Thursday, December 03, 2009

நாய் கடிச்சுருச்சுப்பா...........

அநேகமா இதுதான் நான் எழுதுன சின்ன இடுகையா இருக்கணும்!

நேத்து ஒரு வேலையா தி.நகர் போயிட்டு திரும்பிவந்துக்கிட்டு இருந்தோம். மழை நசநசன்னு பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு. வெங்கடநாராயணா ரோடில் வரும்போது..... அப்படியே திருப்பதி தேவஸ்தானக் கோயிலுக்குப் போயிட்டுப் போகலாமுன்னு கோபால் சொன்னார். 'அதெல்லாம் வேணாம். நாமோ இந்தப் பக்கம் அண்ணாசாலை நோக்கிப் போறோம். எதிர்ப்பக்கமாத்தான் நிறுத்தணும். சாலையைக் கடக்கணும். அழுக்கு வேற...... வேணாம் வேணாமு'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.

'இதுக்கெல்லாம் பயப்பட்டால் ஆகுமா? எப்படி சென்னையில் வாழப்போறே? நான் கூட்டிக்கிட்டுப்போறேன்'னு சொல்லிக்கிட்டே வர்றார். சனி நாக்கில் சப்பளம்/சம்மணம் போட்டு உக்கார்ந்துருக்குன்னு ...... நம்ம கண்ணுக்குத் தெரியலை(-:

கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு சின்னச்சந்துலே( தெருவாம்!) வண்டியைக் கொண்டுபோய் நிறுத்துனார் ட்ரைவர். நமக்கு முன்னாலே இன்னொரு வண்டி நிக்குது. ட்ரைவருக்குப் பின்பக்க இருக்கையில் இருந்து கோபால் இறங்குறார். நான் இந்தப் பக்கம் யாராவது பின்னால் வர்றாங்களான்னு பார்க்கிறேன். இந்த ஊருக்கு வந்ததுமுதல் யார் எந்தப் பக்கம் வந்து ஓவர்டேக் செய்யறாங்கன்ற விவரமே புரிபடாமல் இருக்கு. அதனால் இறங்குமுன்னே நல்லாப் பார்த்துட்டுத்தான் இறங்குறது வழக்கம். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் இல்லை. கதவில் கைவச்சு ஒரு அரை அடி திறக்கிறேன். கண் சிமிட்டும் நேரத்தில் தடால்'னு ஒரு ரெண்டு சக்கரம் வளைவில் பாய்ஞ்சுவந்து கதவை இடிச்சு அந்த ஆள் பைக்லே இருந்து விழுந்துட்டார்.

அர்ச்சனை ஆரம்பமாயிருச்சு. ஒரு நொடி என்ன நடந்ததுன்னே எனக்குப் புரியலை! அதுக்குள்ளே ட்ரைவர் இறங்கி வந்து சின்னதா ஒரு கூட்டம் கூடி..... நான் இன்னும் இறங்கவேயில்லை. வண்டிக்குள்ளேதான் இருக்கேன்.

இன்னொரு நாள், ஒரு மேம்பாலத்துலே இருந்து இறங்கி வலது பக்கம் தெருவில் போக ரைட் சிக்னல் கொடுத்துக்கிட்டே மூணு நிமிஷமா நம்ம வண்டி நிக்குது. எதிரே வரும் ட்ராஃபிக் ஓயட்டுமுன்னு காத்திருக்கோம்.
எதிரே க்ளியர் ஆனதும் நம்ம வண்டி ரைட்டுலே திரும்புது, அதே சமயம் மேம்பாலத்துலே இருந்து ஒரு பைக் வேகமா வந்து நம்மை ஓவர்டேக் பண்ணுது. நேராப் போற வண்டி அது. ரைட் சிக்னல் கொடுத்து நிக்கும் வண்டிக்கு ரைட்லேயே வந்து ஓவர்டேக் பண்ணால் எப்படி? அந்த வண்டி விழுந்து, அதுலே இருந்தவர் பயங்கர அர்ச்சனைகளோடு நம்ம வண்டியை நோக்கி ஓடி வர்றார். இவ்வளவு மோசமா மனுசர்களால் பேசமுடியுமான்னு நான் விக்கிச்சுப்போய் இருக்கேன்.

