Wednesday, November 19, 2008

அக்கா ( பாகம் 1)

முன் உரை இல்லேன்னா முன் எச்சரிக்கை இப்படி அவுங்கவுங்களுக்கு எது தோதுப்படுதோ அது.
ஒரு அம்பது வருசங்களுக்கு முன்பு இருந்த காலக்கட்டத்தில் நடந்தவைகளை, வாழ்க்கை முறைகளை எங்காவது எழுதிவச்சுக்கலாமுன்னு(ஆமாம்.ரொம்ப முக்கியம்?) நினைச்சப்ப (மனக்)கண்ணில் வந்தவங்க 'இந்த' அக்கா. ஒரிரு பகுதிகளில் முடிக்கமுடியாத, பலசம்பவங்கள் இதில் பின்னிப்பிணைஞ்சு இருப்பதால் நெடுங்கதை, குறுநாவல், மினித்தொடர் இப்படி எதாவது ஒன்னில் அடைக்கமுடியுதான்னு பார்க்கிறேன்.
தலைப்பு : 'அக்கா அழுதாள்' னு வைக்கலாமான்னு ஒரு யோசனை.(அம்மா வந்தாள், காப்பியான்னு நினைச்சுக்கிட்டா? அதுவுமில்லாம அக்கா எப்பவுமா அழுதுக்கிட்டே இருந்தாள்? சரி. விடுங்க. 'அக்கா' அக்காவாவே இருந்தா என்ன குறைஞ்சுறப்போகுது?



அக்கா ( பாகம் 1)

கலியாணம் முடிச்ச ஒரு மணி நேரத்திலே அக்கா கண்ணுலே மளமளன்னு கண்ணீர்.

கழுத்துலே தாலிவாங்குனக் கொஞ்ச நேரத்துலே பொண்ணு இப்படிக் கண்ணீர்விட்டதைப் பார்த்தால்...............

மாப்பிள்ளை பொண்ணு ஊர்வலத்தில் குனிஞ்ச தலை (அவ்வளவா) நிமிராம நடந்துவந்த அக்கா, மாப்பிள்ளை வீட்டைத் தலைநிமிர்ந்து பார்த்துச்சு. கண்ணுலே குத்தாலம்........

மேலே சொன்ன மூணும் குறிப்பது ஒரே விஷயம்தான். அக்கா அழுதாள் என்றதைத்தான்.......

தாய்வீட்டை விட்டுப்பிரியும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்? அம்மாவுக்கும் லேசா அழுகைவந்தாலும் வயசுப்பொண்ணை எவ்வளோ நாள்தான் வீட்டுலே வச்சுருக்க முடியும்?

அக்கா அழுவறதைப் பார்த்தால் எனக்கும் அழுகாச்சி வருது. 'எல்லாம் இந்த ஆளால் வந்த வினை'ன்னு கோவமா அந்த மாமாவைப் பார்த்தேன்.

மாமா முகத்தில் ஒரு எக்காளம். அதுவும் என்னைப் பார்த்து...... அன்னிக்கே நினைச்சாராம். என்னிக்கு?

அதான் அக்காவைப் பொண்ணு பார்க்க வந்திருந்தாரே....அப்ப.

எனக்கென்ன தெரியும் அக்காவைப் பார்க்க வந்துருக்காங்கன்னு? பள்ளிக்கூடம் விட்டுப் 'பொந்து'வழியா ஓடியாந்தேன் வழக்கம்போல. என்னிக்குத்தான் வாசக்கேட்டு வழியா வர முடியுது? அடிக்குப் பயந்தே வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு பாருங்க..... எப்பவும் 'கொடுப்பதில்' இருக்கும் சுகம் 'வாங்கும்போது' இருக்குமா? :-))))

வாசத்திண்ணையில் நாலைஞ்சுபேர் உக்காந்துருந்தாங்க. ஆசுபத்திரிக்கு வர்ற ஆளுங்க சிலசமயம் இப்படி இங்கே வந்து உக்காந்துருக்கறதுதான். அதான் நான் ஒரு பார்வையில் அளந்துட்டு உள்ளே ஓடுனேன். பள்ளிக்கூடத்துலே நடந்ததை எல்லாம் ஒன்னுவிடாம ஒப்பிக்கணுமுல்லே?

அக்காவுக்குப் பட்டுப்பொடவை கட்டி அலங்காரம் நடக்குது. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருக்காங்களாம். என்னடா இது புதுக்கதை?

