Tuesday, August 05, 2008

Tui Tai & Beachcomber island ................(ஃபிஜிப் பயணம் பகுதி 7)

ஒரு வாரம் தங்கப்போறேமே இதுலே ஒரு நாள் பீச் கோம்பர் தீவுக்குப் போய்வரலாமுன்னு மகள் கிட்டே சொல்லி இருந்தேன். ஆனா, இப்படி நேரமே கிடைக்காமப் போகப்போகுதுன்னு கண்டேனா என்ன? எட்டுமணிக்குக் கிளம்பும் படகுலே போனால் போய்ச்சேரவே பத்தரை ஆகும். மாலையில் 4 மணிக்கு அங்கே கிளம்புனா வந்து சேர ஆறு ஆறரை. எல்லாம் காத்து நமக்குச் சாதகமா வீசினால்...... இது பாய்மரக் கப்பல். அந்தப் பாய்(??)களை ஏத்துவதும் காத்துக்கு வாகாத் திருப்புவதும், இறக்குவதும்கூட பார்க்கறதுக்கு ஒரு விநோதமான அனுபவம்தான். படகுத்துறைக்குக் காரில் போக ஒரு மணி நேரப்பயணம் இருக்கு. இதே லௌடோகா நகரில் இருந்து கிளம்பிக்கிட்டு இருந்தது படகு. இது ஒரு எக்ஸ்கர்ஷன் ட்ரிப்.

இப்ப என்னன்னா ஏர்ப்போர்ட் தாண்டி நா(ன்)டி நகருக்கருகில் புதுசா படகுத்துறை கட்டிவிட்டுருக்காங்களாம். அங்கே இருந்துதான் போக்குவரத்து எல்லாமும்.

பசங்களை ஏமாத்த வேணாமுன்னு அவுங்களுக்கு மட்டும் டிக்கெட் ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டோம். அந்தந்த ரிஸார்ட்களில் இருந்து பிக்கப் செய்து
நா(ன்)டி அருகில் ஒரு ஹோட்டலில் கொண்டு போய் விடுவாங்களாம். அப்புறம் படகுக்காரர்களே அங்கிருந்து எல்லோரையும் கூட்டிப்போய் படகில் ஏத்திக்குவாங்களாம். வரும்போதும் இதேபோல் கொண்டுவந்து அந்த ஹோட்டலில் விட்டுட்டால், பிக்கப் ஏற்பாட்டின்படி ரூமுக்குப் போயிறலாமாம். எல்லாம் பணம் பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க.



படகின் பெயர் தூயி தாய் Tui Tai.

(அன்று)

முந்தியெல்லாம் நாமே படகுத்துறைக்குப் போயிருவோம். படகுக்குக்குக் கட்டணம் கட்டினால் போதும். உள்ளூர் ஆட்களுக்கு 50% கழிவு இருந்தது.
பீச் கோம்பர் ஒரு சின்னத் தீவு. கரைக்கு ரொம்பக்கிட்டே போகாமல் கொஞ்ச தூரத்தில் கப்பலை நிறுத்துவாங்க. ஆழம் அதிகமில்லாத இடமாச்சே...தரை தட்டிருச்சுனா? அங்கே ஒரு ரிஸார்ட் ஹோட்டேல் மட்டும்தான். அங்கிருந்து ஒரு சின்னப் படகு வந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப்போய் தரையில் விடும். பொடி நடையாக அந்தத் தீவை அரைமணி நேரத்தில் ஒரு சுத்து சுத்திவந்துறலாம். ஒரு பக்கம் தங்கும் விருந்தினருக்குக் குடில்கள்.

நாம் கட்டும் கட்டணத்திலேயே பகல் சாப்பாடும் உண்டு. தாகசாந்திக்கு மட்டும் பாரில் வாங்கிக்கணும்.


கொஞ்சமும் அலை அடிக்காதப் பளிங்குத் தண்ணீர். கடல்தரையில் இருக்கும் செடிகளும் மீன்களும் பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்லும். அப்படியேக் குப்புறப்படுத்து மிதந்துக்கிட்டேப் பார்க்கலாம். ஐயோ கண்ணுலே மூக்குலே உப்புத்தண்ணீர் போயிருமே.... போகாது. மூச்சடைச்சுப்போனா? போகவே போகாது. அதுக்குத்தான் ஸ்நோர்க்கேல்Snorkel கருவி இருக்குல்லே!!! ஃப்லிப்பர்ஸ், கண் மாஸ்க், மூச்சுவிடும் காத்துக்குழாய்.