திட்டிக்கிட்டே அவர் தன் ஹெல்மெட்டைக் கழட்டுனதும் ........... ச்சீன்னு ஆயிருச்சு. நெற்றி நிறைய திருமண். ரொம்ப வயசான பெரியவர். ஆனால் தோற்றத்துக்கு நேர் எதிரா, புழுத்துப்போன வாய்.

வெங்கடேஷை (ட்ரைவரை)ப் பார்க்கவே ரொம்ப சங்கடமாப் போச்சு. 'நீங்கெல்லாம் இருக்கீங்கன்னு சும்மா இருக்கேன் மேடம். இல்லேன்னா இறங்கிப்போய்.... '

"ஐய்யய்யோ..... அப்படியெல்லாம் செஞ்சுறாதீங்க. அவர் தப்பு செஞ்சுட்டு நம்ம மேல் பாயறார்"


வளைவில் வரும்போது வேகத்தைக் குறைச்சு வரணுமுன்னு இங்கே சென்னையில் விதி இருக்கா? இல்லை இல்லையா? ஏன் இப்படித் தாறுமாறா எல்லா சைடுலே இருந்தும் வண்டிக்கு முன்னே பாய்ஞ்சு வர்றாங்க? லைசன்ஸ்க்கான தேர்வு இவுங்களுக்கு உண்டா? விதிமுறைகள் இவுங்களுக்கு மட்டும் வெவ்வேறா? தப்பு செஞ்சுட்டோமேன்னு கொஞ்சம்கூட உணராமல் அடுத்தவன் மேல் பாய்வது என்ன மாதிரியான உணர்வு? தற்காப்புக்காகவா?

அதெப்படி, சட்னு ஆபாசமாப் பேச இவுங்களாலே முடியுது! அருவருப்பா இருக்குன்னு புலம்பிக்கிட்டே வர்றேன்.

"இவனுங்கெல்லாம் இப்படித்தான் மேடம். நாய் கடிச்சுருச்சுன்னு போய்க்கிட்டே இருக்கணும்"

75 comments:

said...

என்ன செய்யறது, சில பேர் மனசும் நீங்க சொன்ன தெரு மாதிரிதான் - குறுகலாய்...

said...

நான் பயந்துபோய் கட்டாயம் "வாக்ஷின்" போட்டுக்கோங்கனு சொல்ல வந்தேன்.

When I plan to visit India, the traffic is the scariest thing. Almost all cars have a dent or scratch in the front or somewhere. They dont know why we have lanes in the roads.

***நெற்றி நிறைய திருமண். ரொம்ப வயசான பெரியவர். ஆனால் தோற்றத்துக்கு நேர் எதிரா, புழுத்துப் போன வாய்***

இன்றைக்கு நிலைமையில், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! என்பதெல்லாம் சும்மா ஏட்டு சுரைக்காய்தான், டீச்சர்!

என்னைக்கேட்டால் காதிலே கந்தக அமிலம்தான் பாயுது நம்ம சிங்காரச் சென்னை என்கிற போதினிலே!

இவர்கள் "நல்ல தமிழ்" பேசினாலே கேக்கமுடியாது...

Anonymous said...

//ச்சீன்னு ஆயிருச்சு. //

பல சமயம் இப்படித்தான் ஆகிடுது. நிஜமாவே நாய் கடிச்சிருச்சுன்னு பேசாம போகவேண்டியதுதான்.

said...

சகோதரி ....

சென்னையின் பிரபல கோயிலின் உள்ளே இரு சன்னிதியின் அர்ச்சகர்கள் தங்கள் சில்லறையை பிரிக்கும் பொழுது சண்டை ஏற்பட்டு பேசினார்கள். பாருங்கள்... அது கோவில் முழுவதும் எதிரொலித்து ஆனந்தமாக இருந்தது.

கோவிலின் உள்ளேயே இப்படி என்றால் தெருவில் நீங்கள் திருமண் போட்டிருப்பவரிடம் எதிர்பார்ப்பது மிகவும் அதிகம் :)

உங்கள் ட்ரைவருக்கு சில வார்த்தைகள் :
இவர்களை நாயுடன் ஒப்பிட்டு அதனை அசிங்கப்படுத்தாதீர்கள். நாய் என்றும் இப்படி பேசியதில்லை.

said...

