபார்த்துட்டு, இதுலே உங்களுக்கான பகல் சாப்பாடும் சேர்ந்துருக்கு. இதுலே எதுவேணுமுன்னு சொல்லுங்கன்னு ஒரு பட்டியலைக் காமிச்சாங்க. சாகபட்சிணிக்கு என்ன இருக்குன்னு பார்த்தேன். கிடைச்சது வெஜி ரோல்ஸ். எல்லாம் பர்கர் சமாச்சாரம்தான். bun பன்னா வட்டமா வச்சா பர்கர். சிலிண்டராட்டம் நீளமா இருந்தா ரோல். எல்லாம் அதே மாவுதான். அதே லெட்டூஸ், தக்காளின்னு உள்ளே வைக்கும் சமாச்சாரமும் ஒன்னுதான்.
அவுங்க அதையும், ஒரு ஜூஸ் டப்பாவும், ஒரு இனிப்புத் தயிரும் வச்ச பொதியைத் தந்து லஞ்சுக்கு வச்சுக்குங்கன்னாங்க.
அடப் பாவிகளா..... படகுலே இப்படித்தான் பகலுணவுன்னு தெரிஞ்சுருந்தா நாமே எதாவது கொண்டுவந்துருக்கலாமேன்னு இருந்துச்சு. நாங்க இங்கெல்லாம் இப்படிப் பயணம் போகும்போதுச் சின்னதா ஒரு ரைஸ் குக்கர், ஒரு கடாய், கொஞ்சம் மசாலா, அரிசி, சின்னதா ஒரு பாட்டிலில் எண்ணெய், காலை உணவுக்குன்னு சீரியல்கள், ப்ரெட், ஜாம், மார்ஜரின், நாலைஞ்சு வெங்காயம், ரெடிமேட் உப்புமா(ரெஸிபி இன்னொருநாள் சமையல் வகுப்பில் சொல்றேன்) முக்கியமா காஃபி, டீ, சக்கரை, ஒரு கேன் பால் எடுத்து ஒரு அட்டை டப்பாவில் வச்சு கார் டிக்கியில் வச்சுக்குவேன். உப்பு ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக்கணும். மறந்துறாதீங்க. ஒரு ஃப்ளாஸ்க் இருந்தால் உத்தமம். இப்பெல்லாம் உடையாத வகையில் கிடைக்குதே. நம்ம வயிறு வாடக்கூடாதில்லே........

நான் பொதுவா வீட்டில் பாட்டிலில் இருக்கும் பொருட்களை அப்படி அப்படியே எடுத்து வச்சுருவேன். அதுபாட்டுக்கு வந்துட்டுப்போகட்டும் கழுதைன்னு:-)

அங்கங்கே காய்கறிகள் கிடைக்கும். இல்லைன்னா எதாவது ஒரு கடையில் கண்டிப்பா மிக்ஸட் வெஜிடபிள் (உறைஞ்சது) கிடைக்கும். எல்லா மோட்டல், கேம்ப் டூரிஸ்ட் ப்ளாட்களிலும் பாத்திரங்கள் வச்சுருப்பாங்க. ஆனா....... எனக்கு ......கொஞ்சம் பேஜார்தான். அதனால் காபி மக், தட்டுகள், கரண்டி, ஸ்பூன் இப்படிக் கொஞ்சூண்டு கையில் எடுத்துக்கிட்டுப் போயிருவேன். நானா சுமக்கப்போறேன். கார்தானே? ஊறுகாய் பாட்டில், புளிக்காய்ச்சல் எல்லாம் நினைவிருக்கட்டும். ஃப்ரிட்ஜ் எல்லா இடத்திலும் இருக்கு. பொதுவான கிச்சன்னு சொன்னா அங்கே இருக்கும் ஃபிரிட்ஜில் பால், தயிர் டப்பாவில்நம்ம பெயரை எழுதி வைக்கலாம். யாரும் எடுக்க மாட்டாங்க. தனியா டூரிஸ்ட் ப்ளாட் கிடைக்கலேன்னா இப்படி ரூம் மட்டும் எடுத்துக்கலாம். இது ரொம்ப மலிவுதான். டெண்ட் வச்சுருந்தா பிரச்சனையே இல்லை. புக்கிங் கூட பண்ண வேணாம். மோட்டார் கேம்ப்லே நம்ம டெண்டுக்கு ஒரு இடம் கொடுப்பாங்க. அதுலே கூடாரமடிச்சுத் தங்கிக்கலாம். அடுக்களை, பாத்ரூம், டிவி ரூம், வாஷிங் மெஷீன் & ட்ரையர் ரூம் எல்லாம் பொதுவா படு நீட்டா இருக்கும்.
எனக்குத்தான் இன்னும் கூடாரம் அடிச்சுக்கத் தோணலை. டூரிஸ்ட் ஃப்ளாட் இருக்கான்னு பார்த்து புக் பண்ணிக்கிறதுதான் சரியா இருக்கு.


