Wednesday, June 16, 2010

வந்த சனமெல்லாம் குந்தணும், குந்தணும்!!!

"ஏங்க கால் வலிச்சா கொஞ்சம் உக்கார்ந்துக்குங்களேன். அதான் எங்கே பார்த்தாலும் ஸ்டூலாப் போட்டு வச்சுருக்கே! "
சுத்தும் முத்தும் பார்த்தவர், 'நீ முதல்லே உக்காரேம்மா'ன்னார்.(விவரம்தான்)

"இது மாமியார்களுக்குன்னே ஸ்பெஷலா செஞ்சது. அவுங்க இங்கே இல்லையேன்னுதான் உங்களை உக்காரச்சொன்னேன்."
இது மாமியார்களுக்கான இருக்கை.


இது? மாமியார்களின் நாக்கு(என்னும் ஆயுதம்)


நான் சொல்லைப்பா. வெள்ளைக்காரங்க வச்ச பெயர். ஆமா.... அது ஏன் மாமியார்கள் என்ற ஒரு இனத்துக்கு வெள்ளைக்காரன் கொடுத்த மரியாதை இப்படி? அங்கேதான் வரதட்சணை கொடுமைகள் எல்லாம் இல்லையே.... அப்படி இருந்துமா? இதுலே மட்டும் லோகமந்தா ஒக்கடேயா????


பஞ்ச்குலா என்னும் பகுதிக்கு (இது சண்டிகர் நகரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு)வந்துருக்கோம். இது சண்டிகர் நகரின் ரெண்டு கைகளில் ஒன்னு. டவுனுக்கு 'நட்ட நடு செண்டர்'லே ஏழு ஏக்கராவுக்கு இந்தக் கள்ளிக்காட்டுக் காவியம் இருக்கு. பார்வையாளர் நேரம் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை. 'கண்ணைத் திறந்ததும் காலையில் ஓடிவர முடியுமா? நாங்கள் போனபோதே மணி ஒரு அஞ்சேமுக்கால் இருக்கும். நுழைவுக் கட்டணம் ஒரு ஆளுக்கு அஞ்சு ரூபாய் கொடுக்கணும். டிக்கெட்டுக் கவுண்ட்டர் எல்லாம் இல்லை. மெயின் கேட்லே நிற்கும் வாட்ச்மேன் டிக்கெட் புத்தகம் வச்சுருக்கார். அவரே டிக்கெட்டைக் கிழிச்சுக் கொடுத்துருவார்.

அச்சச்சோ.....ஆறு மணி ஆகப்போகுதே. இன்னொரு நாள் வரலாமான்னு யோசிக்கறதுக்குள்ளே, நீங்க உள்ளே போய்ப் பார்த்துட்டு வாங்க. இப்ப கேட்டை அடைக்கமாட்டேன்னார். எப்படியும் ஒரு மணி நேரம் ஆகாதா? அதுக்குள்ளே எல்லாத்தையும் பார்க்க முடியுமான்னு என் கவலை. பரவாயில்லை. நின்னு பார்த்துட்டு வாங்கன்னார்.

தேசியக் கள்ளி ( ? எவ அந்த வித்தாரக்கள்ளி ) ஆராய்ச்சி நிலையம். கோபால் பல்பொடி ரேஞ்சுக்கு உலகெங்கும் மெக்சிகோ, யூ.எஸ் ஏ, ஸிம்பாப்வே, ஆஸ்ட்ராலியா, நமிபியா, க்ரீஸ், சவுத் வெஸ்டர்ன் ஆஃப்ரிகா, அப்புறம் உள்நாட்டுலே மும்பை, டெல்லி, சண்டிகர்ன்னு பல இடங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்களும் கள்ளிக்காதலர்களும் கொண்டுவந்து அன்பளிப்பு செஞ்சுருக்காங்க.
வயசு என்னவோ பதினெட்டுதான். ஸ்வீட் எயிட்டீன்! நல்லாக் கிட்டப்போய்ப் பார்க்குமளவுக்கு காங்க்ரீட் பாதைகளுடன் பரந்து விரிஞ்சுருக்கு. பச்சைத்தாமரை அடுக்குகளா ஆரம்பிக்குது தாமரைத்தண்டு ஓங்கி உயர்ந்து வர அதன் உச்சியிலே பூக்கள். ஹைய்யோ!!!!
கிட்டே போகவிட்ட மக்களின் வருகைப் பதிவு:(