பகல் உணவு முடிஞ்சதும் ஸ்நோர்க்கேல் Snorkeling
செய்ய விருப்பம் இருந்தா அதையெடுத்துப் பொருத்திக்கிட்டு மீன்களைக் கிட்டப் பார்க்கலாம். அப்படியும் முடியாதா?. மாத்து உடுப்பு கொண்டுபோகலையா? ஆனால் தண்ணிக்கடியில் என்னென்ன இருக்குன்னு பார்த்தே ஆகணுமா? கண்ணாடித்தரைப் படகு சவாரி செய்யலாம். சின்னப் படகு. ஒரு பத்துப்பேர்வரை போகலாம். இந்தத் தீவுக் கரையைச் சுத்திப் பவழப்பாறைகள் எக்கச் சக்கமா இருக்கு. அங்கே கொண்டுபோய் படகை நிறுத்துவாங்க. உக்கார்ந்த இடத்தில் இருந்தே அந்தக் கண்ணாடித்தரை வழியா நோகாம, நனையாம எல்லாத்தையும் பார்த்துட்டு வரலாம்.


தனியா இதுக்கெல்லாம் காசு கட்டத் தேவை இல்லை. நம்ம டிக்கெட்டு இதுக்கெல்லாம் சேர்த்துதான். நமக்குப் போர் அடிக்காமப் பார்த்துக்கும் கடமை ஒன்னு அவுங்களுக்கும் இருக்கில்லையா? :-))))

அப்ப நாங்க போய் வந்த மறுநாள்தான் முதல் ராணுவப்புரட்சி வெடித்தது. 1987 மே மாசம். அப்புறம் அதே வருசம் செப்டம்பர் மாசம் இன்னொரு புரட்சி. கிறிஸ்த்துவ நாடா இருக்கணுமுன்னு அறிக்கைவிட்டு, ஞாயித்துகிழமைகளில் சர்ச்சுக்குப் போகும் மக்களைத்தவிர, வேற பொழுதுபோக்குக்காக யாரும் வெளியே வரக்கூடாதுன்னு அபத்தமா ஒரு சட்டம் வந்தது அப்போது.



மகள் போய்வந்துட்டுப் படங்கள் கொடுத்தாள். தீவைத்தவிர மற்ற எல்லாமே மாறிப்போய் இருக்காம். பாய்மரக் கப்பல் இப்ப ரொம்ப ஆடம்பரமான விஷயமாப் போயிருச்சாம். சாதாரண ரெண்டடுக்குள்ள க்ரூயிஸ் படகுலேதான் கொண்டு போனாங்களாம். மீன்வகைகள் கூட புதுவிதமா இருக்காம்.



அன்றும் இன்றும்!





ராணுவப்புரட்சி நடந்தபிறகு, நாட்டின் பொருளாதாரம் ரொம்பவும் கீழ் நோக்கிப் போக ஆரம்பிச்சதும் மற்ற வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அடிச்சது ப்ரைஸ். அவுங்களுக்கு அனுமதி கொடுத்து எல்லாத்தையும் மாடர்னா செஞ்சு வச்சுருக்காங்க. ஆனால் இந்த நாட்டுக்குன்னு இருந்த தனித்துவம் போயிருச்சு.
இந்தியர்களுக்குக் கரும்பு நிலத்தைக் கொடுத்துருந்தா...... இந்த கதிகேடு வந்துருக்குமா? இப்ப இது ஒரு ஈகோ பிரச்சனையா ஆகி இருக்கோ என்னவோ?



