Wednesday, July 21, 2010

WAT...... is ...... What? (தாய்லாந்து பயணம் பகுதி 3)

எத்தனை கோயிலைப் பார்க்கணும்? புன்னகையோடு கேட்ட நான்ஸிக்கு நான் சொன்னது எத்தனை முடியுமோ அத்தனையும்! காலையில் 9 மணிக்கு நான் கீழே லாபிக்கு வரவும் ஸவாட்தீகான்னு சொல்லிக்கிட்டே நான்ஸி வந்து கைகூப்பவும் சரியா இருந்துச்சு. இவுங்கதான் இன்னிக்கு எனக்குச் சுற்றுலா வழிகாட்டி. நமக்கெல்லாம் கூப்பிடச் சுலபமா இருக்கட்டுமுன்னு இவுங்கெல்லாம் ஒரு க்றிஸ்தியன் பெயர் வச்சுக்கறாங்க. இவுங்க 'தாய்' பெயர் மம். அடடா...... தாய்க்கு இப்படித்தான் சொல்றது வழக்கமுன்னு ஒரு ' கடி' கடிச்சேன்:-)))))

போனமுறை எங்கள் வழிகாட்டியின் பெயர் சூஸின்னதும் எப்படி இருந்தாங்கன்னு ஆர்வமாக் கேட்ட நான்ஸிக்கு அசப்பில் உங்களைப்போலன்னு சொல்லி வச்சேன். ஒருவேளை சூஸியின் மகளோ?

காத்திருந்த காரில் ஏறிப் புறப்பட்டோம். வண்டி இன்னிக்கு கொஞ்சம் தாமதமாகுன்னு சொன்னதால் அவரை நேரா இங்கே வரச்சொல்லிட்டு நான் டுக்டுக் புடிச்சு வந்துட்டேன்னு சொன்னாங்க. நேரத்துக்கு மதிப்புக் கொடுக்கும் நாடு. ஹூம்...... நேரம் தவறாமை என்றது எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த குணம். அது இங்கே நம்நாட்டிலே ஏன் இல்லவே இல்லை என்றதை(வருத்தத்தோடு) பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்.
மங்களகரமா இருக்கட்டுமுன்னு தங்கத்தைக் காமிக்க முதலில் கொண்டு போனாங்க. தங்கம் ஒன்னும் அவ்வளவா இல்லை. வெறும் அஞ்சரை டன் தான்!!!! ஸாலிடா புத்தர் வடிவில் 'கிண்'னுன்னு உக்கார்ந்துருக்கு. உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் இருக்கு. நாற்பது (BAHT) bபத். கோவில் நுழைவுக் கட்டணமெல்லாம் சுற்றுலா டிக்கெட்டில் சேர்த்தி இல்லை(யாம்). வழிகாட்டிக்கு ஒரு தனி சார்ஜ் இருக்குன்றதை 'நான்ஸி' ரொம்ப 'நாகரிகமா'ச் சொன்னாங்க. எவ்வளவுன்னு கேட்டால் குறைஞ்சபட்சம் 500. அதிகபட்சம் நம் விருப்பம்போல்! விமானநிலையத்தில் டூர் பதிவு செஞ்சப்பச் சொல்லாமல் விட்டது (ஸ்மால் ப்ரிண்ட் வகை?) இவையெல்லாம்:(


(ஒரு bhat = 1.50 ரூபாய். கிட்டத்தட்ட)


அதானே வெறும் 16 அமெரிக்க டாலருக்கு (500 பத்) மூணரைமணி நேரச்சுற்றுலா ரொம்ப மலிவுன்னு (நாமாக) நினைச்சுக்கிட்டது யார் தப்பு?

