Wednesday, October 20, 2010

பத்தவச்சுட்டாங்கப்பா............

பேச்சு, பேச்சா இருக்கணும். இன்னும் போர் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே மைதானத்தில் கால்கள் துண்டுதுண்டாகக் கிடந்தன. கேமெரா கையில் இல்லையேன்னு நொந்து போயிட்டேன். இவனால் நம்ம ப்ளான் எல்லாம் அப்செட் ஆகி இருக்கு.

நம்ம வீட்டில் நடக்கும் விஜயதசமி பூஜைக்கு மாலை அஞ்சு மணிக்கு வாங்கன்னு அழைப்பு அனுப்பி இருந்தோம். பிரசாதங்கள் எப்பவும்போல வீட்டுலே செஞ்சுக்கிட்டு கூடுதல் வகைக்காக இட்லி வடை வச்சுக்கலாமுன்னு நம்ம கார்த்திக் ரெஸ்ட்டாரண்ட் குணாவைக் கேட்டால்..... 'ஐயோ....ஞாயித்துக்கிழமையா!!!!! அன்னிக்கு கடை அப்படியே ராம்லீலா ராவணதகனம் நடக்கும் மைதானத்துக்கு இடம் பெயர்ந்துரும். எல்லோருக்கும் சுடச்சுட தோசை சுட்டுப்போடவே ஆள் இல்லை'ன்றார்.

சரி.... அதுக்காக பூஜையை நிறுத்த முடியுமா? கோபால்ஸ் எதுக்கு இருக்கு? அங்கே படை எடுத்தோம். ரெண்டு இனிப்பு வகைகளும் ரெண்டு உப்புவகைகளும் அம்பது பேர்களுக்கு. மறுநாள் பகல் ஒரு மணிக்கு வந்து எடுத்துக்கணும். டோக்ளா வாங்கிக்கலாமுன்னா அதுலே புதுவகை ஒன்னு வந்துருக்கு. ஸாலட் ஃபில்லிங், சட்னி எல்லாம் உள்ளே வச்சுச் சுருட்டிய சுருள் டோக்ளா. அதேகடலை மாவுதான். கூடக் கொஞ்சம் மைதா சேர்த்துருப்பாங்க போல! மெலிசாத் திரட்டி ஸ்டீம் பண்ணி நீளமா வெட்டி சுருட்டி இருக்காங்க. இனிப்புக்கு சம்சம், கேஸர் பேடா.

ராம்லீலாவின் கடைசிநாள் ராமராவண யுத்தம் நடந்து ராமன் ராவணனைக் கொல்லும் ஸீன். தினமும் ராம்லீலா நாடகம் பத்து மணிக்கு ஆரம்பமுன்னா சண்டை மட்டும் பொழுதோடயே நடந்து முடிஞ்சுருமாம். 'மாலை நாலுமணிக்கே சனம் போய் இடம்பிடிக்கும். அப்படி ஒரு கூட்டம் எல்லா மைதானங்களிலும் நெரியும். ஆறுமணிக்கு ராவணனைக் கொளுத்திருவாங்க. நீங்க அஞ்சு மணிக்கு பூஜை வச்சுருக்கீங்களே'ன்னார் நம்ம ராஜசேகர்.