நிறைய நேரங்களில் இம்மாதிரி குரைக்கும் நாய்களை எதிர்த்து நின்றால் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடும்.

said...

சென்னை வந்துட்டீங்களா என்ன? நான் ஆஸ்திரேலியா வரலாம்னு பாத்தா (ஹி ஹி... அது எங்கெங்க..)

said...

;) நல்ல வேளை நாய்தான் கடிச்சிருச்சோன்னு பயந்துட்டேன்..

முந்தாநாள் எங்களுக்கு ஒருத்தர் லிஃப்ட் கொடுத்தார்.. வழி தெரியல ஒரு இடத்துல நான் சொன்னேன் .சொல்லிட்டு அதோட இல்லாம இந்த இடத்துல கொஞ்சம் பாத்து போகனும்ன்னு சொன்னேன் அவர் ..ஓ சரி ந்னு கிண்டலா சொன்னார். .. ஐயா நீங்க ந்ல்லா ஓட்டுனாலும் அடுத்த ஆளை நீங்க கணிக்கமுடியாது அதனால் ந்னு சொன்னதும் பிறகு புதுப்பாலவளைவில் மெதுவாப் போனார்.. தில்லி பாலங்கள் பத்தி தான் தெரியுமே.. சின்ன வளைவு அதுல வந்து சேரும் இன்னோரு வளைவுன்னு திகிலா இல்ல இருக்கு..

said...

//அநேகமா இதுதான் நான் எழுதுன சின்ன இடுகையா இருக்கணும்!//

Chinnatha irunthalum, rombavey kaarama irunthuthu.

:-(

said...

அடடா! நீங்க 1 மாசம் நம்ம வீட்டுல மாயவரம் வந்து தங்கி மாயவரத்தை ரசிச்சு பாருங்க. மெக்ஸிகோ மாதிரி இருக்கும். (மெக்ஸிகோ அத்தனை மோசம்ன்னு என் பிரண்ட் சொன்னான்) நம்ம விட்டுல இருந்து சீமாச்சு அண்ணா வீட்டுக்கு போகனும்னா 3 சண்டை கன்பர்ம்டு.இத்தனைக்கும் 2 பேர் வீட்டுக்கு நடுவே காவிரியும் சுடுகாடும் தான் இருக்கு:-))

said...

//கவிநயா said...

என்ன செய்யறது, சில பேர் மனசும் நீங்க சொன்ன தெரு மாதிரிதான் - குறுகலாய்...//

அதே!

வன்மம் நிறைந்த வார்த்தைகளை வீசி திருப்தி கொள்பவர்களை விட விலங்குகள் எவ்வளவோ பெஸ்ட்!

said...

// அபி அப்பா said...

அடடா! நீங்க 1 மாசம் நம்ம வீட்டுல மாயவரம் வந்து தங்கி மாயவரத்தை ரசிச்சு பாருங்க. மெக்ஸிகோ மாதிரி இருக்கும். (மெக்ஸிகோ அத்தனை மோசம்ன்னு என் பிரண்ட் சொன்னான்) நம்ம விட்டுல இருந்து சீமாச்சு அண்ணா வீட்டுக்கு போகனும்னா 3 சண்டை கன்பர்ம்டு.இத்தனைக்கும் 2 பேர் வீட்டுக்கு நடுவே காவிரியும் சுடுகாடும் தான் இருக்கு:-))//


நான் ஊர்ல இல்லன்னா இப்பிடித்தான் கண்டிக்க ஆளில்லாம போய்டுது :)))

said...

அன்பு துளசி,
நீங்கள் இறங்கும் முன் ,வெங்கடெஷைக் கதவைப் பிடித்துக் கொள்ளச் சொல்லணும்.
எங்க வீட்டுக்கு முன்னாடி இவர் வண்டியை நிறுத்தினாலும் நான் இறங்க மாட்டேன்.
உள்ள போய்த்தான் இறங்குவேன்.
ஏனெனில் இந்த இரண்டு சக்கரம்,மூணு சக்கரம்,பத்துச் சக்கரங்களுக்கெல்லாம் சாலை சொந்தமாயிடுச்சு.
எப்படி வேணாலும் வருவார்கள். கேட்க ஆளில்லை.
இதே நீங்க இறங்கும் போது அவர் வந்திருந்தால், நினைக்கவே பயமா இருக்கு.
தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். சுதாரித்துக் கொள்ளுங்கள்.

said...

