Tuesday, August 10, 2010

குடி இருந்த கோவிலுக்கொரு கோவில்..........( கம்போடியாப் பயணம் 4 )

ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர் பயணம். வழியில் தென்பட்ட கிராமம், மக்கள் எல்லாம் வசதியானவங்களாத் தெரியலை. வரிசைவரிசையா இளநீர், கோக் , தண்ணீர் விற்கும் கூரை வேய்ஞ்சப் பொட்டிக்கடைகள். சின்னப்பிள்ளைகள்தான் ஓடி ஓடி யாவாரம் பார்க்குதுகள். ஆனாலும் எங்கேயும் அழுக்கு, ப்ளாஸ்டிக் கழிவுகள் எல்லாம் இல்லாமல் சுத்தமா இருக்கு. ஏழ்மைக்கும் அசுத்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை! வழியில் இடைப்பட்டக் கையகல நிலங்களிலும் நெல் பயிர் வளர்ந்துக்கிட்டு இருக்கு.
நான்முகன் போல முகப்பில் அமைஞ்சுருக்கும் ஒரிஜனல் கோட்டைச்சுவர்களைச் சுத்திப்போகும் சாலையில் டூரிஸ்ட் வாகனங்கள் நாலைஞ்சு நிக்கும் ஒரு கார்பார்க்லே நாங்களும் இறங்கி பாதி இடிஞ்சு போய் முகமிழந்து நிற்கும் முகப்புக்குள்ளே போனோம். நம்ம நாட்டுக்கொடியின் படத்தோடு ஒரு தகவல் பலகை. ஆஹா..... இந்த 'ட ப்ரோம்' Ta Prohm கோவிலைப் புதுப்பிக்க இந்திய சர்க்கார் கை நீட்டி இருக்கு. (நீட்டுன்னது கை குலுக்கத்தான். வேறொன்னுமில்லை) நம்ம டூரிஸ்ட் பாஸை வாங்கி, அது நாம்தானா, செல்லுபடியாகும் நாள்தானான்னு பார்த்துட்டுத் தர ரெண்டு மூணு செக்யூரிட்டி ஆட்கள் இருக்காங்க.

ரெண்டு பக்கமும் மரங்கள் அடர்த்தியா இருந்த பாதையில் போகும்போது ஒரே மாதிரி ஆடை அணிஞ்ச ஒரு இசைக்குழு உற்சாகமா வாசிக்கிறாங்க. மெல்லிய குரலில் ஒருத்தர் பாடுறார். கிட்டே போனதும்தான் தெரியுது....இவுங்கெல்லாம் அங்கே போர் நடந்த காலத்தில் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள்:( க்மெர் ராஜ்ஜியத்தின் பாரம்பரிய இசையை இப்படி அங்கங்கே சுற்றுலாப்பயணிகள் வரும் இடங்களில் இசைச்சுக்கிட்டும் , அவுங்களுடைய இசையை குறுவட்டாக்கி வித்துகிட்டும் இருக்காங்க. நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. இசைக்கலைஞர்கள் என்ற ஒரு பெருமையை அந்தக் கண் இழந்த முகத்திலே கண்டேன்...

பிச்சைக்காரர்கள் என்றதும் நினைவுக்கு வருது.....இவ்வளோ சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கையேந்திப் பிச்சை கேட்கும் ஒரு நபரைக்கூட நாம் காணமுடியாது. ஏழ்மையிலும் எதாவது பொருளை விற்று காசு சம்பாரிக்க ஓடி வர்றாங்களே தவிர ஐயா அம்மா, தருமம்ன்னு கூவறதில்லை.
சட்னு பார்க்க இடிபாடுகளோடு ஒரு பாழடைஞ்ச சாதாரணமான கட்டடத்தின் வெளிமுற்றம். சுற்றிவர உசரமான மரங்கள் நிறைஞ்ச வளாகம். முகப்பில் இருக்கும் ஒரு மரத்தின் பெரிய பொந்து ஃபோட்டோ பாயிண்டா இருக்கு:-)

கோவில் விவரம் கேட்க வழிகாட்டியைப் பார்த்தால் நம்ம வீரா முகத்தில் புன்சிரிப்பும் ஒரு திடீர் பிரகாசமும். இங்கேதான் ஏஞ்சலீனா ஜோலி நடிச்ச படமெடுத்தாங்கன்னார். நம்ம ஆளு உடனே 'ஓ டூம்ப் ரெய்டரா?'ன்னார்

ஆமாம். ரொம்ப நல்ல மாதிரி அவுங்க. இங்கே அவுங்க தங்கும்விதமா ஹொட்டேல் ஒன்னும் அமையாததால் தினம் ஷூட்டிங் முடிஞ்சு பாங்காக் போயிட்டு மறுநாள் காலையில் வருவாங்க. இங்கே ராத்தங்கலைன்றது எங்களுக்கெல்லாம் ரொம்ப மனவருத்தம்(???!!!)னார்.

