Thursday, September 16, 2010

அம்பத்தியேழு மணிகளில் இம்புட்டும் கவர் ஆச்சு.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 12)

ஒரு ஒம்போது மணிக்கு அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பி போற வழியில் எதாவது கோவில் கிடைச்சா பார்த்துக்கிட்டே பொழுதோடு வீடு போய்ச் சேரணும். காரை வாசலுக்குக் கொண்டு வரச் சொல்லலாமுன்னு நம்ம ட்ரைவர் ப்ரதீப்பைக் கூப்பிட்டா.... கோவிலில் இருக்கேன். இதோ வர்றேன்னார். பையருக்கு பக்தி ஜாஸ்தி ஆகிப்போச்சு. எல்லாம் சேர்வாரோடு சேர்ந்த வினைன்னு நினைச்சேன்.

ஒன்பதரை ஆகிருச்சு, செக் அவுட் செஞ்சு கிளம்ப. நேரா ஜலந்தர் போய் சுத்திப் பார்க்கணுமுன்னு கோபால் சொல்லும்போதே, முதல்லே இங்கே ஒரு முக்கியமான உள்ளூர் கோவிலுக்கு உங்களைக் கூட்டிட்டுப்போய் காமிக்கிறேனார் ப்ரதீப். 'நீர் வெளியூர்காரர், உமக்கெப்படித் தெரியும்?' ன்னா ....எல்லாம் நம்ம லிஸ்ட் செஞ்ச வேலை. வேறு எதையாவது நாம் 'மிஸ்' செஞ்சுட்டா என்ற அதீத ஆர்வம். அக்கம்பக்கம் கேட்டு, அதைப்போய்ப் பார்த்துட்டும் வந்துருக்கார், நம்ம விஜயத்துக்குத் தகுதி வாய்ந்ததான்னு உறுதிப்படுத்திக்க!

அங்கே ராணி கா பாக் (Rani Ka Bagh)போய் இறங்குனால் அது லால் பவன்,
ரொம்பச் சின்ன இடத்துலே கட்டுன கோவில். இப்போ ஒரு 21 வருசமாச்சு இதைக் கட்டி.

இதை(யும்) கட்டுனவங்க மாதா லால் தேவிஜிதான். கோவில் கட்ட முடிவானதும். ஒரு கட்டிடக்கலை நிபுணரிடம், (அசல்) வைஷ்ணவோதேவி கோவிலைப்போலக் கட்டணுமுன்னு கோரிக்கை வச்சாங்க. அவர் எல்லாத்தையும் அளந்து பார்த்துட்டு, இவ்வளவு சின்ன இடத்தில் நடக்காத காரியமுன்னு பின்வாங்கிட்டார்.

அதுக்குப்பிறகு சாதாரண கொத்தனாரான ஸ்வரண் சிங் என்றவரிடம் இதுபற்றிப் பேசுனப்ப, 'நான் இதை சவாலா எடுத்துக் கட்டித்தரேன்'னுருக்கார். 1989 வது வருசம் முடிச்சுட்டார். சுத்திச்சுத்தி வளைஞ்சு நெளிஞ்சு போகும் படிகளால் பலமாடிக் கட்டிடம் போல இருக்கு. இந்தக்கோவில் இப்போ அம்ரித்ஸரில் பயங்கர டூரிஸ்ட் அட்ரக்ஷனா ஆகிப்போச்சாம்.
வளைச்சு நெளிச்சு கட்டிட்டாங்க!

மாதா லால் தேவிஜியைப் பற்றி இன்னும் கொஞ்சம் விஷயமும் கிடைச்சது. இந்தம்மா 1923இல் லஹோர் அருகில் கசூர் என்னும் கிராமத்தில் பிறந்தாங்க. பிரிவினைக்கு அப்புறம் லஹோர் பாகிஸ்தான் வசம் போயிட்டதால் இவுங்க அம்ரித்ஸர் நகருக்கு இடம் பெயர்ந்துட்டாங்களாம்.
ஆன்மீகத்துலே ஈடுபாடுடன் பிரம்மச்சாரிணியாகவே இருந்து பல புண்ணியத்தலங்களையும் தரிசனம் செஞ்சபிறகு இந்தக்கோவில் கட்டும் ஐடியா வந்துருக்கு. இவுங்க 1994 ஜனவரியில் பூவுல வாழ்க்கையை விட்டுட்டாங்க. அட்லீஸ்ட் ஒரு கோவிலைக் கண்ணாலே பார்த்தாங்க.
சொக்கத்தங்கத்துலே மாதாவுக்கு சிலை செஞ்சு 'இது தங்கச்சிலை'ன்னு எழுதி வச்சுருக்காங்க!