எல்லா இடங்களிலும் செக் அவுட் டைம் 10 மணி. ஒருநாள் மட்டுமுன்னு போறவழியில் அங்கங்கே என்ன இடத்தில் தங்கறோமுன்னு பார்த்து பதிவு செஞ்சுக்கலாம். இப்ப நம்ம பயணத்தில் மூணு நாள் தங்கணுமுன்னு ஒரே இடத்தில் 3 படுக்கை அறை ப்ளாட் எடுத்துக்கிட்டோம். ரைஸ் குக்கரில் சாதம் செஞ்சுக்கணும். எதாவது ஒரு காயை கொஞ்சம் மசாலாவோட கறியா செஞ்சுக்கிட்டு, கடையில் தயிர் (ப்ளெயின் நேச்சுரல் யோகர்ட்) வாங்கிக்கலாம். சிப்ஸ் இத்தியாதிகள், நொறுக்குத்தீனிகள் எல்லாம் வீட்டில் இருந்தே கொண்டு போயிறணும். இதெல்லாம் காலை 10 மணிக்கு முன்னாலே டிக்கியில் ஏத்திறனும்:-)))))

சுத்திப்பார்த்து மாலை தங்குமிடம் வந்துட்டால் ராத்திரி சாப்பாட்டுக்கு எதாவது செஞ்சுக்கலாம். இண்டியன் ரெஸ்டாரண்டு தேடுவது முதல் வேலை. ஒன்னும் இல்லைன்னா சமைச்சுக்கலாம். களைப்பா இருக்கும்போது சிம்பிளா ஒரு தயிர்சாதம் போதாதா?

ரெண்டு ஃப்ளாஸ்க் வச்சுக்குவேன். ஒன்னு கொதிக்கும் வெந்நீர். இன்னொண்ணு சூடாக்குன பால். பச்சைப்பாலை ஊத்துன காஃபி & டீ குடிக்கச் சகிக்காது. யக்(-: பயணத்துலே பகல் சாப்பாடு, மிட் மார்னிங் காஃபி ப்ரேக், மாலை டீ டைம் இப்படி டாண் டாண்னு அந்த நேரத்துக்கு வண்டியை ஓரங்கட்டிருவோம். எனக்கு முந்தியெல்லாம் மாலை 4 மணிக்கு டீ குடிச்சே ஆகணும், கார் எங்கே போய்க்கிட்டு இருந்தாலும். இப்ப ரொம்பவே மாறிட்டேன்.

பாருங்க பேச்சு சுவாரசியத்துலே எங்கியோ போயிட்டேன்....... படகாஃபீஸ்லே கொடுத்த லஞ்ச் பேக்கை பையில் போட்டுக்கிட்டு படகில் ஏறுனோம். குட்டிக்குட்டியா அங்கங்கே சில தீவுகள். ஒரு தீவுமட்டும் பளிச்ன்னு தீ பிடிச்சாப்புலெ சிகப்பா இருக்கு. எல்லாம் ராட்டா மரங்கள் பூத்துக்குலுங்கும் சமயம். . இதுதான் நியூஸியின் கிறிஸ்மஸ் மரம். இதுக்கு பொஹுட்டுக்காவான்னு (Pohutukawa) மவோரி பெயர். இதுவும் ராட்டாவும் வெவ்வேற மரங்கள்ன்னும் சொல்றாங்க. ஒரு பெரிய மலை அடிவாரத்தில் படகுலே இருந்து இறங்கி எங்களுக்காகக் காத்து நின்ன பஸ்ஸில் ஏறினோம். மலைப்பாதையில் போய்க்கிட்டே இருந்த வண்டி கொஞ்சம் கொஞ்சமாக் கீழே போய்க்கிட்டு இருக்கேன்னு பார்த்தால் ஒரு குகைக்குள்ளே இருக்கோமுன்னு புரிஞ்சது.

