Monday, July 30, 2012

நாட்டாமை...... பேசாம பேரை மாத்தலாமா? ( ப்ரிஸ்பேன் பயணம் 21)

பெயர்ப்பொருத்தம் கொஞ்சம்கூடச் சரி இல்லை! நம்ம பக்கங்களில் அநேகமா வெறும் சிகப்பு நிறத்தில் மட்டுமே இருப்பதால் இந்தப்பெயர் வந்துச்சு போல! இங்கே நியூஸியில் நம்ம வீட்டில் ஒரு பிங்க் நிறமுள்ளது இருக்கு)

 செம்பருத்திச் செடிகளின் வளையம்! பெரிய சைஸ்வேற! என்னென்னமோ கம்பினேஷன்ஸ் வச்சுப்பார்த்துக்கு இயற்கை! தனி நிறம், இல்லைன்னா உள்ளே நடுவில் ஒன்னு வெளிப்புறம் ஒன்னுன்னு ரெண்டு வெவ்வேற நிறங்கள். எதை விட்டுவைக்கன்னு தெரியாம எல்லாத்தையும் க்ளிக்கினேன்.

ஒவ்வொன்னும்  பெருசா  அரைஅடி விட்டத்தில்! ஹைப்ரீடோ?

அந்த சன் டயல் வச்சுருக்கும் மேடையிலும் இந்தப்பூக்களின் வடிவம் ரொம்பப் பொருத்தம்! செடிகள் வந்தவிவரமோ குறிப்புகளோ ஒன்னும் சிக்கலை. அழகை பார்த்து ரசிச்சுக்கோ. உனக்கெதுக்கு செடிமூலமுன்னு சொல்றாங்களோ!!!!

தொடரும்..............:-)

20 comments:

said...

செம்(பலவண்ண)பருத்திப் பூக்களின் புகைப்படங்கள் அருமை. தமிழில்தான் செம்பருத்தி என்கிறோம். ஆங்கிலத்தில் Hibiscus என்றுதான் அழைக்கிறார்கள்.

said...

பூக்களை நல்ல முறையில் படமாக்கியுள்ளீர்கள். ரசித்தேன்.

said...

எத்தனை நிறங்களில்.. எத்தனை வடிவங்களில்..

அத்தனையும் கொள்ளை அழகு:)!

பகிர்வுக்கு நன்றி.

said...

அழகை பார்த்து ரசிச்சுக்கோ. உனக்கெதுக்கு செடிமூலமுன்னு சொல்றாங்களோ!!!

செம் - பருத்தி !

மலேசிய நாட்டின் தேசீயப் பூவாமெ !

அந்நாட்டின் நாணயங்களில் கூட அழகாக பூவை அச்சுப்பதித்திருக்கிறார்களே!

பூப் பூவாய் மலர்ந்த பதிவுக்குப் பாராட்டுக்கள் !

said...

வாங்க நடனசபாபதி.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

உண்மைதான், ஹைபிஸ்கஸ் என்ற சொல்லை லேபிளில் போட்டு வைத்தேனே!

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அழகை அழகுன்னுதான் சொல்லணும்:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நிறைய வகைகள் இருப்பதால் வெவ்வேற நாடுகள் தேசியப்பூவா வச்சுருக்காங்களோஓ!

தென் கொரியாவுக்கும் இது தேசியப்பூதான். ஆனால் இளம் ரோஜா நிறப்பூ!

மலேசியாவுக்கு செந்நிறம்.

ஃபிஜித்தீவுகளுக்கும் செம்பருத்தியே தேசியப்பூ!

தாஹித்தி தீவுகளில் பெண்கள் தான் சிங்கிள் என்று தகவல் சொல்லிக்க இந்தப் பூவை காதோரம் வச்சுக்குவாங்க.

said...

ஒவ்வொண்ணும் அழகுன்னாலும் நடுவுல சேப்பும் ஓரத்துல மஞ்சளுமா இருக்கற பூ கொள்ளையழகு..

said...

ஆஹா... ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... நான்தான் உன் மனசைப் பறிப்பேன் என்று. காலையில் அழகான மலர்களைப் பார்க்கையில் மகிழ்ச்சில மனம் மலர்ந்துடுச்சு. நன்றி டீச்சர்.

said...

படங்களும் பகிர்வும் அருமை.

said...

hibiscus rosasineasis

said...

இந்தப் பூக்களையெல்லாம் பாத்தா பாத்துக்கிட்டேயிருக்கலாம் போலயிருக்கே! என்ன அழகு! என்ன அழகு!

இயற்கை ஒரு மிகச்சிறந்த ஓவியர் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை. நாம் திரும்பத்திரும்பத் தோற்றுக்கொண்டேயிருப்பதற்கு இதெல்லாம் சாட்சிகள்.

said...

வர்ண ஜாலம் காட்டும் பூக்கள்.

பறித்துவிட்டோம். பறிக்க வேண்டாமென போடவில்லையே :))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரசிப்புக்கு நன்றிப்பா.

said...

வாங்க பாலகணேஷ்.

அழகான பூக்கள் இங்கே நம்ம பார்வைக்குக் கிடைக்குது. சென்னையில் அதிகாலை வாக் போகும் சிலர் பூ திருடுவது (சாமிக்குன்னு பறிச்சாலுமே திருட்டுப்பூதான்) போல இங்கே யாரும் எடுத்துக்கிட்டுப் போறதில்லை.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ஸாதிகா.

வருகைக்கும் ரஸனைக்கும் நன்றிகள்.

said...

வாங்க நான்.

ரொம்பச்சரி:-)

said...

வாங்க ஜீரா.

இந்த இயற்கைதான் கடவுள் என்பதில் எனக்கு ஒரு ஐயமும் இல்லை.

said...

வாங்க மாதேவி.

மனதால் பறித்ததால் மாப்பு கிடைச்சுரும் :-)))))