Sunday, August 10, 2008

கலாக்கார் கே ஸாத் ஏக் முலாகாத்

என்னதான் டேட்லைனில் உக்கார்ந்திருந்தாலும், இப்படியா ஆறுநாளைக்கு முன்னாலே சுதந்திர தின விழாக் கொண்டாடுவது? முந்திரிக் கொட்டை!!!!


மூணே மூணு நடனம். கதக். கடைசி மட்டும் ஒரு 11 நிமிசத்துக்குப் போச்சு. முதல் இரண்டு நடனத்துக்கும் மூணாவதுக்கும் தேவைப்பட்ட இடைவெளியில் 'உள்ளூர் மணிகள்' ஒலிக்கணும்தானே? ராஜஸ்தானி நடனம். எஷா ( Esha) சின்னப் பொண்ணுதான். வயசு 9. என்னா ஆட்டம், என்னா ஆட்டம். இதுவும் ஒரு ஏகலைவி. பாட்டு பால்குணி பதக். ரெண்டு பதின்மவயதுப் பொண்கள், தில் ஹை ஹிந்துஸ்தானி பாட்டுக்கு ஆடுனாங்க. பஞ்சாப் சிங்கம் ஒருத்தர் வந்து பாங்ரா ஆடுனார். கேரளா க்ளப்பின் கோல்டன் வாய்ஸ் ஆலன் ஒரு மலையாளப் பாட்டு.


முதலில் வந்தே மாதரம் பாட்டுக்கு அபிநயம், ரெண்டாவது ந்ருத்யா, மூணாவது தரானா. ஆடுனது பூஜா பட்நாகர். சொந்த ஊர் டில்லியாம். இவுங்க இந்தோனேஷியா, ஜகர்த்தா நகரில் இண்டியன் கல்ச்சுரல் செண்டரில் கதக் நடனம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர். அப்படியே தேவைப்பட்டால் மேடை நிகழ்ச்சிகளும் அப்பப்ப நடத்துறாங்களாம்.




(வந்தே மாதரம்.....)

நம்ம இந்தியத் தூதரகம், சுதந்திர தின விழாக்களுக்காக பூஜாவை இங்கே நியூஸிக்கு வரவழைச்சுருக்காங்க. நம்மூர் விழாவுக்கு நம்ம ஹைகமிஷனரைக் கூப்பிட்டு இருந்தோம். வெலிங்க்டன், ஆக்லாந்து நகரில் எல்லாம் நடக்கப்போகும் விழாக்களுக்கும் அவர் போகணும் என்றபடியால் நாங்க ஒரு ஆறு நாளைக்கு முன்னாலேயே விழாவை வச்சுக்கிட்டோம். நமக்கு சனிக்கிழமையாவும் இருக்கணும் என்ற நிர்ப்பந்தம் ஒன்னு இருக்கே.


இந்திய ஹைகமிஷனரும் அவர் மனைவியும்.

ஏழுமணிக்குன்னு (ச்சும்மாச்) சொல்லிவச்சு மக்களை இழுத்துவந்து சரியா எட்டுமணிக்கு விழா ஆரம்பமாச்சு. முதலில் இந்திய நாட்டு தேசியகீதம், அதைத் தொடர்ந்து நியூஸியின் தேசீய கீதமுன்னு ரெட்டை நாயனம். இந்திய ஹைகமிஷனர் மனைவியுடன் வந்துருந்தார். இந்த இந்தியன் க்ளப்பின் பிதா(??)வுடன் சில நிமிட உரையாடல். க்ளப் ஆரம்பிச்சுச் சரியா 11 வருசம் ஆகுது.


இப்போதைய தலைவர் மேடை ஏறுனதும் 'சட்'னு ஒரு காந்திக் குல்லாய் எடுத்துத் தலையில் அணிஞ்சுக்கிட்டார். குஜராத்தியா இருந்துக்கிட்டுக் குல்லாய் இல்லேன்னா எப்படி? பேச்சை முடிக்கும்போது 'ஜெய் ஹிந்த்'ன்னு சொல்லி கெத்தாய் முடிச்சுருக்கக்கூடாதோ? மறந்துட்டார் போல!




