Thursday, December 31, 2009

சிம்மராசியும் ஜீஸஸ் க்றைஸ்ட்டும், கன்னிமரியாளும் க்ருஷ்ண லீலையும்

'அங்கே' இருந்துருந்தா இந்த ஒரு மாசமா தினமொன்னு கிறிஸ்மஸ் பார்ட்டிகளுக்குப் போயிருப்பேன். வேணாமுன்னாலும் விடமுடியுதா? என்னமோ போன்னு ஒரு சிறு சலிப்போடு(?) புதுசா ஒரு பொடவையோ, இல்லை பஞ்சாபியோ(!! ஆரம்பகாலத்துலே பஞ்சாபிஸூட்ன்னுதான் பெயராக்கும்) போட்டுக்கிட்டுப் போவேன். வந்திருக்கவுங்க எல்லோரும், மெய்யாவோ பொய்யாவோ வந்து நம்ம உடையைப் பாராட்டிட்டுப் போவாங்க. இதைவிட்டா நமக்கு(ம்) சான்ஸ் ஏது பாராட்டு(??) மழையில் நனைய!

'இங்கே' எல்லாம் ஓசைப்படாமல் நடக்குது . கொறைஞ்சபட்சம் ஒரு சர்ச்சுக்குப் போய்வரணுமுன்னு நினைச்சது(ம்) மறந்தே போச்சு வேறொரு கொண்டாட்டத்துலே முழுகிட்டதால்.

ஒரு இசைநிகழ்ச்சிக்குப்போயிட்டு வரும்வழியில் கோபாலுக்கு ஒரே கழுத்துவலி (அவ்வளவாத் தலையைக்கூட ஆட்டலையே!!!! இன்னிக்கு அங்கே நானும் ரொம்பக் கொஞ்சமாத்தானே பேசினேன். ) உடம்பு சரியில்லைன்னா இவருக்கு ஏற்ற சிகிச்சை ஒன்னு இருக்கு. பாதி இல்லே முக்கால்வாசி வியாதிகள் இவருக்கு டாக்குட்டர் முகத்தைப் பார்த்ததும் போயிரும்.. மலர் ஹாஸ்பிடலுக்கான்னு கேட்டேன். வீட்டுப் பத்திரத்தை நியூஸியில் விட்டுட்டுவந்த கவலை எனக்கு! ம்ம்ம்ன்னு என்னவோ சொல்ல ஆரம்பிச்சவர், சாதாரண டாக்டர் கிடைச்சால் போதுன்னார். ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகிறனுமுன்னு முயற்சி செஞ்சு முதல் கட்டமா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன். இனி எதாவது ஒரு பல்கலைக் கழகம் இங்கே டாக்குட்டர் தந்தா வாங்கிக்கிட்டுப் போகணும். மக்கா...என்ன விலை என்ன விவரமுன்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க)

நம்ம டிரைவர்கிட்டே எங்கியாவது டாக்டர் பார்த்தா நிறுத்துங்கன்னு சொல்லி வாய் மூடலை ஒரு டாக்டர் போர்டு கிடைச்சுருச்சு. எதிரும்புதிருமாப் போட்டுருந்த ரெண்டு நீள பெஞ்சில் போய் உக்கார்ந்தோம். நாலுக்கு எட்டுன்னு ஒரு அறை. ஒரு மேசைமேல் துளி இடம் இல்லாம விதவிதமான ப்ளாஸ்டிக் டப்பாக்கள். எனக்கென்னமோ சட்னு பான்பராக் விற்பவர்தான் நினைவுக்கு வந்தார். காத்துருந்தவங்க அவுங்களே யாருக்குபின் யார்ன்னு வரிசைப்படுத்திக்கிட்டு உள்ளே ( நான் இருந்த இடத்திலிருந்து ரெண்டு எட்டு) போவதும், அங்கே இருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூலில் உக்காருவதுமா.... ஒரு ஊசி, நாலு வார்த்தை, காசு கைமாறுவது.

