Monday, October 08, 2012

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது......

முகம் ஏன் வாடி இருக்கு? சிரிப்பையே காணோம்? எதுக்கு இவ்ளோ டென்ஷன்? சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருங்க இப்படி ஆளாளுக்கு வந்து சொல்லிட்டுப் போறாங்க. வேர்த்து விருவிருத்துக் கிடக்குறேன்.... கண்ணில் திரையிடும் கண்ணீர் வேற! இருக்காதா பின்னே.... புருசனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னா சும்மாவா?

 போதாக்குறைக்கு இன்னைக்கு பந்த் ன்னு ஒரு அறிவிப்பு. அழைப்பை ஏற்று வர்றோமுன்னு சொன்ன மக்கள்ஸ் வந்து சேரணுமே என்ற கூடுதல் கவலை வேற இப்போ...... காலையில் இருந்து செல்பேசி விடாம அலறிக்கிட்டே இருக்கு. உள்ளுர் தோழியிடம் என்னப்பா...உங்க ஊர்லே பந்துன்னு சொல்றாங்கன்னபோது.... நீ இதுக்கெல்லாம் கவலைப்படாதே பந்த் அது பாட்டுக்கு நடக்குமுன்னு சொல்லி இருந்தாங்க.

 நம்ம வீட்டில் ஒரு விழா கொண்டாடணும். கொண்டாடியே தீரணும் என்ற வெறியில் நான் இருந்தப்ப......... சொல்லிவச்சதுபோல் ஒரு பெரிய இழப்பு சம்பவிச்சுப்போனதும்..... மனசில் திகில்தான். வெறியெல்லாம் கலஞ்சு போய் நடத்தலாமா வேணாமான்னு ஒரு யோசனை. இவ்வளோ நடந்துருக்கு.... இப்பப்போய்..... பேச்சு வருமோன்னு கலக்கம்.

 ஆனால் மனுச வாழ்க்கையில் ஒருமுறை வரும் சமாச்சாரத்தை எதுக்காக வேணாமுன்னு விடணும். இதுக்காகவே இன்னொரு ஜென்மம் எடுத்து வரணுமா? அப்படியே வேற ஜென்மம் எடுத்து பிறக்கும்போது வேற ஒரு ஜீவராசியா இருந்துட்டா? சான்ஸே இல்லை.... ஊஹூம்..... பேசாம இப்பவே சின்ன அளவில் கொண்டாடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

 நல்லவேளையா இந்த விழாவுக்கு மட்டும் ஓராண்டு கெடு இருக்கு. அதுக்குள்ளே எப்பவாவது நடத்திக்கலாம் என்றதன் பேரில் கொஞ்சம் ஆறப்போட்டேன். பஞ்சாங்கத்தை எடுத்து வச்சுக்கிட்டு எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சுக்கலாமுன்னு ஆராய்ச்சி ஒரு பக்கம்!

 பேசாம ஊர்லே கல்யாணம் வச்சோமுன்னா சொந்தபந்தங்களுக்கு லகுவா இருக்கும். நமக்கோ குடும்பம் ரொம்பப்பெருசு.. அவ்ளோபேரும் ப்ளேன்காரனுக்குக் காசைக்கொட்டணுமா?

 இந்தப் பக்கங்களில் நிகழ்ச்சிகளையோ விழாக்களையோ நடத்த ஒரு ஈவண்ட் ஆர்கனைஸரைப் பிடிச்சால் போதும். நம்ம விருப்பம் எல்லாத்தையும் கேட்டுட்டு, அவுங்க மனசு சொல்றதுபோல் அவுங்களுக்குத் தோதான முறையில் நிகழ்ச்சியை நடத்தி முடிச்சுடுவாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு மால்(ஹிந்திச் சொல்) வெட்டணும். பட்ஜெட்டில் பாதி இதுக்கே போயிரும்:-( 

 நிற்க,

 நெருங்கிய நண்பர்களுடன் விவாதிச்சபோது பேசாமக் கிளம்பி வா. எல்லாத்துக்கும் நானாச்சுன்னாங்க ஒரு தோழி. ஆக்ச்சுவலா இவுங்களே ஒரு ஈவண்ட் ஆர்கனைஸர் என்றது முதலில் எனக்குப் புரிபபடலை. காலையில் கல்யாணம். மாலையில் ஒரு வரவேற்புன்னு முடிவாச்சு. ரெண்டு நிகழ்ச்சிக்கும் ஹால் புக் பண்ணிட்டேன்னு வயித்துலே பால் வார்த்தாங்க.

