Wednesday, May 12, 2010

முன்னுரிமை 'அது'க்காம்!!!!!

அலங்கார வளைவு வச்சு வரவேற்கும் தேசிய நெடுஞ்சாலையில் கண்குத்திப் பாம்பு போல கண்ணை நட்டுக்கிட்டே இருந்தேன். பாம்பு வந்தவுடன் அதுக்கு ரைட் ஆஃப் த வே கொடுக்கணுமே! முதல்லே பாம்புக்கு வழி விடு! இவ்வளவு வெயிலுக்கு 'அது' வராது. ஒருவேளை இரவிலும், அதிகாலையிலும் நடமாட்டம் இருக்கலாம்னு சொன்னார் கோபால்(உள்ளூர நடுங்கிக்கிட்டே!)
அருமையான ரோடு! நெளிவு சுழிவுகள் இருந்தாலும் குடலைப்பிரட்டும் கொண்டை ஊசி வளைவுகள் கிடையாது.

பாம்பு இல்லைன்னா என்ன? புலி இருக்கேன்னேன், இன்னொரு போர்டைப் பார்த்து:-)) குதிரேமுக் தேசியப்பூங்காவிலூடே போய்க்கிட்டு இருக்கோம். இந்த மலையின் ஒரு ஓரம் 'சட்'னு பார்த்தால் குதிரையின் மூக்கு போல நீண்டு இருக்கு(தாம்) அதான் குதிரை மூக்குன்றதை 'குதிரேமுக்' ன்னு பெயர்க்காரணமாகிருச்சு. நாமோ அதே மலைமேல் இருக்கும் நேஷனல் ஹைவேயில் பயணம் செஞ்சுக்கிட்டு இருக்கோம் இப்போ. எங்கேருந்து ஓரமா இருக்கும் மூக்கைப் பார்க்க?



காடு, அசல் காடா இருக்கு. நம்ம ஜெ.மோவும் லதானந்தும் மனசுலே வந்து போனாங்க.
ப்ரிட்டிஷ்காரர்கள் ஆட்சியிலேயே இந்தப் பகுதியை ரிஸர்வா ஆக்கிருந்தாங்க. அப்புறம் இங்கே மலையின் ஒரு பக்கத்துலே இரும்புத்தாது கிடைக்குதுன்னு மலையைத் தோண்டிச்சுரங்கம் அமைச்சது மத்திய அரசு. ஒப்பந்தப்படி 25 வருசம் தோண்டிக்கோன்னு சொன்னதுதான். 2001 வது வருசம் ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு. அதுக்குப்பிறகு, இன்னும் கொஞ்சம் தோண்டிக்கட்டான்னு கேட்டு மறு ஒப்பந்தம் போட நினைச்சப்ப சுற்றுப்புறச்சூழல் கெட்டுப்போகுது. காட்டுலே இருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கு நல்லதுல்லை, மேலும் சுரங்கத்தில் இருந்து வரும் கழிவு நீர் பத்ரா நதியில் கலந்து மாசு ஏற்படுத்துதுன்னு போராட ஆரம்பிச்சாங்க. இந்தப் போராட்டத்துலே ஊர் மக்களும் கலந்துக்கிட்டு நெருக்கடி கொடுத்ததால் தோண்டும் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சது 2005 வது வருசம்.
மலையின் அடுத்த பக்கம் அனுமதிச்சீட்டைக் கொடுத்துட்டு ஊருக்குள்ளே நுழைஞ்சோம். முதலில் அனுமதி வாங்குனதில் இருந்து ரெண்டு மணி நேரத்துக்குள்ளே நாம் அடுத்த பக்கம் போய்ச்சேர்ந்துறனுமுன்னு விதி இருக்கு. அதுக்கு மேற்பட்டால் ஒரு மணிக்கு 100 ரூபாய் வீதம் தண்டம் கட்டணும். தேசீய நெடுஞ்சாலையில் இருந்து விலகிக் காட்டுக்குள்ளே போகணுமுன்னா அதுக்குத் தனியா அனுமதி வாங்கிக்கணும். இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது வழியில் வண்டியை நிறுத்தறது, வண்டியை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கிறேன்னு காட்டுக்குள்ளே 1 போறது, தீ வைக்கிறது, ஊர்ப்பட்டச் சத்தம் போடறது, வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கறது(???!!!) இதெல்லாம் சட்டப்படி குற்றம்.


