Thursday, August 21, 2008

கிருஷ்ணலீலா

சின்னக் கால்களின் தடம்பதித்து ஓடிவரும் அழகே அழகு.

கோபி(யர்கள்) கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா.....

கண்ணா...கருமை நிறக் கண்ணா.........

இப்படியெல்லாம் அம்மா என்னைக் கொஞ்சும்போது எனக்கே என்னைப் பிடிக்குமுன்னா பாருங்களேன்:-)))


அம்மாவோடு விளையாட்டும் உண்டு. டிவி பின்னால் ஓடி ஒளிஞ்சால் கண்டுபிடிக்கவே முடியாது. ஆமாம், பூனைக் கண்ணை மூடிக்கிட்டால் பூலோகமே இருண்டுபோயிருமாமே!!!!


ஒருநாள் 'உள்ளூர் பத்திரிக்கையில், இவன்கள் தங்களுக்கான சாப்பாட்டைத் தானே போய் வேலை பார்த்துச் சம்பாரிச்சுக்கணுமுன்னு இருந்துச்சு. நானும் இவனிடம், ' நீ வேலைக்குப்போய் சம்பாரிச்சுக்கிட்டு வாடா'ன்னு சொன்னேன். கண்ணில் உடனே ஒரே சோகம்'ன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டப்ப எனக்கு அழுவாச்சியா வந்துச்சு.



"செய்யணுமுன்னுதான் தோணறது.ஆனா......... என்ன செய்யணுமுன்னு தோணலையே...."



"பரவாயில்லை. அம்மாவுக்கும் ஒரு 'மாடல்' தேவைப்படுதேடா எப்பவும். பேசாம மாடலிங் செய்யேன்"

"நெசமாவா?"

"ஆமாண்டா. ஆண் மாடல்கள் எப்படி மூஞ்சைச் சுள்ன்னு வச்சுக்கிட்டுப் போஸ் கொடுக்கறாங்க. அதேபோல் இங்க பார். பார்க்கலாம்"

சரியா இருக்கான்னு பாரும்மா.

ஏக தந்தாய நமஹ....... நாலுலே மூணு போச்சுன்னா அதுக்காக இப்படியா?

Drop dead Fred:-))))

குளிர் ஆளைக் கொல்லுதே.......





வெயிலு காஞ்சா எவ்வளோ நல்லா இருக்கு!!!!


வீட்டுலே இருக்கும் பெஸ்ட் ஸீட் எனக்குத்தான் வேணும். ஆள் உக்கார்ந்துருக்கா? அப்ப மடி என்னத்துக்கு இருக்காம்?


வீட்டுக் காவலுக்குன்னு தனியா ஆள் போட்டுக்கலை. நானே போதும். என்னைத்தாண்டி ஒருத்தர் உள்ளே வந்துறமுடியுமா?

அண்டைஅயல் பிள்ளைகளோடு எப்பவும் ஒரு சண்டை & முறைப்பு. என்னைப் பார்த்தாலே அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவான்கள்:-))) அதுலேயும் இந்த ஆலியும் பூனியும் எப்பப் பார்த்தாலும் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கானுங்க. எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? கொஞ்சம் ஏமாந்தாப் போதும் கதவைத் தள்ளிதிறப்பானாமே......

பூனைபோல் மெள்ள நடந்துவந்து ஒரே பாய்ச்சல்.





அலுப்பா இருக்கு. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வரேன்.


கிருஷ்ணஜெயந்தி விழா வருதாமே..... கொண்டாடுங்க. பாவம். அவனும் என்னைப்போலத்தான் கருப்பா இருக்கான். போதாததுக்கு என் பெயரைவேற வச்சுக்கிட்டு இருக்கான்!!!

வைணவத்தில் என்னையும் சேர்த்து நல்லாத்தான் சொல்றாங்கன்னு 'கே ஆர் எஸ்'ன்னு ஒருத்தர் பிரசங்கம் பண்ணி இருக்காராம். ஆனால் இந்த இந்திரன்.......என் பெயரைக் கெடுத்துட்டானே........


அனைவருக்கும் கண்ணன் பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.


இப்படிக்கு என்றும் அன்புடன்,

கோகி என்னும் கோபால கிருஷ்ணன்.

பிகு: இப்பெல்லாம் அம்மா என்னை Bolt, கிருஷ்ணா போல்ட்ன்னு கூப்புடறாங்க. எதுக்குன்னு எனக்குப் புரியலை. நான் ஒரே ஓட்டமா ஓடிட்டேன்:-)

26 comments:

said...

ரொம்ப க்யூட், முக்கியமா அந்த போர்வை போர்த்திய படம், அப்புறம் அந்த 'ட்ராப் டெட் ஃப்ரெட்'.

போல்ட்?? அப்படினா?

said...

கயல்விழி “போல்ட்” என்றால் என்னவா?ஒலிம்பிக்ஸில் Bolt from Blue வாக ஜமைக்கன் கலக்குகிறார் பாருங்க.
கோகி நன்றாகவே போஸ் கொடுக்கிறார்.

said...

வாஅங்க கயல்விழி.

அக்கம்பக்கம் பார்க்கறதே இல்லையா?

said...

வாங்க குமார்.

சமயத்துலே வந்து என்னைக் காப்பாத்துனதுக்கு நன்றி:-))))

புது ப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லா இருக்கு.

said...

இதையும் அதையும் கனெக்ட் பண்ணிப்பார்க்கல. நன்றி வடுவூர் குமார். :)

said...