என்னையும் பலமுறை சென்னையில் நாய் கடிச்சிருக்கு. அதனாலேயே எனக்கு கொஞ்சம் இல்ல கூடவே வெறுப்பும். :(((

said...

தலைப்பு கொஞ்சம் டெரரா தான் இருக்கு டீச்சர். ஆனா கடைசியில சம்பவத்தை தலைப்போட கோர்த்துட்டீங்க :)

சாலை விதிமுறைகள் பின்பற்றி யார் வண்டி ஓட்டுறா? முதல்ல சாலை விதிமுறைகள் லைசைன்ஸ் எடுக்கும் போது கத்து தருவதே இல்லை.

இதுல எல்லாருக்கும் ஒவ்வொரு அவசரம் வேற. என்னத்த சொல்றது. சென்னையில தான் இனின்னு முடிவு பண்ணிட்டீங்க போல! ஆல் தி பெஸ்ட் டீச்சர் :)

said...

சென்னை சாலை/போக்குவரத்து விதிகள்....இதைப்பற்றி வாழ்நாள் முழுவதும் தொடர் நாவலே எழுதலாம்.
சென்னை இப்படி இருக்க காரணம்? இடியாப்ப சிக்கல் போல் எல்லா துறையும் ஒன்றோடு ஒன்று இணைந்து கிடக்கு.

said...

நான் எங்கேயாவது நிஜமாவே நாய் தான் கடிச்சுடுத்தோனு பயந்து போனேன். அதுவும் நம்ப ஊர்ல பாத்துக்கணும் துளசி.. வசவு எல்லா ஊரிலேயும் different language ஏ தவிர அர்த்தம் ஒண்ணுதான்!! இந்த மாதிரி நிதானம் இல்லாம பேசறவாளையாவது ignore பண்ணிட்டு போகலாம் துளசி. நெஜமாவே தெருநாய் கடிச்சா rabies வந்துடுமோனு பயந்து பயந்து சாகணும். நீங்க வேற!! எப்போ நம்ப ஊர்ல ரோட் இருந்தது!குழின்னா இருக்கு!! சாலை விதிமுறை இருந்தது??!! சிக்னல் இருந்தும் தாறுமாறா traffic தான்; toilets இருந்தாலும் open toilet தான்:(( நாம வெளிய கிளம்பற நேரம் நன்னா இருக்கணும் பகவானேனு வேண்டிண்டே இருக்கணும் அதை தவிற வேறு வழியில்லை:((

said...

டீச்சர் சென்னையில் வண்டி ஓட்டபழகிட்ட உலகத்தல எந்த இடத்துலயும் வண்டி ஓட்டலாம்...

அப்புறம் கோபால்சார் ஹைதராபாத்தில் பார்க்க அற்புதமான இடம் வச்சிருக்கேன்.. சார் போன் நம்பர் கொடுங்க...


டீச்சர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..

said...

:-(

கொடுமை டீச்சர்.. நீங்கள் திருப்பி இரண்டு வார்த்தையாவது கேட்டிருக்கலாம். சும்மா வருவதால்தான் இது போன்றவர்களின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

said...

தலைப்பைப் பார்த்ததும் கவலையோட ஓடி வந்தேன், ஒரு வகையிலே இல்லை, எல்லா வகையிலேயும் நாய்க்கடிதான், ஆனால் சும்மாப் போகமுடியுமா?

ஸ்வாமி ஓம்காருக்கும், ஜெயஸ்ரீக்கும் ஒரு ரிப்பீட்டே போட்டுக்கறேன், அசிங்காரச் சென்னை எப்போவுமே இப்படித் தான். இப்போத் தான் குழுமத்திலே புலம்பிட்டு வரேன். இங்கே பார்த்தால்??? திகிலாயிடுச்சு! நல்லவேளை நிஜமா நாய்க்கடி இல்லையே??

said...

வாங்க கவிநயா.

ரொம்பச் சரி!

said...

வாங்க வருண்.

வாக்ஸின் போட்டுக்கணும்தான். தோல் நல்லா தடிமனா ஆகுவதற்கு.