ரெண்டு கிலோமீட்டர் நீளமான குகை. அங்கே ஒரு இடத்தில் மலையின் அடித்தளத்தைக் குடைஞ்சு பவர் ஸ்டேஷன் அமைச்சு இருக்காங்க. மானாபுரி ஏரியில் இருந்து இந்த இடத்துக்கு 178 மீட்டர் உயர வித்தியாசம் இருக்குதாம். அந்தத் தண்ணீர் இதுலே பைப்லைன் வழியா இறங்கி இங்கத்து டர்பன் சுத்தும்போது மின்சாரம் எடுக்கறாங்க. அதுக்கப்புறம் வெளியேறும் தண்ணீர் மலைக்கு அடுத்தபக்கம் வந்து சவுண்டில் கலந்துருது. பவர் ஸ்டேஷனுக்காக தரையில் தோண்டுன குகை 39 மீட்டர் ஆழம். 111 மீட்டர் நீளம் & 18 மீட்டர் அகலம்,. இதோட வயசு வெறும் 39 தான். 1969 லே இருந்து மின்சாரம் சப்ளை தொடங்குச்சு. வெளியேறும் தண்ணிக்கான(tailrace) ரெண்டாவது குகைவழியை இப்போ ஒரு 6 வருசத்துமுன்னால் தோண்டி இருக்காங்க. இப்ப அங்கே 7 டர்பைன்கள் இருக்கு.

கட்டுமானப்பணிகள் & ஆரம்பகால ஆராய்ச்சிகள்ன்னு எடுத்துக்கிட்ட காலம் 65 வருசம். நல்லாத்தான் செலவு செஞ்சுருக்காங்க அந்தக் காலத்துலே. இதைப் பார்க்கணுமுன்னு துடியாத் துடிச்சவர் கோபால்தான். எல்லாம் தொழில் பக்தி!!. எலெக்ட்ரிகல் எஞ்சிநீயர் ஆச்சுங்களே. விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்த பவர் ஸ்டேஷன் நபரிடம் என்னென்னவோ கேட்டுக்கிட்டு இருந்தார்.

பக்காக் கட்டிடம். நாங்க நிக்கும் பெரிய மாடி ஹாலில் நடுவில் திறந்த வெளியா சரேல்ன்னு இறங்கும் இடத்தில் பெரூசா வட்டவட்டமா இரும்புத் தட்டுகளை வச்சா மாதிரி இருக்கு. பளபளன்னு காங்க்ரீட் தரை மின்னுது. 'ஹம்'ன்னு ஒரு ரீங்காரம் தம்புரா வாசிக்கிறதுபோல தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கு. அவ்வளோ பெரிய இடத்தில் ஒரு நாலைஞ்சு ஆட்கள்தான் கீழே இங்கேயும் அங்கேயுமாப் போய்வந்துக்கிட்டு இருக்காங்க. யாரும் கீழ்ப்புறம் இறங்கிப் போக அனுமதி இல்லை.

நான் படிக்கும்(!) காலத்துலே மேட்டூர் பவர் ஸ்டேஷன் போயிருக்கேன். அது போல இல்லாம இது வேற மாதிரி இருக்கேன்னு சுத்திவரப் போட்டுருக்கும் கைப்பிடிக் கம்பியைப் பிடிச்சுக்கிட்டு எட்டிப் பார்த்துக்கிட்டே யோசிச்சுக்கிட்டும் பராக்குப் பார்த்துக்கிட்டும் நிக்கும்போது 'தடால்'ன்னு ஒரு சத்தம்.

