Wednesday, October 13, 2010

ஸூப்பரா ஒரு சூர்ப்ப'நகை'

'உங்க குடும்பத்தில் யாருக்காவது சூர்ப்பநகா என்ர பெயர் வச்சுருக்கீங்களா? இல்லே அக்கம்பக்கம் யாருக்காவது சூர்ப்பநகா என்ற பெயர் இருக்கா? இருந்தால் தயவுசெஞ்சு சொல்லுங்க......நான் அவுங்களைப் பார்க்கணுமு'ன்னு தயவா வேண்டிக்கிட்டார் மைக் பிடிச்ச மகான். கோபால் உடனே,'இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இருக்கேன்னு எனக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தார்.

நம்ம பேட்டையில் ராம்லீலா ! வடக்குலே தசரா ஸ்பெஷல் இதுதான். சண்டிகரின் பல்வேறு செக்டர்களில் கொண்டாட்டம். நம்ம செக்டர் 21 க்கு ஸ்ரீ ரகுகுல் ராம்லீலா கமிட்டி பொறுப்பேற்று நடத்துது. செக்டருக்கு பத்துப் பார்க் என்ற கணக்கில் இருக்கும் ஒன்னில் திடீர்னு ஒரு ஸ்டேஜ் முளைச்சது ஒரு நாள். நம்ம தெருவுக்குப் போகும் வழி என்றதால் கண்ணிலிருந்து தப்பலை.

குப்பைக்கூளங்களைப் பெருக்கித்தள்ளிச் சுத்தம் செஞ்சு சுத்துச்சுவரா துணிகளை அலங்கரிச்சு, பார்க்குத் தரையெல்லாம் பச்சைவிரிப்புகள், நாற்காலிகள், மேடை, கலர் விளக்கு இப்படி வேலை பரபரன்னு நடக்குதே..... என்ன விசேஷமுன்னு விசாரிச்சால் ராம்லீலா. அட! வருசம் முழுக்க இது நடந்தாத் தேவலைன்னு எனக்கு...... அப்படியாவது இடம் சுத்தமா இருக்குமே!

நம்ம கோவிலில் நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் முடிச்சு, சாப்பாடு ஆனதும் கிளம்பி வரும்போது ஒன்பதரை, ஒன்பதே முக்கால் ஆகிரும். நம்ம தெருவுக்குள் நுழையும்போது மக்கள் கூட்டம் இருப்பதைக் கவனிச்சிருக்கேன். ஒரு நாளாவது போய்ப் பார்க்கணுமுன்னு நினைச்சதுக்கு..... நேத்து ஒரு ச்சான்ஸ்.

'பொடி நடையாப் போகலாம். 600 மீட்டர் ஒரு வாக் ஆச்சு'ன்னு கிளம்பிப்போனால் நம்ம அதிர்ஷ்டம் தெருவிளக்குகள் ஒன்னும் எரியலை. இருட்டுவீட்டில் குருட்டுப்பூனைகளா நடந்துபோறோம். எதிரில் வரும் வண்டிகள் இருக்கும் நமக்கிருக்கும் ஒன்னரைக்கண்ணையும் ஒழிச்சே தீர்க்கும் எண்ணத்தோடு ஹைபீம் போட்டுக்கிட்டு வருதுங்க. மனுசங்கள் நடமாட்டம் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் குறைக்கணும் என்ற நாகரிகம் இல்லாத காட்டு.... ப்ச்.
ஒரு டார்ச்சை எடுத்துவராதது நம் தப்பு.

சொல்லச்சொல்லக் கேக்காம சீக்கிரமாக் கிளம்பி ஒன்பதே காலுக்கு வந்தால் மைக் டெஸ்ட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. பத்துப்பதினைஞ்சு பொடியன்கள். நம்மைப்போல அப்பாவிகளா சீக்கிரம் வந்த ஒரு சிங் குடும்பம்.