பூஜ்ய மாதா ஸ்ரீ லால்தேவி ட்ரஸ்ட் ஏற்பட்டு மொத்தம் ஆறு கோவில்கள் இதுவரை கட்டி இருக்கு. ஆகமொத்தம் ஏழு கோவில்கள்!!! நவீன வசதிகளுடன் ஒரு அருமையான மருத்துவமனை கூடக் கட்டி ஏழைகளுக்கு சேவை செய்யறாங்களாம்.


இந்த ஊருக்கு வரும்வரை இந்த மாதாஜியைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஓசைப்படாமல் நல்லது செஞ்சுருக்காங்க!

வைஷ்ணவோ தேவி
மதுரை மீனாட்சி. சிலைகளின் அழகைப்பார்க்கமுடியாதபடி எல்லோரும் ஜரிகை போர்த்தி நிக்கறாங்க:(

லட்டு கோபால்

இங்கே என்ன விசேஷமுன்னா.... இந்தியா பூராவும் உள்ள முக்கிய கோவில்களின் மூர்த்திகளைக் கூடச் சேர்த்துக்கிட்டாங்க. தமிழ்நாட்டு பங்குக்கு மதுரை மீனாட்சி, கன்யாகுமரி அம்மன், ராமேஸ்வரம் கோவிலின் ராமநாதர், ஸ்ரீ ரங்கத்தின் ரங்கநாதர், திருப்பதி வெங்கடேஸ்வரன், துவாரகை கிருஷ்ணன், மதுராவின் லட்டு கோபால், பத்ரிநாத், கேதார் நாத் சாமிகள், பூரி ஜெகன்னாத், மஹா காளியின் பிண்டி நேபாளத்தின் பசுபதிநாத் இப்படி பயங்கரக் கூட்டம் இதோடு முடிக்காமல் 12 ஜ்யோதிர்லிங்கங்களும் இடம்பிடிச்சு இருக்கு. ஏராளமான கோவில்களின் முக்கிய கடவுளர்களை ரொம்ப அழகா அங்கங்கே கண்ணாடி அலமாரிகளில் சுவருக்குள்ளேயே பதிச்சுட்டாங்க.
புதுசா என்ன சாமி மீன்மேலே உக்கார்ந்துருக்கேன்னதும் சட்னு ப்ரதீப் சொன்னார், அது மகரமீனாம்

பசுபதிநாத்

இந்தியாவின் முக்கிய கோவில்கள் அனைத்தையும் ஒரே இடத்துலே பார்த்து புண்ணியம் தேடிக்கலாம்.
வரிசைக்கு ஆறுன்னு ரெண்டுவரிசையா ஜ்யோதிர் லிங்கங்கள்

நவராத்ரி சமயங்களில் கொண்டாட்டம் பலமாம். கூட்டமும் நெரியுமாம்.

ப்ரதீப்

ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு என்னைத் தொடர்ந்து வந்த ப்ரதீப், 'நான் எதையும் விட்டுடாமப் பார்க்கணுமே'ன்னு கவனமா இருந்தார். எங்கே பார்த்தாலும் பிரார்த்தனைக்கான வட இந்திய ஸ்டைலில் சரிகைவச்ச சிகப்புத்துணிகளும், பித்தளை, வெங்கல மணிகளுமா தொங்கவிட்டுருந்தாங்க.. 'ஆஜர் ஹோ'ன்னு நாமும் வந்ததுக்கு அடையாளமா மணிகளை குலுக்கிட்டுப்போகணும் போல!
குகைவாசல் (ஸ்கேட் போர்டில் வரமுடியாது)

சின்ன வாசல் உள்ள குகையில் காலடி வச்சால் கீழே குளம்கட்டி இருக்கும் தண்ணீரைக் கடந்து போகணும். அங்கே ஒரு சிவலிங்கத்துக்கு இடைவிடாத அபிஷேகம் ஒரு பசு செஞ்சுக்கிட்டு இருக்கு. அதன் மடியில் இருந்து சொட்டுச்சொட்டாக தாராபிஷேகம்!
சயிண்டிஃபிக் ஃபிக்ஷன் செட்டிங் மாதிரி மாடர்னா பத்ரிநாத் தரிசனம்