கோபால் வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தார். அவரோட கேமெராவிலே இருந்த பேட்டரி (நல்லா எருமைக்கனம் இருக்கும்) நழுவி அப்படியே விழுந்து தெறிச்ச சப்தம்தான் அது. நாங்க ஒரு பத்துப்பேர் மொத்தமா நின்னுருந்தோம். எல்லாரும் கப்சுப்ன்னு ஆகிட்டோம். நல்லவேளை அப்ப அந்த வழியா கீழே யாரும் நடமாடலை. அப்புறமா பவர் ஸ்டேஷன் நபர்தான் போய் எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தார். அந்தச் சத்ததுக்கு அது தூள் தூளா ஆகிருக்கணும். அதுக்கு ஆயுசு கெட்டி. லாங் லைஃப் பேட்டரி:-)))) வெளிப்புற ப்ளாஸ்டிக் கூடு திறந்துக்கிச்சு. அதை ஒரு ஸ்டிக்கி டேப் போட்டுச் சுத்துனதும் ஒருமாதிரி வேலை செஞ்சது:-)))) ( நல்லதா ஒரு புது வீடியோ கேமெரா வாங்கிக்கணும்.)

அங்கிருந்து அதே பஸ்ஸில் கிளம்பி மலையின் மறுபக்கத்தில் இருக்கும் படகுத்துறையில் இறங்கி விட்டாங்க. மலை உச்சிக்குப் போனப்ப 'லுக் அவுட் பாய்ண்ட்'ன்னு ஒரு இடத்தில் ஒரு அஞ்சு நிமிசம் நிறுத்தம்.
எல்லாம் படம் க்ளிக்கத்தான். டவுட்ஃபுல் சவுண்டு நீளமா மலைகளுக்கு இடையில் போய்க்கிட்டே இருக்கு.
பி.கு: சின்ன சைஸ் படங்கள் அன்பளிப்பு 'ஆண்டவர்' :-)


17 comments:

Anonymous said...

சந்தேகம் ரொம்ப சத்தம் போடுது. இன்னும் காதுக்குள்ளயே ‍‍ இல்ல கண்ணுக்குள்ளயே இருக்கு.

said...

சோதனை:-)

said...

சோதனை வெற்றிதானே...! நன்றி பாப் அப் எடுத்ததுக்கு. வீட்டையே கொண்டுபோயிடுவீங்கன்னு சொல்றீங்க காரில்.. ஹ்ம்.. நானும் ஏறக்குறைய அப்படித்தான்.. குட்டீஸ் இருக்கறதால சிலது தேவைப்படும்.. மத்தபடி வெளியே சாப்பிட எங்கே என்ன கிடைத்தாலும் அப்பாடான்னு சாப்பிடுவேன்.. இந்தியா தானே..

said...

அது சரி! கிச்சனே கூட வருது போல!!

said...

கோபால் வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தார். அவரோட கேமெராவிலே இருந்த பேட்டரி (நல்லா எருமைக்கனம் இருக்கும்) நழுவி அப்படியே விழுந்து தெறிச்ச சப்தம்தான் அது. நாங்க ஒரு பத்துப்பேர் மொத்தமா நின்னுருந்தோம். எல்லாரும் கப்சுப்ன்னு ஆகிட்டோம். நல்லவேளை அப்ப அந்த வழியா கீழே யாரும் நடமாடலை. அப்புறமா பவர் ஸ்டேஷன் நபர்தான் போய் எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தார். அந்தச் சத்ததுக்கு அது தூள் தூளா ஆகிருக்கணும். அதுக்கு ஆயுசு கெட்டி. லாங் லைஃப் பேட்டரி:-)))) //

யானை வெங்கலம் தெரியும் அவங்க வீட்டு காமிரா கூடவா:)

உங்க வீட்டுக் கார் ட்ரன்க் ஒரு என்ன சைஸ் இருக்கும்னு யோசிக்கிறேன்:)

சந்தேக சவுண்ட் ,சுத்தமா படு இண்ட்ரஸ்டிங் துளசி.

said...

விவரனை எல்லாம் படு சூப்பர்.

வெள்ளகார துரை மாதிரி ஒரு பையை முதுகுல போட்டுகிட்டு நம்மால ஊர் சுத்த முடியுதா? :))


//அது சரி! கிச்சனே கூட வருது போல!!
//

@கொத்ஸ், கிச்சன் மட்டுமல்ல, குக்கும் கூடவே பயணிக்கிறார் என்பதை நினைவில் கொள்க. :p

said...