இது தடிப்பூசி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

குலைச்சுட்டுப் போனதோட சரி:-)

said...

வாங்க சீனா.

இது நான் விட்டுப்போன இந்தியா இல்லை!

தடிப்பூசி தினம் போட்டுப்போட்டு உரம் ஏத்தணுமோ!

said...

வாங்க ஸ்வாமிஜி.

வெங்கடேஷுக்குச் சொல்லிடறேன்.

பாவம்...நாய்கள்.

said...

வாங்க நிலாரசிகன்.

அதே அதே. அப்படித்தான் நடந்தது கடைசியில்!

said...

வாங்க அப்பாதுரை.

இன்னும் சில மாதங்கள்தான். திரும்பிடுவேன். விஸா அப்புறமா எடுங்கோ. ஆனால் நியூஸிக்கு வரணும் நீங்க!

said...

வாங்க கயலு.

திகில் & த்ரில் ன்னு என்னென்னவோ நடக்குதுப்பா!

said...

வாங்க நன்மனம்.

கடுகு = காரம்.

ஆனால் அவ்வளோ காரமில்லை. காரம் ஆகறதில்லை எனக்கு!

said...

வாங்க அபி அப்பா.
//சுடுகாடு...//

போனவங்களே 'இந்தப் பேச்சா'!!!!
அவ்வ்வ்வ்வ்

said...

வாங்க ஆயில்யன்.

எல்லோருக்கும் துளிர் விட்டுக்கிடக்கு நீங்க ஊருலே இல்லைன்னதும்!

said...

"எதிரே வர்ரவனும் பின்னாடி வர்ரவனும் தப்பாத்தான் வருவான் என்று நினைத்துக் கொண்டே வண்டி ஓட்டு” இது ட்ரைவிங்கின் போது ரங்கமணி சொல்லிக் கொடுத்தப் பாடம்.

ரொம்ப பயந்திட்டீங்க போல. சென்னை ட்ராபிக்கில் வண்டி ஓட்டினால் பிறகு நீங்க உலகத்தின் எந்த மூலையிலும் சென்று ஓட்டலாம்.

கொஞ்ச நாளில் பழகிவிடும்.

said...

வாங்க வல்லி.

இன்றுமுதல் உங்களுக்கு 'முன் ஜாக்கிரதை முத்தண்ணி' என்ற விருது!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நாய்கள் கடிக்கும். ஆனால் அதைவிடச் சத்தமாகக் குலைக்கும்.

'சென்னை வாழ்க்கை. பிடித்த நூறு காரணங்களும் பிடிக்காத 1000 காரணங்களும் 'புத்தகம் போடணும்.

தலைப்பு நல்லா இருக்கா?

said...

வாங்க நான் ஆதவன்.

அப்படியெல்லாம் மகிழ வேண்டாம். இன்னும் சில மாதங்கள்தான்:-)

said...

வாங்க குமார்.

இடியாப்பம் ஆனதால் (நொந்து) நூடுல்ஸ் ஆகிக்கிடக்கு.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

'தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்பதைச் சரியாப் புரிஞ்சுக்கிச்சு ஜனங்கள்!

said...

வாங்க ஜாக்கி.

சென்னையில் ஓட்டுவதா?

விஷப்பரீட்சை செய்யும் எண்ணமெல்லாம் இல்லையாக்கும்!

கோபாலிடம் தனிமடல் அனுப்பச்சொல்லவா?

said...

வாங்க சென்ஷி.

நாலு வார்த்தை கேட்டாங்க கோபாலும், வெங்கடேஷுமா. தவறு அவர் பக்கம் இருந்ததாலே கூட்டமும் நமக்கு சப்போர்ட்தான்.

said...

வாங்க கீதா.

நிஜக்கடியின்னா தேவலையோன்னு இருக்கு:-)

said...

வாங்க நானானி.

உள்ளூர் ட்ரைவர் ஓட்டும் வண்டிதான்ப்பா.

கோபால்மட்டும்தான் ட்ரைவிங் லைஸன்ஸுக்கு தேர்வு எழுதி பாஸ் பண்ணி இருக்கார் இங்கே.

அவருக்குன்னு இருக்கும் மண்டகப்படிகள் இன்னும் பாக்கி இருக்கு:-)

said...

கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன்....
பதிவைப் படிச்சதும் நிம்மதியாச்சு!

said...