போனமுறை பார்த்தவர்தான். ஆனால் அழகான புதுவீட்டுக்குக் குடிபோயிருக்கார். புத்தம்புதுசா இருக்கு இந்தக் கோவில். இந்த ஆண்டு ஜனவரியில்தான் திறந்து வச்சுருக்காங்க.  கிட்டத்தட்ட தொள்ளாயிரம் வருசத்துக்கு முந்திய சிலை. அ(யோ)யுத்தியா(தாய்லாந்து) நகரத்துலே முந்தி இருந்ததாம். பர்மாவோடு போர் நடந்த அந்தக் காலத்தில் சிலை பறிபோயிருமோ என்ற பயத்துலே மண்/காரை ப்ளாஸ்டர் போட்டு மூடி வச்சுட்டாங்க. அஞ்சாயிரத்து ஐந்நூறு கிலோச் சொக்கத்தங்கம் தேமேன்னு உள்ளே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கு. அப்போ இது இருந்த கோவிலுக்கு மேற்கூரைகூட கிடையாதாம். மழையும் வெயிலும் கொண்டு நிச்சலனமா புத்தர் தியானத்துலே இருந்துருக்கார்.

ஒரு அம்பத்தி மூணு ஆண்டுகளுக்கு முன்னால் இவருக்கு ஒரு கோவில் கட்டி, தூக்கிட்டு வந்து உள்ளே வைக்கலாமுன்னா , க்ரேன் சங்கிலி அறுந்துபோய் 'தொப்' னு வழியிலே உக்கார்ந்துட்டார். என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு கவலையோடு மறுநாள் பொழுதுவிடிஞ்சவுடனே போய்ப் பார்த்த புத்த பிஷூவுக்கு உடம்பே ஆடிப்போயிருக்கும்! காரை ப்ளாஸ்டரில் விரிசல் விழுந்து ஒரு துண்டு தெறிச்சுப்போய் இருக்கு. உள்ளே பளபள பளபளனு ஜொலிப்பு. (ராத்திரி திருட யாராவது வந்துருந்தாலும் பிரச்சனை இல்லை. எப்படித் தூக்கிட்டு ஓடுவானாம்?) தங்கமே தங்கமுன்னு புரிஞ்சதும் கொஞ்சம் கொஞ்சமா எல்லா ப்ளாஸ்டர்களையும் களைஞ்சுருக்காங்க.

பத்தடிக்கும் மேல் உசரமா, மொத்த உலகத்துலேயே பெரிய தங்க புத்தர் என்ற பெருமையோடு கோவிலில் குடி புகுந்தார். இப்போ அந்தக் கோவிலும் பழசாகி பழுதுபார்க்கும் நிலை என்பதால் புத்தம் புதுக்கோவிலே கட்டிட்டாங்க. பழைய கோவில் தரை மட்டத்தில் இருந்துச்சு. புதுசோ மூணு மாடிக் கட்டிடம்!!!!

இப்பத்தான் இன்னும் பலமான கருவிகளும் க்ரேன்களும் வந்துருச்சே! ஆபத்தில்லாம அவருடைய உசரத்துக்கும் பருமனுக்கும்( பனிரெண்டரை அடி அகலம்) தகுந்தபடி ஒரு மேடையில் கவனமாத் தூக்கி வச்சுருக்காங்க. உள் அலங்காரம் கையால் வரைஞ்ச சித்திரங்கள் உள்ள சுவர்களுடன் பார்க்க எளிமையா அதே சமயம் ஆடம்பரமுன்னு தோன்றாத ஒருவித ஆடம்பரமா அட்டகாசமா இருக்கு. வாட் ட்ரைமிட் Wat Traimit
மக்கள் கூட்டம்கூட்டமா வந்து கும்பிட்டு மலர்மாலைகள், ஊதுவத்திகள், ஒருவித மஞ்சள் நிறமான துணி அடங்கிய பொதின்னு வழிபாடு செலுத்தறாங்க. இங்கே படம் எடுக்க ஒரு தடையும் இல்லை. தங்கம் கரையவா போகுது?