வைஷ்ணவோ தேவி பீடத்தில் வணங்கி எழுந்து வந்தோம். கீழ் தளத்தில் ஒரு பெரிய ஹாலில் சுத்திவர எல்லாக்கடவுளர்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் வச்சுருக்காங்க. நடுவிலே பக்தர்கள் சௌகரியமா உக்காந்து வணங்கலாம். தியானம் செய்யலாம். ஹாலின் ஒரு ஓரத்தில் சிவலிங்கம். அங்கே யார்வேண்டுமானாலும் சிவனுக்கு நீரோ பாலோ ஊற்றி அபிஷேகம் தாமே செஞ்சுக்கலாம்.படங்கள் எடுக்க எந்த ஒரு தடையும் இல்லை.



எட்டுத்தலை சிவன்


அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் ஒரு வட்டம் அடிச்சு வெளியில் வந்தோம். இந்த ஊரில் என் கண்ணில் பட்ட ஒரு விசேஷம் எல்லா நாற்சந்திகளிலும் ட்ராஃபிக் போலீஸ் நிற்கும் இடத்துக்கு வெவ்வேறு டிசைன். நட்சத்திரம், டெல்லி பஹாய் தாமரைக்கோவில், உலக உருண்டை இப்படி வெவ்வேற. இதுதான் எனக்கு லேண்ட் மார்க்காவும் இருந்துச்சு:-)
90 கிலோமீட்டர் பயணத்தில் ஜலந்தர் நகரை அடைஞ்சோம். ஜலந்திரன் என்னும் மன்னன்(அதான் துளசியின் கணவன்) ஆண்ட நகரம். கதை வேணுமுன்னா இங்கே பாருங்கள்.

மேம்பாலம் கட்டுவது, சாலைகளை விரிவாக்குவதுன்னு இங்கேயும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு! போக்குவரத்து நெரிசலில் ஹார்ட் அட்டாக் வந்தாலும் பயமே இல்லை. இந்திய நாட்டுலே இருக்கும் இதய நிபுணர்கள் எல்லாம் பேசிவச்சுக்கிட்ட மாதிரி ஒரே வீதியில் மருத்துமனைகளாக் கட்டி விட்டுருக்காங்க. என்ன ஆஸ்பத்திரின்னு தெரியாமப் போயிட்டா..... நல்லா இருக்காதுன்னு ஒரு இடத்தில் பெரிய இதயம் ஒன்னையும் வச்சுருக்காங்க. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி!

இதயம்
இது ஒரு மருத்துவமனை. என்னமோ ஹிஸ்ட்டாரிகல் பேலஸ் மாதிரி இருக்கு பாருங்க!
இந்தமாதிரி இருந்தால் எப்படி? இப்படிப் பயணம் செய்ய அனுமதிக்கலாமா?

ஊருக்கு வெளியில் ஜலந்தர் கண்டோன்மெண்ட் இருக்கு. குதிரைமேல் பயணிக்கும் ஆர்மி ஆட்கள் நடமாட்டம் அடிக்கடி கண்ணில் பட்டது. வெள்ளைக்கார ஆட்சியில் இந்த ஊர் ரொம்ப முக்கியமானதாக இருந்துருக்கு. அண்டைநாட்டு சர்வாதிகாரி 'ஜியா உல் ஹக்' பிறந்தது இங்கே ஜலந்தரில்தானாம்.
அதே ஹவேலிக்கு வந்து சேர்ந்தோம். ஒரு மாறுதலா இருக்கட்டுமுன்னு எதிர்வரிசையில் இருந்த மாலுக்குள்ளே போய் அங்கிருந்த பிகானீர்வாலா உணவகத்தில் பகல் உணவு. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை அறிஞ்சுருந்தும் தெரியாத்தனமா சவுத் இந்தியன் ஸ்நாக்ஸ் தாலின்னு ஒன்னு (இட்டிலி, தோசை, ஊத்தப்பம் வடை, சட்டினி & சாம்பார்.)
வாங்கிக்கிட்டுப் படாதபாடு பட்டேன். வடை மட்டுமே ஓக்கே! பேசாம கோபாலைப்போல குல்ச்சா வாங்கி இருக்கலாம்.
இடம் படு சுத்தமா நேர்த்தியா பளிச்சுன்னு இருக்கு. ஹைவேக்களில் இப்படி நல்ல இடங்கள் நம்ம பக்கங்களில் இல்லையேன்னு ஒரு எண்ணம் வந்த என்னவோ நிஜம்.