வெய்யில் சக்கைப்போடு போடும் இடமா இருப்பதாலும், குளிர்காலங்களிலும் பகலில் 25 டிகிரிவரை வருவதாலும் எதுக்கும் அசையாம பரபரன்னு வளர்ந்து நிக்குதுங்க கள்ளிகள்.
இதோட வகைகள் ஏராளம். அங்கங்கே தாவர இயலின்படி இவைகளின் பெயர்கள் மற்ற விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் வச்சு இருக்காங்க. கள்ளியில் எல்லா வகைகளுமே வளர்ந்து மூத்து நிற்கும்போது பூக்குமாம். அட!
என்ன ஒரு அழகான நிறமுள்ள பூக்கள்!!


சப்பாத்திக் கள்ளின்னு நம்ம பக்கங்களில் இருக்கு பாருங்க. இது இங்கே அருமையாப் பழங்களோடு நிக்குது. வத்தலகுண்டு வாழ்க்கையில் இந்தப் பழங்களைப் பறிச்சுத் தின்னது நினைவுக்கு வருது. தலைப்பக்கம் இருக்கும் காசளவு வட்டம் இருக்கும் முள்ளைக் கவனமா எடுத்தெறிஞ்சுறணும்.

"தொண்டையில் மாட்டுச்சு...அம்புட்டுதான். ஆள் குளோஸ்"

தோழியின் கணீரென்ற குரல் மனசுக்குள் எட்டிப்பார்த்துச்சு.


ஒரு இடத்தில் கண்ணாடி வீட்டுக்குள் நிறைய 'மாதிரிகள்' வச்சுருக்காங்க. உள்ளே போய்ப் பார்க்க முடியாமல் கதவு அடைச்சு இருக்கு. மாலை 4 மணிக்கே இதையெல்லாம் பூட்டிடுவாங்களாம்:(

அங்கங்கே இன்னாரின் குடும்பக் கலெக்ஷன்னு போர்டு போட்ட பகுதிகள் நிறைய இருக்கு. என்ன ஒன்னு ....இந்தக் குடும்பங்கள் எல்லாம் கலெக்ஷனைத் தானம் செஞ்சுருச்சு.
நர்ஸரிக்காக மூணு கட்டிடங்கள் ஒதுக்கி, அங்கே நிறையக் குழந்தைகள் வளர்ந்துகிட்டு இருக்குதுங்க.

ஒரு கொட்டாயில் போன்ஸாய் மரங்கள் வகைவகையாக வச்சு இருக்கு. இந்த போன்ஸாய் வகைகளைப் பார்த்தால் எனக்கு மனசுக்குள்ளே பாவமா இருக்கும். தனிப்பட்ட முறையில் இது ஒரு குரூரமுன்னு நினைப்பேன். கையைக் காலை வீசி மரத்தை அதன் போக்கில் வளரவிடாம........ ஐயோ:(
ஆனால்..... இந்தக் 'கலை' பெரும் பாராட்டைப் பெற்று உலகெல்லாம் பரவி இருக்கு பாருங்களேன்.
ஃபோட்டோ பாய்ண்ட் மாதிரி ஒரு இடம். அறிவிப்பு வேற வச்சுருக்காங்க. இங்கே நின்னு படம் எடுத்துக்கோ!
எனக்கும் கொஞ்சம் இந்த கள்ளிவகைகள் மேல் பிரியம் உண்டு. நாலுநாள் தண்ணி காட்ட மறந்தாலும் பிரச்சனை இல்லை பாருங்க:-))))
நம்ம நியூஸி வீட்டில் கொஞ்சம் சேகரிச்சு வச்சுருக்கேன். அதைப் பற்றிய விவரங்கள் இங்கே இருக்கு. முடிஞ்சால் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_06.html


http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_08.html

சில இடங்களில் உண்மையான பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க. உக்கார்ந்து ரசிக்கலாம். செயற்கைக்குளமா ரெண்டு மூணும், சின்ன நீர்நிலையா குட்டிப்பாலத்தோடு ஒன்னும் இருக்கு. பரவாயில்லைன்னு சொன்னாலும்.... சுத்தம் போதாது:(