எங்க எண்ணிக்கைகளைவிட கூடுதலாக் காவல்துறையினர். மக்கள் கூடும் இடங்களுக்கு பாதுகாவலாம். சிகப்பு விளக்கால் 'சண்டிகர் போலீஸ்'ன்னு எழுதுன வண்டி. ஒன்போதரைக்கு ஒருத்தர் வந்து மைக் பிடிச்சார். இதுவரை நடந்த கதைச்சுருக்கம் சொல்ல ஆரம்பிச்ச மனுஷர் நிறுத்தவே இல்லை.

தசரத மகாராஜாவின் இளைய பெண்டாட்டி ரெண்டு வரம் கேட்டாள். ஒன்னு தன் பிள்ளை பரத், ராஜாவாகணும். இன்னொன்னு சக்களத்தி மகன் ராமச்சந்திரன் பதினாலு வருசம் வனவாசம் போகணும். பரத் மட்டும் சரின்னு சிம்மாசனம் ஏறி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? ( ஆமாம். சரியான பாய்ண்ட். இல்லே?) தசரதன் மரணம். ராமனைத் தேடிவந்து அயோத்திக்குத் திரும்ப வாங்கன்னு மன்றாடுதல். ராமன் தந்தை சொல்லை மீறமாட்டேன்னு உறுதியா இருந்தது. ராமனின் பாதுகைகளை வாங்கி சிம்மாசனத்தில் வச்சுட்டு, பரத் ஊருக்கு வெளியே ராமனின் வரவுக்காகக் காத்திருந்ததுன்னு கதை போகுது. ராமன் வரும்வரை, தூங்கலை, படுக்கலை, உட்காரலைன்னு (நை ஸோயா, நை லெய்ட்டா, நை பைட்டா )விவரிப்பு.

இன்றையப்பகுதி சூர்ப்பநகை வந்து ராமலக்ஷ்மணர்களை மயக்கி அவர்களை அடைய நினைப்பதில் இருந்து தொடங்கி ராவணன் சீதையை அபகரிச்சுக் கொண்டுபோவது வரையாம். மாயமானாக நடிக்கப்போகும் ஒரு சிறுவன் (ஏழுவயசு இருக்கும்) ஒன்னரைமாசம் ரிகர்ஸலுக்கு வந்தானாம்!

அப்புறம் மேக்கப் கலைஞர்கள், கதாபாத்திரங்கள், அவர்கள் யார் யார் என்ற விவரங்கள். எல்லோரும் இங்கே கடைநடத்தும் வியாபாரிகள்.அந்தக் கடையில் வேலை செய்வோர் இப்படி. பதினைஞ்சு வருசமா இந்த ரகுகுல் ராம்லீலா கமிட்டி சார்பில் இங்கே நாடகம் நடக்குதாம்.

வெவ்வேறு பெயர்களில் நடக்கும் இந்த ராம்லீலாக் கமிட்டிகளில் மூத்தது செக்டர் 17 இல் 1953 வது ஆண்டு ஆரம்பிச்சது. பரம்பரையா கமிட்டி அங்கமாப் பலகுடும்பங்கள் இன்னும் தொடருதாம்.காலமாற்றத்துக்கு ஏற்ப ரொம்ப மாடர்னா ஏற்பாடுகள் நடக்குது இப்பெல்லாம். வசனங்களை நடிகர்கள் மேடையில் நேரடியாப் பேசாம... ஒலிப்பதிவாப் பதிஞ்சுக்கிட்டதால் ஒலியின் தரம் கூடி இருக்காம். மக்களுக்கும் வசனங்கள் நல்லாக் கேக்குதாம். இதுபோலவே ஒளி அமைப்பும். மேடையும் நல்லாப் பெருசாக் கட்டி, நாடகத்துக்கான ஸீன் செட்டிங், நடிகர்களுக்கான உடுப்புகள் எல்லாம் நல்ல தரத்தில் அழகா உண்டாக்கறாங்க. இதுக்கான செலவு இப்போதைய விலைவாசியில் ஒரு வருசத்துக்கு மூணு லட்சம்வரை ஆகுது. எல்லாம் அந்தந்த ஏரியாவில் பொதுமக்கள், வியாபாரிகள் கொடுக்கும் காசுதானாம். முந்திக்காலம் மாதிரி மக்களைத் தரையில் உக்காரவைக்காம நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க.

