Wednesday, October 10, 2012

பெரியவர்கள் வந்தால் பெருமாளே வந்ததைப்போல்.......

எங்க வீட்டு வேளுக்குடின்ற பட்டத்தை அடைஞ்சுருக்கும் எங்க பெரியத்தை வந்தவுடன் சபைக்கே ஒரு தெய்வீகக்களை வந்துருச்சு. எந்தக் கோவிலைப் பற்றிக் கேட்டாலும் அங்குள்ள தாயார், பெருமாள் பெயர்களுடன் கோவில் சரித்திரம், அதன் விசேஷம் எல்லாம் நாக்கு நுனியில் வச்சுருப்பாங்க. வயசு வெறும் எம்பத்தி மூணுதான்.

 அடுத்து திருமதி &; திரு சுந்தரராமன் வருகை. எனக்கு (இன்னொரு) அம்மா &; அப்பா. என் நெருங்கிய தோழி சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் பெற்றோர். சதாபிஷேகம் முடிச்ச அன்புள்ளங்கள்.

 நம்ம பூனா எபிஸோடில் என்னை மகளா ஏற்றுக்கொண்ட கும்பகோணம் கோமளா மாமி & சாரி மாமா சார்பில் அவர்களின் மகன் பாபுவும் அவர் மனைவி ரேணுவும் மறுநாள் பத்ரிநாத் பயணம் புறப்படும் களேபரத்தின் இடையிலும் வருகை தந்தனர்.


நம்ம ஐயாக்கள் பாரதி மணி, சிவஞானம்ஜி, சுப்புரத்தினம், துளசியின் தேசிகியின் சார்பில் அவர் பெற்றோர் ஆகியோரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

நம்ம வகுப்புத்தலைவர் கொத்ஸின் சார்பாக அவருடைய அண்ணன் (எல் பி ரோடில் அரிக்காமேடு புகழ்) & அண்ணியும், அஸ்ட்ராலியா விஜயா அக்கா சார்பில் ப்ரமீளா அவர்களும், பதிவர்கள் சார்பில் மின்னல்வரிகள் கணேஷ், நம்ம லக்கிலுக், நம்ம உண்மைத்தமிழன், நாச்சியார் வல்லி சிம்ஹன், மலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், மரத்தடி மக்கள்ஸ் சார்பில் மகளிர் குழுவினர் (இவர்கள் பதிவர்களுமாவர்) அலைகள் அருணா ஸ்ரீநிவாசன், ஒலிக்கும் கணங்கள் நிர்மலா நிவேதிதா, விழா விபரம் தெரிஞ்சவுடன் பத்து நாட்கள் என்னோடவே இருக்கணுமுன்னு ராஜையிலிருந்து சென்னைக்கு வந்திருந்த கவிதாயினி காற்றுவெளி மதுமிதா, விழாவைப் பற்றிய அழைப்பு அனுப்பியவுடன், டிக்கெட் புக் செஞ்சுட்டேன்னு முதல் அறிவிப்பு செய்த மை.பா புகழ் திருவரங்கப்ரியா பெண்களூரு எண்ணிய முடிதல் வேண்டும் ஷைலஜா, பதிவுல வாசகர் சார்பில் சுபாஷிணி ஆகியோரும் (முடிந்தவரை குடும்பத்தினருடன்) கலந்துகொண்டு பிஸியாக இருந்தனர்.


 விருந்தினரை வரவேற்கும் பொறுப்பில் மகளிரணி இருந்ததால் விட்டுப்போன பெயர்களுக்கு அவர்களே பொறுப்பு:-)))))) (அப்பாடா.... தப்பிச்சேன்)

 ஹாலின் ஒரு பக்கம் மேடை. முன்புறம் ஒரு ஏழெட்டுவரிசை இருக்கைகள். அதுக்குப்பின் ரெண்டு வரிசையா மேஜைகள் போட்டு டைனிங் ப்ளேஸ். அளவான சின்ன ஹாலாக இருந்ததால் நடப்புகளை ஒரு பார்வை வீச்சில் கவனிச்சுக்க முடிஞ்சது.