ரொம்ப வருசங்களுக்குமுன்னே நாங்க கேரளாவில் இருந்தப்போ, இவருக்கு மூக்கில் புண். (சிகரெட்டை ஞாபகமறதியா தீ இருக்கும் பக்கம் மூக்கருகில் வச்சுச் சுட்டுக்கிட்டாரோ? அப்பெல்லாம் புகைவலி பழக்கம் வேற.அதை ஒழிக்க நான் பட்டபாடு..... அப்புறம் கதைகள் 1500 இல் சொல்லலாம்) கடைவீதிக்குப் போகும்போது அங்கே இருந்த ஒரு மருந்துக்கடையில் போய் நின்னோம்.

"எந்தா?"

'ம்ஹூக்குலே ஹுண்ணு"

ஏறிட்டுப் பார்த்தக் கடைக்காரர், ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து

" இந்தா இது கழிச்சோ. ....ரண்டு ருபெ"

இந்தச் சம்பவம் இப்போ ரெண்டுபேருக்கும் ஒரே சமயத்தில் நினைவுக்கு வந்து.. புன்முறுவல். ஓசைப்படாமல் அவர் 'ம்ஹூக்குலே ஹுண்ணு' ஜாடையில் சொல்ல நான் 'ரண்டு ருபெ' :-))))

(சும்மாவா சொன்னான் சீயக்காப்பொடி!! (இதுவும் 1500 இல் பார்க்கலாம்)

எங்கள் முறை வந்ததும் மேசையின் அருகில் நின்னு பார்த்தேன். என் கவலையெல்லாம் சிரிஞ்சி பற்றித்தான். மேசையின் அடுத்த ஓரத்தில் சின்னக் குன்றாய் பயன்படுத்திய சிரிஞ்சிகள். நோய் விசாரணை ஆச்சு. ஹெட் கோல்ட் இருப்பதால் வந்த வலி(யாம். இதைத்தானே ரெண்டுநாளா நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்) ஊசி போட்டுக்குங்கன்னு புதுசா ஒரு சிரிஞ்சி எடுத்தார். அப்பாடா..... கூடவே 3, 2 ன்னு ரெண்டுவகை மாத்திரைகள். முப்பது ரூபாய்கள். (உடனே மகளுக்கு விவரம் சொல்லணுமுன்னு துடிப்பா இருந்தேன். டெலிபதி:கெஸ் வாட்? வாட்? டாட் இஸ் ஸிக். ஓ நோ... பீன் டு தெ டாக்.? எஸ். டூ யூ நோ ஹௌமச் ஹீ சார்ஜ்ட்? நோ ஐடியா.... அ டாலர். வாவ்)


வெளியே வந்து காரை நோக்கிப்போகையில் அங்கே, தெருமுனையில் நேடிவிட்டி ஸீன் வச்சுருந்தாங்க. நின்னு படம் எடுத்தேன். இந்த மீனை எடுங்க ன்னு சிலர் வந்து நின்னாங்க. எல்லோரும் ஆட்டோக்காரர்கள். டொம்னிக், லூர்த்ராஜ், சாரதி, பாஸ்கர், செல்வம், சரவணண், சதீஷ், வின்செண்ட்ன்னு இந்த ஆட்டோ ஸ்டாண்டுக்காரர்கள். எல்லோருமா சேர்ந்து பணம் போட்டு இந்த அலங்காரம் செஞ்சு வச்சுருக்காங்க.. மூவாயிரம் செலவாச்சாம். இப்படிக் கொண்டாடுவதைப் போனவருசம் ஆரம்பிச்சாங்களாம். இதோ..இது ரெண்டாம் வருசம். மைலாப்பூர் டைம்ஸில் இந்த விவரம் வந்துருக்குன்னு அங்கே அந்த பேப்பர் கட்டிங்கை நோட்டீஸ் போர்டில் ஒட்டிவச்சுருக்காங்க. இந்த ஆட்டோஸ்டேண்டுக்குப் பெயர் இருக்கான்னு கேட்டேன். இருக்காம். 'சிம்மராசி சரத்குமார் ஆட்டோ ஸ்டேண்ட்..' ரொம்ப ஆர்வமா அந்த மீன்தொட்டியை விவரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கிறிஸ்மஸுக்கும் மீனுக்கும் தொடர்பு என்னன்னு ஆராயணும். ஒருவேளை வானத்தில் விண்மீன் தோன்றியது என்பதை.......