இன்னிக்கு மாலையில்தான் கல்யாணம் நடக்கப்போகுது. மாப்பிள்ளைவீட்டுக் கூட்டத்தோடு நாங்கள் சேர்ந்து வரப்போறதில்லை. மகளும் நண்பரும் கல்யாணத்துக்கு வர்றாங்க. முன்னரே செஞ்சுக்கிட்ட ஏற்பாட்டின்படி ஒரு மணிக்கு மகளையும் நண்பரையும் கூட்டிக்கிட்டு நா(ன்)டி போறோம். ஒன்னரைக்குத் தோழி வீட்டில் சாப்பாடு. அங்கே இருந்து மாலையில் உடை மாற்றிக்கிட்டுக் கல்யாண மண்டபத்துக்குப் போகணும்.

காலையில் பத்துமணிக்குக் கிளம்பிட்டோம். சுகர் சிட்டிக்கு வந்து கொஞ்சநேரம் சுத்துனோம். துறைமுகத்தையொட்டி இருக்கும் இடத்தையெல்லாம் பூச்செடிகள் வச்சு அழகுபடுத்தி இருக்காங்க. காங்க்ரீட் நடைபாதை, கட்டைச்சுவர் எல்லாம் கட்டி இருக்கு. அடுத்தபக்கம் ஏதோ பெரிய குளத்தின் கரையில் இருப்பதுபோல இருக்கு. கடல்தான் இப்படி ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா கிடக்கு.
உள்ளூர் ஆள் ஒருத்தர் தூண்டிலில் சின்ன வலைப்பையைக் கட்டி இரால் பிடிச்சுக்கிட்டு இருந்தார்.




கொஞ்ச தூரத்தில் ரெண்டு பெரிய, பயணிகள் வரும் க்ரூயிஸ் கப்பல்கள் நின்னுக்கிட்டு இருந்துச்சு. போட் வரும் தினங்களில் கடைக்காரர்களுக்கு முந்தியெல்லாம் நல்ல வியாபாரம் இருக்கும். ட்யூட்டி ஃப்ரீ போர்ட்தான். இப்ப விலைவாசி எல்லாம் ஏகத்தும் எகிறிப்போனதால் அந்தந்த நாட்டுக்குள்ளேயே வாங்கிக்கறதுதான் மலிவா இருக்கு. குறைஞ்சபட்சம் வாரண்டியாவது இருக்குமே.

விசேஷத்துக்குத் தலைமைதாங்கி நடத்திக்கொடுங்கன்னு பெருந்தலைவர்களைக் கேட்பது போல கர்னல் ரம்பூக்காவை, ராணுவப்புரட்சி நடத்திக் கொடுங்கன்னு அழைப்பு வருதாம். "எனக்கு வேற வேலை இல்லையா? அப்ப நாடு சீர்குலையுற மாதிரி இருந்துச்சேன்னு நான் நடவடிக்கை எடுக்கும்படி ஆச்சு. இப்ப ஓரளவு முன்னேற்றம் ஃபிஜியன்களுக்கு ஏற்பட்டு இருக்கு"ன்னு Coup Leader Col. Rambuka தன்னுடைய 20 வருட நினைவுகளைப் 'பிஜி டைம்ஸ்' என்ற உள்ளூர் தினசரியில் சொல்லி இருக்கார். கொசுவத்தி அவருக்கு மட்டும் இருக்காதா என்ன?

இந்தியர்கள் மெஜாரிட்டியா இருக்கும் மந்திரிசபை, (இத்தனைக்கும் பிரதமர் ஒரு ஃபிஜியந்தான்) அமைஞ்சவுடன் நாடு சீர்குலைய ஆரம்பிச்சதாமா? அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கார். மகேந்திரச் சௌத்தரி பிரதமர் ஆனதும் இப்ப சில வருசங்களுக்கு முன்னே ஜார்ஜ் ஸ்பைட் ஒரு புரட்சி நடத்துனது அநேகமா உங்களில் சிலருக்குத் தெரியும்தானே? அப்ப வீட்டுக் காவலில் வச்சுக் கொடுமை செஞ்சாங்கன்னு சொன்ன சௌத்தரி, இன்னிக்கு இங்கே இருக்கும்,அவருடைய 'எதிரிகள்' அமைத்த தாற்காலிக அரசாங்கத்துலே நிதி அமைச்சரா இருக்கார். 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' ன்னு சொல்லிக்கலாம். இந்தியர்களைக் காப்பாத்த நிதி ஏதும் ஒதுக்கீடு செஞ்சாரான்னு தெரியலை.