'ஓ' ன்னேன்!
உள்ளே நுழைஞ்சு போனதும்............... இன்னும் இடியப் போகும் சுவர்களைத் தாங்கிப்பிடிக்கும் மரங்கள்.
என்னமா சேர்லே உக்கார்ந்தமாதிரி போஸ் கொடுக்குது பாருங்களேன்!


இன்னும் உங்களுக்குச் சட்னு புரியணுமுன்னா,,,,,நம்ம நாட்டுலே லஞ்ச ஊழல் எப்படி சகல இடத்திலும் ஊடுருவிப் பரவி மக்களைப் பிடிச்சு இருக்கோ அதே போல, மரத்தின் வேர்கள் கருங்கல்லையும் கடந்து ஆழமா ஊடுருவி நுழைஞ்சு பிடிச்சிருக்கு!!!

அரசர் ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் கட்டப்பட்ட புத்தர் கோவில் இது. ராஜவிஹாரம்னு அப்போ இதுக்குப் பெயர். அரசகுடும்பத்துக்குன்னே பிரத்தியேகமா செஞ்சது. தன்னுடைய தாய்க்கு மரியாதை செய்யும் விதமா இந்தக் கோவிலைக் கட்டினாராம். தன்னுடைய முப்பத்தியெட்டு வருட ஆட்சியில் (1181 - 1219 வருசங்கள்) இந்தக் கோவிலைக் கட்டியிருக்கார். 1186 லே கட்ட ஆரம்பிச்சதாம். எத்தனை வருசம் ஆச்சோ கட்டி முடிக்க?

பெரிய முற்றத்தில் எதிரும் புதிருமா சந்நிதிகள். பீடங்களில் ஒரு சிலையும் இல்லை. ஒரு சந்நிதியில் தன் தாயின் உருவச்சிலை ஒன்னு செய்து வச்சுருந்தாராம். அதுலே ஒரு பத்து விநாடி உக்கார்ந்துட்டு வந்தேன்.
பலவருசங்களா கவனிக்கப்படாமல் உண்மையான அழிவுக்குப் போயிருச்சு இந்தக் கோவில். இப்போதான் பழுதுபார்க்கும் வேலைக்கான முயற்சி எடுத்து வேலையை ஆரம்பிச்சு இருக்காங்க. அங்கங்கே இரும்புக்குழாய்களாலும் பலகைகளாலும் அண்டைக்கொடுத்து மேலும் கற்கள் விழாமச் செஞ்சுருக்காங்க. ஆனாலும் பல இடங்கள் கொஞ்சம் அபாயகரமாத்தான் இருக்கு. கல்லை எடுத்து அடுக்க ஒரு க்ரேன் வச்சுருக்கு.

போய்ப் பார்க்க பலகைகளால் நடைபாதை போட்டு வச்சுருக்காங்க இப்போ.
வெராந்தாக்களில் சில சிலைகள் இருந்திருக்கக்கூடிய இடங்களில் சுத்தமா சொறண்டி எடுத்துருக்காங்க.ஒரு புத்தரை மரங்கள் காப்பாத்தி ஒளிச்சு வச்சுருந்துச்சு.
நான் படங்கள் எடுப்பதில் மும்முரமா இருந்தப்ப, 'பரபரன்னு இந்த மரத்துலே ஏறிட்டாங்க'ன்னு வியப்போடு கண்கள் விரிய வீரா சொல்லிக்கிட்டு இருந்தது காதில் விழுந்துச்சு. யாரு? ன்னு கேட்டேன். 'ஏஞ்சலீனா ஜோலி' ன்றார். சரியாப்போச்சு. இன்னும் இவர் ஜோலி மயக்கத்தில் இருந்து விடுபடலை. 'சரித்திரத்தைச் சொல்லுமைய்யா'ன்னா ஜோலிதான் சரித்திரமுன்னு பிடிச்சுக்கிட்டு இருக்கார். வேற ஜோலி இல்லையா? ஜோலிப் புராணம் வேணாம். நாம் வந்த ஜோலியைப் பார்க்கலாமுன்னு (குரலில் சின்னதா ஒரு கடுமை காட்டி) சொன்னேன்.