கோபாலுக்கு நோய் முக்கால்வாசி குணமாகி முகம் தெளிஞ்சுருச்சு. அதான் டாக்குட்டரைப் பார்த்தாச்சே!
கிளம்புமுன் ஒரே ஒரு 'கருத்து'ச் சொன்னேன். "அப்ப ஆட்டோக்காரங்களில் நல்லவங்க(ளும்) இருக்காங்க"

"என்ன மேடம் இப்படிச் சொல்லீட்டீங்க?"

"இல்லையா பின்னே. உங்களுக்குன்னு ஒரு 'பேட் ரெப்யூட்டேஷன்' இருக்கேப்பா."
"அப்படி இல்லை மேடம். ஏர்ப்போர்ட், செண்ட்ரல் இந்த ரெண்டு இடத்துலே இருக்கறவங்கதான் தகராறு செய்வாங்க. அதாலேதான் மொத்தப்பேருக்கும்......"

இந்த ஆட்டோக்களைப் பற்றிய ஒரு விஷயம் ஹிந்துவில் காணக்கிடைச்சது. சென்னையில் மட்டும் 48,350 ஆட்டோகள் ஓடுதாம். ஆட்டோகளின் எண்ணிக்கையைக் கண்ட்ரோல் செய்யறதுக்கு பர்மிட் முறை வந்துருக்கு வயசு 23 முதல் 45 வரைக்குள்ளே இருக்கணும். கொறைஞ்சது எட்டாங்கிளாஸ் படிச்சுருக்கணும். 375 ரூபாய் கட்டணம் கட்டணும் பர்மிட் விண்ணப்பத்துக்கு. இவை அரசாங்கம் நியமிச்ச விதிகள்.
இப்போ 20 வருசமா. பர்மிட் வந்ததும் அதோட அக்காவும் கூடவே வந்து சேர்ந்துக்கிடணுமில்லை. ஊஊஊஊழல். இந்த முன்னூத்தி எழுபத்தியஞ்சு வீங்கிப்போய் இப்போ மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு தனி. சொந்தமா வண்டியும் பர்மிட்டும் சேர்த்து வாங்க்கணுமுன்னா செலவு கொஞ்சமே கொஞ்சம்தான். வெறும் ரெண்டேகால் லட்சம்!!!