 எங்கள் (நான் &கோபால்) புகுந்த வீட்டினரும் பிறந்த வீட்டினரும் வந்து விழாவை சிறப்பிச்சுக்கிட்டே இருந்தாங்க. இவுங்களுடைய உதவியுடன் நம்ம ஈவண்ட் ஆர்கனைஸர் பம்பரமாச் சுத்தி எதையும் விட்டுடாம வாத்தியார் ஸ்வாமிகளின் கட்டளைக்கெல்லாம் தலையாட்டியபடியே இருந்தாங்க. என் கண்ணே பட்டுருக்கும் !

 பெரியவர்களைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு சமாச்சாரம் நினைவுக்கு வருது. மகளை அழைச்சுக்கிட்டு வர சென்னை விமான நிலையம் போயிருந்தப்ப, ராச்சாப்பாட்டுக்கு அங்கே இருந்த ஃபுட்கோர்ட்டில் (சங்கீதா) தோசை வாங்கி உள்ளே தள்ளும்போது தெரிஞ்சமுகமா ஒரு பெரியவர் வந்தார். பழகுன முகம். நம்ம சாலமன் பாப்பையா. அவர்கிட்டே போய் பேசணுமுன்னு ஆசை. வழக்கம்போல் கோபால் 'அதெல்லாம் வேணாம். சாப்பிடும்போது தொந்திரவு செய்யக்கூடாது. அவர்கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. அவுங்க வேலையைக் கெடுக்காதே' ன்னார். 

சரின்னு தலையாட்டிட்டு நான் போய்  'ஐயா வணக்கம்' ன்னு சொன்னதும் அவர் ரொம்ப மகிழ்ச்சியோடு நம்மைப்பற்றி விசாரிச்சார். நியூஸியில் இருந்து நாம் ஆத்தும் தமிழ்ச்சேவையைப் பற்றிக் கோடி காமிச்சதும் அவருக்கு இன்னும் மகிழ்ச்சியாப் போயிருச்சு. சென்னைக்கு வந்த விஷயத்தைச் சொல்லி அவரிடமும் ஆசி வாங்கிக்கிட்டேன். 

 சமயச்சடங்குகள் பாதி நடந்து முடிஞ்ச வேளையில் (என் முழங்கால் பிரச்சனையை ஏற்கெனவே வாத்தியார் ஸ்வாமிகளுடன் விவாதிச்சு இருந்ததால்....) நீங்க ரெண்டு பேரும் மேடையில் ஒரு பக்கம் நாற்காலிகளில் உக்கார்ந்துக்கலாம், இந்த ஹோமங்கள் முடியும்வரைன்னு அனுமதி கிடைச்சதால் எழுந்து வந்தோம். உங்ககிட்டே பவர் ஆஃப் அட்டர்னி வாங்கி உங்க சார்பில் நடத்தறோமுன்னு சொல்லி இருந்தார். பெரியத்தைக்கு இது புரிபடலை. அதெல்லாம் மணையை விட்டு எழுந்திரிக்கக்கூடாது. போய் மறுபடி உக்காருங்கன்னு எங்களை விரட்டிக்கிட்டே மந்திரங்கள் சரியாச் சொல்றாங்களான்னு கவனிச்சுக்கிட்டே இருந்தாங்க.

 நிகழ்ச்சிகளை படமாக்க மட்டுமே ஏற்பாடு செஞ்சுருந்தேன். வீடியோ வேண்டாம். முகத்தில் பளீரெனெ பாயும் ஒளி வெள்ளத்தில் வீடியோ கெமெரா நம்மைக் குறி பார்க்கும்போது நம்மில் பலரும் என்ன செய்யறதுன்னு திகைச்சு ஒளிவெள்ளம் நம்மை விட்டு அகலும்வரை அசட்டுத்தனமா திருதிருன்னு முழிக்கவேண்டி இருப்பதைப் பல நிகழ்ச்சிகளிலும் பார்த்து அனுபவிச்ச காரணத்தால் இந்த முடிவு. பதிவுலக நண்பர் உமாநாத் செல்வன் (விழியனின் ) பரிந்துரையில் ஜகதீஷ் (Jasan Pictures)என்பவருக்கு படம் எடுக்கும் பணியைக் கொடுத்திருந்தேன். தன்னுடைய குழுவினர் டில்லிபாபு, விக்ரம் ஆகியோருடன் சரியான நேரத்திற்கு வந்து படங்களை சுட்டுக் கொண்டிருந்தார். 

