Wednesday, November 17, 2010

'அந்த' இடம் இதுதான்!

வீட்டிலிருந்து காலை ஒன்பதரைக்குக் கிளம்பி, ஏறக்கொறைய ரெண்டு மணி நேரமா தில்லி போகும் ஹைவேயில் போய்க்கிட்டு இருக்கோம். மாலையில் வேற எதுவும் முக்கிய நிகழ்ச்சியா வச்சுக்கலை. தில்லி போக்குவரத்து நெரிசலில், சொன்னா சொன்ன நேரத்துக்குப் போய்ச்சேர முடியாது. நமக்காக எல்லோரும் காத்திருப்பதில் எனக்கு சம்மதமில்லை. இங்கே வந்த நாள் முதலாய் நேரத்துக்கு ஒரு மதிப்பும் இல்லைன்றது நல்லாவே புரிஞ்சு போச்சு.

சட்னு மனசுலே தோணியதைச் சொல்லலாமேன்னு இவரைப் பார்த்தால்.....'ஏம்மா.....குருக்ஷேத்ரத்தில் என்னவோ ஒரு இடம் பார்க்கணுமுன்னு சொன்னியே. அங்கே போயிட்டுப் போகலாமா?'ன்றார்.

மற்ற இடங்கள் பற்றிய விவரங்கள் இங்கே. அப்படியே நூல் பிடிச்சுப்போங்க ஒரு நாலு பதிவுகளுக்கு:-)))))
இந்த முப்பத்து ஆறரை வருசத்தில் ' நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்' நாடகம் பலமுறை அரங்கேறி இருக்கு! (அப்படி ஒரு ட்ரெய்னிங்!!!)

எடு ரைட் டர்ன். ப்ரம்ம ஸரோவர் வேண்டாம், நேரா ஜ்யோதீஸர் தீர்த்தம் போயிடலாமுன்னு எங்கேயும் திரும்பாம ஸ்டேட் ஹைவே 6 இல் நேராப் போறோம். ஒரு பத்துப்பனிரெண்டு கிலோமீட்டர்தான் போகணும். ஆனால் பதினைஞ்சு நிமிசமாப் போறோம்.... தகவல் பலகை ஒன்னும் காணோம். கண்ணில்பட்ட பெட்ரோல் பங்குலே விசாரிச்சால்..... வழியைத் தவறவிட்டுட்டோமாம். ஒன்னரைக்கிலோமீட்டர் வந்தவழியே போய் இடதுபக்கம் திரும்பணுமாம். (சரியாப் பனிரெண்டு கிலோ மீட்டர் தூரம்)

அதே போலத் திரும்பி வரும்போது தகவல் பலகை கண்ணுலே பட்டது. ஏம்ப்பா..... அந்த ரோடிலேயும் ஒன்னு வச்சுருக்கலாமுல்லே? உள்ளே திரும்பி ஒரு 300 மீட்டர் போனால் ஜ்யோதீஸர் வந்துருது. ஆரவாரமே இல்லாத அடக்கமான இடம். கணக்கிலடங்காத எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பா வந்துருக்கும் 'கீதை' பிறந்த இடம். முதல் முதலில் 1785லே சார்லஸ் வில்ஸன் என்றவர் ஆங்கிலத்துலே மொழி பெயர்த்துருக்கார். அப்புறம் ஜெர்மன், க்ரீக்ன்னு .....உலக மொழிகளிலும், உள்நாட்டு மொழிகளிலும் எக்கச்சக்கமா போயிருக்கு.


