Tuesday, June 05, 2012

38

ஒரு கொடுமைக்கார மனைவியும், கொஞ்சமும் அலட்டல் இன்றி அசராமல் அன்பு செலுத்தும் ஒரு கணவனும் இன்று மணநாளை மகிழ்ச்சியோடு(!!???) கொண்டாடுகிறார்கள்

அனைவரின் அன்பையும் வேண்டி,
 துளசியும் கோபாலும். (ப்ரிஸ்பேன் நகரில் இருந்து)

86 comments:

said...

/ஒரு கொடுமைக்கார மனைவியும், கொஞ்சமும் அலட்டல் இன்றி அசராமல் அன்பு செலுத்தும் ஒரு கணவனும் /

இது என்னமோ ஸ்பெஷல் மாதிரி என்ன ஸ்டேட்மெண்ட்டு? எல்லா வீட்டிலுமே இதுதானே கதை!!

விளுந்து கும்புட்டுக்கிறேன் ரீச்சர், கோபால் ஐயா!! ஆசிர்வாதம் ப்ளீஸ்!!

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் :-)

இடுகை தலைப்பையும், புகைப்படத்தையும் பார்த்துவிட்டு... 'இதில் யாருக்கு 38 வயது' என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு இளமையா இருக்கீங்க இரண்டு பேரும். :-))

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் :)))
thulasi akka and Mama .

said...

வாழ்த்துக்கள். இன்னும் பலகாலம் இந்தக் கொடுமை நீடிக்கட்டும்.

said...

வாங்க கொத்ஸ்.

உண்மையை தைரியமாச் சொன்னதுக்கே உமக்கொருவிழா எடுக்கணும் :-))))))

கோபால் ஆசிகளை அள்ளி வழங்கிட்டாராம்!!!!

said...

வாங்க ஸ்ரீதர் நாராயணன்.

அடுத்த ஜென்மத்தில் 38 வயசு மீண்டும் வரலாம்:-)))))

அடிமை வாழ்க்கை தொடங்கி 38 ஆச்சு. ஆனால் யார் அந்த அடிமைன்னு கேக்கப்பிடாது கேட்டோ:-))))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஏஞ்சலீன்.

வாழ்த்துகளுக்கு ந்ன்றிப்பா.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

பல்லாண்டுகாலம் அன்போடு ஆரோக்கியத்தோடு மகிழ்வுடன் வாழ்ந்து வர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

said...

38 தானா:)
அன்பும் அறனும் கொண்ட மண வாழ்க்கை என்றும் நிலைக்கட்டும். எங்களுடைய ஆசிகள்.
சிம்மு &ரேவதி.

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்:)!

said...

இனிய மணநாள் நல்வாழ்த்துகள்..Mr&Mrs துள்சிக்கா..

said...

உண்மையைச் சொல்றதுக்கு நானோ, எங்க சங்கத்து ஆளுங்களோ, ஏன் எங்க சங்கத்து நிறுவனர் / தலைவர் கோபால் அவர்களோ என்றைக்கும் அஞ்சியதில்லை. அதுவும் இல்லாம என்ன உண்மை அது? சம்மர்ல வெயிலா இருக்கு என்பது போன்றதுதானே?

மீ டூ விழுந்து கும்பிட்டு ஃபையிங் போத் ஆஃப் யூ.

said...

வாழ்த்துகள் அக்கா & மாமா! :-)

கொத்ஸ். உங்க வீட்டுக்கதையை மட்டும் சொன்னா போதாதா? அதுக்கு தைரியம் பத்தலை போலிருக்கு! ஊரையெல்லாம் கூட்டு சேத்துக்கிறீங்க. :-)

said...

வாழ்த்துகள் வாழ்த்துகள்.. இன்னும் நாலு நாளில் இதே ஸ்டேட்மெண்ட் நானும் சொல்லிக்கலாமா..:)

said...

திருமண நாள் வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன் மகிழ்ச்சியாக இன்று போல் என்றும் வாழ்க!

said...

நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்? இனிய மண நாள் வாழ்த்துக்கள். எங்களை எல்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்க இந்த நாளில்... :)

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

மேலும் பல்லாண்டு நல்ல உடல்நலத்துடன், குறைவில்லா செல்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீங்கள் இருக்க, எல்லாம் வல்லவனை பிரார்த்திக்கிறோம்....

