Friday, January 20, 2012

கப்பல்களுக்கு கால(ம்)ன் வந்தால்......

ஒரே பாட்டுலே பணக்காரன் ஆறதுபோல் நம்ம சினிமாவிலே காமிக்கிறாங்க இல்லே! அதேபோல் ஒரே நிமிசத்துலே ஏழை ஆகறதை எப்படிக் காமிப்பாங்க? ரொம்பப் பழைய காலப்படமுன்னா 'சார்..தந்தி' இடைப்பட்ட காலமுன்னா.... ட்ர்ர்ரிங் ட்ர்ர்ரிங்.... டெலிஃபோன் மணி. விஷயம் என்னவோ ஒன்னுதான்..... 'ஐயோ! சாமான்கள் ஏத்தி வந்த நம்ம கப்பல் கவுந்து போச்சு!' அச்சச்சோ..... கவுந்தா போச்சு? கை எடு. கன்னத்துலே வை!

வீட்டுத்தலைவர் மாரடைப்புலே பட்ன்னு போய்ச்சேர, பட்டுப்புடவையும் நகைநட்டுமா அதுவரை வீட்டுக்குள்ளே உலவிவந்த வீட்டம்மா கருப்பு நிற நூல்புடவையுடன் கண்ணீரும் கம்பலையுமா குடிசைக்குள் குடிபுக, ரெட்டைப்பின்னலுடன் நைலான் தாவணியில் கல்லூரிக்குப்போகும் மகள், ஒட்டுப்போட்ட பாவாடை, சட்டையும் கிழிஞ்ச தாவணியுமா ஒரு வீட்டுலே பத்துப்பாத்திரம் தேய்க்கன்னு......ன்னு ஏழ்மை ஸீன் நம்மை உருக்கிரும்!!!!

ஆமா...அதுநாள்வரை போட்டுருந்த துணிமணிகள் எங்கே போச்சாம்???????

இன்னிக்குக் கணக்குலே சரியா 19 வருசத்துக்கு முந்தி நடந்த ஒரு சம்பவம் இப்போ கொசுவத்தி ஏத்திக்கிச்சே! சொல்லாமவிட முடியுதா?

ட்ர்ர்ரிங் ட்ர்ர்ரிங்...நம்மவீட்டு ஃபோன் அடிக்குது. கோபால் ஸார் வீடா'?ன்னு ஆங்கிலத்துலே ஒரு கேள்வி. இந்திய உச்சரிப்பு நமக்கு சட்னு புலப்படாதா? ''ஆமாம். நீங்க யார் பேசறது? இந்தியரா?ன்னு நான் ஒரு எதிர்க்கேள்வி கேட்டேன்.

"ஆமாம். கப்பலில் இருந்து பேசறோம். இந்தியர்தான்."

'கோபால் ஆஃபீஸ் போயிருக்கார். உங்க பெயர் என்னன்னு சொல்லுங்கன்னதும் 'சரவணன்'னு சொன்னார். ஆஹா..... தமிழ் நாடா? இன்னும் கொஞ்சம் போட்டு வாங்குனதுலே முக்காவாசி விஷயம் கிடைச்சுருச்சு.
படம்: துறைமுகத்துக்கு வரும் இயற்கை வழி. மலைகளுக்கு நடுவே கடல் வழிவிட்டுருக்கு:-)


அவுங்க கப்பலை துறைமுகத்துக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் நிறுத்தி வச்சுட்டாங்க. உள்ளே வர அனுமதி இல்லை(யாம்) இன்னிக்குத்தான் சிலர் மட்டும் சின்னப் படகுலே கரைக்கு வந்துபோக அனுமதி கிடைச்சுருக்கு. உள்ளூர்லே கோவில் எதாச்சும் இருக்குமுன்னு டெலிஃபோன் டைரக்டரியில் தேடிப் பார்த்துருக்காங்க. ஸ்ரீ வெங்கடேஸ்வரா, கிருஷ்ணா, கோபாலான்னு கண்ணை ஓடவிட்டா கோபால் ஆப்ட்டார்.