வாசத்திண்ணையில் இருக்கறது அவுங்கதானாம். வெளியே பாய்ஞ்சேன். வெள்ளையும் சள்ளையுமாப் போட்டுக்கிட்டு உக்காந்துருந்த கூட்டத்தில் ஒரு ஆள்தான் பளிச்ன்னு இருந்தார். வேட்டிகளுக்கு நடுவில் ஒரு பேண்ட். என்னைப்பார்த்துச் சிரிச்சார். ஆனா.....

" யாரு மாப்பிள்ளை? பெரியபெரிய பல்லுவச்சுக்கிட்டு இருக்காரே...அவரா?"
எந்தக் காலத்துலே மெல்லப் பேசியிருக்கேன்? எப்பவும் கத்தற கத்தல்தான். எட்டூருக்குக் கேக்கும். இப்பத் திண்ணைவரை கேக்காதா என்ன? சின்னதா மணி அடுக்குனாப்போல இருந்த என் 'அரிசிப் பல்லை' அவரும் கவனிச்சிருப்பாருல்லே?

பொண்ணு பார்த்துட்டு உறவுமொறை அது இதுன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு அம்மா குரலில் லேசான கோவம்.

"வேணாம் இது சரிப்படாது"

" அப்படிச் சொல்லாதீங்க. உங்க பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. கட்டுனா அதைத்தான் கட்டுவேன்"

அம்மா....சடார்னு கையெடுத்துக் கும்புட்டாங்க.

"கெஞ்சிக்கேட்டுக்கறேன்... கொடுக்கறதா எண்ணம் இல்லை. போயிட்டு வாங்க"

'என்னைக்கிருந்தாலும் நாந்தான் உங்க மருமகன்'னு சொன்னதோட அந்தப் பல்ல(ன்)ர் என்னைப்பார்த்துச் சிரிச்சார். வந்தவங்க எல்லாரும் கிளம்பிப் போனாங்க. அண்ணந்தான் பஸ் ஸ்டாண்டுவரை கொண்டுவிடப்போனார்.

ரெண்டு மூணு நாளா அக்கா சோகமா இருக்கறாப்புலே தோணுச்சு. அம்மாவும் 'இந்த இடமே வேணாம், பட்டது போதுமு'ன்னுத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

அதுக்கப்பிறகுதான் கடுதாசிகள் வர ஆரம்பிச்சது. எல்லாம் கார்டுலே எழுதி அனுப்புறதுதான். ரகசியமா பாழா? ஒவ்வொன்னுலேயும் உங்க பொண்ணை எனக்கேக் கட்டித்தரணுமுன்னு வேண்டுகோள் வச்சுக்கிட்டு இருந்தார். அன்னிக்கும் சரி, இப்பவும் சரி எவ்வளோ தைரியமா இவர் பேசுனாருன்னு

பெரியக்கா நம்ம ஆரோக்கியம் அக்காட்ட சொல்லிக்கிட்டு இருக்கும். ஒரு நாள் வந்த லெட்டருலே. 'கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சாலும் உங்க பொண்ணைத்தவிர வேற யாரையும் கட்டமாட்டேன்'னு எழுதி இருந்தாராம். அண்ணன் நாடகமாட்டம் அதை நடிச்சு வேற காமிக்கும்.

எங்க அம்மாவுக்கு ஆலோசகர்ன்னு யாரும் இல்லை. நம்ம சங்கத்தலைவர் ராவுத்தர் தாத்தாதான் பெரியவர் என்ற முறையில் எப்பவாவது யோசனை சொல்வார். அப்புறம் ஊருலே இருந்து எங்க பாட்டி வந்தாங்க. தினம் வீட்டுலே இதே பேச்சுத்தான்.