எங்கேயும் நிறுத்தாமப்போனா 50 நிமிசம் போதும். நமக்கு? சின்னச்சின்ன வேடிக்கை காரணம் ஒன்னரை மணி ஆச்சு. கொஞ்சதூரத்துலே ரெண்டாப் பிரியும் வழியிலே பொட்டிக்கடை ஒன்னும், 'நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழி' ன்னு அம்பு போட்டுத் தகவல் சொல்லும் பலகை ஒன்னும் இருக்கு. போற போக்குலே அதையும் கண்டுக்கலாமுன்னு போய்க்கிட்டே காட்டுமரங்களைக் கவனிச்சேன். உசரமா இருக்கும் சாலைக்கு ரெண்டு பக்கமும், கீழே இருந்து கிளம்பி வந்து ஹலோ சொல்லுதுங்க.

இன்னும் 'மூணு கி,மீ. நேராப் போ'ன்னு விளக்கம் கிடைச்சது. ஹனுமனgகுண்டி என்ற இடம். சூதனாப்பி வாட்டர் ஃபால்ஸ்(Soothanabbi water falls). காட்டிலாக்கா போலீஸ்(?) தண்ணிகிட்டே போக கட்டணம் வசூலிக்கிறாங்க. 300 படிகள் கீழே இறங்கிப்போகணுமாம். ஐயோ:( ஏற்கெனவே சாப்பாட்டு வேளை தாண்டி, கோபாலுக்கு முகத்தில் சுரத்தே இல்லை...... அன்னாசிப்பழம் அறுத்து ஸ்லைஸ் போட்டு வித்துக்கிட்டு இருந்தாங்க. நான் பயணத்துலே வாயை நல்லா இறுக்கக் கட்டிக்கும் வழக்கம் இருந்ததால் வாயையேத் திறக்கலை. கோபாலுக்கும் ப்ரஷாந்துக்கும் மட்டும் ஸ்நாக்ஸ்.
அடப்பாவிகளா! ஒன்னுவிடாமத் தின்னுட்டீங்களா?



எனக்கு ஆறுதல் பரிசாக , நம்ம மக்கள்ஸ் கண்ணுக்குக் காட்சி கொடுத்தாங்க. குட்டிப்பாப்பா கூட இருந்துச்சு. ஸோ க்யூட்......... க்ளிக்கிட்டுக் கிளம்பினோம். காதம்பரி நீர் வீழ்ச்சி..... ரொம்ப மெலிசாத் தண்ணி.

புலிகள் நடமாடும் ஏரியான்னு ஒரு போர்டு வேற! எங்கே கவனிக்காம இருந்துருவோமோன்னு படம் போட்டு வச்சுருக்காங்க.. பாம்பை விடு, புலியைப் பார்க்கலாமுன்னு போனால் சாலையில் ஒரு நாலைஞ்சு........
பசங்க. கையில் ஒரு தட்டுலே ஏழெட்டு பழம். என்னவா இருக்குமுன்னு பார்க்கலாமுன்னா...எலுமிச்சம்பழமுன்னு கோபால் பளிச்னு ஒரு பதில்.

நான் ஒரு இவ..... சிலசமயம் இப்படித்தான் 'கண்ணை மூடிக்கிட்டு' இவரை நம்பிருவேன்:(

ஆரஞ்சுச் சட்டைதான் நம்ம ராஜா

இன்னும் கொஞ்சதூரம் போனால் எந்த நடமாட்டமும் இல்லாத சாலையில் இன்னும் ஒரு குழுவாப் பசங்க. வண்டியை நிறுத்திப் பார்த்தால் கொய்யாப் பழம்! ஒரு தட்டு 10 ரூபாய். ஒன்னு போதுமுன்னு நாங்க 'பேசு'னதைக் கேட்ட ஒரு சிறுவன், ஆண்ட்டி, எங்கிட்டே வாங்குங்கன்னு தமிழில் சொன்னான். பெயர் ராஜா. தமிழுக்கே முன்னுரிமைன்னு வாங்கினேன். அதான் மூணு பேர் இருக்கீங்களே, ஆளுக்கு ஒரு தட்டு 2 வாங்கினா என்னன்னு இன்னொரு பொடிசு கன்னடத்துலே நியாயம் பேசுச்சு.

பத்ரா நதிப்பாலத்தைக் கடந்தோம். இந்த பத்ரா, நம்ம துங்கபத்ராவில் பாதி. உண்மையில் துங்கா & பத்ரான்னு ரெண்டு நதிகள் தனித்தனியாப் பிறந்து ரொம்ப தூரம் ஓடுனபிறகு அப்புறமா இணைஞ்சுருது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் நேத்ராவதி ஆறும் குறுக்கா ஒரு இடத்துலே போச்சு.

மலையை வீட்டிறங்கி குதிரேமுக் டவுன் போய் சாப்பாடு தேடுனால்..... இங்கே இருக்கும் ஆஃபீஸர்ஸ் கெஸ்ட் ஹவுஸில் கிடைக்குமுன்னு சொன்னாங்க. சாப்பாடு சுமார் ரகம். ஆனா ரெஸ்ட் ரூம் வசதி பரவாயில்லை. இங்கேயே தங்கவும் வசதிகள் இருக்கு.


