Wednesday, July 29, 2009

எது நடந்ததோ, அது நல்லாவே நடந்துச்சு.

கண்ணாடி வளையல்கள் கொத்து ஒன்னை நீட்டினாங்க ஒரு பெண். நமக்கில்லைப்பா..... கோவில் பட்டர் கிட்டே. அவரும் அதை வாங்கி ஓரமா இருந்த கூடையில் வச்சார். அதுலே முக்கால்வாசி வளைகளா ரொம்பிக்கிடக்கு. இது நேத்து, வெள்ளிக்கிழமைக் கோயிலில் பார்த்த விஷயம். ஏன்? எதுக்கு? ன்னு மனசுக் குடைச்சல்,எனக்கு. நின்னு நிதானிக்க நேரம் இல்லை. நாளைக்கு வரத்தானே போறோம். விசாரிச்சுட்டால் ஆச்சு

பத்து நிமிசம் முன்னாலே வந்துட்டுப் பதுமனைச் சேவிச்சு ஒரு சுத்து சுத்திவரும்போது அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கைக்கு வளையல்கள் மாலை போட்டுருக்காங்க. இன்னிக்கு ஆடிப்பூரம். ஒருவேளை.............இதுதான் ஸ்பெஷலோ? கோவில்படி கடக்கும்போது இன்னொரு பெண் உதவியாளர் கையைப் பிடிச்சுக்கிட்டேத் தள்ளாடிய நடையில் வரும் திருமதி ஒய்ஜிபி அவர்களைப் பார்த்தேன். ரொம்பத்தான் வயசாயிருச்சு(-:

"நீ நினைக்கிறவங்களா இல்லாட்டி என்ன பண்ணுவே?"

"ஒன்னும் பண்ணமாட்டேன். உக்கார்ந்து பார்த்துட்டுப் பதிவு எழுதுவேன். ஒரே பேர்லே ஆளுங்க இருக்கமாட்டாங்களா என்ன?"

கால்வாசி நிரம்பி இருந்த ஹாலுக்குள் பிரவேசித்தோம். இதென்ன முன்னாலே எல்லா இடங்களும் , என் இடம் உள்படக் காலியா இருக்கே...... வீரநடை போட்டுப்போய் உக்கார்ந்த நிமிஷம், முதல் மூணு வரிசை இன்னிக்கு ரிசர்வுடுன்னு செக்யூரிட்டி வந்து சொல்றார். ரிசர்வுடுன்னா ஒரு அறிவிப்பு வச்சுருக்கக் கூடாதா?

ஏற்றவும் கடைசி வரிசையில் கோபிகா ஒற்றை ஆளா உக்கார்ந்திருக்காங்க. என்னை கண்டதும் 'பரிச்சயக்காரியைக் கண்டச் சிரி'.

"வரூ. ஈசைடு மும்போட்டு போயிருக்கூ"

"இன்னு புள்ளி ஆரா? "

ரெஜினிகாந்திண்டே மோளு"

"மெயில் அயிச்சிச்சுண்டு, கண்டோ?"

" இத்ரி தெரக்கா. சமயமில்லா. நாளை காணாம்"

'இத்ரியோ........... ஒத்ரியல்லோ'ன்னு நினைச்சுக்கிட்டேன்.

