Monday, January 03, 2011

சிங்காரச்சென்னை. கொஞ்சம் அது கொஞ்சம் இது.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

இயல் இசை நாடக விழா, புத்தக வெளியீடுகள். நாளை தொடங்கும் புத்தகத் திருவிழா இப்படி சென்னை களைகட்டி இருக்கு! கூடவே நட்புகளையும் சுற்றத்தையும் சந்தித்ததையும் சேர்த்துக்கலாம்.

கிறிஸ்துவின் பிறப்பை இவ்வளோ அமர்க்களமா இங்கே(யும்) கொண்டாடுவதை முதன்முதலாப் பார்த்தேன்!!!! தங்கி இருந்த இடத்திலும் கூட!

ஆட்டோ ஓட்டுனராக அமைஞ்சவரின் பெயரைக்கேட்டால் 'மாரிசன்' என்றார்.

"கிறிஸ்மஸ் கொண்டாடியாச்சா?"

"இல்லைங்க. நான் இந்து."

"அப்ப பெயர்.........."

"அதுங்களா? மகாபாரத்துலே வருவாராம் அவர் பேரை வச்சுட்டாங்க."

"யூ மீன்.... பொன் மான்?"

"ஆமாம்ங்க."

"ஆஹா.... நீங்க ராமாயணத்துலே வர்றீங்க. ராமரை ஏமாத்திக் கூட்டிட்டுப்போயிட்டீங்க. நீங்க ராவணனுக்கு மாமன். மாரீஸன்."

"மாமனா!!!! இந்தப் பேரு நல்லதுல்லையாம். ஏன் இப்படி வச்சாங்கன்னு தெரியலைங்க...."

"யாரு சொன்னா நல்லா இல்லேன்னு? நீங்கதான் கதை வளர உதவுனீங்க. நீங்க இல்லேன்னா ராமாயணம் இல்லை"

"ஒரு சாமியார் சொன்னாருங்க."

போச்சுரா...... சாமியார்கள் கொட்டம் தாங்க முடியலை.

மாரீஸன்.

"நல்லவராவும் சாதுவாவும் இருக்கீங்க. இதைவிட வேறென்ன?"

எந்தவிதமான வாதமும் இல்லாம கொடுத்ததை வாங்கிட்டுப்போனார்.

'சின்னதா' ஒரு ஷாப்பிங் செஞ்சுட்டு முப்பாத்தம்மனை வணங்கி, எதிரில் கிருஷ்ண கான சபாவில் அனிதா ரத்தினத்தின் 'மில்லியன் ஸீதா'ஸ் ' போனோம். கொஞ்சம் சீக்கிரம் போயிட்டோம். முதல் நிகழ்ச்சி இன்னும் முடியலை.சஞ்சய் சுப்ரமணியம். தனி ஆவர்தனம் நடந்துக்கிட்டு இருக்கு. பலே பேஷ் பேஷ் சபாஷ் . தனி முடிஞ்சதும் 'ஆதி பகவன் முதற்றே உலகு' ஆஹா..... போன வருசமும் கேட்டது. கற்பூரம் நாறுமோ.... கமலப்பூ..... ஆரம்பிச்சார். மங்களமும் முடிஞ்சது.
துளசி அண்ட் துளசி:-)


வயிற்றுக்குணவு...காண்டீனில் சாப்பிடப்போனப்ப 'எழுத்தாளர் துளசி'யோடு சின்னதா ஒரு அறிமுகம். அமுதசுரபியில் கதைகள் வந்திருக்காம். கற்பூரம் நாறுமோ என்ன ராகமுன்னு கேட்டாங்க. 'ஙே'ன்னு முழிச்சேன். சஞ்சய்தான் சொல்லணும்.

ஸீதா, மந்தரை, சபரி, சூர்ப்பநகை, அகல்யா இப்படி உலகெங்கும் பெண்கள் சீதைகளாகவே........
அனிதா
போனவாரம் ப்ரீவ்யூ நிகழ்ச்சிக்குப் பிறகு இன்னைக்குத்தான் முதல் ஆட்டம். எனக்கென்னவோ இது முழுக்க முழுக்க வெஸ்டர்ன் ஆடியன்ஸுக்காக தயாரிக்கப்பட்டதோன்னு சம்சயம். அனிதாவின் நடனம் பார்ப்பது இதுதான் முதல்முறை எங்களுக்கு. ம்யூஸிக் பார்ட்டி ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்னும் கொஞ்சம் விவரம் வேணுமா? இங்கே பாருங்களேன்.

