Friday, December 18, 2009

ஆடும் சிவனும் அருள்தரும் ராமனும்.

திருவாதிரை. அழகான சின்னப் பல்லக்கில் ஆடும் சிவன், நடராஜக் கோலத்தில் அழகா பவனி வந்துக்கிட்டு இருக்கார். கோவில் சிலைகளுக்கு உயிர்வந்து ஏதோ அவைகளே 'அவரை'ச்சுமந்து கொண்டும் ஸ்வாமிக்கு வண்ணக்குடை பிடித்துக்கொண்டும் ஒய்யாரமா ஒரு வீதியுலா. மல்லாரியில் நடையாம்.

திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன். கம்பீரநாட்டையில் திரு. குன்னக்குடியின் இசையில் உண்மையாவே கம்பீரமா ஒலிக்குது.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.


கைகள் ரெண்டும் தூக்கியபடி சுமக்க, வெறும் கால்கள் மட்டும் தாளத்தோடு லயம் பிசகாமல் அட்டகாசமான ஒரு நடனம். ஞானசம்பந்தர் என்றதும் சீர்காழி நினைவுக்கு வருதே...அதன் புராண காலத்துப்பெயர் பிரம்மபுரம் என்பதாம்.

சதீஷ் நாகராஜன் என்றொரு இளைஞர் அப்பரின் பாடல் 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் பாடலுக்கு நடனம். இவர் வாய் உண்மையில் கொவ்வைச் செவ்வாயாக ஆகப்போகுதுன்னு அப்ப எனக்குத் தெரியாது:-)

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

ராகமாலிகை. பக்திப் பாட்டுன்னு சட்னு தெரியாதபடி ஏதோ லைட் ம்யூஸிக் வகையா இருக்கு. அமர்க்களம் போங்க.

ஆடும் சிவமே அற்புதமே........... உன் ஆட்டமெல்லாம் ஒரு தத்துவமே.......
திருமதி. நித்யாவின் ஸோலோ.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

ஆடும் சிவன் முடிஞ்சதும் அருள்தரும் ராமர் வருகிறார்.

கம்பரின் ராமாயணத்தில் சேதுப் படலம்.

சேது சமுத்திரம் ஒரு புண்ணியஸ்தலம். புண்ணியநதிகள் அனைத்திலும் மக்கள், நீராடி அவுங்கவுங்க செஞ்ச பாவங்களை போக்கிக்கறாங்க. அந்தப் பாவச்சுமைகள் எல்லாம் நதியில் இருக்கு. நதிமகள் இந்த பாரம்தாங்காமல் துடிக்கிறாள். அந்தப் பாவமூட்டைகளை ஒரேயடியாத் தொலைச்சுக்கட்ட சேது சமுத்திரத்தில் வந்து நீராடுகிறாளாம். கங்கை, காவேரி, யமுனை, நர்மதா, கோதாவரின்னு அஞ்சு நதிகளும் வந்து சேதுவில் மூழ்கி இறைவனைத் துதிக்கிறாங்க.

அடுத்த நடனம் ராமேஸ்வர மகாத்மியம்.

இலங்கையில் போர் முடிஞ்சது. ராவணன் அழிஞ்சான். ராமலக்ஷ்மனர்கள் சீதையோடு புஷ்பகவிமானத்தில் புரப்பட்டுசேதுக்கரையில் வந்து இறங்குறாங்க. அங்கே இவுங்களுக்காகக் காத்துருந்த மகரிஷிகள், ராமா, நீ ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் அடைந்தாய்.(அச்சச்சோ.....ப்ராமணனைக் கொன்னுட்டே!) இந்தப் பாவம் போகணுமுன்னா உடனே சிவனைப் பூஜிக்கணும். பூஜைக்கான நல்ல முகூர்த்தம் நிச்சயிச்சுக் கொடுத்தாச்சு. (இதாங்க பெருமாள் சிவனை பூஜித்தார், சிவன் பெருமாளை வணங்கினார்ன்னு ரெண்டு பிரிவுகளிலும் கதைகதையாக் கிடக்கு. எப்படியோ நம்ம சாமியை 'அவர்'வணங்கினாருன்னு அவரவர் சந்தோஷப்பட்டுக்கணும்)