 வைதீகச் சடங்குகளுக்கு வாத்தியார் ஸ்வாமிகளையும் விருந்துக்கு கேட்டரரையும் ஏற்பாடு செஞ்சுட்டேன். நீ வந்ததும் மற்றவைகளை விவாதிச்சு முடிவு செஞ்சுக்கலாம். இன்னொரு டோஸ் பால்.

 மற்ற ஏற்பாடுகளை முக்கியமா ஷாப்பிங் எல்லாம் முடிக்கணுமேன்னு ஒரு பத்து நாள் இருக்கும்போதே கிளம்பிப் போய்ச் சேர்ந்தோம். ஆர்கனைஸர் ஏற்பாடு செஞ்சுருந்தபடி அவுங்க வீட்டிலேயே வாத்தியார் ஸ்வாமிகளுடன் ஒரு சந்திப்பு. சடங்குக்கு என்னென்ன சாமான்கள் நாம் வாங்கிவைக்கணும் என்றதுக்கான ஒரு பட்டியலை அவர் சொல்லச் சொல்ல, ஈவண்ட் ஆர்கனைஸர் எழுதிக்கிட்டே இருந்தாங்க. சின்னதா ஒரு ஹனுமன் வால்.

 விருந்து சமையலுக்கானவர் வந்து சேர்ந்தார். காலைவேளை நிகழ்ச்சி என்பதால் ப்ரேக்ஃபாஸ்ட்டும், மதியம் லஞ்சுக்குமான மெனு அவர் ஒப்பிக்க, அதில் சில திருத்தங்களோடு ஆரம்பிச்சு அதையும் ஈவண்ட் ஆர்கனைஸர் எழுதி முடிச்சாங்க. ரொம்பவே சிம்பிளான காலை உணவு போதுமுன்னு நினைச்சோம்.

 வைதீகப்பட்டியலில் உள்ள பொருட்களில் பூ, பழம், வெற்றிலை, வாழை இலை தவிர மற்றவைகளை புடவை, நகைன்னு  ஷாப்பிங் செய்யும் நாட்களிலே சைடு பை சைடா வாங்கிக்கிட்டே போகலாம். பேசாம கிரி ட்ரேடர்ஸ்லே லிஸ்டைக் கொடுத்தால் ஆச்சு. அதே போல் பட்டியலில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவை அங்கேயே கிடைச்சுருச்சு.

 கும்பம் வைக்கும் குடத்துக்குக் கொஞ்சம் அலைய வேண்டியதாப்போச்சு. மனசுக்குப் பிடிச்சமாதிரி ஒன்னும் மயிலையில் அமையலை. சரி. நாளைக்கு வேற இடத்தில் தேடலாமுன்னு, அதுவரை சேகரிச்ச பொருட்களைத் தோழியின் வீட்டில் வச்சுட்டு, அறைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கோம். அப்போதான் பார்க்கிறேன்.... கையில் இருந்த வளை ஸ்டைல் ப்ரேஸ்லெட்டைக் காணோம்...... மனசு திக்! தங்கம் விற்கும் விலையில் நாலு பவுனை இப்படித் தொலைச்சுட்டேனேன்னு பதைக்கிறேன். வண்டியில் விழுந்ததோன்னு சீட்டையெல்லாம் புரட்டிப் பார்த்தாச்சு. பாதி மயிலாப்பூர் சுத்துனதில் எங்கே விழுந்ததோ..... இப்படி கவனம் இல்லாம இருந்துட்டமேன்னு என்னையே நொந்துக்கறேன்.