'காந்தி பார்த்த கதக்'ன்னு கூடத் தலைப்பு வச்சுருந்துருக்கலாம் இல்லே? கெமெராவுக்கு முன்னாலே குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டு இருந்தார்(-:


மேடையில் நம்ம இந்திய ஹை கமிஷனர் சின்னதா, அருமையா பேசுனார். இவருக்கு ஒரு கோயிலே கட்டிறலாம்.எங்களையெல்லாம் இதுவரை நாலைஞ்சுமுறை சந்திச்சிருக்கார். கேரள நாட்டுக்காரர். சந்தடி சாக்குலே அடுத்த மாசம் நடக்கப்போகும் ஓணம் விழாவுக்கு வரமுடியுமான்னு கேட்டேன். 'நியூஸி அமைச்சர்கள் இந்தியா போகும் திட்டம் இருக்கு, நானும் கூடப்போகணும். அதனால் விழாவுக்கு வந்து கலந்துக்க முடியாது. நல்லபடியாக் கொண்டாடுங்க'ன்னு சொன்னார். . இதுக்கு முன்னாலே இருந்த ஹைகமிஷனர் எப்படியெல்லாம் நம்ம நாட்டை அசிங்கப்படுத்திட்டு போனார் என்ற நினைவு வேணாமுன்னாலும் மனசில் வந்து போச்சு.

பூஜா முதல்முறையா நியூஸிக்கு வந்துருக்காங்க. வெள்ளிக்கிழமை சிட்னி வழியா இங்கே கிறைஸ்ட்சர்ச் வந்து இறங்குனாங்க. குவாண்டாஸ் ஏர்வேஸ் வழக்கப்படிப் பொட்டி தொலைஞ்சு போச்சு. நாட்டியத்துக்கான உடைகள் எல்லாம் அந்தப் பொட்டியில். நல்லவேளையா சனிக்கிழமைக் காலையில் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தாங்களாம். 'இந்த கிறைஸ்ட்சர்க் நகரம் ரொம்ப அழகா இருக்கு, சப்தமே இல்லை. இந்தியாவைப்போலவே விருந்தினரை உபசரிப்பதில் நீங்கள் முன்னணியில் இருக்கீங்க'ன்னெல்லாம் வானளாவப் புகழ்ந்தார். எனக்குக் கொஞ்சம் வெக்கமாப் போச்சு. பாட்லக் டின்னருக்கு நான் புளிசாதம்தான் கொண்டுபோயிருந்தேன்:-)




ஞாயிறு காலை வெலிங்க்டனுக்கு நம்ம ஹைகமிஷணர் கூடவே போயிருவாங்க. ஒரு வாரம் வடக்குத்தீவில் அங்கங்கே நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு அடுத்த ஞாயிறு ஜகர்த்தாப் பயணம். கணவர் அங்கே ஒரு கம்பெனியில் வேலையாம். ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டும் நடத்துறாங்களாம்.

கதக் நடனம் ஆடத் தெரிஞ்ச உள்ளூர்த் தோழியிடம், பூஜாவின் நடனம் பற்றிய செகண்ட் ஒப்பினியன் கேட்டேன். நமக்குத்தான் எப்படி ஆடுனாலும் நல்லா இருக்கே. காய்ஞ்ச மாடுகள் இல்லையோ? :-)

'ரொம்ப நல்லா ஆடுனாங்க. எல்லாம் அதுக்கேத்த பத்ததி பிரகாரம் இருந்துச்சு' ன்னாங்க. இவுங்க நடனம் ஒன்னு மிட்விண்டர் விழாவுலே இருந்துச்சாம். ஏன் வரலைன்னு கோச்சுக்கிட்டாங்க. 'நீங்க ஆடறேன்னு தெரிஞ்சதாலே வரலை'ன்னேன்:-))))




சரி, பூஜாவின் நடனத்தைச் சொல்றேன். ந்ருத்யாவில் முக்கியமானது கால்களில் தாளமிட்டு ஆடுவதுதானாம். ஃபுட் வொர்க். கடைசியாக ஆடுன தரானாவில் அந்தப் பாட்டு பதிமூணாம் நூற்றாண்டில் ஒரு ஒரு சூஃபி எழுதுனதாம். கவாலி இசையும் சேர்ந்துருக்குன்னு சொன்னாங்க. ஓ...அப்படியா?