உடனே பூஜைக்காக ஒரு சிவலிங்க வேணும். தோ..... நான் கொண்டுவரேன்னு கந்தமானபர்வதத்தை நோக்கி ஹனுமன் பறந்தார். கடற்கரை மணலில் உக்கார்ந்துருக்கும்போது அதை அளையாமச் சும்மா இருக்கமுடியுமுன்னு நினைக்கிறவங்க கையைத் தூக்குங்க. அதுவும் அந்தக் காலத்து பீச் நல்லா சுத்தமா இருந்துருக்குமே! ஒரு 35, 40 வருசமுன்புகூட மெட்ராஸ் மெரீனா(வே) நல்லாச் சுத்தமாத்தான் இருந்துச்சு. நான் வெறுங்காலில் நடந்து போயிருக்கேன். அங்கங்கே மணலில் 'தொப்' ன்னு உக்கார்ந்து 'கதை'யெல்லாம் அளந்துருக்கேன். (இப்போ சுத்தமில்லாத கடற்கரையைப் பார்த்து மனசு வெந்துக்கிட்டு இருக்கு.) சரி சரி. கதைக்கு வரலாம்.

ஹனுமன் வந்தபிறகு, பூஜையை முடிச்சுக்கிட்டுக் கிளம்பி அயோத்திக்குப் போகணும். நேரமோ ஓடிக்கிட்டு இருக்கு. இன்னும் போனவனைக் காணோம். சீதை போரடிச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்காள். கைகளோ மணலில் அளைஞ்சுக்கிட்டு இருக்கு. மனசுக்குள்ளே சிவலிங்கம் இன்னும்வரலையேன்னு அதைப் பற்றியே நினைச்சுக்கிட்டு இருந்ததால் அனிச்சையா அவள் கைகள் அப்படியே ஈரமணலைக் குமிச்சுவச்சது, அசப்பில் பார்த்தால் சிவலிங்கம் போல இருக்காம்.


நல்ல முகூர்த்தம் முடிய சில நிமிஷங்கள்தான் பாக்கி. இன்னும் தாமதிச்சால் லேட் ஆகிரும். சீதை இருக்கும் பக்கம் திரும்பினால் மணல் லிங்கம் தெரியுது. அவசரத்துக்கு இதுவே போதுமுன்னு 'சட்'னு பூஜையை ஆரம்பிச்சு நடத்த ஆரம்பிச்சாச்சு. முடியும் தருணம் மாங்குமாங்குன்னு மலையோடு பேர்த்த சிவலிங்கத்துடன் ஹனுமன் வந்து இறங்குறார். ( எதையும் அப்படியே பேர்த்து எடுத்துத்தான் வழக்கம்போல. அந்த லிங்கத்தை மட்டும் கொண்டுவந்துருந்தால் கனம் இல்லாம லகுவா பறந்து நேரத்தோடு வந்துருக்கலாமுல்லே?)

இங்கே த பூஜா நியர்லி ஓவர். கோபம் தலைக்கேறுது. அதெப்படி எங்கிட்டே ஆர்டர் கொடுத்துட்டு வேறொரு ஆள் கிட்டே வாங்கலாமுன்னு....... இதையும் நீதான் வாங்கிக்கணுமுன்னு....... (ஹைய்யோ இது சம்பந்தமா ஒரு கொசுவத்தி இருக்கு. குறிச்சொல் : பூட்டு. அப்புறம் கதைகளில் வச்சுக்கலாம் கச்சேரியை)