"நல்ல உத்தியோகத்துலே இருக்கார். சீர்செனத்தின்னு எதையுமே கேக்கலை. பொண்ணைக் கொடுத்தாப் போதுமுன்னு ஒத்தைக் கால்லெ நிக்கறார். ஊர் உலகத்துலே எல்லாருமேவா கெட்டவங்க? நல்லவங்களும் இருக்கமாட்டாங்களா? பார். இப்ப ஒரு வருசமா விடாமக் கடுதாசு போட்டுக்கிட்டுக் காத்துக்கிட்டு இருக்காரு நீ என்ன சொல்லப்போறென்னு"

பேச்சு ஆரம்பிச்சாப்போதும்..... கைவேலையை விட்டுட்டு, இந்த அறையிலே என்னவோ தேடறாப்போல வந்து அக்கா உக்காந்துக்கும். கண்ணுலே லேசான சோகம். இதுவும் ஒரு வகைக் காதல்தானோ என்னவோ? அதான் சினிமா எக்கச்சக்கமாப் பார்க்கறாங்களே. நம்மூட்டுலேயும் சினிமாப் பாட்டுதான் எப்பவும். அம்மா வர்றவரை ரேடியோ சத்தமாப் பாடிக்கிட்டு இருக்கும். (இந்த ரேடியோவை என் கைக்கு எட்டாத உயரத்தில் சுவத்துலே ஸ்டாண்ட் அடிச்சுவச்சுருந்தாங்க. அதுலே ஒரு மேஜிக் ஐன்னு ஒன்னு பச்சைக்கலர்லே போய்ப்போய் வரும். அதைப்பத்தி இன்னொருநாள் சொல்றேன்) சோகப்பாட்டு வரும்போது அக்காவோட மொகம் இன்னும் சோகமா மாறிரும்.

கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையுமாம். அம்மா மனசும் கரைஞ்சுருச்சு. கலியாணப் பத்திரிக்கை அடிச்சு அனுப்புனார் மாப்பிள்ளை. அந்தச் செலவுகூட நானே பார்த்துக்கறேன்னு ஒரு வீம்பு. வழக்கமா இருக்கும் ரோஸ், மஞ்சள்ன்னு இல்லாம புதுவிதமா ஒரு இளநீலமா ஆகாயக்கலர்லே இருந்துச்சு. சீர்திருத்தத் திருமணம். அது என்னன்னு நாங்க எங்கெ கண்டோம்?

மாப்பிள்ளை வீட்டுக் கல்யாணமா இருக்கே அதுதான் பெரிய சீர்திருத்தமுன்னு அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தார். மாமா ( இனிமே பல்லர்ன்னு சொல்லக்கூடாது இல்லே?) தமிழ்ப் பற்று நிறைய இருக்கறவராம். தமிழரசுக்கழகமுன்னு ஒன்னு இருக்காமே. அதுலே சேர்ந்துருக்காராம். அந்தக் கழகத்தலைவர் தலைமை வகிச்சுத் தாலி எடுத்துத்தர, இவர் வாங்கிக் கட்டுவாராம். அய்யர், அக்னி எல்லாம் இல்லையாம்.

கலியாணப் பொண்ணுக்குப் புடவை, வழக்கமான காஞ்சீபுரம் பட்டுப்புடவையா எடுக்காம, பனாரஸ் பட்டுன்னு வெலவெலன்னு ஒன்னை வாங்கியிருந்தார். (அதை பிற்காலத்தில் நாந்தான் கட்டிக் கிழிச்சேன்.அதைபத்தி அப்புறம் சொல்றேன்)

இதையெல்லாம் அம்மா கொஞ்சம்கூட எதிர்பார்க்கலைன்னு அவுங்க முகமே சொல்லுச்சாம். அப்புறம் ஒரு நாள் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தார். மாமாவுக்கு அப்பா இல்லை. குழந்தையா இருந்தப்பவே இறந்துட்டாராம். அவரோட அம்மா இளையதாரமா வாழ்க்கைப்பட்டவங்க. மூத்த தாரத்தோட பொண்ணுதான் மாமா படிக்கக் கொள்ளன்னு எல்லா உதவியும் செஞ்சுருக்காங்க. அவருக்கும் அக்கான்னா உயிர். அவரோட அக்காவைச் சொல்றேன். அட! பரவாயில்லையே, இந்த விசயத்துலே நானும் மாமாவும் ஒன்னு!

எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கணுமுன்னு பட்டப் படிப்பை முடிச்சவுடன் உடற்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிச்சவர். இங்கத்து ஹைஸ்கூலில் பி.டி மாஸ்டரா இருக்கார். வீட்டுக்கு ஒரே ஆம்பளைன்றதாலே எதுவா இருந்தாலும் இவர் சொல்படித்தான் நடக்கும்.
அவுங்க அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க. அந்தம்மா, பக்கத்து ஊர்லே தனியா, சாப்பாட்டுக்கடை நடத்திக்கிட்டு இருந்தாங்க.