நீங்க போல்ட் அப்படின்னு கூப்பிடப் போக அவர் உங்களை ஒரு nut அப்படின்னு சொல்லிடப் போறாரு. பார்த்து!!

said...

:)

ஜிகே கலக்கலாக இருக்கான். புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்குமோ.

கிட்டதட்ட மாறுவேட போட்டி போலவே எல்லா போஸ்களும் இருக்கு.

இரண்டாவது படத்தில் ஆந்தையார் போல இருக்கான்.

Anonymous said...

ஜீனியர் கோ.கி. உங்க கிட்ட டூ விட்ருக்கார். அவரை நீங்க கண்டுக்கறதே இல்லியாம்.

said...

"கோகி"க்கு இத்தனை டிமாண்டா எனக் கேட்டு சுட்டியெல்லாம் கொடுத்த நீங்க "சூப்பர் சுட்டி கோகி"யின் படங்களோடு பதிவே போட்டு அசத்திட்டீங்க மேடம்!

said...

வாங்க கொத்ஸ்.

'இந்தக் குதர்க்கமெல்லாம் கொத்ஸ்க்குத்தான் வரும்'னு சொல்றான்ப்பா;-))))

said...

வாங்க கோவியாரே.

மாறுவேடம்தான். 'பூனை வேடம்' போட்டுருக்கான்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஜூனியர் ரொம்பக் குறும்புப்பா. 'ஒரு இடத்துலே நிக்காது'ன்னு உங்களுக்குத் தெரியாதா?:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இவனோட படங்கள் ஏராளமா (ஒரு 2000 தேறும்) இருக்கு. பாவம் எங்க முந்தின கப்பு. அப்ப டிஜிடல் நம்மிடம் வராத காலக் கட்டம். கடைசி மூணு வருசத்தில் எடுத்ததுதான்.

said...

கோகி படங்கள் நல்லா இருக்கு... :)
கோகி கக்கா போனதை சொல்லாததால் நீங்க பழைய பதிவர் என்பது நிரூபணமாகின்றது... ;))))

said...

ரொம்ப நாளைக்கப்பறம் கிருஷ்ணனின் பேச்சை போட இடம் கொடுத்திருக்கீங்க.. :) படமெல்லாம் அழகு..குளிருக்கு போத்தினதா அது .. என்னமோ சேலைகட்டி தலைப்பை சுத்தின பொண்ணாட்டாம் இருக்கே..

said...

நல்லாருக்கு. கேமராமேன் நீங்க தானா?

said...

வாங்க தமிழ் பிரியன்.

கக்கா போனது படம் இருக்கு. ஆனாலும் அவனோட ப்ரைவஸி பாதிக்கப்படுமேன்னு வலையேத்தலை:-)

இப்பச் சொல்லுங்க, நான் புதுசா பழசா?

said...

வாங்க கயலு.

அது என்னோட சால்வை. அழகா இருக்குல்லே?

குளிரைச் சாக்குவச்சு, விதவிதமா ஷால் வாங்கிவச்சுருக்கேன்:-)

said...

வாங்க ஆடுமாடு.

நாந்தாங்க கேமெரா உமன்:-))))

said...

எங்கிருந்தோ வந்தான், இடைசாதி
நான் என்றான் இங்கிவனை நான்
பெறவே என்னதவம் செய்து விட்டேன்
(சீர்காழி கோவி பாடல்)

உங்க வீட்டு கோபால கிருஷ்ணன், பளபள கறுப்பா, களையா இருக்கான் டீச்சர், திருஷ்டி சுத்தி போடுங்க..

என்னையும் ஒரு இடையன் தான் இப்போ ஆட்டிவெச்சுகிட்டிருக்கிறான்
'அல்கெமிஸ்ட்' ரூபத்துலே. இப்போதான் தட்டுதடுமாறி, தமிழ்மணத்துலே இணைப்பு கொடுக்க கத்துகிட்டிருக்கேன்.

எல்லாம் நீங்க, சுப்பையா வாத்தியார் போன்ற டீச்சர்ஸ் குடுக்கிற ஊக்கத்தால தான். :-)))

said...

ஜிகே போல்டா:)
தேஐதான். முதல்ல அம்மா நீ போல்டா,அப்பா போல்டான்னு கேளுடா கிருஷ்ணா.
இப்படி ப்பொஸ் கொடுத்ததுக்கு உனக்கு ஒரு சேபிள் கோட் வாங்கிக் கொடுக்கச் சொல்லு:)
சூப்பர் போட்டோஸ் துளசி.

said...

துளசி.ஜிகே ஓடினாலும் நல்லாத்தான் இருக்கும். பூனீயைப் பிடிக்கச் சொன்னா ஓடுவான்.:)

said...

போல்ட் ன்னா கிரிக்கட் ஆடிச்சாக்கும்ன்னு பாத்தேன்....
ஹாப்பி பர்த் டே கோகி!

said...

வாங்க தமாம் பாலா.

உங்க தொடரை இன்னும் சரியாப் படிக்கலை. முதல் இரண்டு மட்டும் படிச்சேன்.

கொஞ்சம் ஆற அமர உள்வாங்கிப் படிக்கணும். இந்த கலாட்டா முடியட்டும்.

கோபால கிருஷ்ணனுக்குப் பரம சந்தோஷம்.

said...

வாங்க வல்லி.

இப்ப இன்னும் குறும்பு கூடியிருக்கு.

எல்லாருக்கும் செல்லப்பிள்ளை.

பூனிதான் பாவம்.

said...

வாங்க திவா.

கோகியின் சார்பா ஒரு நன்றி.