உற்றார் உறவினர், எதிரிகளா ஒரு பக்கம் நிற்கும்போது அவர்களுடன் போர் செய்யப் பார்த்தன் தயங்குன இடம். 'சண்டைன்னு வந்தபிறகு சாக்குபோக்கெல்லாம் சொல்லப்பிடாது. தர்மம் எதுன்னு சொல்றேன் கேட்டுக்கோ'ன்னு அவன் சாரதி ஒன் டு ஒன் பேஸிஸ்ஸா பகவத் கீதையைச் சொல்ல..... ஸைலண்ட்டா கொடியில் நின்ன நேயுடு கவனிச்சுக் கேட்டுருக்கார். ஒரே ஒரு விட்னஸ்! நடந்ததாகச் சொல்லப்பட்டக் காலம் கி.மு. 3137 ! 'எண்ணி'ச் சொன்ன மாதிரி சரியா பதினெட்டு அத்தியாயம். 700 ஸ்லோகம். யுத்தபூமியில் நின்னுகிட்டு இவ்வளவும் சொல்ல நேரம் இருந்துச்சா????? (நிறைய இடைச்செருகல்கள் வந்துருச்சுன்னு சிலர் சொல்றாங்க)
இரும்புக் கம்பிகள் வேலி போட்ட முற்றத்தில் சின்னதா ஒரு பளிங்கு முன்மண்டபம். அஞ்சாறு படிகள் ஏறிப்போனால் ரெண்டு பக்கமும் குடைபோல் விரிஞ்சு நிழல்தரும் ஆலமரங்கள் பக்கத்துக்கு ஒன்னு. கண்ணுக்கு எதிரில் பளிங்குப்படிகள் வச்ச திருக்குளம். ஜ்யோதீஸர் தீர்த்தம். விசாலமான உள் முற்றம். வலதுபக்கம் கட்டிடத்தில் சின்னச்சின்னதா கண்ணாடி போட்டச் சந்நிதிகள். கண்ணாடியில் மேல்புறமா கண் வச்சுப் பார்க்கும் அளவில் சின்னதா அரைவட்டமா வெட்டி(?) வச்சுருக்காங்க. கேமெராக் கண்ணுக்கு அது போதும்தான்.


த்ருதராஷ்ட்ரர் & சஞ்சயன், த்ரோணர் & துரியோதனன் ( முதல்முறையா துரியோதனன் சிலையைப் பார்த்தேன்) சூரியபகவான், கிருஷ்ணன் இருவரையும் வணங்கும் அர்ஜுனன், பீஷ்மரும் பீமனும், அம்புப் படுக்கையில் பீஷ்மர்,அருகிலே அர்ஜுனன், கிருஷ்ணன் & நாரதர்,
கிருஷ்ணனும் அர்ஜுனனும், விஸ்வரூபதரிசனம், வெண்ணெய்த் தாழியுடன் பாலகிருஷ்ணன், ஆஞ்சநேயர் இப்படி இருக்கும் வரிசைகளில் 'சட்'ன்னு ஒரு நடராசர்!
த்ரோணர் & துரியோதன்


பீஷ்மர் & பீமன்


அம்புப்படுக்கை




நடராசர்

முற்றத்தில் இருந்து இன்னும் ஒரு ஆறேழு படிகள் ஏறினால் அஞ்சாயிர வருசப் பழசான சிரஞ்சீவியா நிற்கும் ஆலமரம். ஆலமரத்தைச் சுற்றி பளிங்கு மேடை. இதுதான் கீதை உபதேசம் நடந்த இடம். மரமே சாட்சின்னு போர்டு போட்டு வச்சுருக்காங்க. மேடையில் சின்னதா ஒரு பளிங்குக்கல் மாடம்.