அப்ப இந்த மாநகரில் இருந்த வெறும் மூணு லக்ஷம் நபர்களில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நம்ம கோபால் இருந்துருக்கார்!

அப்பதான் எனக்கு ஞாபகம் வருது ரெண்டு மூணு நாளைக்கு முன்னே ஒரு கப்பலைக் கைது பண்ணி ஊருக்கு வெளியில் நிப்பாட்டுனதை டிவியில் ஒரு (கடைசி) அரைவிநாடி பார்த்தது. அப்ப அதைப் பெருசா எடுத்துக்கலை. ஆனா எங்கூரு மக்கள்ஸ்க்கு இளகுனமனம் ஜாஸ்தி. ஐயோ உணவில்லாமக் கஷ்டப்படப் போறாங்களேன்னு நிறைய பிஸ்கெட்ஸ், கேக்ஸ், பழங்கள் இப்படி சாப்பாடு அயிட்டங்களைத் துறைமுகத்தில் கொடுத்து அந்தக் கப்பலுக்கு அனுப்பச்சொல்லி இருக்காங்க. அதிகாரிகளும் ஆட்டையைப்போடாம அதை 'அப்படியே' கொண்டு போய் கப்பலில் ஒப்படைச்சுருக்காங்க.

சரவணன் சொன்னார்.... 'ரொம்ப போரடியாக் கிடக்கோம். எதாவது தமிழ்ப்படம் வச்சுருந்தா தர்றீங்களா?' ஆஹா.... நிறைய இருக்கு. கோபால் வேலை முடிஞ்சு வந்ததும் துறைமுகத்துக்கு வர்றோம். நீங்க அப்போ எங்கே இருப்பீங்கன்னதுக்கு ஒரு ஏழரை வரை அங்கே இருப்போம். அதுக்குப்பிறகு எங்களைக் கப்பலில் கொண்டு விட்டுருவாங்கன்னார்.

மதியம் சாப்பாட்டுக்கு வந்த கோபாலிடம் 'விவரம்' சொல்லி சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருங்கன்னதும் அப்படியே செஞ்சார். மகளையும் பள்ளிக்கூடத்தில் இருந்து கூட்டிவந்து ரெடியாக்கி நாலைஞ்சு வீடியோ காஸெட்களை எடுத்து வச்சேன்.
படம்::லிட்டில்டன் ஊரும், துறைமுகப்பகுதியும். ஃப்ரைட்டனர்ஸ் படத்தில் இந்த ஊர் வந்துருக்கு

நம்ம வீட்டில் இருந்து உள்ளூர் துறைமுகம் (லிட்டில்டன் ஹார்பர்) ஒரு 35 நிமிசப் பயண தூரம். கிழக்கே போய் ஒரு Port Hills என்ற மலையைக் கடந்தால் அடுத்தபக்கம் கடல். இந்த மலைக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை குடைஞ்சு விட்டுருக்காங்க.

1970 மீட்டர் நீளம். போக வரன்னு ரெண்டு லேன் உள்ளே யாரும் ஓவர்டேக் பண்ணக்கூடாது. ஒரு நாளைக்கு ஏறக்கொறைய பத்தாயிரத்துக்கும் மேலே, சரியாச்சொன்னால் 10755 வண்டிகள் இதுக்குள்ளே ஓடுதுன்னு சமீபத்திய புள்ளிவிவரம் சொல்லுது. சைக்கிள்க்காரர்களுக்கு உள்ளே ஓட்டிப்போக அனுமதி இல்லை. ஆனால் இதுக்குள்ளே போய் வரும் பஸ்ஸில் சைக்கிளை எடுத்துக்கிட்டுப்போய் அந்தாண்டை சுரங்கத்துக்கு வெளியில் விட சரியான ஏற்பாடுகள்(bicycle carriers) எல்லாம் இருக்கு. நடராஜா சர்வீஸ் ஆல்ஸோ நாட் அலௌடு.
படம்:: டன்னலின் நுழைவு

