Tuesday, July 27, 2010

ஆத்தாடி மாரியம்மா........................(தாய்லாந்து பயணம் பகுதி 7)

சாந்தி எட்டரைக்குத்தானே வருவாங்க அதுக்குள்ளே வெளியே போய் வரலாமுன்னு கிளம்புனோம். இன்னிக்கு சிலோம் ரோடு மாரியாத்தாவைக் கண்டுக்கிடலாமுன்னு திடீர்த் திட்டம். டாக்ஸி கூப்பிடறேன்னு சொன்னவரிடம், இங்கே இருக்கும் டுக்டுக்லே போய்ப் பார்க்கலாமுன்னேன். நாற்சந்தியில் தெருமுக்கு திரும்புனதும் கூடையில் பூக்கள் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. மூணு வாங்கினால் அம்பது பத்.

இங்கே பாங்காக்கிலே கோவிலுக்குன்னு ஒரு விதமான பூச்சரம் விக்கறாங்க. ஒன்னு 20 பத். மல்லிகையைச் சின்ன வட்டமாக் கோர்த்து அதிலிருந்து குஞ்சலம்போல் தொங்கும் டிஸைனில் ஒருவித வெள்ளைப்பூவும் ரோஜா, சிலசமயம் சாமந்தின்னு கோர்ர்த்துவிடறாங்க. அந்த வெள்ளைப்பூ பார்க்கறதுக்கு அசப்பில் எருக்கம்பூ போல இருக்கு.
மல்லி இருக்கே, வாங்கித் தலையில் வச்சுக்கலாமேன்னு ஒன்னு வாங்கினா.....கோபாலுக்குப் பதற்றம் வந்துருச்சு. வட்டமா இருக்கும் மல்லிகை மட்டும் வெட்டி எடுத்துக்கலாம். கீழே உள்ள குஞ்சலம் சாமிக்கு மட்டும்தான் போலன்னு (மனுஷனுக்கு மஹா கற்பனை) குறுக்கே பாயறார். சண்டை வேணாமுன்னு நானும் தலையை ஆட்டினேன். பார்த்தவரை யாரும் தலையில் பூச் சூடிக்கலை. யாருக்கும் நீளமுடியும் இல்லை.
தாய் எழுத்துக்களில் எண்களுக்கான குறிகளோடு மணிக்கூடு ஒன்னு இருக்கு. ஒன்னு முதல் பனிரெண்டுவரை 'தாய் மொழி'யில் எண்கள் தெரியும் எனக்கு. கடிகாரத்தை எப்போ வேணுமுன்னாலும் காமிங்க. சரியான நேரத்தை மிகச்சரியாச் சொல்வேன்:-))))

எதிர்வரிசையில் கண்ணைக்கவரும் விதத்தில் சராங் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. யானைகள் போட்ட ஒன்னை பேரம் பேசி வாங்கினேன்.
குலோப்ஜாமூன்களைக் கோர்த்துவிட்டமாதிரி ஒரு ஐட்டம். எதோ நான்வெஜ் சமாச்சாரம். சாஸேஜ்? இருக்கலாம்.

மேம்பாலத்தில் நடந்து ZEN செண்டர் பக்கம் இறங்கி, அங்கே ஸ்டேண்டில் நிற்கும் டுக்டுக் பேரம் பேசினால் 200 பத் ஆகுமாம். அப்புறம் பேரம் 150க்குப் படிஞ்சது. நம்மூர் ஆட்டோ போலத்தான். ஆனால்....ஏறி....உக்காரக் கொஞ்சம் உசரமா இருக்கு. எஞ்சின் போடும் சத்தத்தையே இதுக்குப்பேரா வச்சுருக்காங்க:-) ( சண்டிகரில் இதுக்கு ஃபட் ஃபடி ன்னு பெயர்) மீட்டர் எல்லாம் இருக்கு. ஆனால் அது பயன்பாட்டில் இல்லை. டாக்ஸிகளில் 1 மீட்டர் இருக்கு. போடவும் செய்யறாங்க. டாக்ஸி தலையில் டாக்ஸி மீட்டர்ன்னு ஒரு சைன்போர்டு உக்கார்ந்துருக்கு.