மாமா இங்கே வேலை கிடைச்சுவந்த புதுசுலே ஊருக்கு ஒதுக்குப்புறமா, ஆனா பள்ளிக்கூடத்துக்குப் பக்கம் ரொம்ப சல்லிசா இடம் விலைக்கு வருதுன்னு நாலைஞ்சு வாத்தியாருங்க வாங்கிப்போட்டப்ப இவரும் புத்திசாலித்தனமா ஒரு இடம் வாங்கிப்போட்டுருக்கார். எல்லார் மாதிரியும் வீடும் கட்டிக்கிட்டார். அதென்னவோ சொல்லிவச்சாப்புலே அநேகமா எல்லாமே, ஒரு வீட்டைத்தவிர கூரைவீடுகள்தான். அந்த வரிசையிலே, ஏழோ எட்டோ வீடுகள். மொதவீடே இவரோடதுதான். பக்கத்து வீட்டுலே இருந்த கணக்கு வாத்தியார், அவருடைய மாமனார் உதவியோட ஒரு சீமை ஓடு போட்ட கல்வூடு கட்டிக்கிட்டார். கிணறுகூட எடுத்தார். அங்கிருந்துதான் இவரும் நாலைஞ்சு வாளித் தண்ணி எடுத்துக்குவார். மாமா, தனியாளாப் பொங்கித் தின்னுக்கிட்டு வேலைக்குப் போனவர். அதுகூட எப்பவாவதுதானாம். பள்ளிக்கூட நாளிலே , அங்கே எதுத்தாப்லே இருந்த நாயர் கடையில் காலை, பகலுன்னு சாப்பாடு பிரச்சனையில்லாம நடந்துரும். சாயந்திரம் க்ளப்புலே போய் பேட்மிண்டன் வெளையாடிட்டு, வர்ற வழியிலேயே ஓட்டலில் ராச்சாப்பாடு ஆயிரும்.

கல்யாணப் பொண்ணை வாசலில் அழவிட்டுட்டு நான் வேற என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கேன்........

தொடரும்......:-)

57 comments:

said...

'கொடுப்பதில்' இருக்கும் சுகம் 'வாங்கும்போது' இருக்குமா? :-))))

உங்க பசங்கல அடிச்சிருக்கீங்களா?

ரொம்ப உருக்கமா ஆரம்பிக்குது.

said...

இந்த பின்ன சொல்லறேன் பின்ன சொல்லறேன்னு வாய்தா வாங்கும் மேட்டர் எல்லாத்தையும் ஒரு கூகிள் டாக்குமெண்டில் போட்டு வையுங்க. சொல்லச் சொல்ல நாங்க டிக் போட்டுக்கிட்டு வருவோம். எதாவது மிஸ் ஆச்சு, ரீச்சர்ன்னு கூட பார்க்க மாட்டோம். ஆமா!!

அம்மா வேண்டாமுன்னு சொன்னது ஏன் அதைச் சொல்லவே இல்லையே!

said...

நாளைக்கே அடுத்த பார்ட் போட்டுடுங்க.

said...

டீச்சர் இன்னிக்கு நேரகாலத்தோடு வந்துட்டேன்.. :)

முதல் காட்சியே அழுகிற சீனா? அப்ப சூப்பர் தொடர் தான் டீச்சர்.. :) தலைப்புக்கும் கதைக்கும் இப்பவே காப்பிரைட்ஸ் வாங்கிடுங்க டீச்சர்..இல்லேன்னா யாராச்சும் சீரியல் டைரக்டர்ஸ் சுட்டுடுவாங்க..

அப்புறம் இதுல பெரியக்கா பத்தித்தானே சொல்றீங்க? ஏன்னா அண்ணா தான் சின்னக்கா கூடப் பேசமாட்டாங்களே..சரியா ? :)

said...

தொடர் கதையா ரெம்ப நல்லது. இப்போதைக்கு உள்ளேன் போட்டுகிறேன்

said...

டீச்சர் கதை எப்பவும் போல், கனமா ஆரமிக்குது. //அம்மா வேண்டாமுன்னு சொன்னது ஏன் அதைச் சொல்லவே இல்லையே!// ஆமாங்க‌, நீங்க க்ளு கொடுத்து நான் தான் மிஸ் பண்ணிட்டேன்னு நாலு முறை மேல கீழ கதையை நகர்த்தினேன்...

