Monday, March 14, 2011

ஆட்டோன்னாலே தகராறுதானா?

நம்ம ஹொட்டேலுக்கு வலமும் இடமுமா ரெண்டு கோவில்கள் கண்ணைப்பறிக்குது. நேத்தே பார்த்து வச்சாலும் நேரம் கிடைக்கலை. இன்னிக்கு முதல்வேலையா அதைப் பட்டியலில் போட்டுவச்சேன். சரியா எட்டுமணிக்குக் கிளம்பி இடப்பக்கம் ரிஷிகேஷ் போகும் சாலையில் ஒரு 200 மீட்டர். தென்னிந்தியக் கோபுரமும் வைஷ்ணவ நாமமுமாய் என்ன ஒரு ஜொலிப்பு! கோவில் பெயர் என்னன்னா பாசுமதி ரைஸ்ன்னு ரெண்டு பக்கமும் எழுதி வச்சுருக்கு:( தளிகைக்கான அரிசி சப்ளை இந்தக் கம்பெனியோ!!!!! கேட் பூட்டிக்கிடக்கு. ஆள்நடமாட்டம் இல்லை.
வலப்பக்கம் அதே 200 மீட்டர். ஜெயின் கோவில். மஞ்சளாய் மின்னுது. ஜெய்ஸல்மீரில் இருந்து கொண்டுவந்த மஞ்சள் கற்களால் ஆனது. என்னமோ மைசூர்பாவுலே செதுக்கின சிற்பங்கள் போல வளைவும் குழைவுமா சுற்றுச்சுவர் முழுசும் நிற்கும் அப்ஸரஸ்கள். கம்பீரமா நிற்கும் யானைகள்.
கோவிலுக்கு வயசு இருவது வருசமாம். நம்பத்தான் முடியலை. ஏதோ நேத்து ராத்திரி கட்டி முடிச்சுக்கொண்டுவந்து வச்சுட்டுப்போனது போல எல்லாம் பளீர்!!
ஸ்ரீ ச்சிந்தாமணி பர்ஷ்வனாத் ஸ்வேதாம்பர் பகவான் மூலவரா கருப்புப் பளிங்கில் ஜம்முன்னு பத்மாசனத்தில் உக்கார்ந்து அருள் பாலிக்கிறார். வெளியே தனிச் சந்நிதியில் பத்மாவதி தாயார். எல்லா ஜெயின் கோவில்களிலும் தாயாருக்குத் தனிச்சந்நிதி வச்சுருக்காங்க. அப்ப...... ஜெயின் மூர்த்திகள் எல்லாம் பெருமாளின் அம்சம்தான் போல! பேசாம விஷ்ணு கோவில்கள் வரிசையில் இவைகளையும் சேர்த்துக்கலாமோ!
கோவில் முன்வாசலுக்கு இடதுபுறம் இன்னொரு தனிச்சந்நிதியில் ஸ்ரீஆதிநாத் பகவானும். அவருடைய திருவடிகளுமா பளிங்கில். நிசப்தமாவும் பரிசுத்தமாவும் இருக்கும் கோவிலில் தியானம் செய்ய தனியா ஒரு ஹாலும் வச்சுருக்காங்க.
ஒரு ஆயிரம் பேர் தங்கும் வசதியும் அதிதிகளுக்கு உணவு அளிக்கும் போஜனசாலையுமா கோவிலுக்குப் பின்பக்கம் பெரிய அளவில் வசதிகள். வருசாவருசம் பல்லாயிரக்கணக்கான சமணமத பக்தர்கள் வந்துபோறாங்களாம்.