கடந்த சிலவருசங்களா நியூஸி தென் தீவின், மேற்குக்கடற்கரையில் ஆரம்பிச்சுக் கிழக்குக் கடற்கரையில் முடியும் 'கோஸ்ட் டு கோஸ்ட்' ( coast to coast) பந்தயத்துக்காக வருசத்தில் ஒரு நாள் பந்தய வீரர்கள் கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்குள்ளே நுழைஞ்சு டன்னல் கிட்டே போகும் சமயம் ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும் மற்ற வண்டிகள் போக்குவரத்து நிறுத்தி வச்சுட்டு பந்தய மக்களை மட்டும் போக அனுமதிக்கிறாங்க. மொத்தம் 243 கிலோமீட்டர் தூரம். ஓட்டம், சைக்கிள், kayak என்னும் சின்னப்படகு என்ற மூன்றுவகைகள் பயன்படுத்தணும்.
படம்:: டன்னல் கட்டிக்கொண்டிருந்தபோது

டன்னலை 1964 வது ஆண்டு ஃபிப்ரவரி மாசம் 27 க்கு பொதுமக்கள் பயனுக்குத் திறந்துவிட்டுருக்காங்க. அப்போதைய கவர்னர் ஜெனெரல் ப்ரிகேடியர் ஸர், பெர்னார்ட் ஃபெர்கூஸன் திறந்து வச்சுருக்கார். ரெண்டு வருசம் ஆச்சு இதைக் கட்டி முடிக்க. இதுக்கான செலவைச் சரிக்கட்ட ஒரு டோல் கேட் போட்டு டன்னலுக்குள்ளே போக வர இருவது சதம் (20 Cents) வசூலிச்சாங்களாம். பதினைஞ்சு வருசத்துலே செலவான தொகை கிடைச்சுருச்சு. 1979 முதல் உள்ளே போக கட்டணம் ஏதுமில்லை. இலவசம்தான். (நல்லவேளை! நாம் 1988லேதான் நியூஸிக்கு வந்தோம். நம்மூட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை இந்த டன்னல்வழி கூட்டிப்போய் காமிக்கலைன்னா கோபாலுக்குத் தூக்கம் பிடிக்காது)
படம்:: ரயில்பாதைக்காக வெட்டிய சுரங்கப்பாதை

இந்த சுரங்கப்பாதை மட்டும் இல்லைன்னா போர்ட் ஹில்ஸ் மலைப்பாதை சாலையில் வண்டிகள் ஏறி அடுத்த பக்கம் இறங்கி சிட்டிக்குள்ளே வர தாவு தீர்ந்துடும். இங்கே முதன்முதலில் குடியேறி வசிக்க ப்ரிட்டனில் இருந்து (செட்டிலர்ஸ்) மக்கள் வந்த சில வருசங்களில் ரயில் வண்டி போக்குவரத்துக்காக ஒரு சுரங்கப்பாதை மலையைக் குடைஞ்சு போட்டுருந்தாங்க. அது 1859 இல். ஆரம்பிச்சு 1867 இல் முடிஞ்சது. 2.7 கிலோமீட்டர் நீளம். நியூஸியின் முதல் ரயில்பாதை அதுதான். அதுவும் ஒரு எரிமலைக்கு ரொம்ப சமீபமாப்போகும் பாதை. (நல்லவேளையா எரிமலை அணைஞ்சு கனகாலமாகி இருந்துச்சு. மலையைக் குடைஞ்சுக்கிட்டே வரும்போது அங்கே எரிமலை சமீபிக்குதுன்னு அப்ப யாருக்கும் தெரியாது! இதைப்பற்றி ஒரு தொடரே எழுதலாம். அத்தனை சுவாரசியமான தகவல்கள் கிடைச்சுருக்கு ) இப்பவும் இந்த ரயில் பாதையும் சுரங்கமும் பயன்பாட்டிலேதான் இருக்கு. மனுசர் பயணிக்கும் ரயில் இல்லை. வெறும் கூட்ஸ் வண்டி.
ஒரு ஆறுமணி போல துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சின்னத்துறைமுகம்தான். சரவணனைக் கண்டு பிடிப்பது கஷ்டமா என்ன?

