Monday, May 28, 2012

Yam இருக்க பயம் ஏன்?

வாழ ஆசையா இருக்குன்னு லேசா ஒரு கோடி காமிச்சாப்போதும், குழியைத்தோண்டி புதைச்சுருவேன். இப்படி ஒரு கொடூர புத்தி ஒரு எட்டு வருசமா கூடிக்கிட்டே போகுது.


 வெங்காயம், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு இப்படி லேசா முளைவிட்டால் குழிக்குள்ளேதான் போகணும். இந்த வரிசையில் யாம் (இது நியூஸி யாம்) குழிக்குள் போச்சு! எங்க பக்க வசந்தகாலம் முடியும் தருவாயில் (நவம்பர்) மண்ணில் இறக்கினால் அது பாட்டுக்கு ஆற அமர முளைச்சு மே மாசக் கடைசியில் அறுவடைக்கு தயாராக வாடி நிக்கும். 

க்ளாவர் டிஸைன் போல இலைகளும் சின்னதா மஞ்சள் நிறப் பூவுமா இருக்கு. செடிகள் மஞ்சள் நிறமா ஆனதும் ஒரு வாடல். அப்போ தோண்டி எடுத்தால் சரியா இருக்கும்.

 ரீசைக்கிளிங் செய்யும் பொருட்களைப்போட்டு வீட்டு முன்னால் தெருவோரம் வைக்க ப்ளாஸ்டிக் கூடைகளை சிட்டிக்கவுன்ஸில் முந்தி கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம தேவையை அனுசரிச்சு எத்தனை கூடை வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம். (இலவசம்தான்) உலகம் பூராவும் குப்பை ஒரு பிரச்சனையா ஆகி இருக்கே! கவுன்ஸிலும் ஒவ்வொரு விதமா பரிசோதனைகள் செஞ்சுக்கிட்டு இருந்த காலம் அது. அப்புறம் பச்சை மஞ்சள் சிகப்புன்னு சக்கரம் வச்ச வீலி பின்களைக் கொடுத்தாங்க. முந்தி கொடுத்த கூடைகளை நீங்களே வச்சுகுங்கன்னதும் 'காட் மஸ்ட் பி க்ரேஸி ' கோலா பாட்டிலுக்கு ஏற்பட்ட மகிமை இதுக்கும்:-) தோட்டத்துலே குப்பை அள்ள, வேண்டாத சாமான்களை போட்டு வைக்க, பாட்டிங் மிக்ஸ் சாக்கை ஆடாமல் வைக்கன்னு இதுக்கு ஏகப்பட்ட கடமைகள். எல்லாம் முடிந்த ஒரு தருணத்தில் இதுவே செடி வைக்கும் ப்ளான்டர் தொட்டியாக அவதாரம் எடுத்துச்சு.

 கொஞ்சம் பெரிய இடத்தில் இடைவெளி நிறைய விட்டு நட்டு வச்சுருந்தால் இன்னும் நிறைய காய்ச்சு இருக்கும். தாராளமா வளர இடம் இல்லை 'யாம்'.

 இதைப்பற்றி இன்னும் விளக்கமாச் சொன்னதை இங்கே ஒருவாட்டி மீட்டிக்கறேன். நாலுவருசமானாலும் ருசி மாறலை கேட்டோ:-)

இன்னிக்கு 'நம்ம வகுப்புக் கண்மணிகளுக்காக என்ன சமைக்கலாமு'ன்னு யோசனையா இருக்கும்போது 'யாம் இருக்க பய(யா)ம் ஏன்?' ன்னு கேட்டுகிட்டேச் சிவந்த கண்ணோடு என்னைப் பார்த்துச்சு இந்த யாம்.




இது இங்கிலந்துப் பக்கம் இல்லையோ என்னவோ? நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர்,
(இங்கிலாந்துப்பெண்மணி) வீட்டுக்கு வந்தப்ப இங்கத்துக் காய்கறிகளைப் பத்திப் பேச்சுவந்துச்சு. அவுங்க வந்து ஒரு ரெண்டுவாரம்தான் ஆகி இருந்துச்சு அப்ப. இந்த 'யம் எனக்கு ரொம்ப யம்மியா இருக்கு'ன்னு சொன்னாங்க. முதன்முதலா இங்கேதான் இதைப் பார்த்தாங்களாம்.

New Zealand Yam ன்னு பொதுவா இங்கே சொன்னாலும் நம்ம விக்கியண்ணன் சொல்லும் பெயர் Oca.