போற வழியில் ஹரே கிருஷ்ணாவில் அஞ்சு நிமிசம் புகுந்து புறப்பட்டோம்.

தோழிக்குப் படிச்சுப்படிச்சுச் சொல்லி இருந்தேன், சாதாரணச் சமையலா இருக்கணுமுன்னு. ஒரு பருப்பு சாதம் போதுமே. தினம் கல்யாண வீட்டுச் சாப்பாடு ஹெவியா இருக்கே. கேட்டுருவாங்களே!!!! தோழி வீட்டில் பால்பாயஸத்தோடு விருந்து.

சாப்பாடு ஆனதும் பசங்களை ஊர்சுத்த அனுப்புனோம். டூரிஸ்ட் கப்பல் வந்துருக்குன்னு பல கடைகள் இன்னிக்குத் திறந்து இருக்கும். தோழியின் கடை திறக்கலை. எங்களுக்காக லீவு விட்டாச்சு. எல்லாம் சும்மா வந்து பார்த்துக்கிட்டுப் போறாங்களே தவிர, ஒன்னும் வாங்கறது இல்லையாம். குட்டியேட்டனும், கோபாலும் பேசறமாதிரி நடிச்சுட்டு தூக்கம் போட ஆரம்பிச்சாங்க. நானும் தோழியும் விட்ட இடத்தில் இருந்து பழங்கதை பேசத் தொடங்கினோம்.

பசங்கள் திரும்பிவந்தப்ப எனக்காக ஒரு போட்டோ எடுத்துவந்தாங்க.


டவுனில் கூட்டம் ரொம்ப இல்லையாம். நாலரைக்கு ஒரு சாயா குடிச்சுட்டு கல்யாணத்துக்கு உடை மாற்ற ஆரம்பிச்சோம். எனக்கு ஒரு அஞ்சு நிமிசம். மகளுக்கு ஒரு அம்பது நிமிசம்.

அஞ்சரைக்குத் தோழியிடம் பிரியாவிடை பெற்று, செவ்வாய் ஊருக்குத் திரும்பும்தினம் நேரம் கிடைச்சால் ஒரு எட்டு வந்து போறோமுன்னு சொல்லிட்டுக் கல்யாணமண்டபம் வந்தோம். அந்த நிகழ்ச்சிகள் தனிப்பதிவா வருது.

தொடரும்...............:-)

43 comments:

said...

Me the first???? :) :) :)

மற்ற கருத்துக்களை எல்லாம் கட்டுரை படிச்சபிறகு தான் எழுத முடியும்.

said...

உங்களுக்கு உடை மாற்ற வெறும் ஐந்து நிமிடம் போதுமா? அதிசயமான பெண்மணி நீங்கள் :)

எனக்கு உடை, மேக்கப், ஹேர்ஸ்டைல் என்று 1 மணி நேரமாவது(குறைந்தபட்சம்) தேவைப்படும்.

said...

உங்களுடைய அன்றும் இன்றும் புகைப்படங்கள் அருமையான ஐடியா. நன்றாக ஆர்கனைஸ் பண்ணி இருக்கிறீர்கள். நான் என்னுடைய படங்களை இன்னும் 20 வருடம் கழித்து நிச்சயம் தொலைத்துவிடுவேன் என்பது உறுதியாக தெரியும் :)

said...

அப்புறம் வரேன்..

said...

ஏன் இவ்வளவு ஸ்பீடு?
கொஞ்சம் மெதுவாகவே
நகர்த்தலாமே!

said...

பாய்மரக்கப்பல் தான் அழகு .. அன்றைய படமெல்லாம் நல்லா இருக்கு..
சிவஞானம்ஜிக்கு சின்ன சின்னபாடமா வேணுமாமே..:)

said...

//பசங்கள் திரும்பிவந்தப்ப எனக்காக ஒரு போட்டோ எடுத்துவந்தாங்க.//

குடும்பக் கடையோ? :O)

Anonymous said...

\\இன்னிக்கு மாலையில்தான் கல்யாணம் நடக்கப்போகுது\\ வித்தியாசமா இருக்கு. கல்யாணம் காலைல தான பொதுவா இருக்கும்

said...

