Friday, August 13, 2010

ஆடலுடன் பாடலைக் கேட்டு (உணவை) ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்...............( கம்போடியாப் பயணம் 7 )

கம்போடியா வந்துட்டுக் கலைநிகழ்ச்சிகள் ஏதும் பார்க்காமப்போனால் சாமிக் குத்தம் ஆயிறாது? இந்தப் பாவத்தில் இருந்து நம்மைக் காப்பாத்த பல இடங்களில் குறிப்பாக ரெண்ட்டாரண்டுகளில் கண், காது வயிறுன்னு எல்லாத்துக்கும் உணவு விளம்பிடறாங்க!

கம்போடியன் கிராமம் ன்னு ஒன்னு மாடல் வில்லேஜ் வச்சுருக்காங்கன்னு கேள்விப்பட்டு அதை விசாரிச்சால் அது ஒரு நாள் முழுசுமா செலவிடும்வகையில் உள்ள பயணிகள் ஸ்பெஷலாம். நமக்கு வாய்க்கலை:(

களைச்சு வந்து ஒன்னரை மணி நேரம் தூங்கி எழுந்து குளிச்சதும் உடம்பும் மனசும் ஃப்ரெஷா ஆயிருச்சு. (மூச்சுக்) காற்றுப் போகுமுன் காண வேண்டியவை கோடின்னு கிளம்பி வெளியே வந்தால் நம்ம தலையைக் கண்டதும் ஓடிவர்றார் ஸ்மெய். கலைநிகழ்ச்சி எங்காவது நடக்குதா? இல்லே வார இறுதியில் மட்டும்தானான்னா............' நான் கூட்டிட்டுப்போறேன். டுக்டுக் லே ஏறுங்கோ'ன்றார்.

இங்கெல்லாம் பேரம் பேசாம வண்டியில் கால் வைக்கக்கூடாது என்ற புத்திமதியின் படி எவ்வளவுன்னா ஒரு டாலர் கொடுங்கன்னார். சியெம்ரீப் டவுனுக்குள்ளே போனோம். Sophea Angkor Pich Restaurant (இங்கே எதுக்கெடுத்தாலும் பெயர்களில் அங்கோர் என்னும் சொல் இடம்பெறாமல் இருக்காது!!!) வாசலில் கொண்டு விட்டுட்டு, ஹொட்டேலுக்கு திரும்பிப் போக நான் வரட்டுமான்னார். அதுக்கும் ஒன்னுன்னு ரெண்டு டாலர். 'எட்டரைக்கு முடிஞ்சுரும். நான் வந்து காத்துருப்பேன்'னுட்டு போனார்.

ரெஸ்டாரண்டுக்குள்ளே காலடி எடுத்துவச்சவுடன் 'வாங்க'ன்னு கூடச் சொல்லாம பனிரெண்டு டாலர்னு வரவேற்பு. சீன வகை உணவுன்னதும் மொதல்லே தயக்கமாத்தான் இருந்துச்சு. நமக்கு எதாவது கிடைக்குமா இல்லை பட்டினிதானான்னு!
ஒரு பக்கம் மேடை. அதுக்கு எதிரில் ஏராளமான உணவு மேசைகள். இந்தப் பக்கம் உணவுப்பொருட்கள் ஸாலட் பார், பழங்கள், டிஸ்ஸர்ட் வகைகள், ஃப்ரைட் ரைஸ்க்கு சேர்க்க வெட்டிவச்ச விதவிதமான காய்கறிகள், வகைவகையான நூடுல்ஸ், நொறுக்கு தீனிக்காக பணியாரம், பஜ்ஜி வகையறாக்கள் செய்யத் தனி வரிசையில் காத்து நிற்கும் மங்கையர், அப்புறம் இறைச்சி மீன் சமையலுக்குன்னு தனி வரிசை இப்படி அமர்க்களமா இருக்கு.