சிங்கங்கள் ரெண்டு பக்கமும் இருக்கும் விசாலமான படிகளில் ஏறி முதல் மாடிக்குப்போனால் ரெண்டு பக்கமும் சீனக் கலாச்சார ஸ்டைலில் கட்டப்பட்ட அழகான அலங்காரக்கூரையின் கீழ் பிரமாண்டமான மணி தொங்குது. இந்தக்கோவிலே இங்குள்ள சைனா டவுனின் கடைசியில்தான் Yaowarat Road இருக்கு.
வால் பேப்பர்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் பார்த்தால் கையால் வரைஞ்சது எல்லா சுவர்களிலும்!!!!
ஜன்னல் கதவுகளுக்கு தங்க நிறத்தில் அலங்காரம்.
இதுவும் கையால் வரைஞ்ச ஓவியங்களாம்!!!!
வாசலில் சிலர் காலணிகளைக் கழட்டி வச்சுருப்பதைப் பார்த்து குறிப்பறிந்தேன். நாங்க போகும்போது நல்ல மழை வேற. மார்பிள் எங்கே வழுக்கிக் காலை வாருமோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு.

இந்தக்கோவிலுக்கு வந்து கும்பிட்டால் அதிர்ஷ்டமாம். இருக்காதா பின்னே? ரெண்டு கிராம் நாலு கிராமுன்னு வாழ்நாளெல்லாம் வாங்கிச் சேர்த்துவைச்சாலும் அஞ்சரை டன் கட்டித்தங்கம் சேர்க்கமுடியுமா? இல்லை அவ்வளோ தங்கத்தைத்தான் நம் கண்ணால் பார்க்க முடியுமா?

வளாகத்துக்குள்ளே இன்னொரு புத்தர் கோவிலும் அதிலே ஒரு அமர்ந்த நிலை புத்தரும் இருக்காங்க. புத்த பிக்ஷூ ஒருத்தர் அவரை அருகில்போய் வணங்கியவர்களுக்கு ஆசிகள் வழங்கிக்கிட்டு இருந்தார். இந்த சிகப்பு மேடையில் நாம் யாரும் ஏறிப்போகக்கூடாது. இது பிக்ஷுக்கள் மட்டும் அமரவாம். மியூஸியம் ஒன்னுகூட இங்கே இருக்காம். ஆனால் நம்ம வழிகாட்டி அதுக்குப்போக இப்ப நேரமில்லைன்னு என்னை இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்கப்பா
கோயில் யானை இருப்பது போல இங்கே கோயில் பூனை இருக்கு:-))))
யானைக்கொரு காலமுன்னா பூனைக்கும் ஒரு காலம் இல்லியோ!!!!!

தொடரும்...................:-)

40 comments:

said...

படங்கள் நேர்த்தியாக இருக்கு, கடைசி படம் பூனையாக இருந்தாலும் நடையில் யானை.

said...

//இந்தக்கோவிலுக்கு வந்து கும்பிட்டால் அதிர்ஷ்டமாம்//

பதிவுல பாத்தாலும் அதிர்ஷ்டம் உண்டான்னு கோவில் பூனைகிட்ட கேட்டுச்சொல்லுங்க..

அஞ்சரை டன்னா... அம்மாடியோவ்!! ஒன்றரை டன் சிங்கத்தைவிட அஞ்சரை டன் தங்கம் வெயிட்டாருக்கு :-))

said...

அதென்ன ஸாலிடா?

உத்தேசமான்னு எழுத வேண்டியது தானே?

தமிழ் ஆர்வம்ன்னு ஜல்லியடிக்க விரும்பவில்லை. என்னுடைய வேர்ட்ப்ரஸ் தளத்திற்கு தேடு பொறிகள் மூலமாக வரக்கூடிய அத்தனை தூய தமிழ் சொல் வார்த்தைகளும் இப்படித்தான் யார் யாரையோ கூட்டிக் கொண்டு வருகிறது.

கண்ணன் சொன்ன நடையில் யானை ரொம்ப அற்புதம்.

அந்த தங்கத்தை திருப்பூர் பக்கம் அனுப்பி வச்சீங்கன்னா தேவியர்களுக்கு காட்டிவிட்டு அனுப்பி விடுவேன்.

said...

வாங்க (வலைச்சர)ஆசிரியரே!