38க்கு, பத்தும் சில நாட்களுமே ஆன வெங்கட்-ஆதியின் நமஸ்காரங்கள்...

said...

Hearty Congrats and many more Happy returns for the day for the Newly Married Couple.

photo sooooooooooooooooooooooperu

said...

/ஒரு கொடுமைக்கார மனைவியும், கொஞ்சமும் அலட்டல் இன்றி அசராமல் அன்பு செலுத்தும் ஒரு கணவனும் /

KODUTHUVAITHA THAMBATHIGAL. VAZGA PALLANDU

KARUNAKARAN
CHENNAI

said...

/ஒரு கொடுமைக்கார மனைவியும், கொஞ்சமும் அலட்டல் இன்றி அசராமல் அன்பு செலுத்தும் ஒரு கணவனும் /

KODUTHUVAITHA THAMBATHIGAL - VAZGA PALLANDU

KARUNAKARAN
CHENNAI

said...

இனிய திருமணநாள் வாழ்த்துகள் .

said...

வாழ்த்துகள்!! இன்னும் பல எட்டுகளைக் கடக்க என் பிரார்த்தனைகள்.

என் பெற்றோருக்கும் இன்னிக்குத்தான் மணநாள். இறையருளோடு வெற்றிகரமா 41. இப்பத்தான் ஒரு நாலு வருஷம் முன்னாடி ‘தனிக்குடித்தனம்’ வச்சுக் கொடுத்தோம்!! :-))))))))))

said...

கும்புட்டுகிறேன் டீச்சர் ;-))

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் :-)

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்!!

said...

எங்கள் ஆசிகள். வாழ்த்துக்கள்.<a href="http://menakasury.blogspot.com>இங்கே</a> வந்து சென்ற யுகத்தில் எடுக்கப்பட்ட உங்கள்
நிழல்படத்தை பாருங்கள்.

subbu rathinam
http://menakasury.blogspot.com

said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் துளசி மேடம். சாருக்கும் சொல்லிடுங்க.

இப்படி வானிலை கொடுமையாக இருக்கும்நாளில் வந்திருக்கிறீர்களே... எப்படி சமாளிக்கிறீங்க?

said...

Wish you a happy wedding anniversary teacher!! நம்ம கொடுமை பண்ணலேன்னா அவங எப்படி பக்குவப்படறது.. உலக ஞானம் அடையறது..? Have fun in Brisbane!

-இப்படிக்கு கொடுமை ஸ்கூலின் டாப் மாணவி.

said...

:-) எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம்.

said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
தம்பதியர் வாழியவே நல்லதெல்லாம் ஆண்டு :)

என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துகள் :)

நானும் நம்ம கொத்ஸ் சொல்றத வழிமொழிகிறேன். அவர் சொல்ற மாதிரி வீட்டுக்கு வீடு பருப்புப்பொடிதான். :)

said...

Vazhtha vayathillai, adhalaal vanagugiren. Ellam valla antha iraivanai ungal kudumbathin nalanukkaga prathikiraen.

- Sri

said...

<a href="http://menakasury.blogspot.com>இங்கே</a>

meenachi paatti

said...

வாங்க தங்கவேல்.

பிரார்த்தனைகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

38 தானாவா? யுகமால்லே இருக்கு:-)))))

அன்புக்கும் ஆசிகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.



ஏற்கெனவே...இங்கே துள்சியின் ஹஸ்பெண்டு கோபால் என்றுதான் சொல்லிக்குவார்:-)))))

said...

வாங்க பினாத்தலாரே.

சம்மரில் வெய்யிலா? அப்ப விண்ட்டரில் குளிர்:-)))))

கும்பிடு எல்லாம் கிடைச்சது.

எங்கள் ஆசிகள். நல்லா இருங்க.

said...

வாங்க குமரன் தம்பி.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

வாலறுந்த நரி கதை தெரியுமோ:-))))))

said...

வாங்க கயலு.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.


ஆஹா.... இன்னும் நாலே நாளா?

இனிய வாழ்த்து(க்)கள். நானும் இப்பவே சொல்லிக்கறேன்.

said...

வாங்க கோமதி அரசு.

அன்பான வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க தெக்கி.

நல்லா இருக்கோம்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

குழந்தைகுட்டிகளுடன் நல்லா இருங்க. ஆசிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... பத்து வருசமா? மைல்ஸ்டோன் ஆச்சே! அலுமினியம் வெட்டிங் என்பதால் பரிசு வாங்கத்தான் நல்லா இருக்காது:( அதுலே அணி'கலன்' நல்லாவா இருக்கும்?:-)))))

நல்லா இருங்க.