சில இடங்களில் எட்டுமணிக்கு ஆரம்பமாம்( இண்டியன் டைம்!) நம்ம பேட்டையில் ஒன்போதரை. எப்படியும் ராத்திரி 1 மணிவரை நீண்டுபோகும் நிகழ்ச்சிதான். நம்ம செக்டர் மேலே சொன்ன அளவுக்கு இன்னும் முன்னேறலை. லைவ் டயலாக் டெலிவரிதான். நடிகர்கள் வசனம் பேசிக்கிட்டே இருக்கும்போது 'ஹலொ ஹலோ மைக் டெஸ்ட்டிங்'ன்னு பத்து நிமிசத்துக்கொருமுறை டெஸ்ட் பண்ணரார் ஆடியோக்காரர்!

மேடைக்கு ரொம்பப் பக்கமா கொஞ்சம் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. அன்னன்னிக்கு ஸ்பான்ஸார் செய்யும் குடும்பத்தினருக்கு அவை. நாடகம் ஆரம்பிக்குமுன் சிகப்பு ரிப்பனைக் கொண்டுவந்து குறுக்கே கட்டிவிட்டாங்க. உபயம் செய்யும் குடும்பத்தை மேடையில் ஏத்தி அவுங்க கையால் ரிப்பன் வெட்டுனதும் திரை விலகி ராமலக்ஷ்மணர்கள் சீதா அருள்பாலிக்கும் நிலையில் நிற்க குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொருத்தரா ஆரத்தி எடுத்தாங்க.

அப்புறம் அந்த ஆரத்தித் தட்டு பார்வையாளர்கள் பக்கம் வருது. கண்ணில் ஒத்திக்கிட்டுக் கொஞ்சம் தட்சணை போடறோம். நல்ல கூட்டம்தான். ஒரு முன்னூறுபேருக்குமேல் இருக்கலாம். ஒருத்தர் எல்லோருக்கும் கொஞ்சம் இனிப்புகளை (பூந்தி) கொடுத்துக்கிட்டே போறார். பார்வையாளர்களில் சின்னப்பசங்க ஏராளம். பூந்தி வாங்குனதும் துணிச்சுவர்களில் இருக்கும் கிழிசல் வழியே பாதிப்பேர் எஸ் ஆனாங்க.


ஜோதிலட்சுமி ரேஞ்சுக்கு ஜிலுஜிலுன்னு உடுத்திக்கிட்டு இதோ சூர்ப்பநகா வந்தாச்சு. ஹிந்தி சினிமாப் பாட்டுக்கு நடனம். குலுக்கலும் தளுக்கலுமா இருக்கு. கொடி இடை. தொப்புளில் நகை! ஆர்வம் தாங்க முடியாத ஒருத்தர்(உபயதாரர் குடும்பத்தில்) மேடைக்குப் பக்கத்தில் போய் வீடியோ எடுப்பதும், கேமெராவில் க்ளிக்குவதுமா இருக்கார்.


அடுத்த ஸீனில் சீதா, குடில் வாசலில் குனிந்த தலை நிமிராமல் தரையில் உக்கார்ந்துருக்க, ராமலக்ஷ்மணர்கள் உரையாடல். சூர்ப்பநகா வந்து ராமனிடம் காதல் மொழிகள் பேசறாள்.கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாள். சீதை...? சட்டையே பண்ணலை. தலை குனிஞ்சது குனிஞ்சபடி.....

ராமன், தனக்குக் கல்யாணமாயிருச்சு. மனைவி இதோன்னு கையைக் காட்டி, லக்ஷ்மணனிடம் போய்க் கேளுன்னு அனுப்ப, மேடையில் அண்ணன் அண்ணிக்குக் காவலா உலாத்தும் லக்ஷ்மணனிடம் வந்து ஆடிப்பாடி மன்றாடுறாள். பலன்? மூக்கறுபட்டதுதான் மிச்சம்!