மகளும் அவளுடைய சாம்ஸங் கேலக்ஸியில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள், அவளை மேடைக்கு அழைக்கும்வரை. எனக்குத்தான் என் கெமெரா கையில் இல்லாம என்னவோ கை ஒடைஞ்சமாதிரி இருந்துச்சு:-)

 மண்டபம் வெறும் அரைநாளுக்கு மட்டுமே புக் செய்திருந்ததால் அபிஷேகம் வேண்டாமுன்னு முன்னாடியே தீர்மானிச்சு இருந்தேன். ஈர ப்ளவுஸைக் கழட்டிப்போட எனக்கு நாலைஞ்சு மணி நேரம் வேணும்.

 நம்ம சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் இப்பெல்லாம் ரொம்பவே ஃப்ளெக்ஸிபிள். வேண்டாம் என்று (நாம்) நினைப்பதைச் சொல்லி அதுக்கு ஈடா வேறொன்னை நடத்திக்கலாம்.

 நடுவில் வைக்கும் கும்பத்துக்கு செப்புக்குடம் மீடியம் சைஸில் வேணுமாம். இது நமக்கே திரும்பக் கிடைக்கும் என்பதால் கொண்டு போக வாகான மீடியம் சைஸ் (??) தேடித்தேடி கிடைக்கலை. பேசாம வெள்ளியிலே வாங்கலாமுன்னு சொல்லி வாய் மூடுமுன் கோபால் உடம்பில் ஒரு கிடுகிடு! அச்சச்சோ.... கல்யாண வேளையில் அதிர்ச்சியும் காய்ச்சலும் தேவையான்னு தங்கக்குடமே வாங்கிக்க முடிவு செஞ்சுட்டேன்.

பாண்டி பஸார் பொன்னி பாத்திரக்கடையில் அஷ்டலக்ஷ்மி டிஸைனில் தங்கம்(போல) கிடைச்சது. பக்கத்துலே இருக்கும் கைராசி கட்பீஸ் கடைக்கு நவகிரக கலசங்களுக்கான ஒரு மீட்டர் அளவு துணிகள் வாங்கலாமுன்னு நுழைஞ்சு, லிஸ்ட்டை எடுத்துப் பார்த்து சிகப்பில் ரெண்டுன்னு ஆரம்பிச்சு வாய் மூடலை, கடைக்காரத்தம்பி வெள்ளையில் ரெண்டு, பச்சையில் ஒன்னு நீலத்தில் ஒன்னு, மல்ட்டிகலர் ஒன்னுன்னு சொல்லிக்கிட்டே பரபரன்னு தாமாய் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டார். அடடா.... எள் என்றால் இப்படி எண்ணெயா இருக்காரேன்னு பெயர் கேட்டால் நல்லதம்பியாம்!

ஷார்ப் அண்ட் ஸ்மார்ட் தம்பி.  பொன்னி பாத்திரக்கடையிலும் இரண்டு  சின்னப்பெண்கள் பம்பரமாச் சுத்தி நமக்கு வேணுங்கறதை  மகிச்சியோடு எடுத்துக் கொடுத்தாங்க.  எனக்கென்னமோ .......   பெரிய கடைகளில் வேலை செய்யும்  சின்னப்பணியாட்களைவிட  சின்னக் கடையில் விற்பனையாளர்கள்  முகமலர்ச்சியுடன் வேலை செஞ்சதுபோல் படுது.

 கும்பத்து கங்கையை பெரியவர்கள் மாவிலையால் கோரி நம் தலைகள் மீது தெளிச்சாலே போதும் தானே? அதன்படியே ஆச்சு.
சின்ன அண்ணாமலை சமாச்சாரம் வேற நம்ம காதுகளுக்கு எட்டி இருந்துச்சே:( 
மங்கலநாண் பூட்ட கோபால் தயாரான நிமிசம் சின்னதா ஒரு தடங்கல். வேர்வை வெள்ளம் பெருக ஆரம்பிச்சது. (பவர் கட்டாம். ஏஸி நின்னு போச்சு) வில்லனா இருந்தது ஆடியோ. கெட்டிமேளம் கொட்ட அதுக்கு என்னமோ தயக்கம். உறங்கிக்கிடந்த அதை உசுப்பிவிட்டு உயிரூட்டி....... தாலி கட்டும்போது (தேவர்கள்) பூமாரி பொழிந்தனர்!
நாளாம் நாளாம் திருநாளாம் துளசிக்கும் கோபாலுக்கும் மணநாளாம்.... இசைக்குயில்கள் எல்லாம் ஒருசேர பாட ஆரம்பிச்சதும் நானுமே திகைச்சுப் போய்ப் பார்த்தேன்!!!!!

