Wednesday, June 22, 2011

குதிரையின் தும்பிக்கை..........(ராஜஸ்தான் பயணத்தொடர் 23)

மஹாராணா உதய்சிங் அவர்களுக்குச் சின்னவயசுலேயே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பதினெட்டு வயசுலே அவருக்கு பிள்ளையா ப்ரதாப் சிங் பிறந்தார் (1540) அதுக்குப்பிறகு சிலபல மனைவிகள் மூலம் இருபத்தி அஞ்சு மகன்களைப் பெற்றெடுத்துருக்கார். முதல் மகனாகப் பிறந்ததால் பிரதாப் சிங் பட்டத்து இளவரசர் ஆனார். உதய்பூரை தலைநகரா மாற்றிய நாலே வருசத்தில் (1572) , தந்தை இறந்துட்டார். முப்பத்தி இரண்டு வயசில் ராணா பிரதாப் சிங் பட்டத்துக்கு வந்தார். அதுலேயும் ஒரு சின்ன தகராறு ராமாயணக்கதை மாதிரி ஆகிப்போச்சு.

உதய்சிங் மஹாராஜாவின் பல மனைவிகளில் அவருக்குப் பிரியமான மனைவிக்குப் பிறந்த ஜக்மல் என்பவரை தனக்குப்பிறகு நாட்டை ஆளணுமுன்னு எழுதி வாங்கிக்கிட்டாங்க அந்த ஜக்மலின் தாய் ராணி படியானி(Rani Bhatiyani). (ஓஹோ.... அதான் உதய்பூரில் ஜக் மந்திர், ஜக் நிவாஸ் இப்படி ஜக் ஜக்கா இருக்கோ!)

இந்த ஜக்மல் தானே ராஜாவா ஆகணுமுன்னு பிடிவாதமா இருக்கார். மந்திரி பிரதானிகள் எல்லாம் ஆலோசனை செய்து, ராணா ப்ரதாப்சிங்தான் அரசுரிமை ஏற்றெடுக்கணுமுன்னு வாக்குவாதம் செஞ்சு ஒரு வழியா ப்ரதாப் சிங் பட்டம் சூட்டிக்கிட்டார். இதனால் எரிச்சலான ஜக்மல், நேரா அஜ்மெர் போய் எதிரியான அக்பரிடம் போய் சேர்ந்துக்கிட்டார். இந்த துரோகத்துக்குப் பரிசா குறிப்பிட்ட இடத்துக்கு (ஜஹஸ்பூர்) இவரை ஜாகீர்தாரா ஆக்கினாராம் அக்பர்.

முகலாயர்களுக்கு இந்த மேவாரைப் பிடிப்பதே ஒரு லட்சியமா ஆகிப்போச்சு. மற்ற ராஜபுத்திர சமஸ்தானங்கள் முகலாயரோடு வம்பு எதுக்குன்னு இணக்கமாப் போயிட்டாலும் மேவார் சமஸ்தானம் மட்டும் கடைசிவரை பிடி கொடுக்காமலே இருக்கு. எங்களோடு இணைஞ்சுக்குங்கன்னு ஆறு தடவைகள் தூதுவர்களை அனுப்பிப் பார்த்தார் அக்பர் சக்ரவர்த்தி. ஒன்னும் சரியாகலைன்னு ஆனப்போது தன்னுடைய மச்சினரும் தளபதியுமான ராஜா மான்சிங்கையும் தூது அனுப்பினார். ராஜா மான்சிங்கின் சகோதரி அக்பரின் மனைவிகளில் ஒருவர்.

இனி போர் என்று முடிவு செஞ்சு மேவார் போகும் வழியைக் கைப்பற்றித் தன் படைகளை நிரப்பினார் அக்பர். எம்பதாயிரம் வீரர்கள். ராணாவின் படையில் இருபதாயிரம் வீரர்கள்தான். நாலில் ஒரு பங்கு! அக்பரின் படையைத் தலைமைதாங்கி நடத்தியது ராஜா மான்சிங்.