அதை எடுத்துக் கடாசிட்டு இதை வையுங்கன்னு ராமர்கிட்டே கோச்சுக்கறார். யப்பா.... ஹனுமா..... நீயே அந்தக் கைங்கரியத்தைச் செய்யேன். எடுத்துக் கடாசுன்னார். எடுக்கறார். துளியும் நகரலை. அசைஞ்சும் கொடுக்காம திம்முன்னு இருக்கு. பூரா பலமும் பிரயோகிச்சுப் பார்த்தாச்சு. ஊஹூம்.... கடைசியில் வாலை லிங்கத்துலே நல்லா அணைச்சுச் சுருட்டி ஒரே இழு. வாலறுந்ததுதான் மிச்சம். ரத்தமாக் கொட்டி அபிஷேகம் ஆயிருச்சு. (அங்கே உள்ள மணல் ரத்தம் படிஞ்சு இளம்சிகப்பா இருக்குமுன்னு அம்மா சொல்லி(இது என் அம்மா) கேட்டுருக்கேன். எங்க மாமாவின் அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் போனாங்க. மாமாவுக்குக் குழந்தைகள் இல்லை. அம்மாவின் ஃபேவரிட் அண்ணன் அந்த மாமா. அவரைப் பற்றி நம்ம அப்புறம் கதைகள் 1500 வில் சொல்லணும். நான் ராமேஸ்வரம் போனப்ப (அது ஒரு 40 வருசம் முந்தி,) அந்த இளம்சிவப்பெல்லாம் நீர்த்துக் காணாமலே போயிருந்தது)

'ஆஹா...ராமன் மணலை எடுத்துப் பிரதிஷ்டை செஞ்சாலும், அதுலே சிவன் வந்து ஆவாஹனமாகிட்டார்'னு புரிஞ்சது. இதென்ன....சின்னப்புள்ளெத்தனமா நடந்துக்கிட்டோமேன்னு வெட்கப்பட்டு, மன்னிப்புக் கேட்டுக்கிட்டார் நேயடு. ராமனும். ஹனுமன் கொண்டுவந்த லிங்கத்தையும் அங்கேயே வச்சுட்டார். ராமன், ஈஸ்வரனைப் பூஜிச்ச இடம்தான் ராமேஸ்வரமுன்னு ஆகிருச்சு.

இந்தக் கதையை திரைக்குப் பின் இருந்து 'மைக்'கில் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் (இந்த அபிநய நாட்யாலயாவின் உரிமையாளர்)அவுங்க வெர்ஷனில் சொன்னாங்க. யாரோ எழுதிக் கொடுத்துருந்ததைப் படிச்சாங்க. எழுதுனவர் இலக்கணவாதி போல இருக்கு. லிங்கம், ராமன் எல்லாம் இலிங்கம் இராமர்ன்னு எழுதிட்டார்போல. இவுங்களும் அதைப் படிக்கும்போது இலிங்கம் இராமர்ன்னு சொல்லி அப்புறம் லிங்கம் ராமர் ன்னு மாத்தி (ஒவ்வொருதடவை இந்தச் சொற்கள் வரும்போதும் தடுமாறித் தண்ணி குடிச்சுன்னு) ....பாவம் ஒரே களேபரம். பேசாம சிவலிங்கமுன்னு எழுதி இருந்தால் 50 சதமானம் குழப்பம் தீர்ந்துருக்கும்!


இதுலே கோபால் ஸீட்டுக்குப் பக்கத்துலே இருந்தவர் ரொம்பவே சடைச்சுக்கிட்டார். அவர் இருக்கைக்கு வந்தமர்ந்து ரெண்டு நிமிஷத்தில் சார். கொஞ்சம் இதைப் பார்த்துக்குங்கோ, மேலே மினி ஹாலில் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு போனவர்தான். கோபால் மாதிரி ஒரு அப்பாவி உண்டா? தன் கர்சீஃப் எடுத்து ஸீட்டில் போட்டுவச்சுட்டு , வந்து கேட்கும் மக்களுக்கெல்லாம் ஒருத்தர் இந்த இடத்துக்கு வர்றார்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஒன்னரை மணி கழிச்சு வந்தவர் மேலே பாட்டு ப்ரமாதம்ன்னு அறிக்கை விட்டுட்டு, 'சட்டுப்புட்டுன்னு ஆரம்பிக்காம என்ன கதை வேண்டி இருக்கு? பேசாம ப்ரிண்ட் பண்ணிக் கொடுத்துருக்கலாம். இப்போ அரைமணி வேஸ்ட்ன்னு முனகல்.