சரி, அப்புறம்?

said...

இது சுப முடிவுள்ள படைப்புத்தான? பலதரம் நீங்க சோக முடிவுள்ள படைப்புகள கொடுக்கறீங்க. எனக்கு மனசு கஷ்டமாகிடுதே.

said...

நாளைக்கு கண்டிப்பா தொடரனும்னு கேட்டுக்கறேன்:):):)

Anonymous said...

//'எல்லாம் இந்த ஆளால் வந்த வினை'ன்னு கோவமா அந்த மாமாவைப் பார்த்தேன்.//

மாமா உக்காரும் சேர்ல பின்னூசி, கோந்து அப்படி எதுவும் நீங்க வைக்கலீயே

said...

வாங்க குடுகுடுப்பை.


இங்கே நியூஸியில் பசங்களை அடிக்கக்கூடாது. புதுசா இப்பச் சட்டம் வேற கொண்டுவந்துட்டாங்க.

முந்தாநாள் கூட பையனைக் கோவத்துலே அடிச்சுருச்சுன்னு அந்த அம்மாவுக்கு 9 மாசம் சிறைதண்டனை.

எனக்கு ஒரே மகள்தான். அவளுக்கு ஒரு 20 வருசத்துக்கு முந்தி ஒரு அடி
கொடுத்தேன். அனாவசிய அழுகையை நிறுத்த வேற வழி தெரியலை(-:

said...

வாங்க கொத்ஸ்.

கிளைக்கதைக்குப் போயிட்டா அப்படியே மெயினுக்கு வரமுடியாமப் போகுதேன்னுதான்......

சொல்லிறலாம், அதுக்கு ஒரு நேரம் வரட்டும்.

புதிர் போடுபவருக்கே யூகிக்கத் தெரியலையா?

said...

வாங்க கபீஷ்.

ஊஹூம்.....நடக்குமுன்னு தோணலை(-:

said...

வாங்க ரிஷான்.

அதே அதே....

நல்ல ஞாபகசக்தி இருக்கு உங்களுக்கு!

பேசாம நாமே சீரியலா எடுத்துறலாமா?

said...

வாங்க நசரேயன்.

நிதானமா வாங்க. எங்கெ போயிறப்போகுது?

said...

வாங்க கெக்கேபிக்குணி.

க்ளு சின்னதா ஒன்னு இருக்கே!

நம்ம நாட்டில் கண்ணகிகளுக்குப் பஞ்சமா என்ன?

said...

வாங்க ராப்.

ஃபிக்ஷனா இருந்தா எல்லாம் சுபமேன்னு முடிச்சுக்கலாம்.
ஆனா..... நான்ஃபிக்ஷனில் நல்லதும் கெட்டதும் கலந்துதானே இருக்கு.

காலத்தில் பின்னோக்கிப் பயணம் அவ்வளவு எளிதல்ல. அங்கங்கே மனசு தவிச்சு நின்னுரும். எழுத மூடும் வராது.

பார்க்கலாம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

கலியாண ஊர்வலத்தில் பின் வைக்க முடியுமா?

அப்புறம் மாமா, நம்ம வீட்டுக்கு வந்தப்ப....

ஈஸிச்சேரில் இருந்து கட்டையை எடுத்துவச்சோம்.

பாவம்.

எனக்குத்தான் ரெண்டு கிடைச்சது அம்மாட்டே இருந்து.

said...

டீச்சர்,

அம்பது வருசமானாலும், நினைவுகளின் ஊடே நன்றாக எழுதுகிறீர்கள்.

//காலத்தில் பின்னோக்கிப் பயணம் அவ்வளவு எளிதல்ல. அங்கங்கே மனசு தவிச்சு நின்னுரும். எழுத மூடும் வராது.
//

very very realistic. உங்கள் எழுத்துக்களிலேயே அதன் ஆழம் தெரிகிறது.

said...

வாங்க சதங்கா.

you are great.

உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.

said...

அக்கா!!! இத படிச்சவுடனே என் அக்கா ஞாபகம் வந்துடுச்சு டீச்சர்.

சீக்கிரமா மிச்ச பதிவையும் போடுங்க டீச்சர்.

said...

ஆல்மோஸ்ட் லவ் மாரியேஜ்னா அக்கா கல்யாணத்தன்னிக்கு ஏன் அழணும்.

அம்மா ஏன் அப்ஜெக்ட் செய்தாங்க.