//கல்யாணத்துக்கு உடை மாற்ற ஆரம்பிச்சோம். எனக்கு ஒரு அஞ்சு நிமிசம். மகளுக்கு ஒரு அம்பது நிமிசம்.
//

ஹை, நைசா ரீலு விடறீங்களே! உங்க மகள் பிளாக் எழுத ஆரம்பிச்சா உண்மை என்னனு எங்களுக்கு தெரியும். :))

வழக்கம் போல பிஜி வரலாறு கேசரியுடன் சேர்ந்த நெய் போல அழகா போகுது. :)

அந்த கர்னல் தானே நம்மூர்ல வேஷ்ட்டியை மடிச்சு கட்டின மாதிரி ரேமான்ட்ஸ் துணியை துண்டு மாதிரி கட்டி இருப்பாரு?

said...

உங்க கடை போர்டா?

பாத்து டீச்சர், உங்க கடைன்னு இங்க வரவங்க அளவு ஜாக்கெட்டை கூரியர்ல அனுப்ப போறாங்க. :))

said...

இங்குள்ள செந்தோசா தீவை காட்டிலும் கொஞ்சம் சிறியதாக இருக்கும் போல் இருக்கு.

said...

அன்றும் இன்றும் ப்ரமாதம்.வெகு நாகரீகமாகவே...ஃபிஜித் தீவில்..
ஒருவேளை நீங்க அங்க இருந்தப்போ கடையை ரிப்பன் கட் செய்து ஆரம்பித்து வைத்தீங்களோ இருக்கும் இருக்கும்:)
துளசிக்கு அஞ்சு நிமிஷம் எதுக்கு. அப்படியே வந்தாலும் நல்லாத்தான் இருக்கும்.

//உங்களுடைய அன்றும் இன்றும் புகைப்படங்கள் அருமையான ஐடியா. நன்றாக ஆர்கனைஸ் பண்ணி இருக்கிறீர்கள். நான் என்னுடைய படங்களை இன்னும் 20 வருடம் கழித்து நிச்சயம் தொலைத்துவிடுவேன் என்பது உறுதியாக தெரியும் :)//
தொலைத்தவள் நானிருக்கேன்.:)

said...

யீச்சர்ர்ர்ர்,

சாரி, லேட்... அன்றும்...இன்றும்.... ரொம்ப ரசிச்சி பார்த்தேன். வாழ்க்கைதான் எவ்வளவு ஸ்பீடா போகுது இல்ல?

தொல்காப்பியம் சொன்ன "மாற்றம் ஒன்றுதான் நிலையானது"தான் நியாபகம் வருது.... இவ்ளோ சின்ன ஸ்பேன்னுக்குள்ள எவ்ளோ ரகளை, எவ்ளோ சந்தோஷம், எவ்ளோ வருத்தம்.....ம்ம்ம்....ம்ம்... செரி செரி,, திரும்பியும் கொசுவத்தி ஏத்திறப்போரேன்...விடுங்க என்னை. ஆமா....என் வத்திக்கி நீங்க பதிலே சொல்லலையே?....உங்க "நாங்க சினிமாவுக்குப் போறோம்" பதிவுல....:((((

said...

வாங்க க.ஜூ.

சின்ன வயசிலும் சரி இப்பவும் சரி எப்பவும் கண்ணாடிக்கு முன்னே நிக்கமட்டும் பொறுமையே இருப்பதில்லைப்பா.

அதுவும் இப்ப சல்வார் கமீஸ்தான் அதிகமா உடுத்துவதால் 'ஃபடாபட்'ன்னு வேலை முடிஞ்சுரும்.

வயசாக ஆக , 'ஹூ கேர்ஸ்' ன்னு ஆகிப்போச்சு இன்னும்:-)

'அன்றும் இன்றும்' என்றும் இருக்கணுமுன்னு தினம் கொஞ்சம் கொஞ்சமா போட்டோ ஆல்பத்துப் படங்களையெல்லாம் 'ஸ்கேன்' செஞ்சுக்கிட்டு இருக்கேன். எல்லாம் '82 இல் இருந்துதான்.

அதுக்குமுன்னால்.......

கேமெராவா? அப்படீன்னா என்ன?

said...

வாங்க குமார்.

