Friday, December 05, 2008

அக்கா ( பகுதி 7 )

குழந்தையின் கால், கிழிஞ்சுருந்த ஏணைத் துணிவழியா வெளியே நீட்டிக்கிட்டு இருந்துச்சு. பட்டுப்போலச் சின்னப் பாதங்கள். அதுலே கிச்சுக்கிச்சு மூட்டி விளையாடுதுங்க மத்த பசங்கள். அந்த ஏணைக்கு ஓய்வு ஒழிச்சலே கிடையாது. ஒன்னு புள்ளை தூங்கும், இல்லேன்னா அதையே ஊஞ்சலா நினைச்சுக்கிட்டு நாங்க பசங்க எல்லாம் ஆடி ஆட்டம் போடுவோம். குப்புறப் படுத்துக்கிட்டு காலாலே உந்தியாடறதுதான். சின்னச் சின்ன வெளையாட்டுச் சாமான்களைக் கொஞ்ச தூரத்துலேப் பசங்க வைக்கும்போது, ஆடிக்கிட்டே அதைக் கைநீட்டி எட்டி எடுக்கணும். வத்தலகுண்டு மாரியம்மன் திருவிழா சமயத்துலே தொட்டில்ராட்டினம் ஆடுன அனுபவம் இப்ப கைகொடுக்குது எனக்கு. ' குழந்தைக்கு உடம்பு நோகும். அப்படியெல்லாம் ஆடாதீங்க'ன்னு அக்கா விரட்டிக்கிட்டே இருக்கும். நாங்க யாரும் அக்கம்பக்கம்போய் விளையாடவே மாட்டோம். எங்களுக்குள்ளேயே ஆட்டம் போடறதுதான்.

ஹாலாட்டம் இருக்கும் வீட்டு நடுவில் கூரையில் இருந்து நல்ல தாம்புக் கயிறு கட்டிவிட்டுருப்பாங்க. அதுலே ஒரு பெரிய நீளமான 'எஸ்' கொக்கி. ரெட்டு மாதிரி கெட்டியா இருக்கும் துணியை, லுங்கி போல ரெண்டு ஓரத்தையும் சேர்த்துத் தைச்சு வாங்கிப்போம். அதை அப்படியே அந்தக் கொக்கியில் கொசுவி மாட்டுனா தொட்டில். குழந்தை ஈரம் பண்ணிருச்சுன்னா அந்தத் தொட்டில்துணியை, நல்ல பாகம் கீழே வர்றதுபோல இழுத்துக்கலாம்.
மறுநாள் அதைத் துவைச்சுக் காயவச்சு எடுக்கணும். மழைக் காலத்துலே சட்னு காயாது பாருங்க. அப்பப் பழம்புடவையைக் கட்டிவிடறதுதான். அதுலே தொங்காதீங்க, கிழிஞ்சுருமுன்னுக் கத்திக்கிட்டே இருந்தாலும், நட்டநடுவிலே இருக்கும் தொட்டிலைப் போறப்ப வாறப்பத் தொடாமப் போகமுடியுதா என்ன?

' இவளாலேதான் சீக்கிரம் துணி கிழிஞ்சுருது'ன்னு என்னையும் சிலசமயம் திட்டும். 'தொட்டிலைப் பார்த்தா விடமாட்டா'ன்னும். நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது, தொட்டில்லேதான் தூங்குவேனாம். எல்லாப் புள்ளைங்களும்தான். இதுலே என்ன விசேஷம்? நல்லாக் கொள்ளுக்கொள்ளுன்னு பேசிக்கிட்டு ரெண்டு மூணு வயசு வரையும் தொட்டில் வேணுமுன்னு அடம்பிடிச்சா எப்படி? அதுலேயும் அக்காதான் ஆட்டணும். பாதித் தூக்கத்துலேயும் வேற யாராவது ஆட்டுனாக் கண்டுபிடிச்சுருவேனாம். 'நீங்க ஆட்டாதீங்க. பெரியக்காவை வரச்சொல்லுங்க'ன்னு சொல்வேனாம். 'வாய் இந்தக் கிழி கிழியுது. பாய்லே படுத்தா என்ன'ன்னு தினமும் திட்டு வாங்குவேனாம். அக்காதான் அப்பப்ப இதைச் சொல்லும். மூத்த பசங்க ரெண்டும், 'நீங்க ஆட்டாதீங்க. பெரியக்காவை வரச்சொல்லுங்க'ன்னு என்னைக் கேலி பண்ணும்.

ஒருநாள் நான் குழந்தையை ஆட்டிக்கிட்டே எதேச்சயாக் கண்ணை உசத்தி அண்ணாந்து பார்த்தா....... ஓலைக்கும் மூங்கிலுக்கும் இடையில் வெள்ளையா எலி நகர்ந்து போச்சு. எங்கேதான் போகுதுன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.. அது அந்த இடத்தைக் கடந்து போய்க்கிட்டே இருக்கு. "அக்கா, சட்னு வந்து பாருங்க. நீளமா எலி போகுது''ன்னு சொன்னேன். விருட்னு குழந்தையைத் தூக்கிக்கிட்டு, என்னையும் ஒரு கையாலே தரதரன்னு இழுத்துக்கிட்டு வெளியே வந்துருச்சு அக்கா. நல்ல வேளையா மதீனா அக்காவோட கொழுந்தன் வீட்டுலே இருந்தார். குரல் கொடுத்ததும் ஒரே எட்டுலே வேலியைத் தாண்டிக் குதிச்சு ஓடிவந்து, எங்கெ எங்கென்றார். உள்ளே கையைக் காமிக்குது அக்கா. அப்படியே அதுக்கு முகமெல்லாம் வேர்த்துவிட்டுருக்கு. ஆச்சரியம் என்னன்னா.....'அது' இன்னும் நகர்ந்து போய்க்கிட்டே இருக்காம். அடுப்பாண்டை இருந்த விறகுக் கட்டையை ஒரு கையிலே பிடிச்சுக்கிட்டு, பார்வையை அங்கே இருந்து எடுக்காம ஓடிப்போய் அண்ணனை வரச்சொல்லுன்னு மெதுவாச் சொல்றார்.