நியாயம்தான். விழா நடத்தி முடிப்பதுவரை எவ்வளோ தலைவலின்னு நமக்குத் தெரியாதா? இன்னிக்குத்தான் கடைசி நாள். வசதியான இடமாப் பார்த்து(என்ன பெரிய வசதி? தலை மறைக்கக்கூடாது அம்புட்டுத்தான்)எக்ஸ்ட்ரா சேர் இழுத்துப்போட்டு உக்கார்ந்தோம். இசைக்குழு வந்து ஸ்ருதி சேர்த்து ரெடியா இருக்காங்க. பாடகி அதே நந்தினி ஆனந்த்தான். நமக்கு அதிர்ஷ்டமுன்னு நினைச்சேன். என்ன அருமையான குரல்வளம். ரொம்பத் தெளிவா, ஸ்பஷ்ட்டமாப் பாடுறாங்க. வழக்கம்போல் புடவைதான் கட்டி இருக்காங்கன்னாலும் மலையாளச் சாயலில் உள்ள ஹாஃப் ஒயிட் கசவு ஸாரி. நட்டுவாங்கமும் இதேபோல ஒரு புடவை. கூடுதல் விளக்குகளும், ஸ்பீக்கர்ஸுமா கொஞ்சம் பந்தாவாத்தான்................
திமுதிமுன்னு ஒரு கூட்டம் வந்து முன்வரிசையைப் பிடிச்சது. போட்டோ க்ராஃபர்கள் எல்லாம் மொய்ச்சுக்கிட்டுப் படம் எடுத்துத் தள்ளறாங்க. தனுஷ் இந்தப் பக்கம் திரும்பி எல்லாருக்கும் பொதுவா கைகூப்பி ஒரு வணக்கம் சொல்லிட்டு உக்கார்ந்தார். அவர் என்னவோ சாதாரணமாத்தான் இருக்கார். அடிபொடிகள்தான் பாதுகாப்பு வளையம் மாதிரித் தெரிஞ்சது.

அடுத்த சலசலப்பு.............. லதா ரஜினிகாந்த். மருமகன் இருக்கும் பக்கம் இல்லாம அடுத்த பக்கம் வந்து உக்கார்ந்தாங்க. ஆஸ்ரம் ஸ்கூல் பழைய மாணவ மாணவிகள் சிலர் காலைத் தொட்டுக் கும்பிட்டு வணக்கம் சொல்லிக்கிட்டாங்க. இவுங்களோட தண்ணிபாட்டிலைக் கையில் வச்சுக்கிட்டு ஏவலுக்குக் காத்து நின்ன உதவியாளர் எஜமானி அம்மாவின் கட்டளையை எதிர்பார்த்துக் கதவோரம் காத்திருந்தார். ஒரு கையசைவு போதுமாயிருந்தது.
சின்னதா பார்டர் போட்டக் கேரளக் கசவு ஸாரி அணிஞ்ச ஐஸ்வர்யா ஆட ஆரம்பிச்சாங்க. ஏனோ தானோன்னு இல்லாம ரொம்ப பவ்யமா, சின்ஸியரான ஆட்டம். முகபாவனைகள் அபிநயம் எல்லாமே சூப்பர். ஒல்லியான சின்ன உருவம். நட்டுவாங்கம் செஞ்சவங்கதான் குருவாம். கடைசிவரை விறுவிறுப்புக்குக் குறைவில்லை.



'அம்மம்மா' கையால் கடைசியில் பரிசு. பொன்னாடை. நட்டுவாங்கம் செஞ்சவங்களையும் மற்ற இசைக் குழுவினரையும் பாராட்டிப் பேசுனாங்க திருமதி ஒய் ஜி பி. அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாரா இருந்த கீதா மாஹாலிக்
அவர்களுக்கும் அம்மா கையால் பரிசு கொடுத்துக் கவுரவப்படுத்தணுமுன்னு கோபிகா கேட்டுக்கிட்டதால் அப்படியே செஞ்சாங்க. கம்பீரமான குரல் மட்டும் அப்படியே இருக்கு. உடல்தான் ரொம்பவே தளர்ந்து போச்சு.


சினிமாக்காரர்கள் போனதும் மொத்தக்கூட்டமும் (சிலரைத் தவிர்த்து) அம்பேல். காயப் ஹோ கயா. நிம்மதியா 'என் இடம்' போய் அமர்ந்தேன்.

ஒடிஸ்ஸி நடனம் ஆரம்பமாச்சு. ரொம்ப எளிமையான அலங்காரங்கள். தலை அலங்காரம் மட்டும் பிரமாதமா இருக்கு. ரொம்ப நிதானமான நடன வகை. அபிநயம், பாவங்கள் எல்லாத்துலேயும் நம்ம பரதத்தோட சாயல் அதிகம். சுத்திச் சுத்தி ஆடறாங்க. அந்த புடவைக் கட்டுலேச் சுத்தி ஆடும்போது எனக்கென்னமோ மராத்தியர்களின் நடனம் நினைவுக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு.