தலைப்பை பார்த்து விட்டு பயந்து விட்டேன்..

இதெல்லாம் எங்க சிங்கார சென்னையில சகஜம்..

போயிட்டே இருக்கணும்..

சென்னை டிரைவிங் பற்றி.. ஜாக்கி பதிவெல்லாம் நீங்க படிக்கிறதில்லையா..??

said...

டீச்சர்,
இங்கே வண்டி ஓட்டும் போது உயிரை கையில் வைத்து ஓட்டுவது போல் உணர்வு .
ட்ராபிக் ஒழுங்கீனம் இங்கு மிக பெருமான்மையினரால் நியாயமாக்க பட்டு விட்டது .

said...

Madam, I was reading your post on the Kanyakumari trip. Is the hotel you stayed OK. What is its name.

Aravinth

said...

வாங்க சிஜி.

அந்த அதிர்ச்சி, 'இன்ப அதிர்ச்சி' இல்லையென நம்புகிறேன்:-)))))

said...

வாங்க சூர்யா.

நானெங்கே ஓட்டுவது? பாவம் கோபால் அவரை விரட்டுனாத்தான் உண்டு.

சிங்காரச்சென்னை ஓட்டுனர்தான். அவருக்கே இந்த கதி!

said...

வாங்க அரவிந்த்.

அதுக்குப் பெயர் ஹொட்டேல் ஸீவ்யூ.

அந்த ஊருக்குக் கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ்தான். ஆனால் வ்யூ நல்லா இருக்கே. வியூ இருக்கும் அறைன்றதாலே இன்னும் கொஞ்சம் கூடுதல் கொடுத்தோம்.

ஆனால் சர்வீஸ் நல்லா இருந்துச்சு. அங்கே ரெஸ்டாரண்டு அருமை. திரும்பி வர ரயிலுக்குப் பார்சல் கூடச் செஞ்சு கொடுத்தாங்க.

நாலு நாள் தங்கல் என்றதால் டிஸ்கவுண்டு கொடுத்தாங்க, நாங்க கேட்டபிறகு.

ரீஸனப்ளி குட் ஒன். ask for the room with seaview.

said...

வாங்க பாஸ்கர்.

ரொம்ப நாளாச்சே இங்கே பார்த்து! நலமா?

நம்ம தப்பு, திட்டு வாங்குனோமுன்னாக்கூட மனசு ஆறிடும். இது செய்யாததுக்குன்றதுதான்...எரிச்சலாப் போச்சு.

said...

சென்னையை நினைச்சாலே பயமா இருக்கு. எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ!..
ஒன்றிரண்டு தடவை வந்த அனுபவத்தில் கவனிச்சது...சில வாகன ஓட்டிகளாகட்டும்,..பல பாதசாரிகளாகட்டும்..அவுங்களைத்தவிர ரோட்ல யாருமே இல்லாத மாதிரி நெனப்புலதான் போறாங்க. ட்ராபிக் ரூல்ஸை சட்டை செய்றதே இல்லை.
ஏதோ உங்களுக்கு சல்வார் கமீஸுக்கு வந்தது துப்பட்டாவோட போச்சேன்னு நினைச்சு விட்டுடுங்க. பைக் உங்க மேல மோதியிருந்தா.. :-((

said...

//அநேகமா இதுதான் நான் எழுதுன சின்ன இடுகையா இருக்கணும்!//

அப்பாடா.... அப்டின்னா படிக்கலாம்...

said...

"lol"... =)

said...

உங்கள் தலைப்பைக் கண்டு அதிர்ந்து வந்தேன்.மற்றபடி சென்னை போக்குவரத்தும் வசைமொழியும் பழகிய ஒன்று. நீங்கள் கூறுவது போல் தடிப்பூசி போட்டுக்கொண்டாயிற்று. இங்கே மும்பையில் பேச்சு குறைவு,ஆனால் போக்குவரத்து, தண்ணீர் போல கிடைக்கும் "கேப்"பில் எல்லாம் என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் சென்று கொண்டிருக்கும்...

said...

சென்னை ட்ராபிக் பொறுத்தவரை நீங்கள் தப்பு செய்தாலும் செய்யவில்லையென்றாலும் u gotto react first:)

said...

