Wednesday, October 01, 2008

கண்ணாமூச்சி ஏனடா........

முந்தாநாளோட ஒரே வீட்டில் அஞ்சுமாசமா இருக்கோம். இதுவரை ஒன்னு நின்னு ஒரு வார்த்தை பேசி இருக்கீங்களா? அன்னிக்குத் தோழி உங்களைக் கூட்டிட்டுவந்தப்போ....... எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. பார்த்தவுடன் ஏற்பட்டப் பதற்றத்திலே அப்படியே உங்களை, உங்களுக்கான இடத்தில் விட்டுட்டேன். ஒரு படம் எடுத்துக்கணுமுன்னு கூடச் 'சட்'னு தோணலை. பகல் சாப்பாட்டுக்குக் கோபால் வீட்டுக்கு வந்தப்ப....... 'உங்களுக்குச் சாப்பாடு வாங்கணும்.' சூப்பர்மார்கெட் போயிட்டுவந்துரலாமுன்னு பிடுங்கி எடுத்தேன்.

அதுக்குப் பிறகும்கூட ஒரு நாளும் என் கண்ணுலே படவே இல்லை. நீங்க அங்கேதான் இருக்கணும், வேற எங்கே போயிருக்கமுடியும் என்ற எண்ணத்தில் தினமும் அரைத் தேக்கரண்டி சாப்பாடு போட்டு வைப்பேன்.

குளிர் ஆரம்பிச்சவுடன், ராத்திரி நேரத்துலே எத்தனை டிகிரி வரப்போகுதுன்னு தொலைக்காட்சியில் வரும் வானிலை அறிக்கையில் கண்ணு நட்டுக்கிட்டு இருப்பேன். ஆறு டிகிரிக்குக் கீழேன்னா....ஓடிப்போய் தெர்மாக்கோல் பலகைத் துண்டுகளை வச்சு மூடுவேன். அது காத்துலே பறக்காமல் இருக்க கனமான ஒரு கல்லு அதுக்குமேல் வைப்பேன். இப்படியெல்லாம் கண்ணும் கருத்துமா இருந்தவளுக்குப் போனாப்போகட்டுமுன்னு ஒரு காட்சி கொடுக்கக்கூடாதா?

என் புலம்பலைக் கேட்டு....... யார்கிட்டேம்மா 'பேசிக்கிட்டு(?)' இருக்கேன்னு கேக்கறார். விஷயத்தை விளக்குனவுடன், 'ஆமாம். நானும் பார்த்ததே இல்லையே! இருக்கானுங்களா இல்லையா? ஒருவேளை இவன் பிடிச்சுத் தின்னுருப்பானோ? பாவமா முகத்தை வச்சுருக்கும் கோகியை .......ச்சீச்சீ இருக்காது....

'கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' சொல்லி இருக்குல்லே?
ஒரு எட்டுநாள் விடுமுறைக்குப் போனப்பவும் பயந்துக்கிட்டே இருந்தேன். குளத்தைப் பாதி மூடிட்டு வந்துருக்கோம். 'சாப்பாடு போடலைன்னாலும் பரவாயில்லை. தண்ணீரில் உள்ள பாசி, அழுக்கு இப்படித் தின்னு உயிர் வாழ்ந்துரும்' தோழி திருவாய் மலர்ந்து அருளியது கொடுத்த தைரியம்தான்.

தோழி வீட்டில் வளர்க்கும் 'அவுட் டோர்' மீன்கள் இருக்கும் (pond)தொட்டித் தண்ணீரை மாத்திக்கிட்டு இருக்கும்போதுதான் ஃபிலிப் தற்செயலாக் கவனிச்சு இருக்கார், அதுகள் குஞ்சு பொரிச்சுருக்குன்னு. அதுக்குள்ளே அவர் வெளியேத்துனதில் எத்தனை குஞ்சுகள் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சோ? ஒருநாள் நான் போனப்ப இதுகளைப் பார்த்தேன். 'உங்களுக்கு இந்த மீனை விக்கப்போறேன்'னு சொல்லிக்கிட்டு இருந்தார்:-))))) இப்படித்தான் ரெண்டுபேர் நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அப்பவும், 'துளசிக்கு விக்கணுமு'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாராம். நம்ம வீட்டிலும் குஞ்சுகள் பொரிச்சதுன்னா காசு கொடுப்பதைப் பத்தி யோசிக்கலாமுன்னு சொல்லி அனுப்புனேன்.