கீதா மேடை
அதுலேயும் கண்ணாடி போட்டு வச்சுருக்கு. உள்ளே ரெண்டு படம், சின்னதா ரெண்டு 'பொம்மை' (க்ருஷ் & அர்ஜ்) பக்கத்துலே ரெண்டு பளிங்குப் பாதங்கள். இடதுபக்கம் பசுமை மாறாத 'நான்' வயசு மரத்தின் வயசாக இருக்க முடியாது. இந்தப் பக்கங்களில் பூஜை சாமான்களோடு மெலிசா ஒரு கயிறு சிகப்பு, வெள்ளை இல்லை ஆரஞ்சு வண்ணங்களில் கொடுக்கறாங்க. அதை அந்த மரத்தின் விழுதில் கட்டிவிட்டுருக்காங்க பக்தர்கள். யாரு தொடங்கிவச்சதோ? நல்லா யானைத் துதிக்கை கனத்துலே இருக்கு. ஒரு நூலோட பருமனை வச்சுப் பார்த்தா.... அங்கே கட்டி இருப்பது ஒரு பத்துகோடி வரும்.
நம்ம மக்கள்ஸ்க்கு பிரார்த்தனைகள், கோரிக்கைகள் எல்லாம் பெருகி வழியுது என்பதற்கு சான்று. (பீலி பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம்.......நினைவுக்கு வருதே!!!! மரத்துக்குப் 'பெயின்' இல்லாம இருந்தால் சரி) துளசிக்கு நேரே கீதோபதேசம் சிற்பம் ஒன்னு தனியா ஷெட் மாதிரி உள்ள ஒரு மண்டபத்துலே கண்ணாடிப்பெட்டியில் வச்சுருக்காங்க.பூஜை செய்யவோ, இல்லை தட்சிணை வாங்கிக்கவோ அங்கே யாரும் இல்லை என்பது ஒரு ஆஸ்வாசம். ஒரு உண்டியல் மட்டும் இருக்கு,.







விஸ்வரூபம்

அந்தக் காலத்துலே இங்கே ஏராளமா ஆலமரங்கள் மட்டுமே இருந்துருக்கும்போல. இப்ப கட்டிடம் தரையெல்லாம் போட்ட பிறகும் கூட அங்கங்கே ஆலமரங்கள் நிக்குது. எல்லாம் வயசானதுகள்! பழுத்த இலைகள் விழுந்து குப்பையாகாமல் இருக்க வலை கட்டி விட்டுருக்காங்க. (வெரி குட் ஐடியா)

சாட்சி மரம்
வெவ்வேற காலக்கட்டத்தில் மனசுக்குத் தோணியவிதம் சந்நிதிகளைக் கட்டி இருக்காங்க போல. சரஸ்வதி, கிருஷ்ணர், ஆதிசங்கரர், காளி, விஷ்ணு, துர்கா, ஹனுமான், புள்ளையார், வியாஸர் இப்படி அங்கங்கே முளைச்சு நிற்கும் சந்நிதிகள். எங்கேயும் பூஜை நடந்ததுக்கான அறிகுறிகள் இல்லை:(
வெளியில் வந்து முன்வாசல் முற்றத்தில் இறங்குனா கம்பி வேலிக்கு அப்புறம் கடைகள். எல்லாமே சாமி சம்பந்தமுள்ள புத்தகம்தான். கோவிலைப் பார்த்து உக்கார்ந்துருக்காங்க வியாபாரிகள் எல்லாம். கம்பி வழியா வேடிக்கைப் பார்த்த கோபாலை, மத்ராஸின்னு கண்டு பிடிச்சுட்டார் வயசான கடைக்காரர். இவருக்கோ பெருமை தாங்கலை:-) தமில் மே ஹை? ன்னதும் இதோன்னு மூணு புத்தகம் எடுத்துக் கொடுத்தார்.

குருக்ஷேத்ரத்தின் சரித்திரம், குருக்ஷேத்ரம் ஆல்பம், நான்கு புண்ணியத் தலயாத்திரை. எல்லாமே ஒரு நாப்பது அம்பது வருசப் பழசு. யாரும் பிரிச்சுக்கூடப் பார்க்கலைபோல. பழுப்பேறித் தாள்கள் ஒட்டிக் கிடக்கு. சாணித்தாளில் அச்சடிச்சது. கடைக்காரத் தாத்தாவை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்த கோபால் மூணையும் வாங்கி வண்டியில் போட்டார். கழிச்சுக் கட்டுன மகிழ்ச்சி தாத்தாவின் முகத்தில்.