ராவணனால் இப்படி ஒரு குழப்பம் வருமுன்னு யார் கண்டா? அழைப்பை மூணு மணியாக்குனோம். அஞ்சுமணிக்குள்ளே நம்ம வீட்டு விசேஷத்தை முடிச்சுட்டு நாமும் ஓடலாம் வேடிக்கை பார்க்க!
'அவ்வ காவல புவ்வ காவல' ன்னால் சின்னதா நாமும் சிலமாற்றங்கள் செய்யத்தானே வேணும்? காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து கடமைகளை ஆரம்பிச்சேன். முந்திரிப்பருப்பை ஒடிச்சு வைக்கும் பெரிய வேலைகளை கோபால் மனம் உவந்து ஏத்துக்கிட்டார். கேஸரியையும் கிளறிக்கிட்டே(!) இருந்ததையும் சொல்லிக்கறேன். வீடும் டைடி ஆச்சு.
சக்கரைப்பொங்கல், வெண் பொங்கல், கேஸரி, புளியோதரை, தயிர்சாதம், பட்டாணி சுண்டல், பழங்கள் நிவேத்தியத்துக்கு. பத்தரை மணிக்கு எல்லாம் ரெடி. நாங்க ரெண்டு பேருமா உக்கார்ந்து பூஜையை ஆரம்பிச்சு விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சு முடிச்சோம். பனிரெண்டு. கொஞ்சம் பிரசாதங்களைச் சாப்பிட்டுட்டு (உப்புப் பார்க்கணுமே!) கொஞ்சம் ஓய்வுக்குப் பிறகு ஒருமணிக்குக் கிளம்பி நேரே மைதானத்துக்குப் போனோம்.

நடுவில் கருப்புச்சட்டையில் ராவணன், ஒரு பக்கம் 'மஞ்சச் சட்டை'யில் கும்பகர்ணன், இன்னொரு பக்கம் ஆரஞ்சு உடுப்பில் மேகநாதன் நெடுநெடுன்னு உசரமா நிக்கறாங்க. அம்பதடி உசரம் இருக்கலாம். மகாராஜா என்றதால் தலைக்குமேல் குடை எல்லாம் இருக்கு ராவணேஸ்வரனுக்கு. ரெண்டு காதுகளையும் ஒட்டி சின்னச்சின்னதா மாங்காய் போல இருக்கேன்னு பார்த்தால்..... அட! அதெல்லாம் அந்த எக்ஸ்ட்ராத் தலைகள்:-) நிறைய பட்டாஸ்களை உள்ளே வச்சுருக்காங்களாம். பத்தவச்சதும் பத்திக்குமாம்! கொஞ்சம் க்ளிக்கிட்டு அங்கிருந்து கோபால்'ஸ்.
வெளியே வெராந்தாவில் ஜிலேபி சுடச்சுடத் தயாராகுது. இன்னொரு வகையா தடிமனா முறுக்கு ரூபத்தில் ஒன்னு. ஜிலேபிதானாம். ஆனால் பனீர் ஜிலேபியாம். ராவண தகனத்துக்கு ஜிலேபி கட்டாயம் தின்னணுமாம். அதான் அடுப்பு வெளியே வந்துருச்சு.
பனீர் ஜிலேபி