ஷைலூ, இது வழக்கமா நீங்க கல்யாணங்களில் பாடும் பாட்டுன்னு தெரியாமப் போச்சேப்பா!!!!


காலை நிகழ்ச்சிகள்  எல்லாம் பகல் விருந்தோடு நன்றாகவே நடந்து முடிஞ்சது. உண்மையைச் சொன்னால் இத்தனை பேர் வந்து ஆசி வழங்குவார்கள் என்று நான் நினைக்கலை.  சுமார் ஒன்னரை மணி அளவில் ஹாலை விட்டுக் கிளம்பினோம்.

எல்லாப்பெருமையும் நம்ம ஈவண்ட் ஆர்கனைஸருக்குத்தான் போய்ச்சேரணும்.  அருமையான ஏற்பாடுகளைச் செஞ்சுருந்த  நம்ம வல்லி சிம்ஹனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இனி யாருக்காவது அறுபதாம் கலியாணம் நடத்தணுமுன்னா  என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.  என் கைவசம் பக்காவான  வைதீக லிஸ்ட்டும் நடத்திக்கொடுக்க வல்லியம்மாவும்  ரெடி:-))))


55 comments:

said...

ரீச்சர்,

தொடரும் போட விட்டுப் போச்சு!!

said...

நிகழ்ச்சி நன்றாக நடந்ததற்குக் காரணம் உங்கள் இருவரின் நல்ல மனமும் தாராள மனப்பான்மையும் தான் துளசி. எனக்கு 15%பொறுப்பு தான்.
மங்கலமாக நிறைவேறியது பெரியவர்கள் இறைவன் ஆசிகளே காரணம்.நன்றிமா.

said...

நேரில் பார்த்த நிறைவைத் தந்தது பகிர்வு. வல்லிம்மாவுக்குப் பாராட்டுகள்.

said...

பகிர்வின் மூலம் பல பேரை பார்க்க முடிந்தது....

ரொம்ப நன்றிங்க...

said...

அருமையான நிறைவான ம்மணிவிழா வாழ்த்துகள் 1

said...

துளசிம்மா,படங்களை பார்க்கவும் பகிர்வை வாசிக்கவும் பரவசமாக இருந்தது,

said...

நாளாம் நாளாம் பாட்டு வரிகள் மாற்றிப்பாடினாலும் அந்த வாழ்த்துக்கவிதை துள்சி-கோபால் ஸ்பெஷல்! என் கையெழுத்திலேயே பேனால இங்குக்குப் பதிலா அன்பைக்கொட்டி எழுதினேன் துள்சி மேடம்!

said...

//வல்லிசிம்ஹன்said...
நிகழ்ச்சி நன்றாக நடந்ததற்குக் காரணம் உங்கள் இருவரின் நல்ல மனமும் தாராள மனப்பான்மையும் தான் துளசி. எனக்கு 15%பொறுப்பு தான்.
.

10/10/2012 2:19 PM
//// இந்த வல்லிமாவின் தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லை. அன்னிக்கு நானும் பார்த்தேன் சும்மா 15%ன்னு சொல்லக்கூடாது துள்சிமேடம் சொல்றதுதான் சரி. ஆனா உங்க இருவரின் நல்ல உள்ளங்களின் சங்கமத்தில் அனைத்தும் சிறப்பாக அமைந்ததும் இறைவன் அருள்!

said...

நேரில் கலந்துக்கிட்ட நிறைவு. வல்லிம்மாவுக்குப் பாராட்டுகள்.

இன்னும் தொடரும்தானே???

said...

ஓ அவங்க இவங்க தானா..:))

\\எங்கள் (நான் &கோபால்) புகுந்த வீட்டினரும் // சூப்பரா இருக்கே இது..:)

said...



//நிகழ்ச்சி நன்றாக நடந்ததற்குக் காரணம் உங்கள் இருவரின் நல்ல மனமும் தாராள மனப்பான்மையும் தான் துளசி. எனக்கு 15%பொறுப்பு தான்.
மங்கலமாக நிறைவேறியது பெரியவர்கள் இறைவன் ஆசிகளே காரணம்.//

வல்லியம்மா ஒரு வாக்கியம் சொன்னா நாம எல்லாருமே
ஒரு நூறு வாக்கியம் சொன்னாற்போல.