ராஜா மான்சிங் யானை மேலே இருந்து சண்டை போடறார். நம்ம பிரதாப் சிங் குதிரையில் இருந்து. இந்தக் குதிரைதான் மஹாராணா ப்ரதாப் சிங்கின் பட்டத்துக் குதிரை. 'சேதக்' என்று பெயர்.. இதோட முகத்துலே யானைத் தும்பிக்கை போல ஒன்னு செஞ்சு மாட்டி விட்டுருக்காங்க. யானை இன்னொரு யானையைப் பார்த்தால் முதலில் ஒன்னும் செய்யாதாம். அதனால் தந்திரமா இப்படி ஒரு ஏற்பாடு.
ராஜா மான்சிங்கை வாளால் தாக்கும்போது அவர் சட்னு குனிஞ்சதால் யானைப்பாகன் கொல்லப்பட்டார். ஆனால் முகலாயர்கள் இன்னொரு தந்திரம் செஞ்சுட்டாங்க. யானையின் துதிக்கையில் வாளைக் கட்டி வச்சுருந்தாங்க. அது குதிரையின் அடிவயித்தைக் கிழிச்சுருச்சு. அதுக்குப்பிறகு மேவார் மன்னரை முகலாயப்படைகள் சூழ்ந்துக்கிட்டாங்க. அந்த சமயம் பார்த்து மன்னரின் சகோதரர் ஷக்தி சிங் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன் படுத்திக்கிட்டு சேதக் மன்னரோடு தப்பி ரெண்டு மைல் தூரம் ஓடி அங்கிருந்த ஆற்றைத் தாவிக் கடந்து மன்னரைக் காப்பாற்றிய நிம்மதியோடு கீழே விழுந்து உயிரை விட்டுச்சு:(
இந்தப் போர் ஆரம்பிச்சு நாலே மணி நேரத்தில் முடிவுக்கு வந்துருச்சு. இந்த விவரங்களையெல்லாம் மோதி மாங்ரி ம்யூஸியத்தில் விளக்கப்படங்களோடு வச்சுருக்காங்க. சண்டை நடந்த ஹல்டிகாட்டி (Haldighati)என்ற இடத்தையும் பெரிய அளவில் மாடலாச் செஞ்சு வச்சுருக்காங்க. சித்தூர் கோட்டை மாடலும் இருக்கு. இந்த சித்தூரில்தான் இதே ராஜவம்சத்து மருமகளா வந்தவங்க மீராபாய். ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு பெரிய ஹாலில் கண்ணாடிச் சட்டத்துக்குள் இருக்கு!

மோதி மாங்ரியில் உள்ளே போக சின்னக் கட்டணம் ஒன்னு வசூலிக்கிறாங்க. ஆட்டோவுக்கு தனி கட்டணம். கேட்டுக்குள்ளே நுழைஞ்சு போகும்போது ஏதோ ஒரு மலைப்பாதைக் காட்டுக்குள்ளே போவது போல இருக்கு. கொஞ்சம் உயரமான இடம் இது. போகும் வழியிலே இந்த ம்யூஸியம் இருக்கு. அதையும் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போனால் இன்னும் கொஞ்சம் உயரமான பகுதியில் அழகான தோட்டம். நடுவில் செயற்கை நீரூற்று. நீரூற்றைப் பார்த்த மாதிரி சேதக் மேல் அமர்ந்த நிலையில் மஹாராணா ப்ரதாப் சிங்கின் வெண்கலச்சிலை.

பீடத்தின் நாலு பக்கமும் சுருக்கமான சரித்திரம் படங்களாக! சூரிய வம்சம், ராணாவின் வாழ்நாள், ஹல்திகாட்டி போர். சேதக் உயிரைவிடுவது இப்படி!

அங்கே இருந்து சுற்றிவரக் கண்ணை ஓட்டினால் ஒரு பக்கம் ஃபடே ஸாகர், இந்தப் பக்கம் குன்றுகள் மரங்கள் இப்படிப் பசுமையாவே இருக்கு.
மஹாராணாவின் நினைவிடத்துலே கேடயம் டிஸைனோடு ரெய்லிங் எனக்கு ரொம்பப் பிடிச்சது..