இங்கே இந்தத் தோட்டத்தில் நான் இதுவரை பார்க்காத அபூர்வ வகைகள் பலதும் இருக்கு. நல்லா ரசிச்சுப் பார்க்க இன்னொரு நாள்தான் சாவகாசமா வரணும். 3500 வகைகள் இருக்காம்!!!! கள்ளிக்காட்டில் இதிகாசம்?
இப்பவே நேரம் ஏழாகுதேன்னு பதைபதைப்போடு வெளியே வந்தால் நிதானமா தோட்டத்துக்குள்ளே நுழையுது சில குடும்பங்கள். வாட்ச்மேன் டிக்கெட்டு கொடுத்து உள்ளே அனுப்பிக்கிட்டிருக்கார். நம்மிடம், விஸிட்டர்ஸ் புத்தகத்தை நீட்டினார். கருத்தைப் பதிஞ்சுட்டு வந்தோம்:-)))



கள்ளிக்காதலர்களுக்காக ஆல்பம் இங்கே:-)




கடைசி மூன்று படங்களும் அந்த போன்ஸாய் படமும் மகள் தந்த ஒரு 'தையல் ஊசியால் ' பனோரமாவாத் தச்சுப்போட்டது.

PIN குறிப்பு: எந்த ஊர் என்று குழம்பாமலிருக்க குறிச்சொல் கொடுத்துருக்கேன். கவனிக்காதவர்களுக்கு இது சண்டிகர்.

39 comments:

said...

கிட்டே போகவிட்ட மக்களின் வருகைப் பதிவு
kodumai.

said...

mother-inlaw's stool:)
நான் கூட மாமியார்களைப் பத்தி ப்ரு பதிவு போடலாம்னு நினைச்சேன். நீங்க அவங்க உட்கார ஆசனமே போட்டுட்டீங்க:)
சிங்கத்துக்கு கிட்ட காண்பிக்கறேன்.
அப்ப ஃபினிக்ஸும் சண்டிகாரும் ஒரே க்ளைமேட்டா!!!!
முள்ளு கிள்ளு குத்தாம வெளில வந்தீங்களா.:)
தலைப்பு அப்படிப்பா!! ரொம்ப நல்லாப் படம் எடுக்கிறீங்களே.:))

said...

வாங்க குமார்.

'இருக்கை'ப்படவர்கள் எல்லா இடத்திலும் பளிங்கில் பெயரைப் பொறிச்சு வச்சுக்கறாங்க. இருக்கை இல்லாதோர் இப்படிக் கிடைச்ச இடத்தில் பெயரை 'பொரிச்சு' வச்சுடறாங்க.

ஆகக்கூடி பெயர் நிக்க ஒரே அலைச்சல்தான் போங்க :(

said...

//ஒரு கொட்டாயில் போன்ஸாய் மரங்கள் வகைவகையாக வச்சு இருக்கு. இந்த போன்ஸாய் வகைகளைப் பார்த்தால் எனக்கு மனசுக்குள்ளே பாவமா இருக்கும். தனிப்பட்ட முறையில் இது ஒரு குரூரமுன்னு நினைப்பேன். கையைக் காலை வீசி மரத்தை அதன் போக்கில் வளரவிடாம........ ஐயோ:(//

அம்மா பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று முடி நகம் ஆகியவற்றை வெட்டிக்கொள்வதை போலவே போன்சாய். அவைகள் குரூரமாக ஒடுக்கபட்டால் வளர்ச்சி அடையாது.

பெரிய மரத்தின் ஆற்றல் போன்சாயிலும் உண்டு. அஸ்திரேலிய மனிதன் 7 அடி இருக்கிறான். ஜப்பானில் 4 அடியில் இருக்கிறான். அதற்காக இறைவன் அவர்களை வளரவிடாம செஞ்சுட்டதா வருத்தப்படக்கூடாது.

said...

வாங்க வல்லி.