 ஐயோ..... நேயுடு... நல்ல காரியம் நடத்த ஆரம்பிக்கும்போது இப்படி ஆகிப்போச்சே.... எப்படியாவது கண்டு பிடிச்சுக் கொடுப்பா. ..... 

 தோழி வீட்டுக்கு ஃபோன் பண்ணி சேதி சொல்லலாமுன்னா.... அந்த எண்ணுடன் தொடர்பு இல்லை. இந்த செல்லில் இருந்து லேண்ட் லைனுக்குப் பேசமுடியாது போலன்னு சொல்றார் இவர். (வெளியே காமிச்சுக்காட்டியும் மனப் பதற்றத்தில் தப்புத்தப்பா எண்களை அமுக்கிட்டு இப்படி.....)

 அறைக்குப்போய் அங்கிருந்து ஃபோன் செய்யலாமுன்னு கட்டிட வாசலில் இறங்கி வரவேற்பில் நுழையும்போதே..... " உங்க வளையல் அங்கெ இருக்குன்னு உங்க ஃப்ரெண்ட் ஃபோன் பண்ணினாங்க" வரவேற்பில் இருக்கும் பெண்ணின் குரல், பாலோடு தேனையும் சேர்த்து வார்த்தது.

 நேயுடு கண்ணா.....தேங்க்ஸ்டா,என் செல்லமே! அம்மாவை அழவைக்காமக் காப்பாத்திட்டே....

 " புதுப்புடைகள் நல்லா இருக்கான்னு இன்னொருமுறை பார்க்க வெளியில் எடுத்தப்ப.... வளையல் புடவைப் பைக்குள் கிடந்துச்சு. "  எப்படி? எப்படி? தோழி சொல்லச் சொல்ல ..... மிரக்கிள்!!!!

 காணாமப்போகணுமுன்னு கீழே விழுந்தது எப்படிச் சரியா புடவைப் பைக்குள் விழுந்துச்சுன்றது இந்த நிமிசம் வரை அதிசயமாத்தான் இருக்கு! சம்பவம் பற்றி இன்னொரு தோழியிடம் சொல்லி வியந்தபோது, நான் நல்லவள் என்பது உறுதியாச்சு:-))))

 "இதைத்தான் சூப்பர் ஸ்டார் அன்னிக்கே சொன்னார் - “கண்ணா, ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும் கடைசில கைவிட்டுடுவான்” அப்படின்னு. :))))))))))) "

 நெருங்கிய உறவினர், நண்பர்கள் இப்படி நேரில் போய் அழைக்கவேண்டியவர்களை அழைப்பதிலும், மின்மடல், அலைபேசின்னு அழைப்பு அனுப்புவதும், மாலை விருந்துக்கான மெனுவை முடிவு செய்வதிலும், துணிமணி வாங்க, தைக்கக் கொடுக்க நம்ம தையற்கடைக்கு போய்வரவுமுன்னு ஒரு மாதிரி பிஸி. இதுக்கிடையில் விழாவுக்கு நாலுநாட்கள் இருக்கும்போது மகள் நியூஸியில் இருந்து வந்திறங்கினாள்.

79 comments:

said...

ரசித்தேன். கல்யாணம் என்றால் சும்மாவா? அது எந்தக் கல்யாணமா இருந்தாலும்!

said...

you have taken 18 days to write this article.enna kalyana mayakkamaa?
i request gopalji to write an article.
kan niraintha manam niraintha vizha!
best wishes!

said...

சுவாரஸ்ய வர்ணனைகளுடன் விழா வர்ணனைகள் ஆரம்பம். கஷ்டப் பட்ட காசு கையை விட்டு எங்கும் போகாது என்பார்கள். இவ்வளவும் செய்த அந்தத் தோழியைப் பின்னர் 'இவர்தான் அவர்' என்று அறிமுகப் படுத்தப் போகிறீர்கள்தான் என்றாலும் இப்போதைக்கு சஸ்பென்ஸாகத்தான் இருக்கிறது!

said...