கீழ்த்தளத்தில் இவுங்க மிட்டாய்க்கடை இருக்குது. அங்கே கொஞ்சம் இனிப்பு வகைகளை மறுநாள் கிருஷ்ணஜெயந்திக்காக வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.

போனவழியிலேயே அதே சட்லெஜ் நதி அணை கடந்து மூணு மணிநேரப்பயணத்தில் சண்டிகர் வந்து சேர்ந்தப்ப மணி மாலை நாலரை.
பயணம் நல்லபடி அமைஞ்சதுலே மனசு நிறைஞ்சு இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் முதல்வேலையா காபி டிக்காஷனைப் போட்டேன். பாழும் நாக்கு:(

அடுத்து எங்கேன்னு இன்னும் முடிவு செஞ்சுக்கலை. பொழைச்சுக் கிடந்தாப் பார்க்கலாம். அதுவரை விட்டுப்போன உள்ளூர் சமாச்சாரங்களைக் கவனிக்கலாமா?

கூட(வே)வந்த அனைவருக்கும் என் நன்றி. மீண்டும் வருக.

PIN குறிப்பு: மூணு நாளுக்கு பத்து பதிவாவது வேணுமுன்னு நம்ம வல்லி சிம்ஹன் சொன்னாங்க. நாம்தான் தாரளமாச்சே. கூட ரெண்டு கொசுறு போட்டுருக்கேன்:-)



41 comments:

said...

சுவாரஸ்யம எழுதியிருக்கீங்க.. இன்னம் கொஞ்சம் விலாவாரியா பகுதி பகுதியா எழுதியிருக்கலாமே.. பயணம் என்றுமே மகிழ்ச்சி தரும் விஷயம்..நல்லா பதிவுங்க.

said...

வாங்க மோகன்ஜி.

முதல்முறை வந்துருக்கீங்க போல!

வணக்கம். நலமா?

//இன்னம் கொஞ்சம் விலாவாரியா பகுதி பகுதியா எழுதியிருக்கலாமே.. //

ஐயோ ....இன்னும் விலாவரியா????

இந்த 12 பதிவுகளுக்கே நம்மாளுங்க அடிக்க வந்துருவாங்களோன்னு பயந்து பயந்துல்லே எழுதுனேன்...:-))))

said...

துளசி மோகன் ஜி கேக்கறாரில்ல நீங்க இனிமே.. லைவ் ரிலே மாதிரி ஓட்டனும்.. அங்க அங்க இருந்தபடி .. லால்தேவி கோயிலிலிருந்து துளசி ..
கேமரா பெர்சன் கோபாலுடன் ன்னு :)) எப்படி இருக்கும் ? ஹை

said...

விடுங்க கயலு:-)

என்னங்க இது ராகிங்கா!!!!

மோகன்ஜி புதுப்பதிவர். இந்த வருசம்தான் பதிவரா ஆகி இருக்கார். அப்படித்தான் அவர் பக்கம் சொல்லுச்சு.

அவருக்கு நம்மாயிரம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்.


லைவ் ரிலே பண்ணும் அளவு டெக்னாலஜி இன்னும் வளரலைப்பா:-)

said...

அக்கா.. ஸ்கேட் போர்டு கவுத்துடுச்சுன்னு நான் குகைவாசல்லேயே ஒக்காந்துட்டேன்.. நீங்க போயிட்டுவந்து சொன்னப்புறம் மானசீகமா தரிசனமும் ஆச்சு :-))

ஆசையே துன்பத்துக்கு காரணம்.. நான் தென்னிந்திய சாப்பாட்டின் மேல் இருக்கும் ஆசையை சொல்றேன். அண்ணாவை மாதிரி, கிடைக்கிறதை ஏத்துக்கிட்டா பிரச்சினையே இல்லை :-))))

said...

ப்ரதீப் காட்டிய கோயில் நல்லாக இருக்கு.

ஒரே இடத்தில் நாங்களும் பார்த்துப் புண்ணியம் தேடிக்கிட்டோம்.:)

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஒரு வடையை அங்கே தள்ளிட்டு ஒரு குல்ச்சாவை அடிச்சுட்டேன். ஷேர் பண்ணிச் சாப்புடணுமில்லை!!!

said...