செந்தோசாவுலே இருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எல்லாம் மேன்மேட். இங்கே எல்லாம் இயற்கையின் வழியே மட்டும்:-)

சந்தேகம் இல்லாமல் இது ரொம்பச் சின்னதுதான்:-)

said...

வாங்க சிஜி.

வணக்கம்.நலமா? மெதுவான்னா...இப்பவே 20 வருசமாயிருச்சு.

அடுத்த இருவது வருசம் காத்திருக்கணுமுன்னா ரொம்பக் கஷ்டம்:-))))

said...

வாங்க கயலு.

பாய் மரம் உண்மையிலும் அழகுதாங்க.

நம்ம சிஜி 'மெல்லப்போ, மெல்லப்போ ---- இடையாளே மெல்லப்போ'ன்னு பாடறார்:-))))

இயந்திரப் படகு எப்படிங்க மெதுவாப் போக முடியும்?:-)))))

said...

வாங்க ஷ்ரேயா.

ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு?

நலமா?

எங்கேப்பா குடும்பக்கடை? கோபால்'ஸ்
ஜுவல்லரி ஷாப்ன்னு போர்டுலே இல்லையேப்பா:-)))

said...

உங்களின் அனுபவத்தைச் சொல்லும் விதம் அழகு. நகைச்சுவையோடு எழுதுவதினால் அடுத்த பகுதி எப்பொழுது வரும் என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்த்துகள்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

மாலைக் கல்யாணம் வடநாட்டுலேதாம்ப்பா. அதுவும் நல்லாதான் இருக்கு. காலையில் ஏழரை ஒம்போது முஹூர்த்தமுன்னா கல்யாண வீட்டுக்காரங்க மட்டுமில்லாம நாமளும் அடிச்சுப்புடிச்சுப் போகவேண்டியில்ல இருக்கு.

said...

வாங்க அம்பி.

அஞ்சுன்னா நம்பமாட்டீங்களா? சரி...ஆறுன்னு வச்சுக்கலாம்:-)

அந்த உடைக்கு ஸுலு'ன்னு சொல்வாங்க. கோட்சூட் மாதிரி கோட் தைச்சுக்கிட்டு, இடுப்பில் பேண்ட்ஸ்க்குப் பதிலா இந்த ஸுலு. இது இங்கத்து அஃபீஸியல் உடையும்கூட.

மிலிட்டரி, போலீஸ் இவுங்க யூனிஃபார்ம்லேகூட இந்த ஸுலுவின் கீழ்ப்பகுதியில் தோரணம் மாதிரி ஒரு V ஷேப் பட்டி இருக்கும்.

என் கடையைக் கவனிக்கலையா? பார்பர்ஷாப். மொட்டை அடிச்சுருவேன் ஆமா:-)))))

ஜாக்கெட் கூரியர்லே வந்தாலும் பாதகமில்லை. நம்ம 'ரெடிமேட்' தொடர் வேற பாதியில் நிக்குது. ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி.:-)

said...

வாங்க வல்லி.

நானும் தொலைச்சது கொஞ்சநஞ்சமில்லைப்பா. இப்ப ஒரு 34 வருசமாச் சுதாரிச்சுக்கிட்டேன்:-))))

said...

வாங்க விஜய்.
நீிங்க சொன்னது ரொம்பச்சரி.

மிஞ்சிமிஞ்சிப்போனா 100 வருசம்.

said...

அரவிந்தன்,

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.
அடுத்தபகுதி நாளை:-))))

said...

நான் நேத்து இந்த பதிவைப் பார்க்காம விட்டு விட்டேனே... நல்ல வேலை கல்யாணம் இன்னும் நடக்கலை... ;)

said...

ஜார்ஜ் ஸ்பைட் என்ன ஆனாராம்?

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

கோவை விஜய்.

உங்க நல்லெண்ணம் புரியுது. ஆனா எல்லார் பதிவிலும் போய் இப்படிப் பி.க. செய்யாமல், உங்க வீட்டுலே(தளத்துலே)யே ஒரு பதிவாப் போட்டுருக்கலாம்.

நாங்களும் அங்கே வந்து போய்க்கிட்டுத்தானே இருக்கோம்.