வாங்க சின்ன அம்மிணி.

கண்ணுக்குள்ளே இருப்பதில் கவனமாக் கொஞ்சம் பாருங்க. எதையாவது விட்டுட்டேனா இல்லை தவறான விவரம் தந்துட்டேனான்னு ஒரு செக்கப்பு, ப்ளீஸ்.

said...

வாங்க கயலு.

கொஞ்சம் படுத்துச்சுன்னு தான் ஒரு சோதனை வச்சேன். பாஸ் பண்ணிருச்சு:-))))

சாப்பாடுதான் (இந்தியாவில் என்றாலும் கூட) வெளியே திங்க ஒரு பயம்.

பயணத்துக்கு இடைஞ்சலா 'எதாவது வந்துருமோ'ன்னு......

said...

வாங்க கொத்ஸ், வல்லி & அம்பி.

லிஸ்டுதான் பெருசு. ரெண்டு காட்போர்டு கார்டனில் எல்லாம் அடங்கிரும்:-))))

குக் மட்டுமில்லை கிச்சன்ஹேண்ட்(ச) ம் கூட வர்றார் தெரியுமா?

இப்படி பயணத்தில் எல்லாரும் வேலையைப் பங்கு போட்டுக்கணும்.
அதுக்குத்தானே வீட்டைவிட்டுக் கிளம்பறதே:-))))

said...

பாருங்க பேச்சு சுவாரசியத்துலே எங்கியோ போயிட்டேன்....... //

இதுதாங்க ஒங்க ட்ரேட் மார்க். பேசறாப்பலேயே எழுதறது..

said...

<==
கையில் எடுத்துக்கிட்டுப் போயிருவேன். நானா சுமக்கப்போறேன். கார்தானே? ==>
அதானே. கார் டிக்கியிலிருந்து கீழ இறக்கி வைக்கிறதுக்குகூட வேற ஆள்(கோபால்)தான் =)))
<==
அவரோட கேமெராவிலே இருந்த பேட்டரி (நல்லா எருமைக்கனம் இருக்கும்) நழுவி ==>
அதயும் (வேறொரு கேமராவில்) போட்டோ எடுத்துப்போட்ருக்கலாம்.

said...

வாங்க டி பி ஆர்.

இப்படி எழுதுனாதான் மனசுக்குப் பக்கம் வர்றது போல இருக்கு.

நம்ம 'நடை'யை யாரும் களவாட முடியாது பாருங்க:-)

said...

வாங்க சாமான்யன்.

நீங்க லேசுப்பட்ட ஆளில்லை.

எ(ருமையி)ருதின் நோவு காக்கைக்கு.....

அச்சச்சோ பழமொழி மறந்துபோச்சே........

ட்ரேட் இன் ஆஃபர் வருதான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன், அந்தக் கெமெராவை மாற்ற:-)))))

said...

முழுதாக படித்து பின்னூட்டம் போட நேரமில்லை..திரும்ப வருகிறேன் :-)

said...

வாங்க கிரி.

எப்ப முடியுமோ அப்ப:-)

said...

நேரிலே பேசறாப்ல நல்ல எழுதுறீங்க.
நானெல்லாம் போற எடத்திலே
என்ன கெடைக்குதோ அதே போதும்ன்னு ஜாலியா கெளம்பிடுவேன். கிச்சனையெல்லாம்
நெம்பிட்டு போகமாட்டேன். பின்னே
கூட ஒரு குக் வந்தால் சேரி!!!

said...

வாங்க நானானி.

இங்கே அப்படிக் கிளம்ப முடியாது. ரொம்ப ரிமோட் இடங்கள்ப்பா. ப்ரெட்டையே எத்தனை நாள் தின்றது?
அதுவுமே கிடைக்காத இடங்களும் இருக்கு.

ட்ராம்ப்பிங் போறவங்க எல்லாத்தையும் மூட்டைகட்டி முதுகுலே சுமக்கணும். அதுக்கு நாம் தேவலை.கார் சுமக்கட்டுமே:-))))

ஒரு முறை பாதாம் ஹல்வாவும் முறுக்கும் செஞ்சு கொண்டுப்போய் க்ரே மௌத்தில் தின்னோம்:-)