(சரி. பத்தரை ஆச்சு. போலாம் போலாமுன்னு இவர் தொணக்க ஆரம்பிக்கறார். அதான் 'சூப்பர் நகா' ஆடி முடிச்சாச்சேன்னு இருக்கும். கொஞ்சம் இருங்க ராவணனைப் பார்த்துட்டுப் போலாமுன்னு அடக்கி வைக்க வேண்டியதாப் போச்சு)

ஸீன் மாற்றணுமே. மைக் பிடிச்சவர் வந்து 'போலோ ஸ்ரீ ராம்சந்த்ரகி' ன்னதும் கூட்டம் ஹீனமா 'ஜெய்' போடுது. காஷியர்கிட்டே மொய் எழுதுனவுங்க பெயரெல்லாம் படிக்கிறார். அம்பது பைசாவில் இருந்து நூத்தியொரு ரூபா வரை இருக்கு. நடிகர்களுக்கு உடுப்பு ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை புதுசாத் தைக்க வேண்டி இருக்காம். 'மீண்டும் மீண்டும் விண்ணப்பிச்சுக்கறேன். தயவு பண்ணுங்க'ன்னு மீண்டும் மீண்டும் சொல்லிக்கிட்டே இருந்தார்.

அறுந்த மூக்கைப் பொத்தியபடி அலறலோடு அண்ணனின் சபைக்கு போறாள். ராவணாதியர்கள் எல்லோரும் தகதகன்னு ஜொலிக்கும் அலங்காரத்தில் பெரிய கிரீடங்களும் பெரிய மீசைகளுமா இருக்காங்க. விவரம் அறிஞ்ச அண்ணன்மார் வீரவசனம் பேசி முடிச்சதும், மூத்த அண்ணன் ராவணன்ம் தம்பிகளுடன் பஞ்சவடி பர்ணசாலைக்கு வர்றான். ஓரமா இருந்து சீதையைப் பார்க்கிறான்.

இதுக்குமேலே தாங்கலை இவருக்கு. கிளம்பி வந்துட்டோம்.

பரவாயில்லை. எல்லோருமே கூடியவரை நல்லாவே நடிக்கறாங்க. சொல்ல மறந்துட்டேனே...... நடிப்பவர்கள் அனைவரும் ஆண்களே!!!


25 comments:

said...

கடைசி நாள் மட்டும் ராவணன் வதம் நடப்பதை கேள்விப்பட்டிருக்கேன். பத்து நாளும் அதை நாடகமா நடிச்சு சூப்பர். அருமையா வர்ணிச்சிருக்கீங்க.

சுத்தத்துல சண்டிகர்தான் பெஸ்டுன்னு நேத்து பேப்பர்ல படிச்சேனே??!!! அது பொய்யா?? ஹைதைக்கு 89ஆம் இடமாம். :))

said...

Romba pudhu anubhavam teacher, thanks for a live relay. North India'le Ramabhakthi romba jasthi, therinja kadhaya yerunthalum Ramayanam / Mahabharatham evlothadavai venumnallum kekalam. Example - Kripananda Variyar discourses, avaroda story treatment, therinja kadhayum theriyatha thagavaloda sollravidhame azhagu. Unga commentry'um appadi thaan.

-Sri

said...

//'இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இருக்கேன்னு//

‘சூப்பர்’நகைன்னு சொன்னது உங்களுக்கு சரியா காதிலே விழலைன்னு சொல்லுங்க:)!

படங்களும் விவரிப்பும் வழக்கம் போலவே அருமை.

//பூந்தி வாங்குனதும் துணிச்சுவர்களில் இருக்கும் கிழிசல் வழியே பாதிப்பேர் எஸ் ஆனாங்க.//

நல்லா கொடுக்கறீங்க டீடெய்லு:))!

said...