மறுநாள் காலை ரெண்டாம் முறையா வெங்கியுடன் சந்திப்பு. உண்டியல் திறந்து எண்ணறாங்க. பக்கெட் பக்கெட்டா நோட்டுகளும் சில்லறையும். ஒன்னும் செய்யாம.....நின்னவாக்குலே சம்பாத்யம். கொடுத்து வச்சவர்.


அன்று மாலை 12 புத்தகங்களின் வெளியீடு. அதில் 33.33 சதம் நமக்குத் தெரிஞ்சவுங்க!

சிலரையும் பலரையும் பார்க்கவும் ஒரு சிலருடன் ரெண்டு சொற்கள் பேசவும் முடிஞ்சது.

சங்கர்ஸ், எறும்பு, சுரேகா



சூர்யா, சுரேகா


கிருஷ்ணன் ரஞ்சனா & முருகேச பாண்டியன்


காவேரி கணேஷ் & உண்மைத்தமிழன்.


சங்கர்ஸ், எறும்பு, சுரேகா, பாலபாரதி, பட்டர்ஃப்ளை சூர்யா, க்ருஷ்ணப்பிரபு, காவேரி கணேஷ், உண்மைத்தமிழன் ('த்' இருக்கு. கவனிக்கவும்) அதியமான், ரவிச்சந்திரன், நர்சிம், க்ருஷ்ணன் ரஞ்சனா, விதூஷ், லக்ஷ்மி பாலகிருஷ்ணன். பேச்சு மும்முரத்தில் சிலரைப் படமெடுக்க மறந்துட்டேன்:(
பச்சைச் சட்டையில் சாரு (அரங்கின் வெளியே) முன்னைக்கு இப்போது இன்னும் இளமையா இருக்கார். சொல்லவும் செஞ்சேன். கொஞ்ச நேரத்தில் பா.ரா வையும். முதலில் சட்னு அடையாளம் புரியலை! முன்னைக்கு இப்போது வயதானவராத் தெரியறார். ஹேர் ஸ்டைல் மாற்றமோ? நாலு வயசு கூடி இருக்கு. சந்திச்சும் வருசம் நாலாச்சே!
ப ரா & தலை

வடை?


உடையா இல்லை வடையான்னு புதுசா ஒரு சந்தேகம்! விக்கி சொல்லுது
Jayachamaraja Wodeyar வோடெயார்ன்னு ...... பட்டிமன்ற டாபிக்!
ஹோப் ப்ரியா
சிவஞானம் ஜி

மூன்றாம் நாள் பதிவர் சந்திப்பு. ஒன் டு ஒன் என்ற வகையில். வல்லி சிம்ஹன், சிஜி(சிவஞானம்ஜி) அலைகள் அருணா, நானானி. ப்ரியா ( ஹோப் பவுண்டேஷன்) இந்தக் கூட்டத்தில் அநந்த பத்மநாபனையும். வழக்கம்போல் நிச்சிந்தையான கிடப்பு. போனால் போகட்டுமுன்னு தங்கரதத்தில் சேவை சாதிச்சார். எல்லாம் அன்றுபோலவே இன்றும்.
அரங்கில் விசாகா ஹரி. சொல்லமுடியாத கூட்டம். தெருவை அடைச்சுத் தரையில் பிளாஸ்டிக் ஜமக்காளம் விரிச்சு .......அங்கங்கே CCTV வச்சு அமர்க்களம் போங்க. எனக்குத் தெரிஞ்சவரையில் சென்னைக் கோவில்களில் காலத்துக்கேற்ற முறையில் கவர் செய்வது நம்ம 'பதுமன்'தான்.

மிச்சம் அப்புறம் பார்க்கலாமே


45 comments:

said...

ஆட்டோ ஓட்டுனர் பெயர் - மாரீசன்? வித்தியாசமாய் ராமாயண பாத்திரத்தின் பெயர்.