நான் பெற்ற இன்பம் (தமிழ்கூறும்) நல்லுலகமும் பெறட்டுமேன்னு யூட்யுபில் போட்டுவச்சேன். எல்லாம் ரெண்டு, மூணு நிமிசப் படங்கள்தான்.
'ஆடமாட்டாதவனுக்கு அறுபத்தெட்டு அரிவாள்'னு சொல்றாப்போல ஆளுக்கு ஒரு கேமரான்னு தூக்கிக்கிட்டுப் போனோம். யார் கை நடுங்காம இருக்குன்னு பார்த்தே ஆகணும்:-))))




படங்கள் வீடியோ எல்லாம் சுமாராத்தான் வந்துருக்கு. கேமெரா சரியில்லைப்பா. அதுக்கு நாமென்ன செய்ய முடியும், இல்லே?




தலைப்பைத் தமிழில் வைக்காத காரணத்தை யாராவது ஊகிச்சுச் சொல்லுங்க:-)


பங்குபெற்ற கலைஞர்களுடன் நம் இந்தியத் தூதர்.


அனைவருக்கும் இந்திய சுதந்திரத்தின் 61 வருசத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.



ஜெய்ஹிந்த்!!


பி.கு: வெலிங்டன் பதிவர் கவனத்துக்கு:

தவறாமல் விழாவுக்குப் போய் வாங்க.

29 comments:

said...

மீ தெ பஷ்ட்டு?

said...

ஏன்னா தமிழ் 'ஐட்டம்' ஒண்ணுமே இல்லையே!!

வாழ்துகள் ரீச்சர்!!

said...

//தலைப்பைத் தமிழில் வைக்காத காரணத்தை யாராவது யூகிச்சுச்
சொல்லுங்க//

மொதல்லே இதுக்கு தமிழ் என்ன?:
முலாகாத் கெ ஸாத் ஏக் கலாக்கார்

said...

மீ த மர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஉ

உய்...உய்...உய்..:D :)))))))))

said...

இங்க சாப்பாடு (பாக்க) நல்லா இருக்கூஊஊஊஉ

செவிக்கும் கண்ணுக்கும் சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டப் பதிவு.....நல்லா இருந்தது...:)))

said...

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்! :))))

வந்தே மாதரம்! :)))

said...

வாங்க சிஜி.

கோவியார் தீர்மானம் போட்டாலும் போட்டார்...இப்ப மீ த ஃபர்ஸ்ட்'க்குத்தான் 'மவுஸ்' கூடப்போகுது:-))))

காது காதுன்னா லேது லேதுன்னு சொல்லணுமா? நம்ம ஆடுமாடு நடத்தும் ஹிந்தி வகுப்புக்கும் போய்ச் சேர்ந்துக்குங்க. இப்ப இந்தி எதிர்ப்புன்னு ஒன்னும் இல்லை.

said...

வாங்க கொத்ஸ்.

பு(லி)ளி சோறு தமிழ் ஐட்டத்துலே வராதா?

said...

வாங்க புதுவண்டு.
யூ த தேர்ட்:-)

உங்க பதிவும் பார்த்தேன்:-)

said...

ந்யூ பீ மூன்று தினங்களுக்கு முன் வாழ்த்து சொல்லி ஆரம்பித்து வைக்கிறாரே என்று பார்த்தால் அங்கே விழாவே முடிந்ததா? சுதந்திர தின வாழ்த்துக்கள்.

தமிழில் பெயர் வைக்காத காரணம்..ம்ம்.ம் தெரியலையே. சரி நம்ம ந்ண்பர்கள் யாராவது சொல்வார்கள். இல்லாவிடில் திரும்பி வந்து உங்களிடமே கேட்கிறேன்:)!

வந்தே மாதரம்.

said...

ஏன்னா இதுக்கான தமிழை
கோபால்சார் உன்களுக்கு சொல்லிக்கொடுக்கல்லே
அதானே காரணம்?

said...

कलाकार के सात मुलाकात बहुत अच्छा रहा

said...

தலைப்போட ஒன்றிப் போயாச்சு... அதான் கமெண்ட் மொழி மாறிடுச்சு.... :)
ஹிந்தி தலைப்புக்கு கலைஞர் இந்திக்காரர், மற்றும் பாடல்கள் இந்தியில் என்பதாலோ.... :)

said...

கலைஞருடன் ஒரு சந்திப்புன்னு போட்டா எல்லாரும் ஆடிப்போயுடுவாங்கன்னு .. நீங்க ஹிந்தில வச்சிட்டீங்களோ..

said...

டீச்சர்..இந்தப் பூஜாதானே படங்கள்ல கூட நடிக்கிறாங்க ?

said...

