Tuesday, September 22, 2009

நகர்வலத்தில் கொலு வாரம். விஸிட் 1

அந்தந்தக் காலத்துலே கிடைக்கிறதை விட்டுட்டு...அப்புறம் நியூஸி போனபிறகு ஹோம்சிக் ஹோமாத சிக்குன்னு சொல்லிப் பீலா விடவேணாமுன்னு ......

முதல்லே செஞ்சது, 'டைம்ஸ் ஆஃப் இண்டியாவை நிறுத்து. ஹிந்து வாங்கு'. அதுலேதான் விலாவரியா எங்கெங்கே என்னென்ன, முக்கியமா ஓசிகள் என்னன்னு வந்துக்கிட்டு இருக்கு. டைம்ஸ்லேயும் வருதாம்.ஆனா....'பழைய நாய்க்குப் புது வித்தை படிப்பிப்பது ......ரொம்பக் கஷ்டம்'.


'எங்கூட்டுலே கொலு. வந்து பார்த்துட்டுப்போங்க'ன்னு இருக்குப்பா. நம்ம ஆளு சும்மா இருக்காம,'பத்திரிக்கையிலே போடுறாங்கன்னா பிரமாதமா இருக்கும். போலாம். என்ன எங்கேன்னு விவரம் கேளு'ன்னார்.

புருஷன் பேச்சைத் தட்டுன பாவம் நமக்கெதுக்கு? 'கண்டிப்பா வாங்க. அஞ்சு(ம்) வரை இருப்போம். கோவிலிலும் நாங்களேக் கொலு வச்சுருப்பதால் அஞ்சுப்பிறகு அங்கே போயிருவோமுன்னு சொல்லி வழியும் சொல்லி, சரியான விலாசத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்புறேன்'னு , அடுத்த நிமிசமே அனுப்பியும் வச்சார். நான் பெற்ற இன்பம் வகையில் 'போட்டோ எடுக்கலாமா?' ன்னு கேட்டுவச்சேன். இல்லீங்க. நீங்க வந்து 'அட்மையர்' பண்ணுங்கன்னார் டாக்டர் அமர்நாத்.

இப்படியெல்லாம் சொல்லி அழைச்சா..... நமக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? கிளம்பிப்போனா.... அந்த ஏரியாவில் மழை பேய்ஞ்சுருக்கு. நல்லவங்க இருக்காங்க போல இருக்கே.... (சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்)

கொலு? நிம்மதி ! நாலுமணி கூட ஆகலை. மூணே முக்கால். ஆனா வீடு பூட்டி இருக்கு. கீழ்வீட்டு மாமி சொன்னாங்க,'கோயிலுக்குப் போயிட்டார்'

நாமும் இங்கே முடிச்சுட்டுக் கோவிலுக்குப்போறத் திட்டம்தான். கோவிலில் அஷ்டதிக்கு கொலு இருக்காமே. அதுவும் நவராத்ரி என்பதால் கோவிலைப் பகலில் மூடுவதில்லையாம். சலோ சலோ..... மாடவீதியில் ஊர்ந்து, மயிலையாம் கயிலை, கயிலையாம் மயிலைன்னுக் கபாலியை அடைந்தோம். ராஜகோபுரத்தில் குளம், எனக்கோக் கால் வைக்க பயம். அடுத்த வாசல் வழியா நுழைஞ்சாச்சு.
பெரிய மண்டபத்தில் அட்டகாசமா அஷ்ட திக்கும் பார்க்கும் அலங்காரக்கொலு. கோவில்களுக்கானத் தங்க வெள்ளிக் கவசங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஏற்பாடு செஞ்சுருக்கு. நாங்கள் வந்துருக்கும் விவரம் தெரிஞ்சு சில பூனையார்களும் கொலுவுக்குள்ளே போய்ச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பரிபூரணம். எல்லாப் பொம்மைகளும் பிடிச்சதுன்னாலும் கீதை உபதேசத்தின்போது அர்ஜுனனுக்குக் காமிச்ச விச்வரூபக் காட்சிக் கொள்ளை அழகு. கார்த்திகைப் பெண்கள், முப்பெரும்தேவியர், இடும்பன், பொய்க்கால் குதிரையுடன் ஸ்வாமி ஊர்வலம், பூரணகும்பம் ஏந்திய பாவையர் அடடா.......