Tuk Tuk சார்ஜ் அதிகமுன்னு புலம்பினதுக்கு , நேரம் பாருங்க அஞ்சு மணி ஆகிருச்சுன்னு சொன்னதின் சூக்ஷுமம் அப்போ எனக்குப் புரியலை. கோபாலும் ட்ராஃபிக் அதிகம் இருக்கும் நேரமுன்னு டுக்டுக் காரருக்கு சப்போர்ட் செய்யறார்,

'சலோ... சிலோம் ( SILOM )ரோடு'ன்னு போகும்போது எங்கெங்கியோ சந்து பொந்து, சின்னத்தெருக்களில் நுழைஞ்சு அப்பப்ப மெயின் ரோடு போக்குவரத்தில் மாட்டி, கார்களின் வரிசைக்கிடையில் புகுந்து போய் (நம் சென்னை ஆட்டோக்காரர்களுக்கு ஈடான செயல்!!!) ஆட்டோக்காரர்களின் இலக்கணப்படி பிழை இல்லாம அரைமணி நேரத்தில் கோவிலுக்கு எதிர்புறம் மெயின் ரோடில் கொண்டு போய் நிறுத்தி,'அதோ கோவில்'னு கையைக் காட்டுனார். கோவில் வாசலில் கொண்டு விடணுமுன்னு சொன்னதுக்கு, ரொம்பச் சுத்திக்கிட்டு எதிர்வரிசைக்குப் போகணுமேன்றார். நடுவில் மீடியன் வச்ச ஆறு லேன் ட்ராஃபிக். விர்விர்னு கார்கள் பறக்குது.
பாங்காக்கில் தமிழ் எழுத்துக்கள்.

நான் ஒரு மாதிரியா முழிச்ச உடனே..... 'வாங்க என்கூட'ன்னு அவரே போக்குவரத்தைக் கடந்து எங்களைக் கூடவே 'நடத்திக் கொண்டுபோய்' கோவில் வாசலில் விட்டுட்டு இப்பக் கோவில் வாசல் வந்தாச்சுன்றார்:-)))
இது எப்படி இருக்கு!!!!!
வடக்குவாசல் கோபுரம்


சின்னக்கோபுரமா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன். தேவிகள் உருவங்கள் உள்ள அலங்காரக்கதவு பிரமாதம். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்ற தகவல். 'ஓம் சக்தி ஓம்' னு தொடர்ச்சியா ஒரு குரல் ஜெபிச்சுக்கிட்டே இருக்கு.

இப்பெல்லாம் கோவில்களில் இருட்டுக்குள் இருக்கும் சிவனுக்கும் சரி, நகைநட்டு ஜொலிப்போடு இருக்கும் பெருமாளுக்கும் சரி 'ஓம் நமசிவாயா, ஓம் வெங்கடேசாய நமஹ'ன்னு சாமிக்கேத்தபடி இடைவிடாமல் ஒலிக்கும் இப்படி ஒன்னை வச்சு ஆன் செஞ்சு விட்டுடறாங்க. ஆகமவிதிகள் இதைப்பத்தி என்ன சொல்லுதோ?

வலது பக்கம் ஒரு தோட்டம் போல ஒன்னு. எல்லாம் ஒரே டிஸைனில் இருக்கும் பெரிய பெரிய அலங்காரத்தொட்டிகளில் மரங்கள். இடது பக்கம் கோடியில் நாற்புறமும் திறந்த மண்டபத்தில் ஒரு நான்முகமுள்ள தேவி. அடுத்ததாக ஒரு சந்நிதி நவகிரகங்களுக்கு. எதிப்புறம் காசி விஸ்வநாதருக்கு ஒரு தனிச் சந்நிதி. நவகிரங்களைக் கடந்தால் நமக்கிடதுபுறம் வெளியே போகும் ஒரு வாசலும் நேரெதிரா வலதுபுறம் மஹாமாரியம்மன் கோவில் மூலவர் சந்நிதியும்! அப்புறம்தான் தெரிஞ்சது இதுதான் மெயின் வாசல். ராஜகோபுரம் இங்கேதான் இருக்கு. கிழக்குப்பார்த்த சந்நிதியும் ராஜகோபுரமும். நாம் நுழைஞ்ச சின்னக்கோபுரம், சிலோம் ரோடு பக்கம் பார்க்கும் வடக்கு வாசல்.
நான்முகதேவி. கோவிலுக்கு வெளியில் இருந்து எடுத்தபடம்