ஹையா! டீச்சர் அதுக்குள்ள இன்னொரு இந்தியா ட்ரிப், அதுல கல்யாணம் ஒண்ணு அதுலயும் அது உங்களோட ஸ்பெஷல் கல்யாணாமா!!! சூப்பர்! சஷ்டியப்தபூர்த்தி செய்து கொண்ட கோபால் சாரும் டீச்சரும் எங்களை ஆசிர்வதிக்க வேணும்.

இப்படிக்கு கொடி அன்ட் ரங்கு.

சீக்கிரம் எல்லா பதிவையும் எடுத்து விடுங்க பொறுமையே இல்லை!!

said...

புடவையும் ஃபோட்டோவும் அருமை, சந்தோஷத்துல சொல்ல விட்டுட்டேன்.

said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கிறது. தொடருங்கள்.

said...

நல்லவர்களுக்கு சோதனை வரும். உடனே தீர்ந்தும் போய்விடும்.
திருமணம் இப்படிநடக்கவேண்டும் என்று அழகான ப்ளான்கள்.
தம்பதிகளின் அடக்கம்,கடவுளின் கருணை,பெரியோர்களின் ஆஅசிகள் அனைத்தும் இந்தத் திருமணம் கண்கொள்ளாக் காட்சியாக நடந்தது.நேயுடு எப்பவும் உங்க பக்கம்தான்.துளசி.மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

said...

சிறப்பான பகிர்வு....

காலையில் மண்டபத்திற்கு வரமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் எனக்கு! மாலை வந்ததில் மகிழ்ச்சி....

தொடரட்டும் அனுபவங்களின் அணிவகுப்பு....

said...

வூட்டுக்காரருக்கு கல்யாணமா :-) உங்களுக்குன்னு வார்த்தை பிரயோகம் ஆப்புடுகிறதே :-))))))))

said...

நல்ல பதிவு

said...

அத்தச்சொல்லுங்க ராமலக்ஷ்மி.
துளசியோட குறும்புக்கு இது ஒரு சாம்பிள்.;)

said...

அச்சொ உஷாம்மா மாப்பு மாப்பு. ராமா மத்திரம் பார்த்தேன் ராமலக்ஷ்மினு நினைச்சுட்டேன்:)

said...

இம்புட்டு விஷயம் நடந்திருக்கா?

அந்த தோழி யாருன்னு எங்களுக்கு தெரியுமே?? இங்கேயே வந்து ஏற்கனவே பின்னூட்டம் போட்டுட்டு போயிருக்காங்க.
சரியா?

//
siva gnanamji(#18100882083107547329) said...

you have taken 18 days to write this article.enna kalyana mayakkamaa?//


அவங்க ரெண்டு பேரும் ஹனி மூன் போயிட்டு இப்ப தான் வீடு போய் சேர்ந்திருக்காங்க :)

said...

புது மனத் தம்பதிகளுக்கு 'செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று' இன்புற வாழ வாழ்த்துக்கள்.

தொலைந்து போன நகை கிடைத்தது உங்களுக்கு மட்டுமல்ல, படித்த எங்களுக்கும் பால் வார்த்தது!

said...

ஆரம்பிச்சாச்சா? பலே பலே!! இனிமே இந்த நேரத்துக்கு சரியா துளசி ரீவி போட்டு நெடுந்தொடர் பார்க்க வேண்டியதுதான்!! :)

said...

மணிவிழாவுக்கு பின்னே இத்தனௌ சுவாரஸ்யங்களா?பிரேஸ்லெட் காணாமல் போய் கிடைத்தது மிகவும் மகிழ்வுக்குறியது.ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும் கடைசில கைவிட்டுடுவான்” அப்படின்னு. :))))))))))) "//அதான் நடந்துட்டு இருக்கிறது.சுவார்ச்யமான அனுபவங்களை இன்னும் பகிருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.மீண்டும் வாழ்த்துக்கள்.

said...

siva gnanamji sema :))

\i request gopalji to write an article.// me too.. :)

said...