கொஞ்ச நேரத்துலே அக்கம்பக்கம் ஆம்பளையாளுங்க எல்லாம் வந்துட்டாங்க. வீட்டுக் கோடியில் மூங்கிலோடு சேர்ந்து சுவத்துப் பக்கம் இறங்கிருச்சாம். அங்கே சுத்திவர நின்னுக்கிட்டுக் கடப்பாரையில் கொஞ்சம் கொஞ்சமாச் சுவத்தை இடிச்சுக்கிட்டு நின்னாங்க. வெளியே போயிருந்த மாமா, எதுக்கு இம்புட்டுக் கூட்டமுன்னு பார்த்துக்கிட்டே வந்துருக்கார். விசயம் இதுன்னதும், புள்ளெகுட்டி இருக்கற இடம். விட்டுறக்கூடாது. சுவத்தை இடிச்சே பார்த்துறலாமுன்னு சொன்னதும் மெள்ள இடிக்க ஆரம்பிச்சாங்க. எல்லாரும் கவனமா தூரமாத் தள்ளி நின்னுக்கிட்டே, எந்த நிமிசமும் ஓடிறலாம் என்ற மாதிரி இருந்ததை நான் போய் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு நின்னேன். தாய்க்கோழி, குஞ்சுகளைச் சிறகில் ஒளிச்சு மூடறமாதிரி அக்கா புள்ளைங்களை அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு வாசப்பக்கம் பாத்திரம் தேய்க்கும் இடத்தில் போட்டுருந்த ஒரு கல்லுமேலே ஏறி நிக்குது. ஒரு அடி உசரம் வரும் கல்லுதான். எனக்குச் சிரிப்பாவும் வருது பயமாவும் இருக்கு. நான் அப்பப்ப இங்கே வந்து 'அங்கே' என்ன நடக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

நேரம் போய்க்கிட்டு இருக்கு. தேடறதைக் காணோம். ஆளாளுக்கு ஒன்னு சொல்றாங்க. இம்புட்டுதூரம் இடிச்சுட்டுச் சும்மா விட முடியாது. இங்கே லேசாத் தெரியுதுன்றார் ஒருத்தர். 'செங்குத்தா இறங்கியிருக்கு. இன்னும் கொஞ்சம் சுவத்தை இடிச்சுட்டாப் போதும். கீழ்ப்பக்கமா கடப்பாரையோடு தயாரா நில்லுங்க. தெரிஞ்சதும் ஒரே போடு'

அதே போல ஆச்சு. கடப்பாரை முனையால் மண்ணோடு சேர்த்து ஒரே குத்து. அதுக்குமேலே சுவத்தை இடிச்சுக்கிட்டே போகவும் சடார்னு துள்ளி வால் இந்தப் பக்கம் சுழட்டி விழுந்து..... பாதிசனம் ஓடிருச்சு. கோதுமை நாகமாம். ஆறடின்னாங்க. விட்டுருந்தா, நம்ம மேலே வஞ்சம்வச்சு வந்துருக்குமாம். அக்காவைச் சுத்திப் பொம்பளையாளுங்க கூட்டம்.
அன்னு அண்ணன் இருக்காரு பாருங்க, அவரோட அம்மாதான் நாகத்துக்கு சாந்தி செய்யலேன்னா தோஷமுன்னு சொல்லி, 'தீவச்சு எரிச்சுப் பாலூத்துங்க'ன்னாங்க.

புள்ளைங்கெல்லாம் எரியுற நாகத்தை வேடிக்கை பார்க்குதுங்க. அக்கா 'தரணி கண்ணைப் பொத்து'ன்னு கத்துது. , என் இடுப்புலே ஏறி உக்கார்ந்துக்கிட்டு இருந்த தரணி இறக்கிவிடு, கிட்டேப்போய்ப் பார்க்கணுமுன்னு அழுவுது. நல்ல வேடிக்கை. அப்புறம் கரிஞ்சுபோய்க்கிடந்ததுக்குக் கொஞ்சம் பால் ஊத்துனோம். மாமா குழிதோண்டி அதைப் புதைச்சார்.

அன்னிக்கு ராத்திரி வீட்டுக்குள்ளே போகப் பயந்துக்கிட்டு எல்லாரும் திண்ணையில் நெருக்கியடிச்சுக்கிட்டுப் படுத்தோம். பொதுவாப் பாய்லே படுக்கறவங்க, வீடுபூராவும் உருண்டு வட்டம் போட்டுக் காலையில் பார்த்தால் மூலைக்கொன்னாய் கிடப்போம். இன்னிக்கு பயமோ என்னவோ ஆடலை, அசங்கலை. மறுநாள் தோண்டுன சுவத்துலே மண்ணைக் குழைச்சு வச்சு அடைச்சாங்க. ஆறடி சமாச்சாரம், அப்புறம் அக்கம்பக்கத்துப் பேச்சுலே வரும்போது ஏழடி எட்டடின்னு வளர்ந்துக்கிட்டே போச்சு:-)

அக்கா... புள்ளைங்களோடு கல்லுமேலே ஏறி நின்னதை இப்ப நினைச்சாலும் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ரெட்டைப் பாம்பை எட்டிமரத்துக்கிட்டே பார்த்தேன்னு சொல்லிக்கிட்டு, பயமே இல்லாம அங்கே போய்வந்துக்கிட்டு இருந்த பொம்பளை, குழந்தைத் தொட்டிலுக்கு மேலே, 'அது' ஊர்ந்து போகுதுன்னதும் எப்படி நடுங்கிருச்சு பாரு.