கருவறை முன்மண்டபத்துலே இடப்பக்கம் உற்சவ மூர்த்திகளா அழகான வெங்கலச்சிலைகள். எல்லாம் பெரிய சைஸ்களில். பிள்ளையார், புத்தர், ஷக்தி, நடராஜர், புல்லாங்குழலோடு இருக்கும் வேணு கோபாலன், வீணையோடு சரஸ்வதி......

மூலவராக உமாதேவி. கையில் ஒரு திரிசூலம். வலப்பக்கம் தனிச்சந்நிதியில் கணேசரும் இடப்பக்கம் தனி(யா) முருகனும்.

குருக்கள் தூத்துக்குடிக்காரர். வந்து ஆறேழு வருசமாகுதுன்னார். தீபாரதனை காமிச்சு பூ, குங்குமம் விபூதிப் பிரஸாதங்கள் கொடுத்தார்.
கருவறை விமானம்

முன்மண்டபத்துக்குமேல் இருக்கும் சுதைச்சிற்பம்

கருவறைக்கு வெளியில் இருக்கும் முன்மண்டபத்தில் தாய் ஸில்க்லே செஞ்ச ஒரு பெரிய புள்ளையார் நின்னுக்கிட்டு இருக்கார். வெளியே வந்து கோவிலை வலம் வந்தால் வளாகத்தின் சுவரையொட்டிய மண்டபத்தில் மூன்று மாடங்களில் அய்யப்பன், சப்தமாதாக்கள், காத்தவராயன், அவன் மனைவிகள் இருவர், ஒரு பூசாரி ன்னு இருக்காங்க.. பின்பக்கம் கருவறைச்சுவரில் சின்னச்சின்ன மாடங்களில் தேவியின் பல்வேறு உருவங்கள் சிலைகளா இருக்கு.
தலவரலாறு!

மனுஷன் எங்கே போனாலும் தன் மதத்தையும் கடவுளையும் கூடவே கொண்டு போவான் என்ற வழக்கப்படி இங்கேயும் முதன்முதலில் வந்த இந்திய மக்களால் 1879வது வருசம் சின்னதா ஒரு கொட்டகையில் ஆரம்பிச்ச கோவில் இந்த 131 ஆண்டுகளில் தென்னிந்தியக் கட்டடக் கலையழகோடு பாங்காக்கிலே ஒரு லேண்ட் மார்க்கா ஆகி இருக்கு. சிலைகள் எல்லாம் இந்தியாவிலே இருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க. நாங்க அங்கே சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்த நேரத்தில் தாய் மக்கள் பலர் வந்து சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. வேற்றுமை அவுங்களுக்கும் இல்லை நமக்கும் இல்லை1


நவராத்திரி/தசராப்பண்டிகை ரொம்ப அமர்க்களமாக் கொண்டாடுவாங்களாம். கடைசி நாளன்று சாமிகள் ஊர்வலம் கூட உண்டாம். அன்னிக்கு இந்தத் தெருக்களில் போக்குவரத்தை நிறுத்திட்டு கடவுளர்களின் நகர் வலத்துக்கு ஏற்பாடு செஞ்சு தருமாம் அரசு.
ராஜகோபுரம். கிழக்குவாசல்

பக்தி சமாச்சாரங்கள் விற்கும் கடை. அம்மன் பாட்டு சி. டி.க்கள் ஏராளம். பாட்டு முழங்கிக்கிட்டே இருக்கு.