திடீர்னு ஒரு நாள், அந்த 'மீன்களைப் பார்த்தேன்'னு கோபால் சொன்னார். பாய்ஞ்சு வெளியில் ஓடுனேன்.....ஊஹூம்....காணோம். ஆனா இருப்பு உறுதியாயிருக்கு. போடும் சாப்பாட்டை நிறுத்தவேணாம். எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு தினமும் நாலைஞ்சுமுறை ஓட்டைக் கண்ணால் உத்துப் பார்ப்பேன்.

வசந்தம் ஆரம்பிச்ச மறுநாள் கண்ணு நட்டப்ப......லேசா ஒரு ஆரஞ்சு நிறம். ஓடிப்போய்க் கிளிக்கினேன். வெளியூரில் இருந்த கோபாலுக்குப் படத்தையும் அனுப்பினேன். சப்ஜெக்ட்: ஃபிஷ் ( இல்லேன்னா இந்த அழுக்கில் ஆரஞ்சு புரியுமா?)





வெப்பநிலை கொஞ்சம் உயர்ந்துவர ஆரம்பிச்சதும் நல்ல உச்சிவெய்யிலில் ரெண்டுபேரும் ஜோடியா மேலேவந்து கண்ணுக்குத் தெரிய ஆரம்பிச்சாங்க. சூரியக் குளியல்? ஒரு நாள் வலைவீசுனேன். ஆப்டுக்கிச்சு. இன்னொரு ஃபிஷ் டேங்கில் போட்டு நாலுபடங்கள் எடுத்துக்கிட்டு மீண்டும் குளத்திலேயே விட்டுட்டேன். கொஞ்சம் வளர்ச்சி இருக்குன்னு ஒரு தோணல். அதுலே கோபால் வேற,'எதாவது அடையாளம் வைக்கணும்மா. அப்பதான் ரெண்டு மீனுக்கும் வித்தியாசம் தெரியும்'னு சொன்னதும் என் வாய் அடைச்சுப்போச்சு.








நீங்களே சொல்லுங்க. அடையாளம் வைக்கணுமா? :-)))))



மீன்களுக்கு ஞாபகசக்தியும், யோசிக்கும் திறனும் இருக்கா? இப்பெல்லாம் குளத்துக்குப் பக்கத்துலே நான் போனாலே 'ஓடிக்கோ...பிள்ளை பிடிக்கிறவ வர்றா' ன்னு சரேல்னு அடிமட்டத்துக்கு ஒரு தாவல். இப்படிக் கெட்டபெயரைச் சம்பாதிச்சுட்டமேன்னு இருந்தாலும் கண்ணால் கண்ட நிம்மதி.




இப்ப ஒரு வாரமா....... ஆரஞ்சுத் தீற்றலைக்கூடப் பார்க்கமுடியலை. பக்கத்துவீட்டு மிஸ்ட்டர் பூனி( Boony) கைவரிசை காட்டி இருக்குமோன்னு ஒரு சம்சயம்(-:


நற்செய்தி:-)))))

தவமாய்த் தவமிருந்து கண்குத்திப் பாம்பாட்டம்(?) கவனிச்சதில் இன்னிக்கு 'அவுங்க உயிரோடு சுகமா' இருப்பதைப் பார்த்துட்டேன். வலைவீசி ஒரு படமும் எடுத்தாச்சு. இதுதான் இருப்புக்கு ஒரு அத்தாட்சி.

44 comments:

said...

அந்த பூனி நம்ம கோகி மாதிரி நல்ல பையனா தெரியலையே? பூனைகள் தண்ணிக்குள் இறங்குமா? பேசாம குளத்தை சுத்தி கம்பி வலை போட்ருங்க.. :)
(ஆனாலும் பாசி ஓவர் தான்... சம்மரில் கிளீண் செஞ்சுடலாம்)

said...

Boony-யை watch பண்ற வேலையைக் கோகிக்கு கொடுத்திடுவோமா?

said...

வாங்க தமிழ் பிரியன்.

சேற்றில் வளருமாம் செந்தாமரைன்னு ரெண்டு மூட்டை மண் வாங்கிவந்து 'குளத்தில்' போட்டதில் இருந்து இப்படி பாசி பிடிக்க ஆரம்பிச்சுருக்கு. ஆனால் தாமரைப்பூக்கள் அட்டகாசமா வருது. போன சீஸனில் எக்கச்சக்கப் பூக்கள்.

பூனி கொஞ்சம் கெட்டவந்தான்:-) தண்ணீர் குடிக்கவும் நம்ம வீட்டுக்கு வந்துருவான்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கோகியைப் பார்த்தாலே 'துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு' ஓடிருவான் பூனி.