வாங்க மாதேவி.

புண்ணியம் அந்த ப்ரதீப்புக்கே!

said...

Teacher,

Romba santhosham, entha Amritsar series romba romba arumai. Ella edathayum nella cover panniyeruntheenga. Aduthu entha oorukku kootitu poga poreenga ? ellorum avala wait panikituyerukkom.

-Sri

PS: Not sure if you have seen this site, but do check it out for a daily Udupi Shri Krishna darshanam + prasadam. http://udupishiroormutt.in/shiroor/

said...

வல்லிசிம்ஹன் சொன்னாங்களா....ம்ஹூஉம்:)
57 மணி நேரம் பிரயாணம். அதில
24மணி நேரம் தூக்கம்,6 மணி நேரம் சாப்பாடு..
அப்படி இப்படி நின்னு பார்த்துக் குறிப்பு, போட்டோ. 4 மணி. ஆகக் கூடி 24+6+4=34.
57-34=17.17 பதிவு வேண்டும். பரவாயில்லை. இந்தத் தடவை விட்டு விடுகிறேன்:)பயண (ஜலந்திரன்)மன்னருக்கும் அவர் நாயகிக்கும் வாழ்த்துகள்.செலவில்லாமல் இவ்வளவு கோவில்களையும் தரிசனம் செய்து வைத்தீர்கள். அதுக்கு ஒரு பெரிய நன்றி.:)

said...

நல்லா இருக்கு டீச்சர் இந்த வைஷ்ணவோதேவி கோவிலும், பசுபதிநாத்,எட்டுதலை சிவன் எல்லாம் நன்றாக உள்ளது டீச்சர் :)))))

said...

துளசீம்மா! 12 கட்டுரைகளிலும் எங்களை கையைப்பிடித்து அழைத்துப்போய் காட்டிய நீங்கள், வீட்டுக்குவந்தவுடன் போட்ட காபியில் ஒரு வாய் தராமல் போய்விட்டீர்களே!

வடக்கே போனால் நமக்கு நிச்சயமாகத்தெரிந்தாலொழிய, செளத் இந்தியன் சிற்றுண்டிகளுக்கு ஆர்டர் செய்யாமலிருப்பது உத்தமம்!

பாரதி மணி

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்..

கண்ணனைப் பார்க்கக் கசக்குமா?
சுட்டிக்கு நன்றி.

நேரம் இருந்தா இதையும் பாருங்க. அப்போ கூட வரலையா நீங்க?

http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_13.html



http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_14.html

said...

வாங்க வல்லி.

பயங்கரமாக் க்'கணக்கு' பண்ணிட்டீங்க!!!!!

பயணநேரம் பத்து இருக்கே கூட்டலையா?

அப்போ அந்த 17 மைனஸ் 10 = 7 தான்.

இந்தக் கணக்கில் போனஸ் பதிவுகள் 5:-)

கூட்டிக்கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும்:-)))))

said...

வாங்க சுமதி.

எல்லா மூர்த்திகளையும் 'சுட்டு'த் தள்ளிட்டேன்:-))))

தனி ஆல்பம் போட்டுக்கலாம்.

கூடவே வந்ததுக்கு நன்றிப்பா.

said...

வாங்க பாரதி மணி ஐயா.


உங்களுக்கு இல்லாத காஃபியா? எப்ப வரேன்னு சொல்லுங்க. அதி ஸ்ட்ராங்கா பெரிய ஃபில்டரில் டிகாஷன் போட்டுறலாம்.

தென்னிந்திய உணவு பற்றி நீங்க சொன்னது ரொம்பச்சரி. அந்த பெயர்களை வச்சுக்கிட்டு நல்லாவே நமக்கு நாமம் போட்டுடறாங்க:(

ஆசை எப்ப விடுமோ!!!!

said...

Teacher,

Ungaloda Udupi / North Canara episode padichuyerukken but comments ezhudhalai, appo thaan ungalukkum Kannanai pidikkumnu therinjikitten, athanalae thaan shrioor mutt site anupinen. Eppo Paryaya (power'lae) erukkuravar Shrioor mutt Swamiji, avaroda site thaan athu. Neram kidaikkum pothu marakkamae Naga Panchami / Shri Krishna Jayanthi photos parunnga, particulara udupi makkals puli danace appuram kolam parunga, asthala yerukkum.

-Sri :)

said...