ராஜகோபுரம் வழியாக வெளியில் வந்தோம். கோவில் வாசலுக்கு எதிரா கலைப்பொருட்கள் விற்கும் கடைப்பெயர் மாரியம்மா!!! அடுத்து இருக்கும் ஒரு ஸெவன் லெவன் கடையில் போய் ஒரு சிம் கார்டு வாங்கிக்கிட்டோம். ப்ரீபெய்டு. அம்பது பத். தொடர்புக்குன்னு ஒன்னு வேண்டி இருக்குதானே? சிங்கை போல பாஸ்போர்ட் எண் எதுவும் தேவை இல்லை. லாலிப்பாப்போ, முட்டாயோ வாங்குவதுபோல காசைக் கொடுத்துட்டு வாங்கிக்கலாம்.

அந்தத் தெருவே கலகலன்னு தென்னிந்திய நாட்டுலே இருக்கும் ஒரு தெருவைப்போல இருக்கு, கொஞ்சூண்டு குப்பைகள் உட்பட!
சிலோம் ரோடில் ஒருத்தர் பெரிய தோசைக்கல்லைச் சூடாக்கி 'பேன் கேக்' மாதிரி ஒன்னும் செஞ்சுக்கிட்டு இருந்தார்



ஏழரை ஆச்சேன்னு கிளம்பினோம். டுக் டுக் ஓட்டுனரிடம் எரவான் கோவிலுக்கு எவ்வளோ சார்ஜ்ன்னால் அவர் தாய் நடன ஸ்டைலில் கைகளால் அபிநயம் புடிச்சுக் காமிச்சுட்டு எம்பது பத்ன்னார். அடிச்சுப்புடிச்சு அறைக்கு வந்தப்ப மணி 7.50. எட்டரை மணியாகியும் புன்னகை வரலை. ஆனா அவுங்க ஃபோன் வந்துச்சு. ஏழரைக்கு வந்துருந்தாங்களாம். (ஐயோ!) நாங்க இல்லைன்னதும் சாப்பாட்டுப் பையை கீழே வரவேற்பில் கொடுத்துட்டுப் போயிருக்காங்களாம். அடடா...... கிளம்புமுன் ஒரு ஃபோன் போட்டு வெளியே போறோமுன்னு சொல்லி இருக்கலாமோ:(

எட்டரை மணிக்கு வரேன்னு சொன்னதைமட்டுமே மனசுலே வச்சுக்கிட்டதால்.......
மன்னிப்புக் கேக்கவேண்டியதாப் போச்சு.

சின்னவயிறு மக்களைக் கணக்கில் எடுக்காம இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா வயிறுக்கான உணவும் அந்தப் பையில் இருந்துச்சு. அதிகப்படி இருந்ததை எடுத்து அறையில் இருந்த ஃப்ரிட்ஜில் வைத்தேன்.

தொடரும்...............:-)

29 comments:

said...

விவரிப்பை கையில் வைத்துக்கொண்டு பேங்காக் நகரை சுற்றி வரலாம்..

எனக்கு மிகவும் பிடித்தது தாய் மக்களின் புன்னகை.. எதிர்படும் யாவரும் ஒரு முகமலர்ந்த புன்னகையை தந்து செல்வார்கள் பாருங்கள் அற்புதம்..

மாரியம்மன் கோவில் நன்றாக பராமரித்து வைத்திருப்பார்கள்..

தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டங்கள் இட முடிவதில்லை...

said...

வாங்க நட்சத்திரமே!!!!

திடீர்னு நம்ம வீட்டில் இப்படி ஒரு ஜொலிப்பு ஏன்னு ஒரு வினாடி திகைச்சுட்டேன்!!!!

புன்னகையைப் பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.அங்கிருந்து எழுதும் நம்ம பதிவுலகத்தோழி ஒருத்தர் 'புன்னகை தேசம்' என்றுதான் பதிவுக்கே பெயர் வச்சுருக்காங்க.