இது போல ஒரு தோழி கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்

இது போல தோழி, துளசிக்குக் கிடைக்கவேண்டும் எனின்
கோபாலு கொடுத்து வைத்தவர் என்று தான் சொல்லவேண்டும்

அந்த கோபாலு கொடுத்து வைத்தவர் என்றால்,
அது அந்த கோவிந்தன் காட்டிய அருள் என்று தான் சொல்லவேண்டும்.

கோவிந்தா ! கோவிந்தா.

ஓடி வந்து எனக்கு உன் தரிசனம் தா.

[im]http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/10/blog-post_500.html[/im]

சுப்பு ரத்தினம்.

http://arthamullavalaipathivugal.blogspot.com



said...

நிகழ்ச்சிகளை படங்களோட உங்க எழுத்தில மறுபடியும் மனசுல பாக்க முடிஞ்சது. வல்லிமா என்னதான் தன்னடக்கமா சொல்லிகிட்டாலும அவங்க எல்லாரையும் கவனிச்சுட்ட பாங்கு மறக்க முடியுமா? ஆனா அவங்க சொன்ன வார்த்தைகள் மிகச் சரி. நீங்க + கோபால் சாரோட தங்க மனங்கள்தான் நிகழ்ச்சி சிறக்கக் காரணம் டீச்சர்.

said...

படங்கள் எல்லாம் நேரில் நிகழ்ச்சியை பார்த்த உணர்வைத் தந்ததும்மா.

//முகத்தில் பளீரெனெ பாயும் ஒளி வெள்ளத்தில் வீடியோ கெமெரா நம்மைக் குறி பார்க்கும்போது நம்மில் பலரும் என்ன செய்யறதுன்னு திகைச்சு ஒளிவெள்ளம் நம்மை விட்டு அகலும்வரை அசட்டுத்தனமா திருதிருன்னு முழிக்கவேண்டி இருப்பதைப் பல நிகழ்ச்சிகளிலும் பார்த்து அனுபவிச்ச காரணத்தால்//

இது நிசர்சன உண்மை. நல்ல முடிவு தான்.

வல்லிம்மாவுக்கு பாராட்டுகள். தொலைபேசியில் பேசும் போது என்ன ஒரு ஆசையா பேசறாங்க....என்னடா ராஜா எப்படியிருக்க என்று.. நல்ல அன்பான மனசு.

said...

அருமையான வர்ணனைகளுடன் நிகழ்ச்சியைப் பார்த்த திருப்தி வருமளவு வர்ணித்திருக்கிறீர்கள். ஈவன்ட் ஆர்கனைசர் யாரென்று நான் யூகித்திருந்தது சரிதான் என்று தெரிந்து கொண்டேன்! போதாக் குறைக்கு மோகன் குமார் வேறு போன பதிவிலேயே 'டிப்பி'யிருந்தார்! வல்லிம்மாவுக்குப் பாராட்டுகள். அவர் அடக்கமான பதிலும் பாராட்டத் தகுந்தது.

said...

காலை நிகழ்ச்சிக்கு வர முடியாத குறையை இந்த பதிவும் படங்களும் போக்கியது பூ மாறி பொழியும் படம் அமர்க்களம்

said...

வாழ்த்துக்கள் அக்கா- கோபால் மாமா....வணங்குகிறோம்!! வல்லிம்மாவையும் பார்த்ததில் சந்தோஷம்..விழா மிக சிறப்பாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி...

அப்புறம் விருந்து லிஸ்ட் சொல்லவேயில்லையேக்கா...

said...

ஆகா. வல்லியம்மா தான் எல்லா ஏற்பாட்டையும் கவனித்துக் கொண்டாரா? நீங்க எழுதியிருக்கிறதையும் மற்ற பதிவுலக நண்பர்கள் எழுதியிருக்கிறதெல்லாத்தையும் படிச்சா விழா ரொம்ப சிறப்பா நடந்திருக்கு; ரொம்ப நல்லா வல்லியம்மா நடத்தி வச்சிருக்காங்கன்னு தெரியுது அக்கா. அருமை.