சாலட் பார்

நமக்கு விருப்பமான காய்கறி வகைகளை ஒரு தட்டில் எடுத்துக் கொடுத்தால் அதை சமைச்சு ஃப்ரைடு ரைஸாகக் கொடுக்கறாங்க. பஃபே சிஸ்டம் என்பதால் நல்லா சாப்பிடும் மக்களுக்கு இந்த 12 என்றது விலை மலிவுதான். கூடவே ஒன்னேகால் மணி நேர ஆட்டம்பாட்டம் இருக்கே.
தேங்காய்ப்பால் சேர்த்த பணியாரம்

உணவின் கடைசியில் டிஸ்ஸர்ட் வகைகளுக்கு கேக்குகளும் மஃப்பினும் கடல்பாசியில் செஞ்ச இனிப்புகளும் ஐஸ்க்ரீமுமா ஏராளமான வகைகள். Palm seedsன்னு ஒன்னும் வச்சுருந்தாங்க. சின்னதா பீன்ஸ் போலவும், பார்க்க நுங்குபோலவும் இருக்கும். (இது டின்னில் சீனக்கடைகளில் கிடைக்கும்.)

தாகசாந்திக்கு மட்டும் நாம் எக்ஸ்ட்ரா பணம் செலுத்தணும். இல்லேன்னா மக்கள் 'குடிச்சே' தீர்த்துடமாட்டாங்களா?

அப்சரஸ்கள்
அப்ஸரா நடனக்குழு என்ற பெயரில் நகரின் நாலைஞ்சு உணவகங்களில் இப்படி சாப்பாடும் நடனமுமா சேர்த்து வச்சு இதையும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஸ்பெஷல் ஐட்டமா ஆக்கிட்டாங்க. எப்படியும் ராத்திரி சாப்பிட எங்காவது போகணும்தானே? இந்த இடங்களுக்குப் போனால் ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் இல்லையோ!!!!

லவகுசா & அஸ்வம்

ராமாயணத்தில் சில பகுதிகள், லவகுசர்கள் அஸ்வமேத யாகக் குதிரையைப் பிடிப்பது, ஹனுமன் அரக்கரோடு போரிடுவது, மீனவர் நடனம், கையில் முறம் கூடை எல்லாம் வச்சுக்கிட்டுக் கிராமத்து விவசாயிகள் நடனம், மயில் நடனம், இந்திரலோகத்தில் அப்ஸரஸ்களின் நடனம் இப்படி வகைக்கு ஒன்னா நல்லா இருந்துச்சு. தனிப்பட்ட ஒரே வகையா இல்லாம சாம்பிள் மாதிரி கலந்துகட்டி ஆடி, அவுங்க கலாச்சார பாரம்பரியத்துக்குக் 'கோடி' காமிச்சுடறாங்க! இசைக்குழு நல்லாதான் வாசிச்சாங்க. ஆனால் கூடுதல் சப்தமா இருக்குன்னு நாங்க பின் வரிசைக்குப் போயிட்டதால் படங்கள் அவ்வளவு க்ளியரா இல்லே:(
இருநூறு பேர் சாப்பிடும் இடத்தில் சத்தத்துக்கு என்ன குறைச்சல்?
இசைக்குழு


தேவதைகளுக்குச் சிரிக்கத் தெரியாது போல!!!! அப்சரஸ்களின் நடனத்தில் நளினமான கை அசைவுகள் உடலசைவுகள் இருந்தாலும் யாருக்குமே முகத்தில் சிரிப்போ குறைஞ்சபட்சம் புன்னகையோ கூட இல்லை. தலையில் (தாய் வகை போல இல்லாமல் மாறுபட்ட) கும்மாச்சி க்ரீடம் வச்சு, ஃப்ளாட்டா இருக்கும் ஒரு மேக்கப். இந்த நடனத்தைவிட கிராமிய நடனம், விவசாயி ஜோடிகள் நடனம் எல்லாம் துள்ளலும், எள்ளலும், கோபதாபங்கள், அன்பு எல்லாம் காமிக்கும் முகபாவனைகளுமா நல்லா இருந்துச்சு. தேங்காய் சிரட்டையைக் கையில் வச்சு 'டட் டட் டகடக'ன்னு ஓசை எழுப்பிக்கிட்டே ஆடுன குழு நடனம் ஒன்னும் ஜோர்!