நம்மூர்லே பச்சை மஞ்சள் இருக்கு பாருங்க ஏறக்கொறைய அப்படியான வடிவம். சிவப்பும் மஞ்சளுமான நிறம். உள்ளே இளமஞ்சளா இருக்கு.
இங்கே உள்ள மக்களுக்கு எதையெடுத்தாலும் அவனுக்குள்ளே(எவன்?) போட்டு 'பேக்' பண்ணித் தின்னணும். நமக்கு? எதையெடுத்தாலும் தாளிச்சுக்கொட்டிக் கறியாப் பண்ணிக்கணும்.
இது ரெண்டுக்கும் இடைப்பட்டதா எதாவது செய்யணுமுன்னு தோணிப்போச்சு. ஒரு நாள் 'நம்வழி'யில் செஞ்சதை மகளுக்குப் பரிமாறுனப்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாள். காய்கறிகள் எதைக் கொடுத்தாலும் 'யக்கி யக்கி'ன்னு சொல்லும் பெண் 'இதை யம்மி'ன்னு சொன்னதும் பிடிச்சுக்கிட்டேன்.




இவள்தான் நம் வீட்டின் சுவை 'மானி.'




இதுலே சிகப்பு நிறம் இல்லாமலும் இளமஞ்சளா ஒரு வகை சமீபத்தில் வர ஆரம்பிச்சிருக்கு. அதுக்குப்பெயர் கோல்டன் யாம்! தங்கத்தை விடமாட்டேங்கறாங்கப்பா:-))))


'கோல்டன் கூமரா'ன்னு இருப்பது என்ன தெரியுமா? நம்மச் சக்கரைவள்ளிக் கிழங்குதான். வெள்ளைத்தோலா(??) இருக்கும் மண்கலரில்:-)




சீஸன் வந்து எப்ப இது கிடைக்குதோ....அப்பெல்லாம் யாமே யாம். நம்ம ரெஸிபியைப் பார்க்கலாம் வாங்க.




யாம் :285 கிராம்


பச்சை மிளகாய் : 2


மிளகாய்ப்பொடி : அரைத்தேக்கரண்டி


கறிமாப் பொடி : 1 தேக்கரண்டி


உப்பு : அரைத் தேக்கரண்டி


பெருங்காயம் : ஒரு சிட்டிகை


எண்ணெய் : ரெண்டு தேக்கரண்டி


யாமைக் கழுவி எடுத்துக்கணும். மண்ணெல்லாம் இருக்காது.
தலை & கால் பக்கம் ( எது தலை எது காலுன்னே புரியாமல் இருந்தாலும்!!)
லேசாக் கத்தியால் சுரண்டிறணும்.
இப்ப வட்டவட்டமா அரை செ.மீ தடிமனில் ஸ்லைஸ் செஞ்சுக்குங்க.
ஒரு கண்ணாடிப் பாத்திரமோ இல்லை மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாத்திரமோ எடுத்து அதில் நறுக்கிய துண்டங்களைப் போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து 4 நிமிசம் மைக்ரொவேவ் அவனில் 100 % பவரில் வச்சு எடுத்துக்கணும். அடுத்து ஒரு ஃப்ரையிங் பேன் ( குழியான அடிப்பாகம் இல்லாமல் தட்டையா இருந்தால் ரொம்ப நல்லது) அடுப்பில் வச்சு(அடுப்பு எரிய வேணாம்) ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் மி. & க.பொடிகளையும் உப்பு & பெருங்காயத்தையும், நறுக்கிய ப.மிளகாயையும் சேர்த்துட்டு அடுப்பை எரிய விடுங்க. சிம்மிலே இருக்கட்டும் தீ.



எண்ணெய் சூடாக ஆரம்பிச்சதும் அதில் சேர்த்த மசாலாக்களை ஒரு கிளறு கிளறிட்டு, வெந்த யாம் துண்டங்களை மட்டும் பரவலாக அதில் சேர்க்கணும்.
யாமில் கொஞ்சூண்டு தண்ணீர், பாத்திரத்தின் அடியில் இருக்கும். அது வேணாம். கொஞ்சம் கொளகொளன்னு வெண்டைக்காய்த் தண்ணீர் போல இருக்கும்.