ஒருநாள் பேச்சுவாக்குலே, பரண்மேலே இருக்கும் பழையபொட்டியிலே கொலுப்பொம்மைங்க கிடக்குன்னுச்சு. மாமா வந்ததும் பொட்டியை இறக்கித்தாங்கன்னு பிடிவாதம் புடிச்சு ஜெயிச்சேன். மாமாவுக்கு ஒரு தங்கச்சி இருந்தாங்களாம். அம்மை வார்த்துச் செத்துட்டாங்களாம். அவுங்க இருந்தப்ப வருசாவருசம் கொலு வைப்பாங்களாம். ரொம்ப வருசமாச்சு. எல்லாம் அக்கா, கலியாணங்கட்டமுன்னே நடந்த விசயமாம். தங்கச்சி மேலே இருந்த பிரியத்துக்காகப் பொம்மைப்பெட்டியை இங்கே கொண்டுவந்து வச்சுக்கிட்டாராம். இல்லேன்னா அப்ப அவுங்க அம்மா இருந்த துக்கத்துலே எல்லாப் பொம்மைகளையும் உடைச்சே போட்டுருப்பாங்களாம். பொட்டியிலே இடமில்லைன்னு ஒரு பெரிய செட்டியார் பொம்மையைத் துணியிலே சுத்தி மூலையில் வச்சுருக்கார்.

நம்ம வீட்டுலே கொலுவச்சா எவ்வளோ ஜோரா இருக்கும். இந்த வருசம் வைக்கலாமான்னு சொன்னதுக்கு, 'ஆமா இங்கே கிடக்கிற கிடப்புக்கு இதுதான் குறைச்சலு'ன்னு சலிச்சுக்கிச்சு. கலியாணம் கட்டுன புதுசுலே இந்தப் பொட்டியைக் கண்டுபிடிச்சு, ஆசையா மாமாகிட்டே கொலுவைக்கலாமுன்னு கேட்டதுக்கு, 'வேணாம். அம்மாவுக்குப் புடிக்காது'ன்னுட்டாராம். நாங்க, ஆளுக்கு ஒரு பொம்மைன்னு எடுத்துவச்சு விளையாடி ஒவ்வொன்னா உடைச்சது வேற விஷயம். செட்டியாரை மட்டும் சுவத்தோரமா வச்சுக் கைகுழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கிட்டு இருந்தோம். அதுவும் மார் தேய நீச்சலடிச்சு வந்து பொம்மையைப் புடிச்சுக்கிட்டு எந்திரிக்கப் பார்க்கும். முடியலைன்னா அழுதுக்கிட்டே மூக்கைக் கடிச்சுரும். மொன்னை மூக்குச் செட்டியாரா ரொம்ப நாள் அவர் அங்கேயே கிடந்தார்.


அண்ணன் ஒரு சமயம் ரெண்டு நாளு லீவு கிடைச்சப்ப இங்கே என்னைப் பார்க்க வந்துருந்தார். பிள்ளைங்க கூச்சல், வீட்டுவேலை, இன்னபிற சமாச்சாரங்களைப் பார்த்துட்டு ஒன்னும் சொல்லாமத் திரும்ப மெட்ராஸ் போயிட்டார். படிக்கவே அமைதியான நேரம் கிடைக்காத சூழ்நிலைன்னு அவர் மனசுலே சட்னு பட்டுருக்கு போல. எனக்குப் படிக்கத் தோதா ஒரு இடம் வேணுமுன்னு தீர்மானிச்சு மெட்ராஸ்லே ஒரு போர்டிங் ஸ்கூலில் இடம் வாங்கிட்டார். இந்தப் பள்ளிக்கூடத்துலே ஒரு விசேஷம் என்னன்னா...... இங்கேதான் என் அம்மா படிச்சாங்க. என் ரெண்டு சித்திகளும்கூட இங்கேதான் படிச்சாங்களாம். அவுங்க ஆலோசனைப்படிதான் என்னை இங்கே சேர்த்தாங்க.

அங்கே போனது, அங்கே அப்ப இருந்த சூழ்நிலை, மத்த விவரம் எல்லாம் நிஜமாவே தனியா எழுதவேண்டிய 'கதை'தான். இப்ப நினைச்சுப்பார்த்தால் இனிமையான வாழ்க்கை. ஆனா அப்போ ஏன் அவ்வளவாப் பிடிக்கலைன்னு புரியலை. ஆனா அங்கே 10 பிள்ளைகளுக்கு நான் அக்காவா இருந்தேன்:-)
அங்கேயும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருந்துச்சு. இப்போ, இந்தக் கதை நாயகி 'அக்கா' என்றதால் அக்காவைப் பார்க்கப் போலாம்.


தொடரும்.........

55 comments:

said...

உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா படிச்சுபிட்டு கருத்து சொல்லுறேன்

said...

மிக மிக அருமை. ரொம்ப நல்லா இருக்கு. ஆனா ஒருமாதிரி கஷ்டமாவும் இருக்கு, முள்ளும் மலரும் படம் பாக்கராப்போல:):):)

said...