வந்து கலந்துக்க முடியலைன்னு இருக்கிற வருத்தம் படங்களையும் பதிவுகளையும் படிச்ச பிறகு கொஞ்சம் குறைஞ்சிருச்சு. மீண்டும் வாழ்த்துகள் அக்கா. இன்னும் ஓர் நூற்றாண்டிரும்ன்னு பெரியவங்க வாழ்த்துறதையே சொல்லி தம்பியும் வாழ்த்திக்கிறேன்.

said...

அழகு. அருமை. பெரியோர்களுக்கு மேலும் பெரியோர்களின் ஆசிகள் அருமை. வாழ்க வளர்க.

தவிர்க்க முடியாத காரணங்களால் காலையில் நடந்த சடங்குகளுக்கு வர முடியவில்லை. மாலையில் வந்து பதிவர் பெருமக்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

said...

காலை நிகழ்ச்சிக்கு வராத வருத்தத்தினை ஓரளவு போக்கியது உங்களது பகிர்வு....

வல்லிம்மா - சிம்ப்ளி க்ரேட்... தில்லி திரும்பும் முன் அவரைச் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி....

said...

வாழ்த்துக்கள்.

said...

Hello Teacher,

Hope everything went well...i have missed so much.as usual i am very lateee for the class.

said...

மனமார்ந்த வாழ்த்துகள் துள்சிம்மா. வாழ்த்த வயதில்லைன்னு அன்னிக்கு வணங்கியாச்ச்ச்ச்ச்:)

மறுபடியும் அந்த இனிய நாளை கண்முன்னே கொண்டு வந்தீங்க. பல வருடங்கள் சந்திக்காதவங்களையும் அன்று சந்தித்த மகிழ்ச்சி இனிக்கிறது துள்சி.

said...

வல்லிமாதான் ஈவண்ட் ஆர்கனைஸர் என்று தெரிந்தபோது, ஒரு சின்ன .... அத எப்பிடி சொல்றது... அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்னா... அல்லது இந்தப் பூனையும்.... என்றா!!! :-)))))

விழா சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி.

said...

ஜீரா......

ஜீராவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

said...

நேரில் பாத்த மாதிரி இருக்கு,படங்களுடன் உங்க வர்ணனை..மிக்க நன்றி.

said...

அன்பு ஹுசைனம்மா வெளித்தோற்றமோ,பதிவில் வெளிப்படுத்தும் எண்ணங்களோ மட்டும் ஒருவரை உருவகப் படுத்தாது.:)
வாழ்வில் எத்தனையோ அனுபவங்கள் நம்மைப் பதப் படுத்துகின்றன.
அதில் ஒரு முகம் இந்த ஆர்கனைசர்.
ஃப்ரொஃபெஷனல் பட்டம் இல்லை:)ச்சும்மா கொடுக்கப் பட்ட பட்டம்.

said...

ஆகா!...நானும் நிறைய பாக்கியம் செய்திருக்கிறேன் இதை வாசிக்க. மனமார்ந்த வாழ்த்து. நேரில் பார்த்தது போல இருந்தது சகோதரி. அழகாக எழுதியிருந்தீர்கள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

said...

வாங்க கொத்ஸ்.

அடிவாசிப்புதானா?

செஞ்சுருவொம்:-)

said...

வாங்க வல்லி.

பெருந்தன்மையான பதில்.

வேறு என்ன உங்களிடமிருந்து வருமாம்!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பாராட்டுகளுக்கு வல்லிம்மா சார்பில் என் நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அடுத்த பதிவில் இன்னும் சிலரைக்கூடுதலாகப் பார்க்கும் வாய்ப்புள்ளது:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு எங்கள் இனிய நன்றி.

said...

வாங்க ஸாதிகா.

உங்களை நேரில் சந்தித்தது இன்னுமோர் இனிய அனுபவம்.

said...

வாங்க ஷைலூ.

அளவிடமுடியாத உங்கள் அன்பை முழுசுமா அளந்துட்டேன்:-))))

சிரமம் பாராமல் நேரில் வந்து சிறப்பித்தீர்கள்.

நன்றி சொல்ல சொற்கள் போதுமானதாக இல்லைப்பா!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

தொடரணுமுன்னா .... தொடரலாம்தான்:-)))))

said...

வாங்க கயலு.

இருவருக்குமான பொது நீதி அது:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

பெரியவங்க சொன்னால் .... அது பெருமாளே சொன்ன மாதிரி!!!!!

மீனாட்சி அக்காவோடு நேரில் வந்து வாழ்த்திய உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன்.