கலக்கலாய் புகைப்படங்களுன் பகிர்வு. நன்றி சகோ...

said...

சென்னையைப்பார்த்து ரொம்ப நாளாச்சு :-))

said...

மாரீசன்....! பேர் நல்லாருக்கு
அதே போல் ‘சாகேத்’ அப்பிடீன்னு ஒரு குழந்தைக்கு பேர் வச்சாங்க.
என்ன பேர்னு சிறிது குழம்பி...அடடே! இதுவும் ராமயணப் பேர்தான்!!!
கீர்த்தனைகள் எத்தனை முறை வாசிச்சிருப்பேன்....”சலமேலரா, சாகேதராமா!!!அட ராமா!

said...

சென்னையை பம்பரம் போல் சுற்றியிருக்கீங்க! சுழற்றிவிட்டதாரோ?

said...

மீண்டும் சென்னையா ?

எப்போலேர்ந்து..........

said...

மாரீசனுக்கு நல்லது சொன்னீங்க

said...

பதிவுலகத்தில் இசைப் பயணம் இப்பதான் ஆரம்பித்திருக்கிறது.
எல்லா நிகழ்ச்சியையும் விலாவாரியா எழுதுங்க.
காண்டீன் கவரேஜ் முக்கியம்:)

said...

சென்னையை பற்றிய பதிவு ரொம்ப நல்லாருக்கு டீச்சர்.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

मारीचा Maareecha= மாரீஸன் என்ற உச்சரிப்புத் தவறானது. மாரீசன்(சக்கரம் என்பதில் உச்சரிக்கும் ச) என்று வரவேண்டும்.

said...

சென்னை வந்தாச்சா?? வீட்டுக்கு வரது! :))))))

said...

பதிவிலே மிச்சத்தையும் படிச்சுட்டு வரேன். :))))))

said...

இந்த வருடத்தின் முதல் பதிவா? ம்ம்ம்.

தலை பாலபாரதியா? இதை பஸ்ஸில் போட்டுருந்தார்.

வாழ்த்துகள்.

said...

ஒரு பதிவில் எவ்ளோ விசயங்கள்...

said...

HAPPY NEW YEAR!
THANK YOU...

said...

ரீச்சர் பதிவுல சுவாரசியத்துக்கு பஞ்சமே கிடையாது!! கான்டீன்ல என்ன மெனு??..:)

said...

ஆகா..சென்னையிலா..! ;)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

முதல் முறையா இந்தப் பெயர் உள்ளவரைப் பார்த்தது ஒரு இன்ப அதிர்ச்சி:-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

எனக்கும் எட்டுமாசம் ஆச்சு விட்டுட்டு வந்து:-)

said...

வாங்க நானானி.

சாகேத ராமா.......... ஹே ராமா......... அட ராமா!!!!


கமலுக்குக்கூட ஒரு படத்தில் இந்தப் பெயர்தானே?

said...

நானானி,

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ராமா!!!!!!!!!

சுழற்றியவனுக்கு ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயராம்!!!!

said...

வாங்க கோவியார்.

கிறிஸ்மஸ் விடுமுறை. பத்து நாளில் ரெண்டு நாள் பயணம்.

விமானநிலையத்தில் தேவுடு காத்தோம்:(

இந்த நேரத்துக்கும் கட்டணத்தொகைக்கும் பேசாம சிங்கைக்கு வந்து போயிருக்கலாம். நேரமாவது மிச்சமாகி இருக்கும்.

said...

வாங்க கயலு.

அப்பப்ப நல்லது(ம்) சொல்லத்தானே வேணும்:-)))))

said...

வாங்க வல்லி.

காண்டீன் விலாவரியாவா? ஓக்கே. தங்கள் சித்தம் என் பாக்கியம்.

said...

வாங்க சுமதி.

சென்னையுமே குளிர்காலத்துலே நல்லாவே இருக்கு. வழியும் வியர்வைக்கு டாட்டா:-))))

said...

வாங்க கோமதி அரசு.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கீதா,

மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன்

பிழை பொறுக்கணும். ஹிந்தியில் சரிபார்க்கத் தோணலை. அதுக்கு இம்போஸிஷன் எழுதியிருக்கேன்.