உள்ளே ஓனர் கல்லா அருகில் இருக்கார். பெயர் ரபீந்தர். பாட்டியாலா ஊர்க்காரர். முதலில் அங்கேதான் இனிப்புக்கடை ஆரம்பிச்சுருக்கார். அம்பது வருசமா அது நடக்குது. இங்கே ஒன்பது வருசங்களுக்கு முன்னே ஒரு கிளை ஆரம்பிச்சாராம். அதுதான் இது. அதுக்குப்பிறகு இங்கே சண்டிகரில் இன்னும் ரெண்டும், பஞ்ச்குலாவில் ஒன்னுமா வெற்றிகரமான வியாபாரம். அடுத்தவருசம் கனடாவில் கடை போடறாங்களாம். அவரிடம் கொஞ்சநேரம் விவரம் கேட்டுக்கிட்டு நம்ம ஆர்டர் ரெடியான்னு பார்த்துக்கிட்டு இருந்த கோபாலிடம் போனால்........ 'ஏன் கோபால்ஸ்ன்னு பெயர் வச்சாருன்னு கேட்டியா'ன்றார். குட் கொஸ்சின்!!! பாராட்டிட்டு ரபீந்தரிடம் கேட்டதுக்கு, 'அப்பா பெயர் ஹர்கோபால். அதனால் கோபால்ஸ்ன்னு வச்சுட்டார்'
தீபாவளிக்கு இன்னும் இருபதே நாட்கள் தானாம். விளக்கு அலங்காரங்கள், பரிசுப்பொருளாக் கொடுக்க வடக்கத்துச் சம்பிரதாயமான பொருட்கள் இப்படி இன்னொரு பக்கம் குவிச்சுவைக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது ஏறக்கொறைய நம்ம சரவணபவன் மாதிரின்னு வச்சுக்கலாம். தோசை, இட்லி வடை எல்லாம் செய்யறாங்க. ஆனால் இனிப்பு வகைகள்தான் கூடுதலா ரகம்ரகமா இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு ரெண்டு சுகர்ஃப்ரீ ரஸ்மலாய் வாங்கிக்கிட்டோம். கொஞ்சம் வயசான பெரியவங்க ரெண்டு பேர் வர்றாங்க. நமக்குக் கொஞ்சம் பனீர் ஜிலேபி.
மூணுமணிக்கு விருந்தினர் வரத்தொடங்கி கலகலப்பா நேரம் போய்க்கிட்டு இருந்துச்சு. முக்கால்வாசிப்பேர் நார்த்தீஸ். நம்ம கோபால்கூட வேலை செய்யறவங்க. இந்தக் கொலுவைப் பார்த்தே(!) பிரமிச்சுப்போயிட்டாங்கன்னா பாருங்களேன். சென்னை வழக்கத்தைச் சண்டிகருக்கு அறிமுகம் செஞ்சு வச்சேன். அதான் ப்ளவுஸ் பீஸ் வச்சுக் கொடுப்பது. இந்த டூ பை டூ வாங்க செக்டர் செக்டரா அலைஞ்சுக் கடைசியில் 22D யில் கடையைக் கண்டு பிடிச்சோம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு செக்டர்ன்னு உசுரை வாங்கிடறாங்கப்பா இங்கே.

கோவிலில் பரிச்சயப்பட்ட ஒரு கேரளா தோழியும்( பஜன் ஸ்பெஷலிஸ்ட்.ஐயப்ப சமாஜம்) வந்துருந்தாங்க. கோபால் ஆஃபீஸ் வகையில் ரெண்டு கேரளக் குடும்பங்கள். விருந்தினர்கள் வந்து போகும் இடைவெளியில் சட்னு ஒரு சமயம் எல்லாருமே மலையாளிகளாவே இருக்கும்படியா அமைஞ்சது. இன்னும் அஞ்சு நிமிசம் ஆகி இருந்தால் கேரளசமாஜம் ஒன்னு தொடங்கி இருப்போம்:-)

அதுக்குள்ளே தமிழர்கள் வந்துட்டாங்க! சென்னையில் இருந்து மூத்த ஜோடி வந்துருந்தாங்க. மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர் (கோவில் செக்ரட்டரி) ஒரு ப்ளானோடதான் வந்துருக்கார். அவருடைய மகள்கள் அருமையாப் பாடுவாங்க. நம்ம ஈஸ்வரன் (பேங்க் ஆஃபீஸர்) கையில் பை. உள்ளே தப்லா. நம்ம கோவில் நண்பர் சாஸ்திரி (விஷ்ணுசகஸ்ரநாமம் ஸ்பெஷலிஸ்ட்) குடும்பமும் ஆஜர். அவுங்க மகள் பாட்டு எப்பவும் தேன். ஜமா சேர்ந்தாச்சு!
நம்ம பெருமாள் புன்சிரிப்போடு கச்சேரி கேக்க ஆரம்பிச்சுட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், சமஸ்கிரதமுன்னு பாட்டுகள். கொடுத்து வச்சவர். இங்கே ஜமாய்க்கிறார். நல்லா இருக்கட்டும். அவர் நம் வீட்டுக்கு வந்த இந்த 11 வருசங்களில் இதுபோல இது முதல்முறை! 'லக்ஸோ' புதுப் பட்டுப்பாவாடை மினுப்பில் உல்லாசமா நிக்கறாள். போன வருசம் சென்னையில் உற்றார் உறவினர், பதிவுலகத்தோழிகள் என்ற வகையில் பிரமாதமா இருந்தது, நம் சங்கீதா, கிராண் ஸ்வீட்ஸ்' புண்ணியத்தில்.
கச்சேரி முடிஞ்சு எல்லோரும் பிரசாதம் சாப்பிட்டுக் கிளம்ப மணி ஆறுக்குப் பக்கம். ராவணன் பார்க்கும் அவசரத்தில் எல்லோரும் இருக்க நாங்களும் அவசர அவசரமா வீட்டைப்பூட்டிக்கிட்டு ஓடுனோம். பரேடு க்ரவுண்டைச் சமீபிக்க முடியாமல் அப்படி ஒரு ட்ராஃபிக் ஜாம். எரிச்சுட்டுத் திரும்பி வரும் கூட்டம். ராமன் தீ அம்பு போட்டானாம்! போறதுக்குள்ளேப் பத்தவச்சுட்டாங்கப்பா...........
நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டோமேன்னு இருந்துச்சுதான். மறுநாள் செய்தித்தாளில் வந்த படம் இதோ நமக்காக.