அடுத்து இருக்கும் சின்ன மண்டபத்தில் பதினெட்டு சித்தர்கள் இமாலயத்தைச் சுற்றி. இந்தப்பக்கம் கர்ப்பக்கிரகத்துக்கு முன் இன்னொரு கொலு அலங்காரம்( படம் எடுக்கலை. அடக்கி வாசிச்சேன்) ஆனா அங்கே இருந்த இளமங்கையர் குழுவைப் பேட்டிக் கண்டாச்சு. எதிராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள். ப்ரீத்தி அண்ட் கோ:-)

( கோபால்தான்..... வீடியோ கேமெராவோட இருக்காங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கோன்னார். எனக்கு எழுத ஐடியாக் கொடுக்கறாராம்ப்பா!!!!)
மண்டபத்துக்குப் பக்கத்துலேயே கோவில் நந்தவனம். நட்சத்திர மரங்களை வச்சு வளர்க்கறாங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்ன மரம்? மேலே படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:-) தோட்டத்தில் கோவில்மியாவ்ஸ் ஜாலியாச் சுத்திக்கிட்டு இருக்குதுங்க.
>மக்கள் வெள்ளத்தில் நீந்தி, எதிர்நீச்சல் போடத் தெம்புக்காகப் பெட்ரோல் ஊத்திக்கச் சரவணபவனில் நுழைஞ்சோம். நமக்கு எதிர்ப்பக்கம் வந்து உக்கார்ந்த ராமமூர்த்தி ஐயர், 'அறுபதோ, எழுவதோ இல்லை எம்பதோ எல்லாக் கல்யாணங்களையும் பண்ணிவைக்கிறேன். சார்ஜ் கொஞ்சம் கூடுதலா இருக்கும். ஆனால் மந்திரங்கள் எல்லாம் சுத்தமாச் சொல்லிவைச்சுச் செஞ்சுதரேன்'னு உறுதியாச் சொல்லி இருக்கார். யாருக்காவதுத் தேவைன்னா சொல்லுங்க. நமக்கும் ஏஜன்ஸி எடுத்தமாதிரி ஆச்சு. தினந்தினம் தட்டுலே மட்டும் ஆயிரம் வரை விழுதாம் ஒவ்வொரு சந்நிதியிலும்! நெசமாவா?

36 comments:

said...

மயிலைக்கு இன்னைக்கே போயிட வேண்டியதுதான்....

said...

Arumaiyana coverage.

//....அஷ்டதிக்கு கொலு....//

Good concept. Ariya thanthamaiku nandri.

said...

ரொம்பக் கூட்டமாப்பா.

படங்கள் எப்பவும் போல நல்லா இருக்கு. கவரேஜ்னா இப்படி இல்ல இருக்கணும். எட்டு திக்கு பார்த்துக் கொலுவைக்க எத்தனை திட்டம் போட்டாங்களோ. அநேகமா எல்லா சாமியையும் கண்டுக்கிட்ட மாதிரிதான் தெரிகிறது.

said...

எங்க காலத்துல “பொட்டு” மூக்குக்கு மேலே வைப்பாங்க இப்ப புருவத்துக்கு கீழே வந்திடுச்சி,சில பாப்பாக்கள் மறந்திட்டாங்க போல் இருக்கு இல்லை வேர்வை துடைக்கச்சே போயிடுச்சோ என்னவோ?பொட்டு வைக்காத குரூப்பா இருக்குமோ என்னவோ!!
:-)
பிரீத்தி & கோ வளர வாழ்த்துக்கள்.

said...

டீச்சர்,

மயிலை சே! மயிலையை நல்லா கவேஜ் செஞ்சு இருக்கீங்க.

வந்தது வரட்டும்னு இதையும் சொல்லிக்கறேன்,

கேமராவும் கையுமா இருக்கறத பாத்தா எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாதிரி இருக்கு. ரைட்டா? :))

(அது என்ன வசந்த் அன் கோ மாதிரி, ஒழுங்கா இடமிருந்து வலம்னு தெளிவா ஒவ்வொருத்தரா பெயர் சொல்லி இருக்கலாம் இல்ல!) :)

said...

டீச்சர் கொலு பொம்மையை வரிசையா பார்த்துட்டே வந்ததுல ப்ரீத்தி அண்ட் கோவையும் பொம்மையா நினைச்சுட்டேன் :)

said...

வீட்டுக் கொலுவையும் முடிஞ்சா பாத்து சொல்லுங்க (படம் போடுங்க) அக்கா. நாங்களும் இந்த மாதிரி கொலுவெல்லாம் பாக்கணும்ல. :-)

said...