நட்சத்திர வாரத்தில் ரொம்ப வேளைப்பளு இருக்கும் சமயத்திலும் கனிவோடு அனுப்பிய பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

said...

சிலோம் சாலை மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் இருந்த ஹோட்டலில் தான் நான் தங்கி இருந்தேன்.

அங்கு கோவிலுக்கு அருகில் வட இந்திய / தென்னிந்திய / இலங்கை உணவகங்கள் கூட இருக்கு.

said...

அந்த வலைதோசை நல்லா இருக்கே ட்ரை செய்யலாமா.?

said...

வாங்க கோவியார்.

அந்த செண்ட்ரல் சிலோம் டவருக்குப் பக்கத்திலா? இல்லே அதுவே ஹொட்டேல்தானா?

உணவுக்கடைகள் நிறைய இருப்பதை நானும் கவனிச்சேன். நமக்குதான் பதிவர் சாந்தியின் உபசரிப்பு இருக்கேன்னு எங்கேயும் நுழையலை. காஃபி வொர்ல்ட்லே ஒரு கப்புச்சீனோ மட்டும் குடிச்சோம்.

said...

வாங்க கயலு.

'வலைத்தோசை' அடடா..... என்ன ஒரு அழகான சொல்லாட்சி!!!!!


எனக்குத் தோணலை பாருங்க:(

நான் ஒரு காலத்துலே உலகநாடுகள் சப்பாத்தி செஞ்சுக்கிட்டு இருந்தேன்!

அது ஆரம்பகால வாழ்க்கை. இப்போ முழுநிலவு:-))))

said...

"நான் ஒரு காலத்துலே உலகநாடுகள் சப்பாத்தி செஞ்சுக்கிட்டு இருந்தேன்!

அது ஆரம்பகால வாழ்க்கை. இப்போ முழுநிலவு:-))))" 'வாழ்க்கை ஒரு வட்டம்' :-)

அக்கா! நான் பின்னூட்டத்துக்கு புதுசு. கடந்த ஒரு மாதமாக உங்கள் பதிவுகள் என்னை கட்டி போட்டுள்ளன. Simply Superb...

said...

வாங்க டாடி அப்பா.

பதிவுலகத்துக்குப் புதுசுன்னா ரொம்பவே நல்லதாப்போச்சு:-))))))

நல்வரவு.


நம்ம பதிவுகள்/ இடுகைகள் ஒரு ஆயிரத்துக்கும் மேலே இருக்கு. நின்னு நிதானமாப் படிச்சுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போகலாம் நேரம் கிடைக்கும்போது.

said...

ஒவ்வொரு நாளும் பார்த்ததை அப்பவே குறிப்பு எடுத்துடுவீங்களா?

இல்லை ராத்திரி உட்கார்ந்து யோசித்து எழுதுவீங்களா?

பிரமிப்பா இருக்கு.

நுணுக்கத்தைப் பார்த்து

said...

சுவராஸ்யமா இருந்தது..போட்டோஸ் அற்புதம்...

said...

அந்த பூச்சரம் கல்யாணப்பெண்ணின் அலங்காரத்திற்கு செய்வது போல் உள்ளது டீச்சர்.மாரியம்மன் கோவிலும் பார்க்க நன்றாக உள்ளது டீச்சர்.

said...

படங்கள் விளக்கம் எல்லாமும் சூப்பர்

said...

//இப்பெல்லாம் கோவில்களில் இருட்டுக்குள் இருக்கும் சிவனுக்கும் சரி, நகைநட்டு ஜொலிப்போடு இருக்கும் பெருமாளுக்கும் சரி 'ஓம் நமசிவாயா, ஓம் வெங்கடேசாய நமஹ'ன்னு சாமிக்கேத்தபடி இடைவிடாமல் ஒலிக்கும் இப்படி ஒன்னை வச்சு ஆன் செஞ்சு விட்டுடறாங்க. ஆகமவிதிகள் இதைப்பத்தி என்ன சொல்லுதோ? //

இதுகூட எலக்ட்ரானிக் மேளதாளத்தையும் சேத்துக்கலாம்..