தொடரும்...................:-)

PIN குறிப்பு: மினித்தொடர்தான் யாரும் பயப்படவேண்டாம்:-)))))))))))

படங்கள்: கூகுளாண்டவர் அருளிச்செய்தவை. நன்றி.


35 comments:

said...

ஓ, சரவணன் அப்பவே பழக்கமா துளசி:)
இப்ப அந்த டன்னல் இப்ப நல்லா இருக்கா.

said...

//அதிகாரிகளும் ஆட்டையைப்போடாம அதை 'அப்படியே' கொண்டு போய் கப்பலில் ஒப்படைச்சுருக்காங்க.//

நம்ப ஊருல இப்படியெல்லாம் நடக்கும் காலம் வருமான்னு இருக்கு.

சுவாரசியமான பதிவு.படங்கள் அருமை. சரவணன் சந்திப்பை பற்றி படிக்க காத்திருக்கிறேன்.

said...

அருமையான தகவல்கள், சுவரஸ்யமான சுரங்க செய்திகள் கிறங்கடித்தன, என்ன படங்கள் என்று சொல்லியிருக்கலாமே அம்மா..........

said...

நம்ம ஊர் பேரை நம்ம ஊர் பேராவே வச்சிக்கிறதுல இப்படி ஒரு நன்மை வேறயா..:)
எங்கவீட்டுல யாராச்சும் போரடிக்குதுன்னு எங்க சொந்தக்காரங்க சொன்னா உடனே.. எங்க கல்யாண சிடி இருக்கு ..அதையும் அப்பப்ப யாராச்சும் பாக்கனுமில்ல பாருங்களேன்னு ..உபசாரம் செய்வாங்க ..ஹஸ்..:)))

said...

படங்கள் எல்லாமே நியூசியின் அழகை காட்டுது....

சரவணனை சந்தித்தீர்களா? அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்....

said...

பத்தொன்பது வருடத்திற்கு முந்தைய கதை சுவாரஸ்யமாக இருக்கின்றது.

சரித்திரங்கள் அறிந்து கொண்டோம்.

said...

//2.7 கிலோமீட்டர் நீளம். நியூஸியின் முதல் ரயில்பாதை அதுதான். அதுவும் ஒரு எரிமலைக்கு ரொம்ப சமீபமாப்போகும் பாதை. (நல்லவேளையா எரிமலை அணைஞ்சு கனகாலமாகி இருந்துச்சு. மலையைக் குடைஞ்சுக்கிட்டே வரும்போது அங்கே எரிமலை சமீபிக்குதுன்னு அப்ப யாருக்கும் தெரியாது! இதைப்பற்றி ஒரு தொடரே எழுதலாம். //



இந்த மாதிரி திடுக் திடுக் சிசுவேஷன்ஸ்லே ஒரு வீடியோ எடுத்து போடுங்க..

சுரங்க பாதையிலே துளசி அம்மா கார் வேகமாக ஓடரது. முன்னாடி போர கார் எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணுது .. சுரங்க பாதை வர்றதை காமிக்கணும் பின்ன, பாதை 10 செகன்ட், கார் 15 செகன்ட், மாத்தி மாத்தி காட்டணும். அப்பரம் காருக்குள்ளே வ்யூ ... ட்ரைவர் சீட்லே கோபாலு ஸாரு.. பின்னாடி துளசி அம்மா...
இப்ப, காருக்குள்ள கும்மி இருட்டு. பாதைலே அங்கங்க ட்யூப் லைட்.
டன்னல்லுக்குள்ளே, கார் சும்மா 150 கி.மி.வேகத்துலே கோபாலு ஸாரு ஓட்டுராறு. அப்பப்ப ஸன் லைட் டன்னலுக்குள்ள வரது, ,மததபடி, காருக்குள்ள இருட்டு, அப்ப அந்த காருக்குள்ளெ திகிலோட
உக்காந்துக்கினு இருக்கிற துளசி அம்மா கோபாலு வைப்பாத்து ஒவ்வொரு டர்னிங்க்லேயும் .."பைய ஓட்டுங்க பைய ஓட்டுங்க:
அப்படின்னு கெஞ்சராரு. . அவரு சொல்லச்சொல்ல, கோபால் ஸாரு ஸ்பீடு இன்க்ரீஸ் பண்றாரு. வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு இப்ப.. இப்ப 200 கி.மி ஸ்பீடிலே ஓட்டராறு. ..
அப்ப தூரத்திலே, அந்த எரிமலை எப்படப்பா வெடிக்கப்போறோம் அப்படின்னு
அதே சமயத்துலே புகை புகையா வர்றது.. ...