ஏணை என்ற சொல் புதுசு. எங்க ஊரில் எல்லாம் அதைத் தூளின்னு சொல்லுவோம். அதற்கு என துணி இருந்த ஞாபகம் இல்லை. பழம்புடவைதான்.

இப்படி எல்லாம் பாம்பை அடிச்சதைப் பப்ளிக்கா எழுதறீங்க. PETA ஆளுங்க கண்ணில் பட்டாப் பிரச்சனை!

Anonymous said...

//ரெட்டைப் பாம்பை எட்டிமரத்துக்கிட்டே பார்த்தேன்னு சொல்லிக்கிட்டு, பயமே இல்லாம அங்கே போய்வந்துக்கிட்டு இருந்த பொம்பளை, குழந்தைத் தொட்டிலுக்கு மேலே, 'அது' ஊர்ந்து போகுதுன்னதும் எப்படி நடுங்கிருச்சு பாரு.
//

இது கர்ப்பம் ஆன பல பெண்களுக்கு வரும் போல இருக்கு. என்னுடன் வேலை பார்த்த பெண் கர்ப்பம் ஆன கொஞ்ச நாள் கழித்து எல்லாத்துக்கும் பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. உளவியல் ரீதியா இதுக்கு என்ன காரணம்னு தெரியலை. அவங்களே சொல்லிக்குவாங்க இப்படியெல்லாம் நான் மின்னாடி பயப்பட்டதில்லை. இப்பதான் பயப்படறதாவும் சொல்லிப்பாங்க.

Anonymous said...

நானும் தூளியில மூணு வயசு வரைக்கும் தூங்கிருக்கேன். அப்பாதான் புடிச்சு ஆட்டுவார்.

said...

/*அக்கம்பக்கத்துப் பேச்சுலே வரும்போது ஏழடி எட்டடின்னு வளர்ந்துக்கிட்டே போச்சு:-)
*/
உண்மைதான்

said...

பாம்பு (அது)கதை படிச்சதும் நியாபகம்.சாயந்திரம் ஆறு மணிக்கு மேல பாம்பு ன்னு சொல்ல மாட்டோம். "பேர் சொல்லாதது"ன்னு தான் சொல்லணூம்னு எங்க விளையாட்டு கூட்டணி அக்கா சொல்லி குடுத்தாங்க.ஹாரி பாட்டெர்"வால்டெர்மார்ட்" மாதிரி!!:)
தூளில தூங்கர குழந்தைங்க நல்லா ஆழ்ந்து தூங்கும்னு அம்மா சொல்லுவாங்க..:)

said...

டீச்சர், பாமபையா எலின்னு சொன்னீங்க ? நான் கொஞ்சூண்டு குழம்பிப் போயிட்டேன். அப்புறம் அந்த இடிச்ச சுவத்தைக் கட்டினீங்களா இல்லையா? கட்டியிருந்தாலும் அக்காதான் கட்டியிருப்பாங்க :)

said...

படிச்சாச்சு. திரும்பி கதை வேகமால்ல போகுது!! நல்லாருக்கு.

எத்தனை வருசம்/மாசம் உங்க அக்கா வீட்டுல தங்கியிருந்திருப்பீங்க?

அதுக்கப்புறம் கல்லூரி படிச்சு முடிக்கிற வரை போர்டிங் ஸ்கூல் தானா?

நான் பார்த்த வரை, ஒரு பத்தாப்புலேயிருந்து "அக்கா"க்கள் வகுப்பில் உண்டு. நான் எப்பவும் தங்கச்சி (நாட்டாமை பண்ணாதபோதெல்லாம்:-)

ம், அப்புறம்?

said...

ம்...

said...

இனிமையான வாழ்க்கை! :-o)

said...

வாங்க நசரேயன்.

ரெண்டு பின்னூட்டத்துக்கு கேரண்டி:-))))

said...

வாங்க ராப்.

முள்ளும்மலரும் படம் பார்க்கலை. இந்த முறை ஊருக்கு வரும்போது கிடைக்குதான்னு தேடுனா ஆச்சு.

said...

வாங்க கொத்ஸ்.

'அதை' எங்காவது பேர் சொன்னேனா?

இதென்ன அமெரிக்காவுலேயா இருக்கேன். இங்கே நம்ம நாட்டுலே 'அது' கிடையவே கிடையாது. பிரச்சனை இருக்காது:-)

எங்க குடும்பங்களில் கலியாணத்துக்கு நூல் புடவைதான் கட்டுவாங்க. அதைத்தான் 'முதல் குழந்தை'க்குத் தொட்டில் கட்டப் பயன்படுத்துவாங்க.

அப்புறம் வரிசையா வர்றதுகளுக்கு ஏணைத் துணிதான். இதுகூட அக்காவின் கண்டுபிடிப்போன்னு எனக்கு ஒரு சம்சயம்:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

தனக்கு என்ன ஆபத்து இருந்தாலும் பரவாயில்லை. தன் குழந்தைகளுக்குத் துன்பம் வந்துறக்கூடாதுன்னு நினைக்கும் தாய் உள்ளம்தான். வேறென்ன?

கர்ப்பகாலத்துச் சமாச்சாரங்கள் எல்லாம் ஹார்மோன் குழப்படிகளால்தானே?

said...

நசரேயன்,

கொஞ்சம் 'கூட்டல் கணக்கு'லே நம்மாளுங்க கில்லாடிங்கப்பா:-)

said...

வாங்க ராதா.