இதெல்லாம் தெரியாம தூக்கம் வராது.
சின்ன அக்காவைப் பத்தி ஒரு வரி கூட இல்லையே.
கல்யாணத்துக்கு உப்க்களுக்கு என்ன உடுப்பு.
அல்லாம் சொல்லுங்க.:)

said...

//காலத்தில் பின்னோக்கிப் பயணம் அவ்வளவு எளிதல்ல. அங்கங்கே மனசு தவிச்சு நின்னுரும். எழுத மூடும் வராது.//
ரொம்ப சரி துள்சி!
மாமா மேல் உங்களுக்கென்ன அவ்வளவு கோவம்? அக்காவின் காதல் எவ்வளவு மென்மையாயிருக்கு! உங்களுக்கு மட்டும்தான் புரிந்திருக்கு.
ஒரு வேளை பாம்பின் காலோ?

said...

வந்துட்டேன் ரீச்சர்.

பெரியக்காவா?.

அம்மா ஏன் வேண்டாம்னு சொன்னாங்க?

பல மேட்டர் சொல்லவே இல்ல.

said...

வாங்க சிந்து.

அக்கா உங்களையும் பிடிச்சுக்கிட்டாங்க போல!!!!!

சீக்கிரம் போட முயற்சிக்கிறேன்.

said...

வாங்க வல்லி.

சின்ன அக்கா, அண்ணன், அம்மா, நானு,அப்புறம் மெட்ராஸ்லே இருந்து வந்து சேர்ந்துக்கிட்ட பாட்டி அவ்ளொதான் பொண்ணு சைடுலே!!!!!

அம்மாவுக்கு உடன் பிறந்தவங்க 11 பேர்.
எனக்கு 6 மாமா, 5 சித்தி.

ஆனா யாருமே கல்யாணத்துக்கு வரலைப்பா. அப்ப அது எனக்கு ஒன்னும் விகல்பமாத் தெரியலை ஆனா இப்போ ரொம்ப குரூரமா உணர்கிறேன்.

க்ரே & மரூன் பட்டைபட்டையாப் போட்ட ஒரு பட்டுப்பாவாடை. அதுவும் பாட்டி தச்சுக்கிட்டு வந்ததுன்னு நினைவு.

ஒன்னு சொல்லவா..... எங்க அப்பாவும் வரலை(-:

said...

வாங்க நானானி.

உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்.....

கஷ்டம்தான்.


குட்டிப்பாம்புக்கு அப்ப அஞ்சு வயசுலேயே கால் இருந்துருக்குமா? :-))))

said...

வாங்க ஜேகே.

முதல் அத்தியாயத்துலேயே முழுக்கதையையும் சொல்ல முடியுமோ?

said...

மரத்தடி நினைவுகளிலே சொல்லியிருந்தீங்களே அக்கா பற்றியெல்லாம் தனியா எழுதறேன்னு. அப்போதிலிருந்து ஆவலா காத்திருந்தேன்.

வல்லிம்மா, வெயிட் வெயிட், துளசி மேடம் சஸ்பென்ஸோட கொண்டு போறாங்க கதய.

said...

பொளந்து கட்டறீங்க “அக்கா” நினைவுகளை.

பாகம் 2 எப்போ.

எனக்கு கூட எங்கக்கான்ன உயிரு.

அடிக்குப் பயந்தே வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு பாருங்க.....
ஆஹ்ஹா ஹா

பேச்சு ஆரம்பிச்சாப்போதும்..... கைவேலையை விட்டுட்டு, இந்த அறையிலே என்னவோ தேடறாப்போல வந்து அக்கா உக்காந்துக்கும்.
என்னமா வாட்ச் பண்ணியிருக்காங்க்ப்பா.

said...

ஆஹா எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்... ஆரம்பமே கன ஜோரா இருக்கு... தொடருங்க.

said...

நல்லா எழுதி இருக்கீங்க டீச்சர், சாதி மறுப்புக் கலப்புத் திருமணமோ?
அக்கா அழுதது, எல்லா பெண்களும் அழும் அழுகையாகவே எனக்கு படுகின்றது.. அடுத்த எபிசோடில் பார்த்துக்கிறோம்!

said...

அட! நான் ரொம்ப லேட்.......
அனுபவிச்சு எழுதறீங்க..
ஜமாய்ங்க

said...

அக்கா கதையா!!!! சூப்பர்!