பனிரெண்டு கிலோமீட்டர் திரும்ப வந்து மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம். வழியெல்லாம் பயங்கரக்கூட்டம். யாத்ரக்காரருக்கு புத்திமூட்டு. இதுக்கே 25 நிமிசமாச்சு:( இன்னும் ஒரு மணி நேரம் பயணிச்சு ஹவேலியில் மதியச் சாப்பாட்டுக்கு ஒரு ஸ்டாப். இது மாடர்ன் ஹவேலி. 'எல்லாம்' படு நீட். வாசலில் யானை நமக்காக மண்டிபோட்டுக் காத்திருக்கு! சாப்பாடானதும் கிளம்பி தில்லி பார்டர் போய்ச்சேர வெறும் நாப்பது நிமிஷம்தான் ஆச்சு. 'காமன்வெல்த் கேமுக்கு நாங்க தயார்' ன்னு மூணுமாசம் முன்னால் வச்ச விளம்பரங்கள் பார்த்துட்டு......கல்மாடியை நினைச்சுக்கிட்டேன்.
இந்நேரம் ஒபாமா தில்லி வந்து சேர்ந்துட்டார். இதுவரை அடைச்சுவச்ச போக்குவரத்தெல்லாம் பீறிட்டு வெளியே வழியுது. அங்குலம் அங்குலமா நகர்ந்து கூர்காவ் போறோம். கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் டுவீலர்ஸ் எல்லாம் ப்ளாட்ஃபார்மில் ஏறிப்போகுது!
ஒன்னரைமணி நேரமா ஊர்ந்து ஊர்ந்து, சகிக்கமுடியாத ஒரு தருணத்தில் ரிங் ரோடைவிட்டு இடதுபுறம் திரும்பினால்..... தென்னிந்தியர் வசிக்கும் பகுதிபோல இருக்கு. வழக்கமா குப்பை கூளங்கள் இருக்கும் தெருவை முக்கால் பாகம் அடைச்சு நிற்கும் காய்கறி இன்னபிற வண்டிகள், இதுக்கு நடுவில் ரெண்டு தென்னிந்தியக் கோவில்களின் கோபுரங்கள். எந்த ஏரியான்னே தெரியலை(: இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு சுத்தி கூர்காவ் சாலையைப் பிடிச்சு ஏர்போர்ட்டைக் கடந்து 20 ரூபாய் டோல் கட்டி, ஹோட்டேலைத் தேடி அறைக்குப் போனப்ப மணி எட்டு.

காலையில் நாலு மணிக்கு எழுப்பச் சொல்லிட்டுப் படுக்கையில் விழுந்தோம்.


தொடரும்..............:-)))

33 comments:

said...

ரீச்சர்,

அந்த போர்டில் ஹம் தயார் ஹைன்னு எழுதாம ஏன் ஹை தயார் ஹம்ன்னு எழுதி இருக்காங்க? இது ஜுனூன் ஹிந்தியா?

said...

வாங்க கொத்ஸ்.

என்ன ஆச்சரியமா இருக்கு Class லீடர் டைமுக்கு வந்துருக்கீங்க!!!!!

அந்த போர்ட் வாசகம் ஒரு வேளை கல்மாடியின் கமாண்டா இருக்குமோ!!!!

விளையாட்டு கிராமத்தில் செஞ்ச உள்ட்டா வேலைகளைக் கோடி காமிக்கிறாரோ என்னவோ;-))))

ஜூனூனா? இல்லை கானூனா? :-)

said...

"ஹை தையார் ஹம்" இது ஒரு ஹிந்திப்பாட்டுல வர்ற வரி. அதைத்தான் விளம்பரத்துக்கு உபயோகப்படுத்தியிருக்காங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.


இம்மாம் பெரிய பதிவைப் படிச்சுட்டு நம்ம பயபிள்ளைக்கு வந்த சந்தேகம் எதுலேன்னு பார்த்தீங்களா????:-))))


விளக்கத்துக்கு நன்றிப்பா.

said...

நல்லா இருக்குங்க.

said...

ஆஹா... நான் போன இடம்தான், ஆனா உங்க காமிராவில என்ன மாயமோ தெரியலை..... மயக்குதே!

அது சரி, குருஷேத்ரா போய்ட்டு வந்தா வீட்ல சண்டை நடக்குமாமே, உங்க அனுபவம் எப்படி?

http://kgjawarlal.wordpress.com

said...

yes we are ready:) Junoon thaan.

said...