புகை காருக்குள்ளேந்து வருதா அந்த தூரத்திலே இருக்கற எரிமலைலேந்து வரதா அப்படின்னு ஸைலன்ட் சாதாரணமா இருக்கற கோபாலு சாரு கூட ஒரு கமென்ட் கொடுக்கறாரு. ..

அப்பனே ! சரவணா ! நீ எங்கப்பா இருக்கே !! அப்படின்னு துளசி அம்மா ஒரு கத்தல் கத்தறாரு பாருங்க...

அப்ப, துளசி அம்மா மக ( அவங்க தான் படத்துக்கு டைரக்டர்) கட் சொல்றாரு.

ஒரு கலர் வீடியோவா எடுத்து போட்டீங்கன்னா,
சும்மா ஹாலிஉட் த்ரில்லார் மாதிரி இருக்கும்லே !!

மீனாட்சி பாட்டி.

said...

http://pettagum.blogspot.com/2012/01/blog-post_4753.html
இந்த பதிவில் புற்று நோயை குணப்படுத்தும், எளிய மூலிகை மருத்துவம் படித்தேன்.
மிக எளிமையான பக்கவிளைவுகள் அற்ற மருந்து.
உங்கள் தோழிக்கு பயன் படும் என்று சொல்கிறேன்.
படித்துப் பாருங்கள்.

said...

PIN குறிப்பு அருமை ;)

said...

ஒங்க தொடர்களைப் படிச்சு ரொம்ப நாளாச்சு. தொடருங்க. தொடருங்க.

கப்பலை ஏன் நிறுத்தி வெச்சுட்டாங்களாம்?

கப்பல்ல இண்டெர்நெட் இருந்திருந்தா நெறையத் தமிழ்ப்படம் பாத்திருக்கலாம். சரவணனுக்குச் சொல்லீருங்க. :)

said...

Kutti payanak kathai - suvarasyam...

said...

சே சே என்ன டீச்சர் நீங்க ஒரு வாரமா சமைச்சு போட்டதையே தாண்டி வந்துட்டோம்! (அதாவது பசி வயித்தை கிள்ளுனாலும் விரதத்தை உடைக்காம தாண்டிட்டோம்ல..) மினி தொடருக்கு எல்லாம் பயந்தவங்களா நாங்க.. ஹிஹி

said...

அதானே என்ன படங்கள்னு சொல்லிருக்க கூடாதா.. இதுலல்லாமா சஸ்பென்சு? :(

said...

அப்துல்காதர்-அமாவாசை மாதிரி, சரவணன்ல ஆரம்பிச்சு, சுரங்கப்பாதையை இவ்ளோ டீடெய்லா விவரிச்சுருக்கீங்க? :-)))))

said...

19 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததா??..

சமீபத்துல நடந்ததாயிருந்தா துளசி தளத்தை சுத்திக் காமிச்சுருக்கலாம் :-))

said...

வாங்க வல்லி.

டன்னல் பரவாயில்லாம இருக்கு. நேத்துப்போய்ப் பார்த்துட்டு வந்தோம்!

சரவணன், என்னவோ மாயம் செஞ்சு சண்டிகரில் என்னைப் பிடிச்சுட்டான்ப்பா:-)))))

said...

வாங்க ராம்வி.