ராஜஸ்தானி பாரம்பரிய உடைகளைத் தொங்கவிட்ட ஒரு ஸ்டுடியோ ஒன்னு இருக்கு இங்கே. அந்த உடைகளை அணிஞ்சுக்கிட்டுப் படம் எடுத்துக்கலாம். நாம் சுத்திப் பார்த்து முடிக்குமுன் படம் ரெடி ஆகிருமாம். கோபாலுக்கு ஏனோ ஆர்வம் இல்லை:( பெரிய முண்டாசு ஒன்னு தலையில் இருந்தால் நல்லா இருக்காது?

அடுத்த இடமா நம்மை ஸஹலியோன் கி பாடி ( Sahalion ki bari) என்ற தோட்டத்துக்குக் கொண்டு போனார் ஆட்டோக்காரர் ரஹ்மான். உள்ளே போக நுழைவுக் கட்டணம் தலைக்கு அஞ்சு.
மஹாராணா சங்ரம்சிங் அவர்களின் நாற்பத்தியெட்டு மனைவியருக்காகக் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் கல்யாணப்பெண் கூடவே சில தோழியரும் தஹேஜ் வகையில்( வரதட்சிணை) வந்துருவாங்களாம். அப்போ நாப்பத்தியெட்டுக்குக் கூடவே இன்னும் எத்தனை பேர் அந்தப்புரத்தில் இருந்துருப்பாங்கன்னு பாருங்க. அவுங்க எல்லோரும் மாலை நேரத்தில் ஓய்வா உலாத்த இந்தத் தோட்டத்தை அரசர் கட்டிவிட்டுருக்கார். (அங்கேயே எப்படியாவது அடிச்சுக்குங்க. என் வேலையில் குறுக்கே வரவேணாம்!)

இல்லையில்லை.அவருக்கு ஒரே ராணிதான். ராணியின் கூட வந்தவங்க இந்த 48 தோழிகள் என்றும் சிலர் சொல்றாங்க.
பெரிய கேட் இருக்கும் நுழைவு வாசலைக் கடந்தால் தரையில் நீரூற்று! கடந்து போனால் அருமையான புல்வெளிகளும் விசிறி வாழையும், அசோகமும், மா மரங்களுமா ஒரு பெரிய வளாகம். சுற்றுலா மக்களுக்காக நாலைஞ்சு மேசை போட்டு கலைப் பொருட்கள் விற்பனை:(

இன்னும் நாலு படியேறி உள்ளே போனால் நீராழி மண்டபம். அடிக்குற வெய்யிலுக்கு பார்க்கவே ஜில்லுன்னு இருக்கு. குளத்தைச் சுத்தி பெரிய நடைபாதைகள் இருக்கைகள், நாலு மூலைக்கும் சின்னதா நாலு மண்டபங்கள், தொட்டியில் செடிகள்னு அழகு!
அழகு முழுவதையும் ரசிக்க விடாமல் தலைசுற்றல் வந்துச்சு எனக்கு. ப்ரெஷர் மாத்திரை ஒழுங்காத்தானே எடுத்துக்கறேன். இது என்னடா வம்பு?
படிக்கட்டில் கொஞ்ச நேரம் உக்கார்ந்து பார்த்துட்டு ஹவேலிக்குத் திரும்பிடலாமுன்னு ரெஹ்மானிடம் சொன்னதும் அவருக்கு லேசான அதிர்ச்சி.

ஹவேலிக்கு வந்ததும், பேசின தொகை முன்னூறைக் கொடுத்தோம். அவர் அதுலே இருந்து நூறை நமக்கு நீட்டுறார். 'இருக்கட்டும். நாங்கதானே போதும்னுன்னு வந்தோம். நீங்க வச்சுக்குங்க'ன்னதும் வேணாம் என்பது போல மனசில்லா மனசோடு கையை நீட்டிக்கிட்டே இருந்தார். பாவம். நல்ல மனுஷர். இந்தக் காலத்திலும் இப்படி நேர்மை இன்னும் சிலரிடத்தில் இருக்கு பாருங்க. நாளைக்கு பாக்கி இடங்களைப் பார்க்கணுமுன்னா சொல்லுங்க. நான் கூட்டிப்போய் காமிக்கிறேன்னார்!