தட்டிப்பார்த்தால்.... கொட்டாங்குச்சி

இந்த அப்ஸரா நடனம் என்ற பாரம்பரியக் கலை ஒரு காலத்தில் அரச சபைக்கு மட்டுமேன்னு இருந்துருக்கு. ஒருவேளை முகத்தில் சிரிப்பு இல்லாத காரணம் அரசர் முன்னால் ஆடறோம் என்ற பயமாவும் இருக்கலாம். ராஜகுடும்பங்களின் ஆதரவு இந்தவகை நடனங்களுக்கு இருந்துருக்கு. மகாராணி சிஸோவத் கொஸ்ஸாமாக் Queen Sisowath Kossamak (அரசர் நரோத்தமின் தாயார்) இந்த நடனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யக் கலைஞர்களை ஊக்குவித்து இதை அரண்மனையில் இருப்பவர் மட்டுமில்லாமல் வெளியே மற்ற மக்களும் கண்டு ரசிக்கும்வகையில் வழி செய்து கொடுத்தார். எல்லாம் ஒரு அறுவது எழுபது வருசங்களுக்கு முன்னால்தான். இதுமட்டுமில்லாம தன்னுடைய பேத்தி இளவரசி போஃபாதேவிக்கு(Princess Bopha Devi) சின்ன வயசுலேயே இந்த நடனத்தைக் கற்றுக்கொள்ளப் பயிற்சிக்கும் ஏற்பாடு செஞ்சவங்க இந்த மகாராணிதான்.
இங்கே நடந்த சமீபத்திய கலவரங்களால் புதைகுழிக்குப்போக இருந்த இந்தக் கலையை 1980களில் மீண்டும் உயிர்பிடிச்சு வளரச்செய்ததும் இளவரசி போஃபாதேவிதான். தலைநகரில் ராயல் யுனிவர்சிட்டி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பகுதிக்கு இவுங்கதான் முழு ஆதரவு. பாரம்பரிய நடனங்களுக்கு ராமாயண இதிகாசத்துலே இருந்து சுவையான பகுதிகளை எடுத்து ஆடறாங்க. சரியாச் சொன்னால் இது எல்லாம் நாட்டிய நாடகம் வகைதான். ஒரு கதை இருக்கணும் அந்த நடனங்களில்.
கடைசியில் கலைஞர்கள் எல்லோரும் மேடையில்

சமூக நடனங்களுக்கு கிராமிய நிகழ்ச்சிகளான அறுவடை காலம், மீனவர் பகுதிகளில் இருக்கும் கொண்டாட்டங்கள் இவைகளை நடனங்களா ஆடறாங்க. க்மெர் பாரம்பரிய நடனங்களை நாமும் கண்டுகளிக்க இப்படி நிகழ்ச்சிகளை அன்றாடம் மேடையில் நடத்துவது உண்மையாகவே பாராட்டுக்கு உரியதுதான். அவுங்களுக்கும் இது ஒரு வருமானமா ஆகியிருக்கு பாருங்க.

ஆயிரம் இருந்தாலும் அரசர்(அரசு) கவனிச்சால்தான் (கலைகள்) எதையும் அழிஞ்சு போகாமக் காப்பாத்த முடியும்.