வசம்பு இருக்கு பாருங்க அதுக்குக்கூடப் பேர் சொல்லக்கூடாதாம். அதைச் சுட்டுக் கருப்பாக்கி சந்தனம் இழைக்கும் சின்னக் கல்லுலே இழைச்சுக் குழந்தை வயித்தைச் சுத்தித் தடவுவாங்க. வயித்துவலி போயிருமாம்.
கைவைத்தியம்!

said...

வாங்க ரிஷான்.

'அது' நகர்ந்து போறதைப் பார்த்து எலி ன்னு தப்பா நினைச்சுக்கிட்டேன்:-)

இடிச்ச சுவத்தை அக்கா கட்டலை. அன்னு அண்ணன் கட்டிக்குடுத்தார்.

said...

வாங்க கெக்கேபிக்குணி.

கதை 'அக்கா'வைப் பத்திதான். என்கிட்டே கேள்விகளை அடுக்குனா எப்படி? :-))))

said...

வாங்க நரேன்.

ம்?

நல்லா 'ஊம்' கொட்டிக் கேக்கணுமுன்னு நேத்துதானே நம்ம பழமைபேசிச் சொல்லிக் குடுத்தாரு. மறக்கலாமா? :-)

said...

வாங்க பழமைபேசி.
உங்களுக்கு நூறு ஆயுசு. இப்பத்தான் உங்களைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.


தேவைகள் அதிகம் இல்லாததாலேயே வாழ்க்கை போதுமென்ற மனத்தோடு இனிமையா இருந்துருக்கு.

இப்பப் பாருங்க....... ஊர் உலகமெல்லாம் போட்டி, பொறாமை(-:

said...

நான் குழந்தையா இருக்கும்போது அக்காள்ஸும், அண்ணனும் என்னை எடுத்து கீழ படுக்க வெச்சிட்டு அவுங்க ஆடிட்டு இருப்பாங்களாம்...

ஆராரோ பாடினீங்களா?

said...

அப்படி எல்லாம் இல்ல, கேக்க நிறையவே இருக்கு. மெதுவா கேக்கலாம்னு நினைச்சேன்...இப்பவே கேட்டுட்டா போச்சு....

ஏணை தமிழ் சொல்லா ?

ஊர்ல நிறைய கன்னட குடும்பங்களோ? கர்நாடக border -னு சொன்ன மாதிரி ஞாபகம்...ஏன்னா கன்னடத்துல தான் தூளிய நேணை - னு சொல்லுவோம் ...

தமிழ் மருவுச்சா இல்ல கன்னடம் மருவுச்சா ?

கதை நடக்கிற ஊர் எந்த ஊர்? எந்த கிளாஸ் நீங்க அப்போ ?

அப்புறம் உங்க ஊர்ல இந்த கொம்பேறி மூக்கன் கதை எல்லாம் இல்லியா?

இப்போதைக்கு இவ்வளோ தான்..நிறைய இருக்கு..மெதுவா கேக்கலாம்...கதைய மட்டும் முடிச்சிடாதீங்க..எவ்வளோ ஞாபகப்படுத்த முடியுமோ அவ்வளோ எழுதுங்க..எழுதறது எல்லாருக்கும் வராது... அப்புறம் அம்மாவைப் பத்தி எதுவும் எழுதி இருக்கீங்களா?


நரேன்

said...

***துளசி கோபால் said...
வாங்க ராப்.

முள்ளும்மலரும் படம் பார்க்கலை. இந்த முறை ஊருக்கு வரும்போது கிடைக்குதான்னு தேடுனா ஆச்சு.***

மன்னிச்சுக்கோங்க உங்க அக்கா கதை பாகங்களை நான் இன்னும் படிக்கவில்லை, டீச்சர்.

நீங்க என்ன இப்படி முள்ளும் மலரும் பார்க்காம இருக்கீங்க, டீச்ச்ர்?

முடிஞ்சா இந்த க்ளிப்களை யு-ட்யூப் ல பாருங்க, டீச்சர்!

http://www.youtube.com/watch?v=5Vp8WTSbyQU&feature=related


http://www.youtube.com/watch?v=4PL7ImYghVU&feature=related

---------------

பை தி வே, பேர்சொல்லாதது வசும்பு நு இரவில்தானே சொல்லக்கூடாது நு சொல்லுவாங்க?

said...

ஏணை இப்ப தான் கேள்விப்படுறேன்.. தொட்டில் தான் கேட்டு பழகி இருக்கு.. தங்கமணி பழைய சேலையில் கயிறைக் கட்டி அனாயசமா தொட்டில் கட்டும் போது எனக்கே கொஞ்சம் பயமா இருக்கும்..:)

said...

கல்லுமேல அக்காவும் குழந்தைகளும் என் கற்பனையில் தெரியறாங்க.. :)

தனிக்கதை லிஸ்ட் கூடிக்கிட்டே போகுது.. புது நோட் தான் போடனும்..

நான் என் சித்திப்பிள்ளைங்களை தொட்டில்ல போட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி இருக்கேன்.. அது ஸ்பிரிங் மேலும் கீழும். இங்க தில்லியில் குளிரும்ன்னு எல்லாம் கட்டில்லதான்.. பிறந்ததிலிருந்து. சில சமயம் ப்ராம்ல போட்டு முன்னும் பின்னும் ஆட்டுவேன் மகளை.. மகனுக்கு ஆனாலும் அட்டகாசம் ஜாஸ்த்தி தூக்கிட்டு லொங்கு லொங்குன்னு வீட்டுக்குள்ள நடக்கனும்.. :(

said...