இது சம்பந்தமா முந்தி நம்ம தளத்தில் போட்ட பதிவுபற்றி உங்களுக்குப் பின்னூட்டி இருந்தேன். பார்த்தீங்களா?

said...

வாங்க தமிழ் பிரியன்.

நாளைக்குக் கல்யாணம்:-))))
கட்டாயம் வந்துருங்க. உங்களுக்கு லீவுதானே?

ஜார்ஸ் ஸ்பைட் இருக்கார். அடுத்த Coup தலைமை தாங்க ரம்பூக்காவுக்கு அழைப்பு அனுப்பிக்கிட்டு இருக்கார்:-)

said...

இன்னிக்கு கயல்விழிதான் வகுப்புக்கு முதல் ஆளா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

டீச்சர் புகைப்படமெல்லாம் சூப்பர்...சுத்திப் போடணும் போங்க..

துளசி பாபர் ஷொப்னு பார்த்ததும் பகீர்னுது..அப்புறம்தான் கட்டுரையை பார்த்தேன்.. இப்ப மனசு ஓகே :)

said...

வனக்கம்.
எல்லோருடைய மின்அஞ்சல் தெரியாத காரனத்தால் அனவருக்கும் இந்த செய்தி போய்ச் சேரவேண்டும் என்பதற்ககா இப்படி செய்தேன்.பிரபலமான் பதிவர்காளின் பதிவுகளுக்கு வருகை த‌ருபவர்களுக்கும் இச் செய்தி தகவலாய் இருக்குமே எனவும் இந்த முறையை உபயோகித்தேன்.


தங்களின் மேலான அறிவுரைப்படி இன்று மாலை இதை பற்றிய பதிவினை பதிய விழைகிறேன்.


அன்புக்கும் ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் நன்றி.


ப‌ணிவ‌ன்புட‌ன்

கோவை விஜ‌ய்

said...

தொலைச்சா என்ன துளசி. போனாப் போறது.
மனசுல நல்லதைத் தக்கிக்கலாம்.

என்னொட பழையா போட்டோக்கள் அழுது வடியும்.சமைலறையிலிருந்து வரச் சொல்லி போட்டோ எடுப்பாங்க.

அப்படியே போய் நின்னிருக்க வேண்டாமோன்னு இப்பத் தோன்றுகிறது.:)
உங்க பொண்ணு சூப்பர் ஸ்மார்டா உடை போட்டு இருக்கே. செல்லமா இருக்கு.

said...

வாங்க ரிஷான்.

இங்கே நியூஸியில் பார்பர் ஷாப் பயங்கர பிஸினெஸ்ப்பா. பாலிடெக்லே அதுக்குன்னு தனியா கோர்ஸ் இருக்கு. அங்கே படிச்சுட்டுத்தான் 'வேலை'யை ஆரம்பிக்க முடியும்.

இந்த கோர்ஸ்தான் , இருப்பதிலேயே அதிகமாக பணம் கட்டிப் படிக்கவேண்டியது.

சில பேர் இதுலே கில்லாடிகளா ஆயிட்டாங்கன்னா..... அவுங்களைத் தங்கள் சலூனில் வேலைக்கு வச்சுக்கப் பயங்கர போட்டி. அவுங்க தன் சலூனில் இருக்காங்கன்னு சொல்லி விளம்பரமெல்லாம் போடுவாங்க.

பெரிய கம்பெனி சி இ ஓ. க்கு இருக்கும் அதே மதிப்பு.

said...

வாங்க வல்லி.

முக்கியமான விசயத்தை விட்டுட்டேனேப்பா!!!

நாங்க போட்டுருக்கும் உடைகள் எல்லாம் நானே தைச்சது.

ஆயிரம் துணியைக் கெடுத்து அரை டெய்லர் ஆனது எழுத ஆரம்பிச்சுப் பாதியில் நிக்குதுப்பா.

said...

கோவை விஜய்,

இரவு எட்டுமணிக்கு முன்னே பதிவைப் போட்டுருங்க.

வாழ்த்து(க்)கள்.

said...

இரவு எட்டுமணிக்கு முன்னே பதிவைப் போட்டுருங்க.
>
> வாழ்த்து(க்)கள்.
>
வாழ்த்துக்கு நன்றி.