ராமேஸ்வர மகாத்மியமுன்னு நடந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியில் மேலே சொன்ன ராமாயணக் காட்சிகள் அருமையா இருந்துச்சு. ஹனுமனா வந்தவர் ஆடும்சிவன் பகுதியில் 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்' ஆடிய அதே சதீஷ். ஆஞ்சநேயனுக்காக வாயைச் சுற்றிச் செம்பஞ்சுக்குழம்பு தீற்றியிருந்தார். அழகான தரைவரை தொடும் நீண்டவால் வேற. வேஷப்பொருத்தம் பிரமாதம்.

கலைமாமணி கிருஷ்ணகுமாரி அவர்கள் கடைசியில் நன்றி தெரிவித்தபோது, நம்ம குன்னக்குடியாரின் இசையே முழுக்க முழுக்கப் பயன்படுத்தியதாகவும். நாட்டிய மரபு கொஞ்சமும் குன்றாமல், சம்பிரதாயப் பாணிகளில் இருந்து வழுவாமல் தயாரித்த நடனங்கள் இவைன்னு சொன்னாங்க. ரெண்டு பெரியவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சின்னப் பெண்கள். அருமையா ஆடினாங்க. அதிலும் அந்த ஆரம்ப நடனத்தில் கைகளைப் பயன்படுத்தாமல் வெறும் கால்களால் மட்டுமே என்பதும் அதுலே முகபாவங்கள் எல்லாமே சூப்பர் என்பதும் இங்கே முக்கியமாக் குறிப்பிடத் தக்கவை. பாவம்...கைகள் வலிச்சுருக்காதோ? (கைவலிக்காரிக்குக் கைகள்மேல் கண்)

இந்த மாதிரி குழு நடனமா நாட்டிய நாடகங்கள் தயாரிப்பதில் மூன்று நடனப்பள்ளிகள் ரொம்பப் பெயர் போனதாம். அந்த மூணில் இந்த அபிநய நாட்யாலயாவும் ஒன்னு,. இன்னொன்னு, சிலப்பதிஹாரம் பதிவில் பார்த்தோமே மதுரை முரளிதரன் குழு. நம்பர் ஒன்னு ஸ்ரீலதா(??) குழுன்னு கேள்வி. பெருமாள் ஸ்பெஷலிஸ்ட்டாம். திருமலையான் உற்சவம் எல்லாம் குச்சுபுடி டான்ஸ் ட்ராமாவில் ரொம்ப அருமையா இருக்குமாம். உஷான்னு ஒரு டான்ஸர் கிட்டே சேகரிச்சக் கொசுறுத்தகவல்கள் இவை.

பி.கு: இதுதான் அந்த '.நாளைக்குச் சொல்றேன்':-)

36 comments:

said...

மீ த first? :-)

said...

//..அதெப்படி எங்கிட்டே ஆர்டர் கொடுத்துட்டு வேறொரு ஆள் கிட்டே வாங்கலாமுன்னு...


//...(இது என் அம்மா)...//

டீச்சர்... அருமையான விவரிப்பு, பெரியவர்களையும் சிறியவர்களாக ஆக்குகிறது உங்க விவரிப்பு.

said...

ஒய்யார வீதி உலாவும் திருமதி. நித்யாவின் ஸோலோவும் அமர்க்களமேதான். சேதுப்படலம் விளக்கத்துடன் இன்னும் அருமை.

//அப்புறம் கதைகள் 1500 வில் சொல்லணும்.//

காத்திருக்கிறோம்:)!

said...

ரீச்சர்

இந்த டான்ஸ் சீசன் எப்போ முடியும்? வேற டாபிக்கே வரதில்லையே.....

said...

இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பது போல இருக்கிறது உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள்

said...

வாங்க நன்மனம்.

எஸ்...... யூ ஆர் த ஃபர்ஸ்ட்.