//நம்ப ஊருல இப்படியெல்லாம் நடக்கும் காலம் வருமான்னு இருக்கு.//

வரவே வராது. நெவர்! ஆசையை விட்டொழிச்சுருங்க இந்தக் கணமே!

ஊழலைப்பற்றி ஒரு பெருந்தலையுடன் பேசுன்னப்போ....'தேனை எடுக்குறவன், கொஞ்சம் தேனை நக்கிக்கிட்டா என்ன தப்பு?'ன்னாராம். அரசுக் கட்டிலில் இருப்பவரே இப்படிச் சொன்னா.... அதிகாரிகள் ஆட்டையைப்போடக் கேட்பானேன்!

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

பதிவு விஷயங்களுக்கிடையில் படிச்சுட்டு வந்தாலே படங்கள் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுருமே என்ற மெத்தனம் எனக்கு:(

இன்னும் கொஞ்ச நேரத்தில் படத்தின் விளக்கங்களை அங்கே சேர்த்துவிடுகிறேன்.

said...

வாங்க கயலு.

கல்யாண சிடியா!!!! ப்பல்லே பலே ஜோர் ஜோர்.

நாங்க ஃபிஜியில் இருந்தப்ப கல்யாண வீடியோக்களை ( ஒரே குடும்பத்துக் கல்யாணங்கள்) ஏராளமாப் பார்த்துருக்கோம். இலங்கைத்தமிழர்களின் திருமண வீடியோ. அதுலே பொருத்தமான புதுப்புது சினிமாப் பாடால்களைப் பின்னணியில் ஒலிக்க விட்டுருப்பாங்க. அதைக் கேக்கத்தான் இந்தப் பாடு.

இன்னொரு முக்கிய விஷயம் என்னன்னா.... அந்தக் கல்யாணங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைத்தோழனா ஒரு சின்னப்பையன் எட்டு இல்லை ஒன்பது வயசு இருக்கும்.
அதைப்பற்றிக் கேட்டப்ப,. அந்தத் தோழி சொன்னது இன்னும் ஜோர்!

அவன் பெரிய எக்ஸ்பெர்ட் ஆகிட்டானாம். ஐயர் மறந்த சடங்கை எல்லாம் ஞாபகப்படுத்திச் செய்யவைப்பானாம்!!!!! மாப்பிள்ளைத்தோழனுக்கு ஒரு மோதிரம் பரிசாக் கொடுப்பாங்க. அந்த வகையில்ல் இதுவரை 11 மோதிரங்கள் சேர்த்துட்டானாம்!!!!!
இது 1986 வரை. இப்போ இன்னும் எத்தனை மோதிரங்கள் கூடி இருக்கோ:-)))))

said...

வாங்க கோவை2தில்லி.

அழகான அம்சமான நாடுதான். கூட்டம் ரொம்பவே கம்மி. அதுவே ஒரு அழகுதான்னு சொல்லிக்கலாம்:-))))

said...

வாங்க மாதேவி.

சரித்திரம் ரொம்ப முக்கியமாச்சே! அதான் இங்கே பதிவு செஞ்சு வச்சுடலாமேன்னு...... ஹிஹி

said...

வாங்க மீனாட்சி அக்கா.

பயங்கர த்ரில்லர் கதையா இருக்கே நீங்க சொல்றது!!!!!

நம்ம கிறைஸ்ட்சர்ச்சை தான் எடுக்கும் எல்லாப் படங்களிலும் கொஞ்சமாவது சேர்த்துருவார் நம்மூரில் பிறந்த இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன்.
அவருக்குப் போட்டியா மகளைக் களம் இறக்கலாமான்னுதான் ஒரு யோசனை:-))))))

அப்படி ஆச்சுன்னா நீங்கதான் திரைக்கதை & வசனம்:-)))))

said...

வாங்க கோமதி அரசு.

சுட்டிக்கு ரொம்ப நன்றி. தோழிக்கு அனுப்பிட்டேன்.

said...

வாங்க குறும்பன்.