நம்ம ஆளு சூரன்:-))))

said...

அப்ப மீன் என்னதான் ஆச்சு அது வேற கவலையா இருக்கே...ஓ கோகி அத்தனை பெரிய ஆளா ? :)

said...

நவராத்திரி சுண்டல் போட்டு பாருங்க, மீன் வந்தாலும் வரும். :))

said...

வாங்க கயலு.

எனக்கும் கவலையா இருக்குப்பா. கண்லே படமாட்டேங்குது(-:

said...

வாங்க அம்பி.

ஒரேடியாப் போய்ச்சேர வழி காமிக்கிறீங்க!!!!

said...

தொலைக்காட்சியில் வரும் வானிலை அறிக்கையில் கண்ணு நட்டுக்கிட்டு இருப்பேன். ஆறு டிகிரிக்குக் கீழேன்னா....ஓடிப்போய் தெர்மாக்கோல் பலகைத் துண்டுகளை வச்சு மூடுவேன்.

இப்படியெல்லாம் பண்ணனுமா ?
சரி ! இந்த மீன்கள் எல்லாம் நமக்கு எப்படி தூண்டில்
போடுது பாருங்க ?

said...

அதெப்படி பூனி வரப்போச்சு. ரொம்ப அவுட்சைட் அவுட்டோர் குளமா.
என்ன்னப்பா கஷ்டமா இரூக்கே.
என்ன அழகான ஆரஞ்சு கலர்.
கோகி கொலு வச்சுகிட்டு இருக்கும்போதுவந்திருப்பானோ பூனீ.

said...

பக்கத்து வீட்டுக்கு காரர்கிட்ட சொல்லி சைவ பூனை வாங்கி வளக்க சொல்லுங்க, அப்படியே நான் வந்தாலும் வாசலோட வெரட்டிருங்க டீச்சர்

said...

//அதுலே கோபால் வேற,'எதாவது அடையாளம் வைக்கணும்மா. அப்பதான் ரெண்டு மீனுக்கும் வித்தியாசம் தெரியும்'னு சொன்னதும் என் வாய் அடைச்சுப்போச்சு.
//

மீனுக்கு அடையாளம் வெக்கிறதா? அது எப்பிடின்னு கோபால் சார்ட்ட கேட்டு ஒரு தனி பதிவா போட்டீங்கன்னா....பூனைங்களுக்கெல்லாம் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் :0)

Anonymous said...

மீனை மொதல்ல தேடுங்க..

said...

படத்துல இருக்கிறவரை(boony ?) பாத்தா ஒரு சந்தேகமாத்தான் இருக்கு...

said...

எதுக்கும் இரண்டு பேரும் இருக்காங்களான்னு பாருங்க...

said...

மீனைத்தேடிப்பாருங்க டீச்சர்...:(

said...

ambi said...
\\
நவராத்திரி சுண்டல் போட்டு பாருங்க, மீன் வந்தாலும் வரும். :))
\\
:)
அட நம்ம அம்பி பாத்து ரொம்ப நாளாச்சே ந்னனாருக்கேளா...?

said...

வாங்க ஜீவன்.

ஜீவனோடு நம்வீட்டில் இருப்பவைகளைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கேப்பா.

இப்படித்தான் ஆசை என்னும் தூண்டிலில் அகப்பட்டுக்கிட்டு முழிச்சுக்கிட்டு இருக்கு மனித இனம்!!!

said...

வாங்க வல்லி.

அது நம்ம (பழைய) குளம்தான். தாமரைப் பூக்கும் தடாகம்.

இப்போ தாமரை இலைகளும் வர ஆரம்பிச்சு இருக்கு. ரெண்டு மாசத்தில் பூக்கள் வரணும்.

said...

மிஸ்டர் பூனியிடம் மன்னிப்புக் கேக்கணும். அந்த ரெண்டுபேரும் இருப்பது இன்னிக்கு உறுதியாச்சு.

ஒரு படம் புடிச்சுப் பதிவில் கூடுதலா வலை ஏத்தி இருக்கேன். ஃபோட்டோ எவிடனெஸ்:-)))))

said...

வாங்க குடுகுடுப்பை.
ஜக்கம்மா வந்தவுடன் நல்லகாலமும் வந்துருச்சு போல.

மீன்கள் இருக்கு:-)))))

நீங்க வந்தவுடன் குளத்துக்குப் போகும் கதவை மூடிப் பூட்டு போட்டுருவேன்:-))))

said...

வாங்க அதுசரி.

அடையாளத்துக்குன்னு பச்சை குத்திட்டாப் போதாதா?