ராம்லீலா பல இடங்களில் நாடகம் நடந்தாலும், பாதுகாப்புக் கருதி
ராவணதகனம் மட்டும் பெரிய மைதானங்களில் மட்டுமே அனுமதிக்கிறாங்க. நெருக்கமான குடி இருப்புப் பகுதிகளில் பட்டாஸ் சிதறி தீ விபத்து ஏற்பட்டால் கஷ்டம்தானே? நல்ல பாய்ண்ட்ன்னு பாராட்டத்தான் வேணும்.

அடுத்தவருசம் பொழைச்சுக் கிடந்தால், எங்கே இருப்போமோ அங்கே கொலு.

அனைவருக்கும் தீவாவளிப் பண்டிகைக்கான அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

29 comments:

said...

நீங்க எங்கேயிருந்தாலும் உங்க நவராத்திரி களை கட்டுமுன்னு சொல்லணுமா?
போட வருட நவராத்திரி ஞாபகம் வந்துச்சு!!!!

அந்த சுருள் டோக்ளா சூப்பர்!
முடிந்தால் செய்முறை கேட்டு சொல்லுங்களேன்! உங்களுக்கு நிச்சயமாக தெரியாது என்று எனக்குத் தெரியும்!!!!!!!!

said...

ராவணன், கும்பகர்ணன், மேகநாதன்.. உசரமா நல்லா நிக்கறாங்க.

ஜிலேபி மேல்பாகம் தட்டையாக இல்லாமல் தேன்குழல் போல பிழிந்தமாதிரி. வித்தியாசம். அழகா அடுக்கியிருக்கறாங்க.

தலைப்பு.., அடடா, இப்படி செய்வார்களா?

said...

படிக்கப் படிக்க அதை பின்னூட்ட்த்துல எழுதுனும் இதை எழுதுனும்ன்னு வந்தேனா.. கடைசியில் லக்ஸ் தான் மனசில் நிக்கிறா..

இப்படிக்கு
தில்லி லக்ஸ் :)

said...

கலக்கல். படங்களும் விவரிப்பும்.

said...

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு செக்டர்ன்னு உசுரை வாங்கிடறாங்கப்பா இங்கே.
//

டீச்சர் சரவணா ஸ்டோர்ஸ் ஃப்ரான்சைஸ் எடுத்துடுங்க :))

said...

கண்ட்வியைத்தான் சுருள்டோக்ளான்னு சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். பனீர்ஜிலேபி எனக்கும் புடிச்ச ஒண்ணு.காணோம்ன்னு யாரும் தேடாதீங்க.. மொத்தமா நான் சுட்டுட்டு போயிட்டேன் :-))))

said...

ராம்லீலா படங்கள் அழகுன்னு தோணும்போதே,பட்சணங்களோட படங்கள் பசியை வரவைக்குது :)

பகிர்வுக்கு நன்றி டீச்சர்!

said...