கிளம்பும் சமயம் இன்னொரு இந்திய முகம் கண்ணுலே தென்பட்டது. தாய்லாந்துலே ட்ராவல் பிஸினெஸாம். சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிட்டு வந்துருக்கார். எல்லோரும் (ஒரு) தாய் மக்கள். சொன்னா சொன்ன நேரத்துக்குச் சரியா வந்து காத்துக்கிட்டு இருந்தார் ஸ்மெய்.
கல்லுப்புலி

காளை மாட்டு வண்டி


வரவேற்பில் வச்சுருந்த 'கல்லுப்புலி' ஜோரா ஜொலிக்குதுன்னா இன்னொரு பக்கம் வச்சுருந்த எளிமையான மாட்டுவண்டி அமைதியைக் குறிக்குதோ? அதன் நுகத்தடி வேலைப்பாடு பலே ஜோர்!
அஞ்சாறு நிமிசத்துலே ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்ததும், மறுநாள் காலை எட்டுமணிக்கு வரச்சொல்லிட்டு அறைக்குப்போனோம். இங்கே மிந்தூக்கி இல்லை. முழங்காலைப்பிடிச்சுக்கிட்டே படியேறினால் மாடிப்படித் திருப்பத்தில் பள்ளி கொண்டவன் ரெண்டு தாமரையில் மக்களை வச்சுருக்கான். ஒன்னு பிரம்மா. இன்னொன்னு யார்? யாரூஊஊஊஊ

தொடரும்...............................:-)

35 comments:

said...

Teacher...

Vazhakkam pola phots and commentory super... paisa selavu ellamae, oor suthi parthachu...

Waiting for the next chapter...

-Sri :)

said...

மேடையும் அதுமுன்னால சாப்பாட்டு மேசைகளையும் பார்த்தா, அதென்னவோ ஹாரிபாட்டர் ஞாபகம் வருது :-)))))

said...

//நமக்கு விருப்பமான காய்கறி வகைகளை ஒரு தட்டில் எடுத்துக் கொடுத்தால் அதை சமைச்சு ஃப்ரைடு ரைஸாகக் கொடுக்கறாங்க. பஃபே சிஸ்டம் என்பதால் நல்லா சாப்பிடும் மக்களுக்கு இந்த 12 என்றது விலை மலிவுதான். கூடவே ஒன்னேகால் மணி நேர ஆட்டம்பாட்டம் இருக்கே.//

கடவுளே! நல்லா பசிக்கற நேரத்தில இதை படிச்சுட்டேன். மதியம் வேற சாப்பிடலை...cup noodles வேற கவுத்துடுச்சு [காலக்கெடு முடிஞ்சதால 'புழு-வார்' சாப்பிட ஆரம்பிச்சுட்டார் :-) ]...பரவாயில்லை...பார்த்தே பசியாறிக்கறேன்.

//இசைக்குழு//
அதென்ன நம்ம ஊரு வில்லுப்பாட்டு வாத்யம் மாதிரி இருக்கே?!!

//தேங்காய் சிரட்டையைக் கையில் வச்சு 'டட் டட் டகடக'ன்னு ஓசை எழுப்பிக்கிட்டே ஆடுன குழு நடனம் ஒன்னும் ஜோர்//
நம்முடே திருவாதிரக்களி போலே! அல்லே சேச்சி :-)

//தேவதைகளுக்குச் சிரிக்கத் தெரியாது போல!!!! //
நல்லா இருக்கே கதை. நீங்க எல்லாம் நல்லா கட்டு கட்டிகிட்டே பாப்பீங்க...அவங்க பசியில சிரிச்சுகிட்டே ஆடணுமா?!! [சும்மா தமாஷ் தான்...பசியில சிரிப்பு வராதுங்கோ ...அனுபவம் தான் :-)]

said...

//பள்ளி கொண்டவன் ரெண்டு தாமரையில் மக்களை வச்சுருக்கான். ஒன்னு பிரம்மா. இன்னொன்னு யார்? யாரூஊஊஊஊ//

சச்சு வா இருக்குமோ, அதான் சரஸ்வதி.

said...