ஒரு ஆல்பம் சுட்டி இணைச்சுருக்கேன் . அதைக் காமிங்க சிங்கத்துக்கு. சிலிர்க்கும் கர்ஜனை இங்கே கேக்கணும் ஆமா:-))))

வெயில் காலம் 46 47 வரை போகுது. குளிர்காலம் 2 டிகிரிவரை போகுமாம். ஆனாலும் அப்போதும் பகலில் நல்ல வெயிலாவும் 25 வரையும் வருமாம். அனுபவிச்சுட்டு இந்த 'மாமை' உறுதிப்படுத்தவா?

said...

போன பின்னூட்டத்தில் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். சண்டிகர் நான் விரும்பும் நகரங்களில் ஒன்று. :) ஒழுங்குமுறை என்பதை வடநாட்டில் கடைபிடிக்கும் சில நகரில் இதுவும் ஒன்று.

said...

ஓரேடியா மரியாதையா இருக்கேன்னு பார்த்தா .. இதா சேதி.. சர்தான்..

:)

said...

ஆஹா... ஏற்பாடெல்லாம் பலமா இருக்கேன்னு வந்து பாத்தா இப்படியா :-))))

பனோரமா தையல் போட்ட சுவடே இல்லாம அழகா இருக்கு.

said...

மாமியாருக்கான இருக்கை, அவங்க நாக்குன்னு படங்களுக்கு நீங்க கொடுத்திருக்கற டைட்டில்ஸ் சூப்பர் டீச்சர். ஹைதையில் என் டீ ஆர் கார்டன்ஸில் சில வகைகள் அழகா வெச்சிருக்காங்க. உங்களுக்கு பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா ஒரு வார்த்தை சொல்லிருப்பேன்.

said...

சூப்பர் டீச்சர். நானும் 'கள்ளி'ப் பிரியன். :-)

வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட கள்ளிகளின் கலெக்ஷன் இருந்தது. வீட்டில கள்ளி இருப்பது வீட்டுக்கு ஆகாதுன்னு யாரோ சொல்லிப் போக எல்லாத்தையும் விருப்பமே இல்லாம தானம் பண்ணவேண்டியதாய்டுச்சு :-(

உங்க பதிவு கொசுவர்த்தியை கொளுத்த வச்சிடுச்சு..திரும்ப கலெக்ஷன் ஒண்ணு ஆரம்பிக்கணும்.. வீட்டை 'கள்ளி'யால் நிரப்பணும். :-)

இப்பவே ஒண்ணு நட்டுவச்சாத்தான் மாமியார் வர்றப்ப உட்காரக் கொடுக்குற அளவுக்கு வளர்ந்துமிருக்கும் :-P

Anonymous said...

உங்க வீட்ல வந்து , நீங்க உக்காருங்கன்னு சொன்னா யோசிச்சு நல்லா பாத்துட்டுதான் உக்காருவேன் :):)

said...

கள்ளி எல்லாம் அழகாக இருக்கு டீச்சர்.தாமரைபூவும்,மாமியார் உட்காரும் ஆசனமும் நன்றாகவே இருக்கின்றன டீச்சர்:))))

said...

கள்ளியில் இம்புட்டு வகைகள் இருக்கிறதா, வியப்பாக இருக்கு, சப்பாத்திக் கள்ளிகள் கிராமங்களில் காணலாம், இங்கே அதன் முள்ளை நீக்கிவிட்டு ஒரு சப்பாத்தி கள்ளி இலை 3 வெள்ளி வரை விற்கிறார்கள். சாறு பிழிஞ்சு குடிப்பார்கள் போல.

ஊருல குச்சி குச்சிகாக ஒரு வகை இருக்கும், அதை நெருப்பில் காட்டி காதில் சொட்டுகளாக பிழிந்துவிட்டால் காதுவழி பறந்துடுமாம்.

பச்சைத் தாமரைப் போல பரந்து படர்ந்திருக்கும் கள்ளிப் படம் கலக்கல், கள்ளியிலேயே அதுதான் அழகான 'கள்ளி' :)

said...

டீச்சர்!
எனக்கு ஒரு ஸ்டூல் பார்சல் அனுப்ப முடியுமா? ( இந்த பதிவை பார்த்து இப்படி கேட்டது நான் இல்லை. என் பக்கத்தில் இருக்கும் நபர்):-))

said...

//இது மாமியார்களுக்குன்னே ஸ்பெஷலா செஞ்சது. அவுங்க இங்கே இல்லையேன்னுதான் உங்களை உக்காரச்சொன்னேன்."//

இதுதான் துள்சி குசும்புங்றது!!!!