//பெரியவர்களையும் சிறியவர்களாக ஆக்குகிறது உங்க விவரிப்பு.//

ஆஹா...இது என்ன சின்னப்புள்ளெத் தனமா?...........
நோ நோ..... டோண்ட் be எமோஷனல்!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதுபாட்டுக்கு சேர்ந்துக்கிட்டே போகுதுங்க. அதுக்குத்தான் ஆயிரத்தை ஆயிரத்து ஐநூறா ஒரு அம்பது சதமானம் அதிகரிச்சு இருக்கேன்:-)

said...

வாங்க கொத்ஸ்.

அதெப்படி? முதல்லே அவுங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்:-)

சீஸன் முடியணும். ஆமா.

said...

//ஆயிரத்தை ஆயிரத்து ஐநூறா//

அதையும் கவனிச்சேன்:)!

said...

வாங்க அண்ணாமலையான்.

உங்களுக்குப் பிடிச்சுருக்கு.

கிளாஸ் லீடர் பொருமுவதைப் பார்த்தீங்களா?

said...

இருக்கட்டும் எங்க போய்ட போறாங்க. உங்களுக்கு நேரம் இருந்தா நம்ம ப்ளாக் பக்கம் வந்து, கருத்த சொல்லிட்டு போங்க..

said...

அழகான வர்ணனையில் காட்சிகள் கண்முன்.நல்லதொரு பகிர்விற்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும்.

Anonymous said...

பல்லக்கு போட்டோ அருமை.

அப்பறம் கதைகள் மாதிரி நாளைக்கு கதைஇருக்கா?

said...

எழுதுனவர் இலக்கணவாதி போல இருக்கு. லிங்கம், ராமன் எல்லாம் இலிங்கம் இராமர்ன்னு எழுதிட்டார்போல. இவுங்களும் அதைப் படிக்கும்போது இலிங்கம் இராமர்ன்னு சொல்லி அப்புறம் லிங்கம் ராமர் ன்னு மாத்தி (ஒவ்வொருதடவை இந்தச் சொற்கள் வரும்போதும் தடுமாறித் தண்ணி குடிச்சுன்னு) ....பாவம் ஒரே களேபரம். பேசாம சிவலிங்கமுன்னு எழுதி இருந்தால் 50 சதமானம் குழப்பம் தீர்ந்துருக்கும்!
//
haahaahhhhaah:))

said...

நாளைக்கு என்ன கதை.செம்பஞ்ச் தீட்டின அனுமார் நல்லாவே இருக்கார். தோடுடைய செவியன் படம் வெகு அருமை.
இது என்னிக்கு நடந்தது?? ஒரெ கன்ஃபுசிங்.

சரிசரி. நமக்குப் பதிவு கிடைச்சால் போதும்:)

said...

அண்ணாமலையான்,

அதெல்லாம் வந்துருவொம். இப்ப ஓட்டம்தான். மூச்சு வாங்க9??) நேரம் இல்லை!!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

இது கொடுத்த வாக்கு:-)))))

காப்பாத்திட்டேன். ராமி!

said...

வாங்கோ வல்லி.

இதென்ன கொடுமை!!!!!

முந்தாநாள் பதிவில் நாளைக்குச் சொல்றேன்னதை நேத்துப்போட்டேன்:-)))))

said...

பார்க்கக் கொடுத்து வைக்காதவற்றை பார்த்தது போல உணர வைத்துள்ளீர்கள் நன்றி

said...

அம்மையே சரணம்..!

நாவிலும் எழுத்திலும் சரஸ்வதி டான்ஸ் ஆடுறா..! டான்ஸ் ஆடுறா..!

said...

[[[இலவசக்கொத்தனார் said...
ரீச்சர், இந்த டான்ஸ் சீசன் எப்போ முடியும்? வேற டாபிக்கே வரதில்லையே]]]

கொத்ஸூ.. இப்பத்தான் ரீச்சரம்மா கொளுந்து விட்டு எரியத் துவங்கியிருக்காங்க..

ஆரம்பச்சதுமே அணைக்கணுமா..? நின்னு ஜெகஜோதியா எரியட்டுமே..?

said...