நாலு பிரகாரங்களா இருக்கு. வெளியே அகழி மாதிரி ஒன்னு ஒரு பக்கத்துலே மட்டும். மற்றபகுதிகள் எல்லாம் காலத்தால் மூடப்பட்டிருக்குமோ என்னமோ!

முதல்பிரகார வெளிச்சுற்றுச்சுவரில் கருங்கல்லால் ஆன கதவுபோல் ஒன்னு இருக்கே எப்படித் திறக்க முடியும்? என் கவலை எனக்கு. நம்மூர் பெருமாள் கோவில் சொர்க்க வாசலைப்போல இருக்கேன்னால்...... இது பேய் வாசலாம். இங்கே நடமாடும் பேய்கள் இதை வாசல்ன்னு நினைச்சு உள்ளே வரமுடியாமல் திரும்பிப் போயிருமாம்! அந்தக் காலத்துலேயும் மனுசனுக்கு என்ன நினைப்புகள் பாருங்க:-)
இங்கே ஆரம்பகாலத்தில் புத்த பிக்குகளுக்கான மடம், கல்விச்சாலைன்னு இருந்துருக்கு. அக்கம்பக்கக் கிராமங்கள் இவுங்க தேவைகளைக் கவனிக்கன்னும் ஏற்பாடு. மொத்தமா பனிரெண்டாயிரத்து ஐநூறு மக்கள் இருந்தாங்களாம். கோவிலைக் கட்ட மட்டும் எம்பதாயிரம் பணியாட்கள்ன்னு கோவில் ரெக்கார்டு சொல்லுதாம். ஏன் அவுங்களுக்கு மட்டும் பெருக்கல் தெரியாதா என்ன?


இடிஞ்சு விழுந்த கற்கள் அங்கங்கே குவிஞ்சு கிடப்பதைப் பார்த்தால் திருப்பி எடுத்து வைச்சால் நல்லா இருக்குமேன்னு............ ஆனா எது எங்கேன்னு வைப்பாங்க? பேசாம இந்தக் கற்களையெல்லாம் சேகரிச்சு புதுசாவே ஒரு 'பழைய கோவிலை'க் கட்டிக்கலாம்.
இத்தனை அழிஞ்ச நிலையில் தாக்குப்பிடிச்சு நிற்கும் கற்களில் அப்சரஸ்களின் நாட்டிய சிற்பங்கள். 615 நாட்டியமங்கைகள் அப்போ இங்கே இருந்தாங்களாம். சிற்பத்துக்கு போஸ் கொடுத்தவங்க இவுங்களாத்தான் இருக்கணும்.
சின்னதும் பெருசுமா 39 கோபுரங்கள் கும்மாச்சிகள் இருந்தாலும் இப்போ இடியாம நிற்பது............. ஒன்னுன்னா ஒன்னுகூட இல்லை. முனை முறிஞ்சு கிடக்குதுகள்.

அங்கோர்வாட் கோவிலைத் தேடிக் கண்டுபிடிச்ச காலத்துலெயே இதையும் கண்டுக்கிட்டாலும் காட்டுமரங்களும், அதுக்குள்ளே ஒளிஞ்சு கிடக்கும் கோயிலுமா இருக்கும் இதை இப்படியே விட்டுட்டால் பயங்கரக் கவர்ச்சின்னு அப்படியே விட்டுவச்சுட்டாங்க. நல்லவேளை......இது அங்கோர் வாட் கோவிலைப்போல ரொம்ப பிரமாண்டமாவும் இல்லை, மேலே ஏறி ஏறிப்போகும் படிகளும் இல்லை. பிழைச்சேன். 150 வருசகாலத்துலே இன்னும் சிதைஞ்சதுதான் மிச்சம். இந்திய அரசாங்கம் உதவி செய்யறேன்னு சொல்லி அனுப்புன சிலர், சுத்தப்படுத்தும் முறைகளில் வேறென்னவோ செஞ்சு கொஞ்சம் மீதி இருந்த சிற்பங்கள் சிதைஞ்சுருச்சுன்னு சொல்றாங்க. உண்மையாகவும் இருக்கலாம். தென்னிந்தியக் கோவில்களில் சேண்ட் ப்ளாஸ்டிங் செய்யறோமுன்னு சிற்பங்களின் மூக்கு முழிகள் சிதைஞ்சதைப் பார்த்துருக்கேன்:(
ஆனால் எப்படிப் பார்த்தாலும் விபரீத அழகுன்ற வரிசையில் இந்தக் கோவிலைச் சேர்த்துடலாம். உலகிலேயே விசித்திரமான அழகுன்னும் சொல்லிக்கலாம். சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்தான்
எனக்கு அதிசயமா இருந்த ஒன்னு என்னன்னா.... இந்தக் கோயில்களில் எல்லாம் லைப்ரரின்னு ஒரு இடம் கட்டி வச்சுருக்காங்க. 'டாக்குமெண்ட்ஸ் வைப்பாங்க'ன்னு வீரா சொல்றர். எந்த மாதிரி டாக்குமெண்ட்ஸ்?