சாதாரண ஆட்டோ ஒட்டிகளுக்கு இவ்வளோ ஐவேஜ் ஏது? வட்டிக்கு விடும் ஆட்கள் வேறெத்துக்கு இருக்காங்க? 12 சதமானம் கூட்டு வட்டி. மாசத்தவணை அஞ்சு இல்லை ஆறாயிரம் வரை ஆகுமாம். இதுக்குமே தினம் 200 எடுத்து வைக்கணும். பெட்ரோல் செலவு வேற இருக்கு. சங்கிலியைப் புடிச்சுக்கிட்டேப் போய்க் கடைசியில் பார்த்தால் காசு தின்னும் மக்கள் ....... ஃபைனான்சியர்களும் பர்மிட் வச்சுருக்கும் ஆட்டோ ஓனர்களும். இந்த ஓனர்களில் பலர் *** துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்(??)கள். இதைப் பத்தி இன்னும் கொஞ்சம்விவரம் இருக்கு. வேறொருநாள் பார்ப்போம்.
எப்படியோ மத நல்லிணக்கம் இருக்குன்னு மகிழ்ச்சியோடு ரெண்டு நாளுக்கு முன்னே அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்குப் போனால்....அங்கே இவுங்களை மிஞ்சும்வகையில் இன்னொரு விஷயம் பார்த்தேன். கோவிலின் வலதுபக்கம் தனி மண்டபத்தில் மாதா, அந்தப் பால்க்காரச் சிறுவனுக்குக் காட்சி கொடுத்த சிற்பம் வச்சுருக்காங்க. அங்கே இருக்கும் இரண்டு மாதா சிலைகளுக்கு மக்கள் நேர்ந்துக்கிட்டு புடவை சாத்தறாங்க. புதுப்புடவைகளை மாற்றி மாற்றிக் கட்டிக்கிட்டே இருக்காங்க. அவ்வளோ வந்து குவியுது. குழந்தை வரம் வேண்டி தொட்டில் வாங்கி அங்கே கம்பியில் தொங்கவிடுவதும் ஒரு பிரார்த்தனையா இருக்கு. தொட்டில்களில் குழந்தைக் கண்ணன் இருக்கான். கோபால் சுட்டிக் காமிச்சவுடன், நோ ச்சான்ஸ்ன்னு சொல்லிக்கிட்டே எக்கிப் பார்த்தால் நெற்றியிலே திருமண்ணோடுத் தவழும் க்ருஷ்ணாப் பாப்பா.



அதே இடத்தில் கீழ் வரிசையில் ஒரு சங்கிலியில் பூட்டுகளாத் தொங்கவிட்டுருக்காங்க. இது என்னவகை பிரார்த்தனைன்னு தெரியலை. மெழுகுவத்தி ஏற்றும் இடத்தில் நம்ம ஆள் இருக்கார்.

இங்கேயும் நேட்டிவிட்டி ஸீன்ஸ் ரெண்டு இடத்துலே இருக்கு. அந்த பெரிய வளாகத்துலே இயேசுவின் சரிதை முழுசும் பத்துப்பனிரெண்டு ஸீன்களாக் காட்சியாகக் கண்ணாடிக்கூண்டுலே இருக்கு. அதையெல்லாம் அன்னிக்குத்தான் பார்த்தேன்.



எல்லாமே ஒன்னு. அப்படித்தான் இருக்கணும். இருக்கு.

இதுதான் கடைசிப் பதிவு இந்த வருசத்துக்கு.

அனைவருக்கும் ஆங்கிலப் (??) புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

36 comments:

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

"எந்தா?"

'ம்ஹூக்குலே ஹுண்ணு"

ஏறிட்டுப் பார்த்தக் கடைக்காரர், ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து

" இந்தா இது கழிச்சோ. ....ரண்டு ருபெ"

இந்தச் சம்பவம் இப்போ ரெண்டுபேருக்கும் ஒரே சமயத்தில் நினைவுக்கு வந்து.. புன்முறுவல். ஓசைப்படாமல் அவர் 'ம்ஹூக்குலே ஹுண்ணு' ஜாடையில் சொல்ல நான் 'ரண்டு ருபெ' :-))))

(சும்மாவா சொன்னான் சீயக்காப்பொடி!! (இதுவும் 1500 இல் பார்க்கலாம்)//

ஹைய்ய்யோ, வயிறு வலிக்குதே! சிரிச்சு மாளலை, அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இப்படிச் சிரிச்சு எத்தனை நாளாச்சு???

said...

