Friday, August 28, 2009

தமிழ்மணம் சிருஷ்டிகர்த்தா அல்வா

தமிழ்மண நட்சத்திர அல்வான்னும் இதைச் சொல்லலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூசணிக்காய் : கால் கிலோ

சர்க்கரை: ஒரு கப்

நெய் : கால் கப்

முந்திரிப்பருப்பு: கால் கப்பு(பயந்துறாதீங்க பத்தோ பதினைஞ்சோதான் இருக்கும்)

ஏலக்காய்: நாலஞ்சு

குங்குமப்பூ: ஒரு கிள்ளு ( வெதுவெதுன்னு இருக்கும் ஒரு கால் டீஸ்பூன் பாலில் ஊறவச்சால் நலம்.ஆமாம்.... வேற வேலை இல்லைன்னா...வேணாம். அப்படியே சேர்த்தாக் குடியா முழுகிரும்?)


கலர்: இளமஞ்சளோ, இல்லை ஆரஞ்சு நிறமோ உங்கள் தேவைக்கு.


பூசணிக்காயோட கெட்டித்தோலையும், குடலையும்(??) வெட்டி எடுத்து வீசிடலாம். வெள்ளைப்பகுதியை அப்படியே காரட் துருவியில் சின்ன ஓட்டையா இருக்கும் பகுதியில் துருவி வச்சுக்குங்க.

ஒரு கனமான அடியுள்ள வாணலியில்(இப்படித்தான் எழுதணுமுன்னு சாஸ்த்திரம். வாணலி இல்லேன்னா? நல்ல நான் ஸ்டிக் ஃப்ரை பேன் இருந்தாலும் போதும்.)கொஞ்சம் நெய் ஊத்தி அடுப்பிலே வச்சு (இளந்தீயா இருக்கணும்) முந்திரிப்பருப்பை பொன்னிறமா வறுத்து எடுத்துக்குங்க.

அதே வாணலியில் துருவுன பூசணியைக் கொஞ்சம் லேசாப் பிழிஞ்சுட்டுப் போட்டு வதக்குங்க. பச்சைவாசனை போகணும்.அப்படியே சட்னு வெந்தும் போயிரும். இப்போ அதுலே சக்கரையைச் சேர்த்துக்கணும். ஒரு கப்ன்னு சொல்லி இருக்கு. ஆனால் விருப்பமுன்னா இன்னும் கொஞ்சம் ஒரு கால் கப் கூடச் சேர்த்துக்கிட்டா தப்பே இல்லே ( எனக்குக் கொஞ்சம் இனிப்புக் கூடுதலா இருந்தாத்தான் பிடிக்கும் ஹிஹி)

தண்ணிகிண்ணி சேர்க்காதீங்க. பூசணித் தண்ணியிலேயே சக்கரை இளகிரும். கைவிடாமல் கிளறணும். பார்த்து.... த்ளக் ப்ளக்குன்னு கொதிச்சு மேலே சிதறும். கவனமா இருங்க. சூடான பாகு மேலே விழுந்தால் தோல் எரியும்.

ஒருமாதிரி எல்லாம் சேர்ந்து இளகி கட்டியா வரும்போது குங்குமப்பூவைச் சேர்த்துக்கலாம். இந்த இளமஞ்சள் நிறமே போதும்னுன்னா அப்படியே விட்டுறலாம். கலர் (பார்க்க) ரொம்பவே பிடிக்குமுன்னு இருக்கும் மக்கள்ஸ், உணவுப்பொருளில் சேர்க்கன்னே கிடைக்கும் ஃபுட் கலரில் மூங்கில்குச்சி விட்டு, ரெண்டே ரெண்டு சொட்டு விடுங்க.(பேம்பூ ஸ்க்யூவர் கிடைக்குதுல்லே அதுலே ஒரு பாக்கெட் வாங்கி வச்சுக்குங்க. ஆயிரம் பயன் இருக்கு இதுக்கு. இட்லி வெந்துச்சான்னு பார்க்கறதுலே இருந்து, பலகாரம் பொரிக்க அடுப்பில் வச்ச எண்ணெய் போதுமான சூடு வந்துச்சான்னு சோதிக்கறவரைக்கும்)