அதை அடிச்சேன் அதை அடிச்சேன்னு சொல்லறீங்களா. க்ளாசில் மக்கள் ஒரு வேளை அது கோபால் சாரோன்னு குழம்பக்கூடாது இல்லையா. அதான் பட்டுன்னு போட்டு உடைச்சுட்டேன்! :)

said...

aunty how r u?.... i have tagged u for a post..plsssssssss write for me...

avanthika

said...

வாங்க தங்ஸ்.

சினிமாப்பாட்டைத்தான் பாடியிருப்பேன் ஒருவேளை:-))))

தொட்டில், குழந்தையைத் தவிர மத்த புள்ளைங்களுக்கு ஊஞ்சல் சேவைதான்:-)

said...

நரேன்,

ஏணை ஒருவேளை கன்னட மருவலா இருக்கலாம்.

என்னப் பத்தியெல்லாம் இப்பவே சொல்லிட்டா...அப்புறம் 'என் கதை'எழுதும்போது சொல்ல விஷயமே இருக்காதேப்பா.

அம்மாவைப் பத்தியும் அப்பாவைப் பத்தியுமே ஒரு நாள் எழுதத்தான் வேணும். இதுவரை ஆழமா எழுதலை.
அங்கங்கே சில குறிப்புகளாச் சொல்லி இருப்பேன்.

கொம்பேறி மூக்கன் கதை எனக்குத் தெரியும். ஆனா அப்போ அதை யாரும் சொல்லலை:-)

said...

வாங்க வருண்.

சுட்டிகளுக்கு நன்றிப்பா.

சினிமாவே கிடைக்காமலிருந்த காலம் ஒன்று என் வாழ்க்கையில் இருந்துச்சு. ஒருவேளை இந்தப் படம் அப்போ வந்திருக்கலாம்.

said...

வாங்க தமிழ் பிரியன்.

ஆமாம். நீங்க சொல்றது சரி. இறுக்கமா முடிச்சுப் போடலைன்னா தூளிக்கயிறில் துணி உருவிக்கிட்டு வந்துரும். குழந்தை தொப்புன்னு விழுத்துருமே(-:
அதுவும் வீசிவீசி ஆட்டுற வேகத்துலே...... ஐயோ

said...

ம்ம்ம்...தொட்டில் எங்களை ஆட்டி...பாம்பு விஷயத்தில் எங்களை பயமுறுத்தி...அனு அனுவாக ரசிக்க வைக்கிறிங்க டீச்சர் ;)

said...

\\\துளசி கோபால் said...
வாங்க ராப்.

முள்ளும்மலரும் படம் பார்க்கலை. இந்த முறை ஊருக்கு வரும்போது கிடைக்குதான்னு தேடுனா ஆச்சு.
\\

டீச்சர்..சென்னையில ஸ்பென்சர்-ப்ளாசாவில் landmark & music world இந்த ரெண்டு இடத்திலும் பழைய படங்கள் கிடைக்கும். நான் போன முறை ஊருக்கு போன போது இங்க இருந்து தான் அள்ளிக்கிட்டு வந்தேன். என்ன கொஞ்சம் நேரம் எடுத்து தேடாணும் ;)

said...

என்ன அழகாத் தூளிலேருந்து கூரைக்குக் கதையை நகத்திட்டீங்க துளசி!!

எவ்வளவு பயந்திருப்பாங்களோ உங்க அக்கா.

பத்துப் பிள்ளைகளா!!
ரொம்பப் பொறுமைதான் அக்காவுக்கு.

அண்ணன் வந்து பட்டணம் கூட்டிப்போன தொடரைத்தனியா எழுதுங்க.

நம்ம எல்லாருக்கும் தூளி சம்பந்தம் நிறையவே இருந்திருக்கு.

மாமாவைத் தூளி ஆட்டச் சொல்லி சின்னஞ்சிறு கிளீயே பாடச் சொன்ன அனுபவமும் எனக்கு உண்டு:)
இப்பத்தான் இவங்க எல்லோருக்கும் தூளிப் பழக்கமே இல்லை. அந்தக் கதகதப்பும் சுகமும் வேற எதிலயாவது கிடைக்குமா.

எத்தனை சம்பவம் துளசி. என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. உங்கள் நினைவு இன்னும் மேம்பெறனும்னு பிரார்த்திச்சுக்கறேன்.

said...

எங்க வீட்டுக்குள்ள ஒரு நாள் நல்ல பாம்பு குட்டி வாசல் வழியா நுழைய பாத்துச்சு, சிமெண்ட் தரைனால அதால நகர முடியவில்லை அப்புறம் இன்னோருத்தரு வந்து அடிச்சாரு. நான் அடிக்கவில்லை.(கொத்தனார் கவனத்திற்கு)

said...

எங்க ஊரில் இன்னமும் தூளி கட்டும் பழக்கம் உண்டு, அந்தச் சங்கலியில் தாயத்து இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டு..கீழே ஒரு பூந்துடைப்பமும் உண்டு...

said...

வாங்க கோபி.

ரசிச்சதுக்கு நன்றிப்பா.

பழைய படங்கள் சிலவற்றை மயிலை கிரி ட்ரேடிங்லேயும், தி.நகர் க்ராஸ்வேர்ட்ஸ்லேயும் வாங்கிட்டுவந்தேன். முள்ளும்மலரைப் பார்த்த நினைவு இல்லை.

எம் ஜி.ஆர் நடித்த அபிமன்யூ கூட வாங்குனேன். கண்ணை நட்டுக்கிட்டுக் கவனிச்சாலும், எம்ஜிஆர் படம் முடிய அஞ்சு நிமிசம் இருக்கும்போது வந்தார்!!!

விடறதில்லை அடுத்த முறை:-)

said...

வாங்க வல்லி.