துளசி டீச்சர் ஈவண்ட் ஆர்கனைசரான அந்த நல்ல தோழி யாருன்றது எங்களுக்கு நல்லாவே தெரியும். அவஙகளோட அனபு மழையில நாங்களும் நனைஞ்சுட்டிருக்கோம்ல... உங்க அனுபவங்களை அழகா நாங்க பக்கத்துல இருந்து பாத்த மாதிரி உணர வெக்கறது உங்க எழுத்தின் தனி முத்திரை. பர்ச்சேஸிங்ல ஆரம்பிச்சிருக்கீங்க. கல்யாணமும் விருந்தும் நிறைவா நடந்து முடிஞ்சது வரைக்கும் ஒண்ணு விடாம எழுதுங்க. துளசிதளத்துக்கு தொடர்ந்து வந்து விடாம படிக்கறோம். சரியா?

said...

புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி ஜூப்பர். அது சரி,.. மாப்பிள்ளைக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்காமா?.. ;-)

வீட்டையும் கட்டிப்பார்த்துட்டீங்க, கல்யாணமும் பண்ணிப்பார்த்துட்டீங்க. இந்த ரெண்டுல எது சுலபமான விஷயமாத் தெரியுது?

சுவாரஸ்யமான ஆரம்பம்.

said...

மணிவிழா வாழ்த்துகள்!

said...

பாட்டி என்ன டென்சன்......நிதனம..நிதனமா....தலையும் புரியல....வாலும் புரியல.......


சும்மா சொல்ல கூடாது...ஒரு 10 தடவையாவது உங்க வெப்சைட்டுக்கு தெடி வந்துருப்பேன் பாட்டி........


தமிழ்நாடு எப்படி இருக்கு?உங்க பார்வையில்.../..

said...

நாங்க புய்ஸா கட்டுகிட்ட ஜோடிதானுங்க :)

said...

திருமணம் முடிஞ்ச கையோட ஆசி பெற்றவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கும் பெருமையாக இருக்கு.

said...

நாங்க தான் வந்திருந்தோமே !!

எதைப் பற்றி குறிப்பாகச் சொல்வது !
எல்லாமே சூபர் !!

அரங்கம் அழகு. அரங்கத்தே
கோலோச்சிய கோபாலும் அழகு.
திவ்வியமாய் அவர் இட்டிருந்த திருமண்ணும் அழகு.
பவ்வியமாய் பக்கத்திலமர்ந்த பத்தினி துளசியும் அழகு.

வேத ஒலி அழகு. அவ்வொலி இசைத்த‌
வேத விற்பன்னர் தம் சிரத்தையும் அழகு.

வருகை தந்த நண்பர்களை வரவேற்றதும் அழகு.
வந்த இளம் தோழியர் கானம் பாடியதும் அழகு.

முகமலர்ந்து விருந்துக்கு அழைத்ததும் அழகு.
முக்கனியும் முச்சுவையும் ஆஹா !! என்னே அழகு !!

இனி இதுபோலொரு திருமணம் இப்புவியில் உண்டெனின்
இன்னும் இருபது வருஷம் காப்பதும் அழகே.



சுப்பு ரத்தினம். .


said...

அன்பின் டீச்சர்,

ஒரு சந்தோஷமான நிகழ்வுக்கு என்னால் நேரடியா வர முடியலன்னாலும் உங்க பதிவைப் பார்க்கையில் கலந்துகிட்ட சந்தோஷமும் திருப்தியும் வருது.

அழகான, அருமையான ஜோடி. கண்டிப்பா சுத்திப் போடுங்க டீச்சர்.

உங்களுக்கும் கோபால் அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

said...

திருமணத்துக்கு தான் வரமுடியல..ஆனா தொடருக்கு சரியாக வந்திடுவோம்ல்ல ;))

said...

படம் அசத்தலா இருக்கும்மா. ஷாப்பிங் கலக்கலா ஆரம்பிச்சிருக்கு.....வளையல் திரும்ப கிடைத்ததில் எங்களுக்கும் நிம்மதி..

said...

மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் சதாபிஷேகம் காண்வும் வாழ்த்துகிறேன்.

said...

நல்வாழ்த்துகள்.

மகிழ்ச்சியுடன் தொடர்கின்றோம் இனிய நிகழ்சியின் வர்ணனைகளை.

படம் சூப்பர்.

said...

60 ஆ??? வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் மேடம்..சுவாரசியமான பதிவு. மிகவும் ரசித்துப்படித்தேன்.

said...

ஆஹா,

கண்டிப்பா வரணும்னு இருந்தேன். அம்ருதா பரிட்சையோட அயித்தானும் பரிட்சை எழுத பெங்களூர் போய்விட்டார். அதான் வரமுடியவில்லை.

கோபால் சார் நம்பரும் இவருடைய போனில் இல்லாமல் போனது இன்னொரு கொடுமை :)

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

said...

****வல்லிசிம்ஹன் said...

அச்சொ உஷாம்மா மாப்பு மாப்பு. ராமா மத்திரம் பார்த்தேன் ராமலக்ஷ்மினு நினைச்சுட்டேன்:)****

:-)))))

வல்லியம்மா!

என்னதான் நீங்க சரி செய்ய முயன்றாலும் ரெண்டு பேரிடமும் வகையா மாட்டிக்கிட்டீங்க (இல்லை டீச்சரையும் சேர்த்து மூனு பேரிடம்)!!! :))))

பாவம் நீங்க! அவங்க பெரிய மனசு வச்சாத்தான் உண்டு! :)))

said...

என்ன்வோ போங்க, டீச்சர், உங்களுக்கு திருமண வாழ்த்துச்சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கு! :))))

said...

மணிவிழாத் தம்பதியர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

said...

நல்ல வர்ணனை... வாழ்த்துக்கள்...

said...

காலையில் இருந்து நிகழ்ச்சி ஆரம்பம் என்பதை அங்கே வந்துதான் புரிந்து கொண்டேன். பகலில் ச்சும்மா தான் இருந்தேன். வந்துருக்கலாம் என்று நினைத்தேன்.

said...

நான் தான் உங்க வைபவத்துக்கு வரணும்னே ஒரு மாசம் முன்னாடியே ரெடி ஆகிட்டேனே! உங்களால எல்லாரையும் சந்திக்கவும் முடிஞ்சது. காலைல மேடை வாத்தியார்களிடம்(சாஸ்த்ரிகளிடம்) அனுமதி கேட்டு நாளாம் நாளாம் பாட்டையும் பாடி(முன் எச்சரிக்கையா வாசக்கதவை மூடிட்டு::) ஒரு கலக்கு கலக்கினோம்! மற்றதை நீங்க எழுதுங்க அதான் சுவாரஸ்யம்!

said...

முன்னாடி அனுப்பின பின்னூட்டம் போச்சா இல்ல வெள்ளைக்காக்கா தூக்கிட்டுப்போயிடிச்சா தெரில்ல:) ஆனாலும் உங்கவிழால என்(ங்களை)னைப்பாடவிட்டதுக்கும் வாழ்த்து மடல் வாசிக்கவிட்டதுக்கும் நன்றியோ நன்றி துள்சி மேடம்!! we enjoyed a lot!

Anonymous said...

அருமை. சுவையான பதிவு ... வாழ்த்துக்கள்

said...

@வருண்,
நான் யார்கிட்டயும் மாட்டிகலையே.

ரெண்டு பேரும் என் நெருங்கிய தோழிகள் . என் குழப்பப் பார்வை அவர்களுக்கு த் தெரியுமே:)

said...

அப்படிச் சொல்லுங்க வல்லிம்மா. ஒரு அவசரத்தில் இட்ட பின்னூட்டம். தெரியாதா எங்களுக்கு:)?

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி.

அதானே.... கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சும்மா சொல்லி வச்சுருக்காங்க!!!

said...

வாங்க சிஜி.