எங்க வீட்டுபக்கத்துல ராம்லீலால செம கூட்டமா இருக்கும் ..கூட்டம்ன்னா கூட்டம்
நான் வெளியே இருந்து எட்டிப்பாப்பது தான்..
இந்த வருசம் கூட ப்ரபஷனல் தாடகா வரா
நல்லா பயமுறுத்துவான்னு பக்கத்து வீட்டு
குழந்தைகள் எல்லாம்
ஆர்வமா இருந்தாங்க......
:)

ராவன் மட்டும் செய்து எரிக்கிறாங்களே.. ஏன் ராமன் செய்து எரிக்கலேன்னு கேக்கறான் ..உங்க
அண்ணாத்தை ..விடிய விடிய கதை கேட்டு..

said...

பத்துநாட்களும் கலைகள் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது.

said...

நான் இந்த மாதிரி தெருவில் நடக்கும் நாடகங்கள் பார்த்தது இல்லை டீச்சர், நல்லா இருக்கு டீச்சர் நாடகத்தின் படமும் உங்கள் விவரிப்பும்:))))

said...

நவராத்திரியும் அதுவுமா நல்லா பொழுது போகுதுன்னு சொல்லுங்க. அருமையான கமென்டரி. போட்டோக்கள் கலர்புல்லா அசத்துகின்றன.

ராத்திரி 12 மணி, அப்படீன்னா அப்ப எப்படீங்க இருக்கும்? அப்பவும் ஜனங்க முளிச்சுட்டு இருப்பாங்களா? நான் ராத்திரி 12 மணியைப் பாத்ததே இல்லீங்க.

said...

நாடகத்தின் படங்களும் விவரிப்பும் அருமையா இருக்கு.

said...

// இதோ என் பக்கத்துலே சூர்ப்ப'நகை' இருக்கேன்னு எனக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தார்.//

என்னன்னு சொன்னீக அப்படின்னு ஒரு அதட்டல் போட்டிருந்தீகன்னா,
" நீ ஒரு மைசூர்ப்பா நங்கை அப்படின்னுலே சொன்னேன். " அப்படின்னு சொல்லிருப்பாரோ ?!!.

இல்லை, " நீ ஒரு சூப்பர் நங்கை " என சொல்லியிருப்பாரோ !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

said...

வாங்க புதுகைத் தென்றல்.

மெயின் ரோடுகளைப் பொறுத்தவரை சுத்தமாத்தான் இருக்கு. பேட்டைகளுக்குள் நுழைஞ்சால்.... கொஞ்சம் அப்படி இப்படிதான். ஆனால் நம் சி.செ. க்கு எவ்வளவோ தேவலை.

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்.

இங்கே எல்லாக் கோவில்களிலும் சிவலிங்கமும் வச்சுருக்காங்க. பெருமாள் கோவிலுன்னு தனியா ஒன்னும் இல்லை அந்த பஞ்ச்குலா பாலாஜி மந்திர் தவிர.

நம்ம கோவில் விழாவேற இருப்பதால் ரெண்டு இடத்துக்கும் போக முடியறதில்லை:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆமாங்க. அங்கே லௌட்ஸ்பீக்கர் ரொம்பவே லௌடாத்தான் இருந்துச்சு:-)

said...

வாங்க கயலு.

அண்ணாத்தைக்கு ஒரு ஓ போடுங்க.

இப்படித்தான் ஏன் என்ற கேள்வி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.


அரசியல் கட்சி ஒன்னு ராமனை எரிக்க ரெடியா இருக்குன்னு அவருக்குத் தெரியாதுல்லே!

said...

வாங்க மாதேவி.

பத்தாவது நாள் விசேஷமாம். 150 அடி ராவணன் செஞ்சுக்கிட்டு இருக்காங்க ஒரு செக்டரில்.

said...

வாங்க சுமதி.

தெருநாடகங்கள் நல்லாவே இருக்கும். என்ன ஒன்னு ரொம்ப லேட்டா ஆரம்பிக்கறாங்க. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதையே தொழிலா செய்யறவங்க இல்லை. அவுங்க கடைகண்ணி வேலையை முடிச்சுட்டு வர நேரமாயிருது. இந்தியாவில்தான் ஒம்போது, ஒம்போதரைவரை கடைகள் திறந்துருக்கே!

said...