சாலட் பார்,பணியாரம் என வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள் டீச்சர். பாரம்பரிய கலைகளை அரசு கவனித்தால்தான் அழியாமல் பாதுகாக்கமுடியும் உண்மை டீச்சர்.

said...

சாலாட் கூட இருக்குறது பாக்க மங்கோ பச்சடி மாதிரில இருக்கு .என்ன டிரெஸ்ஸிங் டீச்சர் அது?

வாய்க்கும் கண்ணுக்கும் நல விருந்து போல?சூப்பர்
அந்த அப்சரஸ் அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு.சாப்பாடு போட்டோ எதுவும் இல்லையா ;-))))

இன்னும் எத்தினி நாள் இருப்பீங்க?நெறைய சுத்தி பாத்துடுங்க.
இந்த பக்கம்(அமெரிக்கா)வர மாதிரி எண்ணம் இருக்க teacher?

said...

கடைசி படத்த கொஞ்சம் இன்னும் நெருக்கமா போட்டுருந்தா முயற்சித்து இருக்கலாம். மங்கலாத்தான் தெரியுது.

said...

வாங்க ஸ்ரீனிவாசன்.

என்னது பைசா செலவில்லாமலா?

பொறுங்க. பில் அனுப்பறேன்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.


உங்களுக்கு(ம்) ஹாரிபாட்டரா?????

said...

வாங்க டாடி அப்பா.


அந்த வில்லுப்பாட்டு வாத்தியம் மரக்கட்டையில் செஞ்சுருக்கு.
xylaphone. நானும் கமர்கட் மாதிரி நுனியில் வச்சுருக்கும் மெல்லிசான குச்சிகளை ரெண்டுகையில் பிடிச்சுக்கிட்டு அதுலே இருக்கும் மரக்கட்டைகளைத் தட்டிப்பார்த்தேன். ஒவ்வொன்னுக்கும் ஒரு ஸ்வரம் வருது!!!!


பொதுவா ஆட்டக்காரர்களும் பாட்டுக்காரரகளும் நிகழ்ச்சிக்கு முன் சாப்பிடமாட்டாங்க.

said...

வாங்க விருட்சம்.

சச்சுவா? மருமகளுக்குமா தாமரை ஸீட் கொடுத்துத் தாங்கிக்குவார்?

வலப்புறம் இருப்பதுதான் ப்ரம்மான்னு நினைக்கிறேன். ஆனா பெண் உருவமா(?) இருப்பதோடு நாலு தலை, எட்டுகைகள்ன்னு குழப்புது.

பொதுவா பிரம்மா நேரா மேலேதானே இருப்பார்?

இங்கேயும் அப்படி ஒரு பூ + உருவம்.

ஒருவேளை இதுதான் சச்சுவோ?

said...

வாங்க சுமதி.

வெள்ளைவெளேர்னு அந்த பணியாரம் சூப்பர் போங்க!!!!
அரசு = உண்மை

said...

வாங்க விஜி.

அங்கே 3 நாள்தான் இருந்தோம். 30 பதிவு கேரண்டி:-)))

உங்கூர்ப்பக்கம் வந்த காலங்களில் பதிவரா இல்லை. அதுதான் சோகம்.

ரெண்டு முறை வந்து சுத்தி இருக்கேன்.

என்ன ட்ரெஸ்ஸிங்ன்னு தெரியலைப்பா

said...

வாங்க ஜோதிஜி.

படத்தை க்ளிக்குங்க. பெருசாத் தெரியும்.

said...