மூணு வார அலைச்சலுக்குப்பிறகு நாடு திரும்பி ஒரு வாரம் உடல்நலக்குறைவு>(

பிடுங்கல் தாங்காம ஹனிமூனுக்குத் தனியாப்போயிட்டார் கோபால். வந்தவுடன் சொல்றேன் நீங்க எழுதச் சொன்னீங்கன்னு.

ஆனாலும் மனுஷர்.... கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டார்ன்னா பாருங்க!!!!

விழாவுக்கு வந்து எங்களை ஆசீர்வதிச்சதுக்கு மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க ஸ்ரீராம்.

தோழி உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவரே:-))))

said...

வாங்க பொற்கொடி.

எல்லாம் வெள்ளைக்கார ஷ்டைலுதான். எங்க கல்யாணத்துக்கு நாங்களே பணம் சேர்த்து நடத்தி முடிச்சுக்க இத்தனை வருசமாயிருச்சு:-))))

கொடிக்கும் ரங்க்ஸ்க்கும் இனிய ஆசிகள்.

கனம் குறைஞ்ச (யூஸ் அண்ட் த்ரோ) பட்டுப்புடவைகள் காலமா இருக்குப்பா இப்போ:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நீங்கள் எல்லோரும் தொடர்கின்றீர்கள் என்பதே எனக்கு பக்க பலம்.

said...

வாங்க வல்லி.

நியாயமாப் பார்த்தால் எல்லாப் புகழும் ஈவண்ட் ஆர்கனைஸருக்குத்தான்ப்பா!

பெரியோர்கள் ஆசி மனதுக்கு நிறைவாக இருந்துச்சு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தலைநகரின் சார்பில் மாலை விருந்தில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.

நீங்க வர்றீங்கன்னு இன்ப அதிர்ச்சி தந்துட்டார் மின்னல் கணேஷ்.

said...

வாங்க உஷா.

ஏங்க.... உண்மையைச் சொல்லக்கூடாதுங்களா? :-))))))

said...

வாங்க இந்த்ரயவனம் (சரியா?)

வருகைக்கு நன்றி.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!

தொடர்வருகை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
துளசி

said...

வல்லி,

ஙே.........

ஓ..... ராமா...

அட ராமா......

said...

வாங்க மோகன் குமார்.

எப்பவும் பிஹைண்ட் த சீன்ஸ் தான் விசேஷம் இல்லையா?:-))))

said...

வாங்க ரஞ்சனி.

உங்கள் வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இப்பக்கூட தொலைஞ்சு போன நகை,திரும்பக் கிடைச்சதை நம்பமுடியலைன்னா பாருங்க.

said...

வாங்க கொத்ஸ்.

வாரம் மூன்றே மூன்று ஒளி/ஒலி பரப்பு!!!!

காணத்தவறாதீர்கள்!!!

said...

வாங்க ஸாதிகா.

தெரிந்த பெயர்களையும் தெரியாத முகங்களையும் சந்திக்க எனக்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

நீங்கள் எல்லோரும் கலந்து சிறப்பித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க கயலு.

அதை சிஜியே அவரிடம் நேரில் சொல்லி இருக்கலாம்.

இப்பெல்லாம் கோபால் என் பேச்சைக் கேக்கறதே இல்லைப்பா.

கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டார்:-)))

said...

வாங்க பாலகணேஷ்.

சிரமம் பார்க்காமல் வந்து தனியா பதிவர் சந்திப்பு ஒன்னில் கலந்துக்கிட்டதுக்கு(ம்) நன்றி.

கூடியவரை எழுத முயற்சிக்கிறேன்.

(உசுப்பேத்தி.... உசுப்பேத்தி.....)

said...

வாங்க அமைதிச்சாரல்.

சந்தேகம் என்ன? வீட்டைக் கட்டுவதுதான் சுலபம்:-))))

முப்பத்தியெட்டு வருசம் பழகிப்பார்த்துட்டு பொண்ணு பிடிக்கலைன்னு நாக்கு மேல் பல் போடமுடியுமோ!!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

said...

வாங்க பேரன் பாபு.