அப்பப்பக் கொஞ்சம் பிரட்டிவிட்டால் போதும். துண்டங்களில் எல்லாம் மசாலா சரிசமமா ஒட்டிப்பிடிக்குதான்னு பாருங்க. லேசா பாத்திரத்தைக் குலுக்குனாவே போதும். அஞ்சு நிமிசத்தில் கொஞ்சம் கிரிஸ்ப்பா வந்துரும். அவ்வளோதான்.

அடுப்பு ஆஃப்.


இந்தக் கறிமாப்பொடி இல்லைன்னா குடி முழுகிறாது. இருக்கவே இருக்கு கடலை மாவு. மிளகாய்ப்பொடியை இன்னும் ஒரு அரைக்கரண்டி கூடுதலாச் சேர்த்துட்டு அதில் ஒரு டீஸ்பூன் கடலைமாவையும் போட்டால் ஆச்சு. எல்லாம் ஒரு லேசான மொறுமொறுப்பு வர்றதுக்குத்தான்.



இல்லே....எனக்குக் கறிமாப்பொடிதான் வேணுமுன்னு அடம் பிடிச்சா......


இதோ அதுக்குண்டான செய்முறை. (துள்சியின் வழக்கப்படி, "செய்யறது செய்யறோம் கொஞ்சம் கூடுதலாச் செஞ்சு, பாக்கியை ஃப்ரிட்ஜில் வச்சுக்கிட்டா வேற சமையலுக்கு ஆச்சு". இல்லை?)


கடலைப்பருப்பு : ரெண்டு மேசைக்கரண்டி


உளுத்தம் பருப்பு : உ. பருப்பு ரெண்டு மேசைக்கரண்டி


சீரகம் : 1 மேசைக்கரண்டி


மிளகு : 1 மேசைக்கரண்டி


விரும்பினால் மட்டும் : துளி எண்ணெயில் வறுத்த மிளகாய் வத்தல் 4






இது எல்லாத்தையும் வெறும் வாணலியில் நல்லா வாசனை வர வறுத்து, ஆறுனதும் பொடிச்சு வச்சுக்கணும்.


மிளகாய் வத்தல் வேணுமுன்னா ரெண்டு மூணு சேர்த்துக்கலாம். இதை மட்டும் கொஞ்சம் எண்ணெயில் லேசா வறுத்துக்கணும். வேலை மெனெக்கடணுமா இதுக்குன்னு? வேணாம். வேற சமயலுக்கு எதாவது தாளிக்க வேண்டி இருக்குமுல்லே....அப்ப நாலைஞ்சு காய்ஞ்ச மிளகாயைக் கிள்ளாம முழுசா அந்தத் தாளிப்பில் சேர்த்துட்டு, உடனே அதை மட்டும் தனியா எடுத்து வச்சுக்கிட்டா ஆச்சு.






PIN குறிப்பு: நம்ம வீட்டுச் சமையலில் காரம் உப்பு எல்லாம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் குறைவுதான். அதனால் உங்க இஷ்டத்துக்கு இவைகளை 'இப்போதைக்குச்' (ஆடும்வரை ஆட்டம்) சேர்த்துக்குங்களேன்:-)))



என்ன இருந்தாலும் சொந்த விளைச்சலின் சுகமே தனி!!!

43 comments:

said...

இன்றைக்கு உணவகத்தில் Sweet potato fries சாப்பிட்டதில் எங்க வீட்டு சுவைமானிகள் எல்லாம் நல்லா இருக்குன்னுச்சுங்க. Ranch dressingஓட. இங்க வந்தா உங்க பதிவு.

Yam இங்கியும் கிடைக்குது. 'உங்க'நியூசி யாம் கிடைக்குதான்னு பாத்துட்டு உங்க செய்முறையிலேயே செஞ்சு பார்க்கிறேன்;-)

படங்கள் எப்பவும் போல் சூப்பர்.

said...

நானும் அதே மாதிரி புதைச்சுடுவேன் புதைச்சு..:))
சூப்பரா இருந்துச்சு அந்த முதல் வரி..

said...

யாம் தானே. லாப்ஸ்டர் மாதிரி இருக்கேனு பார்த்தேன்:)
படங்கள் தான் சூப்பரோ சூப்பர்.
ஒரு நாள் உங்க வீட்டு ஃப்ரீசரை வந்து பார்க்கணும்.
எவ்வளவு கொள்ளளவுன்னு!!!
சுவை மானி நல்லப் புதுவார்த்தை:)

said...

//ஒரு எட்டு வருசமா கூடிக்கிட்டே போகுது//

இன்னும் கூடுதலாகணும்ன்னு வேண்டிக்கறேன்.