வாங்க நானானி.

எனக்கும் போன நவராத்ரி வந்து ரொம்பப் படுத்துச்சு:-))))

அந்த செய்முறை வீடியோ இங்கே பாருங்க. உள்ளெ ஃபில்லிங் உங்க விருப்பம்போல் வைக்கலாம்.


http://video-tuto.com/Khandvi-Gujarati-Snack-Recipe.html

நம்ம அமைதிச்சாரல் பெயர் சொல்லிட்டாங்க பாருங்க!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தலைப்பு.......... அதுவும் நாம் போறதுக்குள்ளே......

அழகா அடுக்கி சுத்தமா டிஸ்ப்ளே செஞ்சுருக்காங்கல்லே!!!

said...

வாங்க கயலு.

தில்லி லக்ஸா!!!!!

ஷோ மீ த பட்டுப்பாவாடைன்னு சொல்றா நம்மூட்டு லக்ஸ்:-)

காம்பினேஷன் நல்லா இருக்கா?
சொந்த சாஹித்யம்:-)

said...

வாங்க முரளிகண்ணன்.

நலமா? ரொம்ப நாளா ஆளை இந்தப் பக்கம் காணோமே!!!!

said...

வாங்க ஷங்கர்.

அப்புறம் ப்ரான்சைசீஸ் கடைகளுக்குன்னும் ஒரு தனி செக்டர் வச்சுருவாங்களே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதே அதே. பெயர் சட்னு நினைவுக்கு வரலை. எடுத்துக் கொடுத்ததுக்கு டேங்கீஸ்ப்பா.

செய்முறை ஒன்னு யூ ட்யூப்லே கிடைச்சது.

பனீர் ஜிலேபி பிசுக்குன்னு பல்லில் ஒட்டும் இனிப்பு இல்லாம நல்லா இருக்குல்லே!!!!

said...

வாங்க சுந்தரா.

எல்லாம் நான் பெற்ற இன்பம் வகைதானே:-)))))

said...

அட ராமா வட போச்சேன்னு சொல்லத் தோணுது:(
பரவாயில்ல இவ்வளவு பேரு வந்திருந்து வீட்ல சமாராதனை நட்ந்திருக்கே. அதுவே லக்ஸுக்கும் பெருமாளுக்கும் கண்ணிலயே இருக்கும்.
யாரந்த பெரியவங்கன்னு கேக்கலாமா.சுகர் ப்ரீன்னு வேற சொல்றீங்க!!!! விஜயதசமி கோலாஹலமா நடந்ததுக்கு வாழ்த்துகள். அதே போலத் தீபாவளிக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

said...

சூப்பர்ர் பகிர்வுக்கு....காண்ட்வியைதான் சுருள் டோக்ளான்னு சொல்லிருக்கிங்க..அதுவும் ரொம்ப நல்லாயிருக்கும்க்கா..நான் அதுபோல் ஒட்ஸில் செய்துருக்கேன்..

said...

இந் வருஷம் டீச்சர் கூட நவராத்ரி கொண்டாடியாச்சு.

இப்படி டோக்ளாவை ஞாபகபடு்த்திட்டீங்களே...துபாயில் இருக்கும் போது எல்லா வியாழக்கிழமையும் கோவிலுக்கு போயிட்டு ..அங்க பக்கத்திலேயே இருக்கற குஜராத்தி ரெஸ்டாடிரெண்டில் டோக்ளா சாப்பிட போயிருவோம்.

said...

பல வகை பிரசாதம், இனிப்பு,பாட்டு என நவராத்திரி பூஜை ரொம்ப நல்லா இருக்கு டீச்சர்.ராவணன் காதுகளை ஒட்டி சின்ன,சின்ன மாங்காய் அது கூட நல்லா இருக்கு டீச்சர்:))))

said...