மணிவிழா நிறைய பேரன் பேத்திகளை உருவாக்கிருச்சு என்றதே பெரிய டென்ஷன்!

சதாபிஷேக செலவு முழுசும் நீங்கதான் . ஓக்கே?

said...

வாங்க புதுகை அப்துல்லா.

நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க:-))))

said...

வாங்க கோவியாரே.

உங்கள் குடும்பத்தை மீண்டும் சந்திச்சது எங்களுக்கும் மகிழ்ச்சியாத்தான் இருக்கு.

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

தங்கள் கவிதை அழகோ அழகு!

தங்கள் வருகை(யும்) அழகோ அழகு!

அதிலும் தம்பதியராக மீனாட்சி அக்காவோடு வந்து ஆசி வழங்கியது இன்னும் அழகோ அழகு!

எதைச் சொல்ல எதை விட!!!

said...

வாங்க ரிஷான்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எல்லோராலும் எங்கெப்பா வரமுடியுது?

பல சமயங்களில் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்த வேண்டி இருக்கு.

உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

said...

வாங்க கோபி.

//ஆனா தொடருக்கு சரியாக வந்திடுவோம்ல்ல ;))//


ஆஹா..... இதுக்கே போனஸ் மார்க் பத்து கொடுக்கணும் போல இருக்கே:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

உங்களை சந்திக்க முடிஞ்சதில் எனக்குப் பரம சந்தோஷம்.

said...

வாங்க சந்திரவம்சம்.

அப்ப இன்னும் 20 வருசம் பதிவு எழுதணுமா!!!!!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

வாழ்த்துகளுக்கும், தொடர் வருகைக்கும், தொடர்வதற்கும் இனிய நன்றிப்பா.

said...

வாங்க ராம்வி.

வாழ்த்த வயசெதுக்கு? மனம் போதுமே!!!!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

உங்க அன்பான சொற்களே ஆயிரம் வருகைக்குச் சமம்!!!

ஏர்டெல் நம்ம நம்பரையெல்லாம் வேற யாருக்கோ தூக்கி தாரை வார்த்துட்டான்ப்பா:(

ஆறுமாசம் பயனில் இல்லைன்னா எல்லாமே அம்பேலாம்!!!!

said...

வாங்க வருண்.

வல்லிம்மாவைக் கலாய்க்க மட்டும் வெட்கம் இல்லையா? :-)))))

said...

வாங்க பாசமலர்.

வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்.

said...

வாங்க ஜோதிஜி.

காலையிலேயே சென்னைக்கு வந்துட்டீங்களா?

பகல் ஒன்னரை வரை மண்டபத்தில்தான் இருந்தோம்.

said...

வாங்க ஷைலூ.

கலகலப்பான நாளா ஆக்குனதில் உங்கள் பங்கு அதிகம். அதுக்காக ஒரு ஸ்பெஷல் நன்றிப்பா.

எங்கூர்லே வெள்ளைக்காக்காதான் இருக்குதுன்னு எப்படி சரியாக் கண்டுபிடிச்சீங்க:-))

said...

வாங்க இக்பால் செல்வன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் இனிய நன்றிகள்.

said...

டீச்சர் கல்யாண வைபோகமே
கோபால் சார் கல்யாண வைபோகமே
வாழ்க வளர்க நீடு வாழ்க பீடு வாழ்க
முருகப் பெருமான் எல்லா நலன்களையும் வளங்களையும் நல்ல உடல்நடத்தையும் வழங்கட்டும்!

said...

வாங்க ஜீரா.

100 ஆயுசு.

கவிதாயினி உங்களைச் சந்திச்ச மகிழ்ச்சியை இப்பதான் சொல்லியிருந்தாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்க முருகன் அருளால் உடல் நலமும் நடத்தையும் நன்றாகவே உள்ளது.

said...

திருமண விவரங்கள் சொல்லிய விதம் அழகு.
வளையல் கிடைத்தது மகிழ்ச்சி.

மெதுவாக தொடருகிறேன் உங்கள் பதிவை.