கால் கப்பு நெய்யில் மீதி இருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கிளறிக்கிட்டே இருங்க. அல்வா அப்படியே பாத்திரத்தின் ஓரத்தை விட்டுச் சுருண்டு வரும்போது, வறுத்த முந்திரியையும், பொடிபண்ணி வச்சுருக்கும் ஏலக்காய்த்தூளையும் தூவி, ஒரு தட்டுலே எடுத்து வச்சுக் கத்தியால் சமமாப் பரத்தி விடுங்க. கொஞ்சம் ஆறுனதும் துண்டு போட்டுக்கலாம்.(தோளிலா????)



மேலே சொன்ன அளவுக்கு மொத்தமே, மொத்தையா ஒரு டென்னிஸ் பந்து அளவுக்குத்தான் வரும். இதுக்குப்போய் தட்டு, கத்தி இதெல்லாம் கட்டாயம் வேணுமா? (அப்புறம் அதையெல்லாம் கழுவும் நபருக்கு வேலை கூடிறாதா என்பவர்கள்) ஒரு கிண்ணத்தில் வழிச்சுப் போட்டு, ஸ்பூனால் பறிமாறலாம்.

பூசனிக்காய் வாங்கிவச்சு நாலைஞ்சுநாள் ஆச்சு. இன்னும் செஞ்சுபார்க்க நேரம் வரலை. அதனால் பதிவுக்கானப் படத்தைப் பதிவு போடச் சொன்னவரின் பதிவில் இருந்து சுட்டுட்டேன்.


அச்சச்சோ....... எவர்ஸில்வர் கிண்ணத்தை விட்டுட்டு எல்லாரும் இந்தப் பக்கம் கண்ணாடிக் கிண்ணத்துக்கு வாங்க. (இதுவும் சுட்டதுதான். படம் எடுத்தவருக்கு நன்றி)

இதுக்குத்தான் கவனமா இருக்கோணுங்கறது. ஏம்ப்பா கே ஆர் எஸ், ஒரு நல்ல படமாப் பார்த்துப் பதிவில் போட்டுருக்கலாமுல்லே?

36 comments:

said...

:)) தலைப்புக்கு இந்த ஸ்மைலி.

said...

மீ த பர்ஸ்டு

said...

தமிழ்மண நட்சத்திர அல்வான்னும் இதைச் சொல்லலாம்.


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//முந்திரிப்பருப்பு: கால் கப்பு(பயந்துறாதீங்க பத்தோ பதினைஞ்சோதான் இருக்கும்)//

மூன்றே மூன்று (படத்தில்) போட்டுவிட்டு இப்படி கால் கப்பு போடச் சொன்னால் அல்வாக் கிண்டறவங்க அளறி அடிச்சுட்டு ஓடிவிடுவாங்க.

அல்வா கிண்டுவது சரி, அதை சட்டியில் இருந்து அகற்றுவது எப்படி ?
:)

said...

ஸ்ருஷ்டிகர்த்தாவுக்கு நட்சத்திர அல்வா அவங்க கொடுத்தாங்க! சரி!

இந்த அல்வா இப்போ யாருக்கு? கொடுத்தவங்களுக்கா, இல்லே, ஏற்கெனெவே வாங்கி வச்சு ரிலே ரேஸ் நடத்துறாரே அவருக்கா?

ஒண்ணுமே புரியலையே, தேவுடா:-((

said...

வாங்க புதுகைத் தென்றல்.

காசின்னாவே தமிழ்மணம்தான். அதான்......

சுகமாத் தொண்டையில் நழுவிப் போயிருச்சா...... மூணு ஊட்ஸ் வந்துருக்கு:-))))

said...

வாங்க கோவியார்.

பதிவை முழுசாப் படிக்கும் வழக்கம் இன்னுமா வரலை?

அச்சச்சோ.......

சுட்ட படம், இது சுட்டபடம்.