//நீங்க எங்கேயிருந்தாலும் உங்க நவராத்திரி களை கட்டுமுன்னு சொல்லணுமா? // அதே!

உங்க வீட்டு பொங்கல், சுண்டல், காண்ட்வி (?டேஸ்ட் பண்ணினதில்ல!) மட்டுமில்லாம, அமைதிச்சாரல் பாக்காத போது பனீர் ஜிலேபியும் எடுத்தாச்சு. அம்பாள் மேல பாட்டு ஆச்சு (கேட்டுதா?). வரேன். ப்ளவுஸ் பீஸ் அப்புறம் அனுப்பிச்சிடுங்க:-)

said...

படங்களும் பதிவும் அழகாய் இருக்கின்றன துளசியம்மா. பிரசாதங்களை எவ்வளவு அழகாய் மேசையில் அடுக்கி வச்சிருக்கிறிங்கள். உதவி செய்த கோபால் ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் மங்கை

said...

வாங்க வல்லி.

நெஜமாவே வடை போச்சுப்பா:-)))))

செஞ்சுதர ஆளில்லை:(

நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர் ஆஃப் முருகன் கோவில் அவர்களின் மாமனார் மாமியார்தான் சென்னையிலிருந்து மகள் வீட்டுக்கு வந்துருக்காங்க. எல்லாம் நம்ம கீதாவின் ஊரில் இருந்துதான்.

வயசானவங்க வர்றாங்கன்னு சுகர் ஃப்ரீ ஒரு ஐட்டம் (ரஸ்மலாய்) வாங்கிவச்சேன். கடைசியில் இன்னொரு நண்பருக்கு ஆச்சு. அவர்தட்டிலே இனிப்பு ஒன்னும் காணோமேன்னு கேட்டா, உடம்புலேயே ஸ்வீட்ஸ் ஃபேக்டரி' இருக்காம்! அதான் 'தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலா கா நாம்'!

பெருமாளுக்கென்னப்பா..... கொடுத்து வச்ச புண்ணியவான்!

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மேனகா.

சமையலில் எதையும் அடுத்தவங்களுக்காக விட்டு வைக்கறதில்லையா:-))))))))

ஓட்ஸில் காண்ட்வியா!!!!

பதிவு போட்டீங்களா? சுட்டி தந்துருக்கலாமேப்பா.

said...

வாங்க சிந்து.

நான் செய்யும்போது சிலசமயம் டோக்ளா சரியா வராம விக்கல்போண்டா ஆகிரும். ஆனா குஜராத்திகள் அருமையா செஞ்சுடறாங்க.

போகட்டும், நம்மைப்போல் மல்லிப்பூ இட்லி செய்ய அவுங்களுக்கு முடியுமா!!!!

said...

வாங்க சுமதி.


மாங்காய்த் தலை........ முருகன் மஞ்சள் சட்டை போட்டு
கட்டை வண்டியில் ஏறி சந்தைக்கடைக்குப்போனான்!!!!!

said...

வாங்க கெக்கே பிக்குணி.

ஒருவழியா எல்லா ப்ளவுஸ் பீஸும் டிஸ்போஸ் பண்ணியாச்சு. உங்களுக்குத் தனியா வாங்கி வைக்கணுமுன்னு இருந்தேன். ஆனா பாருங்க...உங்க அதிர்ஷ்டம்...நேத்து ஒரு தோழி வீட்டில் ப்ளவுஸ் பீஸ் கிடைச்சது. மெரூன். பரவாயில்லையா?

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

தொடர்ந்து வருவதற்கு நன்றிங்க.

said...

வாங்க மங்கை.

பாதி சமாச்சாரம் வெளியில் வாங்குனது. நோகாம அடுக்கி வச்சுட்டேன்:-)))))

said...

இராவணவதம் ,விருந்து களை கட்டிடுத்து.

said...

வாங்க மாதேவி.

ராவணனைவிட நம்ம கும்பகர்ணன் உயரம் அதிகமாம். கம்பர் சொல்லி இருக்காராம்!!!!