இந்த முப்பத்து ஆறரை வருசத்தில் ' நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்' நாடகம் பலமுறை அரங்கேறி இருக்கு! (அப்படி ஒரு ட்ரெய்னிங்!!!)//

இது ஒன்வே ட்ராஃபிக் இல்லையே?

ரெண்டு வார டூருக்குப் பிறகு இன்னைக்கு வந்து உங்க பதிவுகள் எல்லாத்தையும் படிச்சி முடிச்சேன். எப்படிங்க உங்களால மட்டும் தொடர்ந்து எழுத முடியுது?

said...

குளத்தில் இறங்கி தலைல தண்ணி தெளிச்சுக் கிட்டீங்களா?
உண்மையாவே அந்த ஆலமரத்துக்கு 5000 வருஷ சரித்திரம் இருக்கா!!! கிருஷ்ண அர்ஜுன பொம்மைகள் சேர்த்து வைக்கலியா,தேரில் இருக்கிற மாதிரி.எப்பேர்ப்பட்ட பூமி மா.

said...

//"ஹை தையார் ஹம்" இது ஒரு ஹிந்திப்பாட்டுல வர்ற வரி//

முழுப்பாட்டும் இங்கே இருக்கு. கேட்டுப்பாருங்க :-))
http://www.youtube.com/watch?v=x3JGaxQQQ04

said...

pls check this link ...http://veeluthukal.blogspot.com/2010/11/blog-post.html

said...

மேடையில் நம்மூர்க்காரங்க பேரெல்லாம் எழுதி இருந்ததே பாத்தீங்களா..?

அந்த வலை இலைவிழாம இருக்க இல்லைன்னு நினைக்கிறேன்.. இரவில் அங்க ஒலிஒளி காட்சி நடைபெறும் அந்த மரங்கள் எல்லாம் ஒரு கதாபாத்திரங்கள். அங்கே பறவைகள் கூடுகட்டாமல் இருக்கவே அந்தஏற்படாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

said...

பொம்மையெல்லாம் அழகாக இருக்கு டீச்சர், கோவிலில் கொலு வைத்திருப்பது போல்:))))

said...

அப்பாடியோவ்!! உங்க Training பயங்கரமாக இருக்கும் போல் இருக்கே!!
நான் பேச நினைப்பதெல்லாம் - இங்கும் சில முறை நடந்திருக்கு.
கீதா உபதேசம் நடந்த இடம் முதன்முறையாக பார்க்கிறேன், நன்றி.

said...

வாங்க டாக்டர்.

பயணங்கள் நம்மை விடுவதில்லை;-))))

said...

வாங்க ஜவஹர்.

உங்க பதிவையும் முன்னாளில் பார்த்துருக்கேன்.

ஆமாம்.....குருக்ஷேத்ரம் போய்வந்தால் மட்டும்தான் சண்டை வருமா? !!!!!!

நம்மூட்டுலே தினம் 3 சண்டை. இல்லைன்னா எனக்கு போரடிக்கும்:-)))))

said...

வாங்க வல்லி.

தண்ணி தெளிச்சுக்கறதில்லை இப்பெல்லாம். அதெல்லாம் போன ஜென்மத்தோடு போயிந்தி:-))))

உபதேசம் சொல்லும்விதமா பொம்மைகள் இருக்கு. கண்ணாடிப்பெட்டி என்றதால் படங்கள் எல்லாத்துலேயும் ஒரு ரிஃப்லெக்ஷன் வந்துருச்சு:(

said...

வாங்க டி பி ஆர்.

//இது ஒன்வே ட்ராஃபிக் இல்லையே?//

ச்சேச்சே...அவ்வளவு கல்நெஞ்சுக்காரியா நான்?

எப்பவாவது டு வே ட்ராஃபிக்குக்கு வழி விடறதுண்டு:-))))))

said...

அமைதிச்சாரல்,

பாட்டுக்கு டேங்கீஸ்ப்பா!

said...