'துளசிக்குள் தேடி எடுக்கும்படி ஒரு வேணுகோபாலன் ' ஐடியா சூப்பர்!!!!

said...

வாங்க பால கணேஷ்.

வல்லிமாவின் உபசரிப்பும் இனிய சொற்களும் விழாவுக்கு இன்னும் சிறப்பு சேர்த்தன என்பதே உண்மை!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

குரலில் கூட அன்பை வெள்ளமா வழியவிடும் நற்பண்பு உள்ளவங்க அவுங்க.

இதை முழுசும் அனுபவிக்க நமக்குக் கொடுத்து வச்சுருக்கு:-)

said...

வாங்க ஸ்ரீராம்.

சரியாச் சொன்னீங்க!

டிப்ஸ்: இன்றைய பதிவில் ஒரு மினி பதிவர் மாநாடு இருக்கு:-)

said...

வாங்க மோகன் குமார்.

எனக்குமே அந்தப்படம் ரொம்பப் பிடிச்சுருக்கு.

வேலைநாளாக அமைஞ்சுட்டதால் காலை நிகழ்வுக்கு வர முடியாமல் போனதை புரிஞ்சுக்க முடிஞ்சது.

said...

வாங்க மேனகா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

போனபதிவில் விருந்து லிஸ்ட் க்ளிக் செஞ்சு போட்டுருந்தேனேப்பா.

ருசி அருமைன்னு சிலர் கேட்டரர் கண்ணனிடம் தொடர்பு எண் வாங்கிட்டுப் போனாங்கன்னு சேதி வந்துச்சு!

said...

வாங்க குமரன் தம்பி.

பிறந்த வீட்டு சீரா உங்க பின்னூட்டம் வந்துருச்சு!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜீரா.

மாலையிலாவது உங்களால் வரமுடிஞ்சதே.... அதுவே பெரிய மகிழ்ச்சிதான் எங்களுக்கு.

காலைக்கான அத்தனை பொறுப்பும் வல்லியம்மாவோடதே!!!!

said...

வாங்க வெங்கட்.

வல்லிம்மா சிம்ப்ளி சூப்பர்ப்!!!!!

சந்திப்பு பற்றிச் சொன்னாங்க.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க சிந்து.

வருகைக்கு நன்றி.

காணாமல்போனவர்களின் பட்டியலில் இருந்தீங்க!!!!

said...

வாங்க கவிதாயினி.

நெஞ்சோடு இருக்கும் நினைவைத் தந்தீங்க!!!!!

said...

வாங்க ஹுஸைனம்மா.

அந்தப்பூனை..... இந்த யானைக்கேற்ற பூனை:-))))))

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை ஒளிஞ்சுருக்கு பாருங்களேன்!!!!

said...

வாங்க ராம்வி.

வருகைக்கு என் நன்றிகள்.

said...

வாங்க கோவைக்கவி வேதா.

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் எங்கள் இனிய நன்றிகள்.

said...

நேர்ல வராதகுறை தீர்ந்தது. வல்லிம்மா கலக்கிட்டீங்க போல. :)

said...

காலையில் வந்து இருந்தால் இன்னும் பலரையும் இந்த நிகழ்ச்சியையும் பார்க்க வாய்ப்பாக இருந்து இருக்கும். உங்கள் வட்டத்தில் இருக்கும் முக்கால்வாசி பேர்கள் ஆலமரம். என்னைப் போன்ற விழுதுகள் வரைக்கும் உங்கள் தொடர்பு விரிந்து கொண்டே இருப்பது ஆச்சரியம் தான்.

said...

மிகவும் அழகாக இனிய நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் வர்ணித்துள்ளீர்கள்.
நாங்களும் கலந்து மகிழ்ந்த உணர்வைத் தருகின்றது.

படங்கள் பலரையும் அறிமுகப்படுத்தின.

அன்புள்ளம் கொண்டு நிகழ்ச்சிகளை இனிதாக வழிநடத்திய வல்லிசிம்ஹன் அவர்களுக்கு பாராட்டுகள்.


said...

வல்லிஅக்கா ஈவண்ட் ஆர்கனைஸராக இருந்து விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்து விட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஷைலஜா நாளாம் நாளாம் திருநாளாம் பாடியது அருமை அதையும் பதிவில் போட்டு இருக்கலாம்.