ஆணி அதிகம் டீச்சர் இருந்தாலும் நானும் கூடவே வருவேன் ;))

said...

நல்ல அட்டகாசமான அழுத்தமான ஆரம்பம்...

said...

//அம்மாவுக்கு உடன் பிறந்தவங்க 11 பேர்.
எனக்கு 6 மாமா, 5 சித்தி.

ஆனா யாருமே கல்யாணத்துக்கு வரலைப்பா. எங்க அப்பாவும் வரலை(-://

அம்மா மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் ?
அம்மா பாராட்டப்பட வேண்டியவங்க டீச்சர்..தனித்திருந்து போராடி இப்ப எவ்ளோ நல்ல நிலைமையில உங்க எல்லோரையும் வளர்த்திருக்காங்க..

said...

//பேச்சு ஆரம்பிச்சாப்போதும்..... கைவேலையை விட்டுட்டு, இந்த அறையிலே என்னவோ தேடறாப்போல வந்து அக்கா உக்காந்துக்கும்.//

குட்டிப் பொண்ணுக்கு மட்டும் அந்த அறையில என்ன வேலை டீச்சர்? :P

said...

வாங்க ராமலக்ஷ்மி.

மரத்தடின்னதும் நினைவுக்கு வருது. நினைவுகளையும் ஒவ்வொன்னா இங்கே போடணுமில்லை!

அக்கா ஒரு ஆறேழு பாகம் போகுமுன்னு நினைக்கிறேன். பரவாயில்லையா இல்லே போராப் போயிருமான்னு ஒரு எண்ணம் எட்டிப்பாக்குது.

said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.

அம்மா......... நீளமாப் பெயரைத் தட்டவே கை வலிச்சுப்போச்சு:-)))))

அக்காங்களே ஒரு அசாத்திய கேரக்டர்தாங்க ஒவ்வொருத்தருக்கும்.

நம்ம அக்காவையும் அப்பப்ப வந்து பார்த்துட்டுப்போங்கப்பா:-)

said...

வாங்க கிருத்திகா.

நன்றிப்பா. தொடர் முழுசும் தொடர்ந்து வரணுமுன்னு கேட்டுக்கறேன்ப்பா.

said...

வாங்க தமிழ் பிரியன்.

//சாதி மறுப்புக் கலப்புத் திருமணமோ?//

அதெல்லாம் ஒன்னுமில்லீங்க.

அடுத்த பகுதி பார்த்துட்டுச் சொல்லுங்க.
நாளைக்கு போட்டுறலாம்.

said...

வாங்க சிஜி.

வணக்கம். நலமா இருக்கீங்களா?

ரொம்ப நாளா ஆளையே காணோமே.....

பேராசிரியர் கருணை காமிக்கணும்.

said...

வாங்க கோபி.

அக்காவா ஆணியான்னு ஒரு பட்டிமன்றம் வச்சுறலாமா? :-))))

said...

வாங்க பாசமலர்.

உங்க ஆதரவுக்கு நன்றிப்பா.

நல்லா எழுதணுமே என்ற கவலை கூடுது

said...

ரிஷான்,

குட்டிப்பெண்ணுன்ற காரணமே போதும், எல்லா இடத்துலேயும் புகுந்து பெரியவங்க கதையை 'ஆ'ன்னு கேக்க:-)

அம்மா இன்னும் கொஞ்ச நாள் இருந்து நான் இந்த நிலையில் இருப்பதைப் பார்க்காமப் போயிட்டாங்களேன்னு பலசமயம் ஆதங்கமா இருக்கும் எனக்கு.

said...

உங்க தலைப்புகள் எப்போதும் நீளமானதா இருக்கும்.. கவிநயமாவும் இருக்கும். இப்ப ஒற்றை சொல் தலைப்பை பார்த்தவுடன் அட நம்ம மேடமும் சிறுகதை, தொடர்கதை எல்லாம் எழுதறாங்க போலன்னு நினைச்சி உள்ளே வந்தேன். பார்த்தா உங்க சொந்த கதை... 'மரத்தடியில்' விட்டு போனத எழுதறீங்களா மேடம்?

மறுபடியும் பழைய நினைவுகளா? உங்க வீட்டு 'கொசுவர்த்தி' ரொம்ப powerful போலிருக்கே!!