அப்பப்ப நம்ம மக்களை 'ஊக்கு'விக்கப் போடறதுதான் இந்த 'PIN' குறிப்புகள்:-)))

சிரிப்பானுக்கு நன்றி.

said...

வாங்க ஜீரா.

ஐயோ அந்தக்காலத்துலே ஏது இந்த இண்டர்நெட்டும் தமிழ்மணமும்?

சினிமாவெல்லாம் இப்ப சமீபகாலமாத்தானே இணையத்தில் இந்தப்போடு போடுது, இல்லீங்களா?

செல்ஃபோனே அப்போ ஒரு பெரிய செங்கல் சைஸுலே இருந்துச்சே:-)))))

said...

வாங்க ஜயராஜன்.

இது பயணமே போகாத ஒரு பயணக்கதை:-))))

said...

வாங்க பொற்கொடி.

மனதில் உறுதி வேண்டும் என்று முண்டாசு சொன்னதை நம்ம மக்கள்ஸ் சீரியஸா எடுத்துக்கிட்டாங்கன்னு எனக்கு மட்டும் தெரியாதா?:-))))

உங்களுக்குமா பட விவரம் வேணும்!!!!!

said...

வாங்க ஹுஸைனம்மா.

இந்தச் சுரங்கப்பாதை மட்டும் இல்லைன்னா.....நம்ம ஊரே ஸ்தம்பிச்சுப் போயிரும். கடை கண்ணிகளில் காலி ஷெல்ஃப்தான் பார்க்கணும். வடக்குத்தீவு சமாச்சாரம்கூடக் கப்பல்வழியாத்தான் ஊருக்குள்ளே வருது (இன்க்ளூடிங் டாய்லெட் பேப்பர்)

நகர மக்கள் வாழ்க்கையே இந்த சுரங்கத்தாலேதானாக்கும் கேட்டோ!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

நௌ த டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு ஸோ மச், கேட்டோ!!!!

அப்போ வெறும் வீடியோ காஸட்ஸ்தான். (இப்போ இது நம்ம கொலுப்படி)

said...

சுவாரசியம். அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

said...

// ஐயோ அந்தக்காலத்துலே ஏது இந்த இண்டர்நெட்டும் தமிழ்மணமும்?

சினிமாவெல்லாம் இப்ப சமீபகாலமாத்தானே இணையத்தில் இந்தப்போடு போடுது, இல்லீங்களா?

செல்ஃபோனே அப்போ ஒரு பெரிய செங்கல் சைஸுலே இருந்துச்சே:-))))) //

ஆகா கொசுவத்தியா :) நீங்க சுருள் சுருள் டிரிங் டிரிங்னு சொன்னப்பவே சுதாரிச்சிருக்கனும். :)

சரி. கதையத் தொடருங்க :)

இன்னொரு கேள்வி. வேர்டுபிரஸ் ஐடி வெச்சி பிளாக்ஸ்பாட்டுல எப்படிப் பின்னூட்டம் போடுறது?

said...

மினி தொடர்... அதுவும் கப்பலில் ஆரம்பித்து இருக்கிறது.... எங்களுக்கெல்லாம் ஜாலிதான்....

கப்பல் - இரண்டாம் பாகமும் இப்போதே படிக்கிறேன்... :)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அடுத்து ரெண்டு பகுதி போட்டுருக்கேன்.

நேரம் இருக்கும்போது பார்த்துட்டு ஒரு வரி சொல்லுங்க.

said...

வாங்க ஜீரா.

//இன்னொரு கேள்வி. வேர்டுபிரஸ் ஐடி வெச்சி பிளாக்ஸ்பாட்டுல எப்படிப் பின்னூட்டம் போடுறது?//

அய்ய..... ஒரு க கை நா கிட்டே கேக்கும் கேள்வியா இது?

நிபுணர்கள் யாராவது பதில் சொல்ல வேண்டுகின்றேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்தக் கப்பலைக் கொசுவத்தியாக்குனது இன்னொரு கப்பல்தாங்க. அதான் மினித்தொடரா ஆகிப்போச்சு.

கப்பலுக்கும் கப்பலே எதிரியோ:-))))