ஹொட்டேலில் இருந்து ஹரிகிபௌரி போகும் சாலையில் நிறையதடவைகள் போய்வந்துக்கிட்டே இருந்தப்ப, சாலையில் இருந்து இடமும் வலமுமாப் பிரியும் சின்னத் தெருக்களில் பார்வையை விரட்டிக்கிட்டே வரும்போது ஒரு இடத்தில் தெருவின் கடைசியில் பெரிய அலங்கார முகப்பும் அதுலே புள்ளையாரும் கண்ணுக்குத் தெரிஞ்சது. அது என்னன்னு போய் பார்க்கலைன்னா தலை வெடிச்சுடுமேன்னு ஒரு நிமிசம் அதுலே போகச்சொன்னேன் நம் ப்ரதீபிடம்.
வயசாயிருச்சுங்க....கண்ணாடி போட்டும் பார்வை சரி இல்லை. அது புள்ளையார் இல்லை. அஞ்சு சிங்கங்கள் அடிபணிஞ்சு கிடக்க கம்பீரமா நிற்கும் துர்கை! இந்த 'துர்கா த்வார்' கேட்டுக்கு உள்ளே இருந்து பார்த்தால் புள்ளையார் துர்கைக்குப் பின்புறம் வர்றமாதிரி அமைச்சுருக்காங்க. அழகான தோட்டமும் அருமையான கோவிலும் இருக்கு.

இது ஜம்மு யாத்ரீ பவன். 1997 வருசம் கட்டி இருக்காங்க.


கண்ணாடிபோல் ஒளி ஊடுருவும் சிவலிங்கம், ராதா கிருஷ்ணர், ராமர் அண்ட் கோ, சந்தோஷி மாதா, துர்கை, கங்கை, சிவன் பார்வதி குடும்பம் புள்ளையார் அண்ட் முருகனோடுன்னு அழகழகான பளிங்கு மூர்த்தங்கள்.
சித்திரகுப்தனுக்கும் ஒரு சந்நிதி. யமதருமன் முன் சித்திரகுப்தன் கணக்கு சொல்ல மானிடன் ஒருத்தர் நிக்கிறார். அணையாவிளக்கு ஒன்னு கண்ணாடிப்பெட்டியில் தொடர்ந்து எரியுது. தரிசனம் செஞ்சு வச்சுக் கல்கண்டு தேங்காய் பிரஸாதம் கொடுத்தார் பண்டிட்.
காஷ்மீர், லதாக், ஜம்முவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்காக அஞ்சடுக்கு மாடிக் கட்டிடமும் நூத்தம்பது அறைகளுமா வசதி. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து அமர்நாத் , வைஷ்ணவோதேவி கோவில் போகும் ஆன்மீகப்பயணிகளும் வந்து தங்கிக்கலாம். காலை அஞ்சரைக்கு பெட் டீ தொடங்கி மூணு வேளை சாப்பாடு, மாலை 4 மணிக்கு டீன்னு எல்லாமே இலவசம்!
அஸ்திகள் கரைப்பதற்காகவே வரும் பயணிகளுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுச் செய்ய தனிப்பிரிவும் பண்டிட்டுமா வசதி பண்ணி இருக்காங்க. இந்தக் காரியத்துக்காகவே ஜம்முவில் இருந்து ஹரித்வார் வரும் நிதி வசதி குறைந்த குடும்பங்களுக்கு இறந்தவரின் உறவினர் ரெண்டு பேருக்கு வந்துபோகும் செலவுகூட இலவசமாச் செஞ்சு தர்றாங்க.