மீன் டாட்டூ:-))))

said...

வாங்க தூயா.

தேடினேன் & கண்டடைந்தேன்.

கடைசிப் படம் பாருங்க:-)))))

BTW,
படமுன்னதும் ஞாபகம் வருது.

உங்க முதல் படம் நாயர் ஜெபிப்பது சூப்பர்!!!!

said...

வாங்க தமிழன்.

இணைய இணைப்புச் சரியாச்சா?

உங்களை நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் செஞ்சுட்டோம்.

மீன்கள் இருக்கு. அதுவும் உயிரோட!!!!!

பூனிக்கு இன்னிக்கு ஒரு ப்ளேட் ஸ்பெஷல் சாப்பாடு கூடுதலாத் தரணும்.

எல்லாம் மன்னிப்பு வேண்டிதான்:-))))

said...

அப்பாடா....... :)

said...

ஒரே மீன் வாசம். நான் அடுத்த க்ளாஸுக்கு வரேன்!!

said...

தமிழ் பிரியன்,

மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிட்டா ரெட்டிப்பா ஆகிருது:-)

எனக்கும் இப்பத்தான் நிம்மதியா இருக்கு:-)

said...

கொத்ஸ்,

டோண்ட் பி ஸோ மீன்:-)

said...

துளசிகோபால் மேடம்,

//மீன்களுக்கு ஞாபகசக்தியும், யோசிக்கும் திறனும் இருக்கா? இப்பெல்லாம் குளத்துக்குப் பக்கத்துலே நான் போனாலே 'ஓடிக்கோ...பிள்ளை பிடிக்கிறவ வர்றா' ன்னு சரேல்னு அடிமட்டத்துக்கு ஒரு தாவல். //

ஏதோ ஒரு திறன் இருக்குன்னு நம்பறேன். காரைக்காலில் எங்கள் அலுவலக வளாகத்தில் இருக்கும் பெரிய தொட்டி ஒன்றில் நிறைய மீன்கள் உண்டு. தினமும் மதியம், தான் சாப்பிட்ட மீதியைக் கொண்டு போடுவார் ஒரு நண்பர். (மீன்கள் சப்பாத்தி சாப்பிடும் தெரியுமா?). நாங்கள் அவர் அந்தத் தொட்டிக்கு அருகில் வருவதற்கு முன்பே போய் நிற்போம். அவர் அருகில் வரவேண்டியது தான் தாமதம், சடசடவென்று நீரின் மேற்பரப்பில் நூற்றுக் கணக்கில் தலைகள் எழும் பார்க்கணுமே! அவர் வந்தால் மட்டுமே எழுந்து மேலே வரும் அந்த மீன்கள். எப்படி?

படங்கள் அழகா அந்த மீன்கள் அழகா என்று பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும்.

said...

நல்லாயிருக்கு உங்க மீன் கதை.. மீனுக்கும் காவல், பூனைக்கும் தோழன்னு பழமொழிய மாத்திட்டலாமா டீச்சர்? :)

said...

அம்மா, வயத்தில பாலைஇ வார்த்தீங்களே.
நல்லா இருங்க.
பூனி மன்னிச்சுக்கோப்பா.:)

said...

யப்பா...டீச்சர் சான்சே இல்ல திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு ;)

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

எல்லா உயிர்களுக்கும் இருக்கும் கொஞ்சூண்டு மூளைப்பகுதியிலும் என்னென்ன திறமைகள் ஒளிஞ்சிருக்குன்னு பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.
நம்ம பக்கத்துவீட்டு பூனி, ஆளு கொள்ளாம். பெஞ்சில் ஏறிக் கதவில் சாய்ஞ்சு அந்தக் கண்ணாடி மூலமா வீட்டுக்குள்ளே நான் தெரியறேனான்னு பார்க்கும்.
நம்வீட்டுக்கு யாராவது வந்தால், அவுங்க நம்ம கேட் திறக்கும் சப்தம் கேட்டுக் கூடவே வந்து நிக்கும். எல்லாம் என் கண்பார்வை படட்டுமேன்னுதான்.

பார்த்தவுடன் சாப்பாடு வருமே:-)

said...

வாங்க மதுரையம்பதி.

அட! இந்தப் புதுப்பழமொழி அட்டகாசமா இருக்கே:-)

said...

வல்லி,

பூனிக்கு விருந்துதான் இன்னிக்கு:-)

said...

வாங்க கோபி.

புதுப்படங்களுக்குக் கதை வேணுமுன்னா நம்மகிட்டே ஏகப்பட்டது கைவசம் இருக்குன்னு விளம்பரம் கொடுத்துறலாமா? :-)

said...