டீச்சர், இதுக்கு முக்கிய காரணம், வண்டிகளின் எண்ணிக்கையும், சாலை அளவு பற்றாகுறையும் தான். ”கேப்” களில் புகுந்து புகுந்தே வண்டி ஓட்டி பழகின “முக்கியமா இரண்டு சக்கர வாகனங்கள்” அப்புறம் சாலை விதியே புகுந்து போறதுதான்னு முடிவு பண்ணிடறாங்க. நம்ம சென்னைல எத்தனை வீட்டுல பார்க்கிங் வசதி இருக்குன்னு நெனைக்கிறீங்க. மேக்சிமம் ரோட் பார்க்கிங்தான். இப்படி நெருக்கமான் வீடுகள்,(நெறய வீடுகளில் காம்ப்வுண்ட் சுவறே கிடையாது.கதவ தொறந்தாலே ரோடுதான். ஏதோ கஷ்ட படறவங்க வீடுன்னு நெனக்காதீங்க. நாப்பது ஐம்பது லட்சம் விலையுள்ள வீடுங்க நிலையே இதுதான்.) குறுகலான தெருக்கள், முறையற்ற சாலை ஆக்ரமிப்புகள், பலகீனமான சாலை விதிகள்(அ)விதி நிர்வாகம், இருக்கிற ஊருல இருந்து நீங்க என்ன எதிர்பார்த்துட முடியும்.

அப்புறம் அந்த “நாய் கடிச்ச மேட்டர்”....ஹீ...ஹீ....சாரி, மாறும் உலகின் நிர்பந்தங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத, ”இடிச்ச ரெண்டு வண்டில பெரிய வண்டிதான் எப்பவுமே தப்பு” என்ற ஸ்பெஷல் கோட்பாடு உள்ள, சவுண்டு யாரு பர்ஸ்ட்டு உட்றாங்களோ அவங்கதான் ஜெயிபாங்கன்ற தற்காப்பு (தாழ்வு)மனபான்மையுள்ள ம()க்களின் வெளிப்பாடு அப்படிதான் இருக்குங்க...அகென்,..சாரி....

said...

சென்னை வாழ்க்கை. பிடித்த நூறு காரணங்களும் பிடிக்காத 1000 காரணங்களும் 'புத்தகம் போடணும்.

தலைப்பு நல்லா இருக்கா?//

juper என்னோட ஐடியாக்களையும் சொல்லறேன். :))

said...

//Madam, I was reading your post on the Kanyakumari trip. Is the hotel you stayed OK. What is its name.//

ஹோட்டல் sea view அருகில் ஹோட்டல் சிவமுருகன் என்றொரு ஹோட்டல் உண்டு .
கட்டணமும் மிக குறைவு . சுத்தம் மிக பிரமாதம் .
போன் நோ :- 04652246862

said...

;( ம்ம்...கஷ்டம் தான் டீச்சர்.

said...

வாங்க ஐம்கூல்.

நாமெல்லாம் இன்விஸிபிள் ஆகிட்டோம்!!!

புதுமொழி நல்லா இருக்கு. ரஸித்'தேன்':-)))))

said...

வாங்க கலகலபிரியா..

ரெட்டை நாயனமா? ஆஹா......

said...

வாங்க மணியன்.

எல்லாம் இறைவன் செயல் என்பதில் முழுக்க முழுக்க நம்பிக்கையுள்ள மக்கள் நாம்:-)))))

தினம் ஒரு தடிப்பூசி:-)

said...

வாங்க வித்யா.

நல்ல டெக்னிக்ப்பா.

"டேய்....எவண்டா அவன்? நான் யாருன்னு தெரியுமாடா...?"

சொல்லிச் சொல்லிப் ப்ராக்டீஸ் செஞ்சுக்கிட்டு இருக்கேன்:-)

said...

வாங்க விஜய்.

அடடா..... இவ்வளோ உண்மை இருக்கா? புட்டுப்புட்டு வச்சுட்டீங்களே!!!!!


உளவியல் கோட்பாடுகள்: படிக்கணும்!

said...

புதுகைத் தென்றல்,

ஜாய்ண்ட் வெஞ்சர் போட்டுக்கலாமா?

said...

அருவை பாஸ்கர்,
அரவிந்துக்கு உங்க சேதி கிடைச்சுருக்கும்.