அதெல்லாம் சட்டியில் இருந்து எடுக்க வராமலா, கிண்ணத்தில் வச்சுருக்கு(படத்தில்)....

said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி.

முதல்முறையா நம்மூட்டுக்கு (அல்வா சாப்பிட)வந்துருக்கீங்க.....

வணக்கம். நலமா?

ரிலே ரேஸ்காரர் ரிக்வெஸ்ட் பண்ணதால்தான் இந்தப் பதிவு.

அவரே வந்து விளம்பட்டும், யார்யாருக்குன்னு:-)

said...

சம்சாரம் அது மின்சாரப்பட விசு டயலாக் மாதிரி கைய்னு வழுக்கிகிட்டு தொண்டைல போய் விழுந்திடுச்சு.

(யார் தொண்டைலன்னு கேட்க கூடாது

:))))

said...

கலர்புல் அல்வா கலக்குகிறதே.

said...

சூப்பர் அல்வா டீச்சர்.இதை படிச்சுட்டு ஒரு விஷயத்தை நினைச்சு சிரிக்காம இருக்க முடியலை டீச்சர்.....என் சின்ன அண்ணி பூசணி அல்வா பண்றேனு சொல்லிட்டு அதையை பாயாசமா செஞ்சு முடிச்சாங்க..இப்பவும் எந்த ஒரு விஷேஷத்துக்கும் அண்ணியை இதை செய்ய சொல்லி கிண்டல் பண்ணாம விடறதில்லை.

said...

//
அது சரீ... வாழைப்பழம் எதுக்குன்னு சொல்லவே இல்லையே!

அல்வா digest ஆவதற்கா?

said...

எனது புதிய வலைத்தளமான thagavalmalar.blogspot.com வருக. உங்கள் வலைத்தளத்தையும் சோதித்துப் பார்த்துக் கொள்க.

said...

அல்வாவின் இலக்கணமே ஆறிப்போகாமச் சுடச்சுட இருக்கோணும்! அப்படிச் சுடச்சுட அல்வா கொடுத்த எங்கள் டீச்சர் வாழ்க வாழ்க! :)

//அதனால் பதிவுக்கானப் படத்தைப் பதிவு போடச் சொன்னவரின் பதிவில் இருந்து சுட்டுட்டேன்//

ஹிஹி! இது எனக்குத் தரப்பட்ட அல்வா-வா? :)

காசி அல்வா-கிட்ட ரொம்ப ஏமாற்றம் அளிப்பதே, அது கொஞ்சமாத் தான் வரும்! :)
பூசணிக்காய் பார்க்க பெரிதா இருந்தாலும், அல்வா-வா மாறும் போது, சாரம் மட்டுமே தங்கும்! அதான் இத்துணூன்டு! :)

said...

காசி அல்வாசாப்பிட்டவுடன் வாழைப்பழம்
சாப்பிடவேண்டுமா? தட்டில் எதற்கு அந்த
வாழை பழம்?

said...

புதுகைத் தென்றல்,

அதெல்லாம் கேக்கமாட்டேன்:-))))

said...

வாங்க மாதேவி.

நீங்க ஒருத்தர் தாங்க அல்வாவை 'மட்டும் ' பார்த்தீங்க!!!!

said...

வாங்க சிந்து.

அந்தப் பாயஸத்தை அப்படியே அடுப்பில் வச்சு நாலைஞ்சுநாள் கைவிடாமக் கிளறி இருந்தா அல்வா வந்துருக்குமோ:-))))

said...

வாங்க மெனெக்கெட்டு,

படத்தைச் சுடும்போது தவறிப்போய் 'வாலப்பழம்' வழுக்கித் தட்டில் வுழுந்துருச்சுன்னு சொன்னா......
வேலைமெனெக்கெட்டு அதை நம்பவா போறீங்க?

புதுப்படம் சேர்த்துருக்கு. இப்பப் பாருங்க. வாயப்பயத்தைக் காக்கா கொண்டுபோச்:-)

said...

வாங்க குடந்தை மணி.

இப்போதைக்கு எல்லாம் சரியாத்தான் இருக்கு.