நேரமோ ஓடிக்கிட்டே இருக்கு. இன்னும் மூணரை மணி நேரத்தில் முக்கியமானவைகளையாவது பார்க்கணுமுன்னா வேற வழி கண்டுபிடிக்கணும். இடம் தெரியாததால் அலைய வேண்டி இருக்கு. பேசாம உள்ளூர் கைடு கிடைச்சா தேவலை. இல்லைன்னா மதுராவிருந்தாவன் பயணத்தில் செஞ்சதுபோல ஒரு உள்ளுர் வண்டி பிடிக்கணும். ஹொட்டேலுக்குத் திரும்பி வந்து லேட் செக்கவுட் கேட்டோம். மூணுவரை தரேன்னு சொன்னாங்க. அதான் காலியாக் கிடக்கே! வேணாம் ரெண்டு வரை போதுமுன்னு சொல்லிட்டு வெளியே சாலைக்கு வந்தால் ரிஷிகேசுக்குக் காலியாப் போகும் ஆட்டோ ஒன்னு கிடைச்சது. ஹரித்வார் கோவில்களையெல்லாம் கொண்டு காட்ட பேரம் பேசி 300 க்கு சம்மதிச்சார். வண்டியில் ஏறப்போகும் சமயம் கொஞ்சம் தள்ளி மரத்தடியில் நின்னுக்கிட்டு இருந்த ஆட்டோக்களின் ட்ரைவர்கள் எல்லாம் ஓடிவந்து, வழி மறிச்சு நின்னுக்கிட்டாங்க............'இது எங்க ஏரியா. ரிஷிகேஷ் வண்டியிலே நீங்க போகக்கூடாது. அதே காசுக்கு எங்க வண்டியில் கொண்டுபோறோமு'ன்னு சொல்லி ரிஷிகேஷ்காரரை விரட்டிச் சண்டை போடறாங்க. இதென்னடா வம்பாப் போச்சு? அந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே வெறுப்பா இருந்துச்சு. யாருமே வேண்டாம், நாங்க எங்க வண்டியிலேயே போறோமுன்னு சொல்லிக் கிளம்பி ஹரிகிபௌரி நோக்கி வந்தோம்.

தொடரும்.................................:-)

25 comments:

said...

நல்ல பகிர்வு. ஆட்டோக்காரர்கள் தொல்லை இல்லாத சுற்றுலாதலமே இல்லை போல!

நேற்றே டேஷ்போர்டில் வந்தாலும் திறக்க முடியவில்லை. இப்போதான் படிக்க முடிந்தது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நேத்து படங்களை அப்லோடு செஞ்சுக்கிட்டு இருக்கும்போதே தானாக பப்ளிஷ் செஞ்சுக்கிச்சு ப்ளொக்ஸ்பாட்.

சரியான அவசரக்குடுக்கை:-))))

said...

பஸ் மாதிரியே ஆட்டோக்களும் இங்கே ரூட் வெச்சிருக்கு துளசியக்கா.. ஒருத்தர் இன்னொருத்தர் ரூட்ல குறுக்கா போகப்டாது. காலி வண்டியா போனாலும், அவங்களே சிலசமயம் நாம சொல்ற இடம் அவங்க ரூட்ல இல்லைன்னா வரமறுத்துடுறாங்க..

ரீடர்ல வெறுமே படங்களை மட்டும் பாத்ததும், 'படம்பார்த்து கதை சொல்'ன்னு புதுசா ஏதாவது ஒரு பகுதி ஆரம்பிச்சிட்டீங்களோன்னு நினைச்சேன் :-)))))

said...

Teacher,

Nalla padhivu, oru vishayam. Engae Padmavathi appdingarathu namma thayaar sannithi ellai, Jain mythology'lae avanga oru Yakshi. Ponniyan Selvan'lae Kalki solluvar parunga - Jains mantharam maayam pannrathulae romba expert'nnu, athu endha Yakshi/Yakshan poojai panrathallae thaan.

- Sri

said...

துளசி! அருமை!....நிறைய தகவல்கள் இருக்கு என்று தெரிகிறது. .இப்போது வேலைக்குப் போக வேண்டும்...மாலையில் பார்க்க நினைத்துள்ளேன். வாழ்த்துகள்! சந்திப்போம்

said...

துளசி! அருமை!....நிறைய தகவல்கள் இருக்கு என்று தெரிகிறது. .இப்போது வேலைக்குப் போக வேண்டும்...மாலையில் பார்க்க நினைத்துள்ளேன். வாழ்த்துகள்! சந்திப்போம்
vetha.Elangathilakm.
Denmark.

said...

:)

said...

படிஅளக்கும் ஆண்டவனுக்கே இவங்கதான் படிஅளக்கிறாங்க
போல:(

அப்ஸரஸ்கள் அருமையாக இருக்கு.

said...

சுவையான பதிவு. நன்றி

said...