செம ருசி.. எழுத்தும் குறிப்பும் :-))

said...

படங்களும் விளக்கமும் ருசியை அதிகப்படுத்துகின்றன . வித்தியாசமான விளக்கம் அருமை .

said...

முதல்வரியைப் பாத்து அரண்டுட்டேன். உங்களை அப்படியே ஒரு ரெண்டு பல்லோட கற்பனை செஞ்சு... மயங்கியே போயிட்டேன்!! :-)))))))

//'யாம் இருக்க பய(யா)ம் ஏன்?' //
//சுவைமானி//

எங்கேர்ந்து பிடிக்கிறீங்க வார்த்தைகளை, அதுவும் தமிழே கேட்காத ஊர்ல இருந்துகிட்டு!!

said...

தெளிவான படங்களும் விளக்கமும்
பதிவினைி சுவாரஸ்யப்படுத்திப்போனது
அனைவருக்கும் பயன்படும் பதிவு
பகிர்வுக்கு நன்றி

said...

யாம் பாக்க நல்லா இருக்கு. உடனே சமைச்சுப் பாத்துடணும்னு ஆசையா இருக்கறதால என் சென்னை முகவரிக்கு ஒரு கூடை உடனே அனுப்பி வைங்க டீச்சர்.

said...

இதுவரைக்கும் இந்த யாமை நான் இங்கு பார்த்த நினைவே இல்லை. அடுத்தமுறை மார்க்கெட் போகும்போது நல்லாக் கவனிச்சிப் பார்க்கணும்.

துளசி மேடம், உங்க பதிவுகளோட தலைப்புகளே எப்பவும் ஒரு தனித்தன்மையோடு ஈர்க்கும். இப்பவும் அப்படிதான். அதிலும் அந்த முதல் வாக்கியம், நினைச்சி நினைச்சி ரசிச்சேன்.

நீங்க சொல்வது போல் நம் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளின் ருசியே தனிதான்.

said...

பாக்க பyam -மா இருக்கு !

said...

டீச்சர்!உங்களுக்கு மட்டும் எப்படி தலைப்புக்கள் தானா வந்து சேருது?நான் மட்டும்தான்னு நினைச்சா பின்னூட்டத்துல ஹுசைனம்மாவும் அதையே செப்புகிறார்.

நம்மூர் சர்க்கரைவெள்ளிக்கிழங்கைத்தான் யாம் ன்னு சொல்லி ஏமாத்திறீங்களோன்னு தூரத்துப் படத்தில் நினைச்சேன்.மேக்ரோ போட்டு அது வேற இது வேறன்னு சொன்னதுமில்லாமில்லாமல் வெட்டி கூறும் போட்டுட்டீங்க.

அது யார் முதல் பின்னூட்டம் கெக்கேபிக்குனி:)அவங்க சொல்றது உண்மைதான்.படங்களில் நல்ல முன்னேற்றம் தெரியுது.

ஒரு வேளை காமிராவை மாத்திட்டீங்களோ!

said...

ஒரு சாயல்ல ஸ்ட்ராபெர்ரி மாதிரியும், இன்னொரு சாயல்ல முள்ளங்கி மாதிரியும் தெரியது இந்த யாம்! சென்னையில எங்க கிடைக்கப் போவுது. அதனால படங்களைப் பாத்தே பசியாத்திக்கறேன் நான்!

said...

துளசி மேடம்,

||அதில் மி. & க.பொடிகளையும் ||

டவுட்டு 1
அதாவது மிச்சரையும் கடலையையும் பொடி செய்து போடச் சொல்றீங்க !




||சிம்மிலே இருக்கட்டும் தீ.||

டவுட்டு 2
ஆமா, சிம்மிலே தீ இருந்தா செல் போன் வெடிச்சு உருகிடாது?

:))

எம்மையும் யம்'ம்மையும் யாம் விட்டு வைக்க மாட்டோம்'னு களத்தில இறங்கியிருக்கீங்க..

ஆனால் கறி நல்லாவே இருக்கும்னு தோணுது..

அப்புறம் அந்த கறிமா' சொன்னிங்களே,அதுல ஒரு 4 பின்ச் பட்டை 2 பின்ச் கிராம்பு சேர்த்து அரைச்சுப் பாருங்க..

நன்னி, இம்மாதிரி எக்ஸ்ப்ளொரேஷன்களுக்காக !

said...