ஏன் வருங்கால மாமியார்களும் உக்காரலாமே!!!

said...

வித்தார துள்சி கள்ளிக்காட்டுக்குள் நுழைந்த கதை அற்புதம்!!!படங்களெல்லாம் பிரமாதம். அதுவும் அந்த பூத்து குலுங்கிக் கொண்டிருக்கும் கள்ளி!!!
மொத்தத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு மினி..மினி..க்காவியம்!

said...

//இதுலே மட்டும் லோகமந்தா ஒக்கடேயா????//
அல்லாகே அனுபிஸ்துந்தி....

//'நட்ட நடு செண்டர்'லே//
"நடு"னாலும் "செண்டர்" னாலும் ஒண்ணு தானே.... இப்போ மாத்திடாங்களோ

படம் எல்லாம் அழகா இருக்குங்க...

said...

முள்செடின்னாலும் அதோட பூ எவ்வளவு அழகு பாருங்க.. சூப்பர், எல்லா படங்களுமே.

said...

அடிகள்ளி...அழகுக்கள்ளி....
மாமியார்களுக்கு... இடியா:)

said...

வாங்க ஸ்வாமிஜி.

வணக்கம்.

மனிதர்கள் வெவ்வேற உயரம் இருப்பது அவர்கள் பரம்பரைப்படிதானே?

சீனாவில் பாருங்க முந்தியெல்லாம் சிறிய பாதங்கள்தான் பெண்களுக்கு இருக்கணுமுன்னு பாதங்களைக் கட்டியே வைப்பாங்களாம். நம்ம ஜெயந்தி சங்கர் அவர்களின் 'சீனப்பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூலில் வாசிச்சு இருக்கேன்.

ஆஃப்ரிக்க நாடுகள் ஒன்னில் பெண்களுக்குக் கழுத்து நீண்டு இருக்கணுமுன்னு அடுக்கடுக்கா வளையங்களைப் போட்டு வைக்கிறாங்க. இயற்கையா வளரவிடாமல் இப்படிச் செய்வது கொடுமைன்னு மனித உரிமைக்கழகமும் சொல்லுதே.

செடிகளும் அப்படித்தான் இல்லையா? இது என்னோட சொந்தக் கருத்துதான். நான் அப்படி உணர்கின்றேன்.


சண்டிகர் நகரமும் முன்பு இருந்தது போல இல்லையாம். சில முதியோர்களிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, வாகனங்கள் பெருகி விட்டதாகவும், கூட்டம் அதிகமாகிருச்சுன்னும் சொன்னாங்க.

நகரத்தின் முக்கிய வீதிகளைவிட்டு உள்ளே வந்தால் அங்கங்கே கண்ணை உறுத்தும் அழுக்கு:(

said...

வாங்க கயலு.

மரியாதைக்கு இங்கே என்னப்பா குறைச்சல்? அதுவும் பெரியவங்களுக்கு கொடுக்கவேண்டியதுதானே?

நான் மரியாதையைச் சொன்னேன்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

நான் ஒரு நல்ல தையல்காரி:-))))

'ரெடிமேட்'வாசிச்சுருக்கீங்களா?

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அச்சச்சோ.... இந்தப்பெயர்கள் நான் கொடுக்கலைப்பா:(

தொரைமாருங்க வச்ச பெயருங்க அவை!!!!

உங்கூர் கார்டன் போக நேரமில்லாமல் போச்சுங்க. நீங்க பேச்சுவாக்கில் அந்தத் தோட்டம் பற்றிப் பொதுவாச் சொன்னீங்கதான். ஆனால்.... வாய்க்கலை நமக்கு.

said...

வாங்க ரிஷான்.

தானம் செஞ்சுட்டீங்களா???? அச்சச்சோ....அடுத்தமுறை தானம் எனக்குக் கொடுங்க.

சீக்கிரம் நட்டுவையுங்க. சுபஸ்ய சீக்ரம்.

ததாஸ்து!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

உக்காரும் அளவுக்கு பெருசு நம்மூட்டுலே இல்லைப்பா:(

தைரியமா வாங்க:-)

said...

வாங்க சுமதி.