ஊசி போட்டுக்குங்கன்னு புதுசா ஒரு சிரிஞ்சி எடுத்தார். அப்பாடா..... //

இப்போ சீரியசா, அநேகமா எல்லா மருத்துவமனைகளிலும் ஊசி சிரிஞ்சு நாம வாங்கிட்டுப் போய்க் கொடுத்து ஊசி போட்டுக்கணும், வாங்கிட்டுப் போகலைனா, அவங்க நம்ம கண்ணெதிரேயே புது சிரிஞ்சை எடுத்துட்டு அதுக்கும் சேர்த்து சார்ஜ் பண்ணுவாங்க. இது இருபது வருஷத்துக்கும் மேலே நடக்குது. ஆட்டோ பத்திச் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மை. நானும் ஆர்வக் கோளாறில் தகவல்கள் சேர்த்துட்டு, ஆட்டோ வந்துடுமோனு பயந்துட்டுப் பேசாமல் இருந்துட்டேன். நீங்க எழுதுங்க, ஆட்டோ வந்தால் பார்த்துக்கலாம்! :)))))))))))))

said...

நான் டாக்டர் எம்பிபிஎஸ் தான் பேசறேன்... என்ன டாக்டர் பட்டம் வேனுமா? வீட்டு பத்திரம் வேண்டாம், வித்து காசா கொடுங்க..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....

said...

டீச்சரக்கா, ஊசி விஷயத்தில் முன்னை மாதிரி இல்லை. நாம வாங்கிக்கொடுக்கணும் , இல்லைன்னா அவங்களே எக்ஸ்ட்ரா காசு வாங்கிப்பாங்க. ஊசி போட்டு முடிச்சதும் நம்ம முன்னாலேயே ஒரு பெட்டியில நுழைப்பாங்க, அது அப்பிடியே சடசடன்னு ஊசியை காலி பண்ணிடும், அப்புறமாட்டு சிரிஞ்ச்சை குப்பையில் போட்டுடுவாங்க.

நம்ம தியேட்டரில் படம் ஓடுது, பாத்துட்டு கருத்து சொல்லுங்க.

said...

//''ம்ஹூக்குலே ஹுண்ணு"//

என்னோட புதுவருட தீர்மானம்... காப்பி குடி முடிஞ்சப்புறம்தான் உங்க பதிவை படிக்கணும். :-)))))

"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

said...

iniya puththandu vaazhthukkal!

said...

THATS OK

WISH YOU HAPPY NEW YEAR 2010

Anonymous said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...... http://wp.me/KkRf

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றி.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்

said...

வாங்க கீதா.
அப்போ அந்த புது சிரிஞ்சிக்கும் சேர்த்தே முப்பதுதானா?

ஆஹா ஆஹா....

said...

கீதா,

கடலைக் கடக்குமா 'ஆட்டோ'!!!!

அந்த தைரியம்தான்:-)))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நன்றி நன்றி

said...

வாங்க அண்ணாமலையான்.

ஏற்கெனவே ஒரு வீட்டை அங்கே 'டெண்டல் க்ளினிக்' போனப்ப வித்தாச்சு.

இப்போ இருக்கும் வீடு ஒன்னுதான் தலைமேல் கூரை!

'அங்கே' வந்து பார்த்து நீங்களே ஒரு விலை போட்டு எடுத்துக்குங்க:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இப்பத்தான் 'சர்க்யூட்' முடிச்சு வந்தேன்.

உங்க தியேட்டருக்கு வரேன் இன்னும் கொஞ்ச நேரத்துலே.

இங்கே இவர்கிட்டே ஊசி தின்னும் மெஷீன் இல்லை. மேசைமேல் சிறுகுன்று!

said...

வாங்க குலோ, கலவை & ஆரோன்

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர் ;))

said...

. ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகிறனுமுன்னு முயற்சி செஞ்சு முதல் கட்டமா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன். இனி எதாவது ஒரு பல்கலைக் கழகம் இங்கே டாக்குட்டர் தந்தா வாங்கிக்கிட்டுப் போகணும். மக்கா...என்ன விலை என்ன விவரமுன்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க)//

ஸ்டெத் வாங்கினதிலேயே உங்க டாகுட்டர் தகுது போயாஞ்சு, நீங்க பஞ்சு டயலாக்கு அடிக்கனும், ஆனா பிஞ்சு டயலாக்குதான் அடிக்கறீங்க. ஐ யாம் சாரி டீச்சர்.