ஸாலிட் = கெட்டியா, கட்டியா, திடமா இப்படின்னு பொருள் உண்டு.

உத்தேசமா= அப்ராக்ஸிமேட்டான்னு சொல்லலாம்.

இப்படிக்கு,

(வலை உலக)ஆசிரியை:-)))))

கட்டித்தங்கம் உங்களுக்கேதான் எடுத்துக்குங்க!!!!

said...

வாங்க கோவியாரே.

ஒரே ஒரு எழுத்துதானே வித்தியாசம்!!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

படத்தில் பார்த்தாலும் அதிர்ஷ்டம் 90 % உண்டாம்:-)))))

said...

அப்போ 10% (போட்டோக்கார) குரு வுக்கு தட்சணையா? :-))
மூனரை டன் தங்கத்திற்கே இங்கே வேலூர் ஸ்ரீபுரம் கோயிலில் ஏகப்பட்ட கெடுபிடி. ஸ்கேனர் வைத்து சோதனை செய்து ஒரு குண்டூசி வரை எல்லாம் பிடுங்கி விடுகிறார்கள்.அங்கேயும் இப்படி இருந்தால் நாங்களெல்லாம் எப்படி ஓசியில் கைடுடன் போய்த் தாய்லாந்து பார்க்க முடியும்

said...

வாங்க பிரகாசம்.

பயணம் மூணு வந்துருச்சே....ஆளைக் காணோமேன்னு இருந்தேன்.

குருதட்சிணை வெட்டாம இருக்க முடியுமா?

அஞ்சரை டன்னுக்கு ஒரு எலெக்ட்ரானிக் கேட்டோ, தொட்டுத்தடவலோ இல்லை. படம் எடுக்கவும் தடை இல்லை ஒரு சில இடங்களைத்தவிர. என்ன நாடோ!!!!!

வழிகாட்டி இல்லாம நாமேகூடப்போய்ப் பார்க்கலாம். பிரச்சனை இல்லை.

தங்கக் கோவிலைப்பற்றி 'ரொம்ப' கேட்டுட்டபடியால் அங்கே போய்ப்பார்க்க மனசுக்குத் தோணலை.

said...

//இந்தக்கோவிலுக்கு வந்து கும்பிட்டால் அதிர்ஷ்டமாம். இருக்காதா பின்னே? ரெண்டு கிராம் நாலு கிராமுன்னு வாழ்நாளெல்லாம் வாங்கிச் சேர்த்துவைச்சாலும் அஞ்சரை டன் கட்டித்தங்கம் சேர்க்கமுடியுமா?//

அருமை, அருமை

said...

ஜொலிக்குதெ ஜொலி ஜொலிக்குதெ பதிவு பூராவும் ஜொலிக்குதே.
இந்தத் தங்க புத்தர் பின்னாடி இவ்வளவு பெரிய கதையா!!
அவர் மட்டும் கிரேன்ல இருந்து கீழ (டமால்னு) இறங்கி யிருக்காட்டா ,, இந்த புத்தரைப் பத்தித் தெரிஞ்சே இருக்காது. பாங்காக்ல பணம் கொடுத்தா எதுவும் நடக்கும்னு கேள்வி. இங்க மறைமுகமா வேற அந்தப் பொன்னுத்தாய் வாங்கிக் கிட்டாளா. அழகாத்தான் இருக்காங்க.:)
பூனையார் சிங்க நடை போட்டு இல்ல வரார்!!

Anonymous said...

//அஞ்சரை டன் தங்கம்//

யாராவது எடைக்கு எடை தங்கம் குடுத்திருப்பாங்க :)

said...

வார்த்தை விளையாட்டு பதிவிலும் பின்னூட்டங்களிலுமா விளையாடுறீங்க எல்லாருமே..:)

said...

5 ட‌ன்னா? பார்த்தாலே ப‌ய‌மாக‌ இருக்காதோ!!
போட்டோ புடிச்சா த‌ங்க‌ம் க‌ரையாதே!! ‍ அந்த‌ மாதிரி க‌ண்டுபிடிப்பு வ‌ந்திட‌போகுது.

said...