அன்பான வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க கீதா.

கயிலை ரிட்டர்ன் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.

நேபாளக் கோவில் வளாகம் அது:-)

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க கருணாகரன்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க சசிகலா.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க ஹுஸைனம்மா.

உங்க பெற்றோர்களுக்கு எங்கள் வணக்கமும் வாழ்த்துகளும்.

தனிக்குடித்தனம் நல்லா நடக்குதுதானே?

நாங்களும் இப்போ 10 வருசமாத் தனிக்குடித்தனம்தான்:-)))))

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க கோபி.

ம்ம்ம்ம்ம் கும்பிடு கிடைச்சது.

நல்லா இருங்க. எங்கள் ஆசிகள்.

said...

வாங்க ஆர். எஸ்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க மேனகா.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

வணங்குகின்றோம். எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

ஆனாலும் படம் பிரமாதம்! முந்தி இப்படியா இருந்தோம்? நினைவே இல்லை:-)))))

said...

வாங்க கீதமஞ்சரி.



வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

முதல் மூணுநாள் மழை. இப்போ வெய்யில் வந்துருக்கு. ஆனாலும் ஒரு சில் இருக்கே!

எங்க ஊரில் இன்று ஸ்நோ பெய்து ஊரெல்லாம் வெள்ளை.

மகள் படம் அனுப்பினாள்.

said...

வாங்க பொற்கொடி.

அதானே....பாயிண்டை 'கப்'ன்னு பிடிச்சுட்டீங்க!

ஞானம் வர்ற மாதிரி தெரியலை. இன்னும் ரெண்டு வருசம் போகணுமோ?

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க கிரி.

நல்லா இருங்க. ஆசிகள்.

said...

வாங்க ஜீரா.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

ஆமாம்....பருப்புப்பொடிக்கு நெய்யா இல்லே நல்ல எண்ணெயா?
:-))))))

said...

வாங்க ஸ்ரீ.

வாழ்த்த வயது எதுக்கு? மனசு போதுமே!

பிரார்த்தனைகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

ஹொட்டேலில் நெட் கனெக்‌ஷன் கொஞ்சம் சரி இல்லை.
அதான் லேட்டா பதில் சொல்லவேண்டியதாப்போச்சு.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள் அக்கா.

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் டீச்சர்

said...

வாங்க லோகன்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

ரெண்டு மூணு நாளா உங்களை நினைக்கவேண்டியதாப்போச்சு.

லோகன் செண்ட்ரல், லோகன் ஹைவே, லோகன் லீன்னு நிறைய கண்ணில் பட்டன:-))

said...

// ஆமாம்....பருப்புப்பொடிக்கு நெய்யா இல்லே நல்ல எண்ணெயா?
:-)))))) //

கண்டிப்பா நல்ல எண்ணெய்தான். :)

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

said...

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிப்
போஒய்ப் பெறுவது என்?

வாழ்த்துக்கள் டீச்சர்..

said...

Enjoy Teacher.

said...

Many more happy returns of the date.

said...

வணக்கம்
அப்ப அப்பா
உங்க வலைபூ முகவரி மறந்து விட்டேன்.அதை தேடி கண்டுபிடிபதுகுள் ussssssssssssss.
நானும் என் அப்பாவும் உங்களது விசிறி.உங்கள் எழுத்துகளை விரும்பி படிப்போம்.கடந்த ஒரு வருடமாக இந்தியா வந்தது இருந்து படிக்கச் முடியவில்லை.
இப்பொழுது தன உங்கள் முகவரி கிடைத்தது.நல்ல சமயத்தில் தன வந்துள்ளேன்.
திருமண நாள் வாழ்த்துக்கள்.

said...

வணக்கம்
அப்ப அப்பா
உங்க வலைபூ முகவரி மறந்து விட்டேன்.அதை தேடி கண்டுபிடிபதுகுள் ussssssssssssss.
நானும் என் அப்பாவும் உங்களது விசிறி.உங்கள் எழுத்துகளை விரும்பி படிப்போம்.கடந்த ஒரு வருடமாக இந்தியா வந்தது இருந்து படிக்கச் முடியவில்லை.
இப்பொழுது தன உங்கள் முகவரி கிடைத்தது.நல்ல சமயத்தில் தன வந்துள்ளேன்.
திருமண நாள் வாழ்த்துக்கள்.

said...