வாங்க விநோத்.

பதிவுக்குச் சம்பந்தமில்லைன்னாலும் நல்ல விஷயம் நாலு பேருக்குப் போய்ச் சேரட்டும்.

said...

வாங்க கயலு.

ஆஹா...அப்டீங்கறீங்க???? இருக்கும் இருக்கும்.

ஆனா பறவைகள் கூடுகட்ட அங்கே எந்த ஒரு தடையும் இல்லையேப்பா. மரங்களின் மேல்பகுதியில் வலை இல்லாமல் இருக்கே.

பொதுவாப் பார்த்தால் ஆலமரத்தில் கூடுகளைக் கவனிச்சதில்லை. ஆனா அந்த பொந்துகளில் கிளிகள் வசிப்பதைப் பார்த்துருக்கேன்.

said...

வாங்க சுமதி.

கொலு மாதிரிதான் தனித்தனி மாடங்களில் வச்சுருக்காங்க.

said...

வாங்க குமார்.

சில முறை மட்டும்தானா? பயிற்சி போதாது:-)))))

இந்த இடத்தைப் பொறுத்தவரை நான் மூணாவது பதிவரா இருக்கேன்.

நம்ம ஜவஹர் & முத்துலக்ஷ்மி முன்னாளில் எழுதி இருந்தாங்க.

said...

தில்லி போக்குவரத்து நெரிசலில், சொன்னா சொன்ன நேரத்துக்குப் போய்ச்சேர முடியாது.
-------------------
அதுவும் தென் நியூசிலாந்தில் இருந்து போகிறவர்களுக்கு தில்லி நெரிசல் பலமடங்காகத் தெரியும்

said...

பூஜையே இல்லாத கோவிலா? ஆச்சர்யம் தான்.

ம்ம்ம் உங்க டிரையினிங்ல இனி கோபால் சார் நீங்க எழுத நினைக்கிற பதிவையெல்லாம் அவரே இனி எழுத போறார் பாருங்க :))

said...

பார்த்த உடனே பெரிய மாலையை மரத்துக்கும் போட்டிருக்கிறார்கள் என நினைத்தேன். ஹா... ஆமா அவ்வளவும் ஓரேஞ் கயிறுகள்....

said...

வாங்க அரவிந்தன்.

எங்கூரில் நாலு பேருக்கு மேல் அஞ்சாவதா ஒருத்தர் வந்து சேர்ந்தாருன்னாவே பயங்கரக்கூட்டமுன்னு சொல்வேன்:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

ஒருவேளை காலையில் யாராவது வந்து பூஜை செஞ்சுட்டுப்போவாங்க போல!

கோவிலுக்குள்ளே நல்ல சுத்தமா பராமரிச்சு வச்சுருக்காங்க.

நான் போனபிறகு கோபால்தான் துளதிதளத்தை நடத்தப்போறாராம்!

அவருக்கும் பின்னூட்டம் போட்டு ஆதரிக்கணும் நீங்கெல்லாம் (அவர் பதிவே எழுதலைன்னாலும்):-)))))

said...

வாங்க மாதேவி.

டிமாண்ட் கூடிப்போச்சுப்பா!!!!!

said...

பகிர்வுக்கு நன்றி மேடம்.

said...

வாங்க சரவணகுமார்.

வருகைக்கு நன்றி

said...

ஆமா ஆமா அதென்ன தாடிக்காரன் ரெஃபரென்ஸ் இங்கே - இப்பத்தான் இன்னொரு இடுகைலே ஒரு ரெஃப்ரென்ஸ் பாத்தேன் - எல்லாத்துலேயும் ரெஃப்ர் பன்ணனுமா என்ன ........

said...

வாங்க சீனா.

'அன்றே சொல்லி இருக்கார்'னு நாமும் சொல்லிக்கணும் இல்லே:-)))))

அதே சமயம் நாமும் கொஞ்சம் தாடியைப் படிச்சுருக்கோமுன்னு வேற எப்படி வெளிக்காட்டுறதாம்????
:-))))