கீதா, ஒடிஸி நாட்டியத்துலே ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. வைணவ பக்தியும் ஒடிஸ்ஸி நடனமும் எப்படி ஒன்னுக்கொன்னு இணைஞ்சு இழையுது, அதோட தாக்கம் எப்படின்னு ஆராயறாங்களாம். பஜன் வகைப் பாட்டுகளும் நடனமும் அருமை. பாவயாமி ரகுராமம் வட இந்திய ஸ்டைலில் பாடினார் பாடகர். ஒரிஸ்ஸாவில் பிறந்து வளர்ந்து இப்போ டெல்லியில் இருக்காங்க. கலாச்சாரக் கழகத்து ஃபெல்லோஷிப் அவார்ட் கிடைச்சுருக்கு. பல வருட பயிற்சியும் அனுபவமும் சேர்ந்து ரொம்ப க்ரேஸ்ஃபுல்லான நிகழ்ச்சியா இது அமைஞ்சுபோச்சு.
இவுங்ககூடவே இசைக்குழுவில் ஒரு மிருதங்கம், ஒரு சிதார், ஒரு பாடகர். இவரே ஹார்மோனியமும் வாசிச்சுக்கிட்டே பாடினார். ஒரு பெண் தாளம் போட்டாங்க. மிருதங்கம் வாசிச்சவரே நட்டுவாங்கமும் செஞ்சார். மொத்தக் குழுவையும் மேடையில் கூப்பிட்டு அறிமுகப் படுத்திப் பாராட்டி நன்றி சொன்னாங்க கீதா. இது ரொம்பவும் பாராட்டப்படவேண்டிய அம்சம். இசைக்குழு சரியில்லைன்னா என்னதான் ஆடினாலும் அது எடுபடாது பாருங்க. குழுவா சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா நிகழ்ச்சியைக் கொண்டு போகணும். புகழைப் பங்குபோட்டுக்கத் தெரியணும். தனி மரம் தோப்பாகாது. நிகழ்ச்சிக்கு நம்ம பத்மா சுப்ரமணியம் வந்துருந்தாங்க.

இப்படியாக மகாராஜா ஸ்வாதித் திருநாளின் பிறந்த தினத்தையொட்டி நடந்த 'ஸ்வாதி ந்ருத்தோல்ஸவம் 'அழகா இனிமையா முடிஞ்சது. கலா ரசிகர்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சு அனைவரும் ஆர்வம் காட்டும் வகையில் இலவச நிகழ்ச்சியாக இதை அளித்த தாஸ்யம் நடனப் பள்ளி கோபிகா வர்மாவுக்குப் பதிவுலக சார்பில் நம் நன்றி.

37 comments:

said...

ஐ வடை எனக்கு தான் ;))

said...

திருமதி.ஒய்.ஜி.பி அந்த நாளைய எழுத்தாளராச்சே.நீங்க பார்த்ததும் கண்டு பிடிச்சீட்டிங்க.

அம்மா நாட்டியத்தைப் பார்க்கக் குழந்தை வரலியா;)
தாத்தா பார்த்துக் கொன்fடாரோ என்னவோ.

பள்ளிக்கூடத்தில் ஒரு குரல் கொடுத்தால் போதும். அத்தனை பசங்களும் கப்சிப் ஆகிடுவாங்க. அவ்வளவு கம்பீரமான குரல்.
ஊருக்கு வந்து இடைவிடாத வேலைகளுக்கும் நடுவில கலா சேவையும் செய்யும் துளசிக்கும்
நாம் இங்க நன்றி சொல்லணும்.

said...

\\"எது நடந்ததோ, அது நல்லாவே நடந்துச்சு."\\

ம்ம்...எது நாங்க படிச்சமோ அதை நன்றாகவே படிச்சிட்டோம் உங்க புண்ணியத்துல டீச்சர் ;)

coffe with anuல Miss YGP
http://www.tubetamil.com/view_video.php?viewkey=3251a195e057f06bd9e6

said...