மிக அருமை துளசி.. ஜாலியா இருந்துச்சு.. அலைச்ச்சல் இலாம பார்த்தது..

அப்புறம் பாரதி மணி ஐயா சொன்னதுதான்.. வட நாட்டில் சப்பாத்திதான் பெஸ்ட்.
காஃபி எங்கே எங்களுக்கு..:))

said...

அன்புள்ள ஆசிரியருக்கு ,
Thursday, September 16,
''அம்பத்தியேழு மணிகளில் இம்புட்டும் கவர் ஆச்சு '' தொடர் படித்தேன்
படங்கள் நன்றாக இருந்தது .நன்றி.
உங்கள் பயணக்கட்டுரை போல் ..பக்தி தொடர் விறு விருப்பு இல்லை ..மனிக்கவும்
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்..
கம்போடிய பயண தொடர் போல் மீண்டும் ஒன்று தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்..
கோபால் சார் போடோஸ் நன்றாக உள்ளது.கோபால் சார் மதுரை என்று தெரிந்து கொண்டேன்.
இபொழுது கூட மதுரையில் இருந்து தான் அலுவல் முடித்து நம் ஊருக்கு வந்து சேர்ந்தேன் ..
சிவஷன்முகம்
9/17/2010

said...

நன்றி அம்மா

said...

ஸ்ரீநிவாஸன்,


யாருக்குத்தான் கண்ணனைப் பிடிக்காது!!!!

said...

வாங்க தேன்.


உங்களுக்கில்லாத காஃபியா!!!!

said...

வாங்க சிவஷண்முகம்.

கடவுள் நம்பிக்கை இருப்பதும் இல்லாததும் அவரவர் விருப்பமில்லையா?

உண்மையா கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான்.

எனக்குமே ஆழமான பக்தி இல்லைபோல. அதான் எழுத்துலே மிஸ்ஸிங்.

கோபால் படங்கள்ன்னு நீங்க சொன்னது கோபால் 'இருக்கும்' படங்களைத்தானே?

கம்போடியாபோல இன்னொன்னு வாய்க்குமான்னு தெரியலை. கிடைச்சால் பார்க்கலாம்.

said...

வாங்க லோகன்.

நன்றிக்கு ஒரு நன்றி.

said...

//கோபால் படங்கள்ன்னு நீங்க சொன்னது கோபால் 'இருக்கும்' படங்களைத்தானே?//

இதை ரங்கமணிகள் சார்பாக வண்மையாக கண்ணடிக்கிறேன்.... சீ...சீ... கண்டிக்கிறேன். கோபால் சார் பொருமைசாலி தான். :-)

said...

வாங்க நன்மனம்.

எழுத்துப்பிழைகளை எல்லாம் கவனிக்கிறதே இல்லையா?

வண்மையாக = வன்மையாக

பொருமைசாலி = பொறுமைசாலி

said...

ஆர்வக்கோளாறு :-( imposition என்ன சொல்லுங்க

said...

இந்திய மண்ணின் கலாசாரம், பாரம்பரியம், நடைமுறை, பல்வேறு கோவில்களின் சிறப்பும் சம்பிரதாயங்களையும் எல்லாம் அவை அவற்றின் வண்ணப்படங்களுடன் தொகுத்து தொடர்ந்து வர்ணித்து உங்கள் வலைப்பதிவினை ஒரு ஆன்மீகச் சரித்திரப் பொக்கிஷம் ஆக்கிவிட்டீர்கள்.

உங்கள் ஈடுபாடும் உங்கள் கணவர் கோபாலின் ஒத்துழைப்பும் என்னை ( எங்களை ) பிரமிக்க வைக்கிறது.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

said...

/ எனக்குமே ஆழமான பக்தி இல்லைபோல. அதான் எழுத்துலே மிஸ்ஸிங்.//

என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை துளசி மேடம்.
" அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்ச் சொல்கிறது தேவாரம்.
அவன் அருள் இருந்தால்தான் அவன் வீற்றிருக்கும் கோவில்களுக்குச்செல்ல மனதில் ஒரு தூண்டுதல்
தோன்றும்.
Bhakthi, as you may experience, is
faith integrated into one's intellect.
subbu rathinam.

said...

I guess your interest is infectious, thats why Pradeep was so keen in showing the temples. As usual, it was wonderful to be part of the trip.

said...