//இது சம்பந்தமா ஒரு சொசுவத்தி//

இலக்கணவாதி இராமர்,இலிங்கம்ன்னு எழுதிக்கொடுத்த உரையை பேசுனதுல குழம்பிட்டீங்க போலிருக்கு:-))).

said...

அம்மா! உங்களை பார்த்தா எனக்கு பொ. வா இருக்கு.. (நெறய வாட்டி சொல்லிட்டேனோ?). வர்ணனையும் படங்களும் வெகு அழகு. நன்றி அம்மா!

said...

வாங்க டொக்டர் ஐயா.

ஆஹா..... 'நிருபர்' வேலையைச் சரியாச் செய்யறேன்னு சொல்லுங்க:-)))))

said...

வாங்க உண்மைத்தமிழன்.


ஆமாமாம். சாமி ஆடுனா அதை நிறுத்தமுடியாது:-)))))))

ஆமாம். கொத்ஸுக்கான பதிலில்.....

உயிரோடு எரிப்பது வன்முறையில் சேராதா? அதுவும் டீச்சரை!!!!

said...

வாங்க ஐம்கூல்.


இது சொதப்பின கொசுவத்தியின் சுருக்கம்.

ச்சும்மா.....இதெல்லாம் சமாளிச்சுஃபையிங்.

திருத்திட்டேன். நன்றிஸ் ஃபார் யுவர் கண்கள்ஸ்.

said...

வாங்க கவிநயா.

இப்பத்தான் ஆரம்பம். ஜனவரி கடைசிவரை எக்ஸ்ட்ரா பொ. வுக்கு கேரண்டி:-))))

said...

வாங்க துபாய் ராஜா.

ஜஸ்ட் மிஸ்டு.

அடிக்கடி வாங்க.

said...

அடே கொசுறுத் தகவல்கள் வேற சேகரிச்சுப் போடறீங்களா.. :) பேஷ் பேஷ்

said...

கதையும் படங்களும் அற்புதம். நல்ல பதிவு டீச்சர். மிக்க நன்றி.

said...

வணக்கம் டீச்சர்.. நீங்க 2009 மார்ச்ல இந்திய பயணம் எழுதின போது NZல தானே இருந்தீங்க? எப்போ திருப்பி இந்தியா போனீங்க? ஒரேடியா இந்தியாவிலேயே ஒரு வருஷமா இருக்காப்புல இருக்கே!! கலக்குங்க! அப்படின்னா அங்க வீடு எப்படி தேடினீங்க, ட்ரைவர் எப்படி கிடைச்சாரு, பக்கத்து வீடு எல்லாம் எப்படினு வாழ்க்கை அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லலாமே? (நாய் கடிச்சதை தவிர அன்றாட வாழ்க்கை எப்படினு..)

said...

//புப்பட்டு//

ரொம்ப அவசரமா டைப்பினீங்களா? :))

அப்படியே கொஞ்சம் டிசம்பர் கச்சேரி (ரவுண்டப் உண்டா?) பத்தியும் எழுதுங்க. :)

said...

வாங்க கயலு.

இசை நாட்டிய நாடக விழாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும் முயற்சிதான் இந்த கொசுறுத் தகவல்கள்ன்னு சொன்னால் நம்புகிறமாதிரி இருக்கா? :-)))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

இன்னும் சிங்கை போகலைன்னா தனிமடலில் தொடர்பு கொள்ளுங்க.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க பொற்கொடி.

இப்போதைக்கு இன்னும் சில மாசங்கள் இந்தியாதான்.

இசைவிழா முடியும்வரை சி.செ.

35 வருடத்துக்குப் பிறகு நான் விட்டுவந்த மதராஸ் ன்னு ஒரு புத்தகம் எழுதப்போறென்.

அதுலே 'நீங்கள் கேட்டவை ' அத்தனையும் உண்டு:-)

said...

வாங்க அம்பி.

குதிரையில் புறப்பட்டுப் போனதைத்தான் குறிப்பால் உணர்த்தினேன்:-)))))

இசைவிழா ரவுண்டப் இல்லாமலா?

கொத்ஸை தமிழ்மணம்பக்கம் கொஞ்சநாளுக்கு விடவேணாம்!