விஐபிகளுடன் நிகழ்ச்சி பார்த்திங்களா ? வருணனை நல்லா இருக்கு !

said...

வளையல் எதுக்கு அம்மனுக்கு சாத்துறாங்க மேடம்?

said...

ஆஹா! தலைவர் பொண்ணா! ;-)

said...

ஆன்மீக சுற்றுலாவில் ஆரம்பிச்சு நடனத்துக்கு வந்தாச்சு. இனி அடுத்தது என்ன டீச்சர்?

அந்த வளையல்கள் எதுக்கு டீச்சர்?

said...

இவங்களுக்கு கலைமாமணி விருது...
கொடுத்தாங்க...

தெரிவு செய்த குழுவில் நீங்க இருந்தீர்களா...

:P

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

said...

அப்ப நடக்கப்போறதும் நல்லது தான்.. :)

வளையல் அடுத்த நாள் விசாரிச்சது அதனால் அடுத்த பதிவில் வரும் சரியா?

said...

//கலா ரசிகர்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சு அனைவரும் ஆர்வம் காட்டும் வகையில் இலவச நிகழ்ச்சியாக இதை அளித்த தாஸ்யம் நடனப் பள்ளி கோபிகா வர்மாவுக்குப் பதிவுலக சார்பில் நம் நன்றி.//

இந்நிகழ்ச்சியை அருமையா தொகுத்ததிற்காக உங்களுக்கு வலையுலகம் சார்பில் நன்றிகள் :)

said...

where was this programme conducted, In India or in New Zealand.

If it is in New Zealand, I really object the Indian or Tamil society/club over there.

Why the NRI people waste their hard earned money on bringing artists, cine stars from India. They should conduct dance, music programmes with NRI kids, NRI people who live there.

Still if you NRI socities, Clubs are want to bring people from India bring normal dancers who are really growing and looking for fame and name.

said...

Teacher, neenga innum chennaila dhan irukkeengala?
Neenga tour mudichu Newzealand poittadha illa nenaichen!

said...

வாங்க கோபி.

வடை சாப்புடக்கூடாதுன்னு கோவியார் சொன்னதைப் படிக்கலையா?

அச்சச்சோ:-)))))

said...

வாங்க வல்லி.

இப்பத்தான்ப்பா முதல்முதலில் அவுங்களை நேரில் பார்த்தேன். ஆனால் பார்த்ததும் அவுங்க யாருன்னு மனசுலே சட்னு தெரிஞ்சுருச்சுப்பா!

ஆனா அவுங்க பள்ளிக்கூடத்தைப் பத்தித் தெரிஞ்சு வச்சுக்கிட்டேன், உறவினர் பசங்க அங்கே படிச்சாங்க. இப்போ பேரனும்!

said...

சுட்டிக்கு நன்றி கோபி.

said...

வாங்க கோவியாரே.

அவுங்கதான் ஃபாரீன் வி ஐ பி யோட நடனம் பார்த்தாங்க:-))))

said...

நேரில் பார்த்த உணர்வைத் தந்தது எழுத்தும், படங்களும். மிக்க நன்றி.

said...

வாங்க கிறுக்கன்.

சீமந்தம், வளைக்காப்பு போன்ற விசேஷங்கள் நல்லபடியா நடக்கணுமுன்னும், பெண்கள் தங்கள் மகளுடைய திருமணம் தடங்கலில்லாம நடக்கறதுக்கும் வேண்டிக்கிட்டு இப்படி வளையல் மாலை சாத்துவாங்களாம்.

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

நம்புனாதானே சாமி.

said...

வாங்க கிரி.

உங்க தலைவர் மனைவியும் மருமகனும், மச்சானின் மனைவியும், மாமியாரும் கூட வந்துருந்தாங்க.

said...

வாங்க சிந்து.

கிறுக்கனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்கப்பா.

said...