5 டன் தங்க புத்தர் மிக அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார் டீச்சர்.இந்த கோவிலில் யானை இல்லை என்ற குறையை பூனையார் தீர்த்துவிட்டாரா டீச்சர்:))))

said...

நீங்க போன இடத்திற்கெல்லாம் பதிவின் மூலமாக எல்லாரையும் கூட்டிட்டு போறீங்களே!
நன்றி!
rajesh

said...

ஒரே மூச்சா எல்லா பாகத்தையும் படிச்சு முடிச்சேன்.

இந்த புத்தரை சில சினிமா டூயட்டுகளில்(தமிழ்ல என்ன?) பாத்த நினைவு.

ஆசையே வேணாம் சொன்ன புத்தரையே தங்கத்துல செஞ்சுட்டாங்களே இந்த மனுசங்க. :))

said...

இரண்டு நாட்களுக்குமுன் தினமலர் இணையதளத்தில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு புதிய இணைய உலாவி பற்றி செய்தி வந்திருந்தது. அதை இணையிறக்கம் செய்தி பயன்படுத்திப் பாத்தபோது பல வசதிகளுடன் சிறப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த word processor,anti virus,skins வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.மேலும் இதிலேயே இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து எழுதும் வசதியும் உள்ளது.
அளவுதான் கொஞ்சம் அதிகம். 10 எம்பி அளவுள்ளது.

http://www.epicbrowser.com/

said...

கொல்லாதீங்க.

ஆசிரியராவது மாணவராவது.

இங்க டர்ர்ர்ன்னு கிழியுது.

எப்படியோ ஒரு ஞாயிற்றுக்கிழமையில மொத்தமா உட்காரந்து ஏத்திட்டேன்.

இப்ப இங்க இருக்கற அரிபரியில மூன்றாம் பகுதி புத்தகம் எழுதி திருத்த நேரம் இல்லாம தடுமாறிக்கிட்டுருக்கேன்.

கண்ணன் உங்கள மாதிரி ஒரு அஞ்சு வருசம் இதுல தாக்குப் பிடிச்சுட்டா ஆச்சரியம்.

பார்க்கலாம்?

said...

தங்கத்தோட பிரமாண்டத்திலும் புத்தரோட முகம் ரொம்ப எளிமையை தாங்கியிருக்கு.

பூனையாரும் மிடுக்கா தான் இருக்காரு.அந்த அதிர்ஷ்டத்தை இங்கயும் கொஞ்சம் அனுப்புங்களேன் டீச்சர்.

said...

சொக்க அஞ்சரை டன்னா அது அத்தனையும் எனக்கு கிடைக்க அருள் புரிய மாட்டியா?

said...

முதல்லே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

அஞ்சரை டன்னில் அரை டன் எங்கே???????????

said...

முதல்லே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

அஞ்சரை டன்னில் அரை டன் எங்கே???????????

said...

வாங்க கைலாஷி.

அது உண்மைதானே!!!!!

said...

வாங்க வல்லி.

இந்தியாமட்டும் கம்மியா????? இங்கே(யும்) பணம் கொடுத்தா எதுவும் நடக்கும்.

தலை விரிச்சு ஆடுதாமே லஞ்சப்பேய்!!!

என்ன இருந்தாலும் கோவில் மியாவாச்சே. அதுக்குண்டான மிடுக்கு இருக்காதா என்ன? அதுவும் அஞ்சரை டன் தங்கம்:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

என்னங்க இது அவ்வளோ எடையா 'நான்' இருக்கேன்?????

said...

வாங்க கயலு.

சொற்களுக்கு மதிப்பே தனி. இப்பப்பாருங்க அண்ணாத்தை சொல்வதெல்லாம் பின் ஒரு நாளில் 'எண்ணி'ப்பார்க்கும்போது(ம்) இன்பம்தானே:-)))))

said...

வாங்க குமார்.

அரை டன் மிஸ்ஸிங்!!!!!