ஜீரா,

சரியாச் சொன்னீங்க..... !

'நல்ல' எண்ணெய்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க அறிவன்..

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

ஆமாம்.... இங்கத்து 'விதி' உங்களுக்குத் தெரியாதா?

முழுக் குறளைச் சொன்னால் அதுக்கு பொழிப்புரையும் எழுதணுமாக்கும்:-))))

அதான் ஒரு வரியோடு நிறுத்திக்குவேன் நான்:-))))

said...

வாங்க குமார்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க முகுந்த் அம்மா.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சே?

said...

வாங்க விஜி.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

அப்பாவுக்கு என் அன்பான விசாரிப்புகள்.

ஆமாம்.... துளசி கோபால் என்று கூகுளிச்சு இருந்தால் கிடைச்சிருப்பேனே!

ஒரு வருச அரியர்ஸை முடிக்கப்பாருங்க அப்பாவும் பொண்ணுமா:-))))

said...

Wish you and Gopal uncle, happy wedding anniversary!! hi hi romba lateaa vanthuttane pola...:))

said...

Wish you & Gops uncle a very happy and healthy wedding anniversary teacher!! hi hi romba late aa vanthuttane pola

said...

||ஆமாம்.... இங்கத்து 'விதி' உங்களுக்குத் தெரியாதா?

முழுக் குறளைச் சொன்னால் அதுக்கு பொழிப்புரையும் எழுதணுமாக்கும்:-))))

அதான் ஒரு வரியோடு நிறுத்திக்குவேன் நான்:-))))||

மற்றவர்கள் பதிவில் அல்லது பதிலில் எழுதினால் பொருள் எழுதுவது வழக்கம்தான்..ஆனால் டீச்சருக்குமா அது?

தவிர வாழ்த்தறதுக்கு முத்துப் போல் அந்தக் குறள் சட்டுனு நினைவுக்கு வந்தது.அதுக்கு எதுக்கு பொழிப்புரை எல்லாம் எழுதி அந்த அழகைக் கெடுப்பானேன்?!!
:)

said...

நல்வாழ்த்துகள், எப்பவும் இப்படியே மகிழ்ச்சியாகவே தொடர வேண்டும்.

said...

வாங்க சுபாஷினி,

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி.

லேட்டெல்லாம் இல்லை. அதான் ஒன்றுக்கு ரெண்டா வாழ்த்திட்டீங்களே:-)))))

said...

அறிவன்,

ஆஹா..... நான் கேட்டதும் வகுப்புக் கண்மணிக்களுக்காகவே!

அந்த 'முத்தை' இப்போ என் சொத்தாக்கியாச்சு:-)))))

said...

வாங்க கோவியாரே.

வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்.

said...

belated wishes:)

said...

manamaarndha vaazththukkal!

said...

manamaarndha vaazththukkal!

said...

வாங்க fieryblaster,

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி.

எதுவுமே லேட் இல்லை:-)))

said...

வாங்க குலோ.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி.

அடுத்த பயணம் ஆரம்பிச்சுருக்கு இங்கே. வந்து பார்த்துட்டுச் சொல்லுங்க.:-)

said...

எங்களுடைய தாமாதமான -ஆயினும் உளம் நிறை நல்வாழ்த்துகள்! 38 ஆண்டுகள் மென்மேலும் பற்பல ஆண்டுகளாக ஆகட்டும்.

வாசன் & விஜி

பி.கு: 2வாரத்தில் பெற்றோர்களின் 52 ஆண்டு நிறைவு- 7 வாரத்தில் எனக்கும் விஜிக்கும் 26 ஆண்டுகள்!!

said...

வாங்க வாசன் & விஜி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

இப்ப நடப்பது உங்கள் வெள்ளிவிழா ஆண்டா? ஆஹா ஆஹா..... மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள்.

விசேஷக் கொண்டாட்டங்கள் என்னென்ன இருந்திருக்கும் என்று கற்பனை செய்கிறேன்.


இன்னும் 7 வாரத்தில் 26 க்கு மனம் நிறைந்த அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

பெற்றோரின் 52 க்கு என் வணக்கங்கள். ஆசி வேண்டி நிற்கின்றோம்.