வாங்க ஸ்வேதா.

செஞ்சுருவோம்.

நம்பகமான இடம்தானே?

said...

வாங்க டாக்டர்.

உண்மையைச் சொன்னால் பொழுது போதலை.

இங்கே நடக்கும் ராம்லீலாக்கள் ஒன்னில் வசனங்கள் எல்லாம் உருதுவிலே இருக்காம்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் லஹோரில் இருந்துவந்த குடும்பத்தின் மூணு தலைமுறைகள் நடத்தும் நாடகம் இது.

said...

வாங்க ஜிஜி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

மைசூர்ப்பா.....?

இருந்தாலும் இருக்கும். அவருக்குப் பிடிக்காத இனிப்பு அது:-)

போன வருசம் உங்க வீட்டுக் கொலுவுக்கு வந்தது நினைவுலே இருக்கு.

said...

சூர்ப்பனகா எல்லா வீட்டிலயும் அடிக்கடி அவதாரம் எடுக்கறதுதானே;)என்ன நம்ம வீட்டு சூர்ப்பனகைகள் புருஷன் கிட்டயே நோஸ்கட் வாங்குவாங்க;)நாடகத்தில் வேஷம் கட்டினா ஆண்களும் நல்ல எக்ஸ்ப்ரஷன் கொடுத்திருக்காங்கப்பா. போன வருஷத்தைவிட இந்த வருஷ நவராத்திரி உங்களுக்கு நல்ல படியா
இருக்குனு தோணுது துளசி.

said...

வாங்க வல்லி.

//என்ன நம்ம வீட்டு சூர்ப்பனகைகள் புருஷன் கிட்டயே நோஸ்கட் வாங்குவாங்க;)//

ஹாஹாஹாஹா....சிரிச்சுச்சிரிச்சு வயித்துவலி:-)

போனவருசம் சவுத். இந்தவருசம் நார்த் & நார்த்துலே ஒரு சவுத்.

ஆனாலும் நெருங்கிய தோழிகளையும் அவுங்க வீட்டுக் கொலுவையும் மிஸ் செய்யறேன்.

said...

வடக்கே ராம்லீலா பேர்போனதாச்சே.. எங்க குடியிருப்பிலும் ராவணன் எரிய தயாராகிட்டிருக்கார் :-))

said...

Dear author,
Well.The thread //supera oru soorpanagai// is good.With amazingly learnt that all the charectors are done by males.
Here I hv to bring ur notice one old posting of mine in another site.Think , it is relevent experience in the Kamba Ramayana.Hope the readers will enjoy this one too..
12 Jun 2010 07:07 am #128


shansnrmp2000
Chennai , India
Male 53

View all Posts: 147

11 Jun 2010 11:17 pm [delete] [edit] #22


A strange positive emotion of regard and affection '' childrens love'' following this in Thirukural the saint Thiruvaluvar says ''The pipe is sweet, the lute is sweet'by them't will be awered, Who music of their infants lisping lips have never heared.''means The pipe is sweet the lute is sweet say those who have not heard the prattle of their own children- Inthis we have to seen the affections of the childrens may be a love..



Secondly, the interesting poem in Kamba Ramayana...says about the beauty in another terms love..



Here Ravana at his first sight of Sita describing the beauty of her..he states



In this darkness so thick no fire or arrow could pierce it, she appears with the thunder cloud for her hair her body an utterly-in comparable branch of fine coral, ewith her breasts like pair of coconuts and her face like the moon a lamp that she raises before me burning here alone..thats why i fell love with her....



So the love is variable in different circumstances...



shivayadv

said...

வாங்க அமைதிச்சாரல்.

லேட்டா பதில் சொல்லும்படி அப்படி ஒரு ஓட்டம்ப்பா போன வாரமெல்லாம்.

ராம்லீலா நல்லாதான் இருக்குப்பா.

said...

வாங்க சிவஷன்முகம்.


கம்பனை அந்தத் தமிழுக்காகவே எவ்வளவு வேணுமுன்னாலும் ரசிக்கலாமே!!!