வகுப்புலே கவனமே இல்லைப்பா உங்களுக்கு. பேசாம பெஞ்சுமேலே ஏறி நிக்கச் சொல்லலாமான்னு நினைக்கிறேன்:-))))


அக்காவுக்கு எங்கப்பா பத்து பிள்ளைங்க?

எனக்குல்லே 10 தங்கைகள் இருந்தாங்க.


தூளி இல்லாத குழந்தைப் பருவம் அந்தக் காலத்துலே ஏது? இங்கே தான் அதுக்கெல்லாம் ச்சான்ஸே இல்லாம இருக்கு.

said...

வாங்க குடுகுடுப்பை.

உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லிடவா? கொத்ஸ்க்குத் தெரிய வேணாம்.

நானும் ஒருமுறை 'அதை' அடிக்கும்படியா ஆகிருச்சு.

இங்கே பாருங்க

said...

நரேன்,

//எங்க ஊரில் இன்னமும் தூளி கட்டும் பழக்கம் உண்டு, அந்தச் சங்கலியில் தாயத்து இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டு..கீழே ஒரு பூந்துடைப்பமும் உண்டு...//

இல்லையா பின்னே.... காத்துக் கருப்பு அண்டாம இருக்கணுமுல்லே!!!!

நம்ம பக்கம் முந்தியெல்லாம் தொட்டில் கட்டும்போது குழந்தைக்குக் காத்து வரட்டுமுன்னு நல்லா கடைஞ்சு எடுத்த டிசைன் போட்ட மரத்துண்டுலே ரெண்டு பக்கமும் துளை போட்டே விக்கும் பாருங்க, மதுரைக் கோயில் கடைகளில்(இதே மாதிரி மரச்சொப்புகள் கூட அங்கே கலர்க்கலராக் கிடைக்கும்) அதை வாங்கி, துளைகளூடே தொட்டில் கயிறு செலுத்திக் கட்டுவாங்க.

அக்கா வீட்டுலே ஒரு மரப்பலகை ரெண்டை நீளம் இருக்கும். அதில் ரெண்டு பக்கமும் ஆங்கில 'V' மாதிரி வெட்டி இருக்கும். அது தொட்டில் துணியில் குறுக்காக வரும். எங்கே அது நழுவிப் பிள்ளை மேலே விழுத்துருமோன்னு அந்தச் சட்டத்து நடுவில் கயிறு போட்டுக் கட்டி அதைத் தொட்டில் கம்பியோடு சேர்த்துக் கட்டிவிட்டுருப்பாங்க.

said...

வாங்க கயலு.

ஸ்ப்ரிங் தொட்டிலிலே மேலேயும் கீழேயுமாக் குலுக்கல் அதிகமாச்சேப்பா.

'அப்புறம் கதைகள் ஆயிரத்தொன்னு'
டைட்டில் நல்லா இருக்கா?

said...

கொத்ஸ்,

கோபாலை அடிக்கும்போது 'அவர்'ன்னு சொல்லிப்பேன்:-)

'அதை' நெசமாவாவே அடிச்சது இப்பத்தான் நினைவுக்கு வந்துச்சு.

said...

அதே...அதே...

said...

தேவைகள் அதிகம் இல்லாததாலேயே வாழ்க்கை போதுமென்ற மனத்தோடு இனிமையா இருந்துருக்கு.


The "GOLDEN WORDS" Teacher. I am really proud of being your student. Sorry for not writing in Tamil. In office now. So please forgive.

said...

thulasi,

we call it 'ஏணை' too.

said...

வாங்க விஜய்.

'பீட்டர்'விட்டாலும் பரவாயில்லைப்பா. படிக்கணும். அதுதான் முக்கியம்:-)

said...

வாங்க மதி.

ஆஹா......

'தூளியிலே ஆடவந்த வானத்து வெண்நிலவே .....

ஏணையிலே ஆடிய தண்'மதி'யே....
நலமா?

பார்த்துப் பலவருசமாச்சு(-:

said...

'அது'ன்னு ஒரு திரில்லர் படம் மாதிரி ரொம்ப நல்லா கொண்டு போயிருக்கீங்க டீச்சர்... :-)

தூளிக்குன்னு தனி துணி இருக்கா என்ன? எங்க வீட்ல அப்பாயி சேலை தான்...

said...

வாங்க நான் ஆதவன்.

நல்லா கெட்டியா குழந்தையின் கனம் தாங்கறதுபோல காடாத்துணி ஒன்னு கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு அப்ப.

அகலமும் ரொம்ப இல்லை. அதனால் சுருக்கம் வராம இருக்கும். இதுலே கட்டம்கட்டம் போட டிசைனும் வரும்.

said...

//அந்த ஏணைக்கு ஓய்வு ஒழிச்சலே கிடையாது. ஒன்னு புள்ளை தூங்கும், இல்லேன்னா அதையே ஊஞ்சலா நினைச்சுக்கிட்டு நாங்க பசங்க எல்லாம் ஆடி ஆட்டம் போடுவோம்.//
//நாங்க யாரும் அக்கம்பக்கம்போய் விளையாடவே மாட்டோம். எங்களுக்குள்ளேயே ஆட்டம் போடறதுதான்.//

இதே இதேதான். என் தம்பியின் தூளியில் இப்படித்தான் ஆட்டம் ஆடுவோம். லீவு வந்தால் அத்தை, சித்தப்பா வருவார்கள்.அவர்கள் குழந்தைகளுக்குமாய் சேர்த்து வீட்டில் ஒரே சமயத்தில் மூன்று தூளி. கேட்கணுமா ஆட்டத்துக்கு, பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்து விடும் என முதுகில் விழும் பூசையைப் பொருட்படுத்தாமல்:)!