இருக்குறதிலேயே காமிராவும் கையுமா இருக்குற கார்த்திகைப் பெண்கள் படம் தான் அழகா அம்சமா இருக்குன்னு இரவிசங்கர் சொல்லச் சொன்னாரு அக்கா.

said...

ஆஹா நானும் பார்த்தேனே

என்னைக்கு போனீங்க, நாங்க போனது ஞாயிற்றுக்கிழமை.

ஆளாளுக்கு கேமராவும் கையுமாய் அலைவதைப் பார்த்து, அமித்து என்னிடம், எச்சோ, போட்டோ எக்கல :)))))))))))

said...

nice post, many thanks for sharing.

said...

நாதஸ்வரமும் ஆட்டமுமா ஊர்வலம் வேற நல்லா இருக்கு பொம்மைகள்..விர்ச்சுவல் கொலு எங்களுக்கு.. :)

said...

இம்ம் கொலு நல்லா இருக்கு, தினமும் ஆயிரம் தட்டுல விழுதா(அவருக்கு உதவியாள் வேனுமா). நல்ல தகவல்கள். நன்றி

said...

வாங்க அமுதா.

கட்டாயம் போகணும் & பார்க்கணும்.

said...

வாங்க நன்மனம்.

திசை எட்டும் சென்று......:-)))))

said...

வாங்க வல்லி.

சரியா நாலுமணிக்கு அங்கே இருந்தோம். அதுவும் முதல் நாள், முதல் ஷோ:-)))))

அவ்வளவாக் கூட்டம் இல்லை!!!!!!

said...

வாங்க குமார்.

சாந்துப்பொட்டு, சந்தனப்பொட்டு காலமெல்லாம் போய், ஸ்டிக்கர் பொட்டு காலம் இப்போ. அதுவுமே ஆறாப் பெருகும் வேர்வையில் காணாமப்போயிருது(-:

said...

வாங்க அம்பி.

கொஞ்சம் திரும்பிப் பாருங்க. .....

அட! எவர்சில்வர் குழவிக் கட்டை நல்லா இருக்கே!!!!! எப்ப வாங்கித்தந்தீங்க உங்க தங்ஸ்க்கு?

said...

வாங்க நான் ஆதவன்.

பெண்களுக்கான பண்டிகையில் தேவிகள் கலந்து, ஒரு கலக்கு கலக்குனாங்க!!!!

இளமை = அழகு:-)

said...

வாங்க குமரன்.

'பதிவர்' என்ற சொல் விட்டுப்போச்சோ?

ப்ரீத்தி & கோ தயவால் வராதவங்கெல்லாம் வந்துருக்கீங்களே (கொலு பார்க்க):-))))))

said...

குமரன்,

ரவிசங்கர்தான் சொல்லச் சொன்னாரான்னு கோபால் கேக்கறார்:-)))))

said...

வாங்க அமித்து அம்மா.

அச்சச்சோ....... எச்சோ....ஸோ க்யூட்!!!!

நம்மூட்டுக்குக் கொலுவுக்கு(ம்) வாங்கப்பா.

said...

வாங்க ராம்ஜி யாஹூ.

எல்லாம் 'நான் பெற்ற இன்பம்':-))))

said...

வாங்க கயலு.

க்ளிக்கித் தள்ளுனது ஏராளம். பிகாஸாவில் போடணும் ஒருநாள்.

கிராமம் ஆச்சா?

said...

வாங்க பித்தன்.

உதவியாளுக்கு நான் அப்ளிகேஷன் போட்டாச்சு. எனக்கு உதவியா வேணுமுன்னா நீங்க வரலாம்:-)

said...

நாங்களும் இன்னிக்கி அஷ்டதிக் கொலு பாக்கப் போறோம்.

அப்படியே நம்ம வீட்டுக் கொலுவையும் வந்து பார்க்கிறது.


- சிமுலேஷன்

said...

அஷ்டதிக்கு கொலு அ(ஷ்)ட்டகாசம். நல்லா கவரேஜ் பண்ணியிருக்கீங்க.

//'அறுபதோ, எழுவதோ இல்லை எம்பதோ எல்லாக் கல்யாணங்களையும் பண்ணிவைக்கிறேன். சார்ஜ் கொஞ்சம் கூடுதலா இருக்கும். ஆனால் மந்திரங்கள் எல்லாம் சுத்தமாச் சொல்லிவைச்சுச் செஞ்சுதரேன்'னு உறுதியாச் சொல்லி இருக்கார். யாருக்காவதுத் தேவைன்னா சொல்லுங்க//

முதல் போணியை நீங்களே பண்ணலாமே அக்கா :))))

said...