துள்சி! பேசாம பெண் மீனு, அதான் மீனம்மாவுக்கு கழுத்தில் ஒரு 'போ' கட்டிவிட்டுருங்க. எப்படி நம்ம ஐடியா?
சேரியா?

said...

வாங்க நானானி.

இது 'நல்ல' ஐடியா.

நீங்க என்ன பண்றீங்க..... பேசாம இங்கெ வந்து எது மீனம்மான்னு காமிச்சுக் கொடுப்பீங்களாம். நான் 'போ'கட்டி விட்டுருவேனாம்.

சேரியா?

கோபாலுக்குத் துணையா வந்துட்டீங்க.
ஏங்க அந்த மீன்களைப் பார்க்கலையா?

அச்சுஅசலா ஒரேமாதிரியா இருக்கு ட்வின்ஸ் மாதிரி?

என் வழக்கப்படி பெயர் வச்சுட்டேன். ஒன்றின் பெயர் தமிழ்மணம். ஏன்?

அதான் பட்டை போட்டுருக்கு:-)

said...

பெரியம்மா நான் சின்ன வயசில பொலித்தீன் பாக்ல மீன் பிடிச்சு கொண்டு வந்து போத்தல்ல வச்சு வளத்ததெல்லாம் ஞாபகப் படுத்திட்டீங்கள்.ஒரு பதிவு எழுதணும் போல இருக்கு அதுகள பத்தி.

said...

வாம்மா என் சிநேகிதி.

நினைவுக்கு வந்ததை எழுதறது.....
நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லே?

said...

அம்மா,
ரொம்ப சிரமப்பட்டு படம் பிடிச்சுருக்கீங்க, அதை எழுதுன விதம் மிக அருமை.

வளர்ப்பு மீன்கள்ல ஆஸ்கர்னு ஒரு வகை இருக்கு, இதை நீரில் இருக்கும் நாய் என்று சொல்வார்கள். ஆட்களை மிக அருமையாக அடையாளம் கண்டு கொள்ளும். அதற்கு உணவு கொடுக்க போனா அப்படி ஒரு குதி குதிக்கும். என்கிட்ட 3 ஆஸ்கர் இருந்தது. ஒரு நாள் தொட்டிக்கு தண்ணி மாத்துனப்ப தண்ணில குளோரின் அளவு அதிகமா இருந்துருக்கும் போல 2 மீன் இறந்துடுச்சு. இப்ப ஒரே ஒரு மீன் தான் இருக்கு. விரைவில் என் மீனோட புகைப்படம் அனுப்புறேன்.

said...

வாங்க ஜோசப் பால்ராஜ்.

காத்துருக்கோம் 'ஆஸ்காரை'க் காண!!!

said...

துளசியக்கா,

உங்க மீன்களுக்கு அடையாளம் வெச்சிட்டேன். இனிமே காணாமப்போனா, ஈஸியா கண்டுபிடிக்கலாம்ன்னு அண்ணா கிட்ட சொல்லிடுங்க :-)))))))

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.html

said...

அக்கா நான் இந்த பதிவுக்கு அப்புறம் ரஜ்ஜூ வாச் செய்யுமே அந்த பதிவ பார்த்து தான் அவுட்டோர் POND செய்ய சொன்னேன் அதுக்கு முன்ன குழி தோண்டி பிளாஸ்டிக் ஷீட் போட்டு மீனாக்களை விட்டிருந்தோம் ..2009 இல் 2012 இல் Pre formed pond வாங்கி போட்டோம் ..உங்க குளத்தில் சோலார் fountain வச்சிருந்தீங்க அத பார்த்து வாங்கியும் வந்தோம் ஆனா போட முடில வலை ப்ளாக் பண்றது . நாங்க வின்டருக்கு பயந்து உள்ளே ட்ரான்ஸ்பர் செஞ்சோம் முதல் 2 வருஷம் ..ஒரு ப்ரிட் அங்கிள் சொன்னார் வெளியில் இருந்தா ஒன்னுமாகாது ஒரு டென்னிஸ் பந்து /wood block போட்டா சர்வைவ் பண்ணும் ..நான் பேர் வச்சிருக்கேன் happy ,மெலனி ,ஜான், டலூலா , வின்னி விக்கி :)
.ம்ம் ஜிஞ்சர் பூனைகள் பான்ட் பக்கம் அசையாம காத்திருக்கும்னு சொல்வாங்க .
அடிக்கடி மாதம் ஒருமுறை pond கிளீன் பண்ணனும் எனக்கு ..