அழகான கோவில்.அற்புதமான வேலைப் பாடுகள். கோபுரம் நம்ம ஊர் மாதிரி இருக்கே. உள்ள வேற மாதிரியா,.
இல்லை அது வேற கோவிலா.
ஸ்ரீனி நல்ல புது விஷயம் சொல்லி இருக்காரே.
இன்னிக்குத்தான் ஃபோன் சரியாச்சு.உடனே கோவில் தரிசனம்.
தான்க்ஸ் பா.
இன்னோரு புத்தகம் போட்டுடுங்க...ஆட்டோ அநுபவம்னு... :))

said...

நிறைய கோவில்களை இலவசமா சுற்றிப் பார்த்து தெரிந்துக் கொள்கிறேன் ....

said...

// சித்திரகுப்தனுக்கும் ஒரு சந்நிதி. யமதருமன் முன் சித்திரகுப்தன் கணக்கு சொல்ல மானிடன் ஒருத்தர் நிக்கிறார். //

அந்த மானிடனைப் பார்த்து என்னங்க ! உங்க மாதிரியே கீது என்கிறது எங்க வீட்டுக் கிழவி.

சரியான அவசரக்குடுக்கை:!!!
exactly !!!

சுப்பு தாத்தா
http://vazhvuneri.blogspot.com

said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

said...

எவ்வளவு சுத்தமாக ஆலயங்கள்.
அருமையாகப் படம் பிடித்து பகிர்ந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி மேடம் .

said...

வாங்க ஸ்ரீநி.

அட! இந்த பத்மாவதி நம்ம தரணேந்திரன் மனைவி பத்மாவா?

ஆஹா..... நான் நம்ப பத்மான்னு நினைச்சுக்கிட்டேனே........ தாமரைமேல் உக்கார்ந்துக்கறதால் குழம்பிட்டேன் போல:(

தகவலுக்கு நன்றிங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.

டெக்ஸ்ட் முழுசையும் சேர்க்கறதுக்குள்ளே அப்படி என்ன அவசரமோ ப்ளொக்கருக்கு????

said...

வாங்க வேதா.

நேரம் இருக்கும்போது (??) பாருங்க.

நம்ம தளத்தில் ஏகப்பட்ட பயணங்கள் கிடக்கு:-)

said...

வாங்க சுசி.

நலமாக வந்து சேர்ந்தீர்களா?

said...

வாங்க மாதேவி.

இப்ப மனுசன் கையைப் பார்த்து நிற்கும் நிலை 'அவனுக்கும்' வந்துருச்சு:(

பாற்கடலைக் கடைஞ்சப்ப அதுலே இருந்து தோன்றிய 16 சமாச்சாரத்தில் இந்த அப்ஸரஸ்களும் ஒன்று. பின்னே அழகுக்குக் கேட்பானேன்!!!!!

said...

வாங்க டொக்டர் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

வெறும் ஆயிரம் காப்பி. எல்லாம் வாங்க நீங்க ரெடின்னா நானும் ரெடி:-)))))
ரெண்டாவது பதிப்புதான் மத்தவங்களுக்கு:-)

கோபுரம் கொள்ளை அழகு. கோவில் உள்ளேதான் போக முடியலை:(

said...

வாங்க மேனகா.

துணையா என் கூடவே வர்றதுக்கு நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

எல்லா மானிடரும் அங்கே இதே கோலத்தில்தான் இருப்போமாம்.

பூமியில் மனிதராகப்பிறந்தும் மாக்களாய் இருப்போர் வேற கோலத்தில் இருக்கலாம்!

said...

வாங்க கொச்சு ரவி.

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருவீர்கள்தானே?

said...

வாங்க சிவகுமாரன்.

ஆலயங்களுக்குள்ளும் ஆஸ்ரமங்களுக்குள்ளும் எல்லாமே படு சுத்தமா நேர்த்தியா இருக்கு. தொண்டர்கள் உழைப்பு. அந்த காம்பவுண்டைவிட்டு வெளியே வந்தால்தான் பேஜார்:(

பொது இடமுன்னா மக்களுக்கு ஒரு கவலையும் இல்லை!

ஊர் சேர்ந்து இதையும் சுத்தம் செய்யக்கூடாதா.............