அறைக்குப்போய் இன்னொரு மாத்திரையைப் போட்டிக்கிட்டுக் கண்ணைமூடி ஒரு மணி நேரம் படுத்திருந்தேன். கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. ஜன்னலில் தெரிஞ்ச காட்சி மனசை அப்படியே மயக்குச்சு. விளக்கொளியில் ஏரி, அதிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் ஜொலிக்குது.

தொடரும்.........................:-)

18 comments:

said...

படங்களும் பகிர்வும் அருமை.

குதிரையின் தும்பிக்கை. மனிதர்களின் போர்த் தந்திரங்கள். எப்படியெல்லாம் விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்:(!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்களுக்கு நூறு ஆயுசு!

said...

எளிமையான எழுத்தில்
அழகான வர்ணனைகளோடு
வழக்கமான நகைச்சுவை மின்ன
அற்புதமான பதிவு
சேதக்கிர்க்கு ஒரு வீர வணக்கம்

said...

குதிரையின் முகத்தில் தும்பிக்கை... யானையின் தும்பிக்கையில் கத்தி.... மனிதர்கள் தான் எத்தனை எத்தனை விதங்களில் யோசிக்கிறார்கள்....

”சேதக்” இந்த குதிரையின் பெயரைத் தான் பஜாஜ் தனது ஸ்கூட்டர்களுக்கு வைத்து விட்டதோ.... எதற்கும் கேட்டு வைப்போமே...

நல்ல பகிர்வு, வழக்கமான உங்கள் பாணியில்...

said...

பகிர்வுக்கு நன்றி.

ப்ரஸ்ண்ட் போட்டுக்கோங்க

said...

ப்ரஸெண்ட் டீச்சர்..

அரியர்ஸெல்லாம் முடிச்ச கையோட திருப்பதி லட்டு பிரசாதமும் எடுத்துக்கிட்டாச்சு :-))

said...

போர் தந்திரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.

ரெஹ்மானின் நேர்மை பாராட்ட வைக்கிறது.

said...

உடம்பையும் பாத்துக்கோங்க....ரொம்ப அலாஇய வேண்டாம். சேரியா?

said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

சேதக் சர்க்கிள் என்ற நாற்சந்தியின் நடுவில் சேதக்கின் சிலை ஒன்னும் வச்சுருக்காங்க. உண்மையில் மாவீரன்தான் சேதக்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிந்திக்கத் தெரிஞ்சவன் மனுஷன். அதான் எப்படியெப்படியெல்லாம் சிந்தனை போயிருக்கு பாருங்க!

சேதக்கின் வேகம் அப்படி. விசுவாசம் அதுக்கு மேலே! அதுகூட காரணமாக இருக்கலாம் வண்டியின் பெயருக்கு!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ப்ரசண்ட் போட்டாச்சு:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.
அட! அர்ரியர்ஸ் முடிச்சுட்டீங்களா? பேஷ் பேஷ். போரடிக்கலைதானே?

said...

வாங்க மாதேவி.

போர் என்றாலே தந்திரம் வந்துருதே! எல்லாத்தையும் நியாயப்படுத்தலாமாம் போரிலும் காதலிலும்:-)

ரெஹ்மான் போன்றவர்கள் இருப்பதால்தான் உலகில் இன்னும் மழை பெய்யுது!!!!!

said...

வாங்க நானானி.

வர்றது வழியில் நிக்குதா? அது பாட்டுக்கு அதுன்னு வந்து ஆட்டி வச்சுட்டுத்தானே போகுது!

இன்னும் ஒரு மாசம் பயணம் ஏதும் இல்லை:-) லீவு. சேரியா?

said...

வாங்க வலை ஆசிரியரே.

என்னையும் ஒரு பொருட்டாகக் குறிப்பிட்டதுக்கு மனமார்ந்த நன்றிகள்ப்பா.

said...

சேரி....!

said...

நானானி,

சேரி 'ஆச்சா'?????