கொலு அருமை.

அதுவும் மயிலை கொலுவும் சரி திரு கோபால் கொலுவும் சரி.. ரசிக்கதக்கதாக இருந்தது.

said...

யக்கோவ்!!
விஸ்வரூப தரிசனம் அட்டகாசம்.வரச்சே எனக்கும் ஒண்ணூ...:) ம்ம்!! என்ன.. நல்லபடி பாக் பண்ணனும் தலை 3 துண்டா போகாம:))
கொலு பொம்மைகள் எத்தனை அழகு இல்லை!!. மருந்தீஸ்வரர் கோவிலும் போயிட்டு வாங்க . ஆமாம் ஏன் என் அபிமானநாயகி இன்னும் வரலை? பெசன்ட் நகரிலேயே பக்கத்திலேயெ தானே இருக்காங்க தாயார் அம்மா. அவங்களோட ( எட்டு அம்மாக்கள்) கொலு வும் போடுங்களேன்.

said...

வாங்க சிமுலேஷன்.

வந்தால் ஆச்சு. அந்தப் பக்கம் வர்றதா இருந்தால் கட்டாயம் வருகிறேன்.

அழைப்புக்கு நன்றி.

said...

வாங்க ஐம்கூல்.

கரெக்டா நம்மை எப்படிக் கண்டுபிடிச்சார்ன்னு தெரியலைப்பா!

எம்பதுலே சேர்த்துருப்பாரோன்னு நினைக்கிறேன்:-)))))

போணி பண்ண இன்னும் ஒருசில வருசங்கள் ஆகும்(-:

said...

வாங்க ஸ்வாமி.

உடனே வருகை தந்ததுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

இனி...கோலம் போடவும், பதிவு எழுதவும் சொல்லிக் கொடுக்கணும் கோபாலுக்கு:-)

said...

வாங்க ஜெயஸ்ரீ.

பாக்கிங்தான் நினைச்சாலே.....கலக்குது(-:

அங்கே 11 பேர் 'மூக்கைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு' அருள் பாலிக்கிறார்கள்.

பார்த்துட்டு நொந்து நூடுல்ஸா ஆகிட்டேன். அதான் ஒன்னுமே எழுதலை(-:

said...

??? புரியல்ல. மூக்கை பிடித்திக்கொண்டு ?? கூவம்?? இதுவரை கிடைத்தது எனக்கும் இந்தப ப்லொக் சுத்தி பாக்கற ஆப்பர்சூனிடி.இனிமே டைம் கிடைக்கும் போது அப்பப்போ வருவேன் துளசி. so long. take care.

said...

அக்கா, தொடர்ச்சியா படிச்சுக்கிட்டு வந்துகிட்டிருக்கேன் ஒவ்வொரு பதிவா. பின்னூட்டம் போடாதவங்க எல்லாம் போடறீங்க கொலு பாத்துட்டுன்னு வேணா சொல்லுங்க. :-) அதுவும் இரவிசங்கர் சொன்னதுனால தான். அவர் என் கிட்ட சொல்லிட்டு இன்னும் பின்னூட்டம் போடலை பாருங்க. :-)

said...

//இருக்குறதிலேயே காமிராவும் கையுமா இருக்குற கார்த்திகைப் பெண்கள் படம் தான் அழகா அம்சமா இருக்குன்னு இரவிசங்கர் சொல்லச் சொன்னாரு அக்கா//

ஹிஹி!
உண்மை தான்! காமிராவும் கையுமா ஆறு பேர் தானே இருக்காக! அப்போ ஆறு கார்த்திகைப் பெண்கள் தானே! :)

ஆனா அதுக்காக உண்மையை அப்படியே றீச்சர் பதிவில சொல்லணுமா குமரன்? :)

(அதுக்கும் மேல இருக்குற ஃபோட்டோல நிஜ கார்த்திகைப் பெண்கள் செட் எல்லாம் ஒன்னும் சொல்லிக்கிறா மாதிரி இல்ல! :) எது ஒன்னும் இயற்கையா இருக்கணும்! சரி தானே டீச்சர்? :)

said...

//அதுவும் இரவிசங்கர் சொன்னதுனால தான். அவர் என் கிட்ட சொல்லிட்டு இன்னும் பின்னூட்டம் போடலை பாருங்க. :-)//

நாங்க எல்லாம் கோபால் சார் வச்ச கொலுவுக்குத் தான் பின்னூட்டம் போடுவோம்! எனம் எனத்தோட தான் சேரும்! :)