அஹா .. சமையல் குறிப்பா ? கலக்குங்க

said...

இன்று

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

said...

வாங்க கெக்கேபிக்குணி.

ரொம்ப நாளா ஆளைக் காணோமே!

நலமா?


எலிஃபெண்ட் யாம் என்று ஒன்னு பெருசாக் கிடைக்கும். ஆனால் நம்மது இது இல்லை.

செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.

நன்றி.

said...

வாங்க கயலு.

ஆஹா....கவனிச்சுட்டீங்களா!!!!!!!

(புதை) குழி வெட்டும் கூட்டமா நீங்களும்:-))))

said...

வாங்க வல்லி.

வந்து பாருங்கப்பா.

பெரிய ஃப்ரிட்ஜோடு (520 லிட்டர்) இருக்கும் ஃப்ரீஸர் தவிர தனியா ஒரு வெர்ட்டிகல் ஃப்ரீஸர் வச்சுருக்கேன்பா.
அது ஆறடி உயரம். எனக்குச் சரியா இருக்கு(ம்) :-))))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

உங்கள் வேண்டுதலை சாமி கட்டாயம் கவனிப்பார்,. கவனிக்கணும்:-)

said...

வாங்க சசிகலா.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!

பெயரைப் பார்த்ததும் 'ஆடி'ப் போயிட்டேன்:-)))))

said...

வாங்க ஹுஸைனம்மா.

சரியாச் சொன்னீங்க..... ! 'தமிழே கேட்காத ஊர்' என்று!!!!!

அதுகூட ஒரு காரணமா இருக்கணும்.

கிடைக்காததுக்குத்தானே மனம் ஏங்கி, சதா அந்த நினைப்பாவே கிடக்கு!

சூப்பர்மார்கெட்லே அங்கெயும் இல்லெ என்ற தமிழ் சொல் கேட்டு...
ஒரு இண்டர்நேஷனல் நட்பைப் பிடிச்சது நினைவுக்கு வருது.

said...

ஹுஸைனம்மா,

இது உங்களுக்கு:-)

http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_114307759042437042.html

said...

வாங்க ரமணி.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க கணேஷ்.

அது வந்து சேர்வதற்குள் முளைச்சுரும்.

அப்புறம் நீங்களும் புதைக்க வேண்டியதாப் போயிருமே!

ஒரு டிசம்பர் ஜனவரியில் கிளம்பி வாங்க இங்கே!

said...

வாங்க கீதமஞ்சரி.

சிட்னியில் அநேகமாக் கிடைக்குமே!
சூப்பர்மார்கெட்டில் பாருங்க.

எங்க உருளையைத்தான் வேணாமுன்னுட்டீங்க:(

said...

வாங்க மோகன் குமார்.

பார்க்க மட்டுமில்லை ருசியும் 'யம்' 'தான்:-)

said...

வாங்க ராஜ நடராஜன்.

தலைப்பு 'தானா' வர்றதுதான்:-)

குறைஞ்சபட்சம் அதாவது நல்லா அமையுதேன்னு மகிழ்ச்சியும் பயமும் வருது!

கேமெராவை மாத்திட்டேன். முந்தி சரி இல்லைன்னு தூக்கிப்போட்ட பழசையே திரும்பக் கையில் எடுத்தேன்.

ஸோனி, சாம்ஸங், ஃபூஜின்னு இப்ப ரீஸைக்கிளிங்லே இருக்கு.

said...

வாங்க நிரஞ்சனா.

முதல் வருகைக்கு நன்றி.

கண்ணால் தின்னால் போதுமென்றால் துளசிதளத்தில் ஏராளம் உண்டு:-)

said...

வாங்க அறிவன்.

ஆஹா ஆஹா...உக்காந்து யோசிச்சீங்க போல:-)))))

//ஒரு 4 பின்ச் பட்டை 2 பின்ச் கிராம்பு சேர்த்து அரைச்சுப் பாருங்க.. //

ரெண்டு பிஞ்ச் கிராம்பு சரி. பட்டையை எப்படிப் பிஞ்சுறதாம்?

ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் நளனின் ஜீன்ஸ் ( ஆடை அல்ல) இருக்கு போல!

said...

வாங்க என் ராஜ பாட்டை ராஜா.

அப்பப்போ வயித்துக்கும் ஈயணுமேன்னுதான்:-))))

விஜய் இப்போ விஜயையா:-))))

said...