வாங்க ராமலக்ஷ்மி.
சூட்டோடு சூடாய் போடலாமுன்னு நடனத்தை வலை ஏத்தறதுக்குள்ளே தவிச்சுத் தண்ணி ( வெறுந்தண்ணிதான்)குடிக்க வேண்டியதாப் போச்சு.

யூ ட்யூப்க்கு என்ன ஆச்சோ? ரெண்டு மூணு நிமிஷ சமாச்சாரங்களுக்கு மூணுமணி நேரம் எடுத்துக்கிச்சு.

வண்டு இப்பச் சும்மாக் கட்டியம் கூறல்தானே? அவுங்க ஊர் நிகழ்ச்சியைக் கவர் பண்ணால் நல்லா இருக்கும்.

said...

என்னங்க சிஜி.

கனவா?

//கோபால்சார் உன்களுக்கு சொல்லிக்கொடுக்கல்லே
அதானே காரணம்?//

.....க்கும். சொல்லிக் கொடுத்துட்டாலும்.........

said...

வாங்க தமிழ் பிரியன்.

முஜே பி அச்சா லகா!!!

இன்னும் கொஞ்சம் யோசியுங்க:-)

Anonymous said...

டீச்சரே, ஹைகமிஷன்ரோட மலையளம் சம்சாரிச்சோ, இல்லே ஹிந்தி மே பாத் கியா க்யா!! (வெலிங்டன்ல எப்போன்னு விசாரிக்கிறேன்)

said...

வாங்க கயலு.

அப்பாடா..... 'கப்'னு பிடிச்சீங்க.

அதே அதே:-)

சிஷ்யப்பிள்ளையின் திறமையைப் பாராட்டுகின்றேன்.



இல்லேன்னா தலைப்புக் கயமையாப் போயிருக்கும்.

சூடான இடுகையில் வரும் சான்ஸ்தான் விட்டுப்போச்சு(-:

said...

வாங்க ரிஷான்.

இதானே வேணாங்கறது:-))))

நீங்க சொல்லும் பூஜா உங்கூர் ஆள்.

இவுங்க தில்லிக்காரம்மா:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

பி.கு. கிடைச்சதா? :-)))))

மலையாளம்தன்னே சம்சாரிச்சு:-))))

said...

கொத்ஸ் கேட்டதையே நான் திரும்ப கேக்க விரும்பவில்லை.

டில்லி டில்லி தான்!
பாரத் மாதா கி ஜே! :))

said...

என்னது? சுதந்திர தினம் கொண்டாடிட்டீங்களா!!!!!!

said...

ஏ.. துனியா வாலே பூ..சேங்கே..
முலாகாத் ஹுயி,க்யா பாத் ஹுயி?
அப்படின்னு யோசிச்சு "கலாக்கார் கே ஸாத் ஏக் முலாகாத்" பதிவு போட்ட
பன்மொழிப்புலவர் டீச்சருக்கு வணக்கம்! நான் கூட முதலில் 'ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்' பூஜா தானோன்னு நினைச்சுட்டேன். (தமாம் பாலா தரை டிக்கெட்டுக்கு தெரியுமா தில்லி கலாக்கார் :-))

இந்த பூஜா, வேற ஆளா இருந்தாலும், நீங்க பாக்குறதுக்கு 'டான்ஸ் மாஸ்டர் கலா'வோட அக்கா மாதிரி இருக்கீங்க -நியூஸிலாந்தின் புன்னகை அரசியே, என்பது என் தாழ்மையான அபிப்ராயம்!!

(பாலா ப்ளாக்லோ 'அல்கெமிஸ்ட் தொடர்கதை இப்புடே ஒச்சிந்தி,சூஸி கேலி சேயண்டி :-)))

http://bala-win-paarvai.blogspot.com/2008/08/1-2.html

said...

வாங்க அம்பி.

அதான் சரி. இதென்ன தோசையா?

said...

வாங்க ராஜ நடராஜன்,

கொண்டாடிப்புட்டோமுல்லெ:-)))

said...

வாங்க தமாம் பாலா.

இப்படியெல்லாம்..............

என்னவோ போங்க!!!!

வரேன்.... உங்க பதிவுக்கு.

said...

//வண்டு இப்பச் சும்மாக் கட்டியம் கூறல்தானே? அவுங்க ஊர் நிகழ்ச்சியைக் கவர் பண்ணால் நல்லா இருக்கும்.//

சொல்லிடுவோம் வண்டுவிடம். இன்னும் ரெண்டு தினம் இருக்கே:)!