//வலப்புறம் இருப்பதுதான் ப்ரம்மான்னு நினைக்கிறேன். ஆனா பெண் உருவமா(?) இருப்பதோடு நாலு தலை, எட்டுகைகள்ன்னு குழப்புது.//
அந்த ஊருக்காக roles reverse செஞ்சுகிட்டான்களோ என்னமோ புருஷனும் பொஞ்சாதியும் ( பிரம்மாவும், சச்சுவும் ).
ஒரு change வேண்டாமா. ஒங்களுக்கு என்ன ஆளு தலைன்னு சச்சு சும்மா சொல்லிகிட்டே இருந்திருப்பா. நீ வச்சு பாரு, கஷ்டம் புரியும்னு தலையையும் கொடுத்து கொஞ்ச நாள் நீ படைத்தல் வேலையைப் பாருன்னு தலைல கட்டியிருப்பார் தலையையும ்சேர்த்து.
ஆனா நம்ம ரங்கஸ் மட்டும் எங்கே போனாலும் படுக்கை , காலமுக்க பொண்டாட்டி சகிதம் ஹாயா படுத்துடறார்பா. புத்தரா ரோல் கொடுத்தாலும்படுக்கறதை மட்டும் விடறதே இல்லை. போனா போறதுன்னு லச்சுக்கு மட்டும் ஒய்வு கொடுதுடறார்.

said...

Padikka padikka Cambodia poga aasaia irukku... :)

Srini

said...

டீச்சர் எல்லாத்தையும் அப்பப்ப படிச்சுட்டு தான் வரேன். அங்க போறதுக்குள்ள மொத்தமா ஒரு தடவை படிப்பேன். புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியோட தான் போகனும் :))

said...

டீச்சர் எங்கே போனாலும் பூனை பிடிப்பீர்கள் ஆனால் இங்கே புலியே மாட்டிக்கிச்சு.

said...

புலி தங்கம்னு நினைச்ச்சேனே. பார்க்கரதெல்லாம் பொன்னில்லையொ;0)
மீண்டும் வரேன்.

said...

ஐய்யய்யோ..... இது என்ன ஒரே பேளப் பட்டினமா இருக்குன்னு கத்துன கத்தலில் கம்பார்ட்மெண்ட் பூராவும் பலத்த சிரிப்பு.


ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.........

said...

ஏம்மா நாலு முகம் எட்டுக்கைன்னால் சரஸ்வதிதானே.
அந்த கொடி மாதிரி வருதே அது லக்ஷ்மியோடதோ என்னவோ. ஆனாலும் இடிக்கிறதே. லாஜிக்கெ இல்லை. ஒரு வேளை மாயா வா இருக்குமோ?சாலட் பார் ரொம்ப டெம்ப்டிங்:)

said...

விருட்சம்.

ரோல் சேஞ்சா? இருக்குமோ என்னவோ?
நம்ம வல்லியம்மா பாருங்க எட்டுக்கை நாலு தலை சரஸ்வதின்றாங்க!!!!

எக்ஸிபிஷன் சமாச்சாரமாப்போச்சு:-))))

said...

வாங்க ஸ்ரீ,

கம்போடியாதான் இதுவரை நாம் போன நாடுகளில் படு மலிவு.

நேரம் பிரச்சனை இல்லைன்னா ஒரு ரெண்டு வாரம் நிதானமாப் பார்க்கலாம்.

said...

வாங்க நான் ஆதவன்.

நம்ம சுற்றுலா ஓல்டீஸ் மாடல்.

இளவயசுக்காரர் ஸ்பெஷல்ன்னா நம்ம கானாபிரபாவின் பதிவுகளையும் நெட்டுரு போட்டுக்கிட்டுப் போங்க. அதிலும் அந்த Khaosan Road விட்டுடாதீங்க.

உங்களுக்கு இதுதான் ப்ராக்டிகல் எக்ஸாம்:-)))

said...

வாங்க பிரகாசம்.

எனக்கு(ம்) ஒரே டவுட்டுதான். இந்த ஊரில்தான் பூனை, நாய் எதையும் பார்க்கலை!!!

ஒருவேளை.........பாம்பார் கதிதானோ அதுகளுக்கும்!!!!

said...

வாங்க வல்லி.