இந்த மரங்களில் பலதும் ஸில்க் காட்டன் வகைகளாம். நாம் இலவம் பஞ்சுன்னு சொல்வது இதுதானோ? ஆனால் நெடுநெடுன்னு உசரமா ஒல்லியா இல்லாம இது கிளைவிட்டுப் படர்ந்துருக்கே!!!! காய்களையும் காணோம்!!!!


தொடரும்.......:-)

21 comments:

said...

பேசாம இந்தக் கற்களையெல்லாம் சேகரிச்சு புதுசாவே ஒரு 'பழைய கோவிலை'க் கட்டிக்கலாம்///

comedya irunthalum unamiaya nadanthuchuna nala irukum.

Semayana padangal.Pagirvuku nandree.

said...

//ஏழ்மைக்கும் அசுத்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை! //
உண்மை! உண்மை!! உண்மை!!!
"Charity begins at Home" மாதிரி "Cleanliness also begins at home"...நம்ம வீட்டை சுத்தமா வெச்சுக்கவே நாக்கு தள்ளுது :-)

//இவ்வளோ சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கையேந்திப் பிச்சை கேட்கும் ஒரு நபரைக்கூட நாம் காணமுடியாது.//

அப்புறம் எப்படி அவர்கள் தருமம் செய்கிறார்கள்?!! எப்படி அவர்கள் தலை காக்கப்படுகிறது?!!

'தருமம் சரணம் கச்சாமி' ! (நாமதான் தப்பா அர்த்தம் பண்ணி வெச்சிருக்கோம்-னு நினைக்கறேன்)

//கோவில் விவரம் கேட்க வழிகாட்டியைப் பார்த்தால் நம்ம வீரா முகத்தில் புன்சிரிப்பும் ஒரு திடீர் பிரகாசமும். இங்கேதான் ஏஞ்சலீனா ஜோலி நடிச்ச படமெடுத்தாங்கன்னார்.//
குடுத்து வெய்ச்சவர் 'வீரா' ஹ்ம்ம்ம் தானை தலைவி எல்லாம் நேர்ல பார்த்திருக்கார் :-))

//சரியாப்போச்சு. இன்னும் இவர் ஜோலி மயக்கத்தில் இருந்து விடுபடலை.//
ஹி ஹி ஹி நாங்க எல்லாம் அப்படி தான் ஹி ஹி ஹி

//நாம் வந்த ஜோலியைப் பார்க்கலாமுன்னு (குரலில் சின்னதா ஒரு கடுமை காட்டி) சொன்னேன்.//
அதுக்கப்புறம் தான் 'வீரா' ஒழுங்கா வந்தார்!! (நம்ம அத்தானும் தான்...)...இது அக்கா சொல்ல விட்டு போனது :P

said...

உண்மை விஜி மற்றும் டாடி அப்பாவின் கமெண்ட்ஸுகலை ரசித்தேன்.. துளசி அருமையான பகிர்வு..

said...

இன்னும் உங்களுக்குச் சட்னு புரியணுமுன்னா,,,,,நம்ம நாட்டுலே லஞ்ச ஊழல் எப்படி சகல இடத்திலும் ஊடுருவிப் பரவி மக்களைப் பிடிச்சு இருக்கோ அதே போல, மரத்தின் வேர்கள் கருங்கல்லையும் கடந்து ஆழமா ஊடுருவி நுழைஞ்சு பிடிச்சிருக்கு!!!