என்ங்க இது, உங்க தளத்தை இத்தனை நாளாப் பாக்காம உட்டுட்டேனே, அய்ய ய்யோ, எத்தனை அழகான படங்கள், எத்தனை நயமான வர்ணனை. நான் ரொம்ப துரதிர்ஷடசாலீங்க.

பரவாயில்லை, இப்பவாவது பார்த்தனே, இனி உடமாட்டனுங்க, துளசி.

said...

//என்ங்க இது, உங்க தளத்தை இத்தனை நாளாப் பாக்காம உட்டுட்டேனே, அய்ய ய்யோ, எத்தனை அழகான படங்கள், எத்தனை நயமான வர்ணனை. நான் ரொம்ப துரதிர்ஷடசாலீங்க.//

டாக்டர் சொல்றது மெய்தானுங்க.

பிரியாணி வர்ணனைகள்தான் வலையிலே ஏகத்துக்கு இருக்குதுங்க. பிரயாண வர்ணனைகளுக்கெல்லாம்
இளசுகளுக்கு எங்க டயம் கிடைக்குது!!

என்னைப்போல பெரிசுகளெல்லாமோ இவக பதிவு எப்ப வரும் வரும்னு பாத்துக்கினே கீது.

சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com

said...

நல்லா இருந்துச்சு அம்மா..
கூடவே பயணம் சென்ற உணர்வு..

said...

நான் டெல்லிக்கு வந்து ரெண்டு வருஷமாகப் போகுது.
அமிர்தசரஸ்ல பொற்கோவில்,ஜாலியன் வாலா பாக்,
வாகா பார்டர் இங்கதான் போயிருக்கிறேன்.
உங்களது பயணம் எனக்கும் போவதற்கு ஒரு வழிகாட்டியா
இருக்கும்னு நம்பறேன்.
அதே போல , உங்களது பயணக் கட்டுரைகளும்
வலைபக்கத்திற்கு புதியவளான எனக்கு,இதுபோல
பயணக்கட்டுரைகள் எழுதுவதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அதற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி அம்மா..

said...

நன்மனம்,

வகுப்பு மாணவர்களின் 'ஆர்வக்கோளாறை' ஆர்வமாக ரசிக்கிறேன்:-)))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

இதையெல்லாம் எந்தப் பிரிவில் வகைப்படுத்துவது என்று தெரியவில்லை:(

சுற்றுலா, ஆன்மீகம், சரித்திரம், அனுபவம் இப்படி ஒரே காக்டெய்லா...அச்சச்சோ.... ஐ மீன் கதம்பசாதமா இருக்குன்னு சொல்லவந்தேன்:-)

said...

உங்க இந்தப் பின்னூட்டம் மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு சுப்பு ரத்தினம் ஐயா.

எல்லாம் அவன் செயல்னு பூனை பக்தியா கண்ணை மூடிக்கிட்டுத்தான் இருக்கேன். பூலோகம் வெளிச்சமா இருக்கா என்ன?

said...

வாங்க சந்தியா.

நம்மாலே நாலுபேருக்கு 'ஊக்கம்' வந்தால் அதுவே ஒரு பெரிய திருப்தி!

said...

வாங்க டாக்டர்.

லேட்டா வரலை. நீங்க லேட்டஸ்ட்டா வந்துருக்கீங்கன்னு இருக்கேன்:-))))

ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க ஜிஜி.

சீக்கிரம் வலைப்பூவைத் தொடுக்க ஆரம்பிச்சு, ஜோதியில் கலக்க வாழ்த்துகின்றேன்.

said...

Dear author

I didn't observe any mistakes in ur versions that means '' Even i do not have deep
faith in God.It may be the coz, when I write, I may miss some words in my writings''
It surprises me that one of our readers finds mistake in this and takes a serious view of the above said versions..
It is not my job to interfere in others work. But i think, it is prudent to leave my views as it is.
I await the valuable comments from our thulasidhalam.blogspot.com friends.

I heard that there are 330 million Vedic Gods in our Hindu mythology. Is this possible? If it is so, why did the vedic people give Lord Vinayaka more than 1 lakh names?

There is strong evidence to prove the birth places of Budha and Mahavir. Why do you not give the exact birth place of Rama in Ayodhya ?
I think it is not advisable to go further in this matter, coz the court judgment on the matter is expected on 24th of this month.

However, it is a bone of contention to me that mythological events of millions of years ago, is claimed, whereas vedic roots came to India not more than 3000 years ago, maximum, in my opinion.

SIVASHANMUGAM..