சிவமுருகனை நான் சேவிக்கலையேப்பா.... நான் நெட்லே பார்த்து முன்பதிவு செஞ்சேன்.

said...

வாங்க கோபி.

'ரிப்பீட்டே' போடமுடியாமச் செஞ்சுட்டேனா?:-)))))

said...

ay!!! ithukkaa teacher intha tension. I went to india after 3 years not knowing the much advanced Share auto system. I decided to go in it with my neighbor aunty. She really was not up to the challenge. I thought just an experience . All I asked a lady was to just move a bit . There it goes .. Oh my god.. I felt like laughing/smiling and it irritated her even more. Chennaila irunthu thirumbum poothu ithu oru parisu :)) adikka elllam varapadaathu okva...

said...

தலைப்பைப் படித்த உடன் நிஜமாகவே நாய் கடித்துவிட்டதோ என ஒரு கணம் பதறிவிட்டேன்.

இது போன்ற அருவருப்பான நாய்கள் உலகெங்கிலும் இருக்கின்றன என்பது உண்மையானாலும்
நான் அறிந்தவரை, தமிழகத்திற்கு அதுவும் குறிப்பாக, சென்னைக்கு இந்த சிறப்பு வெகுவாகவே இருக்கிறது.

தாம் தவறு செய்துவிட்டு, பிறரை அசிங்கமாகத் திட்டும் வாகன ஓட்டுனர்கள், அவர்கள் ஆட்டோ டிரைவர்கள்,
பைக் டிரைவர்கள் மட்டுமல்ல, விலை மதிக்கவொண்ணா கார் ஓட்டுனர், சொந்தக்காரர் கூட, இது போன்று
அவச்சொற்கள் பேசுவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கிறது.

நம் மீது இந்த நாய்கள் பாயவில்லை என்று யாரேனும் நினைத்தால் அது அவர்கள் அதிருஷ்டம்.

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க இலா.

அட! இந்த ஷேர் ஆட்டோவை எப்படி மறந்தேன்????

பறக்கும் ரயில் பாக்கி இருக்கு.

மீன் 'பாடி' வண்டியையும் பார்க்கணும். மீன் எப்படித்தான் பாடுமுன்னு த்ரில்லா இருக்கு!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
மீனாட்சி அக்கா நல்லா இருக்காங்களா?

சிங்காரச் சென்னையில் இதெல்லாம் சகஜமான விஷயமாப் போச்சே(-:

ஆன்னா...ஊன்னா தமிழர் பண்பாடுன்னு மேடையில் முழங்குவது இவர்கள்வரைப் போய்ச் சேரலையோ என்னவோ!

said...

வாங்க தியாவின் பேனா.

வாழ்த்து(க்)களை வாங்கிக்கிட்டேன். நாய்க்குக் கொடுத்தனுப்ப வேணாம்தானே?

said...

வாங்க சக்தி த வேல்.

அடுத்தவன் அழுகை நைஸா இருக்கா?

ஙே ..........

said...

you can write 100 reasons for liking about chennai and only 50 for not liking chennai . (50 ....வேற வழி இல்ல ஒத்துக்கிட்டு தான் ஆகணும் :(
என்ன இருந்தாலும் நம்ம ஊரு இல்லையா . வுட்டு குடுக்ககூடாது .
இப்ப கூட ஒரு படத்துல சொன்னங்களே பல ஊர்லந்து மெட்ராஸ் கு வந்து பல பேர் settle ஆறாங்க . அவங்க எல்லார் culture ம் சேர்ந்தது தான் சென்னை . and as u said for the recent past ppl from different places get settled in chennai .
so proper madrasis are decent . சும்மா நம்ம madras மட்டும் கொற சொல்ல கூடாது . நீங்க என் சைடு தான .
but as you said cant bear the un reasonable words .

said...

வாங்க சசி கலா.

இந்த லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப் சென்னையைப் பொறுத்தவரை எப்பவும் உண்டு.

திட்டிக்கிட்டே போய் கடைசியில் விமானம் ஏற லவுஞ்சில்காத்திருக்கும் சமயம்.... இனி எப்போ வருவோமோன்னு மனசு குழையும்.

said...

:))))))))))

said...

சிரிப்பாணிக்கு நன்றி சசிகலா