சும்மா வச்சாலும் யாராலே தூக்கமுடியும் என்ற தைரியத்தில்தான் அப்படியே விட்டுவச்சுருக்காங்க.

said...

வாங்க சுமதி.

ஐந்நூறு கிலோ என்றது கிள்ளுக்கீரையாப் போயிருக்கு?????
எங்கே எடுத்து வச்சுருக்கீங்க:-)))))))

இம்மாந்தங்கம் என்னிடம் கொடுத்தால் என் 'நடை'யும்தான் இன்னும் நல்லா இருக்குமாக்கும்:-))))
பூனைநடையைக்கேக்கணுமா!!!!!

said...

வாங்க ராஜேஷ்.

நம்ம வகுப்பே சரித்திர வகுப்புதான். சரித்திரத்தில் இடம்பிடித்த இடங்களுக்குச் சுற்றுலா போகணுமா இல்லையா?

ஆயிரத்துலே இதுவே ஒரு ஐநூறு தேறும்.

கூடவந்து சேர்ந்துக்கிட்டதுக்கு மகிழ்ச்சி.

said...

வாங்க அம்பி.

அதென்ன ஒரே மூச்சா?

இதுவரை ஒன்னும் ரெண்டுமா மூணுதானே வந்துருக்கு:-))))

ஆசை தனக்கு வேணாமுன்னுதான் சொல்லி இருக்கார்!

ஜோடி கீதம்.....சரிவருமா?

said...

பிரகாசம்,
நம்ம பதிவர்கள் சிலர் புது உலாவியை நிறுவிட்டாங்க. நல்லா இருக்குன்னும் சொல்றாங்க. கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கணும் எனக்கு.

தகவல் விவரங்களுக்கும் சுட்டிக்கும் நன்றி

said...

என்னங்க ஜோதிஜி,

அதான் அரைக்கிணறு தாண்டியாச்சே. இன்னும் அரைதான் பாக்கி.

சமாளிச்சுருவீங்க.கவலை ஏன்????

said...

வாங்க சிந்து.

அவ்வளோ நகை போட்டா என் முகம் எளிமையா இருக்கவே இருக்காது இல்லே????

கிடைச்ச அதிர்ஷ்டத்தை அப்பவே பதிவுலகத்துக்குப் பகிர்ந்து கொடுத்தாச்சு.

நான் அஞ்சரை டன்னிலே துளிகூட எடுக்கலைப்பா. சொன்னா நம்புங்க ப்ளீஸ்:-)

said...

வாங்க ஜாக்கி.

ப்ளைட்டுலே எப்படிக் கொண்டு வருவதுன்னு யோசிக்கிறாராம் கடவுள்:-))))))

உங்க வீட்டு வாசக்கதவு வேற சின்னதா இருக்காமே!!!!

said...

அம்மாடி அரைடன் தங்கம் எனக்கா எனக்கு வேணாம் டீச்சர் அதை புத்தருக்கே கொடுத்துவிடுகிறேன் 5ரைடன் புத்தர் இப்போது கூட்டிப்பாருங்கள் கணக்கு சரியாக வரும்:)))

said...

வாங்க சுமதி.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாத் தானிருக்கு:-))) )

said...

அந்த பூனையை நினைத்து கொஞ்சம் பொறாமை வருது.
பகிர்வுக்கு நன்றி.

இந்திரா.
(தீவு.கோம்) .

said...

வாங்க இந்திரா.

முதல்முறையா நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க!

நலமா?

இந்தப் பூனைக்கே பொறாமைன்னா இன்னும் ஏகப்பட்ட (ராஜ) பூனைகளைப் பார்த்தால் என்ன சொல்வீங்களோ!!!!!

said...

இப்பொழுதுதான் பார்க்கக் கிடைத்தது இம்மாதம் நேரமின்மை. வேலைஅதிகரிச்சிடிச்சு. தவறவிட்டாலும் வந்து படித்துக்கொள்வேன்.
படங்கள் யாவும் அழகு.நன்றி.

said...

வாங்க மாதேவி.

லேட்டானாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க. நன்றிப்பா.