எனக்கும் அந்தப் பச்சைத்தாமரை ரொம்பப் பிடிச்சதுப்பா.

said...

வாங்க கோவியாரே.

வைத்தியத்துக்குன்னா பரவாயில்லை.

காது வழி (?) எங்கே பறந்துருமாம்:-)))

ஊருலே ஒரு வகைக் கள்ளி பொண்குழந்தைகளுக்கு எமனா இருக்குதுங்களே:(

said...

வாங்க அபி அப்பா.

பக்கத்துலே நிற்கும் பாசமுள்ள நபர் கேட்டது உங்களுக்காகத்தான்:-))))

நீங்க நின்னா அவுங்க மனசு தாங்காது கேட்டோ!!!!

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கிறென்.

said...

வாங்க நானானி.

வருங்கால மாமியார்..... ஆஹா... வரிசையிலிருப்பது யாரு யாரு:-))))

வித்தாரக் கள்ளியெல்லாம்
விறகொடிக்கப் போனாளாம்
கத்தாழை முள்ளுவந்து
கொத்தோட குத்திருச்சாம்.....

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

இப்படி அப்பாவியா இருந்தா எப்படிங்க பொழைக்கப்போறீங்க!!!

ரெண்டும் ஒன்னான்னு 'கேட்டுக்கதவு'கிட்டே நிக்கும் மனுசரைக் கேட்டுச் சொல்லவா?

said...

வாங்க டி பி ஆர்.

அழகுதான். ஆனால்..... ஆசையாப் பறிச்சுத் தலையில் வச்சுக்க முடியலையே;-))))

said...

வாங்க மாதேவி.

இது மாமியார்களுக்கு தொரைமார் கொடுத்த இடி!!!!

said...

//நான் ஒரு நல்ல தையல்காரி:-))))

'ரெடிமேட்'வாசிச்சுருக்கீங்களா?//

நல்லாக்கேட்டீங்க போங்க..ரெண்டு வருஷமா உங்க பதிவை படிக்கிறேனாக்கும். எனக்கு நேரப்போக்கே உங்க வீட்டுல சுத்தறதுதான். ஒவ்வொரு இடுகையையும் எத்தனைமுறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது :-))

said...

கள்ளிச்செடிகளுக்குள்ளே இத்தனை வகைகள். இயற்கையின் ஆச்சரியம். ம்ம்.. நமக்கடுத்த தலைமுறை இதைப் பார்க்கக் கூட கொடுத்து வைத்திருக்காது. அழகான பதிவு. நன்றி திரு.துளசி கோபல்.

said...

கள்ளிச்செடிக்குள்ளே இருக்கும் வகைகள் இயற்கையின் ஆச்சரியம். நமது அடுத்த தலைமுறை இதை பார்க்க கொடுத்துவைத்திருக்குமா என தெரியவில்லை. இரசனையான பதிவு. நன்றி திரு.துளசிகோபால்.

said...

மேடம் தலைப்பும் படங்களும் சூப்பர்! :-)

உட்கார்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்னு நினைத்து பார்த்தேன் ..ம்ஹீம் முடியல

said...

அமைதிச்சாரல்.

ரெடிமேட் இன்னும் பாதியில் நிக்குது. வெட்டுனதைத் தைக்க நேரமில்லைப்பா:-))))

சீக்கிரம் எழுதி முடிக்கணும். மூளையில் ஒரு முடிச்சு:-)

said...

வாங்க ஜானகிராமன்.

வணக்கம்.

முதல்முறையா வந்துருக்கீங்க. நன்றி.

வருங்காலச் சந்ததிக்குன்னு இப்படி எங்காவது சேர்த்து வச்சுக் காட்டுனால்தான் உண்டு.

கூட்டம் பெருகி வரும் வேகத்தைப்பார்த்தால் மனுசனைத்தவிர வேற எதுவுமே தங்காது என்பதுதான் கவலையா இருக்கு.

இப்பவே ஏராளமான உயிரினங்கள் 'மறைஞ்சு' போய்க்கிட்டு இருக்கு:(

said...

வாங்க கிரி.

நீங்க ஏன் உக்கார்ந்து பார்க்கணும்?

வெள்ளைக்காரன் சொல்லைக் கேக்கமாட்டேன்னு விரதமா? :-))))