வாங்க ஜோதிபாரதி.

கமிட்டியில் இருந்துருந்தா முதலில் எனக்கொன்னு 'வாங்கிக்கிட்டு' இருக்கமாட்டேனா?

said...

வாங்க செய்தி வளையம் குழுவினரே.

நன்றிங்க.

ஆமாம்.....

குழுவினர்

குழுவிநர்

எது சரி?

said...

வாங்க கயலு.
அதான் விசாரிக்காமலேயே எழுதியாச்சே, சாமிக்கு மாலையாப் போட்டுருந்தாங்கன்னு:-)

said...

வாங்க நான் ஆதவன்.

நன்றியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்:-)

said...

வாங்க குப்பன் யாஹூ.

பதிவுகளைப் படிக்கவே இல்லையா?

எல்லாம் இந்தியாவில், சிங்காரச்சென்னையில், அடையார் கோவிலில் நடந்த இலவச நிகழ்ச்சிதான்.

செலவு முழுசும் தாஸ்யம் பள்ளிக்கூடம் செஞ்சுருக்கு.

எங்க நாட்டிலே இப்படி யாரையும் அதிகமாக் கொண்டுவர்றதில்லை. அதிலும் எங்க ஊருலே சுத்தம். இருக்கும் அம்பதுபேர் இதெல்லாம் இல்லாமலேயே மகிழ்ச்சியா இருக்கோம். எதுன்னாலும் உள்ளூர் கலைஞர்கள்தான். அவுங்க எல்லாரும் நம்ம க்ளப் அங்கத்தினர்கள்:-)))

said...

வாங்க விஜி.

நியூஸி திரும்பிட்டேன். இப்போ மறுபடியும் ஒரு பயணம். ட்ரான்ஸிட்டில் இருக்கேன்.

said...

வாங்க இராதாகிருஷ்ணன்.

எல்லாம் நான் பெற்ற இன்பம், இந்தப் பதிவுலகமும் பெறட்டும் என்றுதான்:-)

நன்றிங்க.

Anonymous said...

வளையலுக்கான காரணம் அடுத்த பதிவுல வருமா

said...

ஃபாரீன் விஐபிக்கு முன் வரிசையில் இடம் தராத விழாக்குழுவினரை கண்டிக்கிறோம்.

ஏன் டீச்சர் முந்தின நாளே துண்டு போட்டு இடம் பிடிச்சிருக்கலாமில்லையா:-))).

அப்புறம் ஆடிப்பூரம்ங்கறது அம்மனோட வளைகாப்பு விஷேசம் சரிதானா?

said...

ஏம்ப்பா சின்ன அம்மிணி,

தொடர் இடுகைகளை முடிக்க விடமாட்டீங்களா?:-)))))

வளையலைப் பத்தி விசாரிச்சுட்டேன். கிறுக்கனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்க.

எல்லாம் நேர்த்திக் கடன்

said...

வாங்க ஐம்கூல்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த நாள்.

அம்மனுக்கு ஏது வளைக் காப்பு?

மனுசன் வளைக்காப்பை நல்லபடி நடத்தித்தர வளையல் காணிக்கை.

வளையல் மாலைகளில் உள்ள வளையல்களைக் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு நாலுநாலு தர்றாங்க(ளாம்)

said...

ஹூகும்!இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியாது.படங்கள் நன்றாக இருக்கு.

said...

மிக நன்றி அம்மினி (நிறைய) பெண் குழந்தைகள் எனக்கு ...அதுதான் கேட்டேன் கோவிச்சுகாதீங்க அம்மினி ....

said...

அதான் ஆயிட்டேன் நான் இப்படி...

said...

வாங்க குமார்.

எனக்கு எப்படியோ அந்தவாரம் முழுக்க நேரம் கிடைச்சது:-)))))

said...

வாங்க கிறுக்கன்.
நிறையன்னா....

குசேலருக்குத் தம்பியா?

பெண்குழந்தைகள்தான் உண்மையான ஐஸ்வர்யங்கள்.

நல்லா இருங்க.