:))) adhi sooppperrr

said...

ஒரு சந்நிதியில் தன் தாயின் உருவச்சிலை ஒன்னு செய்து வச்சுருந்தாராம். அதுலே ஒரு பத்து விநாடி உக்கார்ந்துட்டு வந்தேன்.
//
அச்சோ துளசி:((

said...

படங்கள் அனைத்தும் அற்புதம். இது சொல்வது போதாது. இருந்தாலும் எனக்கு வேற வார்த்தை கிடைக்கலைப்பா.

said...

மரம் படர்ந்திருக்கும் படம் நன்றாகவே உள்ளது டீச்சர். அதற்கு நீங்கள் சொன்ன விளக்கமும் அழகு டீச்சர்:))))

said...

சூப்பரு கோவில் டீச்சர்....யப்பா..!!!

நம்ம ஊர் டிவிக்காரங்களுக்கு இந்த தகவல் கிடைச்ச போதும் நிஜம் நடந்தது என்ன அப்படின்னு போட்டு கலங்கடிச்சிடுவானுங்க ;)))

said...

Superb explanations and beautiful pictures.

said...

வாங்க விஜி.

அப்படி ஏகப்பட்ட கற்குவியல்களைப் பார்க்கும்போது இப்படித்தான் தோணுது!

said...

வாங்க டாடி அப்பா.

//Cleanliness also begins at home"...//

ரொம்பச்சரி. அதாஅன் வீட்டைச்சுத்தமாப் பெருக்கிட்டுக் குப்பைகளை தெருவாசலில் போட்டுடறாங்க நம்ம மக்கள்:(


ஏம்ப்பா..... ஜோலி ஜோலின்னு வேற ஜோலி இல்லையா? போய்ப் புள்ளைகுட்டிகளை (நம்ம பதிவைப்) படிக்க வையுங்கப்பா:-))))))

said...

வாங்க தேனம்மை.

இன்னிக்கு இடுகையில் ஒரே தேனாபிஷேகம்தான்!!!!

நன்றி.

said...

வாங்க வல்லி.

தாய் இருந்த இடத்தில் ஒரு பேய் னு தலைப்பு வச்சுருக்கலாமோ??

ச்சும்மா...:-)))))

இருக்குமிடம் அப்படி. ச்சும்மா க்ளிக்குனாலே அழகுவந்து ஒட்டிக்குதுப்பா!!!!

said...

வாங்க சுமதி.

உண்மையைத் தேங்காய் உடைச்சாப்லெ சொல்லிட்டேனா:-)))))

said...

வாங்க கோபி.

வேணாம். அந்த இடமாவது 'உருப்படியா இருக்கட்டும்' !!!!

said...

வாங்க சந்தியா.

டேங்கீஸ்:-)

said...

நீங்கள் இணைத்த சுவர்களைத் தாங்கிப்பிடிக்கும் மரங்களின் படங்கள் அவுஸ்திரெலியாவில் வெளியாகும் பத்திரிகைகளில் சுற்றுலாப்பகுதிகளில் அடிக்கடி வருகின்றன. சிட்னி என்றால் காபர் பாலம் , நியூயோர்க் என்றால் லிபர்டி சிலை போல கம்போடியா என்றால் சுவர்களைத் தாங்கிப் பிடிக்கும் மரம்தான் வரும் போல இருக்கிறது.

said...

வாங்க அரவிந்தன்.

இது இயற்கையின் அதிசயம். அதான் இதையே லேண்ட்மார்க் ஆகிட்டாங்கபோல!!!!

said...

அம்மாடின்னு இருக்கு....

சில காலம் விட்டால் நம்ம அலகாபாத் அக்பர் கோட்டையும் இப்படித்தான் ஆகும்போல்!

பயணக் கட்டுரையின் மற்ற பகுதிகளையும் ஒவ்வொண்ணா படிச்சுடறேன்... சீக்கிரமே! :)

said...

அன்பின் துளசி அம்மா, இதெல்லாம் ஆல மரமா இல்லை அரச மரமா? அங்கூர் வாட் அல்லது சியம் ரீப்பில் எங்காவது அரச மரம் இருக்கா?

said...

ட ப்ரோமில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/vnnnrr6Pgdo2VTj77


- ஞானசேகர்