நம்மூட்டு சரஸ்வதிக்கு தலை ஒன்னு கை நாலுப்பா.

புலி கல்லு வச்ச புலி. மின்னலடிக்குது.

உலகமே இனி சீனாதான்னு சிம்பாலிக்கா உலக உருண்டையைக் காலால் மிதிச்சுருக்கு பார்த்தீங்களா?

நெசம்தான் போல!

said...

ஜோதிஜி,

ஜாக்கிக்குப்போட வேண்டிய கடிதம் ராங்க் அட்ரஸாப் போயிருச்சா?????

Anonymous said...

//ஒன்னு பிரம்மா. இன்னொன்னு யார்? யாரூஊஊஊஊ//

அது யாருன்னு கண்டுபிடிச்சீங்களா

said...

விடுபட்டவற்றை சுற்றிப் பார்த்துவிட்டேன்.

அமர்களமான ஆடலுடன் வயிறு நிறைய உணவும் உண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இன்னும் யாரும் கண்டு பிடிக்கலை:(

நீங்க சொன்னாத்தான் உண்டு:-)

said...

வாங்க மாதேவி.

லேட் ஆனாலும் லேட்டஸ்டா வந்துருக்கீங்க!!!!

டேங்கீஸ்:-))))

said...

சமூக நடனங்களுக்கு கிராமிய நிகழ்ச்சிகளான அறுவடை காலம், மீனவர் பகுதிகளில் இருக்கும் கொண்டாட்டங்கள் இவைகளை நடனங்களா ஆடறாங்க. க்மெர் பாரம்பரிய நடனங்களை நாமும் கண்டுகளிக்க இப்படி நிகழ்ச்சிகளை அன்றாடம் மேடையில் நடத்துவது உண்மையாகவே பாராட்டுக்கு உரியதுதான். அவுங்களுக்கும் இது ஒரு வருமானமா ஆகியிருக்கு பாருங்க.

ஆயிரம் இருந்தாலும் அரசர்(அரசு) கவனிச்சால்தான் (கலைகள்) எதையும் அழிஞ்சு போகாமக் காப்பாத்த முடியும்.
------------------------------------------------------------------------------------------------

மிகவும் பாராட்டக்குரிய விடயம். ஆனால் சில ஆசிய நாடுகளில் பாராம்பரியக் கலைகளைக் கண்டு கொள்ளமால் மேற்கத்தையக் கலைகளுக்கு முன்னுரிமை வழங்குகிறர்களே.

said...

வாங்க அரவிந்தன்.

மேற்குலக தாக்கம் அதிகமாப்போய் எல்லோரையும் ஆட்டி உலுக்குது.

ஒருநாள் எல்லோரும் அவுங்கவுங்க இழப்பைப் புரிஞ்சுக்கும் காலம் வரத்தான் போகுது.

புரிஞ்சுக்க மனசில்லைன்னா.........
பாரம்பரியம் நிலைக்குமா?

said...

நண்பர் அழைத்து சங்கடப்பட்டார். இந்தியாவில் இருப்பதாக நம்பப்படும் கலாச்சாரச்சாரத்தை ஏன் கட்டி அழுது கொண்டு இருக்கீறீர்கள் என்றார்.

உங்கள் இந்த வரிகள் எனக்கு நம்பிக்கை அளித்தது. நன்றி.

மேற்குலக தாக்கம் அதிகமாப்போய் எல்லோரையும் ஆட்டி உலுக்குது.

ஒருநாள் எல்லோரும் அவுங்கவுங்க இழப்பைப் புரிஞ்சுக்கும் காலம் வரத்தான் போகுது.

புரிஞ்சுக்க மனசில்லைன்னா.........
பாரம்பரியம் நிலைக்குமா

said...

எங்களால் Sophea Angkor Pich Restaurant கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக Koulen Restaurantல் ஆடல் பாடல் கண்டோம்.

- ஞானசேகர்