மத்திய அரசு பொறுப்பேத்து நடத்தும் இடம். ஊரில் கேந்திரிய வித்யாலயா இருக்கு. ஜனநடமாட்டம் அவ்வளவா இல்லாம ஏதோ 'கோஸ்ட் டவுன்' மாதிரி இருக்கேன்னேன். இங்கே சுரங்கத்தைத் தோண்டுவதை நிறுத்திட்டாங்களே. அதனால் தான் இப்படி ஆகிருச்சாம். மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களில் வேலை நின்னு போனாலும்கூட வேலைக்கு வச்சுருந்த ஆட்களை வேலையில் இருந்து எடுக்க முடியாதாம். எல்லோருமா தாமாய் சம்மதிச்சுக் கையெழுத்துப் போட்டால்தான் நிறுவனத்தை மூடுவது சாத்தியமாம். அப்படி இல்லைன்னா? கடைசி மனிதர் ஓய்வு பெறும் வயதுவரை வேலை நடந்தாலும் நடக்கலைன்னாலும் மாதச் சம்பளம் கொடுத்தே ஆகணுமுன்னு ஏதோ விதி இருக்காம்.

நஷ்டஈடுன்னு ஒரு நல்ல தொகை கொடுத்து அனுப்பினால் கூட அரசுக்கு நஷ்டம் வராமல் இருக்குமே! ஆளில்லாத கடையில் டீ கட்டாயமா ஆத்தணுமா?

ஏர் இண்டியாகூட இப்படித்தானே நட்டத்துலே போய்க்கிட்டே இருக்கு. மினிமம் இத்தனை நபர்தான் இருக்காங்கன்னு ஒரு எண்ணிக்கை வரும்வரை இப்படித்தான் போகும். பாதிப்பேர் இளவயதுக்காரர்கள் வேற வேலையைத் தேடிப் போயிருப்பாங்க. பலருக்கு வேற சுரங்கத்துக்கு மாற்றம் கிடைச்சும் இருக்கலாம். ஆனா...... ரெண்டுங்கெட்டான் வயசு ஆட்களுக்குக் கஷ்டம்தான். இந்த வயசுலே வேறெங்கே வேலை கிடைக்கப்போகுது? அதான் மீதம் இருக்கும் வேலையாட்களும் யூனிஃபாரம் போட்டுக்கிட்டு டைமுன்னு வேலைக்கு (??)வந்து கையெழுத்துப் போட்டுட்டு லஞ்சு டைமுக்கு வீட்டுக்குப் போய்வந்து மாலை வேலைநேரம் முடியும்வரை இருந்துட்டுப் போறாங்க.
கோபால் சொன்னது சரிதான் என்றது போல நாலைஞ்சு பேர் க்வாட்டர்ஸ் கேட்டைத் திறந்து வேலைக்கு(?) போய்க்கிட்டு இருந்தாங்க. பேசாம ஆளுக்கு ஒரு லேப்டாப்பும், இணையத் தொடர்பும் இருந்தால்..... நேரம் சுலபமாப் போயிருமுன்னு நினைச்சுக்கிட்டேன்.


15 comments:

said...

வேலை இல்லைன்னாலும் சம்பளமா ஆஆ?!!!

said...

தங்களது வலைப்பதிவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

said...

கையெழுத்து போடறதுக்காவே டைமுக்கு வர்றாங்க போலிருக்கு.

இந்த குதிரேமுக்கில் சினிமா ஷூட்டிங்குகள் நிறைய நடக்கும் போலிருக்கே!!!

said...

//யூனிஃபாரம் போட்டுக்கிட்டு டைமுன்னு வேலைக்கு (??)வந்து கையெழுத்துப் போட்டுட்டு லஞ்சு டைமுக்கு வீட்டுக்குப் போய்வந்து மாலை வேலைநேரம் முடியும்வரை இருந்துட்டுப் போறாங்க.//

ada...ada.... ippadi oru velai enakku kidaicha evlo nalla irukkum. Rest eduthu tired-aaagi rest edukkalame....

said...

எங்கேருந்து ஓரமா இருக்கும் மூக்கைப் பார்க்க?

நானும் யோசிச்சு பாத்தேன். எப்படி மூக்க ப்பார்க்கறது அப்படின்னு....
பக்கத்துலே நின்னுகிட்டு இருக்கற இன்னொரு கிழத்திட்ட கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=HuwhTmM_QGQ


இந்த பாட்ட பாடிகிட்டே போனா பாக்கலாம் அப்படின்னு சொன்னாங்க...


சுப்பு தாத்தா.
http://movieraghas.blogspot.com

said...

நெருப்பு நரியில் சரியாக இருக்கு.