சரி..நீங்க டீச்சர் தெரியும். 'கொத்ஸ்' போன்றோர் உங்கள 'ரீச்சர்' -ன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்? :))) சும்மா தெரிஞ்சுக்கத்தான்.. ;)

said...

டீச்சர், இது உங்களுக்கே நல்லா இருக்கா? இன்னிக்கு மட்டம் போட்டுட்டீங்களே.!
ஓஹோ! சஸ்பென்ஸ் கொடுக்கிறீங்களா?

said...

//அக்கா ஒரு ஆறேழு பாகம் போகுமுன்னு நினைக்கிறேன். பரவாயில்லையா இல்லே போராப் போயிருமான்னு ஒரு எண்ணம் எட்டிப்பாக்குது.//

எத்தனை பாகமானாலும் போகட்டும். சுருக்கிச் சொல்ல நினைக்காதீங்க. பழைய நினைவுகளை நீங்கள் எழுதுகிற விதத்தில் உங்கள் உணர்வுகளோடு நாங்களும் ஒன்றிப் போகிறோம் என்பதே உண்மை.

said...

அப்பறம் சொல்றேன் அப்பற ம் சொல்றேன்னு வேற நிறைய விசயம் வச்சிருக்கீங்க ..அப்பறம் கரெக்டா சொல்லிடனும் ஆமா...

said...

வாங்க ஹேமா.

இது இப்போ புதுசாத்தான் முதல்முறையா எழுதறேன். மரத்தடியில் 'நாங்க சினிமாவுக்குப் போறோம்'னு எழுதுனதுலே வர்ற அக்காதான் இவுங்க. அதை இங்கே நம்ம தளத்திலும் கொஞ்ச நாள் முன்னாலே மரத்தடி நினைவுகள் என்ற லேபிளில் போட்டுருந்தேன்.

என்னை அணுகுவதற்கு ஒரு கஷ்டமும் இல்லாம எளிதில் 'ரீச்' ஆகறேன்னு அவர் ரீச்சர்ன்னு கூப்புடறார் போல:-))))

ச்சும்மா.....

இலங்கைத் தமிழில் 'டி' என்பதற்கு அவுங்க 'ரி' என்று எழுதறதாலே, இவரும் அப்படி எழுத ஆரம்பிச்சு டீச்சர், ரீச்சரா ஆகி இருக்கு.

said...

என்னங்க சிஜி.

நம்ம வகுப்புலே இப்ப மூணுநாள்தானே பாடம். விருப்பப் பாடப்பகுதின்னாலும் தினம்தினம் எப்படி?

said...

ராமலக்ஷ்மி,

அப்பாடா..... நீங்க ஒருத்தர் சொன்னதை நூறு பேர் சொன்னதா நினைச்சு, இனி தாளிச்சுருவேன்:-)))))

நோ ஒர்ரீஸ்!

said...

வாங்க கயலு.

கிளைக்கதையிலே நுழைஞ்சுட்டா ஒருவழிப்பாதையாட்டம் போய்ய்க்கிட்டே இருக்கவேண்டி வந்துரும். அதான் அப்பப்ப அப்புறமாச் சொல்றேன்னு சொல்றது.

'அப்புறம் கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு போட்டுறலாம்:-)))

said...

'அப்புறம் கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு போட்டுறலாம்:-)))

ஆஹாஹா

மீ த வெயிட்டிங் ஃபார் 'அப்புறம் கதைகள்'

said...

அ.அ.

செஞ்சுறலாம்:-)

said...

பல்லர் பெரிய மல்லர்னு மட்டும் தெரியுது. மல்லாடி அக்காவைக் கைப்புடிச்சிட்டாங்களே துளசி.

அக்கா அழுகை எப்போதான் நின்னுச்சி.

எப்போ
எப்போ
எப்போ

இங்க்கேயும் ரொம்ப லேட்டோ நானு.

எப்போதான் சரியான நேரத்துக்கு வந்ததுன்னு கேக்கறது தெரியுது:)
என்ன செய்ய. அந்தக் கதையை தனிப்பதிவா எழுதணும் போலிருக்கே.

said...

வாங்க மது.

அவ்வளவாத் தாமதமில்லை நீங்க.
அக்காவுக்கு இப்போதான் நாலாவது பொறந்துச்சு:-)))))

said...

Started Reading your Akka now from episode 1. Quite interesting. I too wish to start a blog. First comment ezhuthuvom. I dont know what happened to my NHM writer.