பதிவு ரெடி.
புகைபடங்களும் ரெடி
காலை 8 மணிக்குள் தமிழ் மணத்தில்

கல்லூரி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மின் அஞ்சல்/ குறுஞ் செய்தி மூலம் தகவல் அனுப்ப உள்ளேன்.

அனைவரையும் குறந்தது 100 பேருக்காவது மின் அஞ்சல்/sms மறு அஞ்சலாக "forward" செய்ய வேண்டும் எனும் அன்புக் கோரிக்கையுடன்

தங்களது நகரில் நடந்தேறிய "மெழுகு வர்த்தி தீபம் ஏற்றல்"

//இது நம்ம ஸ்டைல் Earth Hour 2008

இந்த வருசத்துலே இருந்து நாங்களும் கலந்துக்கறதா முடிவு செஞ்சது போன வருசத்திலே இருந்து. இந்த 'விழா'வை ஆரம்பிச்சது ஆஸ்தராலியாவின் சிட்னி நகரம்.2007 மார்ச் 31 தேதி மாலை ஏழரை முதல் எட்டரைவரைன்னு நடந்துருக்கு. இந்த ஒரு மணி நேரத்திலேயே நகரின் மின்சாரத்தில் 2.1% சேமிக்கப்பட்டதாம்.//


மீண்டும் தமிழகமெங்கும்


பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பாற்றும் புனித வேள்வியில்

தமிழ்கூறும் நல்லூலகம்

அன்புடன்
கோவை விஜய்

said...

கோபால்'ஸ் ஜுவல்லரி ஷாப்ன்னு போர்டுலே இல்லேதான்... ஆனா தேவியர் ரெண்டு பேரும் இருக்கீங்களே :O)

பதிவெல்லாம் படிச்சிருவேன்..ரீடர்லே. பின்னூட்டுறதுதான் குறைஞ்ஞ்ஞ்சு போச்சு.

said...

ஷ்ரேயா,

குடும்பக் க(டை)தை இல்லாமப் போயிருச்சேன்னுதான்..............

பின்னூட்டத்தையெல்லாம் நேரில் வந்து சொல்லக்கூடாதா?

டிசம்பர் வந்துக்கிட்டு இருக்கு. வார்த்தை தவற விடாதே கண்ணம்மா.....

said...

உங்களுடனேயே வந்த மாதிரி ஒரு ஃபீலிங். படங்களும் அருமை. அதுவும் இந்த "அன்றும் இன்றும்" குறிப்பாக. என்னிடம் என் உறவினர் பலரது அன்றைய படங்கள் பாதுகாப்பாய். தக்க சமயத்தில் இந்த அன்றும் இன்றும் கான்செப்டில் மெயில் அனுப்பி மகிழ்விப்பேன். சமீபத்தில் என் பெரியத்தையின் சதாபிஷேக ரிஸப்ஷன் போட்டோவில் தம்பதியரின் போஸ் போலவே அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் கொண்டிருந்த படத்தை அருகருகே வருமாறு இணைத்து லாமினேட் செய்து கொரியர் செய்தேன். அக மகிழ்ந்து போனார்கள்.

எங்கே யானைப் பொம்மைகளைப் பார்த்தாலும் காமிரா விடுவதில்லை போலிருக்கே:))!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எங்க 30வது மணநாளுக்கு மகளும் இப்படி பழைய ஃபோட்டோ ஒன்னு எடுத்து பீங்கான் தட்டில் ப்ரிண்ட் செய்து கொடுத்தாள். ப்ளாக் & ஒயிட் படம்தான்.

ஆனால் ஒல்லியா துளசியும் கோபாலும்:-)

யானை ஓடிப்போய் ஒளிஞ்சுக்கலேன்னா அதுக்கு நான் என்னப்பா செய்வது? :-))))

said...

ரீச்சர்,

நீங்க மொட்டை அடிப்பது கோபாலை மட்டும்தான்னு நினைச்சேன். இப்படி கடையே போட்டு இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலையே!! :)

said...

வாங்க கொத்ஸ்.

மொட்டை அடிச்சுக்கிட்ட ஆட்களுக்கு 'மஞ்சத்துணி'யில் உடை தைக்க மகள் கடை போட்டுருக்கறதைக் கவனிக்கலையா? :-))))