ஆகணுமுன்னு ஏதோ விதி இருக்காம்.
இதைத்தான் விதி என்பது.

said...

வாங்க கயலு.

இதுலே என்ன அதிசயம் ? சட்டசபையிலும் பார்லிமெண்டிலும் வாயைத் திறக்காம உக்கார்ந்தே சம்பளம் கிம்பளம் எல்லாம் வாங்கறவங்களை நினைவு படுத்திக்குங்க:-)))

said...

வாங்க சேட்டைக்காரன்.

ஆஹா...... காத்திருக்கேன்.

கொஞ்சம் நல்லபடியாப் பார்த்துப் 'போட்டுக் கொடுங்க':-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

கையெழுத்துப்போடலைன்னா அட்டெண்டன்ஸ் எப்படி? லீவுன்னு லாஸ் ஆஃப் பே ஆயிறாதா?

சில நாட்களுக்கு முன் பொட்டுவைத்த முகமோ...பாட்டு டிவியில் பார்க்க நேரிட்டது. அதுகூட இந்த ஏரியாபோலத்தான் தெரிஞ்சது.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும்போது சினிமாக்காரர்கள் விட்டுருவாங்களா?

எங்க நாட்டுக்குப் படப்பிடிப்புக்கு வந்தா 'ஆளில்லாத ரோட்டிலேயும், ஷாப்பிங் ஏரியாவில் நடு ரோடில் பாடி ஆடுறதையும் படம்பிடிக்காமப் போகமாட்டாங்க.

கூட்டமான நாட்டுலே இருந்து வர்றவங்களுக்கு கூட்டமே இல்லாத நாடும் தெருவும் அதிசயம்தான்.

said...

வாங்க ப்ரசன்னா.

ஊஹூம்..... வயசானவங்களுக்கு ஒருவேளைத் தோதுப்படலாம்.ஆனால் சின்ன வயசும் முன்னேறணுமுன்னு துடிப்பும் இருக்கறவங்களுக்கு வேலை செய்யலைன்னா பைத்தியம் பிடிச்ச மாதிரிதான்.

தேங்கி நிற்கும் குட்டை:(

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

சரியாப் போச்சு. நாக்கால மூக்கைப் பார்க்க முடியுங்களா? :-)))))

said...

வாங்க குமார்.

எக்ஸ்ஃப்ளோரர்லே பின்னூட்டப் பொட்டி வரலைன்னு நீங்க சொன்னபிறகுதான் பார்த்தேன். ஆனா நரியில் இருக்கே!

நம் வீட்டு 'பின்னூட்ட ப்ரேமி'க்குத்தான் பின்னூட்டங்களைப் படிக்கமுடியலையேன்னு ஏகப்பட்ட வருத்தம்:(

said...

வாங்க வெண்பூ.

//உங்க‌ளோட‌ குதிர‌மூக் ப‌திவுக்கு க‌மென்ட்ஸ் லிங்கே வ‌ர‌லை.. இது அங்க‌ போட‌ வேண்டிய‌ க‌மென்ட்,, :)

1996, 97ல் ரெண்டு மூணு த‌ட‌வை அங்கே போய் இருக்கேன். கே.ஐ.ஓ.சி.எல்லில் எங்க‌ள் ப்ராஜ‌க்ட் ஓடிக்கொண்டிருந்த‌து. ம‌ங்க‌ளூர் சென்று அங்கிருந்து ப‌ஸ் பிடித்து அந்த‌ ம‌லைச்சாலையில் குதிர‌மூக் சென்று, நீங்க‌ள் போட்டிருக்கும் ரெஸ்ட்டார‌ண்டில் சாப்பிட்ட‌து என்று ந‌ன்றாக‌ பொழுது போகும்.. அப்போது மைனிங்க் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தால் ஆட்க‌ள் இருப்பார்க‌ள்.. ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இல்லையென்றாலும் நீங்க‌ள் சொல்வ‌து போல் கோஸ்ட் ட‌வுன் போல‌ இருக்காது.. கேட்க‌வே க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து. //

வெறிச்சோன்னு இருப்பதைப் பார்த்தால் மனசு சோகமாத்தான் போயிருது.

உங்க பின்னூட்டத்தை காப்பி செஞ்சு இங்கே பேஸ்ட் பண்ணி இருக்கேன்.

said...

'குதிரேமுக்'காடு,பா..ம்..பு எல்லாம் ரசித்துக் கண்டுவந்தாயிற்று.

துளசி(செடி)யைக் கண்டால் "அது" வராது என்று சொல்வார்கள். :)

said...

வாங்க மாதேவி.

//துளசி(செடி)யைக் கண்டால் "அது" வராது என்று சொல்வார்கள். :)//

ஆஹா..... கோபாலுக்கு நிம்மதியான சேதி சொல்லிட்டீங்க:-))))