எட்டே நாளில் கொஞ்சம் ஓட்டம். அதான் வீட்டுக்கு வர நேரமில்லைப்பா:(

said...

வாங்க ஜோதிஜி.

பஸ்ஸா? எந்த ரூட்? நான் பார்க்கலையே.....

எடுத்த படங்களை நான் அவருக்கு அனுப்பியிருந்தேன். முந்தினார்:-)))))

said...

வாங்க வழிப்போக்கன் -யோகேஷ்.

போற போக்கிலே சொல்லிக்கிட்டே போறதுதான்:-))))

said...

வாங்க சிஜி.

சந்திக்க முடிஞ்சதில் எனக்கு மகிழ்ச்சி.

இப்போதான் உங்க கணினி சரியாயிருச்சே. அர்ரியர்ஸை முடிக்கணும், ஆமா....

said...

வாங்க கோபி.

ச்சும்மா ஒரு எட்டுநாள்.

தினமும் உங்களை நினைச்சேன்!

விடுதியின் வரவேற்பாளர் கோபிநாத்.

said...

என் மூஞ்சியே தெரியாத அளவுக்கு போட்டோ போட்டிருக்கும் உங்களுக்கு எனது கண்டனங்கள்..!

said...

Reacher, thakkudu potta cmmt yenga poochu??..:((

//எட்டே நாளில் கொஞ்சம் ஓட்டம். அதான் வீட்டுக்கு வர நேரமில்லைப்பா// correctuthan estate poyittu varanumnaa thaniya 2 days aagumnu sollarelaa teacher?..:P

said...

good post with wonderfull fotos

said...

சிங்காரச் சென்னை... சந்திப்புகள்...படங்கள்..
ஆரம்பமே களை கட்டிச்சு..

said...

ஆட்டோ சிரிப்பு நல்லா இருந்தது. சென்னை இழப்பு உறுத்துது - உங்க பதிவைப் படிச்சதும் இன்னும். :)

புத்தகம் வெளியிட்டிருக்கீங்களாமே? விவரம் சொல்லுங்க.

வாழ்த்துக்கள்.

said...

சென்னைவாசி ஆகிவிட்டீர்கள்.
படங்கள் கலக்கல் :)

said...

வாங்க உண்மைத்தமிழன்.

முருகா....வந்து உக்கார்ந்து நலம் விசாரிச்ச அடுத்த விநாடி 'எஸ்' ஆகிட்டீங்க. அதுக்குள்ளே அணணன்தம்பியைக் கிளிக்குனதுதான் அது.

said...

வாங்க தக்குடு.

முதல் பின்னூட்டம் ஒளிஞ்சுருந்தது. தேடிக் கண்டு பிடிச்சேன். ஐஸ்பாய்!

பயணத்துக்குள் பயணம் முடியலை. அதான் அம்பது ஊர் போகலை!

கேண்டீன் வந்துண்டு இருக்கு. வெயிட் ப்ளீஸ்:-)

said...

வாங்க செந்தில்குமார்.

வருகைக்கும் கருத்துக்கும்(!!!) நன்றி.

said...

வாங்க டொக்டர் ஐயா.

வருகைக்கு நன்றி. களை இப்போ இன்னும் கூடுதலாக் கட்டி இருக்கும். புத்தகத் திருவிழா தொடங்கியாச்சு.

said...

வானக்க அப்பாதுரை.

ஆயிரம் குற்றங்கள் (கண்டுபிடிச்சு) சொன்னாலும் இந்தியாவில் சென்னையை பீட் பண்ண முடியாது!!

ரொம்ப ஒன்னும் இல்லை. ரெண்டு வெளிவந்துருக்கு. மூணாவது இந்த வருசப் புத்தகத் திருவிழாவில்.

விவரங்கள் இந்தச் சுட்டிகளில்.

http://thulasidhalam.blogspot.com/2010/01/blog-post_23.html

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html

said...

வாங்க மாதேவி.

எண்ணி எட்டுநாள் சென்னைவாசிதான்:-))))

said...

இவ்வளவு நடந்திருக்கு நான் தூங்கிட்டு இருந்திருக்கேனே!!

said...

வாங்க குமார்.

அதான் விழிச்சுட்டீங்களே:-))))

நோ ஒர்ரீஸ்!