இவண்.

குடுகுடுப்பை பல்கலைக்கழகம்.

said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்

said...

ஏன் இந்த ஆண்டு இடுகைகள் எண்ணிக்கை கம்மியா போயிடுச்சி? 134 தான்.

2010 அதிக இடுகைகள் கொண்ட ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

said...

:o.. title super...! matter vanthu padikkaren.. :D

said...

/மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு தனி. சொந்தமா வண்டியும் பர்மிட்டும் சேர்த்து வாங்க்கணுமுன்னா செலவு கொஞ்சமே கொஞ்சம்தான். வெறும் ரெண்டேகால் லட்சம்!!!//

ஆத்தாடி! படிக்கும்போதே பயம்மா கீதே... :(

கிருஷ்ணன் பாப்பா வேளாங்கண்ணித் தொட்டிலில், ச்வீட் :)

இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா!

said...

வாழ்த்துக்கள் டீச்சர்.

அப்போ இனிமே டீச்சரை, டாக்குத்தர்னுதான் கூப்டணுமா? :)

அப்புறம் கதைகளை 2010லயாவது ஆரம்பிச்சுடணும்..ஆமா..சொல்லிட்டேன் :)

said...

Like Geetha said, reading your blog makes us laugh so much. We love your writing.

said...

ஊசி போட்டு,தலைவலி போக்கிய டாக்குட்டர் வாழ்க.
துளசியின் எழுத்து இதே போல எங்களை என்னாளும் மகிழ்விக்க வேண்டும் என்று புத்தாண்டில் வாழ்த்திக்கொள்ளுகிறேன்.

said...

வாங்க கோபி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குடுகுடுப்பை.

நீங்க சொன்னால் ஆச்சா? ஜக்கம்மாகிட்டே போட்டு'கொடுத்து'ருக்கேன். செஞ்சுறலாமுன்னு சொல்லிட்டா:-))))

அந்தப் பிஞ்சுக்கு மாதிரி ஒன்னு எடுத்துவிடுங்க....

said...

வாங்க நசரேயன்.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குறும்பன்.

டார்கெட் 156. ஆனால் பயணம் கூடிப்போய், 22க்கு 'துண்டு' விழுந்துருக்கு:-))))

said...

வாங்க கலகலப்ரியா.

நிதானமாத்தான் வாங்களேன். இன்னும் 364 நாள் இருக்கேப்பா:-)

said...

வாங்க கவிநயா.

ஒருநாள் டொம்னிக் கிட்டே 'நாட்டு நிலவரம் நிதானமாக் கேட்டு; எழுதுனால் ஆச்சு. தோண்டத்தோண்ட வரும் பூதம்:-)))

said...

வாங்க சந்தியா.

புதுவருகையா? நல்வரவு. நலமா?

சிரிச்சு & சிரிக்கவச்சு வாழவேணுமாம்!

நம்ம பொழப்புதான் சிரிப்பாச் சிரிச்சுறக்கூடாது:-))

said...

வாங்க வல்லி.

சரித்திரப்பிழை விட்டால் எப்படிப்பா?

அது கழுத்துவலி. முனி மாதிரி நான் உக்காந்துருக்கேனோ என்னவோ!!!!

said...

வாங்க ரிஷான்..
வருசத்துக்கு அம்பதுன்னு ஒரு 30 வருசம் தள்ளிறலாமில்லை?:-))))

said...

ஆயிரம் தலைப்புகள் தாண்டியும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல். அடேங்கப்பா

said...

வாங்க ஜோதிஜி.

இதையெல்லாம் பார்த்து நிறைகுடம் தளும்பாதுன்னு நினைச்சுக்காதீங்க.

காலிக்குடம் கூடத் தளும்பாதுதான்:-))))