வந்ததுக்கு ஒரு கரண்டி அல்வா எடுத்துக்குங்க:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

உம்மால் பயப்பின்னூட்டத்துக்குப் பயந்து புதுப்படம் தேடவேண்டியதாப் போச்சு!

said...

கே ஆர் எஸ்,

எதுக்குவே வாயப்பயத்தைத் தட்டுலே வச்சீர்??????

said...

வாங்க கோமதி அரசு.
எனக்கும் அதுதாங்க புதிர்! இருங்க, கே ஆர் எஸ் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

said...

காசி அல்வா
.தமிழ்மணம் அல்வா
பிறந்த நாள் அல்வா

இனிக்கிறது பார்க்கும்போதே. இனி ப்ளாகர்ஸ் மீட்டிங்குக்கு போண்டாவோடு
காசி
அல்வாவும் உண்டு:)

said...

/இனி ப்ளாகர்ஸ் மீட்டிங்குக்கு போண்டாவோடு
காசி
அல்வாவும் உண்டு:)//

அல்வாக் கிண்டி, அதைக் கஷ்டப்பட்டு அடுத்தவங்களுக்கும் கொடுக்கற கஷ்டமான வேலை வேண்டாம்னுதானே சேவை மாஜிக்னு, இடியாப்பம் அவிக்கிற அடுத்த ப்ராஜக்டை ஆரம்பிச்சு நடத்தறார்?!

பாருங்க, நட்சித்திர அல்வா, ஸ்ருஷ்டிகர்த்தா அல்வான்னு, இப்ப அவருக்கே திரும்பி வருது!!

said...

தமிழ்மணத்திற்கே அல்வா கொடுத்திட்டீங்களே டீச்சர் :)

said...

//
புதுப்படம் சேர்த்துருக்கு. இப்பப் பாருங்க. //

ஓ இது அல்வா தானா?

நான் முருங்கை மர 'கோந்து' ன்னு நெனச்சேன்!

said...

/// கெட்டித்தோலையும், குடலையும்(??) வெட்டி எடுத்து வீசிடலாம். //

எடுத்த எடுப்பிலே இந்த வரி கண்ணில் பட்டது . அரண்டு போய்விட்டேன்.

மீனாட்சி பாட்டி.

said...

அவ்வ்வ்வ்வ்!

சூப்பர் அல்வா!

said...

வாங்க வல்லி.

அதுக்கென்ன ஜமாய்ச்சுப்புடலாம்.

கொஞ்சம் நிறையவே செஞ்சு எடுத்துக்கிட்டு வாங்க. எனக்கு இனிப்புப் பிடிக்கும்:-)

said...

ஆமாங்க கிருஷ்ணமூர்த்தி. நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.

அந்த சேவை மேஜிக் ஒன்னு வாங்கிக்கிட்டுப் போகணும்.

said...

வாங்க நான் ஆதவன்.

இது கே ஆர் எஸ் கொடுத்த அல்வாங்க.

பெருமை அவருக்குத்தான் போய்ச் சேரணும்:-))))

said...

என்னங்க மெனெக்கெட்டு.....

இதுவும் 'சுட்ட' அல்வாதான்.

படத்துக்குச் சொந்தக்காரர்
கோச்சுக்கப்போறார்!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

இந்தவரிகளை நமக்குச் சமையல் சொல்லித்தந்த உலகப்பிரசித்தியான அம்மா ( உங்க பேர்தான் அவுங்களுக்கும்) அவுங்க புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளதுதான்.

ஆரம்பகாலத்தில் நானும் 'ஆடி'ப் போயிருக்கேன்:-)

said...

வாங்க கவிஞரே,

வாயில் ஒட்டாம வழுக்கிரும். தின்னுட்டுத் தைரியமா வாயைத் திறந்து நீங்க கவிதை 'பாடலாம்':-))))

said...

காசி அல்வா, நல்லா இருக்கு, முந்திரி அதிகம் வேண்டாம் என்றால் வறுத்த வெள்ளரி விதைகளை ஸேர்க்கலாம். நன்றி.