முதல் படத்தில் இருக்கறது வெள்ளெருக்கம்பூ மாதிரிதான் இருக்கு..

said...

ஆகா...இப்படி கூட தோசையா..சூப்பரு ;)

said...

மாரியம்மா கோவில் கலர்ஃபுலா இருக்கேப்பா. அந்தப் பூ கூடத்தான். தலைலே வச்சுட்டு ஒரு போட்டொ அனுப்பி இருக்கலாமில்ல.
படங்களைப் பார்க்கும்போது ஒரு மழை வாசனை வருதே. மழை பெய்ததோ.தோசை நல்லா இருந்தது. நான் அது வேற என்னவோ ன்னு நினைச்சேன்:) ப்புவான பூ. படங்கள் பூராவும் பூவாக இருக்கு.அழகு.

said...

வாங்க தமில் டிஜிட்டல் சினிமா.

அப்டீங்கறீங்க????????

செஞ்சுருவோம்:-)

Anonymous said...

பூ நம்ம ஊர்ல தொடுக்கற மாதிரியே தொடுத்திருக்காங்க. அட்டாச்மெண்ட் மட்டும் வித்தியாசமா இருக்கு

said...

வாங்க ஜோதிஜி.

நல்ல கேள்வி!!!!!


குறிப்பெல்லாம் எடுக்கறது இல்லை.

யானையாச்சே.............மறக்காது.

ஆனா வயசான யானையா இருப்பதால் நினைவைத் தூண்ட ஒரு சின்ன அங்குசம் வேணும்.

அதுதான் இப்போதைக்கு டிஜிட்டல் ஃபோட்டோஸ். ஒரு படத்தைப் பார்த்ததும் அது சம்பந்தமா நடந்த அத்தனையும் மனசுக்குள்ளே வந்து மணை போட்டுரும்.

said...

வாங்க மேனகா.

நன்றிப்பா.

said...

வாங்க சுமதி.

இப்படியா கல்யாணப் பொண்ணுக்குச் செய்யறாங்க????

அட!

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

அரியர்ஸ் எல்லாம் கையில் எடுத்தாச்சா?

said...

வாங்க அமைதிச்சாரல்.

மின்சார மேளமாவது பரவாயில்லை. பூஜை சமயத்துலே மட்டும்தான்
கொஞ்சம் கலகலப்பாகும். ஆனா இது 24 மணி நேரமும்.....................:(

said...

வாங்க கோபி.

அது என்ன வெறுந்தோசையா? வலைத்தோசையப்பா வலைத்தோசை:-)))

said...

வாங்க வல்லி.

நோ ஸைன் ஆஃப் மழைப்பா!!!!

கோபுரச்சிற்பங்கள் கூட ரொம்பக் கலர்ஃபுல்லா இருந்துச்சுப்பா. படம் எடுக்கத்தான் அனுமதி இல்லை:(

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஊசியே ஒரு முக்காலடி நீளம். அதைவச்சுத்தான் சரசரன்னு கோத்துத் தள்ளிடறாங்க.

மாலை டிஸைந்தான். கொஞ்சம் பெருசா செய்யக்கூடாதோ?

சாமி விரலுக்குப் போடத்தான் முடியும்.

said...

மாரியம்மன் கோயில் மிகவும் நன்றாக இருக்கிறது.

said...

டுக் டுக்..நல்லா தான் இருக்கு பேரு..பூச்சரம் அழகோ அழகு.தாய்லாந்து போறமோ இல்லையோ...ஆனா உங்க பதிவு மூலமா நல்லா சுத்தி பாத்திட்டிருக்கோம்.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

சந்தடி மிகுந்த பகுதின்னாலும் கோவிலுக்குள்ளே அமைதியாவும் இருக்கு.

said...

வாங்க சிந்து.

கூடவே வாங்க. பயமில்லாமல் இருக்கும் எனக்கு:-)