//பாதித் தூக்கத்துலேயும் வேற யாராவது ஆட்டுனாக் கண்டுபிடிச்சுருவேனாம்.//

முடியுமா முடியுமா உங்களை ஏமாற்ற யாராலாவது முடியுமா:))?

//வசம்பு இருக்கு பாருங்க அதுக்குக்கூடப் பேர் சொல்லக்கூடாதாம். அதைச் சுட்டுக் கருப்பாக்கி சந்தனம் இழைக்கும் சின்னக் கல்லுலே இழைச்சுக் குழந்தை வயித்தைச் சுத்தித் தடவுவாங்க. வயித்துவலி போயிருமாம்.
கைவைத்தியம்!//

இதே போல தயாரித்து அதை குழந்தையின் நாக்கில் தடவினால சரியாகப் பேச்சு வராத குழந்தைகள் பேச ஆரம்பித்து விடுவார்களாம். என் உறவில் 3 வயது வரை அதிகம் பேசாமல் ஓரிரு வார்த்தை பேசி வந்த ஒரு குழந்தைக்கு இதைச் செய்ததும் சரளமாகப் பேச வந்ததாய் சொல்வார்கள். ‘காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததா’ என்றெல்லாம் தெரியாது:)!

‘முள்ளும் மலரும்’ சான்ஸ் கிடைச்சா கட்டாயம் பாருங்க. ரஜனி நடித்ததிலே எனக்குப் பிடித்த படம் அதுதான்.குறிப்பா க்ளைமேக்ஸ் ஸீன் நல்லாருக்கும்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வசம்பைச் சுட்டுக் கரிச்சு வயித்துக்குப் பூசும்போது நாக்கிலும் கொஞ்சம் தடவுவாங்கதான்.

ஆனா பேச்சுக்குமா?

அட!

said...

நீள நீள நினைவுகளின் தொகுப்பு மிக அருமையாகவிருக்கிறது,

உங்களின் ஞாபகங்கள் எங்களையும் வந்து தொத்திக்கொள்கிறது.

இந்த ஏணை என் பொண்ணுக்காக எங்கள் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் ஒருநாளும் நான் அவளை அதில் தூங்கச்செய்வது கிடையாது. ஒரு நாள் அவளை நான் அதில் போட முயற்சி செய்து, குழந்தையை அரைகுறையாய் கீழே விட்டுவிட்டேன். அதனால் என்வரைக்கும் அதற்கு நோ.

இவளாலேதான் சீக்கிரம் துணி கிழிஞ்சுருது'ன்னு என்னையும் சிலசமயம் திட்டும்//
-ஹி - ஹி -ஹி

அக்கா... புள்ளைங்களோடு கல்லுமேலே ஏறி நின்னதை இப்ப நினைச்சாலும் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ரெட்டைப் பாம்பை எட்டிமரத்துக்கிட்டே பார்த்தேன்னு சொல்லிக்கிட்டு, பயமே இல்லாம அங்கே போய்வந்துக்கிட்டு இருந்த பொம்பளை, குழந்தைத் தொட்டிலுக்கு மேலே, 'அது' ஊர்ந்து போகுதுன்னதும் எப்படி நடுங்கிருச்சு பாரு.//
பெத்த மனம் பித்து.


ஆறடி சமாச்சாரம், அப்புறம் அக்கம்பக்கத்துப் பேச்சுலே வரும்போது ஏழடி எட்டடின்னு வளர்ந்துக்கிட்டே போச்சு:-)
நல்லா சொன்னீங்க.

முடியலைன்னா அழுதுக்கிட்டே மூக்கைக் கடிச்சுரும். மொன்னை மூக்குச் செட்டியாரா ரொம்ப நாள் அவர் அங்கேயே கிடந்தார்//
அழகா சொல்லியிருக்கீங்க. கற்பனையில் மிக அழகாக இருக்கிறார் இந்தச் செட்டியார்.

அங்கே போனது, அங்கே அப்ப இருந்த சூழ்நிலை, மத்த விவரம் எல்லாம் நிஜமாவே தனியா எழுதவேண்டிய 'கதை'தான். இப்ப நினைச்சுப்பார்த்தால் இனிமையான வாழ்க்கை.//
நிறைய கதை ஸ்டாக் வெச்சிருக்கீங்க போல, பல மெகா சீரியல் ரேஞ்சுக்கு.
ம், ரொம்ப சுவாரசியமா எழுதறீங்க.

said...

தூளி மாதிரி ஒரு செகுயூர்ட் ப்ளேஸ் எங்க இருக்கு...:-)

எங்க அக்கா பொண்ணுக குழந்தையா இருக்கும்போதும் இது மாதிரி திருட்டுத்தனா உக்கார்ந்து, அதை பாட்டி பார்த்து.. ஐயோ குழந்தைக்கு உடம்பு வலிக்கும்..எழுந்திரு உனக்கு தனியா சிட் அவுட்ல கயிறு கட்டி கொடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க.. 4 மாச குழந்தைகிட்டே 18 வயசு பொண்ணு போட்டி..அதுக்கு பாட்டி ஜால்ரா..

அந்த நாளும் வந்திடாதோ...

said...

வாங்க மங்கை.

தொட்டிலில் விட்ட குழந்தை, தானே குப்புறப் படுத்துத் தலையை மட்டும் தொட்டிலுக்கு வெளியே நீட்டிக்கிட்டுப் பார்க்கும் பாருங்க சிலசமயம். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்:-)

துளித்துளியாகத் தூளியின் நினைவுகள்.