/இங்கே உள்ள மக்களுக்கு எதையெடுத்தாலும் அவனுக்குள்ளே(எவன்?) போட்டு 'பேக்' பண்ணித் தின்னணும். நமக்கு? எதையெடுத்தாலும் தாளிச்சுக்கொட்டிக் கறியாப் பண்ணிக்கணும்./

:)).

இடைப்பட்ட வழியில் செஞ்சது ‘யம்மி’யாகதான் எங்களுக்கும் தெரியுது!

said...

||ரெண்டு பிஞ்ச் கிராம்பு சரி. பட்டையை எப்படிப் பிஞ்சுறதாம்?||

ஐயோ,சமைக்குற அம்மணிகளுக்கு இது கூடவா சொல்லணும்?
பட்டை உருளையை எடுத்து சிறிய கல்லுரல் மாதிரி இருந்தா எடுத்து ஒண்ணு ரெண்டா இடிச்சா பிஞ்சி'டலாம்ல...

||ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் நளனின் ஜீன்ஸ் ( ஆடை அல்ல) இருக்கு போல!||

எனக்குள்ள நெறைய பேரோட நள ஜீன்ஸ் இருக்கு,துளசி மேடம் கூடதும் !

எந்தரோ (நள) மகானுபாவுலு..

said...

அப்புறம் டெம்ப்ளேட் மாத்தினிங்கன்னா, பதிலுக்கு பதில்னு அங்கங்கேயே பதிலைப் பதியலாம்..இந்த டெம்ளேட்ல கூட செய்யலாம்னு நெனைக்கிறேன்..

முயற்சி பண்ணுங்க.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இன்னிக்கும் நம்மூட்டுலே இடைப்பட்டவழி யாம்தான்:-)

கிடைச்சா விட்டுறாதீங்க!

said...

அறிவன்,

கல்லுரல் எடும்பீங்க அப்புறம் ஆட்டுக்கல் எங்கேம்பீங்க. உரல் உலக்கை திரிகைன்னு எங்கே போவேன்.

அந்த பின்சை இஞ்ச் ஆக்குனால் போதாதா? ரெண்டு இஞ்ச் நீளமுள்ள பட்டை:-)

said...

என்ன அறிவன்.... இப்படி டெம்ப்ளேட்டுலே கை வைக்கச் சொல்றீங்க ஒரு க கை நா வைப் பார்த்து!!!!!!!

said...

"யாம்" பார்த்து மயங்கிடுவேன் என்றுதான் கணனி காட்டிஸ்க் போய்விட்டது போலும் :(

வாரண்டி காலம் இருந்ததில் வேறுமாற்றித் தர தாமதம்.
பலவருடம் போனது போல் ஆகிவிட்டது.

வீட்டு தொட்டித்தோட்டத்தின் விளைச்சலுக்கு பாராட்டுக்கள்.

சமையல் சுவைத்தது.

said...

வாங்க மாதேவி.

கணினி இல்லைன்னா கை மட்டுமுமில்லை மனசும் உடைஞ்சு போயிருதேப்பா!!!!

ச்சீச்சீ.... இப்படி அடிமை ஆகிட்டோமேன்னு....:-))))))

said...

இத்தனை பொறுமையாக, அழகாக ஒரு பதிவை எழுதும் உங்களின் உழைப்பை எண்ணி வியக்கிறேன்...எழுத்து நடையும், படங்களும் மிக அற்புதம்.ரசித்து படித்தேன்.

தோட்டம் போடுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது...

அதிலும் இந்த யாம் என்னை ரொம்பவே சோத்தித்துவிட்டது, ஆமாம்ங்க! அதன் அழகு பார்த்து ருசி எப்படி இருக்கும்னு பயங்கர ஆர்வமா போச்சு...ருசிக்க வாய்ப்பு எப்போ கிடைக்கும் தெரியல. :)

சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள்.

said...

வாங்க கௌசல்யா.

கிளம்பி வாங்க ஒரு ஜனவரி ஃபிப்ரவரிகளில். நேரடியாப் பறிச்சுச் சமைச்சுடலாம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்க தோட்டம் ஜோராப்போகுது. இனிய பாராட்டுகள்.

Anonymous said...

Hi Kousalya,

Is the plant growing from seed or what?

If it is growing from seed, Where can I get seeds in Tamilnadu?

Thanks
Ramesh S

said...

AZHAGA IRUKKU UNGA PATHUVU.... VAZHTHUKKAL

said...

வாங்க பாஸ்கி.

நன்றி ! மீண்டும் வருக !!